Jump to content

பயணங்கள் முடிவதில்லை :)

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நந்தன் தமிழ்சூரியன், குண்டு மாங்காய்த்தோப்பு பாட்டுப் போட்ட உடையார் அனைவருக்கும் நன்றிகள் பயணங்கள் தொடர்கிறது. கூடப்பயணியுங்கோ... :rolleyes:Quote: "அவ்விடத்தை விட்டு விலகி வெளியே வந்த எமக்கு ஒரு விளாட் மாமரத்தின் காய்கள் கண்களை உறுத்தின.
different-species-of-mango.jpg

வேறு சிலரும் சில மாங்காய்களைப் பறிக்க முயற்சித்து விலக…என்னுடைய வீட்டுக்காரன் தன்னுடைய வீரத்தைத் திரட்டி இரண்டு மாங்காய்களை வீழ்த்தி எனது கைகளில் தந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார்"

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள், இது உங்களால் வெளியில் சொல்லக்கூடிய விடயாமா? உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களே ஊக்குவிக்கின்ற மாதிரியான செயல் மாதிரி தெரியவில்லையா? 

நல்ல தொடர் தொடருங்கள், இந்த இடத்திற்க்கு போக ஆசையை தூண்டுகின்றூர்கள்....

எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா :lol: :lol: :icon_mrgreen:

Link to post
Share on other sites
 • Replies 187
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

சகாரா

ஆரமபத்தில் வாசித்துப் பார்த்தேன் நன்றாக இருந்தது. தொடர் முடிந்த பின் வாசித்து விட்டுப் பதிவிடலாம் என்றிருந்தேன். எனக்கொரு கெட்ட குணம், தொடர் முடிந்தவுடன் முளுதாகத்தான் வாசிப்பேன்.

'சீரியல்' விளம்பரம் மாதிரி நீண்ட இடைவெளி விடுகிறீர்கள். lol

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயணங்கள் முடிவதில்லை - 8

ஏழ்மைப்பட்ட நாடுகளுக்கு சுற்றுலாவுக்கு தனியாகச் செல்லும் ஆண்கள் அங்குள்ள பெண்களுடன் பணவலிமையால் சிநேகிதத்தை ஏற்படுத்தி தாம் அங்கு தரித்து நிற்கும் காலம்வரை அவர்களைத் தங்களுக்கு இசைவாக வைத்திருப்பார்கள். எல்லா ஆண்களையும் அப்படி இருக்கிறார்கள் என்று சொல்லாவிட்டாலும் கணிசமான அளவு தனியாகச் செல்லும் ஆண்கள் இப்படியான நிலையிலேயே அதிகமாக உள்ளனர். எம்முடைய சமூகத்தை விட மேலைத்தேச சமூகங்களில் இவை அதிகம். மூன்றாந்தர நாலாந்தர நாடுகளில் நிலவும் ஏழ்மையும் வெளிநாட்டு மோகமும் அந்நாட்டில் வறுமையில் இருக்கும் பெண்களின் மனதில் ஆக்கிரமிப்புச் செய்யும் காரணத்தால் சுற்றுலாவுக்கு வந்த ஆண்களின் ஆசைநாயகிகளாக அவர்களும் வலம் வருவார்கள். ஆகக்கூடியது 2 வாரமே. தொடர்ந்து பழையவர்கள் செல்ல புதியவர்கள் வரவு என்று அவர்கள் வாழ்க்கை நிலையற்று அந்தர வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு நிலையான வாழ்வு அமைவதில்லை. வாரவாரம் மாறும் சூழலுக்கு ஏற்ப தம்மை துரிதமாக மாற்றிக் கொள்ளும் இத்தகைய பெண்கள் (இத்தகைய பெண்கள் என்று குறிப்பிடப்படும் பெண்கள் அநேகமாக அங்குள்ள சுற்றுலா விடுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்களாக இருப்பார்கள் பார்வைக்கு மிகவும் இலட்சணமாகவும் வாளிப்பானவர்களாகவும் சிக்கென்றும் அவர்களின் தோற்றம் இருக்கும்) சந்தர்ப்பவசத்தால் தாய்மை நிலையை எட்டும்போது அவர்களுக்கு மிகப்பெரும் சோதனை உருவாகிறது. அமர்த்தப்பட்ட வேலையால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட உள்ளூரில் அவர்களைத் தெரிந்தவர்கள் சிலர் வாழ்வளிப்பதும் பலருக்கு வாழ்வே கேள்விக்குறியாக மீண்டும் மகப்பேற்றுக்குப்பிறகு மீண்டும் வேறு இடங்களில் வேலைக்கு அமர்வதும் தொடர்ந்தும் தவறுகள் நிகழ்வதுமாக அந்தப் பெண்களின் வாழ்க்கையின் ஓட்டம். அப்படியான ஒரு பெண்ணின் குழந்தைதான் இந்தத் தொடரின் கடைசியாக நான் எழுதிய வரிகளின் சொந்தக்காரி.

howtodrawflowers2.jpg

தந்தையை அறியாத அக்குழந்தைகள் சுற்றுலாவுக்கு வரும் பயணிகளிடத்தில் சிறு காகிதத்துண்டில் ஒரு சின்ன பூவின் படத்தை வரைந்து அதற்குக் கீழே "papa" என்று யாரோ எழுதி கொடுத்த நோட்டை கொடுத்துவிட்டு முகத்தைப்பார்த்தபடி நிற்கும். பயணிகளும் அதை பார்த்துவிட்டு கையில் இருக்கும் பொருட்களை அந்தப் பிள்ளைகளுக்கு பரிசாக வழங்குவர். மேலைத்தேயத்திற்கு இது பெரிய விடயமே அல்ல இதெல்லாம் சாதாரண சங்கதி. தந்தையற்ற அந்தக்குழந்தைகளின் அவலத்தை அந்தச் சுற்றுலாவுக்கு வரும் எத்தனை பயணிகள் உணர்வார்கள்? அந்தக்குழந்தைகளைப் பார்க்கும்போது மனம் கனத்தது. என்னுடைய இளையமகள் அளவு குழந்தை என் துணைவரிடம் கொடுத்த அந்த நோட்டை பார்த்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது என்று முன்பு எழுதியிருந்தேன். காரணம் நிறத்தால் எங்களைப்போல் இருக்கும் அந்தக்குழந்தை papa என்ற எழுத்துக்களுடன் ஒரு பூவின் படத்தை எனது துணைவரின் கைகளில் கொடுத்துவிட்டு நின்றபோது ஒரு தடவை பூமி ஆடிப்போனதுபோல உணர்ந்தேன். துணைவரைப்பற்றி நன்றாக அறிவேன் இருந்தாலும் ஒரு ஊடலை இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்வோம் என்று மனம் சிந்தித்தது. பின்ன அங்கு போக ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரு சண்டை...  ஒரு பேச்சு... ஒரு கோபம் எதுவுமே இல்லாமல் வாழ்க்கை சப்பென்று இருந்தது :icon_mrgreen: :icon_mrgreen: :D கொஞ்சம் மாற்றவேண்டுமெல்லோ… இன்னும் சில குழந்தைகள் எங்களோடு வந்த மற்றைய பயணிகளிடம் இப்படியான துண்டுக்காகிதத்தைக் கொடுத்துவிட்டு பார்த்துக்கொண்டு நின்றார்கள். காகிதத்தை வைத்துக் கொண்டு சிரித்தபடியே நின்ற வீட்டுக்காரனை முறைத்தபடி தந்தையைத் தேடும் குழந்தையிடம் கையிலிருந்த சொக்லேட்களை கொடுத்து அனுப்பிவிட்டு எப்படியாவது இவரை இன்று டென்சன் ஆக்கவேண்டுமே…” என்ன இது?” நேங் என்று விழித்தார் துணைவர் சற்றும் எதிர்பார்க்காத கேள்வி. மீண்டும் என்னுடைய கேள்வி அவரைத்துளைத்தது. "அடி உனக்கு அறிவிருக்கா? யாரோ ஒரு பிள்ளை தந்ததற்கு இப்படி கேட்கிறாய்?" அவருடைய அப்பாவித்தனத்தை மனதிற்குள் இரசித்தபடி பீறி வந்த சிரிப்பை கொடுப்புக்குள் மறைத்தபடி நான் கோபமாக இருப்பதாக கொஞ்சம் நடித்தேன். தவிப்போடு அவர் என்னை சமாதானப்படுத்த எத்தனித்தார் ஆனால் என் திட்டம் தெரிந்து விட்டதுபோலும். கணக்கிலேயே எடுக்காமல் விட்டுவிட்டார்.

