Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

(காணொளி ) கணினித் தமிழ் வளரவேண்டுமானால் தமிழர்களே நாம் செய்யவேண்டியது... பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் உரை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

[size=3]இந்தியை ஆட்சிமொழியாக்க இந்திய அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும் தமிழர்கள் விழிப்படையவேண்டும் என்றும் இன்றைய நடுவண் மற்றும் மாநில அரசுகள் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கவேண்டுமானால், நாம் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் முடியும் என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள்.[/size]

[size=3]'ஆண்டோ பீட்டர் நினைவுகளும் - தொடர வேண்டிய பணிகளும்' என்ற தலைப்பில் 2-9-2012 அன்று சென்னையில் சேவ் தமிழ்ஸ் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக்கூட்டத்தில் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவை பாருங்கள். பரப்புரை செய்யுங்கள். [/size]

[size=3]கணினித்தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுப்பதன் வழி நாம் ஆண்டோ பீட்டர் அவர்களின் இதுநாள் வரையான உழைப்புக்கு மரியாதை செய்வோம்.[/size]

[size=3]http://www.chelliahm...log-post_4.html[/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆண்டோ பீட்டர் பற்றி அவ்வளவு கேள்விப்பட்டதில்லை , அவரின் சேவைகளை நமக்கு தெரியப்படுத்தலாமே.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி பி (B) வலயத்தில் வெளியாறுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதானது தமிழ் மக்களின் இனப்பரம்பலை திட்மிட்டு குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுளே இடம்பெற்று வருகின்றன. மகாவலி பி வலயத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களே இவ்வாறு அபகரிக்கப்படுகின்றன. இதன் பின்புலத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கடந்த 14ஆம் திகதி இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசாங்க அதிபர் என்னக் காரணத்துக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதற்கு மேலாக கடந்த 12ஆம் திகதி காணி அபகரிப்பு இடம்பெற்றுவரும் மயிலத்தமடு, மாதனை பிரதேசங்களுக்கு அவர் களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரை சந்தித்திருந்தோம். 14ஆம் திகதி கிழக்கு ஆளுனரையும் சந்தித்திருந்தோம். இரண்டு இலட்சம் மாடுகளை மேய்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சேனை பயிர்ச்செய்கைக்காக 5 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதால் குறித்த நிலப்பகுதியில் மாடுகளை மேய்க்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். 2010ஆம் ஆண்டு 27,311 ஹெக்டேயர் நிலம் மாடுகள் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 5 இலட்சத்திற்கும் அதிகமான மாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளன. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34 இலட்சத்திற்கும் அதிகமான லீட்டர் பால் இங்கு உற்பத்திசெய்யப்பட்டுள்ளது.  இவ்வாறான நிலைகள் உள்ள போதிலும் வெளிமாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இலங்கை முழுவதும் மகாவலி வலயம் எனக் கூறப்படும் 10 வலயங்களில் 1,23,630 சிங்களக் குடும்பங்களுக்கு 96 சதவீதமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளன.  12 சதவீதமாகவுள்ள தமிழ் மக்களுக்கு அதாவது இந்த வலயத்தில் உள்ள 1834 குடும்பங்களுக்கு 1.42 சதவீதமான நிலம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. 3000 முஸ்லிம் குடும்பங்களுக்கு 2.39 சதவீதமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி பி வலயத்தில் காணிகள் ஒதுக்கிக்கொடுக்கப்பட வேண்மென்றால் அவை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்தான் ஒதுக்கிக்கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுதான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனையவர்களுக்கு காணிகள் ஒதுக்கிக்கொடுக்கப்படுவதானது திட்டமிட்ட இனவாத குடியேற்றமாகும் என்பதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும் என்றார்.  https://www.virakesari.lk/article/92582
  • ரதி , சுவி அண்ணா, குமாரசாமி அண்ணா, ஜெகதா துரை, உடையார் , கிருபன், பஞ் அண்ணர், புரட்ச்சிகர தமிழ் தேசியன், நுணாவிலான் , நில்மினி, நிலாமதி அக்கா, ஈழப்பிரியன் , நிகே, தமிழ் சிறி அண்ணர் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.  
  • வித்தியாசம் உங்கள் மகனோ, அல்லது எவரோ படிக்கும் பொது மட்டுமே விழித்திருக்க வேண்டி இருந்திருக்கும். இவர்கள், அந்த வேலை செய்யும் வரையும் அநேகமான நாள் விழித்து இருக்க வேண்டும்.   ஆம், பூனையும், எலியும் போல, ஒரே ஓட்டம், துரத்துதலும்   
  • சிம்பிள் ஆன்சர்; முடிவிலி. முடிந்தால் இரு பக்கமும் வேலை இல்லாமல் போய்விடும். பிச்சைக்காரன் புண் என்று வைத்துக் கொள்ளலாம்.
  • கடைசியில் எல்லாத்தையும் ஒருமாதிரி ஈழத்தமிழர் தலையில் விடியப்பண்ணிப்போட்டங்கள். இவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தல்வேண்டும். நான் நினக்கிறேன் இதில் பல உள்ளடிவேலைகள் நடந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடு காவல்துறை இதைமறைத்து உண்மையான குற்றவாளியைக் காப்பாற்றும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.