Jump to content

ஒரு மணம் பலமனம்


Recommended Posts

வணக்கம் சோபனாக்கா கன நாளைக்கு பிறகு வாறிங்க எப்படி இருக்கிறீங்க :P

லொலிபப் வாங்கி கொடுத்தா எவ்வளவு புண்ணியம் எண்டு தெரியாமலா இருக்கிங்க :roll: (சுட்டிய கேளுங்க செல்லுவா :wink: :P )

Link to comment
Share on other sites

  • Replies 151
  • Created
  • Last Reply

என்ன நடக்குது இங்க என்ன எல்லாரும் சுட்டியை விரட்டுறீங்க

ம்ம் சுட்டியை விரட்டுறாங்க என்றிட்டு நானும் போயிருப்பேன். ஆனால் நீங்க இருக்கிறீங்க என்ற தைரியத்தில் தான் இருக்கிறேன் லோயரம்மா :P :arrow:

Link to comment
Share on other sites

ஆய் சுட்டி கதையை மாத்துறா சினேகிதி..ஹிஹி :P சுட்டி என்னை பார்க்க ஆசைப்படுறா அப்ப டிக்கட் எடுத்திட வேண்டியது தான் என்ன :wink:

ஆஹா இருக்காதா என்ன? சகியை பார்க்க ஆசைதான். அதே நேரம் சகிக்கும் நிலாவைப் பார்க்க ஆசை என்று சொன்னாவே. நான் ரிக்கட் இல்லாமலே வருவேன். நீங்கதான் ரிக்கட் எடுக்கணும். :wink: :arrow: சரி ரிக்கட்டை எடுத்துட்டு வாங்கோ. நான் பர்தா தான் போட்டு வருவேனே :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நித்தி

கருத்து எழுதுவது இல்லையே தவிர யாழ்களத்துக்கு அடிக்கடிவருவன்

நீங்க எப்பிடி இருக்கிறீங்க?

Link to comment
Share on other sites

லொலிபப் வாங்கி கொடுத்தா எவ்வளவு புண்ணியம் எண்டு தெரியாமலா இருக்கிங்க :roll: (சுட்டிய கேளுங்க செல்லுவா :wink: :P )

ம்ம் முந்தி எல்லாம் நிலாவுக்கு குருவியண்ணா லொலிபப் வாங்கி தாறவர். அப்போதான் நிலா அழாமல் இருந்து கருத்தாடுறவா. :P அப்படி இருந்து தமிழினி அக்கா பறித்திடுவா. :lol:

ஆனால் இப்ப லொலிபப் வாங்கி தாறதாக சகி சொல்லிட்டா பார்ப்பம் எப்ப என்று. தராட்டால் இருக்கு ஆமா :twisted:

Link to comment
Share on other sites

வணக்கம் நித்தி

கருத்து எழுதுவது இல்லையே தவிர யாழ்களத்துக்கு அடிக்கடிவருவன்

நீங்க எப்பிடி இருக்கிறீங்க?

நலமேயிருக்கிறன் அக்கா நன்றி :P

அடிக்கடி வாரதோட நேரம் கிடைக்கேக்க எழுதுங்க :wink:

சுட்டி கவலைப்படாதீங்க சகி வாங்கித் தரேல்லை எண்டா என்ன நான் வாங்கித் தாறன் ஆனால் எனக்கும் லொலி பப் நல்லா பிடிக்கும் அதால அது உங்கட கைக்கு வர முதல் குச்சி மட்டுமே மிச்சமிருக்கும் பரவாயில்லையா :P

Link to comment
Share on other sites

சுட்டி கவலைப்படாதீங்க சகி வாங்கித் தரேல்லை எண்டா என்ன நான் வாங்கித் தாறன் ஆனால் எனக்கும் லொலி பப் நல்லா பிடிக்கும் அதால அது உங்கட கைக்கு வர முதல் குச்சி மட்டுமே மிச்சமிருக்கும் பரவாயில்லையா :P

குச்சியை வைச்சு நான் என்ன பல்லு தீட்டுறதா? சரி சரி குச்சியையாவது தாறேன்னு சொன்னீங்களே. அதுக்காக எனினும் நன்றி சொல்லுறேனுங்கோ :P

Link to comment
Share on other sites

உங்கட கைக்கு வர முதல் குச்சி மட்டுமே மிச்சமிருக்கும் பரவாயில்லையா

ம்ம் இதுதான் நேரம் எங்கிறது..நான் லொலி பாப் முழுசா தாறேன் அதுவும் இலவசமா எண்டுறன்..அதுக்கு ஒரு நன்றி இல்லை..அது இது னு கதை..நித்தி குச்சி தர அது ஓகேயாம்..என்னை சொல்லணும்.. :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ம்ம் இதுதான் நேரம் எங்கிறது..நான் லொலி பாப் முழுசா தாறேன் அதுவும் இலவசமா எண்டுறன்..அதுக்கு ஒரு நன்றி இல்லை..அது இது னு கதை..நித்தி குச்சி தர அது ஓகேயாம்..என்னை சொல்லணும்.. :evil: :evil: :evil:

