Jump to content

நீங்க.. நாங்க வாங்கி enjoy பண்ணும் பொருட்கள் பற்றி.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.


Recommended Posts

61VBk2LUxSL._AA1000_.jpg

அண்மையில் நான் வாங்கிய பொருட்களில் தரத்திலும் வகையிலும் என்னைக் கவர்ந்த பொருளாக.. bluethooth headphone அமைந்திருக்கிறது.

தரம் மற்றும் பாவனை: கேட்கும் இசையின்தரம் மிக நன்றாக இருப்பதோடு.. இன்றைய ஐபொட்.. ஐபோன்.. ரப்லட் மற்றும் இதர போன் வகைகளோடும் பொருந்தி வேலை செய்கிறது.

இசை நல்ல தரமாக அமைந்திருக்கிறது. மிக இலகுவாக பாவிக்கக் கூடிய வழிகாட்டல் தரவுகள் உண்டு.

வசதி: அடிக்கடி மின் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. வயர் தொல்லைகள் இல்லை. தலையை சுற்றி அதிக பிளாஸ்ரிக் கிடையாது. இலகு கனம்..! போன் கோல்களை இலகுவாகக் கையாள முடிகிறது.

கிடைக்கும் இடம்: நான் வாங்கிய இடம் அமேசன்.

விலை: சுமார்.

http://www.amazon.co...46090442&sr=8-1

இதேபோல் தாங்களும் சமீபத்தில் வாங்கி நன்கே அனுபவிக்கும் மற்றும் ஏமாந்து போன பொருட்கள் பற்றி எழுதினால்.. வாங்கத் திட்டமிடும்.. பரிசளிக்க திட்டமிடும்.. வாங்கி அல்லது பரிசாகக் கிடைத்தும் அனுபவிக்க முடியாமல்.. அல்லது தெரியாமல் இருக்கும் உறவுகளுக்கு உதவி நிற்கும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, அவசியமான பதிவு நெடுக்கர். நானும் கண்ட கண்ட review எல்லாம் பார்த்து வாங்குவேன். அதிகமாக நன்றாக இருக்கும். சிலவேளை கையைக் கடித்து விடும். வாங்கிய பொருட்களின் விபரங்களை பின்பு பதிகிறேன்.

இந்த பெட்டியில் உள்ள '7dayshop' என்னும் இணையத்தில் சில வருடங்களிற்கு முன்பு அந்த நேரத்தில் விலை கூடிய தரமான ஒரு Nikon கமரா மிக மலிவான விலைக்கு வாங்கினேன். இன்றும் நன்றாக வேலை செய்கிறது. அதன் பின்பு கணணி சம்பந்தமான் பொருட்கள் வாங்கினேன். அத்தனையும் தரமானவை. 2008 இன் பின் ஒன்றும் வாங்கவில்லை. இப்பொழுது என்ன நிலையோ தெரியாது.

Link to post
Share on other sites

பதிவுக்கு நன்றி. இங்கு சிலர் bluetooth headphone மலிந்த விலையில் வாங்கி பின்னர் சரியாக பாவிக்க முடியாமல் எறிந்துள்ளார்கள். எங்கு வாங்கினார்கள், எந்த நாட்டு தயாரிப்பு என்று தெரியவில்லை.

இந்த திரி பலருக்கும் பிரயோசனப்படும். தொடருங்கள். :)

Link to post
Share on other sites

gear4_AlarmDock_Reveal_282.jpg

பொருள்: கியர்4 அலாம் அண்ட் மியூசிக் டொக் (Gear4 AlarmDock)

வசதிகள்: இதில் ஐபோன்.. ஐபொட்..(கிளசிக் உட்பட) பாவித்து இசை கேட்க முடியும். உங்கள் அறையில் மற்றவர்களுக்கு உபத்திரபம் தராமல் மெல்லிசையை ரசிக்க... இது உகந்தது. மேலும் LCD டிஸ்பிளேயுடன் கூடிய டிஜிரல் கடிகாரம் உள்ளது. அலாம் உள்ளது. எவ் எம் வானொலி உள்ளது.

