Jump to content

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்


Recommended Posts

நன்றாகச் சொனீர்கள் தல,

வெறும் வாய் சொல்லில் வீரர் அடி கிளியே,

இவர்கள் வெறொன்றும் அறியார் கிளியே.

பதறும் உறவுகள் அங்கே,

புலம்பும் சிறு மதியர் இங்கே,

தமிழர் இவர் எம் உறவென்று,

எங்கனம் சொல்வதடி கிளியே?

விமர்சகர் என தமை முன் நிறுத்தி,

செயல் வீரர் தமை இழிவு செய்யும்,

இவர் வீரம் கண்டு,

வெட்கித் தலை குனிவோம் நாம்

தமிழர் என்று.

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply

நாரதர் பொருத்தமான கவிதை.

Link to comment
Share on other sites

அந்த அறிவு கெட்ட கணேசுவுக்கு நல்ல பொருத்தமா ன கவிதை நாரத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடைக்காடர் உண்ணாவிரதமிருப்பதால் எதுவும் நடக்கப்போவதில்வை அவர்களுக்கு எல்லாம் செவிடன் காதிலே ஊதிய சங்குபோல இருக்கும் ஆகவே அவர் வேறுவழியாக வெளிப்படுத்துவது நல்லது

வளமையான தமிழர் பாணியில் இங்க ஒருவரின் நல்ல முயற்சியை விமர்சிக்க கிளம்பியது போல தெரிகிறது....  

"வைகோல் பட்டடை நாய்" எண்று ஒரு பழமொழி சொல்வார்கள்.....எனக்கு இங்கு எழுதி இருக்கும் சிலரின் கருத்துக்களை பார்க்க  அடிக்கடி கேள்விப்படுகிற  அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது...  

இடைக்காடாரை விட நல்லவிதமாக போராடக்கூடியவர்கள் இல்லை அவரை விடவும் சிறப்பாக செய்யக்கூடியவர்கள் தாராளமாக இந்த களத்தில் இருந்து முன்வரலாம்... உங்களின் பங்களிப்பும் எமது தேசத்திற்கு தேவைப்படுகிறது.... அல்லது வெறும் வாயை மெல்வதுமட்டும்தான் முடியுமானால் இடைக்காடர் அவர்களை சோர்வடையச் செய்யாமல் மெல்லுங்கள்....!

 

நண்றி...!

Link to comment
Share on other sites

¸§½Í ¾-Ó ´ýÚ ¦º¡øÅ¡÷. ¾-À¢ ´ýÚ ¦ºøÅ¡÷. ¸¨¼º¢Â¡ ±Ø¾¢ÂÐ ¾-ÓÅ¡ «øÄÐ ¾-À¢Â¡?

±ýÉ ÒâÂÅ¢ø¨Ä¡. ¾-Ó ¾ñ½¢§À¡¼ Óý. ¾-À¢ ¾ñ½¢ §À¡ð¼À¢ý.

þôÀ ¯¼¨É ÅóÐ ¾¡ý ¾ñ½¢ §À¡Îž¢ø¨Ä. «¨¾ ¿¢ÕÀ¢ì¸ ¡Õ측ÅÐ §À¡ñ Àñ½ ¯û§Çý ±É ÜÚÅ¡÷.

Link to comment
Share on other sites

இடைக்காடர் உண்ணாவிரதமிருப்பதால் எதுவும் நடக்கப்போவதில்வை அவர்களுக்கு எல்லாம் செவிடன் காதிலே ஊதிய சங்குபோல இருக்கும் ஆகவே அவர் வேறுவழியாக வெளிப்படுத்துவது நல்லது

நல்லது அந்த வளிகளை எல்லாம் பட்டியல் இடுங்கள் அதோடுநிற்காமல் உங்களின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதையும் தெரிவியுங்கள்....!

அதோடு தமிழர் ஜனநாயக வளியிலும் நாட்டம் உள்ளவர்கள் என்பதை இங்கிலாந்து புரிந்து கொள்ளக்கூடாது என்பதுக்காய் சிலர்போடும் கூச்சலுக்காக எல்லாம் தளந்தால் வேலைக்காகது என்பது தெளிவாக எல்லாருக்கும் சொல்லவேண்டியதில்லை.....!

