Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தன் பிள்ளை என்றால்..............

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தனியாட்களுக்கு இயற்கையா வாற பிரச்சனைகளுக்கு அவை அவை தான் முகம் கொடுக்கனும். உங்களுக்கு காய்ச்சலின்னா.. உங்க மனைவியா மருந்து குடிக்கிறாங்க..! இல்லையே..!

இப்போ

வீதியில் ஒருவர் வயிற்றைப்பிடித்தபடி அலறிக்கொண்டிருந்தால் திரும்பியே பார்க்காமல் போய் விடுவோமா?

அந்த திரும்பிப்பார்த்தலுக்கு என்ன பெயர்??

அவரவர் தங்களைப்பார்ப்பார்கள் தானே என போகமுடிவதில்லையே?

குடும்பம் என்பது இருவர் சம்பந்தப்பட்டது.

அந்த இருவருக்குள் இந்த சின்ன இழை கூட ஓடவில்லையென்றால்.............???

இருவர் சேர்ந்து இன்பம் துன்பம் எல்லாவற்றையும் சுமந்து வாழ்வது தான் குடும்பவாழ்க்கை.

உனக்கு வலிப்பதை நான் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்பது எதற்கும் பொருந்தாது. உதவாது.

எனக்கு வலித்தால்

அவர்தான் மருந்து தருவார். இல்லாது விட்டால் சில வேளை வைத்தியசாலை போய் வைத்தியர் தரவேண்டியிருக்கும்.

இதுவரை வைத்தியரை நாடாது எந்த வருத்தமும் இல்லாது வாழுவதற்கு அவரது கவனிப்பே காரணம்.

(அண்ணன்மாரின் வீக்கை முதலில் புரிந்து கொள்ளணும் ராசா :lol: )

மற்றும்படி.. இதை ஒரு சென்ரிமெண்ட் விசயமா பார்க்கிறது.. எங்கட சமூகத்தில.. ஆண்களுக்கு இயற்கையும் உயிரியலும் பற்றி புரிதல் குறைவா இருப்பது காரணமோ தெரியல்ல.

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம். அதேநேரம் கிட்டத்தட்ட தங்கள் வயது பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் அவர்கள் இவற்றை எல்லாம் களட்டி விட்டுவிட்டதாகவும் தெரியவில்லை. ஆனால் அவர்களிடம் ஒன்றை மட்டும் பார்க்கின்றேன் இந்த வயதில் இது அவர்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. அதே நேரம் பெறாமக்கள் மற்றும் மருமக்கள் என ஒரு 30 க்கும் மேல் இருக்கு. அவர்கள் தமக்கென குடும்பம் என வந்துள்ளபோது என்னைவிட இவற்றை அதிகம் செய்கிறார்கள். விரும்புகிறார்கள்

மேலும்.. மனைவிக்கு மட்டுமென்றில்ல.. எந்த ஒரு மனிதனுக்கும் உதவியோ.. அரவணைப்பபோ தேவைன்னா அதை வழங்கிற மனிதாபிமான உணர்வு.. இருப்பது.. அவசியம். அது எங்கட சமூகத்தில குறைவு..!

உதவி செய்யப் போனாலும்.. இவன் ஏன் வலிய வந்து உதவிறான்.. ஏதும் உள் நோக்கம் இருக்குமோ என்று சதா சந்தேகத்தை முன்னிலைப்படுத்தும் நம்மவர் முன் மனிதாபிமானம் கூட சாகடிக்கவே செய்யப்படுகிறது..!

நம்மவர்கள் திருந்தனும்.. நிறையவே..!

இந்த மனிதாபிமானத்தையே இங்கு ஞாபகப்படுத்தினேன்.

மேலும்.. வயிற்று வலி வந்தா... பெயின் கில்லரைப் போட்டிட்டு.. வைத்தியரை நாடுங்கள். கணவரோ.. அப்பாவே பக்கத்தில குந்தி இருந்தாப் போல வயிற்று வலி போகாது..! அதற்காக பொதுவான கவனிப்பையும் அரவணைப்பையும் ஆண்கள் வழங்கக் கூடாது என்பதல்ல அர்த்தம்..! அது மனைவி.. பிள்ளை என்று பார்க்காது..சக நெருங்கிய மனிதன் என்ற வகையில் அமைவது இயல்பு..! அமையனும்..! இல்லைன்னா நீங்க மனிதன் இல்லை..! :):icon_idea:

அதைத்தானப்பா சொல்கின்றேன்

மனைவி என்பதற்கு அப்பால் ஒரு மனிதனாகவாவது பாருங்கள். எம்மை மறந்தும் பக்கத்தில் இருப்பதை கவனிக்காது இருந்திடவேண்டாம் என்பதே திரியின் நோக்கம்.