தரம்: தனியாள் ரசிக்கக் கூடிய இசை.. ஓரளவு தரமானது. எல் சி டி டிஸ்பிளே ஒரேஞ் வர்ணத்தில் இலக்கங்களை குறியீடுகளை காண்பிக்கிறது. ஒளிர்மை நன்று. அலாம்.. வானொலி நன்றாக இருக்கிறது. ஐபொட்.. ஐபோன் நன்கே பொருந்துவதோடு.. இதன் மூலமே மின்னேற்றமும் செய்து கொள்கின்றன. படுக்கை அறைக்கு மிக வசதியானது.

விலை: அமேசனில் கொஞ்சம் விலை (47 பவுண்கள் வரை போகிறது.) நான் currys என்ற இலத்திரனியல் கடையில் clearance இல் மிக மலிவாக எடுத்தேன்..! clearance இல் பொருட்களை வாங்கும் போது வேலை செய்கிறதா மற்றும் warranty பற்றி உறுதிப்படுத்தி வாங்கிக் கொள்ளுங்கள். currys எனக்கு மிக நல்ல வகையில் இந்தப் பொருளை எல்லாம் பரிசோதித்து வாங்க வசதி செய்து தந்தார்கள். நன்றி உங்கள் customer service க்கு..! யாரும் currys வேலை செய்பவர்கள் யாழில் இருந்தால்.. இந்த நன்றியை உங்கள் நிறுவனத்துக்கு கொண்டு போய் சேர்த்துவிடுங்கள்.

கிடைக்கும் இடங்கள்: இணையத்தில் அமேசன் மற்றும் பிற. கடைகளில்: currys.. pc world மற்றும் பிற.

http://www.amazon.co...&pf_rd_i=468294

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.

பொருட்கள் வாங்கும்போது பயனுள்ளதாக அமைகிறது பதிவுகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, தலைப்பு நெடுக்ஸ். :)

Link to post
Share on other sites
  • 3 months later...

crushers-cuffie-skullcandy.jpg

 

பொருள்: நான் அண்மையில் வாங்கிய இன்னொரு மல்ரி மீடியா சார்ந்த பொருள்.. Skullcandy Skullcrushers SC-SCB Bass Vibration Headphones

 

தரம் மற்றும் பாவனை: இதில் இசை கேட்டால் DJ இசைத் தரத்திற்கு நிகராக கேட்க முடியும். இதனுடன் Bass Amplified subwoofer உம் வருவதால்.. இந்த வடிவமைப்பு இசைப்பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. இதனை இயக்க AA மின்கலம் ஒன்று அவசியம். மேலும் ஒலிக்கசிவுக்கு இடமளிக்காத வகையில் வடிமைத்துள்ளார்கள்.

 

விலை: சற்றும் அதிகம் £52.99  முதல் போகிறது. ஆனால் நான் sportsdirect offer இல் £25 கொள்ளவனவு செய்தேன். பிரித்தானியா தவிர்ந்த மற்ற நாட்டவர்களும் இதனை sportdirect.com இணையத்தில் வாங்கலாம்.

 

பிடிச்சிருந்தா..சந்தர்ப்பம் கிடைத்தால்..  நீங்களும் நத்தாருக்கு வாங்கி பாவித்துப் பாருங்களேன். :)

Link to post
Share on other sites

BlackBerry%20PlayBook-380-75.jpg
 

 

அண்மையில் வாங்கிய இன்னொரு பொருள்

 

பொருள்: Blackberry tablet (Playbook 7")

 

தரம் மற்றும் பாவனை: ஒலி,ஒளி தேவைகளுக்கும் மற்றும் இணைய உலாவலுக்கு மிக வசதியாக உள்ளது. 64 GB சேமிப்பு வசதி உள்ளது.படங்கள் பாடல்கள் கோப்புக்கள் தாரளமாக சேமிக்க முடியும். RAM: 1GB Processor: dual-core 1GHz.

