Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயணங்கள் முடிவதில்லை :)


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலமுகடுகளில் தடக்கி நிற்கும்போது திருப்புமுனைகள் அமைந்துவிடுவதுண்டு இன்று எழுத முற்பட்ட விடயமும் இதுவரை காலமும் எழுதிய எனக்கேயான பிரத்தியேக தன்மையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இது எனது எழுத்துப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மையா..... தீமையா என்பதை தற்சமயம் தீர்மானமாக அறியமுடியாவிட்டாலும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட என்னுடைய அனுபவப்பகிர்வுகளை சின்னச் சின்ன கற்பனையூட்டி உங்களுடன் பகிர்கின்றேன். சில சமயங்களில் வெளிப்படையாக எழுத விளையும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் உருவாக்கும் அல்லது பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களே சொந்தக்காசில் சூனியம் வைப்பதுபோல் அமைந்துவிடும். இணையவெளியில் இறங்கியிருக்கிறேன். எழுதும் ஆளுமையும்ää துணிவும் என்னோடு உடன் பயணிக்க உங்களுடன் நீண்ட நாட்களுக்குப்பின் இந்தப் பக்கத்தில் இணைகின்றேன்.
சில வாரங்களுக்குமுன் நிறையவே மன உளைச்சல்ää போராட்டம்ää குழப்பம். (தனிப்பட்ட வாழ்வில் என்று நினைக்கக்கூடாது) இனம் சார்ந்த சமூக நலன், பெண்கள், பாதிப்புகள் என்று பன்முகப்பட்ட விடயங்களை ஓரிடத்தில் சேர்த்து சில முயற்சிகளை பலரின் உதவிகளைப்பெற்று உருவாக்கும் பெரும் முயற்சியில் விழுந்த பாரிய முட்டுக்கட்டை அல்லது சில குழுமங்களுக்குள் வரையறுக்கப்பட்ட இறுக்கநிலை அல்லது தமக்குள் முழுமையாக கட்டுப்படுத்தும் குறுகிய போக்குக் கொண்டவற்றின்பால் முயற்சிகள் தகர்க்கப்பட்ட வேதனை சூழ்ந்த பொழுதொன்றில் எனது துணைவரால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பயணம் இது பொதுத்தேவை நோக்கி வேலையிலிருந்து எடுக்கப்பட்ட எனது விடுமுறை நாட்கள் முதன் முறையாக என் குடும்பவாழ்விற்கும், துணைவருடனான இறுக்க நிலைக்கும், பிள்ளைகளின் குதூகலத்திற்கும் பயன்பட்டது. சரி இனி இந்தப்பயணமும் எனது அனுபவங்களுமாக…..
முதலில் மொட்டையாக இந்தப்பயணம் இன்ன இடத்திற்கு என்று எனக்குத் தெரியாத ஒரு நேரம்
“அப்பா….நேய்!” இது நான்
“ம்” இது எனது துணைவர்.
“எனக்கு ஒண்டுமே சொல்ல மாட்டீங்களாம்”
“ம்”
“சொல்லுங்கோப்பா”
“ம்”
“அநேய் ஏனன எல்லாத்திற்கும் “ம்…ம்” எண்டுறியள்?
“ம்”
எனக்கு வந்த கோபத்திற்கு இந்தாளுக்கு உச்சந்தலையில் ஓங்கி “நச்”சென்று குட்டலாமா என்று தோன்றியது. அடக்கிக் கொண்டேன்.
“அப்பேய்;” (கவனிக்கவும் அப்பா…. அப்பேயாக மாறிட்டார்)
“ம்”
கடவுளே… கோயில் மாடு தலையைத் தலையை ஆட்டுற மாதிரி வீட்டு மனுசன் “ம்…ம்” எண்டுறாரே… “ஒழுங்கா கதையுங்கோப்பா”
“சரியடி என்ன?” (குரலில் அலுப்பு கறுமம் பிடிச்சவள் நிம்மதியா பியரைக் குடிக்க விடுறாள் இல்லை என்று நினைச்சிருப்பார்போல..)
