Jump to content

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இவருடைய இந்தப்போராட்டம் இங்குள்ள ஆங்கில மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் உட்புகுந்து தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமையவேண்டும். எமது தமிழ் ஊடகங்களில் மட்டும் தலையைக் காட்டுவதால் எதுவித பயனுமில்லை.

நான் கூட இணையம் ஊடாக இங்கு ஜேர்மனியில் உள்ள ஜேர்மன் பத்திரிகை ஆசிரியர்களின் பெயரையும் விலாசத்தையும் பெற்று அவர்களுக்கு தபால் முலம் ஜேர்மனியில் நடைபெற்ற உரிமைகுரலில் எம் மக்களினால் கொடுக்கப்பட்ட ஜேர்மனிய மொழியில் உள்ள துண்டு பிரசுரங்களையும் பத்திகைகளையும் அனுப்பியுள்ளேன்.

Link to post
Share on other sites
 • Replies 167
 • Created
 • Last Reply

இங்கு கருத்து கூறிய நண்பர்கள் அனைவர்கும் என் நன்றிகள். என் கடைமைகள் முடிந்ததும் உங்களுடன் மீண்டும்கலந்து கொள்கிறேன்

நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவிச்ச இறால் துடிக்குது என்று எழுதும் நிதர்சனம் .இணையத்தளத்தை நம்பலாமா?

Link to post
Share on other sites

தூயவன், தயா இடைக்காடர் எடுக்கும் முயற்சிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு. அதிலே அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

ஆனால் ஒன்று, தாயக விடுதலைப் போராட்டத்திற்காக உண்ணாவிரதமிருந்த ஒருசில வீரர்களை நன்கு அறிவேன், தயா இடைக்காடரையும் நன்கு அறிவேன். அத்தோடு நீர் இருக்குமிடம் எங்கென்று தெரியவில்லை நான் இலண்டனிலே வசிக்கிறேன் அதனால்தான் அப்படி எழுதினேன்.

ஈழவேந்தனுடன் மற்றவர்களை ஒப்பிடமுடியாது. ஒவ்வொருவரும் தமது தாயகப்பற்றை வெளிப்படுத்தும் விதங்கள் வேறுபடும்.

தாயகத்திலே எமது தாயத்திற்காக உண்ணாவிரதம் இருந்தவர்களையும், இங்கிலாந்தில் தமது தாயகங்களுக்காக உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைகளையும் எண்ணிப்பாருங்கள். இவருடைய இந்தப்போராட்டம் இங்குள்ள ஆங்கில ஊடகங்களில் உட்புகுந்து தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமையவேண்டும். எமது தமிழ் ஊடகங்களில் மட்டும் தலையைக் காட்டுவதால் எதுவித பயனுமில்லை. பயனில்லாத ஒன்றைச் செய்து பலருடைய பழிச்சொல்லுக்கும் ஆளாகக்கூடாது என்கின்ற ஆதங்கம் எனக்கு மட்டுமல்ல இங்குள்ள பலருக்கு இருக்கிருக்கின்றது. எம்மக்கள் இவருடைய செயல்களை மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே எடுத்த காரியத்தை திறம்படச்செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன், வாழ்த்துகிறேன்!

