Jump to content

பயணங்கள் முடிவதில்லை :)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வல்வை தொடருங்கள்!

மனுசனைக் கொஞ்ச நேரம் ஆறுதலா, இருக்க விடுங்கோவன்!

எங்கள் வீட்டில், முடிவுகள் எடுக்கப் பட்ட பின்பு, மரியாதைக்காக எனது அபிப்பிராயம் கேட்கப் படும்!

அவ்வளவு தான்!

இது அனேகமாக எல்லா வீடுகளிலும் :)

Link to post
Share on other sites
 • Replies 187
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]

[size=4] நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள் [/size][/size]Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பயணத்துடன் நாமும் பயணிக்கும் ஆவலுடன்....................

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]பயணங்கள் தொடரவேண்டும்...........மிக்க மகிழ்ச்சி [/size]

நன்றி நிலாமதி அக்கா உங்கள் வரவு தொடர்ந்தும் இருக்கட்டும் :)

தொடருங்கள் சஹாரா, வாசிக்க ஆவலாக இருக்கு.

நல்லது நவீனன் உங்கள் ஆவலுக்குரிய அவல் எனது எழுத்தில் இருக்குமானால் அது என்னுடைய பாக்கியம்.

அடங்கொக்கா மக்கா தொடங்கி கொஞ்ச நேரத்திலையோ இத்தனை பார்வை இத்தனை பதில் சகாராவிற்கு இன்னும் யாழில் மார் கட்டு (marcket )குலையவில்லையெண்டு தெரியிது வழைமையான படிகிடிதான் கோவிக்க கூடாது என்னனை :lol:

அடக்கொக்கா மக்கா இப்படி வாயைப்பிளக்காதீங்கண்ணே... :icon_mrgreen: ஆமை வீட்டில குடிபுகப்போகுது. :lol: நான் ஏன் கோவிக்கப்போறன்..உங்களுக்கு மட்டுந்தான் பகிடி விடத் தெரியுமா? நீங்கள் என்னதான் தலையால கிடங்கெடுத்து தாண்டவம் ஆடினாலும் நம்மைப்போல மார் கட்டு (marcket) உங்களுக்கு அமையாதண்ணை... :D :D :D

வல்வை தொடருங்கள்!

மனுசனைக் கொஞ்ச நேரம் ஆறுதலா, இருக்க விடுங்கோவன்!

எங்கள் வீட்டில், முடிவுகள் எடுக்கப் பட்ட பின்பு, மரியாதைக்காக எனது அபிப்பிராயம் கேட்கப் படும்!

அவ்வளவு தான்!

இதானே வேண்டாங்கிறது..... என்னுடைய துணைவரும் இப்படித்தான் எனக்கு பயப்பிடுவதுபோல் வெளியே பாசாங்கு செய்வார் குடும்பத்தில் அத்தனை முடிவுகளுயம் நான் எடுப்பதாக காட்டிக்கொள்வார். அப்படிக் காட்டிக் கொள்வதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி... ஆனா வீட்ல கதையே வேறு... :rolleyes:

[size=4][size=4]நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள் [/size][/size]

நன்றி லியோ

உங்கள் பயணத்துடன் நாமும் பயணிக்கும் ஆவலுடன்....................

கறுப்பி வாங்கோ கண்டிப்பாக உங்கள் ஆவல் பூர்த்தி செய்யப்படும் :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர் -2


மெல்ல வேலையிடத்தில் புன்ரக்கானா போவதற்கு முடிவெடுத்திருப்பதாக என்னுடைய வேலைத்தலத் தோழிகளான இம்சை அரசிகளிடம் தெரியப்படுத்தினேன். எல்லோரும் கொடுப்புக்குள் சிரித்தபடி என்ன பிளான் மினிமூனா? கனிமூனா என்று நாணமில்லாத என்னைக் கேள்விகளால் நாணவைத்துவிட்டார்கள். :icon_mrgreen: எங்களுடைய பெண்களுக்கு தெரியாத சங்கதிகள் என்ன என்று என்னை மலைக்க வைத்துவிட்டார்கள் :huh: (தந்தையர் தினத்திற்கு அரைமூடிச்சலங்கையை துணைவருக்கு பரிசளிக்கப்போவதாக சொன்ன கில்லாடிகள் ஆயிற்றே அவர்கள்) விரல் நுனிகளில் அவர்கள் உல்லாசப்பயணம் பற்றியும் எந்தெந்த நாட்டில் எந்தெந்த இடத்தில் என்னென்ன இருக்கிறது என்பது சதா கணனிக்குள் மூழ்கிக்கிடக்கும் என்னைவிட அவர்களுக்குத் தெரிந்திருந்திருந்தது. அவர்களுடைய தகவல்கள் எனக்குள் இன்னும் அறியாமை நிறையத் தேங்கிக்கிடப்பதை உணர்த்தியது. இப்போது உண்மையிலேயே ஆண்கள் வெறும் வெங்காயங்கள் :lol: என்று நினைத்துக் கொண்டேன்.

