Jump to content

செந்தூரனின் உடல் நிலை கவலைக்கிடம்.


Recommended Posts

553937_138610412950216_204327454_n.jpg294597_138605792950678_542265068_n.jpg523153_138638492947408_1058636681_n.jpg

செந்தூரனை மருத்துவமனைக்கு எடுத்த செல்ல நோயாளி அவசர ஊர்தி வந்துள்ளது. செந்தூரனின் நிலையை பார்த்தும் அலட்சியம் காட்டும் காவல் துறையை பாருங்கள். சக முகாம் வாசிகள் அவரை தூக்கிக் கொண்டு செல்வதையும் பாருங்கள்.

from facebook

தற்போது செந்தூரனின் நிலை மிகவும் மோசம் அடைத்துள்ளது. கடுமையான வயிற்று வழியால் அவர் பாதிக்கப்பட்டு ஆசன வாயிலில் ரத்தமும் வெளியேறி வருகிறது. இன்று மாலை திடீரென்று செந்தூரன் மயக்கம் அடைந்தார் . அவரை உடனே முகாமில் உள்ள காவல் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் கொண்டு சேர்த்தனர் சக முகாம் வாசிகள். ஆனால் காவல் துறை அதிகாரிகள் வழமை போல அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. இனிமேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் விட்டால் அவர் உயிர் பிரிந்து விடும் அபாயம் உள்ளது

Link to comment
Share on other sites

[size=5]செந்தூரன் சுகம் பெறவேண்டும் ![/size]

Link to comment
Share on other sites

400800_4522224502552_734801193_n.jpg

செந்தூரன் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவருக்கு ஆதரவாக வைகோ உண்ணா நிலை!

இன்றோடு பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள செந்தூரன் உண்ணா நிலை போராட்டம் தொடங்கி 26 நாட்கள் கழிந்து விட்டது . இதில் 12 நாட்கள் நீர் கூட அருந்தாமல் உண்ணா நிலையில் இருக்கிறார். செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தொடர் பட்டினிப் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் பூந்தமல்லி சிறப்பு

முகமாய் இழுத்து மூடும்படி மதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் முகாம் முற்றுகை போராட்டம் நடத்தி உள்ளன . ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 26 ஆம் நாளான இன்று வைகோ அவர்களே உண்ணா நிலையில் இருந்தார் . அவருக்கு ஆதரவாக தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி தலைவர் பெ மணியரசன், இயக்குனர் புகழேந்தி , இயக்குனர் வேலு பிரபாகரன், பேராசிரியர் தீரன் மற்றும் பல தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டன.

தற்போது செந்தூரனின் நிலை மிகவும் மோசம் அடைத்துள்ளது. கடுமையான வயிற்று வழியால் அவர் பாதிக்கப்பட்டு ஆசன வாயிலில் ரத்தமும் வெளியேறி வருகிறது. இன்று மாலை திடீரென்று செந்தூரன் மயக்கம் அடைந்தார் . அவரை உடனே முகாமில் உள்ள காவல் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் கொண்டு சேர்த்தனர் சக முகாம் வாசிகள். ஆனால் காவல் துறை அதிகாரிகள் வழமை போல அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. இனிமேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் விட்டால் அவர் உயிர் பிரிந்து விடும் அபாயம் உள்ளது என முகாமில் மற்ற ஈழத் தமிழர்கள் சொல்கின்றனர். இனியாவது அரசு நடவடிக்கை எடுக்குமா?

... தமிழக நண்பர் ஒருவரின் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தூரன் நலம் பெறவும் அனைத்து கைதிகள் விடுதலை பெறவும் பிரார்த்திக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாப்பா இது? வந்தாரை வாழவைக்கும் தேசம் தமிழகம் எண்டுறாங்கள்....ஆனால் இந்த செய்தியைப்பாக்க அப்பிடி தெரியேல்லையே?.......சிலவேளை நடிகையள் விசயத்திலை அப்பிடியிருக்குமோ? :rolleyes:

Link to comment
Share on other sites

செந்தூரனின் உண்ணாநோன்பு முடிவுக்கு வந்து அவர் விரைந்து நலம்பெற வேண்டும்.. தடுப்புச் சுவர்களில் இருந்து அவர்கள் வெளியேவர அனுமதிக்க வேண்டும்..!

Link to comment
Share on other sites

செந்தூரன் நலம் பெறவும் அனைத்து கைதிகள் விடுதலை பெறவும் பிரார்த்திக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரம் விளைந்த தமிழகமே!

தாரம் பல கண்ட உன் தலைவன்,

சோரம் போன கதையறிவோம்!

பார்த்திடுவாய் நீ என்று,

பசியோடு வந்தவன்,

பாரமாகிப் போனானா, உனக்கு?

ஈரத்தை எப்போது நீயிழந்தாய்?

செந்தூரன் நலம்பெறப் பிரார்த்திக்கிறேன்!

Link to comment
Share on other sites

563024_480045455347296_517320904_n.jpg

Link to comment
Share on other sites

சிங்கள உதைபந்தாட்ட விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்பி ஈழத் தமிழர்கள் மீது தன்னுடைய அன்பை நிருபித்த ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள உதைபந்தாட்ட விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்பி ஈழத் தமிழர்கள் மீது தன்னுடைய அன்பை நிருபித்த ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி.

செந்துரனை காப்பாற்ற முடியவில்லை.............

ஆக அந்த உதைபந்தாட்ட வீரகளையும் திருப்பி அனுப்பியிருக்க தேவை இல்லை.

இதுவா உங்கள் நிலைப்பாடு?

அல்லது தமிழ் நாட்டு பித்தலாட்ட அரசியல் மற்றவர்களுக்கு விளங்காது உங்களுக்கு மட்டுமே விளங்குவதாக ஒரு பில்டப்பா?