அதானப்பா வக்கேசனுக்கு எங்க போகப்போறியள்?
“எங்கேயோ கூட்டிப்போவன்தானே”
“அது தெரியும் எங்க எண்டெல்லோ கேட்கிறன். (எனது குரல் பொறுமையிழப்பதை என்னால் உணரமுடிந்தது.)
“உனக்குச் சொன்னால் நீ முதலிலேயே குழப்பிப் போடுவே…”
“இல்லையப்பா நின் குழப்பேல்ல சொல்லுங்கோவன்”
“உனக்குத் தெரியோணுமோ சண்னனிடம்(இளையமகன்) கேள்”
வாசலில் கிடந்த பழைய செருப்பால எனக்கு நானே அடித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
“அப்ப நீங்கள் இந்த பியரையும் சிகரெட்டையும் கட்டிக் கொண்டு கிடவுங்கோ” என்றபடி சின்ன மகனிடம் கேள்விகளைத் தொடுத்தேன். அவனிடம் கிடைத்த தகவலின்படி அப்பா விமானப்பற்றுச்சீட்டுக்கள் பதிவு செய்யும் ஒரு அலுவலகத்தில் கிரடிட் கார்ட்டைக் கொடுத்து காசோலையில் கையெழுத்திட்டது என்பது மாத்திரமே…
துணைவருக்கு ஒருவகையான கவலை இருந்தது முன்பு ஒருதடவை அவர் கியூபாவிற்கு அழைத்துச் செல்ல அவர் போட்ட திட்டத்தையெல்லாம் கடைசி நிமிடத்தில் உடைத்து தாயகத்திற்கு அழைத்துச் சென்றேன் அதன்பாதிப்பில் இருந்து அவர் விடுபடாததால் இங்கு செல்லப் போகிறோம் என்பதை என்னிடம் மறைத்தார். அத்தோடு நான் இந்தியா செல்வதற்காகவே இந்த விடுமுறையை வேலையிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டதும் அவருக்கு நன்கு தெரியும். எங்கே கடைசி நிமிடத்தில் தன்னுடைய திட்டத்தை தவிடு பொடியாக்கிவிடுவேனோ என்ற எண்ணம் அவரிடம் குடிகொண்டிருந்ததை என்னால் அறியக்கூடியதாக இருந்தது. என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது பொதுவிடயங்களில் ஏற்படும் வலிகளை மறந்தும் துணைவரிடம் பகிர்ந்து கொள்வதில்லை காரணம் அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது மட்டுமல்ல தொடர்ந்தும் நான் பொதுப்பணிகளில் ஈடுபடுவதை விரும்பமாட்டார் என்பதும்தான். ஆதலால் பிரச்சனைகள் வலிகளை என்னோடு மட்டுப்படுத்திவிடுவேன். அவற்றின் பாதிப்பை குடும்பத்திற்குள் நுழைய விடுவதில்லை அதன் காரணமாக என்னுடைய நிலைவரத்தை அவர் அறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. இதனை அவர் அறியாததால் அவருக்குள் அச்சம் ஏற்பட்டிருந்ததைத் தவிர்க்கமுடியவில்லை. அது அனாவசியமானது என்பது எனக்குப் புரிந்தது.
என்னதான் இரகசியமாக வைத்திருந்தாலும் துணைவரின் கூகுள் தேடல் அவர் எங்கே செல்ல ஆயத்தப்படுகிறார் என்பதை எனக்கு காட்டிக்கொடுத்துவிட்டது. இருந்தாலும் நானும் தெரியாததுபோல் நடிக்க ஆரம்பித்தேன். எதுவரைக்கும் இவர்கள் என்னிடத்தில் மறைப்பார்கள்? நான் ஆர்வப்படாமல் அசட்டையாக இருக்க ஆரம்பித்தேன். அவரால் எனது புறக்கணிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடகடவென்று ஒரே மூச்சில் “புன்ரக்கானா” என்ற கடல் சார்ந்த ஒரு பிரதேசத்திற்கு பயணப்படுவதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதாக ஒப்புவித்தார்….. (அடுத்த வாரம் தொடரும்)


