-
Tell a friend
-
Topics
-
Posts
-
By உடையார் · பதியப்பட்டது
ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம் -என்.கே. அஷோக்பரன் இங்கிலாந்தின் மாலபோன் கிரிக்கட் கழகத்தின் (எம்.சி.சி) வருடாந்த சொற்பொழிவை, 2011இல் ஆற்றிய இலங்கையின் புகழ்பூத்த கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார, அவருடைய உரையின் இறுதியில், “நான் தமிழன், நான் சிங்களவன், நான் முஸ்லிம், நான் பறங்கியன், நான் பௌத்தன், நான் இந்து, கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் வழிப்பற்றுபவன்; இன்றும், என்றும் நான் பெருமைமிகு இலங்கையன்” என்று தெரிவித்திருந்தமை, இந்தத் தீவில் வாழ்பவர்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் இந்தத் தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களைப் புளங்காங்கிதம் அடையச் செய்திருந்தது. சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலம் முதல், இனப்பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கும் இலங்கையில், மீளிணக்கப்பாட்டின் ஊடாக, இனமுறுகலைத் தீர்த்துவிடும் அவாக்கொண்ட பலரதும் மகுடவாசகமாக, இலங்கையர்கள் பலரும் நேசிக்கும் ‘சங்கா’வின் இந்தக் கூற்று உருவெடுத்தது என்றால் அது மிகையல்ல. நல்லதோர் உரையை, உணர்ச்சிபூர்வமாக முடித்துவைப்பதற்கு ஏற்ற நல்லெண்ணம் தாங்கிய பகட்டாரவாரம் என்றளவில் இது, மிகச்சிறந்ததாகவே கருதப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசவிளையும் பலரும், குறிப்பாகத் தம்மை நடுநிலைவாதிகளாக, நல்லிணக்கம், மீளிணக்கப்பாடு ஆகியவற்றின் மீட்பர்களாக முன்னிறுத்தும் பலரும், நாம் இனம், மதம், மொழி ஆகிய அடையாளங்களைக் கடந்து ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற பகட்டாரவாரப் பேச்சை முன்வைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், உணர்ச்சிவசப்பட்ட பகட்டாரவாரம் என்பதைத்தாண்டி, இந்த நிலைப்பாடுகள் யதார்த்தத்தை உணராதவையாகவும் மீறியவையாகவும் அமைகின்றன என்பதுதான் கசப்பான, ஏற்றுக்கொள்ளக் கடினமான உண்மை. யதார்த்தத்தில் ஒருநபர் சிங்களவராகவும் தமிழராகவும் முஸ்லிமாகவும், பறங்கியராகவும் இருக்க முடியாது. ஏனென்றால், இவை வெறும் ‘லேபிள்’கள் அல்ல! ‘ஸ்டிக்கர்’, ‘லேபிள்’களைப் போல, நாம் விரும்பியதை எல்லாம் எடுத்து ஒட்டிக்கொள்ள முடியாது. இவை, மனிதக் கூட்டத்தின் சமூக அடையாளங்கள். மனிதக்கூட்டங்களால், பலநூற்றாண்டுகளாகக் கட்டியெழுப்பிய, காலத்தால் பரிணாமம் அடைந்த அடையாளங்கள். ஒவ்வோர் அடையாளத்துக்குப் பின்னாலும் மொழி, பண்பாடு, வரலாறு, நம்பிக்கை, விழுமியங்கள், நிலம், பிரதேசம் எனப் பல்வேறுபட்ட அம்சங்கள் இருக்கின்றன. அதுபோலவே, ஒருநபர் பௌத்தராகவும் இந்துவாகவும் இஸ்லாமியராகவும் கிறிஸ்தவராகவும் இருக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற ‘அல்லாஹ் ஒருவனே வணக்கத்துக்கு உரியவன்’ என்ற பொருளையுடைய கலிமா தவ்ஹீதினை முதலாவதாகச் சாட்சி சொல்கிறான். இதன் மூலம், அல்லாஹ்வைத் தவிர வணங்கப்பட்டு வரும் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது. இது இஸ்லாத்தின் அடிப்படை. ஆகவே, ஒருவன் இஸ்லாமியனாகவும் பௌத்தனாகவும் இந்துவாகவும் கிறிஸ்தவனாகவும் இருக்க முடியாது. அநேக மதங்களில் இந்தத் தனித்தன்மையுண்டு. மதங்கள் போதிக்கும் தர்மத்தில் பல ஒற்றுமைகளுண்டு. ஆயினும், அவற்றின் சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் பேதமுடையவை. அவை, பலவேளைகளில் மற்றையவற்றை விலக்கி