தமிழர்களை அழிப்பது என்பதில்!

சிங்களவனும்

முஸ்லிமும்

இந்திய வெறியனும்

எவளவு உறுதியுடனும் தொலைநோக்குடனும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுதான் ஆதாரம்.

சமரசம்

நடுநிலைமை

விட்ட பிழைகளை திருத்துதல். என்று நீங்கள்தான் குழம்பிய நிலையில் இருக்கிறீர்கள். இவற்றை நீங்கள்தான் புதிதாக கண்டுபிடித்ததாகவும் ஒரு சுயவிளம்பரம்தான் உங்களுடைய கருத்துக்களில் என்னால் காண முடிகிறது. முஸ்லிம் விடயம் பற்றி புலிகள் 1986 களில் எழுதியதைத்தான் நீங்கள் இப்போது எழுதுகிறீர்கள். அவை உப்புக்கும் உதாவது என்று புலிகளே முடிவுகொண்டு ஆண்டுகள் பல ஆகி அழிவுகளுடன் மட்டுமே தமிழர்கள் எஞ்சிய நிலையில். மீண்டும் அந்த பித்தலாட்டம் ஆடி எங்களை நாங்களே காவு கொடுக்க முடியுமே தவிர.

வேறு ஏதாவது செய்யலாம் என்று

ஆருடம் கூறாமல் ஏதும் ஆதாரம் இருந்தால் எழுதுங்கள்.

அடி வாங்குவதுதான் முடிவு என்று ஆனால். யார் எங்களை அடித்தார்கள் என்பதை என்றாலும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லவிடாமல். ஒரு குழப்ப நிலை பித்தலாட்ட கருத்துக்களைத்தான் உங்களால் தற்போதைய எழுத்துக்களில் காண முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  • செந்தூரன் நலம்பெற மனசார வேண்டுவோம்.

பாவம் தமிழன்

இதற்குள் கூட ஒற்றுமையாய் கருத்து எழுத முடியவில்லை.

நக்கல் நளினம் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைய்யாக சொல்வதற்காக ஈழ தோழர்கள் தவறாக நினைக்ககூடாது.. இந்த சிக்கல் தீர வேண்டுமென்றால் யாரவது மேல போனால்தான் இங்கிட்டு தீர்வு கிடைக்கும். ஏது அது வரைக்கும் சாத்தியம் கிடையாது.. அதும் கிடைக்குதா இல்லையா என்று நிச்சயம் கிடையாது..

டிஸ்கி:

இங்கிட்டே யாரையாவது தெரு முக்கில் சந்தேக கேசில் பிடித்தால். அந்த ஏரியா கவுன்சிலர் பேரை சொன்னால் தான் விடுறான். எதுவுமே இல்லாம இருந்தா என்னப்பா நடக்கும்.. எல்லாமே அரசியல் .. ஒண்ணுக்கு போனால் கூட அரசியல்.. நாளை ஒரு பேச்சு செந்தூரன் .... ஆகிடுச்சு என வச்சுக்குவம்

முதலாவது அறிக்கை இப்படி வரும்...

உடன் பிறப்பே..

செந்தூரனுக்காக செந்தூரில் இருந்து..

குளுகோஸ் பாட்டில் வாங்கி வந்தது நீயல்லவோ..

கருவாயால் கயவர்தம் கய வார்த்தைகளை நீ நம்பிடலாமொ..!

அதையே நீ உண்மை என்று நீ நம்பிடலாமா..?

1570 இல் அன்றைய திமுக கழக தீர்மானத்தை செவிமெடுத்து பார்..

இரண்டாவது அறிக்கை:

கலீஞ்சர் அறிக்கை மிகவும் தவறானது .. ஒரு ஈழத்து உயிர் தாய் தமிழ் மண்ணில் போவதை நாங்கள் விரும்பவில்லை . தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆசியுடன் மீண்டும் மத்தியில் நாம் கைகாட்டும் ஆட்சி அமையும் போது ஈழம் மலர அந்த உயிர் இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் நமக்கு உள்ளது என கழக கண்மணிகள் நன்கு அறிவார்கள்..

அலோ அடுத்த அறிக்கை எல்லாம் குத்துமதிப்பாக போடலாம்.. நேரத்தை ஒதுக்கி ரைப் பண்ணுவது வேஸ்டு என நான் நினைக்கிறன்....

<_< <_<

Link to comment
Share on other sites

283617_128153527329238_1419357596_n.jpg

அஹிம்சையின் மரணம்.

நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்ததால்,

ஈழ அகதியான "செந்தூரன்"

குற்றவாளி என்கிறது தமிழக அரசு!.

உண்ணாவிரதம்

தற்கொலைக்குற்றம் என்கிறது தமிழக பொலிஸ்!!?.

மகாத்மா காந்தி'யும் தன்னை வருத்தி

உண்ணாவிரதம் இருந்தார்.

உள்ளடக்கம் இல்லாமல்,

உரிமைக்காக

உணர்வோடு உணவொறுத்தார்.

அதிகாரம் பணிந்தது,

அகிம்சை தலை குனிந்தது.

சத்தியத்தின் பிதாவாக

உலகம் காந்தியை ஏற்றுக்கொண்டது.

அது ஒரு இனிய கனாக்காலம்.

கண்டத்தையும் தாண்டி

காந்தியின் அகிம்சையில்

உலகம் மண்டியிட்டது.

அகிம்சையின் வீரியத்தை அறிந்த

வெள்ளைக்காரன்,

விக்கித்து வெளியேறினான்.

இந்தியா சுதந்திரம் அடைய

உண்ணாவிரதம் வழி திறந்தது.

அது ஒரு பொற்காலம்.

மார்ச் 09, 2009 ல் ஜெயலலிதா,

"ஈழத்தமிழர்களுக்காக" உண்ண நோன்பிருந்தார்.

