Jump to content

திருந்தவே திருந்தாது நம்ம இனம்...


Recommended Posts

சுண்டல் என்ன நக்கல் சிரிப்பு?

கிண்டல் சிரிப்புபா........ :)

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

சகி என்ன அஜீவன் அண்ணா கதா நாயகியைத் தேடிறாராம், நீங்க கிட்டத்தட்ட சோதிகா மாதிரித் தானே இருக்கிறியள் அதோட புலத்தில இருந்து நாட்டுக்குப் போற கதாபாத்திரம் எண்ட படியா அவ்வளவா நடிக்கத் தேவையும் இல்லை.இலவசமா ஊருக்குப் போன மாதிரியும் இருக்கும், நீங்க கதா நாயகியா நடிக்கலாமே?

அஜீவன் அண்ணா எனக்கு அந்த ஆயிரம் பிராங்க் என்ன மாதிரி அனுப்புவியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படியே பேசியே காலத்தை தள்ளுவீங்கள்(1977 ஆண்டு கூட்டணி ஆட்களை மாதிரி).

அங்கே ஒருத்தர் வருடத்தில் கார்த்திகை மாதம் மட்டும் தான் வந்து கதைப்பார் ஆனால் காரியம் எல்லாம் சரியா நடந்து கொண்டு இருக்கும்.உலகமே அதை எதிர்பார்த்து காத்திருக்கும்.

வாய் சொல் வீரர்களை விட செயல் வீரர்கள் தான் தேவை.. .......

Link to comment
Share on other sites

சகி என்ன அஜீவன் அண்ணா கதா நாயகியைத் தேடிறாராம், நீங்க கிட்டத்தட்ட சோதிகா மாதிரித் தானே இருக்கிறியள் அதோட புலத்தில இருந்து நாட்டுக்குப் போற கதாபாத்திரம் எண்ட படியா அவ்வளவா நடிக்கத் தேவையும் இல்லை.இலவசமா ஊருக்குப் போன மாதிரியும் இருக்கும், நீங்க கதா நாயகியா நடிக்கலாமே?

அஜீவன் அண்ணா எனக்கு அந்த ஆயிரம் பிராங்க் என்ன மாதிரி அனுப்புவியள்?

ஆயிரத்திலயே கண்ணாயிருக்கிறீங்களே

ஆளக் காட்டுங்க நாரதரே :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு எடுத்தாலும் என்னில் தான் உதாரணம் காட்டுவீர்களா விஸ்ணு!!

நான் இப்போ விரதத்தில் இருக்கின்றேன். பிறகு பார்த்துக் கொள்கின்றேன் :twisted: :twisted: :wink:

Link to comment
Share on other sites

வர்ணன்

நீர் உமக்குள்ளேயே ஒரு பதிலை வைத்துக் கொண்டு அடுத்தவனை சீண்டுவதற்காகவே கேள்வி கேட்கும் ஒருவர். உமக்கு எங்களைப் போன்றவர்கள் சொல்வதொன்றும் ஏறாது.

மதனராசா

நீர் (அங்)அலிகளின் கதையைக் கேட்டு ஆட்டம் போட வேண்டாம். அந்த அலி தான் பல அறிவிப்பாளர்களுடன் ஆட்டம் போட்டு அவர்கள் அலரியடித்து ஓடியதை நினைத்து மற்றவர்களைப் பற்றி எழுதுகின்றது.

(அங்)அலி

நீர் வேண்டுமானால் வடஅமெரிக்க அவலம் போல் அறிவிப்பாளர்கள் அலறிய இராத்திரிகள்

தலா

மணிவண்ணன் கங்கைஅமரன் போன்றோரும் கட்சி தொடங்கிட்டாங்களா?? ஏனுங்க இங்கே ஒரு இந்தியரை அழைத்துக் கடை திறந்தது பற்றிய வாதம் தானே நடக்கின்றது. உங்களுக்கு நீங்கள் செய்வதெல்லாம் நியாயம் ஆக்க எது வேண்டுமானாலும் எழுதுவீர்கள்.

அதற்காக என்ன நொண்டி நியாயங்களும் சொல்வீர்கள். கடை உரிமையாளர் ஓர் இந்தியர். அவர் செயற்பாட்டை நாம் எப்படி விமர்சிக்க முடியும். உமக்கு எந்த விடயத்திலும் தேசியத்தை கலந்து அதை கேவலப்படுத்துவதே குறி.