தொடர்ந்து எங்களுடைய வாகன அணி இன்னும் ஒரு இடத்தை நோக்கி சென்றது.  img5849t.jpg

அட எங்களுடைய நிலாவரை ஆமாம்  அதனை ஒத்த ஒரு ஆழமான நீர்நிலையை அண்மித்தோம். இதன் சிறப்பு என்ன என்றால் இது ஒரு பெரும் பாறைத்தொகுதியின் உள்ளகத்தில் அமைந்திருந்ததுதான் கிட்டத்தட்ட அந்தக்கற்பாறைகளில் இயற்கையாக அமைந்த சமாந்தர வெளிக்கு தாழ்வாகச் சென்ற பாறைப்பாதையினூடாக சென்றால் இவ்விடத்தை அடையலாம். நெடிந்துயர்நத மரங்களில் இருந்து விழுதுகள் இந்த பள்ளத்தாக்கில் படர்ந்திருக்க த்ரில்லான ஆங்கிலபடங்களின் காட்சி மனதிற்குள் ஓடியது.

 img5858u.jpg

கீழ்நோக்கிய பாதை மருங்கில் இரு பக்கமும் உள்ளுர் வாசிகளின் கைவேலையில் உருவாக்கப்பட்ட சிறு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அத்தோடு கிடைத்தற்கரிய  அடையாளங்களையுடைய சிறு கற்களையும் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள் ஞாபகத்திற்காக சிலர் அவற்றை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள் அகழ்வாராய்ச்சிக்காரர்களுக்கு உபயோகப்படும். :icon_idea:

 img5853v.jpg
img5854bh.jpg

நாம் கீழே செல்லச்செல்ல கீழிருந்து ஈரம் சொட்டச் சொட்ட பலர் மேலே வந்துகொண்டிருந்தனர்.

img5867xf.jpg

பாறைகளால் மூடிய இருளான பகுதிக்குச் செல்லும்போது 'தொபீர் தொபீர்" என்ற சத்தம் அந்த குகைக்குள் எக்கோ பண்ணிப்பண்ணி ஒலித்தது. முன்னுக்கும் பின்னுக்கும் வந்தவர்கள் மேலாடைகளை களைந்து விட்டு இந்த  புன்ரக்கானாவின் ஆழமான நிலாவரைக்குள் குதித்து நீச்சலடித்தார்கள். அந்தக் குறுகிய ஆழமான தண்ணீரில் குதித்தவர்கள் இலகுவாக தெப்பம்போல் மிதந்தார்கள். தண்ணீர் அவர்களை உள்ளே அனுமதிக்காததுபோல் தென்பட்டது :unsure: இதற்கு எதேனும் விங்ஞான விளக்கம் இருக்கலாம். என்னுடைய புகைப்படக்கருவி அவர்களைப்படம் பிடிப்தோடு நிறுத்திக் கொண்டது.

img5876i.jpg

இப்படி ஒரு தொடரை எழுதுவதற்கு அப்போதே நினைத்திருந்தால் சில :icon_mrgreen: :icon_mrgreen: சில்மிசக்காட்சிகளைப்பதிவு செய்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது…. சரி இங்கிருந்தும் புறப்பட்டாச்சா இனிப்புழுதிபற்றைக்காடுகள் ஊடாக மீண்டும் நாம் ஆரம்பித்த இடத்தைச் சென்றடைந்தோம். அங்கு நாங்கள் செய்த பூகி ரைட்சின் படங்களை சீடியில் பதிந்து பெற்றுக் கொண்டு விடுதியை நோக்கி பழைய தட்டி வானில் இன்னும் சில சோடிகளுடன் புறப்பட்டோம். பரட்டைத் தலைகளுடன் மண்சுமந்த மேனியராக பிள்ளைகளும் அப்பாவும் தெரிய அந்தத் தருணத்தை படம்பிடிக்கும் ஆர்வத்தில் நான் அவசரப்பட அந்தத் தோற்றத்தை படம் பிடிக்கவேண்டாம் என்று துணைவர் தடுக்க புகைப்படக்கருவி வைதவறி கீழே விழுந்து மோதியது. :o

இன்னும் வரும். :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாரா

ஆரமபத்தில் வாசித்துப் பார்த்தேன் நன்றாக இருந்தது. தொடர் முடிந்த பின் வாசித்து விட்டுப் பதிவிடலாம் என்றிருந்தேன். எனக்கொரு கெட்ட குணம், தொடர் முடிந்தவுடன் முளுதாகத்தான் வாசிப்பேன்.

'சீரியல்' விளம்பரம் மாதிரி நீண்ட இடைவெளி விடுகிறீர்கள். lol

ஆரு தப்பிலியா? பரவாயில்லை தொடர் அப்பிடி இப்பிடித்தான் ஆமையாத்தான் நகரும். வீட்டிலே இருந்திருந்தால் எப்போதோ எழுதி முடித்திருப்பேன் வேலை இல்லையா.... வீட்டிலும் அதிக சுகமான சுமைகள் இவற்றைக்கடந்து வந்துதான் படைப்பிலக்கியத்தில் இறங்க வேண்டி இருக்கிறது. இயல்புக்கு மாறான எழுத்து ஒரு கை பார்க்கவேண்டும் என்ற உந்துதல்....விரைவாக எழுதி முடிக்க முயற்சி எடுக்கிறேன். ....இருந்தாலும் இந்தப்பக்கம் எட்டிப்பார்த்து பதிவிட்டதற்கு நன்றிகள் தப்பிலி :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா!

