Jump to content

பயணங்கள் முடிவதில்லை :)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பயணக்கட்டுரைக்கு ...அடுத்த பயணக்கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சகாரா

 

நான் கொஞ்சம் பயந்து விட்டேன் :(

 

இவர் எது எதுக்கு பயப்பிடுகிறார் என்றே தெரியேல்லையே :huh:

இறுதிப்பாகத்தை எழுதி யாழில் போடாமல் வாந்தியத் தேவனிற்கு அனுப்பிய சகாராவை கண்டிக்கிறேன் :lol: :lol:

 

வாந்தியத் தேவனா அதாரு? :lol:

 

சாத்திரியாரின் கதையைக் கேட்டு யாரும் சந்தேகப்படவேண்டாம்  வாந்தியத்தேவன் என்று இந்தக்களத்தில் யாரும் இல்லை :huh:

 

ஒரு வேளை வந்தியத்தேவன் என்றால்... அந்தாள்தான் வந்து விளக்கம் கொடுக்கவேண்டும் <_<

Link to comment
Share on other sites

இவர் எது எதுக்கு பயப்பிடுகிறார் என்றே தெரியேல்லையே :huh:

 

வாந்தியத் தேவனா அதாரு? :lol:

 

சாத்திரியாரின் கதையைக் கேட்டு யாரும் சந்தேகப்படவேண்டாம்  வாந்தியத்தேவன் என்று இந்தக்களத்தில் யாரும் இல்லை :huh:

 

ஒரு வேளை வந்தியத்தேவன் என்றால்... அந்தாள்தான் வந்து விளக்கம் கொடுக்கவேண்டும் <_<

 

வா...என்று ஒரு காலைத்தானே  போட்டேன்... கால் படக்கூடாத  இடத்தில் பட்டு விட்டதோ? சரி காலை எடுத்து விடுகிறேன் சகாரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா...என்று ஒரு காலைத்தானே  போட்டேன்... கால் படக்கூடாத  இடத்தில் பட்டு விட்டதோ? சரி காலை எடுத்து விடுகிறேன் சகாரா

 

உண்மையைச் சொன்னால், சாத்திரியாரின் புலநாயில், இவ்வளவு நாளும் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை! அவுசுக்கு வந்தால், நலமடிக்கிற திட்டம் கூட இருந்தது. :D

 

ஆனால், இப்ப, புலநாய் விசயகாரன் போலத்தான் கிடக்குது! :o  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பயணக்கட்டுரை


 

வாழ்த்துகள் சகோதரி சகாறா


 

எல்லோராலும் இப்படி எழுதமுடியாது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியை நானும் என்னவோ நினைச்சன். சரிசரி இன்னொரு தேவன் வருவார் பயம் வேண்டாம். :lol: :lol: :lol: :lol:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயணக் கட்டுரை சகாரா அக்கா.... 2 முறை போய் இருந்தாலும், உங்களைப் போல வெளியே அவ்வளவாக செல்லாததனால் (றிசோட் இலேயே இருந்து விட்டோம்) வாசிக்க சுவாரசியமாக இருந்தது.  தெரிந்த விடயங்களையும் உங்கள் எழுத்தினூடாக பார்க்க நன்றாக இருந்தது.

நானும் 2 போத்தல் மம்மாகுவா வாங்கி வந்து... இன்னுமே தேனும் றம்மும் கலந்து ஊறவிடாமல் 7 வருடமாக பேஸ்மன்ற் இல் இருக்கிறது. :(  இதுக்கு அவர்களே கலந்து ஊறவிட்டு விக்கிற போத்திலை வாங்கியிருக்கலாம்.  முதல் முறை ஆர்வகோளாறில் வாங்கிய அனுபவத்தில் 2ம் முறை சென்ற போது வாங்கவில்லை.  கடைகளுக்கு போகும் போது அவர்கள் சுவை பார்க்க தந்ததை சுவைத்ததோடு சரி...;)

 

அவ்விடத்திற்கு சென்று வந்தும் எழுத்தினூடாக இரசிக்க முடிந்ததென்றால் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. எதற்கும் உக்கி உளுத்து விட்டதா என்று எடுத்துப் பாருங்கள் சபேசு. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா...என்று ஒரு காலைத்தானே  போட்டேன்... கால் படக்கூடாத  இடத்தில் பட்டு விட்டதோ? சரி காலை எடுத்து விடுகிறேன் சகாரா

 

அய்யோ அய்யோ அய்யோ....