 

ஆன்ரொயிட், அப்பிள் ராப்பிளட்கள் போலன்றி கொஞ்சம் வித்தியாசமான OS. இருந்தாலும் இலகுவாக பழகிக் கொள்ள முடிகிறது. நிறைய Apps கிடைக்கின்றன. சில இலவசமாகத் தரப்படுகின்றன. கமராவும் உள்ளது. ஸ்கைப் இலவசமாக தரவிறக்கப்பட்டு பாவிக்கப்படலாம். எல்லா சமூக வலை அமைப்புக்களும் உள்ளன. ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் நல்ல பாவனை. குறிப்பாக பள்ளிப் பிள்ளைகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சிறந்தது. ebook வாசிக்க முடிகிறது. மின்கலப் பாவனையும் ஒப்பீட்டளவில் நீண்டது. ஆனால் மீள் மின்சேமிப்புக்கு கொஞ்சம் அதிகம் நேரம் எடுக்கிறது.

 

விலை: £110.00  இருந்து £129 வரை போகிறது.

 

வாங்கிய இடம்: Currys

 

நத்தாருக்கு பிள்ளைகளுக்கு உறவினர்களுக்கு பரிசளிக்க பொருட்கள் வாங்கிறவைக்கும் இது உபயோகமானதாக இருக்கும் என்பது எனது சொந்தக் கருத்து.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

":நீங்க.. நாங்க வாங்கி enjoy பண்ணும் பொருட்கள் பற்றி.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்."

 

விரைவில் கல்யாணம் கட்டுங்கள் இந்த திரிப்பக்கம் என்ன, யாழுக்கே வரமாட்டீர்கள் :lol:  :D

Link to post
Share on other sites

":நீங்க.. நாங்க வாங்கி enjoy பண்ணும் பொருட்கள் பற்றி.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்."

 

விரைவில் கல்யாணம் கட்டுங்கள் இந்த திரிப்பக்கம் என்ன, யாழுக்கே வரமாட்டீர்கள் :lol:  :D

 

கலியாணம் என்பது ஒரு தேவையற்ற சுமை..! அதைச் சுமக்க பலர் சிரமப்படுகிறார்கள். அதுவும் ஒத்த விருப்பற்ற பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்தால் கதி அதோ கதி தான்..! நாங்கள் அப்படியான முட்டாள் தனமான முடிவை எடுக்க மாட்டம். கலியாணம் முட்டாள்களின் திருவிழா...! :lol::D

தம்பி நெடுக்ஸ் ஏமாற்றுப்பட்டதையும் எழுதுங்க.

 

சமீப காலத்தில் ஏமாற்றங்கள் ஏற்படவில்லை. ஏனெனில் திட்டமிட்டு பொருட்களை தேவை.. விலை.. தரம்.. தொழில்நுட்பம்.. இடம் அறிந்து வாங்குவதால். நிச்சயமாக ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்கள் அமைந்தால் கள உறவுகள் ஏமாறாமல் இருக்க அதனையும் பகிர்ந்து கொள்வேன். :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கலியாணம் என்பது ஒரு தேவையற்ற சுமை..! அதைச் சுமக்க பலர் சிரமப்படுகிறார்கள். அதுவும் ஒத்த விருப்பற்ற பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்தால் கதி அதோ கதி தான்..! நாங்கள் அப்படியான முட்டாள் தனமான முடிவை எடுக்க மாட்டம். கலியாணம் முட்டாள்களின் திருவிழா...! :lol::D

 

 சரிமாக சொன்னீர்கள், இப்படியே இருங்கள், பஞ்சா பறக்கும்வரை

 

பெண்கள் கல்யாணமன்று ஏன் கண்ணீர்விட்டு பெற்றோரை கட்டிப்பிடித்து அழுகின்றவர் என்று தெரியுமா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
 கலியாணம் முட்டாள்களின் திருவிழா...! :lol::D

 

எக்ஸ்கியுஸ் மீ ,

இரு முட்டாள்கள் சேர்ந்து முட்டிக் கொள்ளும் திருவிழா. :lol:

Link to post
Share on other sites
 சரிமாக சொன்னீர்கள், இப்படியே இருங்கள், பஞ்சா பறக்கும்வரை

 

பெண்கள் கல்யாணமன்று ஏன் கண்ணீர்விட்டு பெற்றோரை கட்டிப்பிடித்து அழுகின்றவர் என்று தெரியுமா?