எனக்குள், கொஞ்ச நாளாக ஒரு குழப்பம்!

வல்வைக்கு மறதி கூடவா, அல்லது வேலைப்பழு கூடவா என்று!

இப்போது பத்தி கிடைத்து விட்டது! :D

தொடருங்கள் வல்வை!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
அப்பாடா!

எனக்குள், கொஞ்ச நாளாக ஒரு குழப்பம்!

வல்வைக்கு மறதி கூடவா, அல்லது வேலைப்பழு கூடவா என்று!

இப்போது பத்தி கிடைத்து விட்டது! :D

தொடருங்கள் வல்வை!

:icon_mrgreen:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_mrgreen:  :icon_mrgreen:

fefecffb1a56f881c66e5172ca73faf9.jpgவல்வைநன்றாக உள்ளது,  நீங்க நித்திரை கொள்ளாமல் விரைவில் முடியுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen:

வல்வை, இப்போது பதில் கிடைத்துவிட்டது என்று வந்திருக்க வேண்டும்!

வர வர, இந்தக் கூகிள் ரொம்பவும் மோசம்!

இனி, நீங்கள் அந்த பச்சை முகக்குறியை நீக்கிவிடலாம்! :o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயணங்கள் முடிவதில்லை – 9

பொதுவாக வீடாக இருந்தாலும் வெளியிடங்களாக இருந்தாலும் ஏன் இந்தத் தொழில் நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் சினிமா என்றாலும் சீரியல் நாடகங்கள் என்றாலும், தொலைக்காட்சி விவாதங்கள் ஆகட்டும், நாகரீகம் மேம்பட்ட இடமாக இருந்தாலும், நாகரீக வளர்ச்சி குறைந்த இடமாக இருந்தாலும் எல்லா இடத்திலும் பெண்கள் மீதான ஒரு பொதுமைக்கருத்து இருக்கிறது. பெண்கள் எதையும் திருப்திகரமாக ஏற்கும் பக்குவம் இல்லாதவர்கள் திருப்தியற்றவர்கள். இதற்காகவே வேலை மினெக்கெட்டு நிறையப்பேர் கவிதைகள் , கதைகள் , கட்டுரைகள் ,ஆய்வுகள் என்றெல்லாம் எழுதித்தளிளியுள்ளார்கள். இது எவ்வளவு தூரம் உண்மையென்பதை பார்த்தால் விகிதாசாரத்தில் குறைவான ஒரு பகுதியே இத்தகைய கருத்திற்கு உரியவர்களாகவும் விகிதாசாரத்தில் பெரும் பகுதியினர் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைபவர்களாகவும் இருப்பது கண்கூடு… என்னடா இவ பயணக்கட்டுரையையும் அனுபவங்களையும் எழுதும்போது தேவையில்லாத ஒன்றிற்குள் நுழைந்து அளக்க ஆரம்பித்துவிட்டா என்று நினைப்பது தெரிகிறது. எல்லாம் காரணமாகத்தான்.

நேற்றைய நாளின் புழுதிகுளியலை தொடர்ந்து விடுதிக்கு வந்து இரவு உணவு விடுதியில் இருந்து திரும்பும்போது சாப்பிடக்குடிக்கத் தெரியாததுகளை கூட்டி வந்து அநியாயமாக பணத்தைச் செலவழித்ததாக நொய் நொய் என்று மனுசனின் புறுபுறுப்பு என்னப்பா செய்ய இந்தச் சாண் வயித்திற்கு எங்களால இவ்வளவுதான் சாப்பிட முடியும். பிள்ளைகளோ விளையாட்டு பிராக்கில்….

முழு பன்றியையும், மாட்டு தொடையையும், வான் கோழியையும் வகைவகையாக சுட்டு வைத்திருந்தார்கள். பாண்வகை, பழங்கள், கேக் வகைகள், வகைவகையான அன்னவகை, தானிய உணவுகள்,யெலி இனிப்புகள் என்று ஒரு உணவுக்குவியலுக்குள் போய் நிற்கும்போதே சுட்ட இறைச்சியின் வாசனை வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. அதிக நேரம் அவ்விடத்தில் நின்றால் வயிற்றுக்குள் இல்லாத உணவு ஓங்காலிப்பாக குடலை வெளியே இழுத்துப் போட்டுவிடும் போல இருந்தது. ஒருவழியாக நாசியின் துவாரங்களின் ஊடாக சுவாசிப்பதைத் தவிர்த்து வாயால் சுவாசித்துக் கொண்டு இரண்டு அன்னாசித்துண்டுகள் ஒரு தார்ப்பூசணித்துண்டு, இரண்டு பப்பாளிப்பழத்துண்டுகள் இவற்றுடன் ஒரு துண்டுப் பாணைச் சாப்பிட்டதற்காக இரவு தூங்கும் வரை ஒரே பேச்சு….ஆயிரம் நுளம்புகள் கடிக்கும் இடத்தில் போய் படுத்திருந்தாலும் நிம்மதியாகத் தூங்கியிருப்பேன். வந்த கோபத்தில் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை போர்த்திக் கொண்டு தூங்கிப்போனேன் பக்கத்தில் பீத்தல் சீலையை வச்சு காதிற்குள் டர் டர்ரென்று கிழிச்ச சத்தத்தில கொஞ்சம் எரிச்சலுடன் கூடிய தூக்கந்தான் வந்தது.