வைப்பனவாகவும் அமைகின்றன. ஆகவே, நான் பௌத்தன், நான் இந்து, நான் இஸ்லாமியன், நான் கிறிஸ்தவன், நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் என்று சொல்வது, சிலவேளைகளில் பலருக்கும் மயிர்க்கூச்செறியச் செய்யும்; உணர்ச்சிப் பொங்கலை உருவாக்கலாமேயன்றி, அதில் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என்பது கொஞ்சமும் கிடையாது. அதுபோலவே, நாம் இனம், மதம் அடையாளங்களைக் கடந்து, ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற வெற்றுப் பேச்சும் யதார்த்தத்திலிருந்து விலகியது. ஒருவன் தான் நம்பும் கடவுள், தனது நம்பிக்கைகள், தான் பின்பற்றும் மார்க்க நெறி, தான் பேசும் மொழி, தனது வரலாறு, தனது பண்பாடு, தனது நிலம், தனது மக்கள் எனும் பிடிப்பு என்பவற்றை, யாரோ ஒருவர் அல்லது ஒரு சிலர் இவற்றைத் தாண்டிச் சிந்தியுங்கள் என்று சொல்வதால், இதை விடுத்து, இன்னோர் அடையாளத்தை ஸ்தாபியுங்கள் என்று சொல்வதால் மட்டும் நடந்துவிடக் கூடியதொன்றல்ல. இங்கு நோக்கம், நல்லெண்ணத்தோடு நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சிப்பவர்களைக் குறைகூறுவதல்ல. ஆனால், நல்லெண்ணம் மட்டும், நல்ல விளைபயனைத் தந்துவிடாது என்ற யதார்த்த உண்மையை எடுத்துக் காட்ட வேண்டியது அவசியமாகிறது. ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தை, இங்கு முன்னிறுத்துகிறவர்களின் உண்மை நோக்கமானது, ‘இன-மத’ தேசியத்தைக் கைவிட்டு, இந்தத் தீவில் ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பது புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால், ‘சிவில்’ தேசக் கட்டுமானம் என்பது, “நாம் இன-மதத்தைக் கடந்து, ஸ்ரீ லங்கனாகச் சிந்திப்போம்” என்று, மீண்டும் மீண்டும் பல்வேறு வார்த்தைகளில் கூறுவதன் மூலம் சாதிக்கக்கூடியதொன்றல்ல. ‘சிவில்’ தேசியம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு மிகப்பெரிய அரசியல் விருப்பமும் பலமும் தேவை. இனவெறியை அரசியலின் முதலாகவும், தேர்தல் வெற்றிக்கான அடிப்படையாகவும் எண்ணும் தலைமைகள் இருக்கும் வரை, ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் விருப்பமும் பலமும் எப்படி ஏற்படும் என்பது இங்கு பிரதானமான கேள்வி. இங்கு “நாம் ஸ்ரீ லங்கன்” என்று பொதுவௌியில் பாடமெடுக்கும் அரசியல்வாதிகளே, தேர்தல் காலத்தில் “தமிழர் வாக்கு தமிழர்களுக்கே” என்ற பிரசாரத்தையும் முன்னெடுக்கும் முரண்நகை காணப்படும் நிலையில், ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான உண்மையான விருப்பமும் தேவையும் அரசியல் பரப்பில் இருக்கிறதா என்று நாம் யோசிக்க வேண்டும். மறுபுறத்தில், புதிய ‘சிவில்’ தேசிய அடையாளத்தைச் சுவீகரிப்பதற்காக, தமது பலநூற்றாண்டுகால அடையாளங்களை விட்டுக்கொடுக்க, இந்தத் தீவின் மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியும் மிக அடிப்படையானது. சிறுபான்மையினர் ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிப்பதற்கான தேவை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் தீவில் பௌத்தத்தைக் காப்பது சிங்களவர்களின் கடமை என்று ஆழமாக நம்பும் சிங்கள-பௌத்தர்கள், தமது ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்தைத் தாண்டி, ‘ஸ்ரீ லங்கன்’ என்பதைச் சுவீகரிப்பதற்கான அவசியப்பாடு இருக்கிறதா? அவ்வாறானதோர் அவசியப்பாடு இல்லாத நிலையில், இந்தப் பகட்டாரவாரத்தின் விளைவுதான் என்னவாக இருக்கப் போகிறது? இது நல்லெண்ணப் பேச்சு. விளைவு பற்றியெல்லாம் ஆராய்வது அவசியமில்லை என்று ‘சிவில்’ தேசியத்தை, வெறும் ‘நற்குண நவிற்சி விளம்பல்’ (virtue