Jump to content

" நீ ஒரு பொய்க்காரி "


Recommended Posts

[size=5]" நீ ஒரு பொய்க்காரி "[/size]

hindi-sad-love-sms.jpg

கரி நாக்கா எனக்கு...?

கண்ணாடியில்தான் பார்க்கவேண்டும்!

அதனால்தானோ என்னவோ...

முதன்முதலாய் உனக்கெழுதிய

கவிதையின் பெயரும் அதுவாய்த்தான் இருந்தது!

‘ஏனடி இப்படிச் செய்தாய்?’ என

கேட்கத்துடிக்கிற என் எண்ணத்தை...

கொஞ்சம் அடக்கி வைத்திருக்கின்றேன்!

உன் மனதைத்தொட்டு...

பின் உன்னைத்தொட்ட என்

ஸ்பரிஷங்களின் உணர்வுகள் அடங்குமுன்னே,

என் ஒட்டுமொத்த உணர்வுகளையும்

வலிகளில் ஒருமிக்க வைத்ததேனடி?

நான் வாழ்ந்த உலகத்தின்...

ஒரேயொரு தேவதையாய் நீ இருந்தாய்!

என் அதிஅன்புக்குரியவளாய்...

நீதான் இருந்தாய்!

இன்று எங்கிருக்கிறாயடி என் தேவதையே??

காதலின் குணமே இதுதானா? - இல்லை

காதலிப்பவர் மனம் இதுதானா??

என் தேவதை நீயும் அப்படித்தானா???

சொட்டுச் சொட்டாய் வளர்த்த காதல்...

சொல்லாமல் கொள்ளாமல்தானா மாறி நிற்கும்?

என்ன சொல்லப் போகிறாயடி??

மொத்தமும் உனக்கென ...

முத்தாகச் சொன்ன வார்த்தைகளை,

மொத்தமாய் மறந்து சென்றாயேனடி??

காலத்தின் கோலத்தில் பிரிந்திருந்தாலும்,

கண்மூடித் திறக்குமுன்னே குரல் கொடுப்பாயே!

இப்போது எங்கு சென்றாயடி??

உனைவிட்டுச் செல்வேன் என நினைத்தாயோ?

உன் நினைவோடே வாழ்வேனடி இறுதிவரை!

எனைவிட்டுச் செல்லவருமோ உனக்கு மனம்??

மென்மைகளால் மென்மையாய் படைக்கப்பட்ட

என் செல்லத் தேவதை நீயடி!

பொய் சொல்லத் தெரியாத என்

செல்லப் பொய்க்காரி நீயடி!!

என்னிடம் பொய் சொல்லமாட்டாய்!

எனக்குத் தெரியுமடி...!!

தேடிவருவேன்... காணவில்லையெனில்,

காத்திருப்பேன் வா!

உண்மையைச் சொல்ல...

என் கல்லறைக்கேனும் ஒருநாள் வருவாயடி!!!

[size=5]கவிதையின் கவிதைகள்[/size]

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.