அடுத்தநாட்காலை இனிமையாக புலர்ந்தது. இன்று வெளியே எங்கும் செல்லாமல் விடுதிக்கான உல்லாசப்பயணிகள் கடற்கரையில் கழிப்பது என்று முடிவெடுத்தோம். காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு அங்கு செல்லும் வேளையில்……இடை மறித்த முகவர் ஒருவர் சில சலுகைகள் அடங்கிய தற்சமயம் நாம் தங்கியிருக்கும் விடுதியில் இல்லாத பலவகையான சிறப்புகள் அடங்கிய ஒரு இடம் பற்றி துணைவருக்குத் தெரிவித்து அதற்குப் போக உங்களுக்கு விருப்பமா அப்படி விருப்பமானால் நீங்கள் சில விண்ணப்ப்ப் படிவங்களை நிரப்பவேண்டும் என்று கூறினார். முக்கியமாக அதன்பால் நம்மாள் ஈர்க்கப்பட வாய்ப்பிருந்தது. நாங்கள் கனடாவில் இருந்து புறப்படும் முன்னர் கூகுள் மூலம் தேடிப்பார்த்த இடங்களை பார்க்கும் எவருக்கும் இயல்பாகவே பிடிக்கும் அத்தகைய வனப்பு மிக்க படங்கள் அவை. ஆனால் நாங்கள் சென்று தங்கிய இடம் அத்தகையது இல்லை… அந்தப்படங்களுக்குரிய இடங்களைத் தேடுவதில் துணைவருக்கு ஆர்வம் இருந்தது. அவருடைய ஆர்வத்திற்குரிய அவ்விடங்களுக்கு நாங்கள் செல்லவேண்டுமென்றால் இந்த விண்ணப்பங்களை நிரப்பினாலே சாத்தியம்… ஆனால் இதில் பெரிய சிக்கலே அடங்கியிருந்தது. அதாவது மேலதிக பணத்தை நாங்கள் செலுத்தவேண்டும். முட்டாளத்தனமாக மேலதிக பணத்தைக் கொடுத்து அவ்விடத்திற்கு செல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது இருப்பதில் திருப்தியாக பிள்ளைகளுடன் அனுபவித்துவிட்டு வருவோம் என்ற என் கருத்தைக் கேட்காமலே….அதிகபடியான பணத்தைச் செலுத்தி விண்ணப்பப்படிவங்களை நிரப்பிக் கொடுத்தார். இதற்காகத்தான் மேலே எழுதினேன் இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் தன்மை ஆண்களிடம் கிடையாது….. அன்றைய பகல் பொழுது இந்தப்பதிவுகளுடன் கடக்க நாங்கள் சிறப்பு சலுகைகள் பெற்று தொடர்ந்து வரும் நாட்களில் தங்கப்போகும் விடுதியையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் காட்டுவதற்கு அவர்களுடைய பிரத்தியேக மினிவான் ஒன்றில் புறப்பட்டோம் நாங்கள் ஏற்கனவே தங்கியிருந்த விடுதியிலிருந்து ஒரு 5 கிலோமீட்டர் தூரத்தில் அந்த விடுதி அமைந்திருந்தது… எங்களை விடுதியைக்காட்ட அழைத்துச் சென்ற முகவர்கள் ஓரிடத்தைச்சுட்டிக்காட்டி இது சிறீலங்கன் தமிழ்ஸ் வாங்கி விட்டிருக்கும் நிலப்பரப்பு என்று காட்டினார்கள்… சிறு பற்றைகளாக நீண்ட தூரத்திற்கு சில வேப்பமரங்களுடன் அந்தப் பெருங்காணி பிரயோசனம் அற்றதாக இருந்தது…மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலாத்தளத்தை அண்மித்ததாக இருந்த அக்காணியை வாங்கியவர்கள் பயிரச்செய்கைக்குப் பயன்படுத்துவார்களா அல்லது உல்லாச விடுதிகளைக்கட்டி பயணிகளுக்குப் பயன்படுத்துவார்களா என்று மண்டைக்குள் கேள்வி குடைந்து கொண்டிருக்க… விசேட சலுகைகள் அடங்கிய புதிய விடுதிக்கு வந்திறங்கினோம்.

img6059s.jpg

பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. இங்கு தொடர்மாடிகளாக விடுதிகள் இல்லை. ஒரு கட்டிடம் நாலு மூலைகளையும் முகப்புகளாக அமைக்கப்பட்ட புதிய கோணத்தில் அறைகள் முகப்பு காற்றோட்டமான வராண்டா, உள்ளே ஒரே சமயத்தில் இருவர் குளிக்கவும், இருவர் முகங்கழுவவும் வசதியான பெரிய குளியலறைகள், அதற்கு மேலதிகமாக யகூசி ….கோப்பி மெசின் , தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி,சோபா, இரண்டு படுக்கை அறைகள் மிக்க் கச்சிதமாக வடிவமைத்திருந்தார்கள். வெளியே எங்கு பார்த்தாலும் சோலைகள், பக்கத்தில் பயமின்றி சேர்ந்து நடக்கும் தோகை மயில்கள்… புன்ரக்கானாவிலே அமைந்திருக்கும் மிகப் பெரிய கசினோ,…. ஓ…. இது விஐபிகள் தங்கும் ஏரியா… கடற்கரையை அண்மித்த பகுதியில்

திறந்தவெளி மசாச் பார், எல்லைகள் நாலாபக்கமும் போடப்பட்ட கடற்கரைப்படுக்கைகள் அதுவும் மெத்தையுடன் கூடியவை……

1155832351.jpg

அந்த விடுதிக்கு அருகமையிலேயே இலவச இன்ரநெற் வசதிகள்….. சரி நம்ம யாழில் என்னதான் நடக்கிறது என்று எட்டிப்பார்ப்போம் என்று இன்ரநெட்டில் யாழைத் தேடி உள் நுழைந்தால் சுபேசும், யீவாவும் திண்ணையில் கதையளந்து கொண்டிருந்தார்கள் அப்படியே அவர்களுக்கும்  கலோ சொல்லிவிட்டு இணையத்தை விட்டு வெளியே வந்து மீண்டும் பழைய இருப்பிடத்தை வந்தடைந்தோம் இதற்குள் மதிய உணவு இன்று அப்படியும் இப்படியுமாக பெரிய அளவில் உண்ணவில்லை… நிறையவே களைத்துப்போனோம் நாளை டொல்பின் மீன்களுடன் நீந்துவதற்கு “மனாட்டிப்பார்க்”குக்கு செல்வதற்கான பதிவை முகவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு அந்த அந்தி சாயும் பொழுதில் நீச்சல் குளத்தில் இறங்கி அங்கு மற்றவர்கள் போடும் கும்மாளத்தை மிக மிக இரகசியமாக குறும்புடன் இரசித்தபடி….. நகர்த்தி முடித்தது அன்றைய நாள்.

இன்னும் வளரும் :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ithu Bavaro Priences ah?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
இன்னும் வளரும் :rolleyes:

அடிக்கடி தண்ணி ஊத்துங்கோ அப்பதான் கெதியா வளரும் :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
கட‌ற்கரை மண்ணைப் பார்க்க ஆசையாய் இருக்குது...நீங்கள் கதையை சீக்கிர‌ம் தொட‌ரா விட்டாலும் பர‌வாயில்லை அக்கா பட‌ங்களையாவது போடுங்கோ :lol:
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ithu Bavaro Priences ah?

சபேசு இது Bavaro Princess தான் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டேன். அங்கு சென்றிருக்கிறீர்களா? :rolleyes:

அடிக்கடி தண்ணி ஊத்துங்கோ அப்பதான் கெதியா வளரும் :lol:

நராங்கி நராங்கி வளரவதும் நல்லது என்று யாரோ சொன்னாங்கப்பா. :lol:

கட‌ற்கரை மண்ணைப் பார்க்க ஆசையாய் இருக்குது...நீங்கள் கதையை சீக்கிர‌ம் தொட‌ரா விட்டாலும் பர‌வாயில்லை அக்கா பட‌ங்களையாவது போடுங்கோ :lol:
 
படங்கள் போடும்போது சில படங்களை கூகுல் மூலமாகவே தருவிக்கவேண்டி உள்ளது. கடைசிப்பதிவில் முயற்சித்த நாலைந்து படங்களை இணைக்க முடியாதபடி யாழ் இணையக்கட்டுப்பாடுகள் உள்ளன. முடிந்தவரை இன்னும் சில நாட்களுக்குள் பயணங்கள் முடிவதில்லை தொடரை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவேன். நன்றி ரதி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கணவர் பணம் கட்டி புது இடத்திற்கு அழைத்துச் சென்றதும் பிரியோசனமாத்தானே இருந்தது..  :rolleyes:  இதுக்குள்ளை ஆண்கள் மேலை அபாண்டமான பழி வேறை.. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பயணத்தை மட்டுமன்றிப் பல மனோவியல் சம்பந்தப் பட்ட விடயங்களையும் தொட்டுச் செல்வது, எழுத்தாளரின் தனித்துவமாகும்!