ஹிஹு ம்ம் நல்லதுக்கு காலம் இல்லையாம் ...யாரோ சொன்னாங்க.... :wink: :wink: :lol::D:lol:

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரி,

கெதியா வந்து உங்கடை கதையை எழுதுங்கோ,

உங்கடை வீட்டுக்குள்ளை வந்து பெண்டுகள் எல்லாம் அரட்டை அடிக்கினம் :lol::D:lol:

Link to comment
Share on other sites

ஹிஹு ம்ம் நல்லதுக்கு காலம் இல்லையாம் ...யாரோ சொன்னாங்க.... :wink: :wink: :lol::D:lol:

ம்ம் நிலா மாதிரி யாரோ முந்தி செய்ய..என்னை மாதிரி யாரோ கவலைப்பட்டுத்தான் அதை சொல்லி இருப்பாங்க அனி :wink:

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரி,

கெதியா வந்து உங்கடை கதையை எழுதுங்கோ,

உங்கடை வீட்டுக்குள்ளை வந்து பெண்டுகள் எல்லாம் அரட்டை அடிக்கினம் :lol::D:lol:

சரி அப்ப உங்கட கவிதை பகுதிக்கு வரவா நாங்க எல்லாம் வேற எதுக்கு அரட்டை அடிக்கத்தான் :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

ம்ம் நிலா மாதிரி யாரோ முந்தி செய்ய..என்னை மாதிரி யாரோ கவலைப்பட்டுத்தான் அதை சொல்லி இருப்பாங்க அனி :wink:

சரி சரி கவலைப்படாதிங்க சகி

உங்களுக்கும் லொலிபப் வாங்கித் தாரன் :wink: :P

Link to comment
Share on other sites

இன்னும் வீடுவரவில்லையா சாத்திரித்தாத்தா..???

கதை வாசிக்கும் ஆர்வத்தில் இருக்கின்றோம் :D

அதற்குள் லொலிபப் என்று சொல்லி நாவூற வைக்கிறார்கள்...

யாரும் யாருக்கும் வாங்கிக் கொடுத்ததாகத் தெரியவில்லை :lol:

Link to comment
Share on other sites

ம்ம் இதுதான் நேரம் எங்கிறது..நான் லொலி பாப் முழுசா தாறேன் அதுவும் இலவசமா எண்டுறன்..அதுக்கு ஒரு நன்றி இல்லை..அது இது னு கதை..நித்தி குச்சி தர அது ஓகேயாம்..என்னை சொல்லணும்.. :evil: :evil: :evil:

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகி இந்தளவும் போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் நன்றி சொல்லவா? :wink: :arrow:

Link to comment
Share on other sites

இங்கு சாத்திரியின் ஒரு மணம் பல மனம் தொடர் கதை போகுதா? இல்லாட்டி பல மனத்தின் ஆதங்கங்கள் போகின்றதா? :shock: :shock:

Link to comment
Share on other sites

இங்கு சாத்திரியின் ஒரு மணம் பல மனம் தொடர் கதை போகுதா? இல்லாட்டி பல மனத்தின் ஆதங்கங்கள் போகின்றதா? :shock: :shock:

தொடர்கதையின் இடை நடுவே லொலிபப் க்கு விளம்பரம் போகுது :P :arrow:

Link to comment
Share on other sites

தொடர்கதையின் இடை நடுவே லொலிபப் க்கு விளம்பரம் போகுது :P :arrow:

:lol::lol::lol::D:lol: :P

Link to comment
Share on other sites

அய்யோ அய்யோ கொஞ்சம் அலுவல் காரணமா அங்காலை அரக்கின உடைனை பேரப்பிள்ளையள் வந்து லொளிபப் வித்து விழையாடிட்டு போயிட்டினம் சரி பரவாயில்லை கொஞ்சம் வேலை பழு காரணமாக இந்த கதையை அதன் சவாரசியம் குறையாமல் சுருக்கி அடுத்த பாகத்துடன் முடிக்கலாம் என்று எண்ணியுள்ளேன் இதோ இந்த பாகம் நன்றி