 

உண்மையைச் சொன்னால், சாத்திரியாரின் புலநாயில், இவ்வளவு நாளும் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை! அவுசுக்கு வந்தால், நலமடிக்கிற திட்டம் கூட இருந்தது. :D

 

ஆனால், இப்ப, புலநாய் விசயகாரன் போலத்தான் கிடக்குது! :o  

 

சொல்லிக் கொண்டிருக்காதேங்கோ ..... போட்ட திட்டத்தை புலநாய் எங்கு நிற்குதெண்டு போய் நிறைவேற்றுங்கள் அவுசு வருமட்டும்  காத்திருக்கவேண்டாம்....எவ்வளவு பணம் வேணுமென்றாலும் நான் தாறன் :lol::D

Link to comment
Share on other sites

உங்களுடன் சேர்ந்து நாங்களும் அனுபவித்தோம்.. அந்த  மூலிகை போத்தல் தான் மிஸ்ஸிங்.. கைவசம் எக்ஸ்ரா இருந்தால் ...ஒன்று பிளீஸ்.. :D :D

Link to comment
Share on other sites

இறுதிப்பாகத்தை எழுதி யாழில் போடாமல் வாந்தியத் தேவனிற்கு அனுப்பிய சகாராவை கண்டிக்கிறேன் :lol: :lol:

 

 

சாத்திரி யாழில் பல திரிகளை பார்ப்பதில்லை போல :lol: :lol:

 

சகாறா, நல்ல பதிவு. அங்கு போக வேண்டுமென்றா ஆவலை தூண்டிவிட்டுள்ளீர்கள், பார்ப்பம். 

 

நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • 11 months later...

மன்னிக்கவும்.. ஓரிரு பகுதிகளுக்கு பிறகு இந்தத் தொடர் எனது கண்ணில் தென்படவில்லை.. வாசித்துவிட்டு கருத்து எழுதுகிறேன். நன்றி!!  :)

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 20/01/2013 at 0:04 AM, வந்தியதேவன் said:

பயணங்கள் முடிவதில்லை – 12

 

அப்பணிப்பெண் என் கண்களில் தடுமாற்றத்தையும் கலவரத்தையும் கவனித்திருப்பாள்போல்… ஒரு வில்லத்தனமான தந்திரம் மிக்கச் சிரிப்புடன் ஒரு கிளாசில் அவள் ஏதோ தேன் கலந்த ஒரு மதுபானத்தை ஊற்றி வெறுமனே தந்தாள்… எடுத்த காவடியை ஆடித்தானே இறக்கவேண்டும்….. அவளிடம் தோல்வியைத் தழுவ மனம் இடங்கொடுக்கவில்லை. அவள் தந்ததை அப்படியே வாங்கி ஏற்கனவே மதுவில் பரிச்சயம் உள்ளவள்போல் காட்டிக் கொண்டு ஒரே கவிழ்ப்பில் வாய்க்குள் நிறைத்துக் கொண்டேன். வாய்க்குள் நிறைந்த மது தனது வேலையை உடனேயே காட்ட ஆரம்பித்தது. வாய்க்குள் நிறைந்த மதுவின் ஒரு வித காரமான நெடி நாசியூடாக மண்டைப்பரப்பை வேகமாக ஆக்கிரமித்து புகைச்சலை உருவாக்கியது. அடிவயிற்றிலிருந்து குமட்டல் எழுந்து அவதிப்படுத்திக் கொண்டிருக்க பணிப்பெண் என்னை மிகவும் இரசிப்பது தெரிந்தது. சே வீம்புக்கு தேவையில்லா சிக்கலில் மாட்டிக் கொண்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டு ஒரே மடக்கில் கச்சல் வேப்பெண்ணெயை விழுங்குவதுபோல் விழுங்கித் தள்ள மண்டைப் புகைச்சலும், வயிற்றிலிருந்து எழுந்த குமட்டலும் உள்ளே போன மதுவை அதைவிட வேகமாக வெளியே அனுப்பி வைத்தது.