இந்த முறையாவது, வல்வையிடமிருந்து, பச்சைக் கலர்ல, சிரிப்பு அடையாளம், வாங்காமல் இருக்க வேணும்! :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கணவர் பணம் கட்டி புது இடத்திற்கு அழைத்துச் சென்றதும் பிரியோசனமாத்தானே இருந்தது..  :rolleyes:  இதுக்குள்ளை ஆண்கள் மேலை அபாண்டமான பழி வேறை.. :lol:

ஓ.....

கொழுவிவிடப் பாக்கிறீங்களா முடியாதே :lol: :lol:

ஏன்ன நம்ம எழுத்தை நம்மாள் வாசிக்கிறேல்லை என்ற முடிவோட இருக்கார்..... உங்களுடைய அபாண்டப் புகார் எடுபடாது <_<

பயணத்தை மட்டுமன்றிப் பல மனோவியல் சம்பந்தப் பட்ட விடயங்களையும் தொட்டுச் செல்வது, எழுத்தாளரின் தனித்துவமாகும்!

இந்த முறையாவது, வல்வையிடமிருந்து, பச்சைக் கலர்ல, சிரிப்பு அடையாளம், வாங்காமல் இருக்க வேணும்! :D

அதுக்குப் பிறகும் பச்சையாகச் சிரிக்கிற மாதிரித்தான் எழுதியிருக்கிறீங்க ரோமியோ...... :lol:

மனோவியல் சம்பந்தமாவா எங்கே? :unsure:

இவர் எக்கச்சக்கமாக யோசிக்கிறார் போல இருக்கு... :o

நன்றாக இருக்கின்றது, இன்னும் வாசிப்போம்...........

தொடர்கிறேன் வாசியுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயணங்கள் முடிவதில்லை – 10

பெண் பலமும் பலவீனமும் அதிகம் உள்ள மானிடவிலங்கு. பலம் எது பலவீனம் எது என்பதை ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளின் இயல்புகளே தீர்மானிக்கின்றன. அதிலும் முக்கியமாக அவள் வளரும் சூழல் அவளை சிறிது சிறிதாக வனைந்து கொள்கிறது. சுற்றிலும் இருக்கக்கூடிய காரணிகள் பெண்ணின் பலத்தையும் பலவீனத்தையும் ஓரிடத்திலேயே மையப்படுத்தி விடுகின்றன. அப்படிப்பட்ட பலம், பலவீனம் வெளிப்படும் இடங்கள் அவர்களை அடியோடு சாய்த்துவிடுவதும் உண்டு. அளவுக்கதிகமாக உச்சத்தில் இருத்திவிடுவதும் உண்டு. ஆண்களின் பலவீனம் பெண்களை பலமுள்ளவர்களாகவும், ஆண்களின் பலம் பெண்களைப் பலவீனமானவர்களாகவும் ஆக்கிவிடுவதை எத்தனையோ இடங்களில் கண்டுள்ளோம். ஒரு அழகிய பெண் இலகுவாக ஆண்களை முட்டாள் ஆக்கிவிடுவாள். அப்பட்டமாக பெண்கள் சார்ந்த இளகிய மனம் படைத்தவர்கள் சில சமயங்களில் தெரிந்துகொண்டே ஏமாறுவதுண்டு. பெண்ணின் சிரிப்பிலும் பார்வையிலும் வெளிப்படும் நளினம் ரசிக்க்க்கூடியதாக இருந்தாலும் பல சமயங்களில் அவை உண்மையற்றவையாகவும் வேசங்கள் நிறைந்ததாகவும் வெளிப்பட்டு ஒட்டு மொத்தப் பெண்களையும் எதிர்பாலர் ஏளனிக்கும், இழிந்துரைக்கவும் வழிசமைத்துவிடுகிறது. ஆண்கள் நளினமாகவோ கம்பீரமாகவோ சரசப்பார்வைகளை வீசினாலும் பெண்கள் அளவுக்கு அவர்களால் வெற்றியடைய முடிவதில்லை. பெண்கள் எவ்வளவு தூரம் கவர்ச்சியாகத் தெரிகிறார்களோ அவ்வளவுக்கும் அதிகமாக அவர்களைச்சுற்றி வன்முறைகளும் பலாத்காரங்களும் இருக்கின்றன. சுய பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கும் இவர்கள் வர்த்தக ரீதியில் எப்போதும் முன்னிறுத்தி வைக்கப்படுகிறார்கள். வர்த்தக ரீதியில் சிரிக்க ஆரம்பிக்கும்போது சங்கடப்படும் பெண் கால ஓட்டத்தில் சிரிப்பையும் சரளமான கவர்ச்சியான உரையாடல்களையும் வெகு இலகுவாக செயல்படுத்தி வெற்றியடைந்து விடுகிறாள். இந்த இசைவாக்கத்திற்கு பொருளாதாரமே முக்கிய காரணியாக அமைந்துவிடுகிறது. ஒரு பெண்ணாக இருந்து பொதுவாக பெண்களை விமர்சிப்பது உங்களுக்குள் வியப்பை உருவாக்கி இருக்கலாம். இந்த இடத்தில் இதனைப்பதிவிடுவது தேவையாக இருக்கிறது.

1735424-Manati_Park_Punta_Cana_DR_Punta_

இன்று நாலாம் நாள் மனட்டிப் பார்க் நுழைவாசலுக்குள் முற்பகல் 11 மணியளவில் நுழைந்தோம். பற்றுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு உள்பக்கம் நுழைய….. இரண்டு பஞ்சவர்ணக்கிளிகளுடன் வந்த அந்தப்பார்க்கின் ஊழியர் கிளிகளை எங்களிடம் தந்து படம் எடுக்கும்படி கேட்டுக கொண்டார். கையில் கமேராவை வைத்திருந்த நாமும் விசயம் தெரியாமல் கடகடவென்று பல படங்களுக்கு சிரித்து வைத்தோம். பெரிய பெரிய கிளிகளைத் தோளிலும் கையிலும் வைத்திருந்த மகிழ்வில் பின்னுக்கு வரப்போகும் செலவை உணரவில்லை. அங்கிருந்து அந்தப்பார்க்கை சுற்றிப்பார்க்கப் புறப்பட்டபோது முகப்பில் இருந்த சின்ன சின்ன கடைகளில் இருந்து விற்பனைப் பெண்களும் ஆண்களும் வெளியே வந்து ஒவ்வொரு பயணிகளிடமும் பேச ஆரம்பித்துவிட்டார்கள் அன்புத் தொல்லையாக இருந்தது அவர்களுக்கு வியாபாரம் நடக்கவேண்டும்.