அவளை நெருங்கவும் அவள் தனது கைகளை கழுத்திற்கு குறுக்காக பிடித்தபடியே ஐயோ வேண்டாம் நீங்கள் செய்யிறதுகளை பாத்தா எனக்குப் பயமா இருக்கு இது எங்கை போய் முடிய போகுதோ தெரியாது என்றவாறு கீழே குந்தி இருந்து விட்டாள் நான் சற்று பலவந்தமாகவே அவளது தலையை நிமிர்த்தியபடி இந்தாபார் இவ்வளவு நாளும் நீ இப்பிடி பயந்து அழுதழுது என்னத்தை சாதித்தனி அதாலை இனி கொஞ்சம் நான் சொல்லுறபடி கேள் எல்லாம் நல்லபடி நடக்கும் என்றவாறு பத்து பொருத்தமும் பார்த்து அது பத்தாதென்று அதற்கு உப பொருத்தம் பத்தும் பார்த்து ஊர் உறவுகள் கூடி கண்ணால் கண்டேயிராத இந்திரனையும் சந்திரனையும் சாட்சியாக்கி பட்டபகலில் அருந்ததி நட்சத்திரம் தெரிகிறது என்று சம்பிரதாயத்திற்காய் பொய் சொல்லி அய்யர் மந்திரம் ஓதி உறவுகள் ஆசிர்வாதத்துடன் கெட்டியாகாத உறவு என்று தெரியாமலே கெட்டி மேளம் கொட்ட கட்டிய தாலியை அந்த இரவில் தள்ளாடும் படகில் ஆனால் தள்ளாதாட ஒரு உறுதியுடன் களற்றி அங்கிருந்த மேசையில் வீசிவிட்டு

இப்ப எங்களிற்கிடையிலான சம்பிரதாயமான கணவன் மனைவி உறவு முறிஞ்சிட்டுது இனி நாளைக்கே சென்னைக்கு போய் சட்டரீதியாவும் முடிச்சிடலாம் என்றவும். அழுதபடியே அவள் அய்யோ இப்ப எதுக்கு தாலியெல்லாம் கழட்டினனீங்கள் எனக்கு இங்கையே செத்திடலாம் போலை இருக்கு என்னாலை வீட்டகாரரிட்டை போய் எப்பிடி இதையெல்லாம் சொல்லி என்னவெல்லாம் நடக்கபோகுதோ எண்டு நினைக்கவே ஏலாமல் இருக்கு என்று ஒரு குழந்தையை போல உடல் நடங்கிய படியே சொல்லவும் அவளை பிடித்து கதிரையில் இருத்தி விட்டு

ஆறுதலாக இந்தா பார் நிதர்சினி தாலி கழட்டினதெண்டு பயபிடாதை இப்ப தாலியெல்லாம் ஒரு அழகு பொருள்மாதிரி வந்திட்டிது முந்தி மாதிரி யாரும் கழுத்திலை பொட்டுகொண்டு திரியிறெல்லை . கலியாண மாகி சில நாளிலையே கழட்டி அலுமாரிக்கையோ இல்லாட்டி பாங் லொக்கருக்கையோ தான் வைச்சிட்டு திரியிறவை.அதாலை தாலி கழட்டினதை பற்றி கவலை படாதை ஒண்டும் நடக்காது உன்ரை வீட்டுகாரரை சாமாளிக்கிற பிரச்சின என்னை பொறுத்தது நீ தைரியமா இரு. அததான் இப்ப எனக்கு தேவை. நீ என்னோடை ஒத்துளைச்சா தான் நான் இனி அடுத்த நடவடிக்கைகளை செய்ய சுலபமா இருக்கும்.அதோடை நாளைக்கு காலை நீ குமாருக்கு போன் பண்ணி நடந்த விடயங்களை விபரமா சொல்லு நானும் குமாரோடை கதைக்கிறன்.

இப்ப நீ யோசிச்சு அழாமல் போய் தைரியமா படு என்று விட்டு அதுக்கு முதலிலை நீ உனக்கு ஒண்டும் விபரீதமா செய்ய மாட்டன் எண்டு எனக்கு சத்தியம் பண்ணு என்றேன் . அவளும் ம்.... நான் ஒண்டும் செய்யமாட்டன் அப்பிடி ஒரு நிலைமை வந்தால் குமாரோடை சேந்துதான் செய்யிறதெண்டு குமாருக்கும் நான் சொல்லியிரக்கிறன்.என்றவாறு படுக்கையறை நோக்கி போனாள். நானும் படகின் முகப்பில் படுத்து கொண்டேன் கொஞ்ச நேரம் அவளின் விசும்பல் சத்தம் கேட்டு கொண்டிருந்தது நான் அப்படியே உறங்கி போனேன்.