signalling) அரசியலாக மட்டுமே வரையறுப்பதானால், மேற்சொன்ன கேள்விகளும் இந்த ஆய்வுகளும் அவசியமில்லாதவை. ஆனால், ‘சிவில்’ தேசியம் என்பது உண்மையில், அடையப்பெறப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள், மேற்சொன்ன கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு யதார்த்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதாக இருக்கும். இந்த இடத்தில், மாற்று உபாயங்கள் பற்றியும் சிந்திக்கலாம். இனம், மதம், மொழி ஆகியவை சார்ந்த தேசிய அடையாளங்கள், இந்தத் தீவின் மக்கள் கூட்டங்களிடையே ஆழவேர்விட்டுள்ளது. இவ்வாறு, இனம், இன-மதத் தேசங்களாக பிரிந்துள்ள மக்கள் கூட்டங்கள், இந்தத் தீவு யாருக்குரியது என்ற கேள்வியில் முரண்பட்டு நிற்கின்றன. இனம், மதம் போன்ற அடையாளங்களை, அடையாளப் பிரக்ஞையைத் தகர்த்து, சிவில் தேசத்தைக் கட்டமைப்பது என்பது, யதார்த்தத்தில் நடைமுறைச் சாத்தியம் குறைந்தது. ஆகவே, இனம், மதம் ஆகிய அடையாளங்களைத் தாண்டிய ‘ஸ்ரீ லங்கன்’ என்கிற சிவில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, இவை அனைத்தையும் உள்ளடக்கிய ‘பன்மைத்தேச’ அரசாக (Plurinational state) இந்தத் தீவைக் கட்டியெழுப்புதல் ஒப்பீட்டளவில் சாத்தியமான ஒன்றாகவே தென்படுகிறது. இந்த நிலையின் கீழ், ஒவ்வொருவரும் தான் விரும்பும் அடையாளத்தைச் சுவீகரித்துக்கொள்ளக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை சாத்தியமாகிறது. இலங்கைத் தீவுக்குள் வாழும் ஒவ்வொரு தேசமும், தான் சுவீகரித்துள்ள அடையாளத்தையும் அடையாளங்களையும் கொண்டிருக்கக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை, பன்மைத் தேச அரசுக் கட்டமைப்பின் கீழ் காணப்படும். இங்கு இனம், மதம் போன்ற தேசிய அடையாளங்கள் துறக்கப்பட வேண்டிய அவசியப்பாடு ஏற்படாது. பன்மைத் தேசிய அரசு, எல்லா அடையாளங்களையும் அரவணைத்து ஏற்றுக்கொள்வதாக அமையும். இது போன்றதொரு நிலை, இலங்கைத் தீவுக்குப் பொருத்தமானதாக அமையும். ஆனால், மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், அதைச் செய்வதற்குரிய அரசியல் விருப்பமும் பலமும் இல்லாவிட்டால், அவை சாத்தியப்படாது. தீர்வு காணவேண்டும் என்ற எண்ணம்தான் இங்கு முதற்படி. என்ன வகையான தீர்வு என்ற தெரிவுப் பிரச்சினை, அடுத்த கட்டம்தான். ஆனால், இனவெறித் தீக்கு எண்ணையூற்றி அரசியல் செய்யும் இன-மைய அரசியல், அதிலிருந்து விலகி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பும் வரை, ‘ஸ்ரீ லங்கன்’ என்பது ‘நற்குண நவிற்சி விளம்பல்’ அரசியலாகவோ, தாராளவாதிகளின் கைதட்டும் பாராட்டும் பெறும் பகட்டாரவாரப் பேச்சாகவும் மட்டும்தான் இருக்கும். அதைத்தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஸ்ரீ-லங்கன்-எனும்-அடையாளம்/91-263890 -
By Maruthankerny · Posted
இது பற்றி ஒரு டாக்குமெண்டரி முன்பு பார்த்தேன் தேடி கிடைத்தால் இணைத்து விடுகிறேன் -
By உடையார் · பதியப்பட்டது
கல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_449a36fa71.jpg கலாநிதி பரீனா ருஸைக் (சிரேஷ்ட விரிவுரையாளர், புவியியல் துறை, கொழும்பு பல்கலைக்கழகம்) உயர்கல்வி நிறுவனங்களுள் பல்கலைக்கழகங்கள் மிக முக்கியமானவை. இலங்கையில் கொழும்புப் பல்கலைக்கழகம் மிகப்பெரிய பல்கலைக்கழகமாகவும், நவீன உயர்கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களுள் முதன்மை கல்வியகமாகவும் திகழ்கின்ற பழைமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். பிரித்தானிய கொலனித்துவத்தின் கீழ், இலண்டன் பல்கலைக்கழகத்தோடு இணைந்து, 