 

சிதறி விழுந்த மதுவை மொப் தடியை எடுத்து சுத்தஞ்செய்து கொண்டே உனக்குப் பழக்கமில்லையா என்று கேட்டாள் பணிப்பெண்……. இப்போது தன்னும் உண்மையை ஒத்துக் கொள்ளலாம்தானே.. ஊகூம் இவளிடம் எப்படி?... அப்போதுதான் ஞாபகம் வந்தது எல்லோருமே மதுபானத்தில் சோடா அல்லது பனிக்கட்டி இல்லது தண்ணீர் கலந்தல்லவா அருந்துவார்கள். நான் அப்படியே வாயில் கொட்டியதால்தான் இப்படியாகி இருக்கவேண்டும்…… கைகொடுத்த ஞாபகத்தை உபயோகித்து நீ எனக்கு சோடா கலக்காமல் தந்துவிட்டாய் அதனால்தான் இப்படி என்று விட்டு இப்போது எனக்கு சுவை பார்க்கத் தந்ததை எனக்கு விட்டுத் தா நான் அறைக்குச் செல்கிறேன் என்று வாங்கிக் கொண்டேன்.

 

வாயில் ஏற்கனவே கொப்பளித்த மதுவின் நெடி அந்தரத்தில் நடப்பதுபோன்ற பிரமையை உண்டாக்கியது. தங்கியிருக்கும் அறைக்கு வருவதற்குள் வியர்த்து விறுவிறுத்து விட்டது. கொண்டு வந்த பானத்தை துணைவர் கையில் கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டேன். நான் சொன்னதை விட்டுட்டு நீ எதை எடுத்து வந்தாய் என்று வீட்டுக்காரன் கேட்டது காதில் விழுந்தது.. இவரைப் படிப்பிக்க வேண்டும் என்று கருவிக் கொண்டு அது மிகவும் உசத்தியானது என்று ஆண்களுக்கு நல்லது என்று பணிப்பெண் சொன்னாள் அதுதான் இதனை வாங்கி வந்தேன் என்று  விட்டு காத்திருந்தேன். ஐயா அருந்தும் வரை அவ்விடத்தை விட்டகலாமல் சாய்ந்திருந்தேன். ஒரு வாய் அருந்தியவர் உடனேயே துப்பிவிட்டார் என்னடி தேனை வாங்கி வந்திருக்கிறாய் என்று கேட்டு விட்டு அப்படியே கொண்டுபோய் சிங்கிற்குள் ஊற்றிவிட்டு வந்தார். அட தேனையா நான் சுவைபார்த்துவிட்டு இப்படி கிறங்கிப்போய் இருக்கிறேன்??????

 

 

070819_honeywine.jpg

 

 

உங்கள் பயணக் கட்டுரை நன்றாக இருக்கிறது வந்தியத் தேவன்.

On 24/01/2013 at 7:29 PM, வல்வை சகாறா said:

பயணங்கள் முடிவதில்லை – 12

 

அப்பணிப்பெண் என் கண்களில் தடுமாற்றத்தையும் கலவரத்தையும் கவனித்திருப்பாள்போல்… ஒரு வில்லத்தனமான தந்திரம் மிக்கச் சிரிப்புடன் ஒரு கிளாசில் அவள் ஏதோ தேன் கலந்த ஒரு மதுபானத்தை ஊற்றி வெறுமனே தந்தாள்… எடுத்த காவடியை ஆடித்தானே இறக்கவேண்டும்….. அவளிடம் தோல்வியைத் தழுவ மனம் இடங்கொடுக்கவில்லை. அவள் தந்த்தை அப்படியே வாங்கி ஏற்கனவே மதுவில் பரிச்சயம் உள்ளவள்போல் காட்டிக் கொண்டு ஒரே கவிழ்ப்பில் வாய்க்குள் நிறைத்துக் கொண்டேன். வாய்க்குள் நிறைந்த மது தனது வேலையை உடனேயே காட்ட ஆரம்பித்தது. வாய்க்குள் நிறைந்த மதுவின் ஒரு வித காரமான நெடி நாசி யூடாக மண்டைப்பரப்பை வேகமாக ஆக்கிரமித்து புகைச்சலை உருவாக்கியது. அடிவயிற்றிலிருந்து குமட்டல் எழுந்து அவதிப்படுத்திக் கொண்டிருக்க பணிப்பெண் என்னை மிகவும் இரசிப்பது தெரிந்தது. சே வீம்புக்கு தேவையில்லா சிக்கலில் மாட்டிக் கொண்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டு ஒரே மடக்கில் கச்சல் வேப்பெண்ணெயை விழுங்குவதுபோல் விழுங்கித் தள்ள மண்டைப் புகைச்சலும், வயிற்றிலிருந்து எழுந்த குமட்டலும் உள்ளே போன மதுவை அதைவிட வேகமாக வெளியே அனுப்பி வைத்த்து. சிதறி விழுந்த மதுவை மொப் தடியை எடுத்து சுத்தஞ்செய்து கொண்டே உனக்குப் பழக்கமில்லையா என்று கேட்டாள் பணிப்பெண்……. இப்போது தன்னும் உண்மையை ஒத்துக் கொள்ளலாம்தானே.. ஊகூம் இவளிடம் எப்படி?... அப்போதுதான் ஞாபகம் வந்த்து எல்லோருமே மதுபானத்தில் சோடா அல்லது பனிக்கட்டி இல்லது தண்ணீர் கலந்தல்லவா அருந்துவார்கள். நான் அப்படியே வாயில் கொட்டியதால்தான் இப்படியாகி இருக்கவேண்டும்…… கைகொடுத்த ஞாபகத்தை உபயோகித்து நீ எனக்கு சோடா கலக்காமல் தந்துவிட்டாய் அதனால்தான் இப்படி என்று விட்டு இப்போது எனக்கு சுவை பார்க்கத் தந்ததை எனக்கு விட்டுத் தா நான் அறைக்குச் செல்கிறேன் என்று வாங்கிக் கொண்டேன்.