Link to comment
Share on other sites

சகி என்ன அஜீவன் அண்ணா கதா நாயகியைத் தேடிறாராம், நீங்க கிட்டத்தட்ட சோதிகா மாதிரித் தானே இருக்கிறியள் அதோட புலத்தில இருந்து நாட்டுக்குப் போற கதாபாத்திரம் எண்ட படியா அவ்வளவா நடிக்கத் தேவையும் இல்லை.இலவசமா ஊருக்குப் போன மாதிரியும் இருக்கும், நீங்க கதா நாயகியா நடிக்கலாமே?

அஜீவன் அண்ணா எனக்கு அந்த ஆயிரம் பிராங்க் என்ன மாதிரி அனுப்புவியள்?

:shock: ஆ நாரதர்..ஆயிரத்துக்காக ஆசைப்பட்டு ... என்னை வம்பில மாட்டு விடுறீங்களே? சினிமா பற்றி கதைத்தாலே.......... :? :evil: :!:

இதற்குள் இதை வேற கேட்டு..இன்னும் 10 பக்கம் கூட்ட போகிறீர்கள் போல.,

கலகம் தாராளமாக செய்யுங்கள்..நான் அஜீவன் அண்ணா குடுப்பதை விட டபுள் தாறேன்..ஆனால் என்னை மட்டும் விட்டு விடுங்கள்... :? 8) :idea: :arrow:

Link to comment
Share on other sites

ப்ரியசகி

அடடா அடடா அப்ப அஜிவன் ஒரு அல்வா கொடுத்தால் நீங்கள் இரண்டு அல்வா கொடுப்பீர்கள் என்கின்றீர்கள். :roll: :roll:

Link to comment
Share on other sites

:shock: ஆ நாரதர்..ஆயிரத்துக்காக ஆசைப்பட்டு ... என்னை வம்பில மாட்டு விடுறீங்களே? சினிமா பற்றி கதைத்தாலே.......... :? :evil: :!:

இதற்குள் இதை வேற கேட்டு..இன்னும் 10 பக்கம் கூட்ட போகிறீர்கள் போல.,

கலகம் தாராளமாக செய்யுங்கள்..நான் அஜீவன் அண்ணா குடுப்பதை விட டபுள் தாறேன்..ஆனால் என்னை மட்டும் விட்டு விடுங்கள்... :? 8) :idea: :arrow:

என்னப்பா சகி இப்படி வாற சான்சை விடலாமா?

தமிழ் நாட்டுச் சினிமாவைத்தான் வேண்டாம் எண்டு சொல்லுறாங்கள், நாங்கள் எங்கள் சினிமாவை வளர்க்க வேண்டாமா? இது ஒரு கலைச் சேவை தானே?அப்படி நடிகை என்றால் என்ன தரக் குறைவா?அப்ப ஏன் சோதிகாவிண்ட படத்தைப் போட்டு உங்களைத் தாழ்த்திக் கொள்கிறீர்கள்.

இப்படி தரக் குறைவானவர்களையா நாங்கள் தலையில் வைக்கிறோம்?

அப்ப என்ன நடிகர்கள் மேலானவர்களா?

எனக்கு உந்த ஆயிரம் பிராங்க்கு வேண்டாம் (ஆயிரம் பவுண்ஸ் எண்டாப் பறுவாயில்லை) எதோ வருங்க்காலத்தில ஒரு பிரபலமான நடிகைக்கு நான் சீபார்சு செய்தேன் என்ற பேராவது இருக்கும் அல்லவா? :wink:

Link to comment
Share on other sites

சீ சீ..நான் நடிகையரையோ நடிகர்களையோ தர குறைவாக கதைப்பதில்லை நாரதரே. அதற்காகவும் நான் அப்படி சொல்லல. நீங்கள் சும்மா கலகம் பண்ண் எண்ணி இருக்கின்றீர்கள்..அதற்கு என்னை.. இழுக்கிறீர்கள்.. மாட்டிக்காமல் இருக்கத்தான் சொன்னேன். :P :idea: :arrow:

Link to comment
Share on other sites

யார் அந்த ஆர்யா நான் ஒரு படமும் பார்த்ததில்லையே"?