250px-Dominican_Republic_%28orthographic

Link to post
Share on other sites
  • Replies 187
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் சகாறா அக்கா இது என்ன மொழி?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

[size=6]சகாரா ஆங்கில எழுத்துக்கள் ரைப்பண்ணிப் பழகிறதிற்கு ஒரு திரியா??[/size]

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனோய் :lol: எப்பனை அடுத்த பகுதி வரும். :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன மொழி :(:wub: நான் எனக்குதான் பிரச்னை எண்டு யோசித்தன் ,எனக்கு முதலே இரண்டுபேர் சிக்கிட்டினம் :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நான் வேர்ட் ல எழுதி இங்கு கொண்டு வந்து ஒட்டிப்போட்டு பிழை திருத்தமுன்னம் எல்லாரும் வாசிச்சாச்சா..... :icon_mrgreen: :icon_mrgreen:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கலர் கலரா முந்திரிக்கா

..................

......................?????????? :lol::D :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும் சகாறா அக்கா இது என்ன மொழி?

ஏன் ரதி ஏதாவது கோணல்மாணலாக இருக்கா... அல்லது எழுத்துப்பிழைகளைச் சொல்கிறீர்களா?

[size=6]சகாரா ஆங்கில எழுத்துக்கள் ரைப்பண்ணிப் பழகிறதிற்கு ஒரு திரியா??[/size]

ஆங்கிலமா நான் எங்கே அதை எழுதினேன்? :blink:

Link to post
Share on other sites

காலமுகடுகளில் தடக்கி நிற்கும்போது திருப்புமுனைகள் அமைந்துவிடுவதுண்டு இன்று எழுத முற்பட்ட விடயமும் இதுவரை காலமும் எழுதிய எனக்கேயான பிரத்தியேக தன்மையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இது எனது எழுத்துப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மையா..... தீமையா என்பதை தற்சமயம் தீர்மானமாக அறியமுடியாவிட்டாலும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட என்னுடைய அனுபவப்பகிர்வுகளை சின்னச் சின்ன கற்பனையூட்டி உங்களுடன் பகிர்கின்றேன். சில சமயங்களில் வெளிப்படையாக எழுத விளையும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் உருவாக்கும் அல்லது பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களே சொந்தக்காசில் சூனியம் வைப்பதுபோல் அமைந்துவிடும். இணையவெளியில் இறங்கியிருக்கிறேன். எழுதும் ஆளுமையும்ää துணிவும் என்னோடு உடன் பயணிக்க உங்களுடன் நீண்ட நாட்களுக்குப்பின் இந்தப் பக்கத்தில் இணைகின்றேன்.

சில வாரங்களுக்குமுன் நிறையவே மன உளைச்சல்ää போராட்டம்ää குழப்பம். (தனிப்பட்ட வாழ்வில் என்று நினைக்கக்கூடாது) இனம் சார்ந்த சமூக நலன்ääபெண்கள்ää பாதிப்புகள் என்று பன்முகப்பட்ட விடயங்களை ஓரிடத்தில் சேர்த்து சில முயற்சிகளை பலரின் உதவிகளைப்பெற்று உருவாக்கும் பெரும் முயற்சியில் விழுந்த பாரிய முட்டுக்கட்டை அல்லது சில குழுமங்களுக்குள் வரையறுக்கப்பட்ட இறுக்கநிலை அல்லது தமக்குள் முழுமையாக கட்டுப்படுத்தும் குறுகிய போக்குக் கொண்டவற்றின்பால் முயற்சிகள் தகர்க்கப்பட்ட வேதனை சூழ்ந்த பொழுதொன்றில் எனது துணைவரால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பயணம் இது பொதுத்தேவை நோக்கி வேலையிலிருந்து எடுக்கப்பட்ட எனது விடுமுறை நாட்கள் முதன் முறையாக என் குடும்பவாழ்விற்கும்ää துணைவருடனான இறுக்க நிலைக்கும்ää பிள்ளைகளின் குதூகலத்திற்கும் பயன்பட்டது. சரி இனி இந்தப்பயணமும் எனது அனுபவங்களுமாக…..

முதலில் மொட்டையாக இந்தப்பயணம் இன்ன இடத்திற்கு என்று எனக்குத் தெரியாத ஒரு நேரம்

“அப்பா….நேய்!” இது நான்

“ம்” இது எனது துணைவர்.

“எனக்கு ஒண்டுமே சொல்ல மாட்டீங்களாம்”

“ம்”

“சொல்லுங்கோப்பா”

“ம்”

“அநேய் ஏனன எல்லாத்திற்கும் “ம்…ம்” எண்டுறியள்?

“ம்”

எனக்கு வந்த கோபத்திற்கு இந்தாளுக்கு உச்சந்தலையில் ஓங்கி “நச்”சென்று குட்டலாமா என்று தோன்றியது. அடக்கிக் கொண்டேன்.

“அப்பேய்;” (கவனிக்கவும் அப்பா…. அப்பேயாக மாறிட்டார்)

“ம்”

கடவுளே… கோயில் மாடு தலையைத் தலையை ஆட்டுற மாதிரி வீட்டு மனுசன் “ம்…ம்” எண்டுறாரே… “ஒழுங்கா கதையுங்கோப்பா”

“சரியடி என்ன?” (குரலில் அலுப்பு கறுமம் பிடிச்சவள் நிம்மதியா பியரைக் குடிக்க விடுறாள் இல்லை என்று நினைச்சிருப்பார்போல..)

அதானப்பா வக்கேசனுக்கு எங்க போகப்போறியள்?

“எங்கேயோ கூட்டிப்போவன்தானே”

“அது தெரியும் எங்க எண்டெல்லோ கேட்கிறன். (எனது குரல் பொறுமையிழப்பதை என்னால் உணரமுடிந்தது.)