இடைக்காடர் அவர்கள் தனது வளியில் பங்களிப்பை நல்கட்டும் நீங்கள் உங்கள் வளியில் பங்களிப்பு செய்யலாமே.....! :idea:

Link to comment
Share on other sites

நாம் அரசியற் போராட்டங்களை நடத்துவது எமது அதிருப்தியைத் தெருவித்துக் கொள்ள.அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் போராட்டம் செய்வது என்பது பலரது கவனத்தையும் ஈர்க்கும்.உலகளாவிய ரீதியில் எமது உறவுகள் தமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் பிரித்தானியாவில் பெருமளவில் தமிழர் இருந்தும் நாம் இவ்வாறான புல்லுருவிகளின் ,குழப்பக்காரரின், காட்டிக்கொடுப்பாலும் சில தனி நபர்களின் சொந்தப் பிரச்சினைகளாலும் பாரிய அளவில் போராட்டங்கள் நடத்தமுடியாத துர்ப்பாக்கிய நிலமை தோற்றுவிக்கப் பட்டுள்ளது.இது நீண்டகாலமாக திட்டமிட்ட ரீதியில் இலங்கைப் புலனாய்வு அமைப்பினாலும், அதனால் வளர்க்கப்பட்டுள்ள கைக்கூலிகளாலும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டு வரும் ஒரு சதி நடவடிக்கை ஆகும்.

இப் போராட்டங்களால் பிரித்தானிய அரசு தனது வெளி உறவுக்கொள்கையை மாற்றாது தான் ஆனால் தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பின் நிற்கிறார்கள் என்பதை அது உணர்த்தும், அதுவும் பிரித்தானிய கவுன்சிலர்கள் பின்னால் நிற்கிறார்கள் என்பது இன்னும் சிறப்பானது.

தயா இடைக்காடரினதும் மற்றய கவுன்சிலர்களினதும் இப் போராட்டத்திற்கு லண்டன் வாழ் தமிழ் உறவுகள் முழு ஆதருவு நல்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நாம் ஒன்று பட்டு அனைத்துச் சதிகளையும் முறையடிப்போம்.

Link to comment
Share on other sites

நன்றாகச் சொனீர்கள் தல,

வெறும் வாய் சொல்லில் வீரர் அடி கிளியே,

இவர்கள் வெறொன்றும் அறியார் கிளியே.

பதறும் உறவுகள் அங்கே,

புலம்பும் சிறு மதியர் இங்கே,

தமிழர் இவர் எம் உறவென்று,

எங்கனம் சொல்வதடி கிளியே?

விமர்சகர் என தமை முன் நிறுத்தி,

செயல் வீரர் தமை இழிவு செய்யும்,

இவர் வீரம் கண்டு,

வெட்கித் தலை குனிவோம்  நாம்  

தமிழர் என்று.

:cry: :cry: :cry:

ஆனந்த கண்ணீர் அண்ணா..... ஆனந்த கண்ணீர்...!

Link to comment
Share on other sites

நாம் அரசியற் போராட்டங்களை நடத்துவது எமது அதிருப்தியைத் தெருவித்துக் கொள்ள.அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் போராட்டம் செய்வது என்பது பலரது கவனத்தையும் ஈர்க்கும்.உலகளாவிய ரீதியில் எமது உறவுகள் தமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் பிரித்தானியாவில் பெருமளவில் தமிழர் இருந்தும்  நாம் இவ்வாறான புல்லுருவிகளின் ,குழப்பக்காரரின், காட்டிக்கொடுப்பாலும் சில தனி  நபர்களின் சொந்தப் பிரச்சினைகளாலும் பாரிய அளவில் போராட்டங்கள்  நடத்தமுடியாத  துர்ப்பாக்கிய நிலமை தோற்றுவிக்கப் பட்டுள்ளது.இது  நீண்டகாலமாக திட்டமிட்ட ரீதியில்  இலங்கைப் புலனாய்வு அமைப்பினாலும், அதனால் வளர்க்கப்பட்டுள்ள கைக்கூலிகளாலும்  நிகழ்த்தப்பட்டுக் கொண்டு வரும் ஒரு சதி நடவடிக்கை ஆகும். .