மறு நாள் காலை எழுந்ததும் எனது பயணங்களை ஒழுங்கு செய்த முகவர் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு எனது கேரள பயணத்தை முடித்து கொண்டு அவசரமாக் நான் சென்னை செல்ல வேண்டு மென்று கூறி அதற்கு உடனடியாக அலுவல்கள் பார்க்கும் படி கூறி விட்டு நாங்கள் சென்னை செல்வதற்காக கொச்சின் நோக்கி எங்கள் பயணத்தை தொடங்கினோம் போகின்ற வழியிலேயே குமாரிடமும் தொடர்பு கொண்டு கதைத்து நிலைமை களை விழங்கபடுத்திவிட்டு குமாரிடம் கேட்டேன் எனக்கு தெரியாமலெயெ இவ்வளவும் நடந்து விட்டது

எனவே நான் எடுத்த முடிவின்படி நீங்கள் நல்லபடியாக சந்தோசமா வாழவேண்டும் என்றவும் குமாரோ அண்ணா எல்லா முடிவுகளையும் இதுவரை நிதர்சினியே எடுத்தவா இனிமேலும் அவா என்ன முடிவு எடுத்தாலும் நான் சம்மதம் என்றவும் என்ன இவன் அனியாயத்திற்கு அப்பாவியாய் இருக்கிறான் என நினைத்தபடி எனது வீட்டு காரருக்கு சென்னைக்கு தொர்பு கொண்டு அன்றிரவே நாங்கள் சென்னை திரும்பும் செய்தியை கூறிவிட்டு அவர்களையும் நிதர்சினி வீட்டிலே இருக்கும் படியும் நாங்கள் நேரடியாக நிதர்சினியின் வீட்டிற்கே வரவதாகவும் கூறியதும் வீட்டு காரருக்கு ஏதோ பிரச்சனை என்று விழங்கியிருந்தது ஆனால் என்னவென்று நான் எந்த விபரமும் கூறவில்லை.

அன்றிரவு சுமார் ஏழுமணியளவில் சென்னையில் உள்ள நிதர்சினியில் வீட்டில் போய் இறங்கினோம்.அங்கு எனது வீட்டு காரர் மற்றும் நிதர்சினி வீட்டு காரர் எல்லோரும் இறுகிய முகங்களுடன் ஒரு வித அமைதியில் இருந்தனர். உள்ளே போன நான் மாடிக்கு போக புறப்பட்ட நிதர்சினியை நிறுத்தி அங்கு இருத்தி விட்டு முதலாவதாக எனது அம்மாவை பார்த்து எதற்காக எல்லாத்தையும் மறைத்து இப்படியொரு கலியாணத்தை செய்து வைத்தனீங்கள் நான் உங்களிடம் எனக்கு கலியாணம் கட்டிவை என்று கேட்டனானா??

நீங்கள் காட்டிய பெண்ணை யார் ஏன் எப்பிடி என்று கேக்காமலேயெ எற்று கொண்டது உங்களின் மீது இருந்த நம்பிக்கையிலேயெ அதை இப்பிடி செய்திட்டீங்களே?? என்றதும் அம்மா விம்மியழுதபடி வந்து என்னை கட்டிப்பிடித்தபடி தம்பி என்னை மன்னிச்சிடு நான் இவ்வளவு தூரம் நடக்குமெண்டு எதிர் பார்க்கேல்லை அந்த பிள்ளை ஏதோ வயது கோளாறிலை நடந்திருக்கும் எண்டு நினைச்சு பெரிசா எடுக்கேல்லை நான் நல்லதை தான் நினைச்சன் ஒரு பிள்ளையின்ரை வாழ்க்கை வீணா போக கூடாது எண்டு ஆனால் அந்த பிள்ளை இப்பிடி வைராக்கியமா இருக்குமெண்டு சத்தியமா எனக்கு தெரியாது என்றார்.

அம்மாவை விடுத்து நிதர்சினியின் தந்தையை நோக்கி அய்யா ஏதோ எல்லாத்தையும் மறைச்சு நீங்களும் உங்கடை பிள்ளை நல்லா இருக்கவேணுமெண்டு உங்கடை விருப்பபடி இந்த கலியாணத்தை நடத்தி முடிச்சிட்டியள் . இனி உங்கடை மகள் உண்மையா நல்லா இருக்க வேணுமெண்டா அவளின்ரை விருப்படி அந்த பெடியனொடையே வாழ விடுங்கோ என்றவும் அவரோ கோபம் கொண்டவராய் என்ன தம்பி உமக்கு விசரோ அதை செய்யிறதெண்டா எப்பவோ செய்து வைச்சிருப்பம் அந்த பிச்சை கார பயலை என்ரை பிள்ளைக்கு கட்டி குடுக்கசொல்லுறிரா? என்று என்மேல் கோபமாய் சீறி விழுந்தார்.