சரி அடுத்து வீட்டில் பிள்ளைகளை தயார்ப்படுத்தலில் ஈடுபட்டபோது பெரிய பிள்ளைகள் நாசூக்காக மறுத்துவிட்டார்கள். நீங்கள் போய் வாருங்கள் நாங்கள் எங்கள் நண்பர்களுடன்தான் செல்வோம். உங்களுடன் வந்தால் நீங்கள் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு எங்களைச்சுற்றிக் கொண்டே நிற்பீர்கள். உங்களுடைய நேரம் எங்களைக் கண்காணிப்பதிலேயே கரைந்துவிடும் அதனால் நீங்கள் எதிர்பார்க்கும் ஓய்வு உங்களுக்குக் கிடைக்காது. உங்களுக்குத்தான் முக்கியமாக ஓய்வு தேவை. அம்மா இவற்றைப்பற்றி இதற்குமேல் உங்களுக்கு விபரமாக சொல்லமுடியாது என்று நாசூக்காக மறுத்துவிட்டார்கள்.

துணைவருக்கும் எனக்கும் ஒன்றாக விடுமுறை கிடைப்பது என்பது எட்டாக்கனி. மணமான காலத்திலிருந்து இரு தடவைகள்தான் இருவரும் சில வாரங்கள் ஒன்றாக விடுமுறையைக் கழித்திருக்கிறோம் அவையும் உறவுகள் நிறைந்த சூழலில் மனங்கள் பேசாத பொழுதுகளாகவே கழிந்திருந்தன. மேற்குலக வாழ்வின் இயந்திரத்தனமான துரித ஓட்டம் என்பது மனங்களுக்குப் பழகிப்போன ஒன்றாக மாறிவிட்டது. மனங்கள் பேசவேண்டுமென்றால் ஓய்வும் தனிமையும் நிச்சயம் வேண்டும். வாழ்வின் நீண்ட பயணத்தில் அப்படி ஒரு ஓய்வும் தனிமையும் எங்களுக்கு அவசியமாக இருந்தது. முன்னைய பொழுதில் நமக்குள்ளான இத்தகைய சூழலை குழப்பியதுபோன்று இம்முறை குழப்பாமல் ஆவலாக பயண ஏற்பாடுகளைச் செய்தேன். முக்கியமாக நுளம்புக்கடியிலிருந்து தப்புவதற்கான பொருட்கள் மற்றும் சூரிய வெப்பத்திலும் , குளோரின் தண்ணீரிலும் சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய கிறீம்வகைகளை எல்லாம் பார்த்து பாரத்து வாங்கி பயணப்பொதிகளில் நிரப்பிக் கொண்டேன்.
PnFSTACKEDparkhappy_09.jpg
பயணம் புறப்படும் நேரமாகியது ரொரன்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் "புன்ரக்கானா"விற்கான விமானம் மாலை 4 மணிக்குப் புறப்படும். அதற்கு முன் சில அலுவல்கள் பார்க்கவேண்டி இருந்தது. அதாவது நாம் வீட்டிலிருந்து புறப்பட்ட வாகனத்தை விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள park & Fly தரிப்பிடத்தில் நிறுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொண்டால் மீண்டும் நாம் திரும்பும்போது எவ்விதக் காத்திருப்பு இன்றி எமது வாகனத்திலேயே வீட்டுக்கு வந்துவிடலாம். விமான நிலையத்திற்கு எம்மைக் கொண்டு சென்று விடுவதற்கும் பின்னர் மீண்டும் எம்மை அழைத்து வருவதற்கும் எவரும் மினக்கெடத்தேவையில்லை. பார்க் அன்ட் ப்ளையிலிருந்து அவர்களின் பேருந்தில் சில நிமிடங்களில் விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.வழிமையாக நாம் கொண்டு செல்லும் பொதிகளை விமானத்தில் போடுவதற்கும் கடவுச்சீட்டையும் விமானச்சீட்டையும் காட்டி இருக்கைகளைப்பதிவு செய்யவும் வரிசையில் நின்று கொண்டோம். எம்மினத்தவர்கள் ஒருவரையும் காணவில்லை. ஆனால் கடவுச்சீட்டை வாங்கி இருக்கைகளை உறுதிசெய்யும் பணியில் ஒரு தமிழர் இருந்தார். எங்களுடைய வரிசையின் முறையில் அவரிடமே நாம் சென்று பதியும் வாய்ப்பு கிடைத்தது.