ரஞ்சிதாவோடு கொஞ்சிவிளையாட விரும்பிய புத்தரின் வரவை யாழ் உறவுகள் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்கள்.! புத்தரின் வீட்டில் வரவேற்பு எப்படி...? வரவேற்றது மகாலட்சுமியா....?? பத்திரகாளியா...???
தமிழ் இனத்தில் பிறந்ததை எண்ணி வெட்கி தலைகுனிகிறேன் என்று லண்டன் வாழ் ஈழத்தமிழரான சுதன் என்பவர் மிகுந்த வேதனையுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வடபகுதியிலுள்ள எனது பதினைந்து ஏக்கர் நிலத்தை சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராகிவிட்டேன் என கண்ணீருடன் கூறுகின்றார்.
பிரித்தானியாவின் பொதுத்தேர்தல் இன்றைய தினம் நடை பெறுகின்றது. இம்முறை அந்த நாட்டின் பொதுத் தேர்தலில் இலங்கையை பகடைக் காயாக வைத்தே இரண்டு பிரதான கட்சிகள் தேர்தல் காலத்தில் குதித்துள்ளன.
அதனடிப்படையில் பிரித்தானிய தொழிலாளர் கட்சியானது தாம் இம்முறை ஆட்சியை கைப்பற்றினால் இலங்கையை இரண்டாக பிளவுபடுத்துவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தனர்.
இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொடுப்பது என்றால் அது இலங்கை நாட்டை இரண்டாக பிரிப்பதன் மூலமே பெற்றுக்கொடுக்க முடியும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சி கூறியிருந்தது.
இந்நிலையில் பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியானது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய இலங்கையை கட்டிக் காப்பதற்காக தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தது.
ஒரு நாட்டின் உள்ளக விவகாரங்களுக்கு தலையீடு செய்து அந்நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்க தமது கட்சி ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது எனவும் கொன்சவேட்டிவ் கட்சி கூறியிருந்தது.
எவ்வாறாயினும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் இருக்கின்றனர்.
அவர்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக பிரித்தானிய தொழிலாளர் கட்சி முயற்சிப்பதாக கொன்சவேட்டிவ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதேசமயம் இம்மாதம் ஒன்பதாம் திகதி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பீட்டுக்கமைய பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியானது தொழிலாளர் கட்சியை விட 4 விகிதத்தில் முன்னணி வகிக்கின்றது.
இம்முறை தேர்தலின் போது சுமார் நாற்பது லட்சம் சிறுபான்மை மக்கள் வாக்களிக்க உள்ளனர். அந்த வாக்குகளே இரண்டு பிரதான கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் என உலக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
https://www.tamilwin.com/politics/01/233612?_reff=fb&itm_source=parsely-api?ref=recommended1
மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள்களுக்கு 6 மாதம் சிறை... நாடாளுமன்றத்தில் சட்டம்.!
ரெல்லி: மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள் மற்றும் மருமகன்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர் , மூத்த குடிமக்கள் ஆகியோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு 6 மாதம் தண்டனை அளிக்கும் வகையில் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் இருந்தது.இந்த சட்டம் இயற்றப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு அவல நிலையில் தான் வாழ்கிறார்கள்.
புதிய சட்டம்
திருமணம் ஆன உடன் தனிக்குடித்தனம் செல்லும் மகன்கள் பெற்றோரை அப்படியே கைவிட்டு விடுகிறார்கள். இதையடுத்து அந்த சட்டத்தில் திருத்தம் செய்து நாடாளுன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகன் மற்றும் மருமகள்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் புதிதாக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
பெற்றோர் பராமரிப்பு
பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் திருத்த மசோதா 2019 சட்டத்தை லோக்சபாவில் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் தவார் சந்த் கெலாட், தங்கள் பராமரிப்பில் உள்ள பெற்றோர் அல்லது முதியவரை துன்பறுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மனரீதியாக காயம்
பெற்றோரை திட்டுதல், பணம் தராமல் துன்புறுத்துதல், காயம் ஏற்படுத்துதல், உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், பெற்றோரை கைவிடுதல் போன்ற வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றங்களை செய்யும் மகன்கள் அல்லது மக்கள் மட்டுமின்றி இனி மருமகள்கள், மருமகன்கள், பேரன் மற்றும் பேத்தி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புகார் தரலாம்
இந்த புதிய சட்டப்படி 80வயதுக்கும் மேற்பட்ட முதியோர் அல்லது பெற்றோர் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற தீர்ப்பாயத்தை நாடி புகார் தெரிவிக்கலாம். இந்த தீர்ப்பாயம் புகார்களை 60 நாளில் விசாரித்து தீர்வு தரும்.80 வயதுக்கு கீழ் என்றால் 90 நாளில் விசாரித்த தீர்வு தரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோருக்கான சிறப்பு போலீஸ் பிரிவு அமைக்கப்படும். டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரி இதன் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்றார்.
https://tamil.oneindia.com/news/delhi/now-includes-son-in-law-and-daughter-in-law-will-jailed-who-not-maintain-parents/articlecontent-pf421555-371168.html
விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் ``தன் டி.என்.ஏ தமிழகத்தைச் சேர்ந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன்
பெரும் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்ஸன் 1950-ம் ஆண்டு லண்டனில் பிறந்தவர். தற்போது 69 வயதாகிறது. இவரின், விர்ஜின் குழுமம் டெலிகாம், உணவுத்துறை, ஏர்லைன்ஸ், விண்வெளிப் பயணம் என பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது. இந்தியாவில் மும்பை முதல் புனா வரை ஹைப்பர்லூப் திட்டம் அமைக்கப்படவுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமை யிலான மகாராஷ்டிர அரசு புல்லட் ரயில் மற்றும் ஹைப்பர்லூப் திட்டங்களைக் கைவிடும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.
ஹைபர்லூப் திட்டம்
இதைத் தொடர்ந்து, பிரான்ஸன் மகாராஷ்டிரா வந்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயை இன்று அவர் சந்திக்கிறார். ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட தொழிலதிபர்களையும் சந்திக்கவுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய பிரான்ஸன், தனக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். அப்போது, ``தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக தன்னுடையை டி.என்.ஏ வைப் பரிசோதித்தபோது இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் 1793- ம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது, என்னுடைய மூதாதையர் தமிழகப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். ``இந்தியர்களை நான் சந்திக்கும்போதெல்லாம், `ஒருவேளை நாம் இருவரும் உறவினர்களாக கூட இருப்போம்' என்று விளையாட்டாக கூறுவது உண்டு'' என்றும் பிரான்ஸன் கூறினார்.
விர்ஜின் அட்லாண்டிக் ஏர்லைன்ஸ்
பிரான்ஸனின் மூதாதையர்களில் ஒருவரான ஜான் எட்வர்ட் 1793- ம் ஆண்டு முதன்முறையாக சென்னை வந்துள்ளார். இங்கிருந்து அவரின் குடும்பம் கடலூருக்கு நகர்ந்துள்ளது. இவரின் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
https://www.vikatan.com/business/news/virgin-founder-richard-branson-says-about-tamil-nadu-connection?fbclid=IwAR2kB85kfYlnjZXTTed3ZfYJk17xkq00PUK4bldBR4ROuncFmbEJNaoFrmI