உங்கடை மகளின்ரை வாழ்க்கையிலை உண்மையா உங்களிற்கு அக்கறையிருந்திருந்தா நீங்கள் இந்த கலியாணத்திற்கு உங்கடை சுயகொளரவத்தையும் ஆடம் பரத்தையும் காட்ட அள்ளி செலவழித்த பணத்தை அந்த பெடியனுக்கு முதலாய் போட்டு ஒரு தொழிலை தொடக்கி உங்கடை மகளின்ரை விருப்பபடி அவனுக்கே கலியாணத்தையும் செய்து வைத்திருக்கலாம் தானே என்று தொடங்கிய வாதப்பிரதி வாதம் மணிக்கணக்காக நீண்டு கொண்டே போனது அதுவரை அமைதியாய் எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த நிதர்சினியின் அண்ணணன் அப்போதான் வாய் திறந்தான்

எல்லாரும் கொஞ்சம் அமைதியாகுங்கோ என்றவன் என்னைபார்த்து எங்கடை வீட்டுகாரர் நிறைய பிழை விட்டிட்டினம் எனக்கும் முதலிலை தங்கையை யாரோ பெடியன் ஒண்டு விரும்புது எண்டுதான் தகவல் தெரியும் ஆனால் பிறகு இங்கை வந்தா பிறகுதான் வடிவா எல்லா பிரச்சனையும் தெரிய வந்தது . ஆனால் கலியாண ஏற்பாடு எல்லாம் நடந்து முடிஞ்சாபிறகு நான் ஏன் கதைப்பான் என்டு பெசாமல் இருந்திட்டன்.உங்களுக்கே தெரியும் நாங்கள் வெளி நாட்டிலை இருந்து காசு அனுப்புறதை தவிர எங்களாலை வேறை என்ன செய்ய முடியும் இங்கை இருந்து வீட்டு காரர் சொல்லுறதை தான் நம்பியாக வேணும் .

இதாலை இப்ப உங்களுக்கும் வீண் பிரச்சனையளை தந்திட்டம் ஆனால் நீங்களே தங்கச்சிக்காக இவ்வளவு தூரம் வாதாடேக்கை இனியும் நாங்கள் அடம் பிடிக்கிறது சரியில்லை அதாலை அப்பா அம்மாவை நான் கதைச்சு சமாளிச்சு தங்கச்சி விரும்பினவனையே கட்டி வைக்கிறது என்ரை பொறுப்பு நீங்கள் சட்டப்படி விவாக ரத்து செய்யிறதுக்கான ஒழுங்குகளை செய்யுங்கோ என்றவன் என்னிடம் நடந்த பிரச்சனைகளிற்காகவும் மன்னிப்பு கேட்டு கொண்டான்.நிதர்சினியின் அண்ணனின் புரிந்தணர்வால் எனது வேலைகள் பாதியாக குறைந்து போனது மறு நாளே ஒரு சட்ட வல்லுனர் ஒரவரின் உதவியுடன் விவாக ரத்திற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போதுதான் இந்த பிரச்சனைகளில் சுத்தமாய் மறந்து போயிருந்த சுரயாவின் ஞாபகம் எனக்கு வந்தது :arrow: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி சில விடயங்கன் 2 பந்தி திருப்பி திருப்பி அடிச்சிருக்கிறியள் என்ன மப்பிலையே நடந்தது பாத்து எடுங்கோ.. ம் பறவாய் இல்லை அண்ணன் கொஞ்சம் என்றாலும் சிந்திச்சிருக்கிறார்.. ஆமா உங்களுக்கேன் சுரயாவின் நினைவு வந்தது. .அடுத்த பாகத்தில பாக்கலாம்.. லாலிப்பாப் விக்க விடாமல் வேளைக்குப்போடுங்கோ.. :P

Link to comment
Share on other sites

அடடடடா நீண்ட நாளுக்கப்புறம் கதை வந்திருக்கு. ஓகோ என்னது மீண்டும் சுரயாவின் நினைவா? ஓகெ அப்புறம் என்னாச்சு? :wink: :arrow:

Link to comment
Share on other sites

சுராயாவின் ஞாபகம் வந்ததும் அவளைத் தொலைபேசியில் அழைத்தேன். அவள்தான் காய்..சுதன் எப்பிடி இருக்கிறாய் புது பெண்ணைக் கண்டதும் என்னை மறந்திட்டாயா?? எப்படி பெண் பிடித்திருக்கா அழகா?? அவளுக்கு உன்னைப் பிடித்தா? திருமணம் எப்படி பெரிய அளவில் நடந்ததா???என்று கேள்வியை அடக்கி கொண்டே போனவளிடம், திருமணம் என்னவோ பெரிதாய்த்தான் நடந்தது அனால் என்று இழுக்கவும் என்ன ஏதாவது பிரச்சனையா?? எனறாள் . ம்...பிரச்னைதான் அதை விடு நேரில் வந்து சொல்கிறேன். நான் இரண்டு நாளில் வருகிறேன் விமான நிலையம் வர முடியுமா??என்றதும் . அதற்கிடையிலா?? சரி வருகிறேன் எனக்கு என்ன கொண்டு வருவாய் என்றாள். உனக்கு நிறைய அதிர்ச்சிகள் கொண்டு வருகிறேன். மிகுதி நேரில் என்று விட்டு எனது விமானம் தரையிறங்கும் நெரம் மற்றும் விமான இலக்கம் என்கிற விபரங்களை கொடுத்துவிட்டுத் தொடர்பை துண்டித்தேன்.