பதிவில் ஈடுபட்டிருந்த தமிழர் என்னுடைய கடவுச்சீட்டில் பெயரைப்பார்த்ததும் சற்று துணுக்குற்று நிமிர்ந்து பார்த்து நீங்கள் இசுலாமியரா என்றார். நான் இல்லை என்றேன். நீங்கள் சிறீலங்காவிற்கு பயமில்லாமல் சென்று வரலாம் என்று சொல்லி புன்னகைத்தார்... தொடர்ந்து எப்படி உங்கள் பேர் இப்படி உள்ளது என்றார்... என்னுடைய தந்தை வைத்தபெயர் என்றேன். அந்தக்காலத்திலேயே இவ்வளவு நாகரீகமாக பெயர் வைத்துள்ளார் உங்கள் தந்தை என்று கிலாகித்தார்.அவருடைய அத்தனை கிலாகிப்பிற்கும் அப்பாற்பட்டவர் எனது தந்தை. அவர் நாகரீகம் கருதி எனக்கு இப்பெயரைச்சூட்டவில்லை. அவருக்குப்பிடித்த இலக்கியம் கருதி இந்த இசுலாமியப் பெயரை எனக்குச் சூட்டியதாக எனது தந்தை இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்னர் எனக்குத் தெரிவித்திருந்தார். இதைக் கடவுச் சீட்டை நோட்டமிடும் அதிகாரியிடம் சொல்லாமல் அவருடைய கிலாகிப்பை ஏற்பதுபோல் புன்னகைத்துக் கொண்டு விமான இருக்கைகளின் இலக்கங்களை சன்னலோரமாக அமையுமாறு பெற்றுக் கொண்டோம்.
pearson-airport.jpg
விமானத்திற்காக காத்திருக்கும் இடத்தை நோக்கி செல்லும்போது duty free shop கண்ணில் பட்டுவிட்டது தாமதம் துணைவரும் மகனும் அதற்குள் நுழைந்துவிட்டார்கள். வெளியே வரும்போது ஒரு பண்டல் சிகரெட்டும் ஒரு பண்டல் சொக்லேட்டுமாக என்னுடைய முறைப்பைக்கண்டதும் அசடுவழியச் சிரித்தார்கள். உனக்குத் தெரியாது இதில மலிவு அதுதான் வாங்கினனான் என்று ஏதோ ஒரு பெரிய செலவை மிச்சப்படுத்தியதுபோல் பில்டப் காட்டிக் கொண்டிருந்தார் துணைவர்.... நான் அவருடைய கருத்தைக் கேட்காதமாதிரி விமானத்திற்கான காத்திருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டேன். இப்போது என்னைச் சமாளிக்கவேண்டுமே நல்ல பிள்ளையாக பக்கத்திலேயே நெருக்கமாக இருந்து கொண்டார். அப்போது இவருடைய கைத்தெலைபேசி கிணுகிணுத்தது அவருடைய நண்பர் அழைத்திருந்தார். அவர் கடந்த வருடம் நாம் செல்ல இருக்கும் புன்ரக்கானாவிற்கு குடும்பமாகச் சென்று வந்தவர். ஆதலால் அவருக்கு அவ்விடம் பற்றி அதிகமான தரவுகள் தெரிந்திருந்தன. பிள்ளைகளை அழைத்துச் செல்லக்கூடிய இடங்கள் பற்றியும் அங்குள்ள விசேடங்கள் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தவர்...திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு துணைவரிடம் அருகில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டுக் கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்தார். புன்ரக்கானாவில் இருக்கும் விசேட இடங்களைப்பற்றி நாங்கள் சென்ற மறுநாள் விளக்கம் தரும் சந்திப்பைத் தவறவிடவேண்டாம் அவ்விடத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் "மமகுவா" தருவார்கள் வாங்கிக் கொள் என்றார்....... :icon_mrgreen: :icon_mrgreen: "மமகுவாவா" அப்படி என்றால் என்ன என்று துணைவர் கேட்க.... மறுபடியும் அருகில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார்..நண்பர். மனுசிதான் பக்கத்தில் இருக்கு என்று துணைவர் சொல்ல "அப்ப நான் பிறகு கதைக்கிறன்" என்று சொல்லி நண்பர் தொலைபேசியைத்துண்டித்துக் கொண்டார்.