1921 ஆம் ஆண்டு இலங்கையில் ‘பல்கலைக்கழகக் கல்லூரி’ எனும் பெயரில், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பாடசாலை, 1870 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆகையால், அவ்வாண்டே, ஸ்தாபக ஆண்டாகக் கருதுவது பொருத்தமானது. பட்டம் வழங்கும் நிகழ்வு 1923 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1870 இல் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் பாடசாலை, தென்னாசியப் பிராந்தியத்தில் இரண்டாவது ஐரோப்பிய மருத்துவப் பாடசாலையாக விளங்கியது. 1880 களில் இம்மருத்துவப் பாடசாலை, மருத்துவக் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. 1889 ஆம் ஆண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவச் சபையால், பிரித்தானியாவில் மருத்துவப் பயிற்சியைப் பெறுவதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டது. 1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டளைச் சட்ட இலக்கம் 20 இன் பிரகாரம் இலங்கைப் பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பீடம் (1942, சட்டப் பீடம் (1947, கல்விப் பீடம் (1949) கலைப் பீடம் (1963) ஆரம்பிக்கப்பட்டது. அரசாணைக்கேற்ப, ‘கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம்’ எனும் பெயரில் 1967 ஒக்டோபரில் இருந்து தனித்து இயங்க ஆரம்பித்தது. 5,000 மாணவர்களையும் 300 ஆளணியினரையும் கொண்டு கலை, சட்டம், விஞ்ஞானம், மருத்துவம் என்பவற்றைக் கற்பிக்கும் பல்கலைக்கழகமாக இது உருவெடுத்தது. பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம், வித்யோதயா இலங்கைப் பல்கலைக்கழகம், வித்யாலங்கார இலங்கைப் பல்கலைக்கழகம் எனும் நான்கு வளாகங்கள் 1972 இல் காணப்பட்டன. கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் கட்டுபொத்த தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து செயற்பட்டது. இப் பல்கலைக்கழகத்தின் தலைமையகமாக ‘செனட் இல்லம்' எனும் பெயரில் இன்றைய ‘கல்லூரி இல்லம்' காணப்படுகின்றது. இத்திட்டம் வெற்றியளிக்காமையால் 1998 இல் இவை மீண்டும் பிரிக்கப்பட்டு தனித்தனியே இயங்கின. கொழும்புப் பல்கலைக்கழகம் எனும் நாமத்தில் மருத்துவம், கலை, விஞ்ஞானம், சட்டம் ஆகிய பீடங்கள் 1980 இல் உருவாக்கப்பட்டன. அவற்றுடன், 1979இல் உருவாக்கப்பட்ட முகாமைத்துவ நிதிப் பீடமும் இணைந்து செயற்பட்டு வந்தது. 1978 இல் பல்கலைக்கழகச் சட்ட இலக்கம் 16 கீழ் இலங்கைப் பல்கலைக்கழகம், ஆறு தனிச் சுதந்திர பல்கலைக்கழகங்களாக உருவெடுத்தது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1987 இல் பட்டதாரி கற்கைகள் பீடமும் உருவாக்கப்பட்டது. 1996 இல் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஸ்ரீபாளி வளாகம் உருவாக்கப்பட்டது. 1997 இல் மருத்துவ முதுமாணி கல்வியகமும் சுதேசிய மருத்துவ நிர்வாகமும் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. 1987 இல் உருவாக்கப்பட்ட கணினித் தொழில்நுட்பக் கல்வியகம், 2002 ஆம் ஆண்டு கணினிப் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில், 2017இல் தாதியர் சேவை பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகிய இரு புதிய பீடங்கள் உருவாக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தின் மகுட வாசகம், சமஸ்கிருத மொழியில் உருவாக்கப்பட்டதாகும். அது ‘அறிவு எங்கும் விளங்குக’ எனும் பொருளைக் கொண்ட, ‘புத்திஸர்வத பிரதே’ என்ற வாசகத்தை, குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றது. http://static2.tamilmirror.lk/assets/uploads/image_43f96ea96d.jpg 