Jump to content

காலமும் கோலங்களும்..............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலமும் கோலங்களும்...............

[size=4]பாஸ்கரன் புலமைப்பரிசு பெற்று அமெரிக்காவுக்கு வந்த போது ....தனிமையை முதலாவதாக் உணர்ந்தான். முதலில் உணவு தேவை பெரும் சிரமமாக் இருந்தது. அத்துடன் இடமும் புதிது அங்கு மனிதர்களும் அன்னியமாக் தெரிந்தார்கள் . கடின் முயற்சிக்கு பின் சமைக்கவும் தன் தேவைகளை சரி செய்து கொள்ளவும் கற்று இருந்தான் காலம் உருண்டோடி மூன்று வருடங்கள் ஆனது மனைவியும் ஆணும்பெண்ணுமாய் இரு குழந்தைகளும் நாட்டில் அவனுக்காய் காத்து இருந்தார்கள். அப்போதெலாம் அதிகம் தொலைபேசி வதியும் கணனியும் அதிகம் நடை முறையில் இலகுவாக இல்லாத காலம். அடிக் கடி தங்களை அழைத்து கொள்ளும்படி கடிதத்தின் மேல் கடிதம் வரும். வெளி நாடு சுவர்க்கம் என எண்ணி இருந்தார்கள் அவர்கள். இங்குள்ள இயந்திர வாழ்வை நினைக்காமல் . எதுவும் நிஜத்தில் பார்க்கும்போது தான் அவற்றின் தாற்பரியம் விளங்கும். ஒரு வாறு ..குடும்ப் இணைவின் மூலம் அவர்களும் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். காலம் கற்றுக் கொள்வதில் கழிந்தது. சில தேவைகளும் தீர்ந்த்தன . சில தேவைகள் புதிதாய் முளைத்தன . கார் .. முன்பிருந்த வாடகை வீடு என்பன சொந்தமாயின .. அவர்களுக்கும் நாடு பிடிபடதொடங்கியது. வீட்டில் தனிமையை விரட்டவும் சில மேலதிக தேவைக்கும் மனைவியும் வேலைக்கு செல்ல தொடங்கினாள். தேவைகளும் அதிகரித்தன . அவளுக்கும் கார் .. வேலை யாள் என இன்னும் அதிகமாயின...[/size]

[size=4]..எதோ சில நடைமுறைகள் மாறத்தொடங்க. கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் குறைந்து போனது இருவரும் தனித்தீவாக இயங்க தொடங்கினார்கள். பிள்ளைகளும் தாயுடன் சேர .. அவன் மீண்டும் ..நண்பர்களை நாட அது பார்டி ..குடி என உறவு மீண்டும் பிரிந்தது..............எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு என்பது போல கணவன் மனைவி கோர்டில் சந்தித்து ..விவாகம் ரத்தானது .........குழந்தைகள் வார நாட்களில் தாயுடனும் .. வார இறுதிகள் சனி ஞாயிறு தந்தையுடன் என முடிவாகியது ... சில தேவைகள் நிமித்தம் சில சமயம் அது நடப்தில்லை . இளைய மகள் வயதை அடைந்ததும். அது மெல்ல மெல்ல நின்று அது தந்தையர் தினம் மட்டும் என்றானது ....[/size]

[size=4]குடும்பத்தை பிரிந்த சோகம் ..தனிமை ..அவனை குடிகாரனாக்கி நோயில் வீழ்த்தியது ....நண்பர்களும் அட்டைகளாக கழன்று போயினர்... தனிமை அவனை சிந்திக்க வைத்தது ... ஒரு பாதிரியார் அவனை மனம் மாற்றினார். .அவன் அயலிலுள்ள கனடாவின் மொன்ரியலுக்கு இடம் மாறினான். நல்ல படிப்பாளி .. பொறியியல் துறை .. ( கட்டுமான ) ... அவர் அவனை மெல்ல மெல்ல மாற்றினார். தாயகத்தின் வடக்கில் கஷ்ட படும் அகதிகளுக்கு அவனை உதவ வழி காட்டினார். ஏற்கனவே விவசாய த்தில் நாட்ட முள்ள அவன் அங்கு ஒரு காணியை வாங்கி சில குடும்பங்களை குடியமர்த்தினான் ...சில குடும்பங்களுக்கு விவசாயம் செய்ய உதவி செய்தான் .... .தற்போது அவருக்கு பணி ஓய்வு பெறும் காலம். மண் வாசனை அவரை ஈர்க்கிறது . அங்கு ஒரு வீடு கட்டும்பணி நடக்கிறது .. குடும்பம் அற்றவனுக்கு சில விவசாயக் குடும்பம் காத்திருக்கிறது . வாழ்க்கை அங்கும் இங்குமாய் கடந்து செல்லும். படிப்பாளி .. வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தும் மன ஆறுதலான குடும்பம் அமையவில்லை . காலம் மாறியதும் அதன் கோலங்கள் போடும் ஜாலங்களும் எண்ணில் அடங்காதவை . ஒவ்வொருவர் வாழ்வும் ஒவ்வொரு விதம். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு

எடுத்தக்காட்டாக அவரது வாழ்க்கையின் கடைசி பகுதி.

நன்றி பாட்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தை பிரிந்த சோகம் ..தனிமை ..அவனை குடிகாரனாக்கி நோயில் வீழ்த்தியது ....நண்பர்களும் அட்டைகளாக கழன்று போயினர்... தனிமை அவனை சிந்திக்க வைத்தது ... ஒரு பாதிரியார் அவனை மனம் மாற்றினார். .அவன் அயலிலுள்ள கனடாவின் மொன்ரியலுக்கு இடம் மாறினான். நல்ல படிப்பாளி .. பொறியியல் துறை .. ( கட்டுமான ) ... அவர் அவனை மெல்ல மெல்ல மாற்றினார். தாயகத்தின் வடக்கில் கஷ்ட படும் அகதிகளுக்கு அவனை உதவ வழி காட்டினார்.

வாழ்வில் தடுக்கி விழும்போது தாங்கிப்பிடிப்பது இதுதான்.

அழகான கதை வாழ்த்துகள் அம்மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவிற்கு நன்றி நிலாமதி.

Link to comment
Share on other sites

பிரிவுக்கான காரணத்தை இன்னும் சிறிது அழுத்தி சொல்லியிருக்கலாம் நிலாமதி அக்கா . ஒரு நல்ல கதையை தந்ததிற்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்ட சொந்த குடும்பத்தை ஒழுங்காக வைத்திருக்க அவரால் முடியவில்லை.ம் ஊருக்காவது ஏதோ செய்தாரே!...கதை தந்த நிலா அக்காவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் தனித்தீவாக இயங்க தொடங்கினார்கள்.

இது தான், இப்போது எல்லா இடமும், நடக்கிறது, நிலாமதியக்கா!

இதைத் தான் 'ஆணவம்' என்று எமது மதம் , அழைத்தது!

அது இப்போது, புலத்துத் தெய்வங்களுக்கும் தொத்தி விட்டது!

நல்ல ஒரு அருமையான, படிப்பினைக் கதை! நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]என் சிறுகதை பதிவுக்கு கருத்திட்ட புங்கையூரன் ரதி கோமகன் குமார் அண்ணா கறுப்பி விசு மற்றும் விருப்பு வாக்கு போட்டவர்களுக்கும் என் நன்றிகள். உங்கள் ஊக்கம் என்னை மேலும் ஆக்குவிக்கும். [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.