Jump to content

சதீஸ் செத்துக் கொண்டிருக்கிறான்....காப்பாற்றுங்கள்...

Recommended Posts

சதீசின் மகனின் படிப்புக்கான உதவியைப்பொறுப்பை கள உறவு நிழலியும் அவரது மனைவியும் பொறுப்பேற்றுள்ளனர். சாகித்தியன் சாதiனாயளனாக வேண்டுமென்ற சதீசின் கனவு மெய்ப்பட அவனது குழந்தையின் கல்விக்கான உதவியை செய்ய முன்வந்த நிழலிக்கும் அவரு மனைவிக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

fp070606-38.jpg

Link to comment
Share on other sites

என் மனைவிக்கும் நன்றி சொல்லியிருக்கின்றதைப் பார்த்து என் மனைவியின் கண்ணில் ஆனந்தக் கண்ணீரே வந்துட்டுது... இன்று வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படி விடியவே சந்தோசப்படுத்தியாச்சு ஆளை. :)

நல்லவற்றை வாழ்த்துவோம் நல்வர்களையும் வாழ்த்துவோம். அவர்கள் பலரை வாழ வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

[size=4][size=6]எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..![/size]

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, September 5, 2012[/size]

[size=4]காலம் எழுதிய வெற்றிகளில்

நெருப்பாய் இயங்கிய வரலாறு.

இருளும் கடினமும் இயற்கையின் சீற்றமும்

அசையாத இரும்பின் இருதயம்

உனக்காய் படைக்கப்பட்டிருந்தது.

ஒருகாலம் உனக்கான விலை

உலகத்தாலும் கொடுக்க முடியாத பெறுமதி.

கையுக்குள் வளர்த்து கடமைக்கு விடைதந்த

காவியத்தின் கண்ணில் தெரிந்த ஒளியின் வெளியில்

ஓர்மத்தை விதைத்து விடைபெற்ற வீரன்.

‘செயலின் பின் சொல்’

அதிகாரியாய் , பணியாளனாய்

இலட்சியப் போராளியாய் – நீ

இயங்கிய தளங்கள் தந்த அனுபவங்களிலிருந்து

இன்னோர் உலகின் மூலத்தைக் கண்ட முழுமுதலான்.

தடைகளகற்றித் தனிதேசம் அமைக்க

ஓயாதலைந்த பெருநெருப்பு.

எமக்காகவே எரியும் நாள் தேடியலைந்த எரிமலை.

ஏற்றிருந்த இலட்சியக் கனவோடலைந்த இரும்பு

வழியனுப்பியோர் கனவில் விளைந்த [/size]

[size=4]வெற்றிகளை அள்ளித் தந்து

விலாசங்கள் விசிலடிக்க [/size]

[size=4]வழிகாட்டிய வெளிவராத அதிசயம்…..

23.08.2012 ,

கடைசியாய் கதைபேசி

கண்ணீரோடு விடைபெற்ற போதும்

மீண்டும் கனவுகள் விதைத்துத்தானே

கண்ணுறங்கிப் போனாய் !

வாழ்ந்த போது உனக்கு விலையில்லை

வரலாறுகள் நீ படைத்த போதுன்

பெயருக்கு விலாசமில்லை….!

அன்றைய வீரன் !

காய்ந்து போன உதட்டின் உணர்வையோ

உயிரின் வலியையோ உணர முடியாப் பிணமாய்

இன்று வீழ்ந்து கிடக்கிறாய்

விழிகளில் ஈரம் எதையோ சொல்லத் துடிக்கிறது

விளங்கிக் கொள்ள முடியவில்லை……!

‘வீழ்வதெல்லாம் எழுவதற்கே’

இன்னும் வீரமாய் உன்னை விற்பனைக்கா(சா)ட்சியாக்கி

விற்றுக் கொண்டிருக்கிறது தேசிய உணர்வு….!

நீ செத்துக் கொண்டிருக்கிறாய்.

அப்பாவின் குரலுக்காய் சாகித்யன்

கணவனின் மீட்சிக்காய் கவிதா

தோழனின் உயிர்காப்புக்காய் நாங்கள்

உன்னைக் காக்க மட்டுமே இறைஞ்சுகிறோம்….!

கண்ணில் தெரியாக்கடவுளே

முன்னால் வாழ்கிற தமிழர்களே

எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..! [/size]

[size=4]எந்நாளும் உங்களுக்கு நன்றியுடனிருப்போம்.

01.09.2012[/size]

[size=5]http://mullaimann.blogspot.de/2012/09/blog-post.html[/size]

[size=5]http://kavithai.blog.com/2012/09/05/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/[/size]

Link to comment
Share on other sites

  • 1 month later...

சதீசின் மகனின் படிப்புக்கான உதவியைப்பொறுப்பை கள உறவு நிழலியும் அவரது மனைவியும் பொறுப்பேற்றுள்ளனர். சாகித்தியன் சாதiனாயளனாக வேண்டுமென்ற சதீசின் கனவு மெய்ப்பட அவனது குழந்தையின் கல்விக்கான உதவியை செய்ய முன்வந்த நிழலிக்கும் அவரு மனைவிக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

சொன்ன மாதிரி என்னால் சில பிரச்சனைகளாலும் திடீர் செலவுகளாலும் செப்ரம்பரில் இருந்து உதவி செய்ய முடியவில்லை. இது பற்றி உங்களுக்கு சொல்லவும் மறந்து விட்டேன். இந்த மாதத்தில் இருந்தே அனுப்ப முடிகின்றது.

இன்று நேசக்கரம் மூலம் பணம் அனுப்பிவிட்டு தாமதத்துக்கு வருத்தம் தெரிவிக்க இதனை எழுதுகின்றேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 years later...

இன்று இந்தத் திரியை எதேச்சையாகப் பார்க்கக் கிடைத்தது நிழலி, உங்களுக்கும் மனைவிக்கும் பெரு நன்றிகள்.

Link to comment
Share on other sites

இன்று இந்தத் திரியை எதேச்சையாகப் பார்க்கக் கிடைத்தது நிழலி, உங்களுக்கும் மனைவிக்கும் பெரு நன்றிகள்.

இந்த செய்திக்குரிய சதீஸ் சிறையில் இறந்துவிட்டான் ஆதவன்.

Link to comment
Share on other sites

சதீஸ் உடலம் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது. அவனை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதை தவிர எதையும் செய்ய முடியாதுள்ளது.
 
நாட்டுக்காக போய் தன் வாழ்வை சிறையில் கழித்து இறந்து போன சதீசின் குழந்தைக்கும் குடும்பத்திற்கும் உதவ முடிந்தவர்கள் உதவுங்கள். அவனது ஆசை தன் மகன் படித்து நல்வாழ்வு வாழ வேணுமென்பது. அதையேனும் செய்வோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.