11 பீடங்களையும் 41 துறைகளையும், எட்டு வேறு நிறுவனங்களையும் கொண்டு இயங்குகின்றது. இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர், உபவேந்தர் ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். வேந்தர் பெரும்பாலும் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்ளாவிடினும், பட்டமளிப்பின் போது, அவைக்குத் தலைமைத் தாங்குகின்றார். உபவேந்தர், பல்கலைக்கழக முகாமையாளராக விளங்குகின்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முதல் உபவேந்தரான ரொபர்ட் மார்ஸ் என்பவர், 1922 தொடக்கம் 1939 வரை பதவி வகித்தார். கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கான பிரதான நூலகம், கலைப்பீட வளாகத்தில் இயங்குகின்றது. இந்நூலகத்தின் இரு கிளைகள் விஞ்ஞானம், மருத்துவம் ஆகிய பீடங்களில் இயங்குகின்றன. மருத்துவ பீட நூலகம், 1870 இல் நிறுவப்பட்டது. நான்கு இலட்சத்துக்கு மேலான நூல்கள் இங்கு காணப்படுகின்றன. பல அரிய தொகுப்புகளும் ‘இலங்கை தொகுப்புகள்’ எனும் தலைப்பின் கீழ், ஓலைச்சுவடிகளும் பிரதான நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 11,604 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுள் 9,100 பேர் இளமாணி பட்டப்படிப்பைத் தொடர்பவர்களாகவும் 2,504 பேர் முதுமாணி பட்டப்படிப்பைத் தொடர்பவர்களாகவும் காணப்படுகின்றனர். கல்விசார் ஊழியர்கள் 240 பேரும், கல்விசாரா ஊழியர்கள் 1,600 பேரும் பணிபுரிகின்றனர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் இன்றைய (2020) வேந்தராக டொக்டர் ஓஸ்வால்ட் கோமிஸ் திகழ்கின்றார். உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிகா என். விஜேரத்ன பதவி வகிக்கின்றார். ஊதா, மஞ்சள் ஆகிய நிறங்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பிரதான பிரதிபலிப்பு நிறங்களாகும். இப்பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பீடங்களையும் உள்ளடக்கிய வகையில், 29 விளையாட்டு அணிகள் காணப்படுகின்றன. போட்டிகளில் கொழும்புப் பல்கலைக்கழகம் வெற்றியாளராகத் திகழ்கின்றது. 1980களில் இருந்து, 10 சாம்பியன் விளையாட்டுகளில் எட்டுப் போட்டிகளில் சாதித்து வருகிறது. மாணவர்களால் 40 கழகங்கள், சங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் பீடங்கள் ரீதியான மாணவர் ஒன்றியங்கள், மதம், கலாசாரம், கருத்தியல், பண்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒருங்கமைப்புகள், பொதுநல நோக்கைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. கொழும்புப் பல்கலைக்கழகம், கல்விசார் வெளியீடுகளை வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில், University of Colombo Review, The Ceylon Journal of Medical Science, Sri Lanka Journal of International Law, International Journal on Advances in ICT for Emerging Regions, Sri Lanka Journal of Bio-Medical information and Sri Lanka Journal of Critical care ஆகிய வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன. நூற்றாண்டுகளாகக் கல்வி எனும் மகத்துவம்மிக்க சொத்தை வழங்கிவரும் கலை, விஞ்ஞானம் ஆகிய பீடங்கள், உட்கட்டமைப்பும் மனிதவள விருத்தி ஆகியவற்றில், நேர்கணிய வளர்ச்சியைக் காட்டி வருகின்றன. மானிடவியல், சமூக விஞ்ஞானம் ஆகிய கற்கைகளின் கீழ் கல்வி, ஆய்வுகளை கலைப்பீடம் மேற்கொண்டு வருகின்றது. கலை ஒரு பாட அலகாக இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1921 