நிச்சயமாக! நீங்கள் அருகில் இருப்பதால் அதிகம் தெரிந்து வைத்திருக்கலாம்! ஆனால் என் கருத்து என்னவென்றால் ஒரு தாயக சார்பு நிலையை எடுக்கின்ற ஒவ்வொருவனையும் ஆதரிக்க வேண்டும்! அது தான் இப்போதுள்ள தாயக விடுதலைக்குத் தேவை!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போராட்டம் வெற்றியளிப்பது, நம் கையிலேயே தங்கியுள்ளது. சும்மா சுத்திச் சுத்தி சுப்பற்றை நிற்காமல் அகல உலகில் காலடி எடுத்து வைப்போம். நம் மக்கள் கவனிக்கிறார்கள் என்றால், அந்த மக்களில் ஒருவர் ஏன் இப்படியான போராட்டத்தில் இறங்கக் கூடாது. சும்மா இனியும் அரிதட்டம் வைத்து அரிப்பதை விடுத்து "யார் குத்தியும் அரிசியானால் சரி" என்பதே எமது செயலாக விருப்பாக இருக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை .... இது பிரித்தானியாவில் ஒரு தொடக்கமே ... தொடர்வோம்! பிழைகளை சரி செய்வோம்!! எம்மக்களின் அவலங்களை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டுவருவோம்!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தயா அவர்கள் குளித்து தறபோது தயாராகிக் கொண்டிருக்கிறார். அவரை அவரது நண்பரகள் சரியாக 9 மணிக்கு கோயிலிற்கு அழைத்து சென்ற ஆலய வளிபாட்டின் பின். சரியாக 11.30 மணிக்கு பாராளுமன்றத்தை சென்றடைவார்.

இரவு நடைபெற்ற சந்திப்பில் மருத்துவர்கள் தமது ஆலோசனைகளை அவருக்கு கூறியதுடன். தொடர்ச்சியாக அவரை கண்காணிக்கவும் இணங்கியுள்ளனர். தயா அவர்கள் உண்ணாவிரதத்தை உலகளாவிய மக்கள் பாரப்பதற்கும் நிதர்சனம் இணையத்தளம் ஒரு இணைப்பை கொடுத்துள்ளது.

http://www.nitharsanam.com/?art=17826

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மனிதனின் போராட்டத்தை மதிப்பதாக இருந்தால், அவிச்ச இறால் துடிக்கிற கதைகளை விடுத்து ஆக்கபுூர்வமான கருத்துக்களை மட்டும் எழுதவும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தை நிச்சயம் மதிப்பவன் ஆனால் நிதர்சனம் போன்ற பொய்யான தகவல்களை சொல்லும் இணையத்தளததில் இடைக்காடர் இணைந்திருப்பது மிகவும் மனவருத்தத்திற்குடையது இவ்பொய்யான நாகாPகமற்றமுறையில் ஆபாசமாக எழுதும் இணையத்தளத்தைப்பற்றி விடுதலைப்புலிகளிற்கும் தகவல் பொடுத்திருந்தேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனம் நடத்துபவர்களை பிடிக்க வில்லை என்பதற்காக நிதர்சனம் தரும் நிதர்சனமான உண்மைகளை கூட உள்வாங்கிக் கொள்ள முடியாதது கவலைக்குறியதே

Link to post
Share on other sites

நிதர்சனம் நடத்துபவர்களை பிடிக்க வில்லை என்பதற்காக நிதர்சனம் தரும் நிதர்சனமான உண்மைகளை கூட உள்வாங்கிக் கொள்ள முடியாதது கவலைக்குறியதே

அண்மையில் ஒரு இலங்கை ஆங்கில இணையத்தில் நிதர்சனத்தை புலிகளின் புலநாய்வுப்பிரிவின் இணையம் என வர்ணித்திருந்தார்கள்.... (இணைப்பு இப்போ கிடைக்கவில்லை) அவ்வளவு வெறுப்பை இனவாதிகளுக்கு அந்த இணையம் கொடுத்திருப்பது நிதர்சனத்தின் வெற்றி என்பதை சிலரால்த்தான் மறுக்க முடியும்... அவர்களை இனங்காணுங்கள்...

மற்றய இணையங்களில் இருந்து தீவிரமான போக்கை நிதர்சனம் கடைப்பிடிப்பதற்காக அவர்களை விமர்சிக்கமுடியாது.... தீவிர சிங்கள் ஊடகங்கள் இருக்கின்றன அவற்றை எந்த சிங்களவனும் வெறுக்கவும் இல்லை விமர்சிக்கவும் இல்லை... நிதர்சனத்தின் பணியும் தொடரட்டும் வாழ்த்துக்கள்..... !