(இன்னும் வளரும்) :lol: :lol: :lol:

Link to post
Share on other sites

உங்கள் பயணக் கட்டுரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாச முறையில் அமையும் என எதிர் பார்க்கிறேன் அக்கா :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பயணக் கட்டுரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாச முறையில் அமையும் என எதிர் பார்க்கிறேன் அக்கா :)

ரதி,

இதனைப்பயணக்கட்டுரை என்று எழுதினால் கட்டுரையாளர்கள் எல்லாம் தற்கொலை செய்து கொள்வார்கள். அது ஒரு கட்டுரை வடிவமல்ல ஒரு அனுபவப்பகிர்வு... கட்டுரை மாதிரி இருக்கும் ஆனால் கட்டுரைக்குரிய சிறப்புகள் இருக்காது. நண்பர்களுடன் எனது பயண அனுபவங்களை கலகலப்பாக பகிர்ந்து கொள்ளும் ஒரு வடிவம்... வாசிக்க இலகுவாக இருக்கிறதா அல்லது இலகுப்படுத்தவேண்டுமா...பயமாக இருக்கிறது நான் எழுதும் கவிதைக்கு பொழிப்புரை கேட்கும் நண்பர் கூட்டமாச்சே.....இதற்கு என்ன சொல்வார்களே????? :unsure: :unsure:

Link to post
Share on other sites

ரதி,

இதனைப்பயணக்கட்டுரை என்று எழுதினால் கட்டுரையாளர்கள் எல்லாம் தற்கொலை செய்து கொள்வார்கள். அது ஒரு கட்டுரை வடிவமல்ல ஒரு அனுபவப்பகிர்வு... கட்டுரை மாதிரி இருக்கும் ஆனால் கட்டுரைக்குரிய சிறப்புகள் இருக்காது. நண்பர்களுடன் எனது பயண அனுபவங்களை கலகலப்பாக பகிர்ந்து கொள்ளும் ஒரு வடிவம்... வாசிக்க இலகுவாக இருக்கிறதா அல்லது இலகுப்படுத்தவேண்டுமா...பயமாக இருக்கிறது நான் எழுதும் கவிதைக்கு பொழிப்புரை கேட்கும் நண்பர் கூட்டமாச்சே.....இதற்கு என்ன சொல்வார்களே????? :unsure: :unsure:

எனக்கு வாசிக்க இலகுவாக இருக்கிறது அக்கா உங்கள் கவிதை மாதிரி கஸ்டமில்லை :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=5]ம்ம்ம்...........[/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள் முடிவதில்லை வெற்றிகரமாக தொடர்வதற்கு வாழ்த்துக்கள் அக்கா.............

சிவாஜி கணேசன் நடிக்கும்படங்களில் நடிப்பு எப்படி இருந்தது என்று கேட்கவா வேணும் போல் நீங்கள் எழுதினால் எப்படி என்று கூறவா வேணும்.........ஏனனில் உங்கள் வரிகளில் சிந்தனை மட்டுமல்ல ........இசையும் சுலபமாக வழிவிடும்...........நன்றி அக்கா

Link to post
Share on other sites

அடக்கொக்கா மக்கா இப்படி வாயைப்பிளக்காதீங்கண்ணே... :icon_mrgreen: ஆமை வீட்டில குடிபுகப்போகுது. :lol: நான் ஏன் கோவிக்கப்போறன்..உங்களுக்கு மட்டுந்தான் பகிடி விடத் தெரியுமா? நீங்கள் என்னதான் தலையால கிடங்கெடுத்து தாண்டவம் ஆடினாலும் நம்மைப்போல மார் கட்டு (marcket) உங்களுக்கு அமையாதண்ணை... :D :D :D

ஆமையை யாருக்கு வேணும் அமீனா புகுந்தால் பரவாயில்லை என்னவோ தெரியலை இசுலாமிய பெண் பெயர்கள் என்றாலே எனக்கு ஒரு அது . அது மட்டுமில்லை உங்கடை மார்க்கட்டு எனக்கு வந்தால் பிறகு நானும் அது வாயிடுவன் அது எனக்கு வேண்டாம். :lol:

Link to post
Share on other sites

அப்ப உங்கடை பெயர் சகாறாபேகமா? :lol::rolleyes:

Link to post
Share on other sites

போன இடத்தின் பெயரே வில்லங்கமாக இருக்கு ,தொடருங்கள் உங்கள் மூன்றாம் உலகத்தை .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயணங்கள் முடிவதில்லை வெற்றிகரமாக தொடர்வதற்கு வாழ்த்துக்கள் அக்கா.............

சிவாஜி கணேசன் நடிக்கும்படங்களில் நடிப்பு எப்படி இருந்தது என்று கேட்கவா வேணும் போல் நீங்கள் எழுதினால் எப்படி என்று கூறவா வேணும்.........ஏனனில் உங்கள் வரிகளில் சிந்தனை மட்டுமல்ல ........இசையும் சுலபமாக வழிவிடும்...........நன்றி அக்கா

உங்கள் வரவிற்கும் பதிவிற்கும் நன்றி தமிழ் சூரியன் அத்தோடு உங்களுடைய பாராட்டு என்னை அதீதமாக மிகைப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இத்தகைய சொல்லாடல்களுக்கான தகுதி என்னிடம் இல்லை தமிழ்சூரியன். தொடர்ந்தும் வாசியுங்கள் உங்கள் கருத்தை எடுத்துவாருங்கள். நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமையை யாருக்கு வேணும் அமீனா புகுந்தால் பரவாயில்லை என்னவோ தெரியலை இசுலாமிய பெண் பெயர்கள் என்றாலே எனக்கு ஒரு அது . அது மட்டுமில்லை உங்கடை மார்க்கட்டு எனக்கு வந்தால் பிறகு நானும் அது வாயிடுவன் அது எனக்கு வேண்டாம். :lol:

சீச்சீ.... நீங்கள் அதுவானால் அவர்களின் கதையையும் எழுதி யாழைக்கலவரப்படுத்திவிடமாட்டீர்களா என்ன? யார் செய்த புண்ணியமோ யாழுக்கு மாபெரும் சோதனை வராமல் தப்பிக்கொண்டது :lol: :lol: :D

அப்ப உங்கடை பெயர் சகாறாபேகமா? :lol::rolleyes:

இவங்களுக்கும் இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு இசை.....ஒரு வேளை இந்தப் பெயர் உங்களுக்கு பரிச்சயமானதோ? :rolleyes:

போன இடத்தின் பெயரே வில்லங்கமாக இருக்கு ,தொடருங்கள் உங்கள் மூன்றாம் உலகத்தை .

வில்லை அங்கமாக எடுத்துக்கொண்டால் வில்லங்கம்தான்.... :icon_mrgreen: அதென்ன மூன்றாம் உலகம்????? அப்படியானால் முதல் இரண்டு உலகமும் எவை? :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மமகுவா என்றால் என்ன என்று அறிய ஆவலுடன் காத்திருக்கின்றோம்

தொடருங்கள் சகாரா உங்கள் பயணத்தை.... :D

Link to post
Share on other sites

அப்ப உங்கடை பெயர் சகாறாபேகமா? :lol::rolleyes:

ஆயிசா அல் உம்மா :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பயணக்கதை, கொஞ்சம் சூடு பிடிக்கிறது!

'மமகுவா' எனக்குத் தெரியும்! அது என்ன என்று, நீங்களே சொல்வது தான் பொருத்தம், வல்வை!!! :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயணக்கதை, கொஞ்சம் சூடு பிடிக்கிறது!

'மமகுவா' எனக்குத் தெரியும்! அது என்ன என்று, நீங்களே சொல்வது தான் பொருத்தம், வல்வை!!! :D

என்ன கொண்டோம்(condom) ஆஆஆ??????? :rolleyes::o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடகடவென்று ஒரே மூச்சில் “புன்ரக்கானா” என்ற கடல் சார்ந்த ஒரு பிரதேசத்திற்கு பயணப்படுவதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதாக ஒப்புவித்தார்…..

நன்றி நுணா

[size=5]250px-Dominican_Republic_%28orthographic_projection%29.svg.png[/size]

பயண குறிப்பு ஆர்வத்தை தூண்டுகிறது.

உது என்ன நாடு?

Puerto Rico?

Dominican Republic?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயணக்கதை, கொஞ்சம் சூடு பிடிக்கிறது!

'மமகுவா' எனக்குத் தெரியும்! அது என்ன என்று, நீங்களே சொல்வது தான் பொருத்தம், வல்வை!!! :D

ரோமியோக்கு கனக்க விசமம் தெரியும்போல :lol::icon_mrgreen:

என்ன கொண்டோம்(condom) ஆஆஆ??????? :rolleyes::o

சின்னப்பிள்ளைக்கு என்ன ஆஆஆஆஆவல் <_<:icon_mrgreen:

பயண குறிப்பு ஆர்வத்தை தூண்டுகிறது.

உது என்ன நாடு?

Puerto Rico?

Dominican Republic?

குழைக்காட்டான் கீழே விக்கிபிடீயா தகவலை இணைத்திருக்கிறேன்

http://en.wikipedia....wiki/Punta_Cana :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயணங்கள் முடிவதில்லை - 3

Punta_Cana.gif

விமானத்தின் இயந்திரங்கள் உறுமத்தொடங்கின. அழகான இளம்பெண்கள் நால்வர் பயணிகளின் இருக்கைகளுக்கு மத்தியில் நின்று விமானப்பயணமுறை மற்றும் விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் எப்படி நம்மை காப்பது என்பதை ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் விளக்கமாகக் கூறும்போது அதற்கேற்ப அவர்களும் சைகைகள் மூலம் பாதுகாப்பு வழிகளை வெளிக்காட்டினார்கள். உறுமிக் கொண்டிருந்த ஆகாய ஊர்தி மெல்ல உருண்டு ஓடுபாதைக்கு வந்து வேகமெடுத்தது. பாதுகாப்புப் பட்டியை அணியும்படி ஒவ்வொருவர் இருக்கைகளுக்கு முன்னால் உள்ள சமிஞ்சை விளக்குகள் எச்சரிக்கை ஒலியுடன் விட்டு விட்டு ஒளிர்ந்தன. பயணிகள் பாதுகாப்புப் பட்டியை சரியாக அணிந்திருக்கிறார்களா என்பதைக் கவனித்து விட்டு பணிப்பெண்கள் தாமும் பாதுகாப்பு பட்டியுள்ள அவர்களின் பிரத்தியேக இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.