வாயில் ஏற்கனவே கொப்பளித்த மதுவின் நெடி அந்தரத்தில் நடப்பதுபோன்ற பிரமையை உண்டாக்கியது. தங்கியிருக்கும் அறைக்கு வருவதற்குள் வியர்த்து விறுவிறுத்து விட்டது. கொண்டு வந்த பானத்தை துணைவர் கையில் கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டேன். நான் சொன்னதை விட்டுட்டு நீ எதை எடுத்து வந்தாய் என்று வீட்டுக்காரன் கேட்டது காதில் விழுந்தது.. இவரைப் படிப்பிக்க வேண்டும் என்று கருவிக் கொண்டு அது மிகவும் உசத்தியானது என்று ஆண்களுக்கு நல்லது என்று பணிப்பெண் சொன்னாள் அதுதான் இதனை வாங்கி வந்தேன் என்று  விட்டு காத்திருந்தேன். ஐயா அருந்து; வரை அவ்விடத்தை விட்டகலாமல் சாய்ந்திருந்தேன். ஒரு வாய் அருந்தியவர் உடனேயே துப்பிவிட்டார் என்னடி தேனை வாங்கி வந்திருக்கிறாய் என்று கேட்டு விட்டு அப்படியே கொண்டுபோய் சிங்கிற்குள் ஊற்றிவிட்டு வந்தார். அட தேனையா நான் சுவைபார்த்துவிட்டு இப்படி கிறங்கிப்போய் இருக்கிறேன்?????? எண்ணம் தந்த போதைதான் என்னை இப்படி திணற வைக்கிறதா? சட்டென்று எழுந்து கொண்டேன்…. உண்மைதான்… இருந்தாலும் மதுவின் சாரம் சிறிது தெரியத்தான் செய்த்து… இது சரிவராது போய் நல்ல தோய்ச்சல் அடித்தால்தான் பெட்டர் என்று தோன்றியது.

எந்த ஒரு நாடாக இருந்தாலும் அதற்கென்று பிரத்தியேகமாக கலைவடிவங்கள் இருக்கும் அதற்கு இவ்விடமும் விதிவிலக்கல்ல. இங்கும் ஒவ்வொரு நாளும் முன்னிரவுப்பொழுதில் அதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அரங்கங்களில் கலை நிகழ்வுகள் இடம்பெறும் இன்று மலையில் அவ்விடம் செல்வது என்று முடிவெடுத்துக் கொண்டோம். அதற்காக சில மணி நேரங்கள் இருந்தன. சரி அதற்கு முன்னர் நாம் தங்கியிருக்கும் விடுதியின் சுற்றுப்புறச்சூழலை பார்த்துவரலாம் என்று புறப்பட்டோம். வாவ் எத்தனை மயில்கள் என்ன அழகு….. கலோ ஒருத்தரும் எடக்கு முடக்காக யோசிக்கவேண்டாம்.