img6016mt.jpg

எங்களை நோக்கியும் வலிந்து சிரித்தபடி அழகான இளம்பெண் ஒருத்தி வந்தாள். மிகவும் சிநேக பூர்வமாக என்னை அணுகி கை குலுக்கி கதை கொடுக்க ஆரம்பித்தாள். அவள் வியாபாரத்திற்காகத்தான் எம்மை அணுகுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டதால் அவள் எம்மை நோக்கி வரும்போதே தமிழில் துணைவரை எச்சரித்தேன். இளம் பெண்கள் அநேகமாக ஆண்களை நோக்கி தமது வியாபாரத்தை மேற் கொள்ளும்போது அதிகமாக வெற்றியடைவார்கள். இதற்கு எனது வீட்டுக்காரனும் விதிவிலக்கல்ல…. பொதுவாகவே யார் உதவி கேட்டாலும் எதிர்காலம் பற்றி யோசிக்காமல் தன்தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டுவதில் வல்லவரான துணைவர் பெண்பிள்ளைகள் வாயிழந்து கேட்டால் பாவம் என்று சொல்லி இரக்கம் காட்டி உதவுவதில் நம்பர் 1…. காரணம் இல்லாமல் இல்லை எனக்குத்தான் வாயிழந்து சுயம் தொலைந்து உதவி கேட்கும் பழக்கம் இல்லையே ஒரு வேளை அப்படியான குணம் என்னில் இருந்திருந்தால் மற்றவர்களுக்கு உதவுவதை அதிகம் யோசித்திருப்பாரோ என்னவோ… இருந்தாலும் தன்னிடம் பணிந்து நிற்பதில்லை என்று மனதிற்குள் குறை இருக்கும்போல… அல்லது சரியான கிறங்காதவளைக் கட்டியிருக்கிறேன் என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பாரோ என்று பல சமயங்களில் சந்தேகப்படுவதுண்டு. சொல்ல வந்த கதையை விட்டுட்டு எங்கேயோ போய்விட்டேன்.. என்னுடைய எச்சரிக்கையை உள்வாங்கிக் கொண்டவர் எங்கேயோ வேடிக்கை பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தார்.. அட நம்மை நோக்கிவந்த பெண் புத்திசாலியா அல்லது நம்மைப் போல குணஇயல்பு உள்ளவளா என்று தெரியவில்லை நேரே என்னிடமே வந்து சிநேகமானாள். இந்தாளை ஒரு மனிதனாகவே திரும்பியும் பார்க்கவில்லை. நிறைய பண்பானவளாக இருந்தாள் அவளுடைய ஒவ்வொரு மூமென்டும் எனக்குப் பிடித்துப் போயிற்று. அலைபாயும் கண்களையோ, அலைக்கழிக்கும் சிரிப்பையோ அவளுடைய அழகான முகம் வெளிப்படுத்தவில்லை. மிக நாகரீகமான புன்முறுவல் சிநேகமான பார்வை.. ஓகே அவளுடைய அந்தப் பண்புக்காக அவளிடம் பொருள் ஏதேனும் வாங்குவது என்று தீர்மானித்துக் கொண்டேன். அவளின் கடைக்குள் நுழைந்து பொருட்களைப் பார்வையிட்டு இரண்டு மிக மெல்லிய வெள்ளிச் செயின்களை எடுத்துக் கொண்டேன். மனாட்டி பார்க்கின் ஞாபகார்த்தமாக இரண்டு மாபிள்களால் உருவமைக்கப்பட்ட குட்டி டொல்பின் பென்ரன்களைத் தந்து அதில் பெயர் வரைந்து தரவா என்று கேட்டாள். இரண்டு பெண் பிள்ளைகளின் பெயர்களையும் பதிவிட்டு எடுத்துக் கொண்டேன்.

img5931n.jpg

தொடர்ந்து சில பறவைகளுக்கான சரணாலயப் பகுதிக்குள் சென்றோம். அதிகமாக எதுவும் இருக்கவில்லை. தொடர்ந்து ஆதிவாசிகள் குடியிருப்புப் பகுதிபோல் அமைக்கப்பட்ட ஒரு வலயத்தை வந்தடைந்தோம். ஆதிவாசிகளாக வேடமிட்ட ஒரு குழு அங்குவந்த சுற்றுலாப் பயணிகளுடன் நின்று படங்கள் பிடித்துக் கொண்டார்கள். கையில் கமேரா இருந்தபடியால் நாம் அதனைத் தவிர்த்துக் கொண்டோம் அப்படி இருந்தும் அவர்கள் விடுவதாக இல்லை… படம் எடுப்பது பிரச்சினை இல்லை  3 படங்கள் 20 அமெரிக்க டொலர்கள் அதற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படத்திற்கும் 6 டொலர்கள் என்று செலவு ஏறும். அதைவிட அங்கு தண்ணீர் உணவு இப்படியாக நிறைய செலவு செய்வதற்கான விடயங்கள் இருந்தன.

img5968e.jpg

இந்த ஆதிவாசிகளைப் பார்த்ததும் என்னை அறியாமலே யாழ்களத்து ஆதிவாசியும் எல்லாளமகாராசனும் நினைவுக்கு வந்துவிட்டார்கள். எப்போதோ இவர்கள் எழுதிய வேர்கட்டி ஆடும் ஆதிக்குடியினர் படங்களையும் அலப்பரைகளையும் வாசித்த ஞாபகம். ஆதிவாசிகளின் நடனம் தொடங்கிவிட்டது நிழற்படங்களை எடுப்பதற்காக காத்திருந்த வேளை திடீரென்று கிளிப்பில் எடுத்தால் என்ன என்று எண்ணம் தோன்ற அவர்களின் ஆட்டத்தை அப்படியே பதிவு செய்து கொண்டேன். இது ஒன்றைத்தான் ஆதிவாசிக்காக யாழில் போடுவதற்கு எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டேன்.

இன்னும் வளரும்:rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பயணக்கட்டுரை ஆரம்பித்தபோது ஒருமுறை உங்கள் திரியை எட்டிப் பார்த்தது. பயணக்கட்டுரையில் ஆர்வம் இல்லாததால் மறுபடி வரவில்லை. சரி முடிந்திருக்கும் ஒரேயடியாக வாசித்து முடித்துவிடலாம் என்று வந்தால் இன்னுமே முடிக்கவில்லை நீங்கள். நன்றாக இருக்கிறது ஆனால் கொஞ்சம் நீண்டுவிட்டது சகாரா. :D

இன்னும் வளரும்

:rolleyes:

நன்றி நன்றி நன்றி. எல்ஸிற்கு தனிமடலில் அனுப்பிவிடுகிறேன். :lol: :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
நீங்கள் பயணக்கட்டுரை ஆரம்பித்தபோது ஒருமுறை உங்கள் திரியை எட்டிப் பார்த்தது. பயணக்கட்டுரையில் ஆர்வம் இல்லாததால் மறுபடி வரவில்லை. சரி முடிந்திருக்கும் ஒரேயடியாக வாசித்து முடித்துவிடலாம் என்று வந்தால் இன்னுமே முடிக்கவில்லை நீங்கள். நன்றாக இருக்கிறது ஆனால் கொஞ்சம் நீண்டுவிட்டது சகாரா. :D