நீண்ட ஓடுபாதையின் கீழ் சக்கரங்களின் சுழற்சி அசுரவேகத்தில் இயங்க, காற்றைக்கிழித்துக்கொண்டு…. மேல்நோக்கி கிளம்பி நிலத்திற்கும் தனக்குமான தொடுகையைத் துண்டித்து சில்லுகளை உள்ளடக்கிப் பறந்தது. பயணிகள் அனைவரும் சத்தமின்றி விமானத்தின் சாளரங்கள் ஊடாக வெளியே பார்த்தபடி இருந்தார்கள். சிலர் காதுகளுக்குள் காற்றின் அழுத்தம் தாக்காதவாறு தடுப்புத் தக்கைகளை அணிந்திருந்தார்கள் காதின் அடைப்பைத் தவிர்க்க சிலர் வாய்களை ஆவென அகட்டி திறந்து சத்தமிட்டபடி. ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த முறைகளைக் கையாண்டார்கள். முழுக்குடல்களையும் வயிற்றுக்குள் வைத்து காற்றின் அழுத்தம் பூரிக்கு மா பிசைவதுபோல பிசைந்தது. வயிற்றுக்குள் கூச்சம் ஊர்ந்து திரிய சிலர் நெளிந்தார்கள். விமானப்பறப்பின் அனுபவத்தைப்பற்றியே அறியாத காலத்தில் இரு பக்கமும் உந்தி ஆட்டும் பலகை ஊஞ்சல்தான் முதல் பறப்பின் அனுபவமாக எமக்கு இருக்கும் அந்நாட்களில் ஊஞ்சலில் ஆடிய அனுபவங்களை மனம் மீள்பதிவிட்டது….. இந்த ஊஞ்சல் அனுபவத்தைக்கிளறி விட்டபடி ரொரன்டோ பியெர்சன் எயர்போர்ட்டில் இருந்து கிளம்பிய சன்விங் ரொரன்டோ மாநகரத்தை ஒரு சுற்று சுற்றி சென்ரல் ஐலன்ட்டிற்கு மேலாக பறந்து தெற்கு முகமாக செல்ல ஆரம்பித்தது. மாலை நான்கு மணிக்கு பயணமாகையால் இருள் போர்க்காத நிலத்தில் கட்டிடங்களும், புல்வெளிகளும் போட்டிபோட்டு பேரழகூட்டின. பச்சை மதர்போர்ட்டில் கட்டிய ஈயக்குடுவைகள்போல் அடுக்கு மாடிகளும் பலவகையான கட்டிட வடிவங்களும் விமானத்திலிருந்து வெளியே நிலம் நோக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்குப் புலப்பட்டன. ஆகாய ஊர்தி மேற்கிளம்பி தனது சமாந்தரப்பயணிப்பை ஆரம்பிக்கும்போது பயணிகளின் இருக்கைகளுடனான பாதுகாப்புப் பட்டிகளை தளர்த்துவதற்கான சமிஞ்சை விளக்குகள் ஒளிர்ந்தன.

முன்னிருக்கையில் துணைவரும் மகனும் பின்னிருக்கையில் நானும் மகளும் பிள்ளைகள் இருவரும் சன்னல் ஓரமாக இருந்து கொண்டார்கள்…. இப்போது விமானம் நிலப்பகுதியிலிருந்து விலகி கடலுக்கு மேலாக தெற்கு நோக்கி டொமினிக்கன் ரீபப்ளிக் நோக்கி பறந்து கொண்டிருந்தது. சுமூகமான பறப்பை விமானம் மேற்கொண்டதை மகிழ்வு கொள்ளுமுகமாக சம்பெயனை பணிப்பெண்கள் இன்முகத்துடன் பரிமாறினார்கள். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த எனது துணை அதனைப் பெற்றுக் கொண்டு என்னை நோக்கி திரும்பும்போது எனது கரங்களில் ஒடுங்கிய கண்ணாடிக்குடுவைபோன்று தயாரிக்கப்பட்ட மெழுகாலான குவளையில் மெல்லிய கண்ணாடிபோன்ற பொன்னிறத்திலான திராவகம் இருந்ததை அவர் விழிகள் வியப்புடன் நோக்கின. 25-img.jpg

அந்த வியப்பை அப்படியே என்னுடைய விழிகள் பதிவு செய்து நரம்புகள் வழியோடி ஞாபகங்களைச் சேகரித்து வைக்கும் பெட்டகத்திற்குள் சேமித்துக் கொண்டன. சம்பெயன் அருந்தியது மிகவும் உற்சாகமாக இருந்தது. உலகில் வாழும் ஒவ்வொரு செக்கனையும் ஆழமாக நேசித்து அனுபவிக்கவேண்டும் என்ற உந்துதல் அதிகரித்தது. அதிக மதுசாரம் கலக்காத சம்பெயன் அனைத்துப்பயணிகளின் கைகளிலும் இருந்தது. அட இதுதானா சம்பெயனின் சுவை…!

