Jump to content

ஒடியல் கூழ்


Recommended Posts

ஒடியல் கூழ்

தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 1/2 கிலோ

மீன் - 1 கிலோ

நண்டு - 6 துண்டுகள்

இறால் - 1/4 கிலோ

பயிற்றங்காய் - 250 கிராம்

(1 அங்குல நீள துண்டுகள்)

பலாக்கொட்டைகள் - 25

(கோது நீக்கி பாதியாக வெட்டியது)

அரிசி - 50 கிராம்

செத்தல் மிளகாய் - 15 அரைத்தது

பழப்புளி - 100கிராம்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒடியல் மாவை ஓரளவு நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக

நீரில் கரைக்கவும். பெரிய பாத்திரத்தில் போதியளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள், மீன்தலைகள், நண்டு, இறால் ஆகியவற்றை போட்டு நன்றாக அவியவிடவும். நன்றாக அவிந்ததும் ஒடியல் மா, அரைத்து வைத்துள்ள மிளகாய், கரைத்தபுளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

:lol: :P :P :lol:

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

உறைப்பு கூட போடாதிங்க ;)

Link to comment
Share on other sites

உங்களுக்கு பனை மரம் தெரியுமா?

panai.jpg

Link to comment
Share on other sites

உங்களுக்கு பனை மரம் தெரியுமா?

தூயா பனைமரம் எண்டா அந்த கறுப்பா உயர்ந்து வளந்திருக்குமே அதுவா :roll:

அதுவென்றால் எனக்குத் தெரியும் :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் என்றால் என்ன?

அருமையான கேள்வி நண்பா!! அற்புதம்!

முதலில் பனை மரம் என்பதை தாங்கள் தெரிந்து கொண்டுள்ளீர்கள் தானே!! அது ஒரு வகை நார் உருவி வகையைச் சார்ந்தது. அதற்கு ஆணி வேர் கிடையாது. கறுப்பு நிறத்தில் கிளைகளற்று வளரும் மரம் தான் பனை மரம்!

Link to comment
Share on other sites

அருவி பனமரம் கறுப்பு என்று கண்டுபிடித்ததற்கு பரிசு உண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை மரங்கள் யாழ்பாணம் போன்ற தமிழர் பிரதேசங்களிலும், தமிழ்நாட்டின் பிரதேசங்களிலும் அதிகமாக வளருமாம். நீங்கள் கண்டதில்லையா?

Link to comment
Share on other sites

பனைமரம் தெரியும்.இன்று காலை கூட எழுந்த வுடன் 1 லிட்டர் பதநீர் குடித்தேன். ஒடியல் என்றால் பனங்கிழங்கா ?

Link to comment
Share on other sites

தவறான பதில் செந்தில், 3 வாய்ப்புகளில் 1 போய்விட்டது.

Link to comment
Share on other sites

பனைமரமும் தெரியும், "அழகான அந்த பனைமரமும் தெரியும்".......

Link to comment
Share on other sites

ஆனால் "ஒடியல்"தெரியலையே, அருவி உங்களுக்கு தெரியுமா? ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனைமரமும் தெரியும், "அழகான அந்த பனைமரமும் தெரியும்".......

ஆகா!! வந்து விட்டீர்கள்!! பனைமரம் வளர்;து சிறிய நிலையில் வடலி என்பார்கள், அது இல்லை. அதையும் தாண்டி..... புனிதமானது...சி உயரமாக வளர்ந்து காய்க்க தொடங்குமல்லவா!!

Link to comment
Share on other sites

செந்தில் அது என்ன பதனீர் பனைமரம் மட்டும் காட்டினாங்க பதனீர காட்ட மறந்திட்டாங்க :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனைமரம் தெரியும்.இன்று காலை கூட எழுந்த வுடன் 1 லிட்டர் பதநீர் குடித்தேன். ஒடியல் என்றால் பனங்கிழங்கா ?

ஒரு லீட்டரா? என்ன அளந்து வைச்சா குடிப்பீர்கள்?

Link to comment
Share on other sites

ஆகா அருவி, என்ன நீங்கள் பனை மரம் பார்க்க சுற்றுலாவா போனீர்களா? காட்ட மறந்துவிட்டார்கள் என சொல்கிறீர்கள்??

ஒடியலுக்கு வாங்கப்பா

Link to comment
Share on other sites

ஆனால் "ஒடியல்"தெரியலையே, அருவி உங்களுக்கு தெரியுமா? ;)

அது தானே தாரணி சொல்லி இருக்கிறா ஒடியல் கூழ் பற்றி. ஒடியல் இருந்தாத்தானே ஓடியல் கூழ் வரும். கூழ் குடிக்கலாம் ஒடியல் குடிக்கேலாது. என்ன தூயா நான் சொல்லுறது சரியா :wink:

Link to comment
Share on other sites

ஆகா அருவி, என்ன நீங்கள் பனை மரம் பார்க்க சுற்றுலாவா போனீர்களா? காட்ட மறந்துவிட்டார்கள் என சொல்கிறீர்கள்??

ஒடியலுக்கு வாங்கப்பா

சுற்றுலா போய் கள்ளு எல்லாம் பாத்திருக்கம், பாத்தது மட்டுமா குடிச்சும் பாத்தம் :oops: . ஆனா அந்தப் பதனீர் மட்டும் காட்டல :evil:

Link to comment
Share on other sites

ஓமோம் மாட்டை கொண்டு போய் பனைல கட்டினம் என்றால் பிரச்சனை முடிந்திடும்

Link to comment
Share on other sites

தடை செய்யப்பட்ட பொருட்களை பற்றி கதைப்பது நல்லதன்று. சி*5 பொறாமை கொள்ள போறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி யாழ்பாணத்தில் எமது ஊரின் வயற்பக்கத்திற்கு பின் பக்கம் எல்லாம் ஒரே பனைமரமாகத் தான் இருக்கும். பார்க்க ரெம்ப அழகாக இருக்கும்.

கடந்த முறை சென்றபோதும் அதைப் பார்த்து வேதனைப்பட்டேன். இராணுவம் அப்பகுதிகளுக்கு போக தடை போட்டிருந்ததால் தூரத்தில் நின்றே பார்த்து விட்டு வந்தேன்

Link to comment
Share on other sites

நீங்கள் வல்லிபுர கோவிலுக்கு போகும் வழியில் உள்ள பனைகளை பார்க்க வேண்டுமே, தலைகள் இல்லாமல்..கோரம்..

Link to comment
Share on other sites

:shock: :shock: :shock:

சின்னப்பு என்ன கனடாவில தடை போல யாழ் களத்தில ஒரு பனை பற்றிக் கதைக்கக் கூடாதா.

:shock: :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.