“உனக்குச் சொன்னால் நீ முதலிலேயே குழப்பிப் போடுவே…”

“இல்லையப்பா நின் குழப்பேல்ல சொல்லுங்கோவன்”

“உனக்குத் தெரியோணுமோ சண்னனிடம்(இளையமகன்) கேள்”

வாசலில் கிடந்த பழைய செருப்பால எனக்கு நானே அடித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

“அப்ப நீங்கள் இந்த பியரையும் சிகரெட்டையும் கட்டிக் கொண்டு கிடவுங்கோ” என்றபடி சின்ன மகனிடம் கேள்விகளைத் தொடுத்தேன். அவனிடம் கிடைத்த தகவலின்படி அப்பா விமானப்பற்றுச்சீட்டுக்கள் பதிவு செய்யும் ஒரு அலுவலகத்தில் கிரடிட் கார்ட்டைக் கொடுத்து காசோலையில் கையெழுத்திட்டது என்பது மாத்திரமே…

துணைவருக்கு ஒருவகையான கவலை இருந்தது முன்பு ஒருதடவை அவர் கியூபாவிற்கு அழைத்துச் செல்ல அவர் போட்ட திட்டத்தையெல்லாம் கடைசி நிமிடத்தில் உடைத்து தாயகத்திற்கு அழைத்துச் சென்றேன் அதன்பாதிப்பில் இருந்து அவர் விடுபடாததால் இங்கு செல்லப் போகிறோம் என்பதை என்னிடம் மறைத்தார். அத்தோடு நான் இந்தியா செல்வதற்காகவே இந்த விடுமுறையை வேலையிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டதும் அவருக்கு நன்கு தெரியும். எங்கே கடைசி நிமிடத்தில் தன்னுடைய திட்டத்தை தவிடு பொடியாக்கிவிடுவேனோ என்ற எண்ணம் அவரிடம் குடிகொண்டிருந்ததை என்னால் அறியக்கூடியதாக இருந்தது. என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது பொதுவிடயங்களில் ஏற்படும் வலிகளை மறந்தும் துணைவரிடம் பகிர்ந்து கொள்வதில்லை காரணம் அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது மட்டுமல்ல தொடர்ந்தும் நான் பொதுப்பணிகளில் ஈடுபடுவதை விரும்பமாட்டார் என்பதும்தான். ஆதலால் பிரச்சனைகள் வலிகளை என்னோடு மட்டுப்படுத்திவிடுவேன். அவற்றின் பாதிப்பை குடும்பத்திற்குள் நுழைய விடுவதில்லை அதன் காரணமாக என்னுடைய நிலைவரத்தை அவர் அறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. இதனை அவர் அறியாததால் அவருக்குள் அச்சம் ஏற்பட்டிருந்ததைத் தவிர்க்கமுடியவில்லை. அது அனாவசியமானது என்பது எனக்குப் புரிந்தது.

என்னதான் இரகசியமாக வைத்திருந்தாலும் துணைவரின் கூகுள் தேடல் அவர் எங்கே செல்ல ஆயத்தப்படுகிறார் என்பதை எனக்கு காட்டிக்கொடுத்துவிட்டது. இருந்தாலும் நானும் தெரியாததுபோல் நடிக்க ஆரம்பித்தேன். எதுவரைக்கும் இவர்கள் என்னிடத்தில் மறைப்பார்கள்? நான் ஆர்வப்படாமல் அசட்டையாக இருக்க ஆரம்பித்தேன். அவரால் எனது புறக்கணிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடகடவென்று ஒரே மூச்சில் “புன்ரக்கானா” என்ற கடல் சார்ந்த ஒரு பிரதேசத்திற்கு பயணப்படுவதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதாக ஒப்புவித்தார்….. (அடுத்த வாரம் தொடரும்)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனோய் :lol: எப்பனை அடுத்த பகுதி வரும். :lol:

ஏனப்பு சாத்திரி அடுத்த வாரம் என்று போட்டிருக்குப் பார்க்கவில்லையா?

இது என்ன மொழி :(:wub: நான் எனக்குதான் பிரச்னை எண்டு யோசித்தன் ,எனக்கு முதலே இரண்டுபேர் சிக்கிட்டினம் :lol:

நிர்வாகம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும் ...இதிலிருந்து என்ன தெரியுதென்றால் நான் கனநாளாக ஒரு பதிவையும் எழுதிப் போடேல்லை என்று தெரியுது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப் பிழை இல்லை அக்கா ஒன்றுமே வாசிக்க முடியாமல் இருந்தது...நுனாவிலான் மூலம் தான் வாசிக்க கூடியதாக இருக்கிறது...நன்றி நுணா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனப்பு சாத்திரி அடுத்த வாரம் என்று போட்டிருக்குப் பார்க்கவில்லையா?