தொடர்ந்து கொரிக்க நொறுக்கு தீனிபோல் சில உப்புக்கலந்த கடலை பருப்புகள் அடங்கிய ஒரு பொட்டலத்தைப் பரிமாறினார்கள் கொரித்துக் கொண்டே நீள்கடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பிள்ளைகள் ஐபோட்டில் கேம் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள் சிறிது நேரத்தில் உணவைப் பரிமாறி விட்டு பணிப்பெண்கள் ஓய்ந்தார்கள்…சிலர் உண்ட களைப்பில் சின்ன கோழித்தூக்கம் போட்டார்கள். முன்னால் இருந்த துணைவரும் கண் அயர்ந்துவிட்டார்… நமக்கு பேச்சுத்துணையும் இல்லை…சரி இருக்கவே இருக்கு நல்ல புசுபுசு என்று பஞ்சுப் பொதிகள் போன்று முகில்களும் நீல வானும் கடலும்……

வெளியே அகல விரிந்த கடல் பரப்பை இருள் மெல்ல மெல்ல கவ்வக்கவ்வ அந்த மந்தகாச ஒளியில் காற்றின் தழுவலில் கடல் சிலிர்க்கின்ற அழகு என்பது எவ்வளவு அற்புதமானது. மனதிற்குப் பிடித்தமானவனின் தொடுகையில் மயிர்கூச்செறிந்து சிலிர்க்கும் பெண்ணை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு பேனாவையும் பேப்பரையும் தேடி மனம் அலைந்தது. கைகளும் கண்களும் செயலில் இறங்கினால் கவனம் சிதறிப்போகுமென்று வாழாதிருந்தன. கடலில் தெரிந்த ஒவ்வொரு சிலிர்ப்பையும் மீண்டும் பார்க்கமுடியாது. img4459e.jpg

அந்த நெளிவு, சுழிவு பல மைல்களுக்கு அப்பால் ஆகாயத்திலிருந்துதான் அவற்றை வெற்றுக் கண்களால் பார்க்கமுடியும். அட இதென்ன எல்லோரும் மெத்து மெத்தென்ற வெண்மேகங்களின் கொள்ளை அழகைத்தான் வான் பயணத்தில் அதிகம் இரசிப்பார்கள். நான் முகில்களை வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு கண்கள் அறியாத காற்றையும் அதன் இருப்பை உணர்த்தும் அதன் சஞ்சரிப்பையும் அல்லவா குறுகுறுவென்று கவனித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய இந்தப்பார்வையைத் தாங்கமுடியாமல் இருள்வலி எனக்கு மறைவான பக்கம் நோக்கி ஓட்டமெடுத்தான்.

நேரம் இரவு எட்டரையைத் தாண்டிக்கொண்டிருந்தது. டொமினிக்கன் ரிப்ப்ளிக்கில் உள்ள புன்ரக்கானா விமான நிலையத்தில் நாம் பயணித்த இயந்திரப்பறவை தன் சக்கரங்களைப் பதித்து உருளவிட்டது. நாளொன்றுக்கு பல நூற்றுக்கணக்கான இயந்திரப்பறவைகள் தரிப்பதும் பறப்பதுமாக உள்ள ஒரு மிகப்பெரிய சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு சில விமானங்கள் மட்டுமே இறங்கி பறக்கும் original.jpg மிகச் சிறிய தரிப்பிடத்தில் கிட்டத்தட்ட 200 வரையான பயணிகளுடன் நாமும் புன்ரக்கானா மண்ணில் கால் பதித்தோம். விமான நிலையத்தின் காரியாலயங்கள் தென்னை ஓலைகள் போன்ற அமைப்பையுடைய இன்னொரு வகையான ஓலைகளால் வேயப்பட்டிருந்தது. அதன் சுவர்கள் கற்களால் நிரவப்பட்டு அழகாக அமைக்கப்பட்டிருந்தது. எங்கள் ஊரிலும் இதனைப்போன்ற சுவர்கள் உண்டு. கடற்கரை ஓரமாக இந்த அரன் அமைந்திருக்கிறது இப்போது அவை நிறையவே சிதைவடைந்திருக்கின்றன. ஒரு காலத்தில் அவ்விடத்தில் (போர்த்துக்கீசரா ஒல்லாந்தரா என்பது சரியாக தெரியவில்லை) இராணுவம் குடியிருந்த்தாகவும் அந்த சுவர்கள் அவர்களால் அமைக்கப்பட்டதாகவும் கூறுவார்கள் இன்று பழுதடைந்திருந்த நிலையிலிருக்கும் அந்தச்சுவர்களுக்கும் புன்ரக்கானா எயர்போர்ட்டில் இருக்கும் இந்தச்சுவர்களுக்கும் பெரியதொரு ஒற்றுமை

இருப்பதை அந்த இடத்தில் நின்று கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் உணர முடிந்தது.