மறுநாள் நண்பன் ஒருவனுடன் எக்மோரிற்கு சென்று ஒரு சட்டவல்லுனரை அணுகி விவாகரத்துச் செய்ய வேண்டியதற்கான ஆயத்தங்களை எல்லாம் செய்து முடித்து விட்டு அவர் கேட்ட பத்திரங்கள் மற்றும் சில பத்திரங்களில் நிதர்சினியே நேரில் வந்து கையெழுத்துப் போட வேண்டுமென்பதால் மறு நாள் மீண்டும் நிதர்சினியையும் அழைத்து வருவதாக கூறிவிட்டு அடுத்த படியாக நான் அடுத்த இரண்டு நாளில் மீண்டும் பிரான்ஸ் திரும்புவதற்காக எனது விமான சீட்டையும் மறுபதிவு செய்துகொண்டு வருகிற வழியில் பர்மா பசார் பக்கமாக இறங்கி பிரான்சில் நண்பர்களிற்காக சில நினைவுப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு ஒரு பெரிய புடைவைக் கடையினுள் நுளைந்து அங்கிருந்தவரிடம் எனக்கு ஒரு சுடிதார் வேண்டும் எனக் கேட்டேன்.

கடைக்காரர் என்ன விலையில் வேண்டும் என்றார் . நானோ விலையைப்பற்றிக் கவலை இல்லை நல்ல அழகானதாக வேண்டும் என்றேன்.அவரும் விலையுயர்ந்த பல சுடிதார்களை அள்ளி போட்டுவிட்டுப் பெண்ணு எப்பிடி இருக்கும் என்றார். நானும் பெண்ணு உயரம் 1. 75 மீ மெல்லியதாய் வெள்ளையாய் இருப்பார் என்றதும் கடைக்காரரோ விடாமல் அளவு எல்லாம் சரியா சொல்லுறீங்க பெண்டாட்டிக்கா சுடிதார் என்றார். இல்லை நண்பிக்கு என்றதும் அவர் ஓஓஓ என சிரித்தபடி மீண்டும் பலவற்றை அள்ளி போட்டார் அவற்றில் இரண்டை தெரிவு செய்தேன். ஒன்று கரும் சிகப்பு சுராயாவின் நிறத்திற்கு நல்ல அழகாய் இருக்கும் என நினைத்தேன். மற்றது பல நிறங்களும் கலந்தது. இரண்டையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து புத்தகக்கடை ஒன்றில் ஒரு வாழ்த்து மட்டையும் ஒன்று வாங்கிக் கொண்டேன்.

மறு நாள் நிதர்சினியை அவளது அண்ணன் அந்தச் சட்ட வல்லுனரிடம் அழைத்து வந்திருந்தான். அவரிடம் இருவருமே எங்கள் மனப்பூர்வமான சம்மதம் இன்றி இந்த திருமணம் சில நிர்ப்பந்தங்களால் நடத்தபட்டதென்றும் ஆகவே இருவருமே சுயமாக சிந்தித்து இந்த திருமண முறிவை சட்டப்படி வேண்டுவதாக எழுதி கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு சில பத்தரங்களில் கையெழுத்திட்டு அந்த சட்டவாதியிடம் முடிந்தளவு விரைவாக இந்த விவாகரத்தை முடித்து கொடுக்கும் படி கூற அவரோ எப்படி முயன்றாலும் ஒருவருடமாகும் என்று கூறினார். அவரிடம் எனது விபரங்களைக் கொடுத்து அவசியமாயின் என்னுடன் தொடர்பு கொள்ளச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்ததும் நிதர்சினியின் அண்ணனைப் பார்த்து சரி எல்லாம் எதிர்பார்த்ததை விட சுலபமாய் நடந்து முடிந்து விட்டது அதற்கு உதவிய உங்களிற்கு நன்றி என்றேன்.

