Jump to content

காரோடும் வீதியிலே -சங்கமி


arjun

Recommended Posts

பாடசாலைகளும் தொடங்கிவிட்டன. வேலைத்தளங்களில் விடுமுறையில்சென்றோரும் திரும்பிவிட்டனர் நகரில் வாகன நெரிசல் ஆரம்பமாகி விட்டதை கவனித்திருப்பீர்கள். புதிதாக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் இளம் சாரதிகள் வாகனம் ஓட ஆயத்தமாக இருப்பார்கள். இவர்களுக்கு பெற்றோர் எந்தவகையில் உதவியையும் அறிவுரைகளையும் வழங்கலாம் என்று பார்ப்போம்.

எடுத்த எடுப்பிலேய தனியே ஓட்டிப் பார்க்கவேண்டும் என விரும்புவார்கள். அதற்காக கார் சாவியை ஒளித்து வைக்க முடியுமா என்ன? அதுவும் எத்தனை நாளைக்கு?

அப்படி வைத்தும் கூட சிலரது வீட்டு கராஜ் கதவுகள் உடைக்கப்பட்ட கதை, ரிவேர்ஸ்சில் எடுத்து முன்வீட்டில் சும்மா நின்ற காருக்கு இடித்த கதை, வீட்டிலிருந்த காரை பத்திரமாய் கொண்டு போய் ரோட்டுப்பள்ளத்தில் விழுத்திய கதை என இளம் சாரதிகளிடம் பல கதைகள் உண்டு.

உங்களுக்கு பிள்ளைகளில் நம்பிக்கை வர வேண்டுமானால் அவர்களிடம் ஓடும் பொறுப்பை கொடுத்துவிட்டு நீங்கள் பக்கத்தில் இருங்கள், அப்படி இருக்கும்போது உங்களுக்கு உள்ளே பதட்டமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருங்கள். அப்போதுதான் அவர்களும் பதட்டமில்லாமல் ஓடுவார்கள்.

ஓடும்போது போன் பேசுவது, ரெக்ஸ்ட் பண்ணுவது போன்றவற்றை முற்றாக அனுமதிக்காதீர்கள். வேகக் கட்டுப்பாட்டு பலகையை அடிக்கடி அவதானிக்கச் சொல்லுங்கள்.

வீட்டுபிரச்சனைகள்ää தேவையில்லாத விவாதங்களை தவிருங்கள். ரேடியோவை பெரிய சத்தமாக வைக்காதீர்கள் இது அவர்களுக்கு கவனக்குறைவை ஏற்படுத்தும். மேலும் உங்கள் நண்பர்களையோ உறவினர்களையோ ஏற்றுவதை தவிர்ப்பதும் நல்லது. காரணம் அவர்களே உங்கள் பிள்ளையை New driver ஆ! என்று கேட்டு டென்ஷன் படுத்தி விடக்கூடும்.

மிக மிக முக்கியமாக சின்ன சின்ன பிழைகள் விட்டால் உடனே சுட்டிக்காட்டதீர்கள், நீங்களும் இதேபோல் நிறைய பிழைகள் விட்டதாக எடுத்துக் கூறலாம்.

அடுத்த படிக்கான G லைசென்ஸ்சை எடுக்க ஊக்குவியுங்கள்.

கடைசியாக முடிமானால் அவர்கள் பெயரில் சிறு சேமிப்பு ஒன்றை ஆரம்பித்து மதாமாதம் சிறு பணத்தை போட்டு அவர்கள் பெயரிலேயே சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்க உதவுங்கள்.

பிறகென்ன கார் திறப்பை வாசலிலேயே தொங்கவிடலாம்.

குறிப்பு -நம்மளுக்கு வேண்டியவர் ஒருவர் வேறொரு பக்கத்தில் எழுதுகின்றார் அவரின் அனுமதியுடன் ஒட்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அர்யூன் அண்ணா

கனடாவில் அனுமதிப்பத்திரம் காசுக்கு விற்கிறார்களா??? :lol::D :D

(பகிடிக்கு)

Link to comment
Share on other sites

முறையான பயிற்சி பெறாமல் சும்மா ஓடி பார்ப்பதற்கு வாகனம் ஓடுதல் குசினியில் தோசை போட்டு பழகுவது போன்ற செய்கை இல்லை. வாகனம் நகர்கிற ஒரு இயந்திரம். அதற்கு சிந்திக்க தெரியாது. தவறான இயக்குதல் உடல், உயிர், பாரிய பொருள் சேதங்களை ஏற்படுத்தகூடியது. இந்த விடயத்தில் பெற்றோர் கண்டிப்பாய் இருக்க வேண்டும். அக்கறை இல்லாமல் இருந்துவிட்டு இழப்பு வரும் போது கவலைப்பட்டு பிரஜோசனம் இல்லை.