Punta-Cana-airport-1x.jpg

புன்ரக்கானாவில் நாம் எங்கு செல்கிறோம் என்பதனை தெரிவித்து மற்றும் வரிப்பணத்தை அசலுத்திவிட்டு எங்களுக்கான பயணப்பொதிக்குள் உள்ளடக்கப்பட்ட அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தோம். எங்களை நாங்கள் தங்கப்போகும் விடுதிக்கு அழைத்துச் செல்வதற்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள் தயாராக நின்றிருந்தன. எங்களுடைய பெயர்களையும் நாங்கள் செல்ல உள்ள விடுதிக்கான பெயர்களையும் உறுதிப்படுத்திக்கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். எங்களுடன் தமிழர்கள் எவரும் பயணிக்கவில்லை எல்லோரும் வெவ்வேறு இனமக்களாக இருந்தார்கள். மற்றைய விடுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் புறப்பட்டு அரைமணிநேரத்திற்கு மேலாகியும் நாங்கள் புறப்பட முடியவில்லை. காரணம் எங்களோடு பயணிக்கவேண்டிய நால்வர் விமான நிலையத்தைவிட்டு எங்கள் பேருந்து நிற்கும் தரிப்பிடத்திற்கு வந்து சேரவில்லை. காத்திருப்பு எல்லோருக்கும் அலுப்பை உருவாக்கியது. வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் எல்லோரும் தவித்துக் கொண்டிருப்பதை அவர்களின் நடவடிக்கைகள் காட்டின. சிறிது நேரத்தில் நால்வரில் ஒருவரான ஒரு கறுப்பினப் பெண்மணி வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். இமிக்கிரேசன் அவரை அசௌகரியப்படுத்திவிட்டது காரணம் அவர் யமேக்காவைச் சேர்ந்தவர் என்பதால் இந்தவழியாக அவரின் பயணம் அவர்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியிருந்த்தாகவும் அவர் அருகில் இருந்தவருடன் உரையாடும்போது அறிய முடிந்தது. மீண்டும் இப்போது அரை மணி நேரத்திற்கு மேலாக எங்களின் காத்திருப்பு…இப்போது எல்லோரும் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் விடுபட்ட மூவரையும் தேடி மீண்டும் விமான நிலையத்தின் சுங்கப்பகுதிக்கு செல்ல ஆயத்தமானார்கள் அந்நேரம் இரண்டு கைகளிலும் பெரிய பெரிய கைப்பிடிகள் போட்ட மதுப்போத்தல்களும் கையுமாக அந்த மூவரும் வந்து சேர்ந்தார்கள். வெளிநாட்டு மதுவகை பயணப்பொதிகளுக்குள் அடக்கம் இல்லை என்பதால் அவர்கள் பிரத்தியேகமாக எங்களுடைய யாழில் பிரபலமாக பேசப்படும் மதுவகைகளை விமான நிலையத்திலேயே வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள். பயணிகள் எல்லோரையும் எரிச்சலூட்டி அந்த மூவரும் நடுத்தரவயதைக் கொண்ட வட இந்தியர்கள்

(தொடரும்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடர்கள் என்றாலே படிப்பதை குறைத்துக் கொண்டு வந்தாயிற்று...உங்கள் தொடருக்குள் என்னை இழுத்தது படங்கள்.பகிர்வுக்கு நன்றிகள் அக்கா..எழுத்துப் பிழைகளை கவனத்தில் கொள்ளுங்கள்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் உங்க "த்..த்..தொடர் ரீலை " (இப்ப தானே சுத்தத் தொடங்கியிருக்கின்றீர்கள்) வாசிக்க நேர்ந்தது... இது வரமா? சாபமா? :D :D

படங்களையும் அதற்கான குறிப்புகளையும் மறவாது போடுங்கள். உங்கள் பயணத்துடன் நாங்களும் ஒட்டவும் உதவும்.

வர வர நீங்களும் (பச்சை மதர்போர்ட்டில் கட்டிய ஈயக்குடுவைகள்போல்) எழுத்தாளர் சுஜாதா ரேஞ்சுக்கு டெக்னிகலா :lol: :D முன்னேறுறீங்க..

வாழ்த்துக்கள்.. :D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.