peacock-family.jpg

பசுமை நிறைந்த இயற்றை வனப்புப் பொருந்திய அவ்விடத்தில் மயில்கள் மனிதர்களைச் சிறிதளவும் சட்டை செய்யாமல் உலவின. வழமையாக மனிதர்களைக்கண்டால் பறவைகள் பறந்துவிடும் அல்லது விலகிவிடும் இவையோ முற்றிலும் மாறாக நம்மூர் காக்கைகள் நம்மோடு அங்கலாய்ப்பதுபோல் நாம் வாழும் தேசத்தில் புறாக்கள்  நம்மோடு மொய்ப்பதுபோல் இந்த இடத்தில் வனப்பு மிக்க மயில்களும் அவற்றின் குஞ்சுகளும் சூழ்ந்து திரிந்தன. தாயகத்தில் ஒரு காலத்தில் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது நான் இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலம் அது…., அக்காலத்தில் திருக்கேதீச்சரத்திற்கு என்னை என்னுடைய பேரன் அழைத்துச் சென்றிருந்தார். அது ஒரு சிவராத்திரி தினத்தை ஒட்டிய நாட்கள் அங்குள்ள மடத்தில் பதிவு செய்து தங்கியிருந்தவேளையில் அதிகாலையில் அகவல் ஒலியிலிருந்து இரவு உறக்கப்போகும்வரை மயில்களும் மந்திகளும் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருக்கும் பிரதேசமாக இருந்தது அத்தலம். அங்கு தங்கியிருந்து மயில்களை அருகே அவதானித்த விடயத்தை மீண்டும் பாடசாலை வந்தபோது தோழிகளிடம் கதைகதையாக சொல்லி புளகாங்கிதம் அடைந்த நாட்கள்…. எல்லாம் ஞாபகத்தில் வந்து உலாவியது. அண்மையில் அதே திருத்தலத்திற்கு பிள்ளைகளை அழைத்துச் சென்றபோது வெறுமை மட்டுமே மீந்து போயிருந்தது. மயில்கள் உறைந்த பெருமரங்கள் எதுவும் அங்கில்லை. வெறும் கானலாக, பாலாவி தேங்கிய குட்டையாக… பசுமையற்ற நிலையில் வெம்மை தின்ன அந்த நிலம் வரண்டிருந்தது. ஒவ்வொரு 200 மீட்டர் இடைவெளியில் இராணுவக்காவரண்கள் மட்டும் அந்த தருகள் அற்ற வெறுமைப்படுத்தப்பட்ட மண்ணில் முளைவிட்டிருந்தன. மன்னார் வவுனியா பாதையில் இராணுவ அரண்களைப்பார்த்த அளவுக்கு மக்களைக்காணவில்லை. இவற்றைத் தரிசித்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன இப்போது எப்படியிருக்கிறதோ????

 

எப்படித்தான் எங்கு நின்றாலும் காட்சிகளும் சிந்தனையும் அசுரவேகத்தில் அங்குதான் போய் நிற்கின்றன. மயில்களையும் அவற்றின் திமிர்த்த நடையையும், அகவலையும் மீண்டும் ஒரு முறை நெருக்கமாக நின்று இரசிக்க முடிந்தது. இங்கு இன்னுமொரு காட்சி என்னை வியப்பிற்குள்ளாக்கியது

img5930b.jpg

அசப்பில் பனையைப்போல் ஆனால் உயர்ந்து ஓங்கி வளர்வதோ அல்லது நுங்கு பனங்காய் என்பதோ இன்றி இருந்தது. உயரத்தால் உருவத்தால் எல்லாம் மிகச்சிறிய வடிவில் அழகாக இருந்தது. நம்ம சொந்தப்பிள்ளை கற்பகத்தருவின் உறவினரைப்பார்த்த மகிழ்ச்சி மனதில் தோன்றியது. இப்படியே அங்கிருந்த மரங்கள் செடிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த பறவைகள் சரணாலயம் என்பனவற்றைச் சுற்றிவிட்டு ஒரு முறை நீச்சல் தடாகத்தில் அமிழ்ந்து எழுந்து வர கலை நிகழ்வுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது. 3 மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதில் நம்மாளுக்கு உடன்பாடு இல்லை கலைகளில் ஈடுபாடில்லாத ஒருத்தியை மணந்திருந்தால் அவருக்கேற்றால்போல் இருந்திருக்கும் தப்புப்பண்ணிட்டாரே… நாங்கள் இருந்த அரங்கிற்கு அருகாமையில்தான் புன்ரக்கானாவின் மிகப்பெரிய கசினோ அமைந்திருந்தது. அதனைத் தரிசிக்கும் ஆவல் அங்கு வந்த நாளிலிருந்து அவருடைய மனதில் ஓடிக்கொண்டே இருந்தது என்று நான் இப்போது சொல்லத்தேவையில்லை முன்னர் நான் எழுதியவற்றிலிருந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