 

அது என்னத்திற்கு என்று தெரியாது. ஆனால் பெண்களின் கண்ணீர் கொடிய பாம்பின் விசத்தினை ஒத்தது. ஆணை மயக்கி இரையாக்கி தான் நினைத்ததை சாதிக்கும் வல்லமை மிக்கது என்று பெரியவா சொல்லி இருக்கிறா. ஆபத்து இருக்கிற இடத்தில நமக்கென்ன வேலை..! தெரிந்தும் ஏன் வலியப் போய் மாட்டிக்குவான். :lol::icon_idea:

Link to post
Share on other sites
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

juice maker ஒன்று வாங்கலாம் என்று இருக்கிறேன்.

 

எதை வாங்கலாம் என்று அபிப்பிராயம் சொல்வீர்களா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு பொருளை பற்றி பதிவதற்காக.... 

நெடுக்ஸ் இணைத்த இந்த தலைப்பு எந்தப் பகுதியில் இருக்கு என்று தெரியாமல் தவித்தேன்.
அதனை நேரம் கிடைக்கும் போது பதிகின்றேன்.
ஆனால்... அது தொழில் நுட்பம் சார்ந்த பொருளல்ல,

என்பதை...  முற்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

இந்தத் திரியை... கண்டெடுத்த, கறுப்பிக்கு நன்றி. :)

Link to post
Share on other sites

கலியாணக் கதையை எடுத்து கடுப்பேத்திட்டாங்க மை லாட். அதுதான் தலைப்பு படுத்திட்டுது. ஆனால் இதன் பிறகு வாங்கின பல பொருட்கள் பாவிச்சு பழுதாகாமல் இன்னும் இருக்குது. ஆனால் பழசாகிடுச்சே..! :):lol:

 

 

juice maker ஒன்று வாங்கலாம் என்று இருக்கிறேன்.

 

எதை வாங்கலாம் என்று அபிப்பிராயம் சொல்வீர்களா?

 

The 10 Best juicers.

http://www.independent.co.uk/life-style/food-and-drink/features/the-10-best-juicers-8554027.html

 

வாங்கிட்டு பகிர்ந்து கொள்ளுங்க.. கறுப்ஸ். :)

 

நன்றி கறுப்பி.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கலியாணக் கதையை எடுத்து கடுப்பேத்திட்டாங்க மை லாட். அதுதான் தலைப்பு படுத்திட்டுது. ஆனால் இதன் பிறகு வாங்கின பல பொருட்கள் பாவிச்சு பழுதாகாமல் இன்னும் இருக்குது. ஆனால் பழசாகிடுச்சே..! :):lol:

 

2012 இலிருந்து என்பதால்

மெசினும்

அதன் குட்டியும் வந்திருக்க என்ற நினைத்த ஓடிவந்தேன் :D

ஏமாற்றம் தொடர்கிறது :(

Link to post
Share on other sites

2012 இலிருந்து என்பதால்

மெசினும்

அதன் குட்டியும் வந்திருக்க என்ற நினைத்த ஓடிவந்தேன் :D

ஏமாற்றம் தொடர்கிறது :(

 

உந்த மெசினை மட்டும் யாரும் பிறியா தந்தாலும் வாங்க அவசரமே படக்கூடாது.

 

அப்புறம்.. நம்ம நிம்மதி தொலைஞ்சுது..! :lol::D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உந்த மெசினை மட்டும் யாரும் பிறியா தந்தாலும் வாங்க அவசரமே படக்கூடாது.

 

அப்புறம்.. நம்ம நிம்மதி தொலைஞ்சுது..! :lol::D

 

சிலோன் மெசின் வாங்கினால் எக்கச்சக்கமான காசு நகையள் வீடுவளவு எல்லாம் தருவாங்கள்.... :D  :icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு பொருளை பற்றி பதிவதற்காக.... 

நெடுக்ஸ் இணைத்த இந்த தலைப்பு எந்தப் பகுதியில் இருக்கு என்று தெரியாமல் தவித்தேன்.

அதனை நேரம் கிடைக்கும் போது பதிகின்றேன்.

