-
Tell a friend
-
Topics
-
Posts
-
By சுகந்தமாறன் · Posted
தங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி புங்கையூரான். நான் எழுதுவதை நிறுத்தி 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவையெல்லாம் திருமணமான முன்னரான காலத்தில் முகநூலில் எழுதிய கதைகள். யாழ்களத்தின் கருத்துக்களை பெறுவதற்காக இங்கே பதிவிட்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன். வரவேற்பிற்க்கு நன்றி ஈழப்பிரியன். இனி வரும் நாட்களில் எழுதி குவிப்பதாக உத்தேசம். உங்கள் கருத்து உற்சாகம் அளிக்கிறது. யாழ் களத்தில் இந்த கதையை பகிர்ந்து நீண்ட நேரமாக கருத்துக்கள் ஏதும் வராததால் "வாசகர்களுடைய ரசனைக்கும் எனது எழுத்துக்களுக்கும் வெகுதூரம்" என எண்ணியிருந்தேன். வரவேற்பிற்க்கு நன்றி தமிழ்த்தேசியன். -
By அன்புத்தம்பி · Posted
இந்த பாடல் ஒரு நேபாளி பாடல்,பாடல் வரிகள் புரியாவிடடாலும் பின்னணியில் வரும் காட்ச்சிகள் அழகாக இருக்கின்றது ,அத்தோடு பாடல் காட்ச்சியில் வரும் அந்த இருவரின் நடனமும் ................. -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள் - மத்திய பிரதேசம் கூத்துகள் போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை ஓடக் கூறி பொதுமக்கள் தீப்பந்தத்துடன் ஓடிய நிகழ்வு நடந்துள்ளது. கொரோனாவை ஒழிக்கும் பணிகளில் உலக நாடுகள் முழுவதும் அறிவியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வரும் சூழலில், இப்படிப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கொரோனா என்பதை தீயசக்தியாக கருதும் அந்த கிராமமக்கள், நெருப்பைக் கொண்டு அதனை விரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்துள்ளனர். தீப்பந்தம் இந்திய முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் பணிகளில் மத்திய மாநில அரசுகளே திணறி வருகின்றன. இந்தச்சூழலில், மத்தியப் பிரதேசம் மாநிலம் அஹர் மால்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா என்ற கிராமத்தில் தீப்பந்தத்தை கொண்டு கொரோனாவை விரட்டும் கூத்து அரங்கேறியுள்ளது. ஓடு கொரோனா .. ஓடு.. வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம் இரவு நேரங்களில் தீப்பந்தத்தை கைகளில் எடுக்கும் கணேஷ்புரா கிராமமக்கள், 'ஓடு கொரோனா ஓடு' என்ற முழக்கத்துடன் ஊரைச் சுற்றி வருகின்றனர். குடும்பத்தில் ஒருவர் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது அந்தக் கிராமத்தின் கட்டுப்பாடு. ஊரை ஒரு சுற்று சுற்றி வந்ததும் கைகளில் வைத்துள்ள தீப்பந்தங்களை ஊரின் எல்லையில் தூக்கி வீசி விடுகின்றனர். விழிப்புணர்வு ( ? ) இவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் தங்கள் ஊருக்குள் நுழையாது என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக (?) உள்ளது. கொரோனாவின் தீவிரமும், அது பரவும் விதமும் பற்றிய விழிப்புணர்வு இன்னும் முழுமையாக மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே உதாரணம். https://tamil.oneindia.com/news/india/in-madhyaprdaesh-village-people-carrying-fire-sticks-to-drive-out-the-corona-418604.html
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.