-
Tell a friend
-
Topics
-
19
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
5
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
உங்கடை அவதானிப்பு பின்னுது....😁
-
By உடையார் · பதியப்பட்டது
ஆஸ்திரேலிய வெற்றி vs இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி... ஏன் இவ்வளவு பாராமுகம் பி.சி.சி.ஐ? ரமணி மோகனகிருஷ்ணன் கிரிக்கெட் இந்திய மகளிர் அணி ஐ.பி.எல் மிகப்பெரும் வெற்றியை எட்டியது. அடுத்து இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடினார்கள். ஆனால், இன்னொரு புறம் பெண்கள் கிரிக்கெட் அணியின் கதை வேறாக இருக்கிறது. கொரோனா காலத்தில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான போட்டிகளை, ஆண்கள் கிரிக்கெட் அணியைப் போன்று கவனம் செலுத்தி நடத்தாமல், பாராமுகம் காட்டுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்திருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்தபோது, மேஜிக் ஷோக்களில் தொப்பியில் இருந்து முயலை எடுப்பது போன்று, துபாயில் இரண்டு மாதங்கள், எட்டு அணிகள் கொண்ட ஐ.பி.எல் போட்டிகளை நடத்திக்காட்டியது இந்திய கிரிக்கெட் வாரியம். பெண்கள் கிரிக்கெட் அணி ஐபிஎல் மிகப்பெரும் வெற்றியை எட்டியது. அடுத்து இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடினார்கள். அதாவது, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியினர் ஆஸ்திரேலிய தொடரில் ஆடினார்கள். வெற்றி பெற்றார்கள். மிகுந்த வரவேற்புடன் கொண்டாடப்பட்டார்கள். ஆனால், இன்னொரு புறம் பெண்கள் கிரிக்கெட் அணியின் கதை வேறாக இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு, பெண்கள் கிரிக்கெட் அணியினர் சர்வதேச போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகின்றன. இடையில், ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே நவம்பர் மாதம் மூன்று பெண்கள் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகளை வெறும் ஆறு நாள்களில் பிசிசிஐ நடத்தியது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இது தவிர்த்து, பெங்களூருவில் நடந்த கிளப் டி20 போட்டிதான் பெண்கள் கிரிக்கெட் அணியினர் ஆடிய தொழில்முறை கிரிக்கெட் போட்டி. ஆனால், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கிரிக்கெட் அணியினர் எல்லாம், தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் இருட்டடிப்புக்குக் காரணமாக ரசிகர்கள் சாடுவது, பிசிசிஐ-ஐ தான். டி20 உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு, பெண்கள் கிரிக்கெட் அணி சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்கான முக்கியத்துவத்தை பிசிசிஐ அளிக்கவில்லை. குறிப்பாக, நவம்பர் மாதம் பெண்கள் டி20 போட்டி நடைபெறும்போதுதான் ஆஸ்திரேலியாவில் பெண்கள் பிக் பேஷ் லீக்கும் (ஐபிஎல் போட்டியைப் போன்றது) நடைபெற்றது. எனவே, பெண்கள் அணியைச் சேர்ந்த வீரர்களால் அந்தப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இது மட்டும் இல்லை... இங்கிலாந்து-தென் ஆப்ரிக்காவுடனான முத்தரப்பு போட்டியில் இந்திய பெண்கள் அணியை விளையாட பிசிசிஐ அனுமதிக்கவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜூலை மாதம் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சாத்தியம் என்பதை நிரூபித்த பின்னரும், தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சி அளிக்கும் வசதிகளைச் செய்து கொடுப்பதாகச் சலுகைகளை வழங்கிய பின்னரும், பிசிசிஐ மறுத்தது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இத்தனை மாதங்கள் கடந்தும், இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி எந்த சர்வதேசப் போட்டிகளிலும் பங்கெடுக்கவில்லை. இந்த வருடம் ஜனவரியில் நடக்கவிருந்த ஆஸ்திரேலிய தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் இலங்கை தொடர் நிச்சயமாகாவிடில், கிட்டத்தட்ட இந்தியப் பெண்கள் அணி 2022-ம் ஆண்டு நடக்க இருக்கும் ஐசிசி பெண்கள் உலகக் கோப்பையில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். இதைவிட இன்னும் மோசமான விசயம், இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர், மேலாளர், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அவர்களது பணிக்காலம் நீட்டிக்கப்படுவதாகவோ, அவர்களுக்கு மாற்றுப் பணியாளர்களையோ பிசிசிஐ அறிவிக்கவில்லை. பி.சி.சி.ஐ-யின் இந்த பாராமுகமான மற்றும் அலட்சியமான செயல்பாடு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியினர் பல வெற்றிகளை வசப்படுத்தி தங்களை நிரூபித்த பின்னரும், விளையாட்டும் மைதானமும் ஆண்களுக்கானது என்று நடந்துகொள்ளும் பிசிசிஐ-யின் போக்கு கண்டனத்துக்குரியது. https://www.vikatan.com/news/sports-news/issues-around-the-handling-of-women-cricket-team-by-bcci -
By மல்லிகை வாசம் · Posted
அஸாம் பாடகியின் பாடல் ஆஸம்! 😀(awesome) -
சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல் பெங்களூரு: மூச்சுத்திணறலால் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு 2-வது வகை சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்சினைகளுடன் நீண்ட கால நுரையீரல் பாதிப்பும் உள்ளது. அவருக்கு இன்சுலின், ஹெபரின் ஸ்டெராய்டு போன்ற மருந்துகளும் வழங்கப்பட்டு இருந்தன. பவுரிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரிந்துரையின் பேரில் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு நேற்று அழைத்து வரப்பட்டு இருந்தார். அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் நுரையீரலில் தொற்று இருப்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடுமையான நிமோனியா காய்ச்சல் அவருக்கு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. நுரையீரலிலும் தீவிர தொற்று உள்ளது. இதனால் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.maalaimalar.com/news/topnews/2021/01/22090954/2277956/Tamil-News-Sasikala-affected-pneumonia-fever-hospital.vpf
-
இதே சிங்கள காட்டு மிராண்டிகள் இதுவரை செய்தவற்றை நாம் மறந்துவிட்டோம், இனியும் சிங்கள மீனவர்களுக்கு தொடர்ந்து துணை போவார்கள், குரல் கொடுக்க நமது தமிழ்நாட்டு மீன்வர்கள் மட்டும்தான், அவர்கள் மேட்டுகுடிகள் அல்ல, நல்ல மனதுள்ள மோட்டு குடிகள்👍
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.