grand_palladium_palace_resort_and_spa_al

நாளையுடன் பயணம் முடிகிறது அதற்குள் அங்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாக உந்த என்னுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு 20 டொலர்களை கையில் எடுத்துக் கொண்டு பர்சை என்னிடம் தந்துவிட்டு கசினோ செல்வதற்கு புறப்பட அந்நேரம் கலைநிகழ்வுகளும் ஆரம்பமாகியது. புறப்பட்டவர் என்ன நினைத்தாரோ அப்படியே அரங்கின் ஓரமாக நின்று நிகழ்வுகளை இரசிக்க.. அவர் எங்கு நிற்கிறார் என்பதை கவனித்துக்கொண்டே அரங்கில் சல்சா நடனமாடிக் கொண்டிருந்த கலைஞர்களின் துரித அசைவில் ஆழ்ந்து போனேன்.

theater-occidental-grand-punta-cana-v341

நிகழ்வு முடிந்து வெளியே வர கையில் வைத்திருந்த 20 டொலர்களை தந்து தான் போகவில்லை என்றார். எனக்குத் தெரியும் அவ்விடத்தில் எங்களைத் தவிர்த்து தனியே செல்ல அவரால் முடியவில்லை. பாசக்காரன். அனுமதி கிடைத்தாலும் மனச்சாட்சி உறுத்திவிட்டது.

 

இரவு 10ஐத் தாண்டிக் கொண்டிருந்தது அங்கிருந்த முகப்பு மண்டபத்தின் சோபா ஒன்றில் சாய்ந்து அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். நாளை ஒருநாள்தான் என்ன செய்யலாம் என்று கலந்து பேசி எங்கும் செல்வதில்லை கடற்கரை நீச்சல்தடாகம் அறை பயண ஆயத்தம் என்று மட்டுப்படுத்திக் கொண்டோம். நாளையுடன் இந்த சுற்றுலா முடிவடைந்துவிடும் என்ற உணர்வுடன் இருக்கும் பொழுதை முற்றுமுழுதாக விளையாடிக் கழித்துக் கொண்டிருந்தார்கள் பிள்ளைகள். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி அவர்களை கவனித்துக் கொண்டிருந்த எங்களை அண்மித்த பணிப்பெண் கையில் மது இருந்தது. அதனை நம்மாள் ஏற்கனவே கேட்டிப்பார்போல்….. என்னுடன் இயல்பாக சிநேகமாகக் கதைத்தபடி ஏதாவது அருந்தப்போகிறாயா என்று கேட்டாள் பிள்ளைகளுக்குப் பிரியமான கொட் சொக்கிலேட்டையும் எனக்கு அன்னாசி பழரசத்தையும் தரும்படி கேட்டபோது… இந்த இடத்தின் சிறப்புப் பானத்தை அருந்தியிருக்கிறாயா என்று கேட்டாள் இல்லை என்று நான் கூற தான் அதனைச் சுவையாக உனக்கு எடுத்துவருகிறேன் என்று போனவள் அடுத்த 5 ஆவது நிமிடத்தில் பிள்ளைகளுக்கு கொட் சொக்லேட்டையும் எனக்கு கொக்ரெயில் என்னும் பானத்தையும் கொண்டு வந்து தந்துவிட்டுப்போனாள். பார்க்க விதவிதமான வர்ணங்களுடன் இருந்த அந்தப்பானத்தைக் கொக்ரெய்ல் என்று கூறுவார்கள் என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன்.