கடல் கடந்தும்,

காற்றின் வெளியூடேயும்

படை அனுப்பி காத்தருள்வேன்

என்றும் கர்ஜித்தார்.

தமிழகம் தலை வணங்கியது.

அகிம்சை திகைத்தபோது,

மக்கள் கோட்டை வாசலை திறந்து விட்டனர்.,

அம்மா முதலமைச்சரானார்.

இன்று

அதே நம்பிக்கையுடன்

ஈழ அகதி செந்தூரன் அம்மாவை நோக்கி

உண்ணா விரதம் இருந்தபோது

அது

தற்கொலை குற்றமாகியிருக்கிறது.!

அதுவும் ஒரு விசித்திர வினாக்காலம்

கால கிறுக்கலில் கருணாநிதியின் கதவு

காற்றுவாக்கில் மூடிவிட,

இன்று தொடர் கதையாக

வறுமையற்ற வாக்குறுதியுடன்,

கருணாவின் நித்த புலம்பல்

நீலிக்கண்ணீருடன் நித்தமொரு தத்துவம்

இதுவும் விதைத்த பயன்

அறுவடையின் நிகழ்காலம்.

தமிழீன தலைவன் கருணாநிதி

"ஈழத்தமிழர் உயிர் காக்க"

ஏப்ரல் 27 2009 ல்

உயிர் துறந்தேன் பார் என்று

அதிகாலையில் உறக்கம் கலைந்து,

அகிம்சையின் கோவணத்தை உருவி

தோளில் போட்டுக்கொண்டு,

அண்ணாவின் சமாதி அருகில்

அருங்காட்சியகமாக

அம்மணிகள் புடைசூழ

1/2 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

அது ஒரு புதுக்கோலம்,..

அன்று,

ஈழத்து படுகொலை செய்தியை விட

தாத்தாவின் தாண்டவம் பெரும் புதினமானது.

மீடியாக்கள் கண்சிமிட்டி படபடத்தன

நெத்தியடியாக அழகிரிக்கு மந்திரி பதவியும்,

கனிமொழிக்கு எம்பி பதவியும் தந்து.

மத்திய அரசு மண்டியிட்டதது.

தமிழகம் அடங்கி அமைதியான போது

அகிம்சை

கோவணத்தை தேடி அலைந்தது.

அதுவும் ஒரு வினோத காலம்.

அகிம்சையை அரவாணியாக்கி

'உண்ணா விரதம் இருந்து வென்றவர்'

வாயால் வில் பூட்டி வானத்துக்கு எய்தவர்

நா விலங்கு கருணாநிதி,

நம்பி ஏமாந்த ஈழத்து ஏமாளிகள்

ரத்த சகதியில் சிதறி செத்து தீயில் மாண்டனர்.

அகிம்சை அரசியலுடன் சங்கமமாகிவிட

சுடுகாட்டு கரி மட்டும் மிஞ்சியது.

அது மயான காவியத்தின் வினைக்காலம்.

"ஈழமக்களுக்காக"

தெரு முனையில் சாவேனே தவிர

வெட்டியாக வீடு திரும்பேன்.

சத்தியம் இதுவென்று

விடுதலை சிறுத்தையின் வீரத்திருமகன்.

திருமாவளவன்,..

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

முற்றியது மூன்று நாள்

பற்றியது ஒரு கரம்

தி.முக தலைவர் பற்றினார் தம்பியை

மெல்ல கலந்து காங்கிரஸுடன்

திருமாவை மத்தியில் எம்பி ஆக்கினார்.

வென்றனர் விரும்பியதை

அதுவும் ஒரு ரம்யமான

வஞ்சகத்தின் வர்ண ஜாலம்!

ஏன் எதற்கு

அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனரோ

அதற்காக இவர்களும் ஏமாளிகளாக

உண்ணாவிரதம் இருந்தனர்.

நளினி, முருகன்,

சிறைக்குள் விரதம் பூண்டனர்.

பிணைப்பாக

ஜனாதிபதிக்கு கருணை மனுவும்....

அனைத்தும் கனவாகி

கால் நூற்றாண்டு காத்திருந்தனர்.

அகிம்சை எவரையும் தட்டி எழுப்பவில்லை.

தண்டனை மட்டும் இறுகியது.

இணைப்பாக

செங்கொடி என்ற மனிதாபிமானம்

ஏமாந்து தீயில் எரிந்து கருகியது.

அது ஒரு ஏமாந்த காலம்.

இருந்தபோதும்

மீண்டும் நம்பிக்கையுடன்,

செங்கல்ப்பட்டு பூந்தமல்லி தடை முகாமில்

ஈழத்தமிழர்கள் உண்ணாமல் இருந்தனர்.

மத்திய, மானில ஆட்சிகள் ஆத்திரத்துடன்.

சூத்திரத்தை மறந்து சன்னதம் கொண்டன.

செந்தூரன் உறுதியானபோது

சிறுநீரகம் செயலிழந்து வயிறு புண்ணாகி

மலவாசல் வழியாக இரத்தம் கசிந்தது,.

மரண வாயிலில்.

அகிம்சை செந்தூரனை கொன்றுவிடும்

என்று அறிந்தபோது

அதிகாரம் அரக்கனாகியது.

அது ஒரு வினைக்காலம்.

செந்தூரன்

தற்கொலைக்கு முயற்சித்தான்,

ஆணவத்தால் அடங்க மறுத்தான்,

புதிய கண்டுபிடிப்புடன் காலங்கடந்து

பொலீஸ் படை பாய்ந்து

அகிம்சை போராளியை கைது செய்திருக்கிறது.

இது ஒரு புதிர்காலம்.

கருணாநிதிக்கு,.............

ஜெயலலிதாவுக்கு,...............

திருமாவுக்கு,...................

ஈழத்தமிழன் பெயரால் அரசியல் செய்யவும்

பதவியை,....... வாழ்க்கையை........... வழங்கிய

உண்ணா விரதம்!!