வாசிக்க மிகவும் சிரமப்பட்டுவிட்டீர்கள்போல் இருக்கிறது. :rolleyes:

ஆரம்பத்தில் எழுதத் தொடங்கும்போது எப்படி எழுதப்போகின்றேன் என்ற அச்சம் சிறிது இருந்தது. காரணம் கவிதைகளில் குறுகிய வரிகளுக்குள் எழுதப்படும் விடயத்தை கட்டுரை வடிவங்களில் எழுத முற்படும்போது அதிகமாக எழுதவேண்டுமே... அப்படி எழுதுவது மிகவும் பஞ்சியான விடயம். அதனாலேயே சிறுகதைகள் சில எழுதியிருந்தாலும் அதிகமாக எழுத முற்படாமல் விட்டதற்கான காரணம்.  இந்த பதிவில் எழுத நினைப்பதை எல்லாம் எழுத முடியாமல் எனக்கு நானே சில கட்டுப்பாடுகளை கையாண்டிருக்கிறேன். நீண்ட பதிவா? நீண்ட காலமா? அநேகமாக நீண்ட காலம் எழுத எடுப்பதால் இதை வாசிப்பது நெடுப்பயணம் போன்றது. இருந்தாலும் இதனை இன்று பொறுமையாக வாசித்து பதிவிட்டதற்கு நன்றி சுமேரியர். :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயணங்கள் முடிவதில்லை -11

ஆதிக்குடியினரின் நடனத்தை இரசித்த சுற்றுலாப்பயணிகள் பலர் முறுக்கேறிய அந்த ஆட்டத்தை தாமும் ஆட ஆரம்பித்தனர். இடம் வலமாக அகப்பட்டவர்கள் கையை இழுத்து அவர்கள் ஆடிக் கொண்டிருக்க நாம் அவ்விடத்தை விட்டகன்று டொல்பின் மீன்களின் விளையாட்டுத்திடலுக்கு வந்து சேர்ந்தோம். ஏற்கனவே பேசி இருந்தபடி டொல்பின் மீன்களுடன் நீச்சலில் ஈடுபடுவது என்று அதுவரை நேரமும் உற்சாகமாக இருந்த பிள்ளைகள் இப்போது பயத்துடன் பின்னடிக்க ஆரம்பித்து விட்டார்கள். சரி படமெடுப்பதற்காகவேணும் டொல்பின் நீந்தும் தடாகத்தில் இறங்குமாறு அழைத்தால் அவர்கள் கதறி அடித்துக்கொண்டு எட்டத்தில் போய் நின்று கொண்டார்கள். சரி அவர்களின் அச்சத்தை அதிகரித்து அந்தப் பொழுதை பாழாக்க விரும்பவில்லை.  டொல்பின் மீன்களின் விளையாட்டுத் திடலின் பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டோம். அவ்விடத்தில்

img5998z.jpg

பயிற்றப்பட்ட 2 seals அழகாக மனிதர்களின் ஏவலுக்கு ஏற்றபடி தம்மை இயக்கின. தொடர்ந்து மிகப் பெரிய மாமிச மலையாக அவ்விடத்திற்கு ஒரு Walrus ஒன்றை அவ்விடத்திற்கு அழைத்து வந்தார்கள். கிட்டத்தட்ட 9 அடி நீளமாகவும் எடை.. 900 கிலோக்களுக்கு அதிகமாக இருக்கும்போல் இருந்தது. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அப்பிராணி அவர்களின் சொற்படி அவர்கள் ஆட்டுவிக்கும் திசைக்கு நகர்ந்தும் உருண்டும் நடந்தும் பயணிகளை மகிழ்வித்தது. அதனுடைய அத்தனை அசைவுகளையும் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகளை நோக்கி அதனிடம் முத்தப்பெற்றுக் கொள்ள விரும்புபவர்களை அழைத்தார்கள். இதற்காவது போங்கோ என்று நம்ம ஆட்களை கலைத்து விட்டு படம் எடுப்பதற்கு தயாராக காத்திருந்தேன்… அருகில் சென்றதும் மலைபோன்ற அப்பிராணிக்கு அருகாமையில் செல்லமாட்டோம் என்று அழ ஆரம்பித்துவிட்டார்கள் பிள்ளைகள்.

Male-Atlantic-walrus-resting-on-beach.jp

தொடர்ந்து வரிசையில் பலர் காத்திருக்க… மற்றையோரின் வேண்டுகோளுக்காக பயங்கரமாக நடுங்கியபடி என்வீட்டுக்காரன் அந்த பிராணியின் அழகான :lol:  :lol:  :D  முத்தத்தைப் பெற்றுக் கொண்டு எனக்கு அருகாமையில் வந்தமர்ந்தவரின் கைகளை பற்றிப் பார்த்தேன் இன்னும் நடுக்கம் குறையாமல் அதிர்வதை உணரக்கூடியதாக இருந்தது. முத்தம் எப்படி கிண்டலாக கேட்ட என்னை முறைத்துவிட்டு உன்னைவிட அது பரவாயில்லை என்று வாய்க் கொழுப்புடன் பதிலளித்து விட்டு இன்னும் பதறிக் கொண்டு நிற்கும் அவரைப்பார்க்க சிரிப்புத் தாங்க முடியவில்லை. அந்தப்படத்தை இணைத்தால் நீங்களும் சிரிப்பீர்கள் பட் தனிப்பட்ட படங்களை இணைக்க விரும்பவில்லை. நீங்கள் கற்பனையில் அக்காட்சியை பார்த்து சிரித்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து டொல்பின்கள் தங்கள் விளையாட்டுக்களைக் காட்ட நாங்கள் அமந்ந்திருந்த திடலின் மையத் தடாகத்திற்கு அழைத்து வரப்பட்டன. அரைமணி நேரம் அவைகளின் அட்டகாசமான விளையாட்டுக்கள் நடந்தன.

1301988647EX7U7y.jpg

மிக அருகாமையில் அமர்ந்து அதனை இரசிக்கும்போது மயிர்கூச்செறிந்த்து. மனித விலங்குகள் அந்த கடல்வாழ் உயிரினத்தின் குறும்புகளில் தம்மை மறந்து கிடந்த அற்புதக்காட்சி மறக்க முடியாதது.

img6015t.jpg

அன்றைய மாலை வரை மனட்டி பார்க்கில் கழித்துவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். முன்னிரவு பொழுதை கடற்கரை மணலில் பிள்ளைகளை விளையாட விட்டுவிட்டு அமர்ந்து கொண்டோம். ஆரவாரமற்ற அமைதியான பொழுதில் அந்தக்கடலைப் பார்க்கப் பார்க்க துக்கம் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. “என்னுடைய தாயகத்தில் இல்லாத வளங்களா?.....