முதல் கற்பிக்கப்பட்டு வந்தது. இது 1942 இல் கலைப் பீடமாக மாற்றப்பட்டது. புதிய கலை பீடமாக 1963 இல் பரிணமித்தது. கலை பீடத்தின் முதல் பீடாதிபதியாக பேராசிரியர் ஹேம் ரே விளங்கினார். கலைப் பீடத்தில், ஏனைய பிரிவுகளுக்கு அப்பால், ஊடகவியல், இஸ்லாமியக் கற்கை போன்ற கற்கைப் பிரிவுகளும் மொழித்திறன் விருத்தி, சர்வதேசத் தொடர்புகள் காரணமாக சீன மொழியைக் கற்பிக்கும் கொன்பியூசியஸ் பிரிவும் இயங்கி வருகின்றன. மேலும், கலைப் பீடத்தில் இயங்கிவரும் துறைகள் மூலம், பெறுமதிமிக்க சான்றிதழ் பயிற்சி நெறிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான (ஊனமுற்ற மாணவர்களுக்கான) இளங்கலை மையமும் உள்ளது. மாணவர்களின் இலக்கியத் திறமைகளை ஊக்குவிக்கும் வண்ணம் பீடாதிபதி விருதுகள் (Dean Awards) நிகழ்ச்சித் திட்டங்களும் கலைப் பீடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. கலை, கலாசார திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையில் கலைப்பீடம் மென்மேலும் விருத்திபெற்ற வண்ணமே, செயற்பட்டு வருகின்றது என்பதில் ஐயமில்லை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்வி-எனும்-மகத்துவம்-மிக்க-சொத்தின்-காவலர்/91-263891 -
By உடையார் · பதியப்பட்டது
முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அழிப்பு – சிறீலங்காவையும், இந்தியாவையும் உலுக்கிய நிகழ்வு – (செய்தித் தொகுப்பு –பிரபா) 118 Views மகிந்தவிடம் அவசரமாக ஓடிய இந்தியத் தூதுவர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தது தொடர்பில் அதிர்ச்சி அடைந்த இந்தியத் தூதுவர் சிறீலங்கா பிரதமரை அவசரமாக சந்தித்தன் மூலம் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாக தெரிவிக்கப்படுகின்றது. நினைவுத்தூபி இடித்ததும் சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபச்சாவை சந்திப்பதற்கு இந்தியத் தூதுவர் கோபால் பக்லே முயன்றபோதும், மகிந்த குருநாகல் பகுதிக்கு சென்றதால் அவரால் சந்திக்க முடியவில்லை. எனினும் கடந்த ஞாயிறு மாலை மகிந்த கொழும்பு திரும்பியதும் உடனடியாக மகிந்தவை அவரின் இல்லத்துக்கு சென்று இந்திய தூதுவர் சந்தித்திருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சிறீலங்காவை விட்டு வெளியேறிய 24 மணிநேரத்தினுள் தூபியை இடித்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என இந்தியத் தூதுவர் மகிந்தாவை எச்சரித்ததுடன், உடனடியக நிலமையை சீர் செய்யுமாறும் கடுமையான தொனியில் கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மகிந்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்காவை தொடர்புகொண்டு பேசியதுடன், அமரதுங்கா உடனடியாக யாழ் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை தொடர்பு கொண்டிருந்தார். அதன் பின்னர் திங்கட்கிழமை (11) அதிகாலை துணைவேந்தர் மாணவர்களுடன் இணைந்து புதிய தூபிக்கான அடிக்கல்லை நாட்டியிருந்தார். தூபி இடிக்கப்பட்ட 60 மணிநேரத்திற்குள் இவை அனைத்தும் நடந்து முடிந்துள்ளன. மகிந்தவுக்கு தெரியாமல் தூபியை இடித்தாராம் சிறீசற்குணராஜா தூபி இடிக்கப்பட்டது தமக்கு தெரியாது எனவும், அதற்கு யார் அனுமதி தந்தது எனவும் சிறீலங்கா பிரதமரின் செயலாளர் அலுவலகம் யாழ். பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நடந்தவை எல்லாவற்றையும் உரிய விளக்கங்களுடன் பிரதமரின் செயலாளர் அலுவலக்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலனாய்வுத்துறையினரை தோற்கடித்த துணைவேந்தர் தூபி இடிக்கப்பட்ட நடவடிக்கையானது சிறீலங்கா