ஈழத்தமிழனுக்கு தொண்டைக்குள்

கடப்பாரையாக சொருவப்பட்டது,

அகிம்சை மூச்சையர்த்து சேடமிழுத்து

தூரத்தே ஈனசுரத்தில்

அழும் குரல் மட்டும் கேட்கிறது!

இது எந்தக்காலம்?

[size=4]ஊர்க்குருவி.[/size]

http://www.savukku.n...2-05-21-27.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு.. இலஞ்ச ஒழிப்புதுறை அதிகாரியா இருந்து.. இந்தியன் தாத்தா போல(கமல காசன் படம்) நேர்மையாக இருந்து இருக்கிற வேலையும் விட்டு போட்டு இந்த மாறி களம் ஆரம்பிச்சுபோட்டு திரியறார்.. எனக்கு என்னவோ

"அறம் செய்ய விரும்பு.. ஆத்துல இறங்கி முழுங்கு" இந்த ரையலாக்கெல்லாம்

இதெல்லாம் ஏட்டில் இருக்கதான் சரி என்று படுது.. எனிவே தனியாக களம் திறந்து போராடுகிறார் வாழ்த்துக்கள்..

டிஸ்கி:

கவிதை எல்லாம் ஓக்கே.. ஆனா இது கொஞ்சம் காமெடியா தெரியுது

கண்டத்தையும் தாண்டி

காந்தியின் அகிம்சையில்

உலகம் மண்டியிட்டது.

அகிம்சையின் வீரியத்தை அறிந்த

வெள்ளைக்காரன்,

விக்கித்து வெளியேறினான்.

இந்தியா சுதந்திரம் அடைய

உண்ணாவிரதம் வழி திறந்தது.

அது ஒரு பொற்காலம்.

:lol: :lol:

Link to comment
Share on other sites

மருதங்கேணி,

நான் எழுதிய கருத்து, எப்படி இந்த இடத்திற்கு பொருத்தம் இல்லையோ, அப்படித்தான் கலைஞர் மீது இன்றைக்கு வைக்கப்படுகின்ற கருத்துக்களையும் பார்க்கிறேன்.

இருவரின் செயற்பாடுகளிலும் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஆனால் ஈழத் தமிழர்கள் பற்றிய சிந்தினையில் இருவருக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.

இன்றைக்கு தமிழ்நாட்டின் பொதுவான மக்கள் எம் மீது காட்டுகின்ற அனுதாபத்தை வைத்து இருவரும் ஆதாயம் தேட முனைகிறார்கள். இதை வைத்து நாம் ஆதாயம் தேட முனைய வேண்டும்.

Link to comment
Share on other sites

ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்து வைத்துள்ள ஜெயலலிதாவை வெளிப்படையாக கண்டித்து அவரை ஆத்திரப்படுத்துவது கெட்டிக்காரத்தனம் இல்லை. பதிலுக்கு விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டை விட்டு அனுப்பதியதற்கு பாராட்டுவதுதான் பயன் தரும்.

கலைஞரைப் போன்று நாமும் "ஜெயலலிதா விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் போட்டவர், பிரபாகரனை கைது செய்யச் சொன்னவர், மக்கள் பொரில் இறப்பது சாதரணம் என்று சொன்னவர்" என்று சொல்ல முடியாது.

அவற்றை மறந்து விட்டு, எமக்கு சாதகமானதை மட்டும் பார்க்க வேண்டும்.

இதே போன்று ஒரு அணுகுமுறையைத்தான் நாம் கலைஞர் மீது பின்பற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி,

நான் எழுதிய கருத்து, எப்படி இந்த இடத்திற்கு பொருத்தம் இல்லையோ, அப்படித்தான் கலைஞர் மீது இன்றைக்கு வைக்கப்படுகின்ற கருத்துக்களையும் பார்க்கிறேன்.

இருவரின் செயற்பாடுகளிலும் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஆனால் ஈழத் தமிழர்கள் பற்றிய சிந்தினையில் இருவருக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.

இன்றைக்கு தமிழ்நாட்டின் பொதுவான மக்கள் எம் மீது காட்டுகின்ற அனுதாபத்தை வைத்து இருவரும் ஆதாயம் தேட முனைகிறார்கள். இதை வைத்து நாம் ஆதாயம் தேட முனைய வேண்டும்.

அது எப்படி என்பதுதான் என்னுடைய ஆரம்ப கேள்வியே?

சர்வதேச அரசியல் பூகோள அரசியல் என்று சிலர் பூச்சாண்டி காட்டுவார்கள். தற்போதைய உங்களுடைய நிலைபாடும் அப்படியான ஒன்றா?

நான்வசிக்கும் அமெரிக்க தொடங்கி......

அர்மேனியா வரை பலவீனமனவனை சுரண்டி ஆதிக்க காரன் கொழுக்கிறான். அதற்கா என்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து முடிக்கிறான்.

இதற்குதான் சர்வதேச அரசியல் என்று சிலர் பூச்சாண்டி காடுகிறார்கள்.

எங்களிடம் இருந்து சுரண்ட ஏதும் இல்லை என்ற நிலைமை வந்ததும் உலகமே எங்களை தூக்கி எறிந்ததுதான் உண்மையில் நடந்தது. (அதற்குள் சில இந்திய பழிவாங்கல்களும் இருந்தது என்னமோ உண்மைதான்). இதை புலிகளே பலமுறை சொன்னார்கள்தானே? தலைவருடைய 2008 மாவீரர் உரை இப்படிதானே தொடங்குகிறது.

இனி புலிகளுக்கு அரசியல் பாடம் எடுப்பது......

விட்ட பிழைகளை திருத்துவது என்று உள்ளூர் விடயங்களை புடுங்கி கொண்டிருப்பதால். யார் எமக்கு அடிக்கிறார்கள் என்பதையே மறைக்க முற்படுகிறோம்.