இது தான் இங்கு எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே....!

உயர் அதிகாரிகள் வரை கடிதம் எழுதி தங்களின் கற்பனையால் சோடனை செய்து தடுக்க முயற்சிகள் பல நடக்கும்.. பலிக்காத இடத்தில பின்னர் இப்படி முன்னிண்று செயற்பட துணியும்.. சிலரைப்பற்றி அவதூறுகள் பரப்பி அல்லது பழய பிரச்சினைகளை கிழப்பி அவர்களை சோர்வடையசெய்து அவர்களை செயற்படாமல் முடக்குவது இங்கு இருக்கு சிலரின் கையான வேலை....

இங்கு இருக்கும் தமிழர்கள் விளிப்பாக இருந்து புல்லுருவித்தனதை வெளிச்சம்போட்டுகாட்டுவது கடமை....!

Link to comment
Share on other sites

நன்றிகள், தொடர்ந்து ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு வைத்தவர்களுக்கு, தற்போது இரவு 1 மணி, நாளை காலை தொழிலுக்கு செல்ல வேண்டி இருந்தாலும், கனேடிய தமிழ் வானொலி மூலம் ஒன்றுகூடலின் நேர்முகவர்ணனையை கேட்டுக் கொண்டு ....

பிரித்தானியாவில் கடந்த நீண்ட காலமாக தமிழ்த் தேசிய செயற்பாடுகள் பெருமளவில் முடக்கப்பட்டிருந்தன. எம் தாயக மக்களின் குரல்கள், எம்மக்களின் அவலங்கள், கொலைவெறி சிறீலங்கா அரசின் அட்டூளியங்கள் சர்வதேசத்துக்கு சரியாக எடுத்துக் கூறப்படவில்லை. மாறாக சிங்களநாட்டின் குரல்களே சர்வதேசத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தன. எம்மக்கள் அழித்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு தமிழன் முன்வந்து சர்வதேசத்தின் முன் நியாயம் கேட்டு, பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலிலுக்கு வந்துள்ளான். இது தவறா??? எம்மக்களின் அவலங்களை சர்வதேசத்தின் முன் அம்பலப்படுத்த முயல்வது தவறா???

காலம் காலமாக நாம் ஒரு வட்டத்தினுள்ளேயே நிற்கப் பழகி விட்டோம் பின்னனி, முன்னனி, ... எல்லாம் தடவித்தான் ஆதரிப்போம் ஆயின், இங்கு ஒருவரும் தகுதியானவர்களில்லை. முன்பு எதிரான கருத்துகள் கொண்டவர்கள் தமிழ்த்தேசியத்தை தற்போது ஆதரிக்கக் கூடாதா??? அப்படியாயின் இன்று "புளொட்" கும்பலில் 30 வருடங்களாக இருந்த "பாறூக்", சிறீலங்கா புலநாய்வுத்துறையின் முக்கிய பொறுப்பாளர் "ஜெயரட்ணம்", என்ன வெளிவராத ஆயிரக்கணக்காணவர்கள் இன்று தேசியத்துடன் இணந்திருக்க முடியாது. "யார் குத்தினால் எமக்கென்ன, எமக்கு அரிசியானால் சரி"!!!! அதுதான் இன்றைய தேவை!!!!