tumblr_m3gm2lIKaM1r3a6jho1_500.gif

இப்படி பரிச்சயம் இல்லாத ஏதோ ஒரு நாட்டில் கடலில் கால் நனைத்து மணலில் புதைத்து தொலைந்து போய்விட்ட பழைய நாட்களை நினைவு கூர்ந்து மனதில் குமுறி உலகம் என்ற பரப்பில் மிகக் கொடூரமாக வஞ்சிக்கப்பட்ட இனமாக உலகெங்குமாக சிதறிய உறவுகளாய் வாழும் இடங்களில் தனித்தீவுகளாய்……” அந்தக்கடலின் ஒவ்வொரு அலைகளும் மறக்காதே மறக்காதே என்று கோபத்தோடு இரைவாதாக பட்டது. இதுநாள் வரை பேசிக் கொள்ளாத நிறைய சிறுபிராயக்கதைகளை நாம் இருவரும் பகிர்ந்து கொண்டோம். பேசவிரும்பாமல் இதுவரைகாலமும் எனக்குள் ஒளிந்திருந்த ஒருத்தி தைரியமாக வெளியே உலவ ஆரம்பித்தாள். பாவம் துணைவர் தாங்கிக் கொண்டார். மிகவும் தெளிவானதாகவும் மனப்பாரங்கள் குறைந்த பொழுதாகவும் அன்றைய இரவு கழிந்தது.

மறுநாட் காலையில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி bavara Princess இற்கு மாறிக் கொண்டோம். மதிய வேளையில்… கணனியில் யாழ்க்களத்தை எட்டிப் பார்த்தேன். யாழின் உறுப்பினர் அர்யூனின் தாயார் காலமாகிய துக்கமான செய்தி இருந்தது. அர்யூனின் அம்மா ஒரு ஆசிரியர். கனெடிய வானொலிகளில் 90 களின் மத்திமத்தில் மிகவும் தெளிவான கருத்துரையாடல்களுக்குச் சொந்தக்கார்ர். ஒரு நாளும் அவரை நான் நேரே கண்டதில்லை இருப்பினும் அவருடைய ஆக்கங்கள் கருத்துக்கள் எப்போதுமே நான் விரும்பி வானலைகளில் கேட்கும் விடயங்களாக இருந்தன. அவருடைய இறுதி நிகழ்வில் நான் கனடாவில் இல்லாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாமல் போனது. மற்றைய யாழ் உறவுகள் போனார்களா இல்லையா என்று தெரியாது. துயர் பகிர்வோம் பகுதியில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துவிட்டு திண்ணையில் நின்றவர்களுடன் பேசிவிட்டு விடை பெற்றுக் கொண்டேன். ஒன்று புரிந்தது இப்படித்தான் முன்பு 2010 இல் தாயகத்தில் போய் நின்று கொண்டும் யாழுக்கு வரவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் தனியார் கணனி நிலையங்களுக்குச் சென்று செய்திகளையும் நண்பர்களின் கும்மாளங்களையும் வாசித்துச் செல்வேன். அங்கிருந்து உறுப்பினர் பதிவுக்குள் உள் நுழைவது தேவையில்லாத சிக்கல்களை தரும் என்பதால் வேறு பெயரில் ஒரு முறை திண்ணையில் வணக்கம் சொல்லிவிட்டு போயிருக்கிறேன். இதில் இருந்து என்ன தெரிகிறது. ஒரு காலமும் …….. மாட்டோம். இடைவெளியை உங்கள் சிந்தனைக்கேற்ப நிரவிக் கொள்ளுங்கள்.

yarl_logo.gif

சரி இதற்குள்ளும் யாழா என்று நீங்கள் கேட்பது விளங்குது. சரிசரி மன்னித்துக் கொள்ளுங்கள். புதிய இடம் நிறைய வசதிகள் உயர்வகையான மதுபானங்கள், சிறப்பான உணவுச்சாலைகள் முக்கியமாக சைனி, இத்தாலியன், நாள் முழுவதும் சுடச்சுட கிடைக்கும் உணவுகள்  வசதிகள் என்பது மிகப்பருத்த அளவில் இருந்த்தும் இவ்விடத்தில் மறுக்க முடியாது. இதில் ஒரு விடயம் இங்கு வந்த பின் மிகப் பெரிய அளவில் அசடு வழிந்ததும் இவ்விடத்தில்தான். இங்கு உள்ள சிறப்புச் சலுகைகளில் உயர்வகையான வெளிநாட்டுக் குடிவகைகளும் உள்ளடக்கம். ஆண் பெண் பேதமின்றி அனைவரும் அந்த இடத்தில் மதுவைப் பெற்றுக் கொள்ளலாம். என்னுடைய வீட்டுக்காரன் பிளாக் லேபலை பணிப்பெண்ணிடம் பெற்றுக் கொண்டு அறைக்கு வரும்போது கூறினார் தான் மறுபடியும்போய் கேட்டால் சரியில்லை நீ உன்னுடைய பங்காக அதனைப் பெற்றுகொண்டு வா என்றார். சரி இன்னும் ஒரு நாள்தானே இருக்கிறது. வாங்கிக் கொடுத்தால் நான் குறைய மாட்டேன் என்ற எண்ணத்தில் அங்கு போய் அந்தப் பெண்ணிடம் எனக்கும் மது தரும்படி கேட்டேன். அவள் எந்த மது வேண்டும் என்று கேட்டாள். நானும் செம நிமிர்வாக பிளாக்லேபில் என்று சொல்லி அதனைச் சுட்டிக்காட்டினேன். அவள் சிரித்தபடியே அது ஆண்கள் அருந்துவது உனக்கு எது வேண்டும் என்றாள். நானும் சளைக்காமல் வீட்டுக்காரன் பார்ட்டிகளில் அருந்தும் ஒவ்வொரு பானமாக்க் காண்பித்தேன் அவளும் சளைக்காமல் எல்லாம் ஆண்களுக்கு உரியது என்று சொல்லிச் சிரித்தாள். ஐடியாத் தந்துவிட்டுப் போன வீட்டுக்காரன் மேல் பயங்கர ஆத்திரம் வந்தது. பணிப் பெண் வெளிப்படையாக இது உனக்கா அல்லது வேறு யாருக்கேனும் எடுக்க வந்தாயா? என்றாள்…. நானும் விட்டுக் கொடுக்காமல் எனக்குத்தான் என்றேன். விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பார்களே… அதைப்போல…. சரி பெண்கள் அருந்துவதில் பெட்டர் எதுவோ அதைத் தா என்றேன் ஏதோ ஒன்றை வார்த்துத் தந்தாள்..

cocktails.jpg

அருந்திப் பார் முதலில் பிடித்திருந்தால் அதிகம் ஊத்தித் தருகிறேன் என்றாள். என்ன கொடுமையடா சரவணா…. பொறியில் மாட்டிய எலியானேன்.

free-cheese-mousetrap-funny-cartoon.jpg

இன்னும் வளரும் :rolleyes:

அடுத்த அங்கத்துடன் பயணங்கள் முடிவதில்லை முற்றுப் பெறும் என்பதை மகிழ்ச்சியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். :icon_mrgreen::icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விரும்பி தண்ணியடித்துவிட்டு இப்ப சப்பைக் கட்டா? :D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.