Jump to content

மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர்


Recommended Posts

[size=3]

வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963,தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.[/size][size=3]

இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் "TXu-111-775") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று "email" என்னும் பொதுவழக்குப் பெயரோடு (generic name) இவர் ஆக்கிய மின்னஞ்சல் என்னும் முறைமை ஒத்திருப்பதால், இது பற்றி நிறைய கருத்துவேறுபாடுகளும், கணினி வரலாற்றில் சிவா ஐயாதுரையின் இடம் பற்றியும் மாறுபாடுகள் கொண்ட பிணக்கான கருத்துகள் பலவும் இருந்துவருகின்றன[/size]

[size=3]

http://en.wikipedia.org/wiki/Shiva_Ayyadurai[/size]

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 months later...

இவர் பற்றி மிகவும் மாறுபாடான தகவல்கள் இணையத்தில் உள்ளன. என்னால் இவரை நம்ப முடிகின்றது இல்லை. Email என்ற பெயருக்குத் தான் இவர் Patent எடுக்க முடியும். அதன் தொழில்நுட்பத்துக்கு அல்ல. தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக இவரது செயல்களை நியாயப்படுத்த முடியாது என்று தோன்றுகின்றது எனக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.