இதில் குறிப்பாக திரு தயா இடைக்காடர் அவர்கள், தொழில் கட்சியை சார்ந்தவர், கவுன்சில் உறுப்பினர், பல அரசியல்வாதிகள், அமைச்சர்கள் உடன் தொடர்புடையவர். ஒரு தொழில் கட்சி உறுப்பினரே இப்போராட்டத்தில் எம்மக்களின் அவலங்களை உலகிற்கு எடுத்துக்காட்ட குதித்திருப்பது நிச்சயம் சில தாக்கங்களை அரசியல் மட்டத்தில் ஏற்படுத்தும். அதனைவிட இப்போராட்டம் பிரித்தானிய சர்வதேச ஊடகங்களை குறி வைத்தே நடாத்தப்படவும் இருப்பதாக அறிய முடிகிறது. இப்போராட்டத்தில் குறிப்பாக எமது மக்களின் அவலக் கோரக்காட்சிகளை மட்டுமே கொண்ட ஒரு மில்லியன் துண்டுப்பிரசுரங்கள் லண்டன் நகர முக்கிய இடங்களில் விநியோகிக்கப்பட இருக்கிறது.

இப்போராட்டம் மட்டுமல்ல லண்டனில் இதனைத் தொடர்ந்து "கறுப்பு யூலையை" நினைவுபடுத்தி கண்கள், வாய்கள், காதுகள், கைகள் கட்டப்பட்ட பாரிய ஊர்வலம் ஒன்று லண்டனின் பிரசித்தி பெற்ற தெருக்களினூடே நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறத்தொடங்கியிருக்கிறது.

இப்போராட்டங்கள் எந்த ஒரு அமைப்பும் இங்கு ஒழுங்கு செய்யவில்லை. எம் தேசியத்தை வலுப்படுத்த தனிநபர்களால் நடாத்தப்பட இருக்கிறது. எம்மை எந்தத் தடைகளாலும் ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உலகிற்கு உரக்கக் கூறுவோம். வெல்வோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கம் பல மடங்கு பணத்தினை வெளினாட்டில் பிரச்சாரத்துக்கு செலவிடுகிறது. தயா இடைக்காரரின் உண்ணவிரதத்தினால் பிரித்தானியா பத்திரிகைகளில் உண்ணவிரதச்செய்தியுடன், ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார் என்பது பற்றியும், சிங்கள அரசின் கொலைகள் பற்றியும் செய்திகள் வரலாம். இது தமிழர்களின் பிரச்சாரத்துக்கு ஒரளவு நன்மைகளினை ஈட்டுத்தரும்

Link to comment
Share on other sites

அவர் எங்கையிருக்கிறார் என்பது பிரச்சனையில்லை, என்ன செய்கிறர் என்பதுதான் பிரச்சனை. நல்ல விசியம் தான் செய்யிறார். அதோடை மரத்தடியிலை இருந்து பேப்பரும் வாசிக்கிறார். இப்ப புரிந்திருக்குமே கந்தப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயாவின் போராட்டம் நிச்சயமாக லண்டனில் பல மாற்றங்களை ஏற்படுத்தத்தான் போகிறது. அது மட்டுமல்லாமல் லண்டனில் இருக்கும் எம்மவர்களுக்கும் புதுத்தெம்பை ஏற்படுத்தும். இப்போராட்டத்திற்கு எம்மாலான அணைத்து ஆதரவுகளையும் தயாவிற்கு வழங்குவோம்.

இப்போராட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் வியாளக்கிழமை இரவு 8 மணியளவில் நோத்கரோப்பகுதியில் இடம்பெற இருக்கிறது. இதில் இப்போராட்டத்திற்கு தொண்டர்களாக உதவ விரும்புபவர்கள் வந்து கலந்து உங்களாலான பங்களிப்பை செய்யலாம்.

தொடர்புகளுக்கு ...

Tel: 020 8863 2372 or 07812028741

Fax: 020 8427 6041

e-mail: thaya10@aol.com

Link to comment
Share on other sites

இப்போராட்டத்தை நாம் எவ்வாறு ஆங்கில ஊடகங்களுக்கு கொண்டு செல்கின்றோமோ, அதில்தான் எமது வெற்றி தங்கியுள்ளது. அதில்தான் ஏற்பாட்டாளர்கள் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

எமது லண்டன் வாழ் தமிழீழ மக்களின் ஆதரவு, வாழ்த்துக்கள் நிச்சயம் உங்களுடன் இருக்கும்.