என்னனை அதுவா அர்த்தம்? இது வார இறுதிநாள் நாளை ஞாயிறு அதுக்கு பிறகு அடுத்த வாரம் தொடரும் ...அம்மாவானை அதைத்தான் எழுதியிருக்கிறீங்களாக்கும் எண்டு நினைச்சிட்டன். :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் சரியான வம்புகளா இருக்கீங்கப்பா.....சரி சரி இப்ப நுணாவின் புண்ணியத்தில எல்லாரும் வாசிச்சீட்டீங்கள்தானே... அடுத்த வாரம் நேரடியாக யுனிக்கோட்டில் எழுதுகிறேன் சரியா... :lol: :lol: :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆனைக்கும்

அடி சறுக்கும் ஆத்தா

சும்மாவே மெல்லுவம்

அவ(ள்)ல் கிடைத்தால்.....?? :lol::D :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனைக்கும்

அடி சறுக்கும் ஆத்தா

சும்மாவே மெல்லுவம்

அவ(ள்)ல் கிடைத்தால்.....?? :lol::D :D

இப்பத்தான் விளங்குது அடி சறுக்கின யானையில ஏறி நின்று சறுக்கி விளையாட கனபேர் வரிசையில நிற்கிறீர்கள் என்று..... :lol: :lol: :icon_mrgreen:

Link to post
Share on other sites

சரி.. சரி.. ஒருவழியா தொடங்கீட்டீங்கள்..! :D நீங்களாவது பயணத்தொடரை முடிப்பீர்கள் எனும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்..! :icon_mrgreen:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா ஆர்வத்துடன் அடுத்தபாகத்திற்காக உங்கள் வாசகர்களில் ஒருவன்... :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி.. சரி.. ஒருவழிதா தொடங்கீட்டீங்கள்..! :D நீங்களாவது பயணத்தொடரை முடிப்பீர்கள் எனும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்..! :icon_mrgreen:

இசை என்னுடைய திரியின் ஆரம்பத் தலைப்பே "பயணங்கள் முடிவதில்லை" என்று போட்டிருக்கு கவனியுங்கள் :D :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுவரை இந்தப்பாடலைக் கேட்டுக்கொள்ளுங்கள்...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சுப்பு,

பாடலுக்கும் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பிற்கும்.....

கூடுமானவரை ஒரு வார இடைவெளி விடாமல் முன்னராக நேரங்கிடைக்கும்போது தொடரை இணைத்து முடிவுக்குக் கொண்டுவந்துவிடுகிறேன்... இல்லையென்றால் எனக்கும் "பிளேடு" அல்லது 'சுயிங்கம்" என்று பட்டம் தந்துவிடுவீங்கப்பா..... :icon_mrgreen: :icon_mrgreen:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பயணங்கள் தொடரவேண்டும்...........மிக்க மகிழ்ச்சி [/size]

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங்கொக்கா மக்கா தொடங்கி கொஞ்ச நேரத்திலையோ இத்தனை பார்வை இத்தனை பதில் சகாராவிற்கு இன்னும் யாழில் மார் கட்டு (marcket )குலையவில்லையெண்டு தெரியிது வழைமையான படிகிடிதான் கோவிக்க கூடாது என்னனை :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை தொடருங்கள்!

மனுசனைக் கொஞ்ச நேரம் ஆறுதலா, இருக்க விடுங்கோவன்!

எங்கள் வீட்டில், முடிவுகள் எடுக்கப் பட்ட பின்பு, மரியாதைக்காக எனது அபிப்பிராயம் கேட்கப் படும்!

