Jump to content

சதீஸ் செத்துக் கொண்டிருக்கிறான்....காப்பாற்றுங்கள்...

Recommended Posts

சதீஸ் செத்துக் கொண்டிருக்கிறான்.

2008ம் ஆண்டு கொழும்பில் கைதாகி சயனைட் உட்கொண்டு உயிர் தப்பவைக்கப்பட்ட சுந்தரம் சதீஸ் வழக்கிற்காக கழுத்துறைக்கு 21.08.2012 கொண்டு செல்லப்பட்டான். காரணம் தெரியாது காயங்களுடன் மரணப்படுக்கையில் கிடக்கிறான். அவனுக்கு என்ன நடந்ததென்றது புதிராகவே இருக்கிறது. சுயநினைவை இழந்து போயிருக்கிறான்.

வழக்கிற்காக வளமையாக காலிக்கு போய் வருகிறவனுக்கு என்ன நடந்தது ?

அவனை நம்பிய அவனது மனைவி கவிதா அவனது குழந்தை சாகித்தியன் இருவரினதும் கண்ணீர்க்குரல் சதீசின் கண்களிலிருந்து கண்ணீரை மட்டுமே சிந்த வைக்கிறது. ஒரு காலத்தின் வரலாறு ஒரு இனத்தின் விடுதலையை நேசித்தவன் கடமைக்காகவே குடும்பம் என்ற கூட்டைக் கட்டியவன். இன்று அனாதையாய் எல்லாம் இழந்து 4வருடங்கள் சிறையில் அனுபவித்த துயரின் காயங்கள் ஆற முன்னர் இன்று கோமாநிலையில் கிடக்கிறான்.

காரணம் அறியப்படாத மர்மம் சதீசின் காயங்களிலிருந்து வழிகிறது.

சதீஸ் காப்பாற்றப்பட வேண்டும். அவனுக்கான உதவி தேவைப்படுகிறது. ஈரமுள்ள இதயங்களிடமிருந்து சதீஸின் உயிர்காக்க உதவியை வேண்டுகிறேன்.

உதவவிரும்புவோர் தொடர்பு கொள்ள :-

பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany :–

தொலைபேசி - 0049 6781 70723

கைபேசி - 0049 162 8037418

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

தொடர்புபட்ட செய்தி இணைப்புகள் :-

http://www.thinakkathir.com/?p=40675

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107143

Link to comment
Share on other sites

சதீஸ் தனக்காக உதவி கேட்ட நேரம் அவனது துயரை இதே யாழ் களத்தில் எழுதியிணைத்திருந்தேன். அதற்கு கருத்துக்கள ஆயுதம் தரிக்காத போராளிகள் பலர் சதீசின் இழப்பை துயரை பலவாறு கூறுபோட்டு விமர்சித்தார்கள். இன்று அவன் சாகக்கிடக்கிறான். 2வருடம் முதல் அவனை கருத்தால் சந்தேகித்தவர்கள் ஒருமுறை தங்கள் கருத்துக்களை மீள வாசிக்க வேண்டும்.

பழைய இணைப்பு இது :-http://www.yarl.com/forum3/index.php?showtopic=77208

Link to comment
Share on other sites

யாழ் கருணையாளர்கள் இந்த உயிரை காப்பாத்தினால் நல்லது . சும்மா தேசியம் மாவீரர்கள் எண்டு கொசிப் அடிக்கிறதை விட்டுட்டு உருப்படியானவேலையள் செய்யலாம் எண்டு நினைக்கிறன் .

Link to comment
Share on other sites

அரசியல் தீர்வு வரும்வரைக்கும் நாங்கள் உதவ மாட்டோம், அதுவரைக்கும் வாழ்க்கையை இழப்பவர்கள், இதே போன்று நாசமாக போகின்றவர்கள், வாழ்க்கையை கொண்டு நடத்த வழியின்றி சாகின்றவர்கள் எல்லாரையும் அரசியல் தீர்வு வந்த பின் தியாகிகளாக அறிவிப்போம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் பெரிதாக கை கொடுக்க முடியவில்லை....சிறிய அளவிலாவது கை கொடுக்கின்றேன்.

Link to comment
Share on other sites

வறியார்க்குஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. 221

வறியவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படும் . பிறருக்குக் கொடுப்பதெல்லம் பயனை எதிர்பார்த்துத் தருவதாகும் .