இப்போராட்டம் லண்டனில் தொடங்கப்போகும் தேசிய எழுச்சிக்கான ஆரம்பமாக இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயதேவன் லண்டனில் மட்டுமல்ல உலகில் உள்ள ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் புதுத்தெம்பினை ஏற்படுத்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. அவர் தமிழர்களுக்காக ஏதோ செய்யவேண்டும் என்று முயல்வது பாராட்டத்தக்கது. ஆனால் அவர் இங்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிய புள்ளி அல்ல. அண்மைக்காலமாகத்தான் இவருடைய பெயர் அடிபடுகின்றது. இவர் இதுவரை எம்மக்களுக்காக செய்த சாதனைகளை மக்களுக்கு கூறும்படி நான் முன்னர் கேட்டதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை.

ஒரே கட்சியில் இருப்பதால் அவர் எல்லோருக்கும் நண்பர் என்று கூறலாமா? இப்படிப்பட்டவர் ஏன் தனது உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? எனக்கும் ஓர் ஆதங்கம் இருக்கிறது அதுதான் இப்படிக் கேட்கிறேன். நண்பர்கள் மூலமாக வேறுவழிகளில் தமிழ்மக்களுக்கு நல்லது செய்யலாமே!

நாகரீகமான எழுத்து நிச்சயம் இருக்கவேண்டும். எத்தனையோ இளையவர்களும் இக்களத்தைப் பார்க்கிறார்கள். அவர்களைப் பற்றியும் சிந்தித்து எழுதவேண்டும். பலர் இங்குவந்து தமது கருத்துக்களை எழுதாதமைக்கு இதுவும் ஒரு காராணமாக இருக்கலாம் அல்லவா?

ஆசிரியர் அவர்களே உங்களின் கரத்தும் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருக்கின்றது

தயா இடைக்காடர் இப்போது தான் குரல் கொடுக்கின்றார் என்பதால் நம்ப முடியாமல் இருக்கின்றது என்பது கூட அவரை தேசிய ஆதரவு நிலையை எடுக்க கூடாது என்ற மனநிலையைப் பிரதி பலிப்பதாகவே உணரவேண்டி இருக்கின்றது. அப்படிப் பார்க்கபோனால் இன்று கொழும்பிலும், யாழிலிரும் இருந்தபடி தேசியத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் ஈழவேந்தன் ஜயா கூட 20 வருடங்கள் தமிழீழப் போராட்டத்தை விட்டு விலகி இந்தியாவில் தான் இருந்தவர். அதற்காக அவர் ஆதரவு நிலையை எடுப்பது நம்பிக்கையில்லை என்று சொல்லமுடியுமா? தேசியத் தலைமை அவரை நியமித்தது அவரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு தான்!

தயா இடைக்காடர் அவர்களுக்கு இப்போது கூட ஆதரவு நிலையை எடுக்க வேண்டிய நிலையைக்கான தேவை எழாத போது கூட ஆதரவு நிலையை எடுப்பதை வரவேற்க வேண்டும். உண்ணாவிரதம் எடுப்பது சரியோ, தவறோ சொல்லமுடியாது. ஆனால் அவர்களின் ஆதரவை வரவேற்போம். ஏனென்றால் அவரும் ஒரு ஈழக்குடிமகனே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன், தயா இடைக்காடர் எடுக்கும் முயற்சிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு. அதிலே அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

ஆனால் ஒன்று, தாயக விடுதலைப் போராட்டத்திற்காக உண்ணாவிரதமிருந்த ஒருசில வீரர்களை நன்கு அறிவேன், தயா இடைக்காடரையும் நன்கு அறிவேன். அத்தோடு நீர் இருக்குமிடம் எங்கென்று தெரியவில்லை நான் இலண்டனிலே வசிக்கிறேன் அதனால்தான் அப்படி எழுதினேன்.