அரசுக்கும், நாட்டுக்கும் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இது நாட்டின் தேசிய புலனாய்வுத்துறையின் தோல்வி; அதாவது அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறை என்பன ஒருங்கிணைந்து செயலாற்றவில்லை என சிறீலங்கா அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்கா புலானாய்வுத்துறையின் முற்றான தோல்வியின் வெளிப்பாடு இது. எந்த ஒரு அமைப்பும் இதனை அரச அதிகாரிகளுக்கோ அரசியல் தலைவர்களுக்கோ முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. அதன் எதிர்வினையையும் அவர்கள் கணிக்கத் தவறி விட்டனர். அதாவது அரச இயந்திரங்கள் தன்னிச்சையாக செயற்படுவதாக அரச வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தூபி இடிப்பு விவகாரம் ஐ.நாவில் பாரப்படுத்த வேண்டும் – பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர் சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி விவகாரத்தை பிரித்தானிய அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கும் தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என பிரித்தானியாவின் மிச்சம் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மக்டோனா தெரிவித்துள்ளார். இது மத சுதந்திரத்தை மறுக்கும் செயலாகும்; எனது பகுதியில் பெருமளவான தமிழ் மக்கள் வசிக்கினறனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கனேடிய தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி கண்டு அதிசயித்த கொழும்பு ஊடகம் சிறீலங்கா அரசினாலும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கனடா வாழ் தமிழ் மக்கள் கடந்த வாரம் வாகனப் பேரணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் கொடியை தாங்கியவாறு பல நூறு வாகனங்கள் வீதியால் அணிவகுத்து சென்றதுடன், ஒலிகளை எழுப்பி மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தனர். இந்த வாகனத் தொடரணியின் காணொளியை தாம் பார்த்ததாகவும், அதில் புதிய வகை மெர்சடிஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ, அவுடி மற்றும் டபிள் கப் போன்ற வாகனங்களே அதிகளவில் சென்றதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் த சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இது தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சியை காட்டுவதுடன், தமிழ் மக்களின் இந்த பொருளாதார வளர்ச்சி அந்த நாடுகளின் அரசியல் தலைவர்களின் கவனத்தை திருப்பவல்லது எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அழிப்பு தொடர்பில் தனது கவலையை தெரிவித்துள்ளார். யாழ் மாநகரசபையில் நிறைவேறிய தீர்மானம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்ததற்கு எதிராக யாழ் மாநகரசபையில் கடந்த புதன்கிழமை (13) கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தூபியை அதே இடத்தில் மீள அமைக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுட்பமாக காய் நகர்த்திய துணைவேந்தர் யாருக்கும் தெரியாமல் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை துணைவேந்தர் எவ்வாறு இடித்து அழித்தார் என்ற விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் யாழ். மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரினால் தூபியை இடிக்குமாறு அறிக்கை ஒன்று இரகசியமாக துணைவேந்தருக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில் சிறீலங்கா புலனாய்வுத்துறையின் தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினருடன் துணைவேந்தர் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலும், அது