அவ்வளவு தான்!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூன்று வித மாவில் பாரம்பரிய புட்டு  
    • நித்திய வாழ்வினில் நித்திரை  நெருப்போடு என்னடா விளையாட்டு   ஒரு கூட்டு கிளியாக ஆணையிறவுக்கு சேலைகள் கட்டி  
    • இன்று கரையைக் கடக்கிறது ’நிவர்’ புயல்; தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்   சென்னை,   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 21-ந் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது.  இந்த புயலுக்கு ஏற்கனவே ‘நிவர்’ என்று வானிலை ஆய்வு மையம் பெயர் சூட்டிவிட்டது.     நிவர் புயலின் தாக்கம் காரணமாக  சென்னையில் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கின. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் புற நகர் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.    ‘நிவர்’ புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை பாரிமுனையில் என்.எஸ்.சி.போஸ் சாலை மற்றும் எசுபிளனேடு சாலை சந்திக்கும் பகுதி முழுவதும் (குறளகம் அருகில்) மழைநீர் வெள்ளமென சூழ்ந்திருப்பதையும், அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதையும் படத்தில் காணலாம்.     இன்று கரையைக் கடக்கிறது நிவர் புயல்   நிவர் புயல், தீவிர புயலாக அதனையடுத்து அதி தீவிர புயலாகவும் மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது எந்தெந்த பகுதிகளில் பலத்த காற்று எவ்வளவு வேகத்தில் வீசும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.   அதன்படி, இன்று திருவாரூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மணிக்கு 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். அதேபோல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இந்த காற்று இன்று காலை முதல் இரவு வரை நீடிக்கும். இதுதவிர கடலும் இரவு வரை கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலை இயல்பைவிட 2 மீட்டர் உயரம் வரை சீற்றத்துடன்  இருக்கும்   நிவர் புயலையொட்டி, தமிழகத்தில் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்களை கண்காணிக்கும் பணியினையும், பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் பணிகளையும் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிர்வாக கமிஷனர் பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகள் குழுவினர் முகாமிட்டு இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.   புயல் வருகிறபோது மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  தமிழகத்தில்  இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வழக்கம்போல பணிபுரிவார்கள்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/25004649/Heavy-rains-lash-Chennai-as-Tamil-Nadu-braces-for.vpf   ’நிவர் புயல்’ தீவிர புயலாக மாறியது: இந்திய வானிலை ஆய்வு மையம்   நிவர் புயல், தீவிர புயலாக அதனையடுத்து அதி தீவிர புயலாகவும் மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது.    இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:  நிவர் புயல் தீவிர புயலாக மாறியது.  நவம்பர்  24 ஆம் தேதி 11.30 மணி நிலவரப்படி கடலூருக்கு 310 கி.மீட்டர் தொலைவில் புயல் உள்ளது. இந்த புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது” என்று  தெரிவித்துள்ளது.     https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/25042833/CycloneNivar-intensified-into-Severe-Cyclonic-Storm.vpf
    • பெண் ஊழியரை தாக்கிய மேலதிகாரி! அரச அலுவலகமொன்றில் பணி புரியும் பெண் ஊழியர் மீது உயர் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் இடம்பெற்ற அலுவலகம் எது, அங்குள்ளது என்பது தொடர்பிலான உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் குறித்த சம்பவம் கம்பஹா – உடுகம்பொல பகுதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடந்த 23ம் திகதி இடம்பெற்றதாக சமூக வலைதள தகவல்கள் தெரிவிக்கின்றன. https://newuthayan.com/பெண்-ஊழியரை-தாக்கிய-மேலத/  