எமது சொந்த காலில் நிற்க முயற்சித்தால் தவிர.

கருணாநிதியோ ஜெயலலிதாவோ செய்ய ஏதும் இல்லை.

இந்த கருணாநிதியை நாம் நைய புடைந்தால் நாளை இப்படி இன்னொரு கருணாநிதி முளைக்க தயங்குவான். என்று ஒருவன் கருதினால். அதை தவறு என்று எப்படி மறுக்க முடியும்?

இறுதிகட்ட அரசியலில் இழிவாக போனவர் கருணாநிதி....

இதே பிழையை நான் விடக்கூடாது என்ற எண்ணம் ஒருவேளை ஜெயலலிதாவிற்கு வரலாம். அதை இல்லவே இல்லை என்று நானோ நீங்களோ மறுக்க முடியாது.

கருணாநிதி மீதான காழ்புணர்வு காரகளிடமும் சில அரசியல் நகர்வுகள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

இல்லை என்று நீங்கள் நம்பும் போது. அதை ஆதாரங்களுடன் எங்களுக்கு புரியவைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்து வைத்துள்ள ஜெயலலிதாவை வெளிப்படையாக கண்டித்து அவரை ஆத்திரப்படுத்துவது கெட்டிக்காரத்தனம் இல்லை. பதிலுக்கு விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டை விட்டு அனுப்பதியதற்கு பாராட்டுவதுதான் பயன் தரும்.

கலைஞரைப் போன்று நாமும் "ஜெயலலிதா விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் போட்டவர், பிரபாகரனை கைது செய்யச் சொன்னவர், மக்கள் பொரில் இறப்பது சாதரணம் என்று சொன்னவர்" என்று சொல்ல முடியாது.

அவற்றை மறந்து விட்டு, எமக்கு சாதகமானதை மட்டும் பார்க்க வேண்டும்.

இதே போன்று ஒரு அணுகுமுறையைத்தான் நாம் கலைஞர் மீது பின்பற்ற வேண்டும்.

உங்களுடைய இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

தமிழ் நாட்டு தமிழரை ஏமாற்றி வாழ்ந்தவர் கருணாநிதி.

தனது ஆதிக்கத்தால் தமிழரை ஆண்டவர் ஜெயலலிதா.

இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. தனது ஆதிக்கம் எதுவரை இனி நீளும் என்ற கேள்வி வரும்போது சில மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாய நிலை ஜெ க்கு உண்டு.

ஆதிக்க அரசியல் செய்ததால்தான் அவருக்கு சாணக்கியம் தேவைப்படவில்லை. "போர் என்றால் மக்கள் இறப்பார்கள்" என்றுவிட்டு போனார்.

மற்றவர் நான் தமிழுக்கு தீக்குளிக்க போகிறேன் என்று பில்டப்பில் அரசியல் செய்தவர். அவரை தமிழுக்காக நீ தீக்குளிக்க வேண்டாம் வா நாங்களே உன்னை தீ மூட்டி கொளுத்துகிறோம் தமிழ் தானாக வளரும் என்று அழைக்க முற்பட்டதால். சில தேசோ காசோ என்று மாநாடு நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். இவருடைய சொந்த வாழ்விற்கே இவர் இப்போ அல்லாடும் நேரம் இவரிடம் இருந்து எதிர்பார்க்க ஏதும் இல்லை. இவருடைய உண்மை முகத்தை தோலுரித்தால். இது செல்லாது என்று அடுத்து வருபவர்கள் கொஞ்சம் மாறவாவது சாத்தியம் உண்டு.

Link to comment
Share on other sites

செந்தூரன் மட்டுமல்ல இவர் போல் தமிழ் நாட்டுமுகாம்களில் அடைத்துவைத்திருக்கபட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப் படவேண்டும் .

ஏன் எங்களுக்கு இந்த நிலை ? அதுவும் தமிழ் நாட்டில் .

தமிழகமெங்கும் இயக்க,அகதி முகாம்கள் .எமக்கு உதவி செய்ய அவர்களுக்குள் போட்டி.

விசா இல்லை ,வாகனங்களுக்கு லைசன்ஸ் இல்லை.அவர்களுக்கு எந்த இயக்கமென்று இல்லை .நேரு ஸ்டேடியத்தில் ,வள்ளுவர் கோட்டத்தில் நிதி சேகரிப்பு நிகழ்சிகள் அமைச்சர்கள் தலைமையில் .திருப்பூர் பெனியன் கொம்பனி முதலாளிகள் ,ஏற்காடு தேயிலை தோட்ட முதலாளிகள் ,சென்னை ,மதுரை வியாபாரிகள் என அள்ளி தருகின்றார்கள் .

எம்.ஜி .ஆர் சுபாஸ் சந்திரபோசுடன் இயக்க தலைவர்களை ஒப்பிட்டு பேசுகின்றார் .கருணாநிதி தலைமையில் டெசோ மகாநாடு இந்திய தலைவர்கள் முக்கியமானவர்கள் அனைவரும் மேடையில் (கொங்கிரஸ் உட்பட) ஜே.ஆரை திட்டி தீர்க்கின்றார்கள் .

மொத்த போராளிகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தொடுகின்றது .ஆயுதங்கள் இந்தியாவாலும் ,வெளிநாடுகளிலும் இருந்து கிடைக்க தொடங்குகின்றது .இனி தமிழிழம் தான் சிங்களவன் சரி என்று எமக்குள் குதூகலிப்பு.