Link to comment
Share on other sites

சீ சீ..நான் நடிகையரையோ நடிகர்களையோ தர குறைவாக கதைப்பதில்லை நாரதரே. அதற்காகவும் நான் அப்படி சொல்லல. நீங்கள் சும்மா கலகம் பண்ண் எண்ணி இருக்கின்றீர்கள்..அதற்கு என்னை.. இழுக்கிறீர்கள்.. மாட்டிக்காமல் இருக்கத்தான் சொன்னேன். :P :idea: :arrow:

ம் களத்திலயே நடிகை ஆகக் கூடிய தகமைகள் உங்களுக்குத் தான் இருக்கு எண்டு நினச்சன்...ம் எதுக்கும் வாற சான்சை விட்டுப் போட்டு பிறகு யோசிக்க வேண்டாம்.யாருக்குத் தெரியும் ஆர்யாவோடயே நடிக்கிற சான்சும் வரலாம்? எதுக்கும் நல்லா யோசியுங்க :wink: :lol:

Link to comment
Share on other sites

யார் அந்த ஆர்யா நான் ஒரு படமும் பார்த்ததில்லையே"?

kalabakathalan00.jpgpatiyal00.pngari_02.jpg

preminchi08.jpgoru_20.jpg

ஆர்யாவின்

நிஜப்பெயர் - ஜாம்ஷெட்

சொந்த ஊர் - திருச்சூர்

http://www.virakesari.lk/cinema/vimarsanam...2view.asp?key=8

Arya is very happy about the success of his two films Ullam Ketkume and Arindhum Ariyaamalum. Arya, a software professional turned actor comments, "I resigned from my job because I know that I can always go back and proceed with my master's degree as my earlier plan. Arya has been a model from his school days. In school and college, modeling was more than enough for my pocket money. I never thought about cinema then, states Arya. It was later that he approached filmmakers. It was a very long wait for Arya to see himself on screen. My parents were very supportive. The day they saw me on screen we had a celebration, chuckles Arya. Arya has committed himself for four more projects. Arya's immediate release will be Kallooriyin Kadhai with Sonai Agarwal. Will Kallooriyin Kadhai be a hat trick for Arya? All the best, Arya!

Source: Galatta

கிசு கிசு :lol: :P :lol: :-

கலாபக்காதலன் மூன்று சக்கர வாகனப்படத்தில் நடித்து வருகிறார். இவரைக்காண அடிக்கடி ஷூட்டிங்ஸ்பாட் வந்துவிடுகிறார் தவமிருந்து நடிகை.

இந்த புது உறவால் அப்செட்டில் இருக்கிறார் அறிந்தும் அறியாமலும் ஷா நடிகை :wink:

Link to comment
Share on other sites

அஜுவன் நீங்ககளள் சொன்ன விபரப்படி எங்கடையாக்களுக்கு விளம்பர படம்எடக்கவேணுமெண்டா என்னட்டை அனுப்பும் ஒரு மேடை போட்டு முன்னாலை கமறாவை நட்டு அது அசையயாமல் இரண்டு கல்லை வைச்சு மேலதிகமா மண் மூட்டை அடுக்கி மேடையிலை விளம்பர காரரின்ரை சொந்தக்ககாரர் அவற்றை மனிசியின்ரை செந்தம் பக்கத்து வீட்டு காரர் அவைக்கு வேண்டியவை எல்லாரையும் நிக்கவைச்சு குழந்தையிலை இருந்து கிழடுகள் வரை ஆளுக்கு 5 நிமிட வசனம் பேச சொல்லி ஒரு 3 மணி நேரம் ஓடுறமாதிரி ஒரு விளம்பரத்தை எடுக்கிறன்.அவை விரும்பினதை பேசலாம். அதுக்கு ஒரு இடை வேளையும் விடுவம். சாதாரணமா இடை வேளைக்கு தானே விளம்பரம் போடுறவை. ஆனால் நான் இந்த விளம்பரத்து இடை வேளைக்கு இரண்டரை மணித்தியயால ஓடுற ஒரு புது படமா போடுவம் இடை வேளைக்கை சமைக்கிறவை சமைச்சு சப்பிட்டு ஆறுதலா விளம்பரம் பாாக்க வரலாம் எப்பிடி யோசசனை ஏதும் விளம்பர படம்எடுக்கிற யொசனை இருந்தால் என்னை நாடவும :P :P :P

Link to comment
Share on other sites

இது படமெல்ல சாத்திரி???