ஆனால்... அது தொழில் நுட்பம் சார்ந்த பொருளல்ல,

என்பதை...  முற்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

இந்தத் திரியை... கண்டெடுத்த, கறுப்பிக்கு நன்றி. :)

 

உங்கள் தவிப்பு தணிந்ததில் எமக்கும் மகிழ்வே!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கலியாணக் கதையை எடுத்து கடுப்பேத்திட்டாங்க மை லாட். அதுதான் தலைப்பு படுத்திட்டுது. ஆனால் இதன் பிறகு வாங்கின பல பொருட்கள் பாவிச்சு பழுதாகாமல் இன்னும் இருக்குது. ஆனால் பழசாகிடுச்சே..! :):lol:

 

 

 

The 10 Best juicers.

http://www.independent.co.uk/life-style/food-and-drink/features/the-10-best-juicers-8554027.html

 

வாங்கிட்டு பகிர்ந்து கொள்ளுங்க.. கறுப்ஸ். :)

 

நன்றி கறுப்பி.

 

மிகவும் நன்றி நெடுக்கு.

 

இதைத்தான் வாங்கலாம் என்று இருக்கிறேன்.

http://www.independent.co.uk/life-style/food-and-drink/features/the-10-best-juicers-8554027.html?action=gallery&ino=2

Link to post
Share on other sites
  • 7 months later...

11046361_10152690153557944_1703008051137

 

அண்மையில் வாங்கிய இலத்திரனியல் பொறிகளில்.. song liveview touch smart-watch 2nd generation... கொஞ்சம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுள்ளது.

 

மணிக்கூடாக கையில் அணியும் அதேவேளை.. அன்ராயிட் மூலம் இயங்கக் கூடிய போன்களோடு இது புளூருத் மூலம் இணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. 

 

லைவ்வியூவின் ஊடாக.. காலநிலை அறியலாம்..  உங்கள்  போனுக்கான...  அழைப்புக்களுக்கான எச்சரிக்கையை பெறலாம்.. அழைப்பை  துண்டிக்கலாம்.. எஸ் எம் எஸ் மற்றும் வாட்ஸ் அப் செய்திகளை வாசிக்கலாம்.. அனுப்பலாம்.. இசை மழை பொழியலாம்... இன்ஸ்ராகிராம்.. மற்றும்.. உங்கள் போட்டோக்களை கண்டு மகிழலாம்.. மேலும்.. உடற்பயிற்சி அப்ஸ்களை தரவிறக்கி.. அவற்றின் பயன்களையும் பெறலாம்.

 

சொனி நிறுவ தயாரிப்பாக இருந்தாலும்.. சொனி அல்லாத.. அன்ராயிட் போன்கள் மூலம் இந்த லைவ்வியூவை இயக்கலாம்.

 

அடிக்கடி.. போனை பொக்கட்டுக்குள்.. இருந்து தூக்கிட்டு போட்டுக்கிட்டு இருப்பவர்களுக்கு அந்த வேலையைக் குறைக்க.. இது நல்ல ஒரு கருவியாகும். 

 

அண்மையில் வாங்கியதில்..  என்ஜோய் பண்ணக் கூடியதாக அமைந்த குட்டி டிவைஸ்.. இது என்றால் மிகையல்ல. 

 

பற்றரி.. கடுமையான பாவனை இன்றேல்.. ஒரு வாரம் அளவிற்கு நின்று பிடிக்கிறது. மேலும்.. புளுருத் இணைப்பு செய்யப்பட்டாலும்.. போன்களில் இருந்து அதிகம் பற்றரி பாவனை அவதானிக்கப்படவில்லை. இது நல்ல அம்சங்கள்.

 

ரச் ஸ்கிரீன் சில நேரம்.. கடும் தொடு உணர்தலை எதிர்பார்க்கிறது. அது பாதகம்.

 

அன்ராயிட் சந்தையில்... இதற்குரிய பல அப்ஸ்கள் இலவசமாகவும் காசுக்கும் கிடைக்கின்றன. நாங்க சொனி நிறுவனம் விட்ட அப்ஸ்களை மட்டும் வாங்கி பாவிக்கிறோம். எல்லாமே நல்லா வேலை செய்கிறது.