நன்றி

நேரத்துக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும்.

Link to comment
Share on other sites

 • Replies 81
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசுகர்....நல்ல ஒரு பதிவை தந்தமைக்கு.....

நன்றி புத்தன்

தங்கள் நேரத்திற்கும் ஊக்கத்துக்கும்

புருஷன்: இஞ்சாரும் பசிக்குது என்ன சாப்பாடு ?

மனைவி:பான் இருக்கு பிரிட்ஜில் பழைய கறியும் இருக்கு போட்டு சாப்பிடுங்கோ ....

புருஷன்:என்னப்பா ஒவ்வொருநாளும் பானே?

மனைவி: எனக்கு பஞ்சியாக இருக்கு ...எதாவது பார்த்து சாப்பிடுங்கோ....

மகன் :அம்மா பசிக்குது என்ன சாப்பாடு?

அம்மா: 2நிமிசம் இருடா புட்டு அவிச்சு முட்டை பொறிச்சு சம்பலும் செய்து தாரன்....

புருஷன்: என்ட அம்மா எனக்கும் இப்படி செய்தவ!!!!!!பெடிப்பயளும் இப்ப அம்மாவிட்ட நல்ல சாப்பிடட்டும் கலியாணத்திற்க்கு பின்பு உனக்கு பான் தான்டா ராசா!!!!!

விசுகர் உங்களின் பதிவில் இதை இடுவதற்க்கு மன்னிக்கவும் ...சும்மா எழுதியுள்ளேன்

இது எல்லா வீட்டிலும் நடப்பது தானே

ஆனால் எனது வீட்டில் கொஞ்சம் வித்தியாசம்

உதாரணமா

சோறு போட்டால் மேல் சோறு எனக்கு எடுத்துத்தருவார். காரணம் அவரது அம்மா அவ்வாறுதான் தகப்பனுக்கு கொடுப்பாராம். (நான் மாமியைப்பார்த்து பெண் எடுத்தேன் என முன்பே இங்கு எழுதியுள்ளேன்.) :wub:

நாம் சுழியன்கள் அல்லோ. :D :D

இன்னொரு விடயம்

மக்கள் என்னுடன் ஒத்துப்போகும் விடயங்களுக்கு அப்பா என்றும்

ஒத்துப்போகா விடயங்களுக்கு உங்கட புருசன் என்றும் சொல்வார்கள்.

நானும் மனைவி ஏதாவது மக்கள் சொன்னதாக ஆரம்பித்தால் முதலிலேயே கேட்டுவிடுவேன்

அப்பா என்றார்களா?

உங்க புருசன் என்றார்களா? என்று.

நிலை எடுக்க வசதியல்லோ???? :lol::D :D

Link to comment
Share on other sites

குட்டி என்றதும் சிறு பிள்ளை என்ற எண்ணம் எனக்கு.

தங்களது பல கருத்துக்கள் எம்மை வழி நடாத்தும் அளவுக்கு இருக்கின்றன.

தவறை ஏற்கவோ

சுட்டிக்காட்டுபவர் பெரிதா சிறியவரா என்ற பேதமோ என்னிடமில்லை.

என் வீட்டில் எனது மக்களிடமே பலதைப்படித்து வருகின்றேன். ஏற்றுக்கொண்டிருக்கின்றேன்.

நன்றி ஐயா

கருத்துக்கும் நேரத்திற்கும் உதாரணத்திற்கும்.

அண்ணா வயதில் சிறியவனாகவே இருந்தாலும் நேரடி, பார்த்து, கேட்ட அனுபவங்களே சமூக சாரளத்தில் பகிர்ந்து கொள்ளகிறேன்.. உங்கள் புரிந்துணர்விற்கு நன்றி!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புத்து இதுவும் இன்றைய தலைமுறை கணவன்மாருக்குத் தான் பொருந்தும். புதிய தலைமுறை பெரும்பாலும் பெண்களில் உணவுக்கோ.. பிற அத்தியாவசிய தேவைகளுக்கோ தங்கி இருப்பதில்லை.

இன்றைய தலைமுறை.. காய் டாலிங்.. என்று ஒரு கிஸ் அடிச்சிட்டு.. கிச்சினில.. போய்.. தாங்களே தங்களுக்கு விரும்பினதை சமைச்சு சாப்பிட்டு.. (கூடிய அளவு ஓவன் தான்... அவர்களுக்கு உதவி..) மீண்டும் அறைக்குள்ள போற வழில.. அடுத்த கிஸ் அடிச்சிட்டு.. தங்க வேலையை கவனிக்க போயிடுவாங்க..!