இது வருகுதெண்டு விளம்பரம் செய்றதுக்கு

இன்னொரு விளம்பரப்படம் எப்பிடி எடுக்கிறது?

எனக்கு ஒண்டுமா புரியல்ல சாத்திரி?????????

Link to comment
Share on other sites

தலா

மணிவண்ணன் கங்கைஅமரன் போன்றோரும் கட்சி தொடங்கிட்டாங்களா?? ஏனுங்க இங்கே ஒரு இந்தியரை அழைத்துக் கடை திறந்தது பற்றிய வாதம் தானே நடக்கின்றது. உங்களுக்கு நீங்கள் செய்வதெல்லாம் நியாயம் ஆக்க எது வேண்டுமானாலும் எழுதுவீர்கள்.

அதற்காக என்ன நொண்டி நியாயங்களும் சொல்வீர்கள். கடை உரிமையாளர் ஓர் இந்தியர். அவர் செயற்பாட்டை நாம் எப்படி விமர்சிக்க முடியும். உமக்கு எந்த விடயத்திலும் தேசியத்தை கலந்து அதை கேவலப்படுத்துவதே குறி.

சமயத்தில் தண்ணி அடிச்சிட்டுத்தான் கருத்து எழுதுறனீரோ...??? முதலில் நீர் எழுதியதையே ஒருதரம் படித்துப்பாரும்... தேசிய தொலைக்காட்ச்சியை இங்க இளுத்து புளுத்தது நீர் ஆக்கும்...

மணிவண்ணனும், கங்கையமரனும் கலைதாண்டினால் அரசியல் மட்டும்தான் செய்யவேண்டும் எண்று சட்டமா என்ன..?? நல்ல உணர்வாளர்களாய் சமுக பணியாளர்களாய் உமக்கு தெரியாதே....

அறிந்தும் அறியாமல் ஆரியா தீபிடிக்க தீபிடிக்க முத்தம் கொடடா எண்று எங்கள் தொன்மையான நடனத்தை.... ஒத்தக்காலை குத்த வைச்சி மத்தக்காலா இழுத்து இழுத்து போட்டாரே ஒரு ஆட்டம்... அதுக்காகவே, அந்த கலையை வளர்க்கும் திறமைக்காகவே கையில கழுத்தில இருக்கிறதை போடலாம்தான்...! :wink: :P

Link to comment
Share on other sites

பாருங்க கனடாவில புலிகளை தடை செய்திட்டாங்க, இவ்வளவு நாளும் தூங்கீட்டு இருந்த நம்ம இனம் இப்ப என்ன செய்தெண்டு, இப்பதான் முழிச்சு எழுந்தமாதிரி கூட்டம், ஒற்றுமை வாரம் எண்டு திண்டாடினம், 3 லட்சம் பேர் இருக்கிற கனடாவில சில ஆயிரம் சிங்களவன் வந்து பொய் பிரச்சாரம் செய்து புலிகளை தடை செய்யப்பண்ணிட்டாங்க, எங்க மக்கள் என்ன செய்திச்சினம்? அண்மை நாட்களாக அங்க இருக்கிற தமிழர் அலுவலங்கள், ரீயுசனுகள் எண்டு பாரபட்சம் இல்லாமல் கனடியன் பொலிஸ் பொலிஸ் நாய்கள் கூட தேடுதல் நடாத்தினமாம், உப்படியான நிலை வந்துமுடியத்தான் நம்ம மக்கள் விழிப்பு அடைச்சிருக்கினம், (கண் கெட்ட பின் சூரிய நமஸ்க்காரம்)

முளையிலே கில்லி எறியனும் அதுதான் தற்போதைய 30 ஆண்டுகால போர் எமக்கு உணர்த்தி இருக்கு,