புளோட்டுக்குள் நடந்த கொலைகள் ,அராஜகம் என்பவற்றால் நாம் தடுமாறி நிற்கின்றோம் .தமிழ்நாட்டில் இருந்து மிகவும் உன்னிப்பாக எமது போராட்டத்தை அவதானிப்பவர்களுக்கு புளொட்டின் உட்கட்சி பிரச்சனை தெரியவந்து போகுமிடங்களில் வாய் திறக்க முடியாத நிலை .இருந்தும் திருத்திவிடாலாம் என்றொரு நப்பாசை .

டெலோ -புலிகள் மோதல் .உன்னிப்பாக அவதானித்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து தமிழ் நாட்டவரும் கேள்வி கேட்கின்றார்கள் .என்னா சார் உங்களுக்குள் பிரச்சனை .அப்படி பிரச்சனை என்றாலும் பேசி தீர்த்து கொள்ளுங்கள் சார் .அடிபட வேண்டாம்.

சிறி சபாரட்ணம் கொலை செய்தி வருகின்றது .வெளியில் தலை காட்ட முடியவில்லை .சாமான் வாங்க போனால் ,சாப்பிட போனால் கேள்வி மேல் கேள்வி .அவர்களுக்கு எல்லா விடயங்களும் விளங்க படுத்திக்கொண்டிருக்கமுடியாது.அவர்களுக்கு எல்லோரும் விடுதலை போராளிகள் தான் .

பின் ஈபி ,புளொட் என தொடர்கின்றது .ஆரம்பத்தில் பலர் குழம்பினாலும் விடுதலைப்புலிகள் தான் ஒரே இயக்கம் என்ற முடிவிற்கு வருகின்றார்கள் .

இந்திய அமைதி காக்கும் படை இலங்கை போதல் ,புலிகளுடனான யுத்தம் .பலரும் குழம்பிபோகின்றார்கள் .

ராஜீவ் கொலை .அதன் விளைவு இன்றல்ல என்றும் எம்மை விட்டு அகல போவதில்லை .தமிழிழம் என்பதை சாத்தியமில்லாமல் ஆக்கிய ஒரே விடயம் அது தான் .செய்வதை செய்துவிட்டு எந்த வகையான மன்னிப்பும் விளக்கமும் எடுபட போவதில்லை .டெலோ இல்லை இந்தியா என்று முள்ளிவாய்காலில் நிரூபித்தார்கள் .

குறிப்பு -எத்தனை தமிழ் ,கிந்தி படங்கள் பார்த்திருக்கின்றோம் .நாளை நமதே ,அன்னை ஊர் ஆலயம் ,யாதொன் கி பாரத் .இவை எல்லாமே தகப்பனை வில்லன் கொல்ல மகனை ஒளித்துவைத்து வளர்க்கும் தாய் மகன் இருபது வயதாக நடந்தை சொல்லி வில்லனை கொன்ற கதைதான் .இதில் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று நான் எழுத தேவை இல்லை .

இதுதான் ராஜீவ் கொலையும் முள்ளிவாய்க்கால் நிகழ்வும் .பொதுமக்கள் அழிவு அதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை .

இந்தியாவை உடைப்போம் சீனாவை பிளப்போம் என்று கத்திவிட்டு மண்ணடையை போடவேண்டியதுதான் ,சீனாவும் இந்தியாவும் அப்படியே தான் இருக்க போகின்றன .

பாவம் இலங்கை தமிழ் மக்கள் .

Link to comment
Share on other sites

[size=4]இன்றுள்ள இந்திய நடுவண் அரசியல் நிலையில் சற்று மாற்றங்கள் தெரிகின்றன. [/size]

[size=1]

[size=4]அண்மையில் சில இலங்கை - சீன நடவடிக்கைகள் காரணமாக இல்லை இந்தியாவின் ஜெனீவா நடவடிக்கைக்கு சிங்களம் சவால் விடுக்கும் நிலையில், சில தமிழக நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவது போலுள்ளது. இன்று சிங்களம் தமிழகம் செல்வதை எச்சரிக்கை விடுத்த நிலையில், ஈரானில் மன்மோகன் மகிந்தரை சந்திக்காத நிலையில், இந்த இடைவெளிகளில் தமிழக அரசியல் மேலும் நடுவண் அரசை எமது பக்கம் இழுக்கவேண்டும். [/size][/size]

[size=1]

[size=4]எனவே அடுத்த கட்டமாக இந்த செஇறப்பு முகாம்கள் மூடப்பட வேண்டும். பார்க்கலாம் அப்பொழுது நடுவண் அரசு என்ன செய்ய முயலும் என்று. [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தூரன் மட்டுமல்ல இவர் போல் தமிழ் நாட்டுமுகாம்களில் அடைத்துவைத்திருக்கபட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப் படவேண்டும் .

ஏன் எங்களுக்கு இந்த நிலை ? அதுவும் தமிழ் நாட்டில் .

தமிழகமெங்கும் இயக்க,அகதி முகாம்கள் .எமக்கு உதவி செய்ய அவர்களுக்குள் போட்டி.

விசா இல்லை ,வாகனங்களுக்கு லைசன்ஸ் இல்லை.அவர்களுக்கு எந்த இயக்கமென்று இல்லை .நேரு ஸ்டேடியத்தில் ,வள்ளுவர் கோட்டத்தில் நிதி சேகரிப்பு நிகழ்சிகள் அமைச்சர்கள் தலைமையில் .திருப்பூர் பெனியன் கொம்பனி முதலாளிகள் ,ஏற்காடு தேயிலை தோட்ட முதலாளிகள் ,சென்னை ,மதுரை வியாபாரிகள் என அள்ளி தருகின்றார்கள் .

எம்.ஜி .ஆர் சுபாஸ் சந்திரபோசுடன் இயக்க தலைவர்களை ஒப்பிட்டு பேசுகின்றார் .கருணாநிதி தலைமையில் டெசோ மகாநாடு இந்திய தலைவர்கள் முக்கியமானவர்கள் அனைவரும் மேடையில் (கொங்கிரஸ் உட்பட) ஜே.ஆரை திட்டி தீர்க்கின்றார்கள் .

