Jump to content

"பாவம் அந்தக் காதல்"


Recommended Posts

[size=5]"பாவம் அந்தக் காதல்"[/size]

400_F_15427365_yloHeMKoTK9B0Nl9jb4Qw2nhYZpwfzaU_PXP.jpg

http://static-p2.photoxpress.com/jpg/00/15/42/73/400_F_15427365_yloHeMKoTK9B0Nl9jb4Qw2nhYZpwfzaU_PXP.jpg

எதேச்சையான சந்திப்புக்கள்!

தன்னிச்சையான எண்ணங்கள்!

தவிர்க்க இயலாமற்போன பார்வைகள்!

சொல்லத் தயங்கிய வார்த்தைகள்!

தூக்கம் மறந்த இரவுகள்!

தலையணை துணையான பொழுதுகள்!

நூலிழை இடைவெளிக்குள்...

சிக்கித்தவித்த இருமனங்கள்!

பிரியப்போகும் தருணத்தில்...

வெடித்துவந்த அழுகையோடு,

சொல்லிக்கொண்ட காதல்!

பின் சுற்றிச் சுழன்ற நினைவுகள்!

ஆழமாய் அழகாய் உணர்ந்த காதல்,

இப்பொழுது..........பிரிகிறது!

காரணங்கள் தெரியாமல்,

காரியமும் புரியாமல்,

சொல்லாமல் கொள்ளாமல் மறைகிறது!

காதல் ஒருநாளும் தோற்றுப்போவதில்லை!

காதலர்கள்தான் அதனை சாகடிக்கிறார்கள்!!

பாவம் அந்தக் காதல்!

அதற்கு சேரத்தான் தெரியும்...

பிரியத் தெரியாது!!

[size=5]கவிதையின் கவிதைகள்[/size]

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]காதலுக்குத்தான் கண்ணின் இல்லையே?[/size]

[size=1][size=4]பிறகு என்னென்று அது சேரும் இல்லை பிரியும்??[/size][/size]

Link to post
Share on other sites

காதலுக்குத்தான் கண்ணின் இல்லையே?

பிறகு என்னென்று அது சேரும் இல்லை பிரியும்??

ஒருகாலத்தில் காதலுக்கு கண்இல்லை என்பதென்பதோ உண்மைதான் . ஆனால் நடைமுறைக் காதலுக்கு கண் இருக்கின்றது . வெடிவால் முளைக்கும் பருவங்களில் உடல்மீது காமமாய் கசிந்து உருகும் காதல் , பின்பு பகட்டுவாழ்க்கைக்கும் , அந்தஸ்த்துக்கும் உடல் மீது காமமாய் கசிந்த காதல் தன் சட்டையை மாற்றும் . ஆக காதலுக்கு கண் உண்டு . வருகைக்கும் கருத்துக்களுக்கும்மிக்க நன்றிகள் அகூதா .

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.