எனது கருத்து:

சந்தனம் மிஞ்சினவைக்கு ஒண்டை எதிர்பாத்து குடுக்கிறதுக்கு பேர் வந்து ஈகை இல்லை . ஒண்டையுமே எதிர்பாக்காமல் வாழ்கையில கஸ்ரப்பட்ட ஏழை பாழையளுக்குக் குடுக்கிறதுக்குப் பேர்தான் ஈகை . இதை சிலபேர் இந்தக் காலத்தில செய்யினம் . ஆனால் காணாது .

Call that a gift to needy men thou dost dispense,

All else is void of good, seeking for recompense.

Donner aux pauvres, c’est faire la charité; il est de a nature de tous les autres dons de n’être faits qu’en vue d’un profit, que l’on en attend dans la suite.

சிறுதுளி பெருவெள்ளம் குசா .காலத்தில் செய்த ஈகையே நிலைக்கும் .உங்கள் மனம் போல நீங்கள் சிறப்பாக வாழவேண்டும்.

Link to comment
Share on other sites

[size=6]சதீசின் உயிர் காக்க உதவிய கருணையாளர்கள் விபரம் :-[/size]

[size=5]கோமகன் - 98,45€

புங்கையூரான் - 40,40€

நாகராஜா லோகேஸ்வரன் - 24,35€

உடையார் - 122,85€

நந்தன் 26 - 71,35€

குமாரசாமி - 103,98€

பெயர் குறிப்பிடவிரும்பாத கள உறவு :-13,38€ [/size]

[size=5]நாரதர் - 50,00€

கஜன் - 98,45€ [/size]

[size=6]இதுவரை கிடைத்த மொத்த உதவி - 623,21€[/size]

உதவிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள். நந்தன்26 உதவும் 3 பிள்ளைகளின் கல்வியுதவியை இவ் அவசர உதவிக்காக மாற்றித் தந்திருக்கிறார். கல்வியுதவியை சிலநாளில் செய்துவிடுவார். இவ் அவசர உதவிக்கு இப்போது தனது பங்களிப்பை பயன்படுத்துமாறு வேண்டியுள்ளார்.

என்னால் பெரிதாக கை கொடுக்க முடியவில்லை....சிறிய அளவிலாவது கை கொடுக்கின்றேன்.

சிறுதுளி பெருவெள்ளம். மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

சதீசின் உயிர்காக்க மேலும் உதவியோர் :-

குமாரசாமி - 103,98€

பெயர் குறிப்பிடவிரும்பாத கள உறவு :-13,38€

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் பெரிதாக கை கொடுக்க முடியவில்லை....சிறிய அளவிலாவது கை கொடுக்கின்றேன்.

தாத்தா இது சின்ன தொகையா நீங்க எங்கேயோ போட்டீங்க

Link to comment
Share on other sites

அக்கா, உங்கள் Paypal accounts க்கு எனது சிறு உதவியை சற்றுமுன் அனுப்பிஉள்ளேன். அதையும் சேர்த்து சதீஸ் குடும்பத்தாருக்கு அனுப்பிவிடுங்கள்.

சதீஸ் விரைவில் துன்பங்களில் இருந்து மீண்டு குடும்பத்துடன் இணைந்து வாழ வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தம்மால் இயன்ற உதவிகளை இதுவரை வழங்கிய உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

சதீசின் உயிர்காக்க மேலும் உதவியோர் :-

நாரதர் - 50,00€

கஜன் - 98,45€

கஜன்,

உங்கள் உதவி கிடைத்தது. மிக்க நன்றிகள். சதீசுக்காக எல்லோரும் பிரார்த்தியுங்கள். இன்று இரவு கொழும்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளான். சுயநினைவு இழந்த பின்னும் விலங்கு கழற்றப்படாமலே வைத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

இந்த மாதம் எங்கள் ஊர் சங்கத்தாலும் எங்கள் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தாலும் எங்கள் ஊர் கோயிலிற்கு கோபுரம் கட்ட அதே நேரம் பாடசாலைக்கு மணி கட்டவும் நிதி சேகரிக்கிறம் தொடர்புகளிற்கு sathiri @ mail .com

காண்டாமணியா இல்லை கு .... நோமல் மணியா

கோபுரம் மணி எண்டிறியள் விளப்பமில்லை . கோபுரம் , மணியின்ரை அளவுகள் எண்டு படத்தோடை ஆதாரம் வேணும் . உங்கடை ஊர் எங்கை கிடக்கு எண்டதுக்கும் ஆதாரம் வேணும் . மற்றது காசு தந்தால் அங்கை போகும் எண்டதுக்கு என்ன ஆதாரம் ?? எல்லாத்துக்கும் விளப்பமாய் மறுமொழி சொல்லுங்கோ காசு தாறதைபத்தி யோசிப்பம் .