மொத்த போராளிகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தொடுகின்றது .ஆயுதங்கள் இந்தியாவாலும் ,வெளிநாடுகளிலும் இருந்து கிடைக்க தொடங்குகின்றது .இனி தமிழிழம் தான் சிங்களவன் சரி என்று எமக்குள் குதூகலிப்பு.

புளோட்டுக்குள் நடந்த கொலைகள் ,அராஜகம் என்பவற்றால் நாம் தடுமாறி நிற்கின்றோம் .தமிழ்நாட்டில் இருந்து மிகவும் உன்னிப்பாக எமது போராட்டத்தை அவதானிப்பவர்களுக்கு புளொட்டின் உட்கட்சி பிரச்சனை தெரியவந்து போகுமிடங்களில் வாய் திறக்க முடியாத நிலை .இருந்தும் திருத்திவிடாலாம் என்றொரு நப்பாசை .

டெலோ -புலிகள் மோதல் .உன்னிப்பாக அவதானித்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து தமிழ் நாட்டவரும் கேள்வி கேட்கின்றார்கள் .என்னா சார் உங்களுக்குள் பிரச்சனை .அப்படி பிரச்சனை என்றாலும் பேசி தீர்த்து கொள்ளுங்கள் சார் .அடிபட வேண்டாம்.

சிறி சபாரட்ணம் கொலை செய்தி வருகின்றது .வெளியில் தலை காட்ட முடியவில்லை .சாமான் வாங்க போனால் ,சாப்பிட போனால் கேள்வி மேல் கேள்வி .அவர்களுக்கு எல்லா விடயங்களும் விளங்க படுத்திக்கொண்டிருக்கமுடியாது.அவர்களுக்கு எல்லோரும் விடுதலை போராளிகள் தான் .

பின் ஈபி ,புளொட் என தொடர்கின்றது .ஆரம்பத்தில் பலர் குழம்பினாலும் விடுதலைப்புலிகள் தான் ஒரே இயக்கம் என்ற முடிவிற்கு வருகின்றார்கள் .

இந்திய அமைதி காக்கும் படை இலங்கை போதல் ,புலிகளுடனான யுத்தம் .பலரும் குழம்பிபோகின்றார்கள் .

ராஜீவ் கொலை .அதன் விளைவு இன்றல்ல என்றும் எம்மை விட்டு அகல போவதில்லை .தமிழிழம் என்பதை சாத்தியமில்லாமல் ஆக்கிய ஒரே விடயம் அது தான் .செய்வதை செய்துவிட்டு எந்த வகையான மன்னிப்பும் விளக்கமும் எடுபட போவதில்லை .டெலோ இல்லை இந்தியா என்று முள்ளிவாய்காலில் நிரூபித்தார்கள் .

குறிப்பு -எத்தனை தமிழ் ,கிந்தி படங்கள் பார்த்திருக்கின்றோம் .நாளை நமதே ,அன்னை ஊர் ஆலயம் ,யாதொன் கி பாரத் .இவை எல்லாமே தகப்பனை வில்லன் கொல்ல மகனை ஒளித்துவைத்து வளர்க்கும் தாய் மகன் இருபது வயதாக நடந்தை சொல்லி வில்லனை கொன்ற கதைதான் .இதில் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று நான் எழுத தேவை இல்லை .

இதுதான் ராஜீவ் கொலையும் முள்ளிவாய்க்கால் நிகழ்வும் .பொதுமக்கள் அழிவு அதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை .

இந்தியாவை உடைப்போம் சீனாவை பிளப்போம் என்று கத்திவிட்டு மண்ணடையை போடவேண்டியதுதான் ,சீனாவும் இந்தியாவும் அப்படியே தான் இருக்க போகின்றன .

பாவம் இலங்கை தமிழ் மக்கள் .

காதல் கோட்டை

காதலுக்கு மரியாதை

போன்று திரைகதை நீளமாக இல்லது போனாலும். இது யாழ் கருத்து களத்தில் 120 நாள் ஓடிய திரைகதை.

இன்று 121 ஆவது நாள் வெற்றி நாளை கொண்டாடுவதில் மிக்க சந்தோசம்.

இந்த திரை கதை அமைப்பு

கதையை விறு விறுப்புடன் நகர்த்துவதற்காக சில விடயங்கள் விறு விறுப்பாக. வாந்தியை எடுக்கும் போது எவளவு விரைவாக குடலில் இருக்கும் உணவு வாயை வந்தடையுமோ அதே வேகத்தில் நகர்த்தபட்டுள்ளது. புளொட் டினால் புலிகளை தொடமுடியாது அதுக்கு வக்கில்லை என்பது யாபரும் தெரிந்தது . நோட்டிஸ் ஓட்ட சென்ற அப்பாவிகள் ஆறுபேரை கொன்று போட்டார்கள். ஆரம்ப காலத்தில் யாபரும் ஒன்றாக இருந்து அதில் இருந்து சிலர் பிரிந்து அச்சுறுத்தலாக ஆனபோது யாரையோ சுட்டார் களாம். பின்பு யாரையோ சுட முயன்றபோது அவர் வல்வெட்டியை சேர்ந்தவர் என்பதால் பிரபாகரன் தடுத்து விட்டாரம். பின்பு வேறு வேறு பெயர்களில் குழுக்கள் தொடங்கி போராட்டம் நகர்ந்துகொண்டிருந்த வேளையில் நடந்த கொடூர கொலை வெறி இதுவாகும். இதற்கு காராணம் எமக்கு தேவை இல்லை எந்த தமிழனும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. பின்பு சிரிசபாரட்னமும் பொபியும் சேர்ந்து அவர்களுடைய முக்கிய தளபதியான தாசண்ணாவை யாழ் மருத்துவமனைக்குள்ளேயே சுட்டார்கள். அதற்கான காரணமும் தமிழனுக்கு தேவை இல்லை அது தமிழனால் ஏற்கனவே எதிர்பார்க்கபட்டதுதான். (தமிழன் அல்லாது வாழ்ந்த ஐந்தறிவு அப்பாவி ஜீவன்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை).