    • கூர்மை அடையும் காணிப் பிரச்சினைகள் -மொஹமட் பாதுஷா   உலக சரித்திரத்தில் நிலம் சார்ந்த போராட்டங்களுக்கு முக்கியமான இடம் இருக்கின்றது. நில ஆக்கிரமிப்புக்கான இராணுவ, இராஜதந்திர நகர்வுகளும் நிலமீட்புக்கான போராட்டங்களும், யுத்தங்களில் முடிந்ததை நாம் அறிவோம்.    இலங்கையில், சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறுபட்ட காணிப் பிரச்சினைகளை, நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றன. இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, காணிகள் இல்லை என்பது ஒருபுறமிருக்க, சிறுபான்மை இனத்தவர்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்சக் காணிகளையும் கையகப்படுத்துவதற்கும்  ஆக்கிரமிப்பதற்கும், பல்வேறு சூட்சும திட்டங்கள் நடைமுறையில் இருப்பதையும் காணமுடிகிறது. இதனால், காணிகள் தொடர்பான பிரச்சினைகள் கூர்மையடைகின்றன.    வடக்கு, கிழக்கில் மாத்திரம் குறிப்பாக, முஸ்லிம்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் தொடர்பான உரிமைசார் பிரச்சினைகள் இருக்கின்றன. தென்னிலங்கையில் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்றாற்போல், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் காணிகளை வழங்கும் பொறிமுறையொன்று இல்லை.   வடக்கு, கிழக்கில் இருக்கின்ற பெரும்பாலான காணிகள், வனவளம், தொல்பொருள் வலயம், முகாம் என்ற போர்வையில் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. புதிய குடியேற்றத் திட்டங்கள், பயிர்ச் செய்கைத் திட்டங்கள், பௌத்த விகாரைகள் விஸ்தரிப்பு போன்ற தோரணையில் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. இன்னும் பல திட்டங்களை, பெருந்தேசியம் கையில் வைத்திருக்கின்றது என்பதற்கு, நிறையவே அத்தாட்சிகள் உள்ளன.    தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிட்டத்தட்ட சரிசமமான காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன. இருப்பினும், சனத்தொகை பரம்பல் அதிகமான முஸ்லிம்களே, காணிப்பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.   ஆனால், தமிழர்கள் காணி உரிமைக்காகப் போராடி, அதன்மூலம் சொற்ப அளவான காணிகளையாவது அவ்வப்போது மீட்டெடுத்து இருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் சமூகம் இதுபற்றித் தீவிரமாக இன்னும் பேசக் கூடத் தொடங்கவில்லை.    இது குறித்து, எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிக்கும் அக்கறையில்லை. முஸ்லிம் மக்களும், ‘விலையை அதிகமாகக் கொடுத்தாவது, எமது வீட்டுக்கு அருகில் காணியொன்றை பெறலாம்’ என்று நினைக்கின்றார்களே தவிர, ஒரு சமூகமாகக் காணி உரிமையை உறுதி செய்வதற்கான எவ்விதமான திட்டங்களும் முஸ்லிம்களிடம் இல்லை. அதேநேரம், தமக்குரித்தான காணிகளை மீட்பதற்காகப் போராடும் காணி உரிமையாளர்களின் போராட்டங்களையும் அவர்களுக்குத் துணைநிற்கும் அமைப்புகளின் செயற்பாடுகளையும்,  திட்டமிட்டு மழுங்கடிப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.    தமிழ் மக்களது காணிப் பிரச்சினைகளில் கணிசமானவை, நேரடியாக அரச கட்டமைப்புகளுடன் தொடர்புட்டவை எனலாம். இராணுவத் தேவைகள், வீட்டுத்திட்டங்கள், அகழ்வாராய்ச்சி போன்ற அடிப்படைகளில், தமிழர்களின் நிறையக் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தொல்பொருள் வலயம், பௌத்த விகாரைகள் அமைத்தல், பயிர்ச்செய்கை உள்ளிட்ட பல காரணங்களால் காணிகள் பறிபோகும் நிலைமை இப்போதும் உள்ளது.    ஏற்கெனவே காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளுடன், அண்மைக் காலத்தில் மண்டைதீவு, திருமலை மாவட்டத்தில் பல இடங்கள் எனக் காணிகள் காவுகொள்ளப்படுகின்றன. அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான மாதவணை, மயிலத்தமடு ஆகிய இடங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில், சிங்கள மக்கள் வந்து அத்துமீறிக் குடியேறுவது, பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.    இதை இப்படியே விட்டால், காணிகளை இழக்க வேண்டி ஏற்படும் என்ற அடிப்படையில், தமிழர்கள் இதற்கெதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இதைச் சமாளிப்பதற்கும் சிங்கள மக்களின் நலன்களில் கீறல் விழாமல் பார்ப்பதற்கும் பகீரதப் பிரயத்தனங்கள் எடுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு, இராஜாங்க அமைச்சொன்றை மேலதிகமாக வழங்கியமை, இதில் ஓர் அங்கமாக இருக்கலாம் என்ற கணிப்பொன்றும் இருக்கின்றது.    முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள், கண்டுகொள்ளப்படாத பிரச்சினைகளாகத் தொடர்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், முஸ்லிம் சிவில் சமூகத்தின் பலவீனமும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ‘நக்குண்டு நாவிழக்கும்’ அரசியல் நகர்வுகளும் என்பதைக் குறிப்பிடாமல் விட முடியாது.    வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட காணிப் பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன. இவற்றுக்கு 30 வருடங்களாகத் தீர்வு காணப்படவில்லை; முழுமையான மீள்குடியேற்றமும் நிறைவு செய்யப்படவில்லை.   இலங்கையில், சிங்கள மக்களின் குடியேற்றங்களுக்காகவும் அபிவிருத்திக்காகவும், இயற்கை வளங்கள் எத்தனையோ அழிக்கப்பட்டதெல்லாம் மறந்து, முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்காக, கல்லாறில் காடுகள் அழிக்கப்பட்டமை, தூக்கிப் பிடிக்கப்படுகின்ற அபூர்வங்களையும் காண்கின்றோம்.    