கனடாவில் புலிகளை தடை இப்போது சட்டபூர்வமாகக் கொண்டு வரப்பட்டாலும் ஓர் மானசீகத்தடை அதாவது சட்டத்தில் எழுதப்படாதவாறு ஓர் தடை கனடாவில் இருந்து வந்துள்ளது என்பது கனடியச் சமூகத்தில் இருந்து பார்க்கும் யாரும் அறியக்கூடியது. மற்றும் இன்று கனடாவில் அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கும் கட்சி ஆட்சிக்கு வரும் முன்னரே கனடாவில் புலிகளைத் தடைசெய்வோம் எனக் கூறிவந்துள்ளது. மற்றும் இது ஓர் பழமைவாதக்கட்சி. அவர்களின் கட்சிக்கொள்கைகளும் அப்படிப்பட்டவையே. இதற்கு முன் இருந்த அரசாங்கத்தின் பிரதமர் தமிழ் அமைப்புக்கள் ஒழுங்கு செய்திருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்தார் என்பதற்காக அவரை ஓர் பயங்கரவாதிகளிற்கு உதவி செய்யும் ஒரவராகக் காட்டமுனைந்த கட்சியே இன்று அரசில் இருக்கிறது.

டண் நீங்கள் முற்றிலும் வேறுபட்ட ஓர் தளத்தில் இருந்து கொண்டு கனடியத் தளத்தினைப் பார்க்க முற்படுகிறீர்கள். இன்றைய தடை கனடியப் புலனாய்வுத்துறையினரின் சிபாரிசுடனே மேற்கொள்ளப்பட்டுள்ளது. CSIS எனப்படும் கனடிய புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறான ஒரு தடையினைப் பரிந்துரை செய்திருந்தது. அப்போது அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராகவும் இன்று எதிர்க்கட்சியின் இடைக்காலத் தலைவராகவும் இருக்கும் திரு. பில் கிரகாம் என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் எதிர்ப்பின் பயனாக அன்று தடைவிதிக்கப்படவில்லை. கனடாவின் பாதுகாப்பினைப் பொறுத்தவரை அமெரிக்காவின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை கொள்கை அளவில் ஆதரிப்பவர்கள். குறிப்பாக இப்பழமைவாதக் கட்சியினர் அதிக அமெரிக்க சார்பானவர்கள் எனும் கருத்து அனேக கனேடிய மக்களிடமும் காணப்படுகிறது.

இதில் நீங்கள் கனேடியச் சமூகத்தின் மீது கூறிய குற்றச்சாட்டுக்களிற்கான பதில்கள் வேறு வேறு தலைப்புக்களன் மீது விரிவாக வழங்கப்பட்டிருக்கின்றன. ஆயிரம் சிங்களவன் வந்த பிரச்சாரம் செய்வதும் 3 இலட்சம் தமிழர்கள் பிரச்சாரம் செய்வதும் பெரிய விடயமல்ல. சிங்கள அரசாங்கம் அரசுகளிற்கிடையான நட்பு ரீதியான உறவைப் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறது. அரசாங்கம் பிரச்சாரத்திற்கு என்றே பல இலட்சக்கணக்கான பணத்தினை வாரி இறைக்கிறது. மற்றும் அரசுகளிற்கு எதிரான போராட்டங்களை ஆதரிப்பதில்லை என்பது கனேடிய அரசின் பொதுவான கொள்கை. இன்று இத்தடை வந்தவுடன் கனடியச் சமுகத்தின் மீது குற்றம்சாட்டும் நீங்கள் இவ்வளவு காலமும் ஏன் வரவில்லை என்று சிந்தித்தீர்களா? அதற்காக கனடியத் தமிழ் சமூகம் முற்றுமுழுதாகச் சரியாகச் செயற்பட்டது என்று கூறவரவில்லை. நாமும் சிலவற்றை சரியாகச் செய்யவில்லை என்பது உண்மைதான்.

தடைக்கெதிரா என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு ஏற்கனவே பதிலளிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். தடைபற்றி வெளியிட்ட அறிவிப்பு தெளிவில்லாது இருந்த காரணத்தினால் தமிழ் சமூகம் சட்டஉதவி நாடி மெளனித்திருந்தது.

தலைப்பின் கீழ் தேவை இல்லாத விடயமாகப் பட்டாலும் தேவைகருதி பதிலிடப்படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அருவி

குழம்பி விட்டீர்களா? அல்லது குழப்புகின்றீரா?

முதலில் ஆட்சிக்கு வந்த கட்சி தான் இதற்கு காரணம் என்ற சாயலில் எழுதுகின்றீர்கள். ஆனர்ல அடுத்த பந்தியில் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடு காரணம் என்ற வகையில் சொல்கின்றீர்கள். ஒரு நாட்டின் புலனாய்வு அமைப்பு ஒரு காலமும் ஆட்சியின் சாயலில் செயற்படுவதில்லை என்பது தெரிந்த விடயம்.