ஈழவேந்தனுடன் மற்றவர்களை ஒப்பிடமுடியாது. ஒவ்வொருவரும் தமது தாயகப்பற்றை வெளிப்படுத்தும் விதங்கள் வேறுபடும்.

தாயகத்திலே எமது தாயத்திற்காக உண்ணாவிரதம் இருந்தவர்களையும், இங்கிலாந்தில் தமது தாயகங்களுக்காக உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைகளையும் எண்ணிப்பாருங்கள். இவருடைய இந்தப்போராட்டம் இங்குள்ள ஆங்கில ஊடகங்களில் உட்புகுந்து தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமையவேண்டும். எமது தமிழ் ஊடகங்களில் மட்டும் தலையைக் காட்டுவதால் எதுவித பயனுமில்லை. பயனில்லாத ஒன்றைச் செய்து பலருடைய பழிச்சொல்லுக்கும் ஆளாகக்கூடாது என்கின்ற ஆதங்கம் எனக்கு மட்டுமல்ல இங்குள்ள பலருக்கு இருக்கிருக்கின்றது. எம்மக்கள் இவருடைய செயல்களை மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே எடுத்த காரியத்தை திறம்படச்செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன், வாழ்த்துகிறேன்!

Link to comment
Share on other sites

In a message dated 01/06/2006 14:04:30 GMT Standard

Time, renukarana@tiscali.co.uk writes:

What nonsense is this Harrow councillor doing. A disgrace!

The Tamil LTTE are killing and displacing Muslims, Tamils and Sinhalese every day including a 12 year old boy and a 14 year old boy - both Tamil for refusing to join their children's army. Plus 12 Sinhala civilians - farmers in Welikande shot by Tamil LTTE child soldiers.

What a disgrace. This Tamil Councillor in Harrow is a liar and has no decency and is misusing his position. I suppose he is a good friend of Prabhakaran, Balasingham and is invited to Prabhakaran's daughter's birthday party in London while Tamil people and children suffer at the hands of the LTTE in N and E Sri lanka.

Get a grip ! Face the truth.

The councillor chap should be sacked

RR

From: <Thaya10@aol.com>

To: renukarana@tiscali.co.uk

Subject: Re: What nonsense !

Dear Sir / Madam

It is very brave of you to hide behind some initials.

Please understand I am not doing this as a harrow councillor but as an individual.

I have never met or spoke to Mr Prabaharan. I have no idea when or where is his daughter's birth day party is. Looks like you know more about him than I do. Congratulations.

I have not spoken to Mr Balasingam.

You are the liar not me. If you have the courage come to a public meeting and we can discuss the issue.

This is about people not about LTTE. Is there any evidence you condemned any killings of innocent Tamil people. Where were you when a four month old baby was hacked to death.

Elected parliamentarians were murdered in government controlled areas. One poor young girl was raped and murdered. Why didn't you come out and speak?

Unlike you I use my real name.

Your faithfully

Thaya Idaikkadar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.தயா இடைக்காடரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் இதற்கு என்றும் எமது மக்கள் துணைநிற்பார்கள் ஆனால் ஒரு சிலர் உங்களுடன் கூட நின்று உங்களுக்கு மட்டுமல்ல தமிழினத்தற்கே துரோகம் செய்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வது நல்லது

Link to comment
Share on other sites

தங்களின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

உங்களுடன் கூடியே கடவுள் துணை நிற்பார்

Link to comment
Share on other sites

ஆகா... என்ன ஒரு அற்புத போராட்டம். உண்மையிலேயே இவ்வாறான போராட்டங்களின் மூலம் எமது நீதிக்கான மக்கள் போரட்டத்தினை எடுத்து சொல்ல எண்ணியமை பாராட்டப்பட வேண்டிய ஒருவிடயம். அவரின் பொறுப்புமிக்க தொணிகர போராட்டத்தினை உலகம் புரிந்து, எமது மக்களின் உயிர்களை சிறீலங்கா இனவெறி படைகளிடமிருது காத்துக்கொள்ள உதவுமாயின், அதற்க்காக பிருத்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் நன்றி கூறலாம்.