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
நிதர்சனத்தின் பணியும் தொடரட்டும் வாழ்த்துக்கள்..... ! :lol::lol::lol::lol::lol::lol:
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை நிச்சயம் மதிப்பவன் ஆனால் நிதர்சனம் போன்ற பொய்யான தகவல்களை சொல்லும் இணையத்தளததில் இடைக்காடர் இணைந்திருப்பது மிகவும் மனவருத்தத்திற்குடையது இவ்பொய்யான நாகாPகமற்றமுறையில் ஆபாசமாக எழுதும் இணையத்தளத்தைப்பற்றி விடுதலைப்புலிகளிற்கும் தகவல் பொடுத்திருந்தேன்

எல்லா விரலும் ஒரேமாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது, நீர் ஏன் பன்னாடை போல நல்லவற்றை விட்டுவிட்டு கஞ்சல்களை மட்டும் பிடித்து வைத்திருக்கிறீர், அன்னப்பறவை போல் நீரைவிட்டு விட்டு பாலை மட்டும் பருகப்பாரும். 8) 8) 8)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தின் நேர்முகவர்னனையை ...

http://www.ibctamil.co.uk/ இல் கேட்கலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து கூறிய நண்பர்கள் அனைவர்கும் என் நன்றிகள். என் கடைமைகள் முடிந்ததும் உங்களுடன் மீண்டும்கலந்து கொள்கிறேன்

நன்றி

சென்றுவருக வீரரே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்போராட்டத்தின் மூலம் எம்மக்களின் அவலங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் "ஊடகக் குழுவின்" செயற்பாட்டிலேயேதான், இப்போராட்டத்தின் வெற்றி/தோல்வி தங்கியுள்ளது. எங்கே, எப்படி, எவ்வாறு மேற்கத்தேய ஊடகவியலாளர்களை அணுக வேண்டுமென்பதை வேண்டுமென்பதை இவர்கள் தீர்மாணிக்க வேண்டும். அதை உடன் செயற்படுத்த வேண்டும். அவர்கள் அதனை திறம்பட செய்வார்கள் என் நாம் நம்புவோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதம் முடிந்துவிட்டதா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் முடிந்துவிட்டதா?

ஏனப்பு உமக்கு இப்ப என்ன பிரச்சினை? ஐ.பி.சி யில் செய்திகளை கேட்கேல்லையோ?