அப்படியிருக்க நீங்கள் சொல்வது பொருத்தமானதாகத் தெரியவில்லை

Link to comment
Share on other sites

தூயவன் அப்படி தொனிப்பொருளில் கருத்து வந்திருந்தால் அதனைத் தயவுசெய்து சுட்டிக்காட்டுகிறீர்களா எவ்விடத்தில் அவ்வாறான மயக்கம் வருகின்றது என்பதனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அருவி

குழம்பி விட்டீர்களா? அல்லது குழப்புகின்றீரா?

முதலில் ஆட்சிக்கு வந்த கட்சி தான் இதற்கு காரணம் என்ற சாயலில் எழுதுகின்றீர்கள். ஆனர்ல அடுத்த பந்தியில் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடு காரணம் என்ற வகையில் சொல்கின்றீர்கள். ஒரு நாட்டின் புலனாய்வு அமைப்பு ஒரு காலமும் ஆட்சியின் சாயலில் செயற்படுவதில்லை என்பது தெரிந்த விடயம்.

அப்படியிருக்க நீங்கள் சொல்வது பொருத்தமானதாகத் தெரியவில்லை

ஒரு நாட்டில் பாதுகாப்பு தரப்பு ஒரு சட்டத்தை பிரேரிக்க முடியுமே தவிர, அவர்களால் அந்த சட்டத்தை அமுல்படுத்த அவர்களுக்கு அதிகாரம் இல்லை. ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமே, சட்டத்தை உருவாக்குகின்றது. அருவி சொல்லவந்ததும் அதுவே.,முன்னைய ஆட்சி காலத்தில் இந்த தடைசட்டம் பிரேரிக்கப்பட்ட போதும், அது முன்னைய லிபரல் அரசாங்கத்தால், சட்டமாக்கப்படவில்லை. ஆனால் ஸ்ரீபன்கார்பரின் கன்சவேட்டிவ் கட்சியில் அமெரிக்க ஆதரவானவர்கள் என்பதை விட அவர்கள் அமெரிக்காவை அப்படியே பிரதி செய்து கனடாவில் ஆட்சி நடாத்த முனைபவர்கள். அத்தோடு, ஸ்ரீபன் கார்பாரை பொறுத்தவரை புஷ்சின் நிலைக்கு தான் வரவேண்டும் என்ற நிலை கொண்டவர் என்று மக்களால் கருத்தப்படுபவர். இந்த நிலையில் அவரது அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்தது. இத்தோடு அவர்களது அரசாங்கம் நிற்கவில்லை. குடிவரவு, கட்டுப்பாடுகளையும், விதித்துள்ளது ஏறத்தாள 35000 போத்துக்கீசரை விரைவில் நாடுகடத்த உள்ளது. அதே போல மரம் சம்பந்தமான கனடியருக்கு நன்மையில்ல ஒரு ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் நல்லுறவை வளர்க்க கையேழுத்திட்டது. அது மட்டுமன்றி, மக்களுக்கு உதவாத,ஒரு வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. எனவே கருத்துக்களை கருத்துக்களுடன் வைப்பது சிறந்தது...அதுவே ஆரொக்கியமான கருத்துக்களாகவும் அமையும் என நம்புகின்றேன். வெறும் உணர்வினை வைத்து ஒன்று செய்ய முடியாது தூயவன், கொஞ்சம் சிந்திக்கவும் வேண்டும், அதை விடுத்து நாம் உணர்வுக்கு அடிமையானவர்களாக இருப்போமானால், எம்மால் நகர முடியாமல் எம்மை சுற்றி சட்டங்கள் இறுக்கப்படலாம். இது இன்னும் இறுக்க மான சூழலை உருவாக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிதர்சன்!

நான் சொல்வது என்னவென்றால் தடை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகின்றது. இவ்வளவு நாளாகியும் 1 எதிர்பையும் நீங்கள் காட்டவில்லை என்பதே!!

இவ்விடயத்தில் உங்களை விட வேறு நாட்டில் வாழ்ந்தாலும் சட்டங்களை எல்லாம் கவலைப்படாது, ஆர்பாட்டம் செய்த பழ நெடுமாறன் ஜயாவை மதிக்கின்றேன். அவரை எந்த இறுக்கங்களும் ஒன்றும் செய்யவில்லை.