அதேபோல்.. பெண்களையும் தங்களில் தங்கி இருக்க அனுமதிப்பதில்லை..! இந்த தங்கி இருப்பு ஆண்களை சோம்பேறி ஆக்குவதோடு.. பெண்கள் அதிக செல்வாக்குச் செய்யவும் தூண்டுகிறது..! ஆண்களின் சுய வாழ்வுக்கான சுதந்திரத்தையும் பறித்துப் போடுகிறது..! :icon_idea::)

நெடுக்கர் நிறைய சீரியலைப் பார்த்து கெட்டுப் போகிறார் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

தனியாட்களுக்கு இயற்கையா வாற பிரச்சனைகளுக்கு அவை அவை தான் முகம் கொடுக்கனும். உங்களுக்கு காய்ச்சலின்னா.. உங்க மனைவியா மருந்து குடிக்கிறாங்க..! இல்லையே..!

மற்றும்படி.. இதை ஒரு சென்ரிமெண்ட் விசயமா பார்க்கிறது.. எங்கட சமூகத்தில.. ஆண்களுக்கு இயற்கையும் உயிரியலும் பற்றி புரிதல் குறைவா இருப்பது காரணமோ தெரியல்ல.

மேலும்.. மனைவிக்கு மட்டுமென்றில்ல.. எந்த ஒரு மனிதனுக்கும் உதவியோ.. அரவணைப்பபோ தேவைன்னா அதை வழங்கிற மனிதாபிமான உணர்வு.. இருப்பது.. அவசியம். அது எங்கட சமூகத்தில குறைவு..! உதவி செய்யப் போனாலும்.. இவன் ஏன் வலிய வந்து உதவிறான்.. ஏதும் உள் நோக்கம் இருக்குமோ என்று சதா சந்தேகத்தை முன்னிலைப்படுத்தும் நம்மவர் முன் மனிதாபிமானம் கூட சாகடிக்கவே செய்யப்படுகிறது..!

நம்மவர்கள் திருந்தனும்.. நிறையவே..!

மேலும்.. வயிற்று வலி வந்தா... பெயின் கில்லரைப் போட்டிட்டு.. வைத்தியரை நாடுங்கள். கணவரோ.. அப்பாவே பக்கத்தில குந்தி இருந்தாப் போல வயிற்று வலி போகாது..! அதற்காக பொதுவான கவனிப்பையும் அரவணைப்பையும் ஆண்கள் வழங்கக் கூடாது என்பதல்ல அர்த்தம்..! அது மனைவி.. பிள்ளை என்று பார்க்காது..சக நெருங்கிய மனிதன் என்ற வகையில் அமைவது இயல்பு..! அமையனும்..! இல்லைன்னா நீங்க மனிதன் இல்லை..! :):icon_idea:

விசுகுவின் கருத்தை வாசிக்கும்போது தந்தை-மகள், கணவன்-மனைவி உறவுகளின் பாதிப்பை காணமுடிகின்றது. நெடுக்காலபோவானின் கருத்து மூன்றாம் ஆளாக வெளியில் இருந்து பார்க்கும் பார்வையாக தெரிகின்றது.

பெண்கள் மீது இவ்வாறு இரக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கள்போல் ஆண்களுக்கும் சரிநிகரான தோற்றப்பாடுகள் காண்பிக்கப்படாதது துர்ப்பாக்கியமே. காரணம் ஓர் ஆண் மகனின் இதயத்தில் கசிகின்ற இரத்தத்தை பார்த்து எவரும் பரிவோ அனுதாபமோ கொள்வது இல்லை. வயிற்றில் வலி வந்தால் மாத்திரையை போடலாம். நமக்குள் ஏற்படக்கூடிய உட் காயங்களுக்கு நிவாரணி? பெண்கள் எமது சமூகத்தில் பல விதங்களில் அடக்கப்படுகின்றார்கள் என்பதும் உண்மை, அதேசமயம் பெண்களுக்கு உயிரியல் சார்ந்த சம்பந்தப்பட்ட விடயங்களில் கிடைக்கின்ற அனுதாபமும், அவர்கள் மீது காட்டப்படும் அக்கறை ஆண்களுக்கு கிடைப்பது இல்லை என்பதே உண்மை.

பெண்கள் தாமும் ஆணுக்கு சமமானவர்கள்(உடலளவில்) என்று நடிக்கமுடியுணுமே தவிர அதை ஒரு போதும் அடைய முடியாது.

அந்தக்கருணையும்

பெண் எம்மைவிட உடற் பலம் குறைந்தவள் என்ற நிலையிலேயே ஆண்கள் தமது ரத்தக்கசிவுகளை பெரிது படுத்துவதில்லை. அல்லது ஏற்கனவே பலயீனமானவளிடம் காட்டுவதில்லை.

நன்றி தங்கள் கருத்துக்கும் நேரத்திற்கும்.

Link to comment
Share on other sites

 • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.