தேவனிட்டை எவ்வளவு வாங்கிறீர்கள் இப்பிடி இங்க வந்து உங்களின்றை கருத்துக்களை எழுதுறதுக்கு?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் உந்த ஈ.என்.டி.எல்.எப் "கணேசு" கனக்க கஸ்டப்படுகுது! விடுங்கோ!! போறவரை போகட்டும்!!! எங்கடை எல்லாம் முடியட்டும் பின்பு ....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
thaya1.jpg
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
thaya.jpg
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஓம்.. புங்கையூரான், இவர்...  வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்ற  நகைச்சுவை நடிகர்களின்  காலத்திலேயே...  தனக்கென்று... வித்தியாசமான பாணியில் நடித்தவர். இலங்கைத் தமிழர் மீது... மிகுந்த பற்றுக் கொண்டவர் மட்டுமல்லாது... தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில்... இலங்கைத் தமிழை பேசி நடித்து, மட்டக்களப்பு, அவுஸ்திரேலியா போன்ற இடங்களுக்கு செல்லும் நேரத்தில்... எம்முடன்... ஒன்றாக  இருந்து, தனது அன்பை காட்டியவர்.   
  • தொடர்ந்து விடாமல் வாசிக்க வைத்த ஒரு வேகமான எழுத்துநடையுடன் கூடிய அமானுஷ்யக்கதை யாழ் களத்தின் இன்றைய கதை நாயகன் அக்னி தான் 👏👏👏
  • வாஷிங்டன் சுந்தர் குறைந்த போட்டிகளில் விளாயாடி உள்ளதாகவே நினைவு. 
  • கொரோனா வைரஸ்: பதைபதைக்க வைக்கும் குஜராத் நிலவரம்! - என்ன நடக்கிறது அங்கே? திலகவதி கொரோனா பரிசோதனை ( Channi Anand ) கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சூழலில், குஜராத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் நடுங்க வைப்பவையாகவுள்ளன. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை படுக்கைகள் இல்லை என்றும், அவசர ஊர்திகள் இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது எல்லாவற்றையும்விட இடுகாடுகளில் வழக்கத்தை காட்டிலும் மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்று வரும் செய்திகள் அச்சத்தை தருபவையாக உள்ளது.   கொரோனா பாதிப்பு Twitter அரசு கொடுக்கும் முரணான தகவல் ஒரு கட்டத்தில் இடுகாடுகளில் இடம் இல்லாமல் உடல்களை திறந்தவெளிகளில் எரிப்பது போன்ற புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. சூழல் இப்படி இருக்க கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்கள் என அரசு கொடுக்கும் எண்ணிக்கையும் நிஜத்தில் நிகழ்பவையும் ஒன்றோடு ஒன்றோடு தொடர்பற்றது போல உள்ளது என குஜராத் மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   குஜராத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என அரசு கொடுக்கும் எண்ணிக்கை குறைவானதாக உள்ளது என உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. குஜராத்தின் சூரத் நகரில் நிலைமை மோசமானதாக உள்ளது. அங்கு ஏப்ரல் 12 மற்றும் 13 தேதிகளில் கொரோனாவால் வெறும் 22 பேர் மட்டுமே உயிரிழந்தார்கள் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அந்நகரில் உள்ள இடுகாடுகளில் வழக்கத்தை காட்டிலும் மூன்று அல்லது நான்கு மடங்கு உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.   கொரோனா உயிரிழப்பு உருகிய எரி உலை இது மட்டுமல்லாமல் சில இடங்களில் உடல்களை தகனம் செய்வதற்கு 8-10 மணி நேரங்கள் வரை காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதில் துயரத்தின் உச்சமாய் சூரத்தில் உள்ள இடுகாடு ஒன்றில் தொடர்ந்து உடல்கள் எரியூட்டப்படுவதால் எரி உலை உருகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள நபர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.   குஜராத்தின் அகமதாபாத் நகரில் மருத்துவமனை ஒன்றில் நுழைய நீண்ட வரிசையில் அவசர ஊர்திகள் காத்துக் கொண்டிருக்கும் வீடியோவும் சமூக ஊடகங்களில் காண முடிந்தது. அகமதாபாத் மருத்துவ கூட்டமைப்பு, நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. மகராஷ்டிராவிலும் இதே நிலைமை குஜராத்தில் மட்டுமல்ல மகராஷ்டிராவிலும் இதே நிலைதான். அம்மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால் மாநிலம் முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் கொரொனா தொற்றால் 30 லட்சத்துக்கும் அதிகாமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.   தொடரும் கும்பமேளா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்க, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்து கொண்ட சாதுக்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கும்பமேளாவில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது என அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கும்பமேளா தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் 1,185 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மகராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய நகரங்களில் கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளன.     https://www.vikatan.com/government-and-politics/politics/corona-virus-gujarat-situation-at-worst-whats-going-on-there
  • இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏன்? மீண்டும் சேர வாய்ப்பு எப்படி..?   இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடராஜனுக்கு ஒப்பந்தம் வழங்காதது அவருடைய ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பதிவு: ஏப்ரல் 16,  2021 16:02 PM மும்பை இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஏ பிளஸ், ஏ, பி சி என்று 4 வகையாக கிரிக்கெட் வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டு ரூ.7 கோடி, ரூ.5 கோடி, ரூ.3 கோடி, ரூ.1 கோடி வீதம் ஆண்டுதோறும் ஊதியம் வழங்கப்படுகிறது. 2020-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. ஏ பிளஸ் பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களின் சம்பளம் தலா ரூ. 7 கோடி. ரூ. 5 கோடிக்கான ‘ஏ’ பிரிவில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, அஜிங்யா ரஹானே, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, இடம் பெற்று உள்ளனர்.  டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னுரிமையாக வைத்திருக்க பி.சி.சி.ஐ விரும்புகிறது, எனவே இது கிரேடு ஏ ஒப்பந்தங்களை புஜாரா, அஜிங்யா ரஹானே, இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வின் போன்ற வீரர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த வீரர்கள் சமீபத்திய காலங்களில் குறுகிய வடிவங்களுக்கு தேர்வு செய்யப்படவில்லை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை மட்டுமே விளையாடுகிறார்கள். ரூ. 3 கோடிக்கான ‘பி’ பிரிவில் விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால், ‘சி’ பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், சுப்மான் கில், ஹனுமா விஹாரி, அக்‌ஷர் பட்டேல், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குறைந்த ஆட்டங்களில் விளையாடியுள்ள சைனி, தீபக் சஹார், சுப்மன் கில், சிராஜ் ஆகியோர் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழக வீரர் நடராஜனுக்கு ஒப்பந்தப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.  நடராஜன் இந்திய அணிக்காக 1 டெஸ்ட், 2 ஒருநாள், 4  20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடராஜனுக்கு ஒப்பந்தம் வழங்காதது அவருடைய ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. கடந்த வருட ஒப்பந்தப் பட்டியலில் இடம்பிடித்த மனிஷ் பாண்டே, கெதர் ஜாதவுக்கு ஆகியோருக்கு மீண்டும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. சுப்மன் கில், அக்‌ஷர் படேல், சிராஜ் ஆகியோர் புதிதாக ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். சைனி 2 டெஸ்ட், 7 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களிலும் தீபக் சஹார் 3 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களிலும் ஷுப்மன் கில் 7 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களிலும் சிராஜ் 5 டெஸ்டுகள், 1 ஒருநாள், 3   ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்கள்.  சமீபத்தில் இந்திய அணியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் சஹார் ஆகியோரும் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதில் காயத்தால் கடந்த ஆண்டு நிறைய போட்டிகளை தவற விட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஏ-ல் இருந்து தரம் இறக்கப்பட்டு பி பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அதே சமயம் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பி-ல் இருந்து ஏ பிரிவுக்கு முன்னேறியுள்ளார். சமீபத்திய மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி பட்டைய கிளப்பிய சுப்மான் கில், அக்‌ஷர் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோருக்கு ஒப்பந்தத்தில் சி கிரேடு வழங்கப்பட்டு உள்ளது. ஒரு வீரர் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இடம் பெற  ஒரு சீசனில்  குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் அல்லது எட்டு ஒருநாள் போடிகள் அல்லது 10 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட  வேண்டும். மூன்று வடிவங்களையும் சீரான அடிப்படையில் விளையாடுபவர்களுக்கு கிரேடு ஏபிளஸ் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் அனைவரையும் கவர்ந்த தமிழக வீரர் நடராஜன், இந்த சீசனில் 1 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டி  மற்றும் 4இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இதனால்  ஒப்பந்தங்கள் பட்டியலில் சேர வாரியம் நிர்ணயித்த அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. கடந்த சீசனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியதால் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவுக்கும் ஒப்பந்தம் கிடைக்கவில்லை.ஷுப்மன் கில் மூன்று டெஸ்ட் டவுன் அண்டரில் விளையாடியதால், அவர் ஆண்டு ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்பட்டார். நடராஜன் இந்த ஆண்டு மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அல்லது 2021 செப்டம்பர் மாதத்திற்கு முன்பு ஆறு ஒருநாள் போட்டி  அல்லது ஆறு  20 ஓவர்  போட்டிகளில் விளையாடினால் அவர் ஆண்டு ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்படுவார். இருப்பினும், அவருக்கு முழுத் தொகையும் வழங்கப்படமாட்டாது. சூர்யகுமார் யாதவ் மற்றும் கிருணல் பாண்ட்யா போன்ற வீரர்களும் இடம் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட விளையாட்டுகளின் எண்ணிக்கையை விளையாடினால் அவர்களும் ஒப்பந்தபட்டியலில் சேருவார்கள்.   https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/16160219/Why-did-Natarajan-miss-out-on-a-BCCI-annual-contract.vpf
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.