பிள்ளையார் சுழி போட்டு மேளதாளங்களுடன் தொடங்கி புலிகளின் உண்மையான பலம் அறியாது காலை விட்ட பலனை நாம் வீதிகளில் பார்க்க நேர்ந்தது.

பின்பு புலிகளின் தளபதியான அருணா என்பவர் புலிகள் மயிலிட்டியில் வைத்து கைதுசெய்த ஈப்பி ஆர் எல் எப் உறுப்பினர்கள் உட்பட 36 பேரை கந்தன் கருணையில் வைத்து குண்டுவைத்து கொன்றார். புலியோ எலியோ அதற்காக வருந்தாதவன் அதை கண்டிக்கதவன் தமிழனாக இருக்கமுடியாது. இவர்களுக்குள் வந்த இடிபாடு நல்ல நேரமாக அமைய கொப்பேகடுவா தலைமையில் லிபரசன் ஒபெரசன் தொடங்கியது. புலிகள் தனித்து நின்று போராடவேண்டிய சூழல். இதுவே தகுந்த நேரம் அப்படியே ஆயுத போருக்கு ஆப்பு வைத்துவிடலாம் என்று சிங்களம் தீட்டிய திட்டத்திற்கு. புலிகள் தீட்டிய திட்டம் உயிராயுதமாக மாறியது. இருப்பத்தி ஒருவரின் (கடல் தளபதி சூசை உட்பட) பெயரில் மில்லரின் பெயரே குலுக்கல் முறையில் வந்தது. மில்லர் நெல்லியடியிலே வெடித்தபோது. ஓவரு தமிழனின் இரத்த அணுக்களும் அங்காங்கே வெடித்தது. சிங்களத்தின் லிபறேசனும் வெடித்து சிதறியது.

பின்பு எத்தனையோ மாய யால உறுதிமொழிகளை கொடுத்து புலிகளின் ஆயுதங்களை இந்தியா வாங்கியது. எந்த உறுதிமொழியும் தீராத நிலையில் பட்டினியிடம் தன்னை கொடுத்தான் திலீபன். ஓவரு தமிழனும் அழுதான். மக்கள் வீதிக்கு கல்கள் தடிகளுடன் வந்தார்கள் புலிகள் தடுத்து நிறுத்தினார்கள். மக்களுக்கும் இந்திய இராணுவத்திற்கும் நடுவில் புலிகள் நின்றார்கள். பின்பு கடல் புறா தடுத்து நிறுத்த படுகின்றது. தரையில் இருந்து தகவல் போகிறது எந்த அசம்பாவிதமும் பண்ணாதீர்கள் உங்களை கைது செய்ய அனுமதியுங்கள். புலேந்திரன் மறுக்கிறார் பின்பு அன்டன் பாலசிங்கம் அவர்கள் பேசி அவரும் உடன்படுகிறார். புலிகள் நடுநிலைமை வதியிடம் சென்று கேட்டது அவர்களை இந்தியா கொண்டு செல்லுங்கள் ஆனால் கொழும்பு செல்லவிடாதீர்கள் என்பதுதான். அப்போதைய பலாலி இந்திய இராணுவத்தளபதி கண்நீருடந்தான் வந்தார் தன்னால் ஆனது எல்லாம் செய்துவிட்டேன் முடியவில்லை.

யாரோ ஒரு கவிஞன் எழுதினான்......... காற்றும் ஒருகணம் வீச மறந்தது. கடலும் ஒரு நொடி அமைதியாய் போனது தேற்றுவார் இன்றி எம் தேசம் அழுதது. என்று இது கவிதை இல்லை இதுதான் உண்மையில் நடந்தது.

பின்பு ராஜீவ் தனது கடி நாய்களை கட்டவிழ்த்து விட்டார்.

பேய்கள் கூட செய்ய முடியாதவைகளை அவர்கள் எமது கண்முன்னேயே செய்து முடித்தார்கள்.

இந்த கொலைகள்

இந்த புலிவேட்டை....

இந்த பாலியல் வல்லுறவுகள்.......

எல்லாம் புலிகள் இந்திரா காந்தியை கொன்றதட்காகவா செய்தார்கள்?

அவர்கள் கதாநாயகர்கள் காரணம் இன்றி செய்திருக்க மாட்டார்கள். ஆனால் காரணம் திரைகதையில் வரவே இல்லை என்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. டெலோவை தீண்டியதில் இருந்து புளொட்டை மாலைதீவுக்கு அனுப்பியதில் இருந்து கதாநாயகர்கள் எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடுதான் செய்துள்ளபோதும். திரைகதை வேகமாக வாந்தி போல் வருகிறது. அதற்கான காரணங்களை தொடவேயில்லை.

ஆனால் இவ்வளவு நாளும் முக்கி முக்கி செய்த இரசாயன ஆயுதங்களை கொண்டுவந்து முள்ளிவைக்களில் வைத்ஹ்டு மக்கள் மீது அடித்ததற்கு காரணம். ராஜீவின் கொலை என்று படம் முடிகிறது.

ராஜிவின் கொலைவெறிக்கு காரணம் படத்தில் இல்லாத போதும். இப்படிபட்ட பித்தலாட்ட சினிமா கதைகளில் காரணத்தை எந்த தமிழனும் தேடுவதில்லை. தேடியதும் இல்லை.

தவிர நல்ல தமிழில் கதை நகர்கிறது. 121 ஆவது நாள் வெள்ளி விழா கொண்டாடியும் வாசிக்க தவறியவர்கள். இந்த சினிமாவையும் ஒருமுறை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.