ஏனென்றால் அவர் தனிப்பட்ட நலனுக்கு பிறகே, பொதுநலம் என்று நினைக்காதால் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் ஒரு நடிகர் அதுவும் தமிழ் பேசுபவர் அவரை பார்க்க சென்றதை ஒரு பெறும் தவறாக எழுதுகிறீர்கள்.

சிட்னியில் சில பேர் 11 சிங்களவர்களின் வருகைக்காக காத்திருந்து கொடியை தூக்கி கொண்டு போவார்களே அதை பற்றி கேட்டவுடன் விளையாட்டு வேறு அரசியல் வேறு என்பார்கள்.இவர்களை பற்றி என்ன நினைகீறிர்கள்???

முதலாவது சம்பவத்தால் விடுதலை போராட்டத்தத்திற்கு எதுவித பாதிப்பும் இல்லை.

இரண்டாவது சம்பவத்தால் பல பாதிப்புகள் உண்டு,உதாரணமாக அந்நியர்கள் சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் ஓரு குழுவினர் மட்டும் போராடுகிறார்கள் என்ற தப்பான அபிப்பிராயத்தை பெறுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

நன்றி நிதர்சன்!

நான் சொல்வது என்னவென்றால் தடை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகின்றது. இவ்வளவு நாளாகியும் 1 எதிர்பையும் நீங்கள் காட்டவில்லை என்பதே!!

இவ்விடயத்தில் உங்களை விட வேறு நாட்டில் வாழ்ந்தாலும் சட்டங்களை எல்லாம் கவலைப்படாது, ஆர்பாட்டம் செய்த பழ நெடுமாறன் ஐயாவை மதிக்கின்றேன். அவரை எந்த இறுக்கங்களும் ஒன்றும் செய்யவில்லை.

ஏனென்றால் அவர் தனிப்பட்ட நலனுக்கு பிறகே, பொதுநலம் என்று நினைக்காதால் தான்.

பழ. நெடுமாறன் ஐயா அவர்களை நீங்கள் மட்டுமல்ல அனைவரும் மதிக்கிறார்கள்.

தூயவன் கேள்வி கேட்பது என்பது இலகு. அதனைச் செய்வது தான் மிகவும் கடினமானது. நானும் உங்களிடம் கேள்விகளைத் தொடுக்கலாம். அண்மையில் இலங்கை அரசால் நடத்தப்பட்ட படுகொலைகளிற்கு நீங்கள் தற்போது இருக்கும் இடத்தில் இருந்து என் செய்தீர்கள் என்று. ஆயினும் அவ்வாறு கேள்வி தொடுப்பது ஓர் ஆரோக்கியமான கேள்வியாகிவிடாது. அதைப்போலவே கனடாவிலும். நீங்கள் கூறுவதைப் பார்த்தால் பழ. நெடுமாறன் ஐயா போல் சிறைசென்று வரவேண்டும் போல் உள்ளது. தடையினை எதிர்த்து கனடிய மண்ணில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம்.

*திருத்தம்: இடத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

நிச்சயம் கனடிய குடியுரிமை பெற்ற தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து எங்கள்

எதிர்ப்பைக்காட்டி சிறைக்கு போவது

ஒன்றும் தப்பில்லை

Link to comment
Share on other sites

நிச்சயம் கனடிய குடியுரிமை பெற்ற தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து எங்கள்

எதிர்ப்பைக்காட்டி சிறைக்கு போவது

ஒன்றும் தப்பில்லை

ஆர்ப்பார்ட்டங்கள் செய்வது என்பது பற்றி உணர்ச்சி வசப்பட்டு கூறுகிறீர்கள். ஆர்ப்பார்ட்டங்கள் மூலம் ஏதாவது ஒன்றைச் சாதிக்க முற்படுவதானால் அதனைத் தொடர்ந்து செய்யக் கூடிய நிலையில் இருக்கவேண்டும். அவ்வாறில்லாது ஒரு நாள் ஆர்ப்பார்ட்டம் செய்து சிறைகள் நிரப்புவது ஓர் அறிவார்ந்த செயற்பாடாக இருக்க முடியாது. அதற்கான தளம் இங்கு காணப்படவில்லை. அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கேற்ப செயற்படுவதே சிறந்த ஓர் முடிவாக இருக்கும். அனைவருக்கும் உணர்வுகள் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.