அவரோ நான்தான் உங்களிற்கு நன்றி சொல்ல வேண்டும் வாருங்கள் கடையினுள் போய் குடிக்கலாம் என்றவரிடம் இல்லை நான் நாளையே திரும்ப பிரான்சிற்கு வெளிக்கிடுறன் எனக்கு இங்கு நிக்கப் பிடிக்கேல்லை அதோட கொஞ்ச அலுவலும் இருக்கு என்றபடி நிதர்சினியின் பக்கம் திரும்பி சரி நிதர்சினி இப்ப உமக்கு சந்தோசம் தானே நீர் விரும்பினபடியே எல்லாம் நடக்கப் போகுது நான் வெளிக்கிட போறன் பொதுவா மீண்டும் சந்திப்பம் எண்டுதான் எல்லாரும் விடை பெறுவது வழக்கம். ஆனால் நாங்கள் இனி எப்பவும் சந்திக்கவே வேண்டாம் அதுதான் எல்லாருக்கும் நல்லது என்றபடி நான் கொண்டு போயிருந்த சிறிய பையை நிதர்சினியிடம் நீட்டியபடி இந்தாரும் எல்லாரும் கலியாணத்திற்கு ஏதாவது பரிசு குடுக்கிறது வழைமைதானே நான் தாலியையே உமக்கு பரிசாத் தாறன் இது உமக்கெண்டு தானே செய்தது சிலவேளை இது முறையாக் கூட இருக்காது பரவாயில்லை நாங்கள் எல்லாத்தையுமே வித்தியாசமாவே செய்யிறம் நல்லதிற்குத்தானே இதை வைச்சு நான் என்ன செய்யிறது அதாலை இதையே குமாரிட்டைக் குடுத்துக் கட்ட சொல்லும் என்று சொல்லவும் அவள் அண்ணனைத் திரும்பி பார்த்தாள். அவனோ வாங்கிக்கொள் என்று தலையை அசைத்தான். அங்கிருந்து இருவருமே விடை பெற்று கொண்டு இரு வேறு ஆட்டோக்களில் ஏறி அவரவர் திசைகளில் பயணித்தோம்.

மறுநாள் மாலை சென்னை விமானநிலையம் என்னை வழியனுப்ப அம்மாவும் தங்கையும் மட்டும் அங்கு பாதுகாப்பு காரணமாக பயணிகளைத் தவிர மற்றையவர்கள் உள்ளே போக முடியாது. நுளைவாசலில் நின்றபடி அவர்களிடமும் விடைபெறும்போது அம்மா எனது கைகளைப் பிடித்து தம்பி நடந்தது நடந்து போச்சு நீ விரும்பினால் சொல்லு ஊருக்கு போய் உடனையே நல்லதொரு பெட்டையா பாத்து நான்........... என்று முடிக்க முதலே குறுக்கிட்ட நான் வேண்டாம் காணும் உங்களிற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தனான் அது முடிஞ்சு போச்சு இனி நானே பாத்துக் கொள்ளுறன். சரி இனி இதையே நினைச்சு கொண்டிராமல் அடுத்த அலுவலை பாருங்கோ நான் போய்ச் சேர்ந்ததும் போன் பண்ணுறன் என்று அவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு விமான நிலையத்தில் நுளைந்தேன்.

விமானத்தில் ஏறி அமர்ந்ததும் நான் வாங்கிய வாழ்த்து அட்டையை எடுத்தேன் அதன் முன்பக்கத்தில் காதலின் அடையாள சின்னமான ஒற்றை சிவப்பு றோஜா மலர் அச்சிடப்பட்டிருந்தது. அதில் "அன்பு மிக்க சுராயாவிற்கு நீ என்னை நாடி வந்து உன் காதலை தெரிவித்த போதெல்லாம் அதை ஏற்க மறுத்து தவறிழைத்து விட்டேன் என இப்போது புரிந்து கொண்டேன் அதற்காக என்னை மன்னிப்பாயா?? ஆம் நான் உன்னை காதலிக்கிறேன் என் காதலை ஏற்றுக்கொள்வாய் என்கிற நம்பிக்கையுடன் சுதன்." என்று அதில் எழுதி கையெளுத்துப் போட்டு அந்த எழுத்துக்களை பல தடவை எழுதி அழகுபடுத்தி அதை உறையுள் போட்டு விட்டு சுராயாவிடம் அவளது பரிசு பொருட்களுடன் இந்த மடலையும் குடுக்கவேணும் இதை படித்ததும் எவ்வளவு சந்தோசப்படுவாள் என எனக்குள்ளே ஒரு கற்பனை பண்ணிக் கொண்டேன். ஆனாலும் மனதில் ஒரு நெருடலாகவும் இருந்தது காரணம் அவள் காதலை சொன்ன போது நிராகரித்துவிட்டு இப்போ எனக்கு பிரச்சனை என்று வந்ததும் திரும்ப அவள் மீது காதல் திடீரென எப்படி வந்தது மற்றவர்கள் அதாவது இதை படிக்கும் நீங்களும் யோசிக்கலாம் ஆனால் அவள் காதலை சில காரணங்களிற்காய் நிராகரித்தேனே தவிர அவளை முழுதாய் காதலிக்கவில்லை என்று நான் பொய் கூறவில்லை. அப்படி அவளது காதலை நிராகரித்த போது அது சரியா தவறா என்று எனக்கு தோன்றவில்லையோ அது போலவே அவளிற்காய் இந்த காதல் மடலை எழுதும் போது கூட நான் செய்வது சரியா தவறா என்று எனக்கு தோன்றவில்லை நான் இருந்த எனது மனநிலை அப்படியான ஒரு முடிவை எடுக்க தூண்டியது. அது மற்றவர் பார்வைக்கு சுயநலமாகவும் தோன்றலாம். சரி இறுதி கட்டத்திற்கு வருவோம்.

