-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார். https://athavannews.com/2023/1328780 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. https://athavannews.com/2023/1328797 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
சீன எல்லை அருகே 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டம்! சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ICBR எனப்படும் இந்திய- சீன எல்லைச் வீதிகள் அமைக்கும் பணிகள் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த 3ஆம் கட்டப் பணிகளுக்கான உயர்மட்டக் கூட்டத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் வீதிகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2023/1328754 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமனம்? ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் ஹம்சா யூசப், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவராக எளிய பெரும்பான்மை வாக்குகளுடன் உயர் பதவியைப் பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தநிலையில், ஹம்சா யூசப்பை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் பின்னர் வாக்களிக்கும். 50,490 வாக்குகளில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஹம்சா யூசப், கட்சித் தலைமையை வென்றார். 37 வயதான ஹம்சா யூசப், ஒரு பெரிய பிரித்தானிய கட்சிக்கு தலைமை தாங்கும் முதல் முஸ்லீம் ஆவார் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல் சிறுபான்மை இனத் தலைவராகவும் ஆனார். ஸ்கொட்லாந்து கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டக்ளஸ் ரோஸ், ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் அனஸ் சர்வார் மற்றும் ஸ்கொட்லாந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அலெக்ஸ் கோல்-ஹாமில்டன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவார்கள். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் எவருக்கும் வெற்றி வாய்ப்பு இல்லை. https://athavannews.com/2023/1328790 -
By தமிழ் சிறி · Posted
சில இனங்கள்… தமது நாட்டை பாதுகாக்க எத்தனை ஆபத்தான இடங்களில் இருந்தும் காவல் காத்திருக்கின்றார்கள். நமது இனத்திலும்… எல்லாம் செய்தும், காட்டிக் கொடுப்புகளால்… சொந்த நாடு இல்லாமல் போய் விட்டது.
-
Recommended Posts