signature-cocktails-drinks.jpg

அங்கு உலவிக் கொண்டிருந்த பலரின் கைகளில் இவற்றை ஏற்கனவே கண்டிருந்தாலும் அதனை அறியும் ஆர்வம் ஏற்படவில்லை. இப்போது அதைக் கைகளில் வைத்து வர்ணத்தைப் பார்த்தபடி வரி வரியாக இருந்த ஒவ்வொரு வர்ணத்தில் மேலும் உறிஞ்சும் குழாயை வைத்து சுவை பார்த்தேன். என்ன ஒவ்வொரு பழரசங்களையும் படிப்படியாக திரவவரிகளில் அழகாக இருந்தது…. ஐயய்யோ பழரசங்களின் நடுவே மது… அவ்வளவுதான் அதை அப்படியே கீழே வைத்துவிட்டேன். நல்லகாலம் எல்லாக்கலவையையும் கலந்து குடித்திருந்தால் என்ன நிலமை? அங்கு வேலை செய்யும் பணிப்பெண்கள் சரியான குசும்பிகள் போல,…. வெற்றுக் குவளையை எடுக்க வந்தவள் அதற்குள் இருக்கும் பானத்தைப் பார்த்துவிட்டு உன் மனைவிக்கு இதைப்பருகத் தெரியாதா என்று கேட்டுவைத்துவிட்டு சென்று விட்டாள். பிறகென்ன பழைய குருடி கதவைத் திறடி என்ற கதைதான் மறுபடியும் நொய் நொய் என்று கிளம்ப இருங்கோ வாறேன் என்று போய்  ஒரு கிளாசில் ரெட் வைனை வாங்கிக் கொண்டு வந்து நம்மாளுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். நாளைக்கு மைக்கிரென் தலைக்குத்து வந்தால் என்ன நடக்கும் தெரியுந்தானே என்று விட்டு அன்றைய முற்பகலை நினைவில் கூர்ந்து சிறிது சிறிதாக உறிஞ்ச ஆரம்பித்தேன். அறைக்குச் செல்லலாம் என்று பிள்ளைகளை அழைத்தால் அவர்கள் அம்மா இன்று மட்டுந்தானே கொஞ்ச நேரம் விளையாடப்போகிறோம் என்று கொஞ்சல் கெஞ்சல் விட்டு எட்டவாக ஓடினார்கள். அப்பாவுக்கும் அறைக்கு வந்து அடைபட விருப்பமில்லை. சிறிது நேரம் சென்றது ரெட் வைனை அருந்தினால் சும்மா கம்மென்று இருக்கவேண்டியதுதானே. பாழாப்போன மமக்குவா போத்தலும் வேர்களும் அப்போதா ஞாபகம் வரவேண்டும். அது என்ன வேர்? அது அருந்தினால் என்ன செய்யும் என்று அடுக்கடுக்காக கேள்விகளை நம்மாளிடம் கேட்டுத் தொலைக்க எனக்கும் அது பற்றி வடிவாத் தெரியாது இங்கு யாரிடமாவது விசாரித்துப்பார்ப்போம் என்று விட்டு அங்குள்ள பணியாளரிடம் விசாரித்து வந்தார். கிட்டத்தட்ட உற்சாகபானம் என்பது போல சொன்னார். அட பரவாயில்லையே உற்சாகபானம் என்றால் அருந்திப் பார்க்கவேண்டும். அருந்துவதென்றால் அதில் அந்த காய்ந்த வேர்களுக்கு வெந்நீர் ஊற்றவேண்டுமா என்று கேட்க நம்மாள் சிரித்துக் கொண்டே அதற்கு ரம்மும் தேனும் வேண்டும். என்று விட்டு சரி நாங்கள் விடுதிக்குச் செல்வோம் என்று பிள்ளைகளை அழைத்துவந்தார். வரும் வழியில் எனக்கு ஒரே குடைச்சலாக இருந்தது… நம்ம அறையில் ஒரு ரம் போத்தலை வைத்திருக்கிறார்கள் அதை இந்தப் போத்தலுக்குள் விட்டு வைத்தால் சரிதானே… என்று நிறைய அலட்டி இருப்பேன் போலும். வந்த சிறிது நேரத்தில் பிள்ளைகள் உறங்கிவிட்டார்கள். நானும் இவரும் வெளியே வரண்டாவில் உள்ள பிரம்பு நாற்காலியில் இருந்து அந்த கடற்கரைக்காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தோம் இருந்தாலும் நாளையுடன் இந்தப்பயணம் நிறைவு பெற்றுவிடும் என்ற எண்ணம் குழந்தைத்தனமாக எனக்குள்ளும் தொற்றிக் கொண்டது. அதற்குள் இந்த பானம் பற்றி அறிந்து விடவேண்டும்… எல்லாம் ரெட் வைன் செய்த வேலை…. அறைக்குள்ளே போய் ரம் போத்தலையும் மமக்குவா மூலிகைகள் அடங்கிய போத்தலையும் எடுத்து வந்து திருகித் திறக்க முற்பட்டேன். நம்மாளுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை விழுந்து விழுந்து சிரித்தார்… இவர் ஏன் சிரிக்கிறார் என்பது விளங்காமல் முழிக்கும்போது அந்தப்பானம் எதற்காகப் பயன்படுத்துவது என்று சொன்னார் பாருங்கப்பா….. :blink: ஆடிப்போய்விட்டேன். :o  விடயம் தெரியாமல் ஆர்வப்பட்டு, கூனிக்குறுகி போன நிமிடத்தில்……. கைகளில் இருந்த அந்த மூலிகைப்போத்தல் என்னைப்பார்த்து :unsure: ஏளனித்திருக்கும். அசடு வழிய அவற்றைக் கொண்டுபோய் உள்ளே வைத்துவிட்டு திரும்பி வந்தபோது அட நம்மாளைப் பார்க்கவே கண்களை நிமிர்த்த முடியவில்லை. ரொம்ப இரசித்திருப்பார்போல் மெல்ல அருகில் அந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டார். சரி சீன் முடிஞ்சுது. :icon_mrgreen::icon_mrgreen:

 

மறுநாள் சிறப்பாக ஏதுமின்றி இருந்தாலும் முந்தைய இரவுச் சம்பவங்கள் என்னை நாணப்படுத்தின. பயண ஆயத்தங்கள் செய்யும்போது கையில் அகப்பட்ட காய்ந்த வேர்கள் அடங்கிய மூலிகைப் போத்தலை மெல்ல எடுத்து அந்த அறையின் அலமாரி மூலையில் வைத்தபோது அதையும் பெட்டியில் வை என்றார். விடயம் அறியாதபோது இலகுவாகத் தொட்டு திருப்பித் திருப்பி பார்த்த போத்தலை இப்போது தொடவே கூசியது. எடுத்து வை என்றபோது நான் அவதானிக்காததுபோல் அவ்விடத்தை விட்டு அகன்று கொண்டேன் மீண்டும் வந்து பார்த்தபோது அந்தக்குடுவை உடைகள் உள்ள பெட்டியின் நடுப்பகுதியில் பத்திரமாக அமர்ந்திருந்தது. கிண்டலாக, கிளுகிளுப்பாக நீண்ட காலத்திற்குப் பின்னர் நம்மாளுடன் இருந்த பொழுதுகளாக இந்தப்பயணம் அமைந்தது. மீண்டும் கனடா வந்து வேலைக்குப் போகும்போது மனதில் உற்சாகம் மிகுதியும் மகிழ்ச்சியும் போட்டிபோட்டன. அந்தப்பயணத்தின் ஞாபகமாக அந்த மூலிகைக்குடுவை பத்திரமாக பெட்டிக்குள் கிடக்கிறது அதனைப்பற்றி சில சமயங்களில் நாங்கள் பேசிக் கொள்வோம். என்னை ரசிக்கவேண்டும் என்றால் நம்மாளுக்கு இந்தக்கிண்டல் இப்போதெல்லாம் கைகொடுக்கிறது.

 

முற்றும்

 

கட்டுரை அல்லது அனுபவப்பகிர்வை முற்றும் போட்டுவிட்டேன் ஆனால் தோகை இழந்த மயிலைப் பார்த்திருக்கிறீர்களா? நான் தோகை இழந்த ஆண் மயிலைப்பார்த்தேன் உபயோகப்படும் என்று படம் பிடித்து வைத்தேன்……

img6093b.jpg

எதற்கு என்று கேட்கிறீர்களா???? என்ன சுற்றுலா என்றால் செலவுகள் அதிகம் கிரெடிட் கார்ட்டுகள் துடைத்தெடுக்கப்படும்தானே, இந்த ஆண்மயில் தோகை இழந்ததைப் பார்க்கும்போது கிரெடிட் கார்ட்டில் கடனை அதிகரித்த நம்மாள் ஞாபகந்தான் அடிக்கடி வருகிறது.

 

மறக்கமுடியாத அனுபவங்களைத் தந்திருக்கிறது இந்தப்பயணம். வெளிப்படையாக எழுதாதவை பல முடிந்தவரை எழுதி முடித்துள்ளேன். அது ஒரு புது அனுபவந்தானே…. அடுத்ததடவை இப்படி ஏதாவது தொடர்கள் எழுத முற்பட்டால் நிச்சயமாக முடிவுவரை எழுதிவிட்டுத்தான் இங்கு இணைக்கவேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியிருக்கிறது இந்தப்பதிவு

இவ்வளவு நாளும் பொறுமையாக வாசித்த அதேநேரம் மனதிற்குள் இப்படியா எழுதுவது என்று திட்டித்தீர்த்த அனைவருக்கும் நன்றி. இப்போதைக்கு என்னுடைய எழுத்து அலட்டலில் இருந்து தப்பித்துள்ளீர்கள் என்ற மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறேன் :icon_idea:

உங்கள் கட்டுரையும் மிக நன்று சகாரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீளவும் வந்து வாசித்து  பாராட்டிமைக்கு நன்றி சுமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.