பாரீஸ் விமான நிலையம் விமானம் தரை தட்டியது மற்ற எல்லோரையும் போலவே நானும் எழுந்து சொம்பல் முறித்துக் கொண்டு எனது கைப் பையை எடுத்து சுராயாவிற்காக எழுதிய அந்த காதல் மடல் பத்திரமாக இருக்கிறதா?? என ஒரு முறை சரி பார்த்துக்கொண்டு விமானத்தை விட்டு வெளியேறிய படி சுராயா வந்திருப்பாளா?? ம் கட்டாயம் வந்திருப்பாள். அவளிடம் எப்படி இந்த மடலை கொடுத்து எப்படி கதைக்க வேண்டும் என மனதில் சிறி படபடப்புடன் ஒரு முறை ஒத்திகை பார்த்தபடியே எனது பயணப்பொதியை எடுக்கும் இடத்திற்கு வந்து நின்றபடி அங்கிருந்த பெரிய கண்ணாடி சுவர்களினுடாக சுராயா நிற்கிறாளா என கண்களால் தேடினேன். ம்.. சுராயா நின்றாள் மனதில் ஒருவித மகிழ்ச்சி அவள் என்னை கவனிக்கவில்லை கைத்தொலைபேசியில் யாருடனோ உரையாடியபடி வேறு பக்கம் பாத்தபடி நின்றாள். நான் கையை அசைத்து சைகை செய்து பார்த்தேன் கவனிக்கவில்லை எனது பொதி வருகிறதா என பார்த்தேன் பொதிகள் சுமந்து வரும் இயந்திரப்பட்டி இயங்க தொடங்கியிருந்தது பொதிவருகிறதா என பார்ப்பதும் சுராயாவை பார்ப்பதுமாய் மாறி மாறி பார்த்து கொண்டிருந்த வேளைதான் அவனைக் கவனித்தேன்.

என்னுடன் வேலை செய்யும் லோரோன் தான். அவன் இரண்டு கைளிலும் இரு குளிர்பான போத்தல்களுடன் சுராயாவை நோக்கி போய்க்கொண்டிருந்தான். சுராயா வரும்போது தன்னுடன் அவனையும் அழைத்து வந்திருக்கலாம் என நினைத்தபடி திரும்பி எனது பொதி வருகிறதா என பார்த்து விட்டு மீண்டும் எனது பார்வையை திருப்பிய போது சுராயாவை நெருங்கிய அவன் குனிந்து கொள்ள சுராயாவும் தனது கைகளை அவனது தோளில்ப் போட்டு இருவரும் உதடுகளால் ஒரு முத்த ஒத்தடம் கொடுத்துவிட்டு சுராயா அவனிடம் இருந்த குளிர்பான போத்தல் ஒன்றை வாங்கி குடிக்க தொடங்கினாள். என்னிடம் இருந்த ஏதோ ஒரு இறுதி நம்பிக்கை ஏதோ ஒரு இறுதி எதிர்பார்ப்பு எல்லாமே எனக்கு கை காட்டிவிட்டு என்னை விட்டு போய்க் கொண்டிருந்தது. சிறிது சுதாகரித்த நான் திரும்பி எனது பொதியை பார்த்தேன் அதுவும் என்னைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது ஓடோடி சென்று எனது பொதியை எடுத்து ஒரு வண்டிலில் போட்டு உருட்டியபடி வெளியில் வந்தேன்.

அடுத்த பாகத்தில் முடிவடையும் ......

Link to comment
Share on other sites

அடடா சுதனின் நிலமை இப்படி ஆச்சே :lol: சரி முடிவுக்காக காத்திருக்கிறம் சீக்கிரம் போடுங்கோ.

Link to comment
Share on other sites

கதை நல்ல சுவாரசியமா போகுது....

வாழ்க்கையிலை நாம் எதை எதையோ நினைத்து முடிவுகளை எடுக்க நிஜ நிகழ்வுகள் எப்படி எப்படியோ எம்மை அலைக்கழித்து விடுகிறன.

இக்கதையும் அதற்கு சான்று.

இக்கதையுடன் நிறுத்திகொள்ளாது தொடர்ந்தும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்ல சுவாரசியமா போகுது....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.