• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • " இவ்வாறான விஷப்பரீட்சைக்கு எந்தவொரு வேட்பாளரும் செல்லப் போவதில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறாக இருக்கப் போகிறது என்பது புரியாததொரு மர்மம்!"  எந்த ஒரு சிங்கள தலைவரும் தமிழர் பிரச்சனைக்கு  தீர்வு தரப்போவதில்லை என இது மீண்டும் உறுதிப்படுத்தும் சரி, அதனால் மக்களுக்கு என்ன பயன்? தெரியவில்லை. ஆனால், தொடர்ந்தும் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே பயன்கள் கிடைக்கலாம். 
    • கல்கி ஆசிரமத்தில் வருமானவரித் துறை சோதனை: 90 கிலோ தங்க நகைகள்44 கோடி இந்திய ரூபாய் பறிமுதல் கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில் 800 கோடி இந்திய ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல, அங்கிருந்து 90 கிலோ தங்க நகைகள்44 கோடி இந்திய ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்,  சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயற்படுகிறது. 1980 ஆம் ஆண்டு இந்த ஆசிரமத்தை விஜயகுமார் என்பவர் ஆரம்பித்தார். அப்போது அவர் தனது பெயரை கல்கி பகவான் என மாற்றினார். இந்த ஆசிரமத்துக்கு ஆந்திரம், தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. அதேபோன்று  சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. இந்த ஆசிரமம் வெல்னஸ் குழுமம் என்ற பெயரில் கட்டுமானம்,  விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆசிரம நிர்வாகம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும்  நன்கொடையாக வரும் பணத்தை அரசிடமிருந்து மறைத்து வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகவும் வருமானவரித் துறைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் வருமானவரித் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், அந்த ஆசிரமத்தின் மீது கூறப்பட்ட புகார்களுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் சித்தூர் வரதய்யபாலத்திலுள்ள அந்த ஆசிரமத்தின் தலைமையிடம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அந்த ஆசிரமத்தின் கிளைகள் என மொத்தம் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 400 பேர் கடந்த 16ஆம் திகதி ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில், இதுவரை அந்த ஆசிரமம், 800 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. அதேபோல கணக்கில் வராத 44 கோடி இந்தியப் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 28 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள், 5 கோடி இந்தியப் ரூபாய் மதிப்புள்ள வைர நகை, 20 கோடி வெளிநாட்டுப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் வெல்னஸ் குழுமம் தனது பெயரிலும், பினாமி பெயரிலும் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருப்பதும், டுபாய்,  சிங்கப்பூர், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 100 கோடி இந்தியப் ரூபாய்  முதலீடு செய்திருப்பதும் வருமானவரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.  வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக வருமானவரித் துறையினர், விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, அவர் மனைவி ப்ரீத்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று வருமான வரித் துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சோதனையில் கிடைத்த பணம், நகை, ஆவணங்கள் அடிப்படையில் நடைபெறும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கிருஷ்ணா, ப்ரீத்தா மற்றும் வெல்னஸ் குழும நிர்வாகிகளுக்கு வருமானவரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள், ஓரிரு நாள்களில் விசாரணைக்கு முன்னிலையாவார்கள் என வருமானவரித் துறை  தகவல்கள் தெரிவிக்கின்றன. http://athavannews.com/கல்கி-ஆசிரமத்தில்-வருமான/
    • வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து அரசியல் கட்சிகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொதுநிலைப்பாடொன்றுக்கு தற்போது முன்வந்திருப்பது வடக்கு – கிழக்கு தமிழ் சமூகத்துக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ்ச் சமூகம் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இரண்டு பிரதான வேட்பாளர்களில் தமிழர்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? அவ்வாறு ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்ச் சமூகத்தின் சார்பாக முன்வைக்க வேண்டிய நிபந்தனைகள் எவை? இவ்வாறான விடயங்கள் பற்றியெல்லாம் ஆராய்ந்து தீர்மானத்துக்கு வருவதற்காக ஆறு தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில ஒன்றாகச் சந்தித்துக் கொண்டன. இச்சந்திப்பானது இக்கட்சிகளாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒன்றல்ல... யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளே தமிழ்க் கட்சிகளுடன் பல தடவை தொடர்பு கொண்டு கலந்துபேசி ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் ஒரே மேடைக்குக் கொண்டு வந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவையே அந்த ஆறு கட்சிகளுமாகும். மேற்படி கூட்டுச் சந்திப்பில் பங்கேற்று கூட்டறிக்கையில் கைச்சாத்திட்டவர்கள் சி.வி. விக்னேஸ்வரன், மாவை சேனாதிராசா, த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோராவர். ஒரேயொரு கட்சி பொது உடன்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளாமல் வெளியேறி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தான் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) அந்தக் கட்சி! எனவே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐந்து கட்சிகளால் மட்டுமே பொதுவான இணக்கப்பாடொன்றுக்கு வர முடிந்திருக்கிறது. இந்த ஐந்து கட்சிகளின் தலைவர்களும் முன்னொரு வேளையில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற ஒரே குடையின் கீழ் செயற்பட்டவர்களாவர். ஆகவே பிளவடைந்து போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மீண்டும் ஒன்றுசேர்ந்து விட்டதென்று அவசரப்பட்டு நினைத்து தமிழர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளக் கூடாது! பல வருடங்களாக ஆளுக்கொரு திசையில் சிதறுண்டு கிடந்த இக்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் விடயத்திலாவது பொது இணக்கப்பாடொன்றுக்கு இப்போது முன்வந்திருப்பதை முதலில் பாராட்டியாக வேண்டும்.ஆனாலும் இந்தப் பாராட்டுக்குரியவர்கள் இக்கட்சிகளின் தலைவர்களல்லர்! யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் பிரதிநிதிகளையே முதலில் பாராட்டியாக வேண்டும். எவ்வாறிருந்த போதிலும் கடந்த வார சந்திப்பைப் பொறுத்தவரை இக்கட்சிகளின் தலைவர்கள் ‘இன்றைய அரசியல் நிலைவரத்தின் சூழ்நிலைக் கைதிகள்’ என்றும் கூற முடியும். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதனால் இத்தலைவர்களால் நீண்ட காலத்துக்கு ஆளுக்கொரு திசையில் முரண்டு பிடித்துக் கொண்டிருக்க முடியாது. ஏற்கனவே வடக்கு, கிழக்குத் தமிழ்ச் சமூகம் இக்கட்சிகள் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றது. 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான இவர்களது 'உறங்கு நிலை' குறித்து தமிழர்கள் மிகவும் சலிப்படைந்திருக்கிறார்கள். ‘அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்கள்’ என்ற வெறுப்பு முத்திரை தமிழ் அரசியல் தலைவர்கள் மீது குத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்கையில், இக்கட்சிகள் தமிழ்ச் சமூகத்துக்கு சாக்குப் போக்குக் காட்டுவதற்காவது பொது இணக்கப்பாடொன்றுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயம்.பொதுநிலைப்பாடொன்றுக்கு வர முடியாமல் போயிருப்பின், இனிமேல் வரப் போகின்ற எந்தவொரு தேர்தலிலும் இக்கட்சிகளால் தமிழ் மக்கள் முன்பாக முகம் கொடுக்க முடியாத நிலைமைதான் ஏற்பட்டு விடும் என்பதுதான் உண்மை! ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்து, கோரிக்கைகளை உள்ளடக்கிய கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. இந்நிலைப்பாட்டை ஜனாதிபதித் தேர்தல் வரை இக்கட்சிகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்குமா? இல்லையேல் களநிலைவரத்துக்கு ஏற்றபடி நிபந்தனைகளில் நெகிழ்வுத் தன்மையுடன் மாற்றங்கள் செய்யப்படுமா? இல்லையேல் ஒருசில கட்சிகள் இணக்கப்பாட்டில் இருந்து வெளியேறி விடுமா? இவையெல்லாம் பொதுவாக எழுகின்ற வினாக்கள்! இக்கட்சிகள் முன்வைத்திருக்கும் நிபந்தனைகள் (கோரிக்கைகள்) சாத்தியப்பாடுடவையா அல்லது இன்றைய காலத்துக்குப் பொருத்தப்பாடுடவையா என்பதெல்லாம் வேறு விடயங்கள். ஆனால் குறைந்த பட்சம் இந்த ஐந்து கட்சிகளாவது எதிர்வரும் காலத்தில் இணக்கப்பாட்டுடன் ஒருமித்து செயற்பட வேண்டுமென்றுதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஏனெனில் தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான பிளவுகளும் முரண்பாடுகளும் தமிழ் மக்களை அதிகம் சலிப்படைய வைத்திருக்கின்றன என்பதை இக்கட்சிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்துக்கு அப்பால் முக்கியமாக ஆராயப்பட வேண்டிய மற்றொரு விடயம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக ஐந்து தமிழ்க் கட்சிகளும் முன்வைத்துள்ள முன்நிபந்தனைகளை இருபிரதான வேட்பாளர்களில் எவர் ஏற்றுக் கொள்ளப் போகின்றார்? தவிர்க்க முடியாமல் எழுகின்ற வினா இது! தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் உள்ளடங்கியுள்ள அம்சங்களில் அதிகமானவை பெரும்பான்மை இனத்துக்கு ‘ஒவ்வாமை’ தரக் கூடியவையாகும்.இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு முன்வருகின்ற துணிச்சல் மிக்க வேட்பாளர் எவருமே இருக்கப் போவதில்லை. அவ்வாறு எந்த வேட்பாளராவது இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொள்வாரானால், அவர் அரசியலில் தனக்குரிய புதைகுழியை தோண்டிக் கொள்வதற்கு ஒப்பான செயல் அதுவாகும். இவ்வாறான விஷப்பரீட்சைக்கு எந்தவொரு வேட்பாளரும் செல்லப் போவதில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறாக இருக்கப் போகிறது என்பது புரியாததொரு மர்மம்! https://www.thinakaran.lk/2019/10/22/ஆசிரியர்-தலைப்பு/42433/தமிழ்-அரசியல்-கட்சிகளின்-அடுத்த-கட்ட-நகர்வு-எது
    • 2024இல் அமெரிக்காவை பின்தள்ளும் இந்திய பொருளாதார வளர்ச்சி 2024ஆம் ஆண்டு உலக அளவில் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் முதல் 20 நாடுகளின் பட்டியலை சர்வதேச நாணய நிதியம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி, இந்தியா முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வெளியீட்டில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக அளவில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருக்கும். பொருளாதாரமும் மந்தமாகவே இருக்கும். இந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் வளர்ச்சியில் 3 சதவீதம் சரிவு ஏற்படலாம். இது உலகின் 90 சதவீதம் பகுதியை பாதிக்கும். வளர்ச்சி விகித பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் என்றாலும், சர்வதேச பொருளாதார வளர்ச்சியின் சரிவு காரணமாக வளர்ச்சி மந்தமாகவே இருக்கும். உலக வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், 2024இல் வளர்ச்சியடையும் நாடுகள் வரிசையில் இந்தியாவே தொடர்ந்து 3ஆவது இடத்தில் இருக்கும். அத்துடன், இந்தோனேசியா 4ஆவது இடத்திலும், ஐரோப்பா 9ஆவது இடத்திலும் இருக்கும். ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி ஜப்பான் 5ஆவது இடம் பிடிக்கும். ஜெர்மனி 7வது இடத்தில் இருக்கும். இவை தவிர துருக்கி, மெக்ஸிகோ, பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஸ்பெயின், போலந்து, கனடா ஆகிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் முதல் 20 நாடுகள் பட்டியலில் இடம்பிடிக்கும். அதே சமயம் வியட்நாம் அந்த பட்டியலில் இருந்து வெளியேறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/2024இல்-அமெரிக்காவை-பின்தள்/
    • சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது – சிறைத்துறை தலைவர் கைவிரிப்பு அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவை நன்னடத்தை விதிமுறைகளில் விடுதலை செய்வது பொருந்தாது என கர்நாடக சிறைத்துறையின் தலைவர் மெக்ரித் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் சிறைவாசம் இருக்கும் அவர், நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது எனவும் தண்டனைக் காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் எனவும் கர்நாடக சிறைத்துறை தலைவர் மெக்ரித் விளக்கமளித்துள்ளார். http://athavannews.com/சசிகலாவுக்கு-நன்னடத்தை-வ/