இது கேள்வி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த குடும்பத்தின் இந்த இக்கட்டான நிலையில் கை கொடுத்து உதவுகிற உறவுகளுக்கும் அதை ஒழுங்குபடுத்துகிற சாந்தி வவுனியனுக்கும் வாழ்த்துக்கள்.

-காலத்தினால் செய்த உதவி ஞாலத்திலும் பெரிது-

Link to comment
Share on other sites

இதுக்கு தான் யாழ் களம் எப்பவும் வேணும் எண்டிறது நன்றிகள் உதவிய எல்லாருக்கும்

Link to comment
Share on other sites

இந்த மாதம் எங்கள் ஊர் சங்கத்தாலும் எங்கள் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தாலும் எங்கள் ஊர் கோயிலிற்கு கோபுரம் கட்ட அதே நேரம் பாடசாலைக்கு மணி கட்டவும் நிதி சேகரிக்கிறம் தொடர்புகளிற்கு sathiri @ mail .com

உங்கள் ஊர் கோவில் மணிசெய்ய தனியான தலைப்பொன்றை ஆரம்பியுங்கள். சாகக்கிடக்கிறவனின் செய்திக்குள் வந்து குழப்பம் செய்ய வேண்டாம். :wub: :wub: :wub: :wub: :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

சதீசின் உயிர்காக்க மேலும் உதவியோர் :-

தப்பிலி -€49,05

பூரணி றொகான் - -€49,05

Link to comment
Share on other sites

காண்டாமணியா இல்லை கு .... நோமல் மணியா

காண்டா மணியோ குட்டி மணியோ ஏதோ வாற காசைப்பொறுத்து வாங்கி கொழுவுவம். :lol:

உங்கள் ஊர் கோவில் மணிசெய்ய தனியான தலைப்பொன்றை ஆரம்பியுங்கள். சாகக்கிடக்கிறவனின் செய்திக்குள் வந்து குழப்பம் செய்ய வேண்டாம். :wub: :wub: :wub: :wub: :wub: :wub: :wub:

நான் ஒரு மணி வாங்க ஆசைப்பட்டது தப்பா.))))))..தப்பா )))))) தப்பா)))))))) இதுவேறை எதிரொலிக்குது இப்ப எல்லாரும் அதைத்தான் செய்யிறாங்கள் அதுதான் நானும் ஆசைப்பட்டிட்டன்..மன்னிச்சு கொள்ளுங்கோ அம்மணி...

images-17.jpg

தோடுடைய செவியன் நீ யாருடைய பெடியன். திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

கோபுரம் மணி எண்டிறியள் விளப்பமில்லை . கோபுரம் , மணியின்ரை அளவுகள் எண்டு படத்தோடை ஆதாரம் வேணும் . உங்கடை ஊர் எங்கை கிடக்கு எண்டதுக்கும் ஆதாரம் வேணும் . மற்றது காசு தந்தால் அங்கை போகும் எண்டதுக்கு என்ன ஆதாரம் ?? எல்லாத்துக்கும் விளப்பமாய் மறுமொழி சொல்லுங்கோ காசு தாறதைபத்தி யோசிப்பம் .

இங்குள்ள அரசாங்கங்கள், தூதுவராலயம்களுக்கு பிரசரை கொடுத்து ஊரில் கோபுரங்கள் கட்ட ஏலுமா எண்ட கோணத்திலையும் யோசியுங்கோ சாத்திரி அண்ணா. :)

பின்குறிப்பு:

ஊரிலே எழும்பும் புத்த கோவில்களுக்கு போட்டியா கோவில் , கோபுரங்கள் கட்டவேண்டிய பாரிய பொறுப்பும் இன்று புலம்பெயர் மக்களின் தலையில் எதிரியால் சுமத்தப்பட்டுள்ளது. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சலிக்காமல் எமது உறவுகளுக்காக உழைக்கும் சாந்தியக்காவுக்கும்

உதவி என்று கேட்டவுடன் ஓடிவந்துதவிய அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.