கிழக்கில், மிகவும் சிக்கல் வாய்ந்த காணிப் பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர். வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் காப்பு, இராணுவ முகாம் அமைத்தல், தொல்பொருள் மய்யங்கள், புனித வலய பிரகடனம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன; செய்யப்பட்டும் வருகின்றன.    சுருங்கக் கூறின், கிழக்கில் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்தின் அரைவாசி அளவுக்குக் கூட, காணி உரித்துக் கிடையாது என்பது, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள உண்மையாகும்.    அம்பாறை மாவட்டத்தில், வட்டமடு, வேகமாகம், கிரான்கோவை, கிரான்கோமாரி. ஒலுவில், அஷ்ரப் நகர், பொன்னன்வெளி, கீத்துப்பத்து பாவாபுரம், அம்பலம் ஓயா, ஹிங்குராணை ஆகிய இடங்களில், நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன.    கல்லோயாத் திட்டம் போன்ற திட்டங்களின் பின்னர், தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களுக்கு, முஸ்லிம்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த காணிகளில் ஒரு பகுதி பகிர்ந்தளிக்கப்பட்டதால் முஸ்லிம்கள் காணிகளை இழந்தனர். இதில் அஷ்ரப் நகர், அம்பலம்ஓயா, கீத்துப்பத்து, பொத்துவில், கிரான்கோவை, கிரான்கோமாரி, வட்டமடு உள்ளிட்ட காணிப்பிரச்சினைகளில், எவ்வித முன்னேற்றமும் இல்லை.    ஆனால், பொத்துவில் முஹூது மகாவிகாரையைச் சுற்றி, முஸ்லிம்கள் குடியேறிய விடயம் மட்டும் ஓர் அத்துமீறலாகப் பார்க்கப்படுவதுடன், அதன் ஊடாகக் காணிகளைக் கையகப்படுத்தலுக்கான நகர்வுகள் கனகச்சிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.    மட்டக்களப்பு மாவட்டத்தில், முஸ்லிம்கள் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதிக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். வாகரை, கள்ளிச்சை, புணானை மேற்கு, வாகனேரி, காரமுனை உள்ளடங்கலாக முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிப் பிரச்சினைகள், இன்னும் தீர்க்கப்படாதவையாக இருக்கின்றன.    திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, பதவிசிறிபுர, குச்சவெளி, மூதூர் உள்ளிட்ட முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் காணிப்பற்றாக்குறை காணப்படுவதுடன், இம்மாவட்டத்தில் முஸ்லிம்களின் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் காணிகள், இன்று உரிமை கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றன.    இவ்வாறிருக்க, அண்மைக்காலமாக சற்று வித்தியாசமான சூட்சுமங்களின் ஊடாகக் காணிகளைக் கையகப்படுத்தும், ஆக்கிரமிக்கும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருமலையில் பல பிரதேசங்களில், 300 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள், அப்பகுதியிலுள்ள விகாரைகளுக்குச் சொந்தமானவை என்று, தொல்பொருள் திணைக்களம் பிரகடனப்படுத்தி வருவதையும் அறியமுடிகிறது.     இதேவேளை, ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வழங்கும் திட்டம், சிறப்பானது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதைச் சிங்கள மக்கள் சிறப்பாகப் பயன்படுத்துவர்; தமிழர்களும் மிகக் கவனமாகக் கையாள்வர்.  ஆனால், முஸ்லிம்கள், கொஞ்சம் தொலைவு என்றால்க் கூட, பயணம் செய்து பயிர்ச்செய்கையை மேற்கொள்வதில் ஆர்வம் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.  இதுவும் கூட, நீண்டகாலத்தின் பின்னர், சிங்கள மக்களின் காணி உரிமைகள் அதிகரிக்கவே வழிவகுக்கும்.    இவ்வாறு, நாடெங்கும் சிறுபான்மைச் சமூகங்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. ஆயினும், இவற்றையெல்லாம் தீர்ப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த ஆட்சியாளர்கள் யாரும், ஒரு முறைமைப்படுத்தப்பட்ட பொறிமுறையை உருவாக்கவில்லை.  கிழக்கில் தொல்பொருள்களை அடையாளம் காண்பதற்காக, சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் ஒரு முஸ்லிமோ, தமிழரோ உள்ளடக்கப்படாமை பெரும் பாரபட்சமாகும்.    எனவே, வடக்கு, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் உள்ள சிறுபான்மைச் சமூகங்களின் காணிப் பிரச்சினைகளுக்காக தமிழ், முஸ்லிம் தலைமைகள் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அத்துடன், இராணுவ முகாம் அமைப்பதோ, குடியேற்றத் திட்டத்தைக் கொண்டு வருவதோ, தொல்பொருள்களைப் பாதுகாப்பதோ தவறில்லை.  ஆனால், அது ஓரவஞ்சனையான முறையிலோ, சிறுபான்மைச் சமூகங்களின் காணிகளை அபகரிக்கும் உள்நோக்கிலோ நடைமுறைப்படுத்தப்பட்டு, பிரச்சினைகள் கூர்மையடைவதை அரசாங்கமே, பொறுப்புடன் தடுத்து நிறுத்த வேண்டும்.      http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கூர்மை-அடையும்-காணிப்-பிரச்சினைகள்/91-259672
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.