அண்ணன் தயா இடைக்காடார் அவர்களின் அகிம்சை போராட்டம் அதன் இலக்கினை அடைய எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

.தயா இடைக்காடரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் இதற்கு என்றும் எமது மக்கள் துணைநிற்பார்கள் ஆனால் ஒரு சிலர் உங்களுடன் கூட நின்று உங்களுக்கு மட்டுமல்ல தமிழினத்தற்கே துரோகம் செய்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வது நல்லது

.வீரப்பன்மனைவி முத்துலட்சமிக்கு நடந்தது இடைக்காடருக்கு நடக்காமல் இருந்தால் சரி தேர்தலில் போட்டியிட வைத்து கட்டுக்காசையும் இழக்க சிலர் சதிசெய்ததாக கூறியுள்ளார்

.உண்ணாவிரதம் இருப்பதால் இந்த நாட்டில் எவ்வித பயனுமில்லை பல வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடு ஒன்றில் உண்ணாவிரதமிருந்தவர்களுக்கு உருளைக்கிழங்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்த வெள்ளைக்காரர்களும் இங்கு இருக்கிறார்கள்

.நல்லிடயம் ஆனால் இதனால் பயனெதுவும் இல்லை?

நீங்கள் பிரச்சாரத்தில் சொறிலங்கா அரசாங்க அமைச்சர்களையும் வென்று விட்டீர்கள்(முக்கியாய் கெட்டகதெனியா). எழுதிப்போடுங்கோ நிச்சயம் வேலை கிடைக்கும்.

.

Link to comment
Share on other sites

இன்று வெஸ்ற்கரோ தொழிற்கட்சி அலுவலகத்தில், இப்போராட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பலர் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலுக்கு நானும் சென்றிருந்தேன். நடைபெற இருக்கும் இப்போராட்டம் சம்பந்தமாக பல இறுதி முடிபுகள் எடுக்கப்பட்டன.

இப்போராட்டத்தை வெளிஊடகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான முக்கிய பொறுப்பு "ஒரு பேப்பர்" பிரதம ஆசிரியர் கோபி தலைமையில் திருமது ஆனந்தி சூரியப்பிரகாசம், ரகு, சேதுரூபன், வாசுதேவன் அடங்கிய குழு பொறுப்பெடுத்துள்ளது.

இப்போராட்டம் நடைபெற இருக்கும் 101 மணித்தியாலங்களும், திரு தயா இடைக்காடரின் உடல்நலத்தை கவனிக்க சேர்ந்த வைத்திய கலாநிதி புவிநாதன் தலைமையிலான Tamils Health Organisation வைத்தியர்கள் குழு பகல், இரவாக சேவையாற்ற உள்ளார்கள்.

இதனைவிட 24 மணிநேரமும் பாதுகாப்புக் குழுக்கள், உதவிக்குழுக்கள், துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் குழுக்கள் என எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்போராட்டத்தை பலப்படுத்தும் விதமாக ஏற்கனவே எம்மவர் ஊடகங்களான ஐ.பி.சி, ரி.ரி.என் தமக்கே உரித்தான பணிகளை ஆரம்பித்து விட்டன.

இப்போராட்டத்தை வலுப்படுத்த நிதர்சனம் இணையத்தளமும் தன்னாலான பங்கை முழுமையாக செய்து கொண்டிருக்கும் அதேவேளை, இப்போராட்டம் நடைபெற இருக்கும் பாராளுமன்ற முன்றலிலிருந்து செய்மதியூடாக நேரடி ஒளிபரப்ப இருக்கிறது.

இப்போராட்டம் நிச்சயமாக சில திருப்பங்களை பிரித்தாணியாவில் ஏற்படுத்தத்தான் போகிறது. திரு தயா இடைக்காடரின் இம்முயற்சியின்போது, எம்மக்களின் அவலங்களை கூறுவதன் மூலம் பிரித்தாணியாவில் சிலரது மனகதவுகளை திறப்போமாயின், அதுவே இப்போராட்டத்தின் வெற்றியாகும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.