ஏன் அர்யூன் அண்ணா

கனடாவில் அனுமதிப்பத்திரம் காசுக்கு விற்கிறார்களா??? :lol::D :D

(பகிடிக்கு)

சட்டவிரோதமான பல விடயங்கள் நடைபெறுகிறது. முறைகேடாய் இயங்கும் சாரதி பயிற்சி கல்லூரிகள் பல ஒன்றாரியோ போக்குவரத்து அமைச்சினால் மூடப்பட்டுள்ளன. காசு கொடுத்து சட்டவிரோதமான திருட்டு விடயங்கள் செய்யப்படுவதை போக்குவரத்து அமைச்சினால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. சட்ட விரோத செய்கைகளை தடுப்பதற்கு பொது மக்கள் ஆர்வம் காட்டாமை இதற்கு ஒரு முக்கியமான காரணம்.

Link to comment
Share on other sites

Sister behind wheel of car that struck Toronto teen

Witness says woman pleaded for others to help her sister

CBC News

Posted: Sep 23, 2012 10:28 AM ET

Last Updated: Sep 23, 2012 5:33 PM ET

li-620-fallen-sign.jpg A woman died Saturday after she was hit by a car that was driven by her sister. The collision also knocked down a street sign. (CBC)

A teenage girl has died after she was hit by a Toyota Camry that was being driven by her sister in northwest Toronto.

Toronto police said the 17-year-old victim was walking along a sidewalk on Attwell Drive when she was hit by the car, which "mounted the curb" while heading south.

The incident happened on Saturday evening. Police were called to the scene at 6:41 p.m.

Sgt. Graeme Philipson said the victim was taken to hospital with life-threatening injuries, where she later died.

It is not clear what caused the woman to lose control of the vehicle, which also knocked over a parking sign and came to rest near a pair of concrete steps.

Philipson confirmed that the woman behind the wheel and the victim were sisters.

"This is just a very tragic situation," Philipson told CBC News by phone.

Witness describes scene

Melinda Jefferey was at a nearby church when the collision occurred.mi-300-melinda-jefferey.jpgMelinda Jefferey says the woman who was driving the car was distraught about the collision and pleaded for others to help her sister. (CBC)

Emergency responders were already on the scene when Jefferey got outside.

She said she ended up spotting the woman who had been behind the wheel of the car.

"She was really crying and distraught," Jefferey told CBC News.

Jefferey said it wasn’t immediately apparent that she was involved until she "started screaming" about what happened.

"She just kept saying, 'It's an accident. Is she okay? Please help her, please help her,'" Jefferey said.

Philipson said police are now looking for witnesses to the collision.

http://www.cbc.ca/news/canada/toronto/story/2012/09/23/toronto-sister-killed-collision.html

Link to comment
Share on other sites

ஜி லைசன்ஸ் என்பது ஒன்றாரியோ மாகாணத்தில் புழக்கத்தில் உள்ள வாகன சாரதி அனுமதி பத்திரத்தின் ஒரு வகை. கார், வான் போன்ற வாகனங்களை இந்த ஜி லைசன்ஸ் இருந்தால் ஓடலாம்.

இதில் மூன்று வகை உண்டு.

1. ஜி 1 - நீங்கள் எழுத்து சோதனை செய்தபின் கிடைக்கும். வாகனம் ஓடி பழகுவதற்கு இது வேண்டும். இதை வைத்து கொண்டு நீங்கள் தனியாக வாகனம் ஓட முடியாது. இது கிடைப்பதற்கு ஆகக்குறைந்தது பதினாறு வயது வேண்டும். பல கட்டுப்பாடுகள் உள்ளன.

2. ஜி 2 - முதலாவது மட்ட வீதி பரீட்சையின் பின் கிடைக்கும்.

3. ஜி - முழுமையான வாகன சாரதி பத்திரம். இரண்டாவது மட்ட வீதி பரீட்சையின் பின் கிடைக்கும்.

நீண்ட காலத்திற்கு முன்னர் பதின்ம வயது சாரதிகள் அக்கறை இல்லாமல் வாகனம் ஓடி அடிக்கடி மோசமான விபத்துகளுக்க்கு உள்ளாகியதன் காரணத்தால், புதிய சாரதிகளின் நன்மை கருதி இப்படியான தரப்படுத்தல் கொண்ட சாரதி அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தரப்படுத்தல் சாரதி அனுமதி பத்திர திட்டம் மூலம் பெருமளவு வீதி விபத்துக்களும் உடல், உயிர், பொருள் சேதங்களும் தவிர்க்கப்பட்டு உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.