 

வாங்க விரும்புகிறவர்கள்.. amazon இல் வாங்கலாம். இப்போ விலைக்குறைப்பில்.. 50 பவுன்களுக்குள் உள்ளது. ஒரிஜின்ல் சொனி நிறுவன பக்கிங்கோடு ஓடர் செய்த மறுநாளே.. இது எங்களை வந்து சேர்ந்தது. 

 

41rb7tkPx6L._SX425_.jpg

 

வாங்கக் கூடிய இடம்:  http://www.amazon.co.uk/Sony-Generation-SmartWatch-Smartphone-Accessory/dp/B006RJR62I

Link to post
Share on other sites

நெடுக்கர்! நீங்கள் ஏன் இந்தக் காசை முன்னாள் போராளிகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாது? இது ஒன்றும் அத்தியாவசியமான பொருளாகத் தெரியவில்லையே? :D

Link to post
Share on other sites

நெடுக்கர்! நீங்கள் ஏன் இந்தக் காசை முன்னாள் போராளிகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாது? இது ஒன்றும் அத்தியாவசியமான பொருளாகத் தெரியவில்லையே? :D

 

மக்களின் உரிமைக்காகப் போராடிய.. அன்னாள் போராளிகளுக்கும்.. இன்னாள் போரளிகளுக்கும்.. முன்னாள் போராளிகளுக்கும்.. நாங்கள் இயன்றதை செய்து கொண்டு தான்.. இவற்றையும் வாங்கிறம். நாங்க நினைக்கல்ல.. எங்கள் அளவிற்கு நீங்கள் எல்லாம்.. போராளிகளுக்கு உதவி செய்திருப்பீங்கள் என்று. அதனால்.. பல இடர்களையும் சந்தித்தே வந்தவர்கள் நாங்கள். எங்களுக்கே.... வகுப்பெடுப்பு.   :icon_idea:  :)  :lol:

Link to post
Share on other sites

மக்களின் உரிமைக்காகப் போராடிய.. அன்னாள் போராளிகளுக்கும்.. இன்னாள் போரளிகளுக்கும்.. முன்னாள் போராளிகளுக்கும்.. நாங்கள் இயன்றதை செய்து கொண்டு தான்.. இவற்றையும் வாங்கிறம். நாங்க நினைக்கல்ல.. எங்கள் அளவிற்கு நீங்கள் எல்லாம்.. போராளிகளுக்கு உதவி செய்திருப்பீங்கள் என்று. அதனால்.. பல இடர்களையும் சந்தித்தே வந்தவர்கள் நாங்கள். எங்களுக்கே.... வகுப்பெடுப்பு.   :icon_idea:  :)  :lol:

 