தொடர்பில் பேசப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து நினைவுத்தூபியை இடிப்பதற்கு துணைவேந்தரும் பதிவாளர் வி. காண்டீபனும் இரகசியமாக திட்டம் தீட்டினர். தமது நடவடிக்கைகளை இரகசியமாக பேணிய அவர்கள், கோவிட்-19 நெருக்கடியை அதற்கு பயன்படுத்திக் கொண்டனர். பொறியியலாளர்கள் மற்றும் கனரக வாகன நிறுவனம் போன்றவற்றுடனான தொடர்புகளும் இரகசியமாக பேணப்பட்டன. வெள்ளிக்கிழமை (8) இரவு 10 மணிக்கு இடிப்பது என திட்டமிடப்பட்டது. அன்று இரவு வேறு காரணங்கள் கூறப்பட்டு மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். துணைவேந்தரும், பதிவாளருமே அங்கு இருந்தனர். தெல்லிப்பளையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தூபியை இடிக்கும் கூரையில் வெளிச்ச விளக்கு பொருத்தப்பட்ட கனரக வாகனம் வாடைகைக்கு அமர்த்தப்பட்டது. திட்டமிட்டபடி 10 மணியளவில் இடிக்கும் பணிகள் இரகசியமாக ஆரம்பமாகின. ஆனால் இடிக்கும் சத்தம் கேட்டு பொன் இராமநாதன் வீதி மற்றும் பரமேஸ்வரா சந்தி ஆகியவற்றில் இருந்த அயலவர்கள் விழித்துக் கொண்டனர். பொதுமக்களும், மாணவர்களும் வளாகத்திற்கு வெளியே அணிதிரண்டனர். அவர்கள் அணிதிரளும்போது தமிழ் மக்கள் சந்தித்த இனஅழிப்பின் வரலாற்றை சுமந்து நின்ற நினைவாலயம் வெறும் கற்குவியலாக இருந்ததுடன், அதனை கனரக வாகனம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கவலை யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது தமக்கு மிகுந்த கவலை அளித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது ருவிட்டர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதி என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமாக ஒத்துழைப்புகளை வழங்குவதற்குத் தயராக இருப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது. நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள் சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை மீள அமைப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 13 ஆம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. https://www.ilakku.org/?p=39651 -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
பாண் மற்றும் பணிஸ் விலை 10 ரூபாவால் அதிகரிக்கும் - இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் விளக்கம். பேக்கரி தயாரிப்புக்களுக்கான மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பாண், பணிஸ் உள்ளிட்டவற்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் எம்.கே.ஜயவர்த்தன கூறியுள்ளார். பார்ம் எண்ணெய்க்கு ஒரு லீற்றருக்கு 250 ரூபா வரி அறவிடப்படும் நிலையில், அதன் விலை 500 ரூபாவாகவும், மாஜரின் ஒரு கிலோவுக்கு 600 ரூபா வரி அறவிடப்படும் நிலையில் 1000 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளதால் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்காமல் இருப்பது சாத்தியமற்றது என தெரிவித்தார். எவ்வாறாயினும் பேக்கரி பண்டங்களின் விலையை அதிகரிக்காமல் இருக்க, சலுகைகளை கோரி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கோரிக்கைகளை முன் வைத்த போதும் அவர்கள் அதற்கான எந்த சாதகமான பதில்களையும் இதுவரை வெளிப்படுத்தாமையால், பேக்கரி பண்டங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன சுட்டிக்காட்டினார். https://jaffnazone.com/news/22779
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.