Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

லெப் கேணல் கிறேசி மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த வேளாண்மை ஊர்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை மணஇணையருக்கு 19.08.1960ல் ஆண்மகவு ஒன்று பிறந்தது.

 
கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு பிறந்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு வல்வளைப்பு படைகளுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது.
லெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் வல்வளைப்பு படைகள் நிலைகொண்டிருந்தனவோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். கள.முனைகளில் தொடர்ச்சியாக ஓய்வுளச்சல் இன்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மகன் அவர். கிளிநொச்சி பகுதியில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணூறுகளின் தொடக்கம் வரைக்கும் சிறீலங்கா படைகளிற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப்.கேணல் கிறேசி வகித்துள்ளார்.
1987ஆம் ஆண்டு யூலை மாதம் வடமராட்சியில் நெல்லியடி முகாம் தகர்ப்பில் அணியொன்றின் பொறுப்பாளனாகக் கலந்து கொண்டார். அதன்
 
 
 
 
பின்னர் லெப்.கேணல் கிறேசி அவர்கள் கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்திய வல்வளைப்புக் காலத்தில் கிளிநொச்சி நகரில் கூடாரமிட்டிருந்த இந்தியப்படைகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். கிளிநொச்சியின் எல்லா மூலையிலும் இந்திய படைகள்தாக்கப்பட்டது. கூலிகள் அடித்து விரட்டப்பட்டனர்.
களமுனைகளில் நேருக்குநேர் கிறேசியினதும் அவரது அணியினரதும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத ஈ.பி.ஆர்.எல்.எவ் துரோகிகள் இவரது தந்தையாரான கணபதிபிள்ளை அவர்களை சுட்டுக்கொன்றனர். தந்தையாரின் இறுதிச்சடங்கிற்கு தனயன் வருவான் அப்போது வேட்டையாடுவோம் என ராஜீவின் படையினரும் துரோகக் கும்பலும் காத்திருந்ததாம்.
தனது விடுதலைப் பயணத்தில் எண்ணிறைந்த இடர்களையும், இழப்புக்களையும் சந்தித்த வேளையிலும் சலியாது கொண்ட கொள்கையில் உறுதி தளராத உரம் படைத்த நெஞ்சம் லெப்.கேணல் கிறேசியினுடையது.
இரண்டாம் கட்ட ஈழப் போர் தொடங்கிய
 
 
 
 
வேளையில் மண்டைதீவுப் பகுதியூடாக முன்னேறி வந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர்ச்சமரின் போது விழுப்புண்ணடைந்தார். அவ்வேளையில் தான் விழுப்புண்ணடைந்து துடித்ததை விட இச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த சக போராளிகளின் நினைவில் துடித்தார்.
19.04.1991 அன்று மன்னர்பரப்புக்கடந்தான் பகுதியூடாக சிறிலங்கா படையினர் முன்னேற முற்பட்டனர் சிங்களத்தின் அம்முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் நோக்கில் சென்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்கு கட்டளைத் தளபதியாக களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் கிறேசி. எதிரியிடம் ஒரு அங்குல நிலம் போய்தானும் பவிடக்கூடாதுஎன்ற உறுதியோடு தனது அணியினரை வழிநடத்தி சமராடிக் கொண்டிருந்த வேளையில் எதிரி ஏவிய குண்டொன்றினால் கிறேசி இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தார்.
1990.05.25 அன்ற லெப்.கேணல் கிறேசி அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் களமுனையின் முன்னிலையில் நின்று களமாடி தனது குடும்பம் என்ற சிறுவட்டத்தில் நில்லாது, தமிழீழத் தாயகம் என்ற பெரும் குடும்பத்தின் விடியலுக்காய் விழுதாகிப் போனார் லெப்.கேணல் கிறேசி

Image

Image

Image

Edited by Maruthankerny
ADD
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கும் அன்னை பூபதிக்கும் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.