ஓம் நெடுக்கர்! மற்றவன் திறமையால வெண்ட காசை யாருக்குக் கொடுக்க வேணுமெண்டு நீங்கள் மட்டும் தான் வகுப்பெடுக்கலாம்! <_< . உங்களுக்கு கிரான்டால வாற காசில ஒரு ஐம்பது பவுண்ஸ் கூடக் கொடுக்க சொல்லிக் கேக்கிறதில தவறில்லை என நினைச்சன், தவறெண்டால் மன்னியுங்கோ! இந்தத் திரி உகந்த இடமல்ல! வேற இடங்களில தொடரலாம்! :D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏந்தி வந்தேன் காணிக்கை பூவாசம் தினம் கமழும் பொற்பாதமே.  
    • நம்ம லெவல் வேற லெவல்... இந்த பாக்கியம் ஒருத்தருக்கும் வராராது.     
    • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்கழி 2014 மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகேட்ட இளைஞனைத் தாக்கிய பிள்ளையான். களுதாவளையில் இடம்பெற்ற மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கேள்விக்கேட்டதற்காக இளைஞர் ஒருவர் அவ்விடத்திலேயே பிள்ளையானினாலும், அவரது ஆயுததாரிகளாலும்  கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். "தமிழினத்தை அழித்த இனக்கொலையாளி மகிந்தவைப்பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும், அதில் உங்களின் பங்குபற்றியும் கூறுங்கள்" என்று களுதாவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயது இளைஞர், மகிந்தவைப் போற்றித் துதிபாடிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கிக் கேட்டதற்காவே அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது. தாக்கப்பட்ட இளைஞரான அந்தோணிப்பிள்ளை அற்புதராசா கடுமையான காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் மகிந்தவுக்குச் சார்பான பிரச்சாரக் கூட்டங்களை தனது ஆயுதக் குழுவினதும் பொலீஸாரினதும் பிசன்னத்தோடு நடத்திவருகிறார். ஆவ்வாறானதொரு பிரச்சாரக் கூட்டத்திலேயே மகிந்தவிற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கி அவரது படுகொலைகள்கள், கடத்தல்கள் தொடர்பாகக் கெள்வியொன்றினை அந்தோணிப்பிள்ளை அற்புதராசா என்னும் இளைஞர் பலர் முன்னிலையில் கேட்டிருக்கிறார். அவ்விளைஞன் கேள்விகேட்டு அமருமுன்னமே, தனது சகாவான பிரசாந்தனை பார்த்து, "அவனைப் பிடியுங்கள்" என்று கூறிய பிள்ளையானும், அவரது சகாக்களும் அந்த இளைஞரை  மேடையின் அருகில் வைத்துத்க் கடுமையாக தாக்கியிருக்கிறர்கள். மக்கள் திகைத்துப்போய் பார்த்திருக்க, பிள்ளையானுக்குக் காவலாக நின்ற பொலீஸார் வேடிக்கை பார்க்க அந்த இளைஞன் துணைராணுவக் கொலைக்குழுவினரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இது இவ்வாறிருக்க, மகிந்த கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு அலுவலகம் ஒன்றிற்குத் தீவைத்திருக்கிறார். ஏறாவூர் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி, சந்திவெளியில் அமைந்திருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆதாரவு அலுவலகத்திற்கு உந்துருளிகளில் வந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் அவ்வலுவலகத்தின்மீது பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தீமூட்டியதாக அயலவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தீவைக்குமுன்னர், அலுவலகத்தினுள் நுழைந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் உள்ளிருந்த தளபாடங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினாலும், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கினாலும் அல்லற்பட்டு வரும் மக்களுக்கான நிவாரணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கும் மகிந்தவின் ஆலோசகர் பிள்ளையான், மகிந்தவுக்கு வாக்களித்தால் ஒழிய நிவாரணங்களை தாம் வழங்கப்போவதில்லையென்று பகிரங்கமாக மக்களுக்குத் தெரிவித்துவருகிறார் என்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் முறையிட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடுமையான வெள்ளப்பெருக்கினைச் சந்தித்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தின் சுமார் 150,000 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 60,000 ஏக்கர்கள் விவசாய நிலமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவான நிலைப்பாடுடைய இம்மக்களின் அவலங்களில் அரசியல் செய்யும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையான் மக்களின் அவலங்களை தனது எஜமானர்களின் வெற்றிக்குத் தூண்டிலாகப் பாவிப்பதாக இம்மக்கள் விசனப்படுகிறார்கள்.
    • 4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு    23 Views வவுனியா பிரதேசத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப் படவுள்ளதாக வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று  இடம்பெற்றது.   இதன்போது வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் ஏனைய அரசகாடுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வனவளத் திணைக்களம் சார்பாக முன்னிலையாகிருந்த உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்ததுடன் இது தொடர்பாக மாவட்ட அரசஅதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.   எனினும் குறித்தவிடயம் தொடர்பாக பிரதேச செயலகத்திற்கோ அல்லது கிராம சேவையாளர்களிற்கோ அறிவிக்கப்படவில்லை.   இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு. திலீபன்,“ நாங்கள் மக்களுடன் சந்திப்பை மேற்கொள்பவர்கள். அவர்களிற்கு பதில் சொல்லவேண்டும். எனவே அரச அதிபருக்கு தெரியப்படுத்துவதற்கு முன்னதாக எங்களுக்கும் அது தொடர்பாக தெரியப்படுத்தி ஒரு பிரதியை அனுப்ப வேண்டும்“ என்றனர்   https://www.ilakku.org/?p=43572
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.