Archived

This topic is now archived and is closed to further replies.

தூயவன்

ஈழநாதன் அகாலமரணம்!

Recommended Posts

ஈழவனின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஈழவனிற்கு அஞ்சலிகளும் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

என்ன எழுத

எப்படி ஆறுதல் சொல்ல

ஏன் எம்மை நேசிப்போர்

எமக்காக வாழுவோர் மட்டும்

இவ்வளவு அவசரமாகப்போகிறார்கள்

யாருக்கு ஆறுதல் சொல்ல

அந்த பச்சைக்குழந்தைக்கா

இல்லை பரிதவிக்கும் அபலைக்கா

அல்லது துடித்து நிற்கும் பெற்றோருக்கா

இல்லை பிள்ளையை பறி கொடுத்து தவிக்கும் தமிழுக்கா..........

சாந்திக்காக வேண்டுகின்றேன்.

சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

[size=4]ஈழவனிற்கு அஞ்சலிகளும் , [/size][size=4]இவரின் இழப்பால் துயருறும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.[/size]

Share this post


Link to post
Share on other sites

ஈழவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழ் களத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வசம்புவின் மரணமும் இதே மாதத்திலேயே வந்தது. யாழ் களத்தில் பலராலும் அறியப்பட்ட வசம்புவின் மரணத்தின் பின் மீண்டும் சரியாக இரண்டு வருட இடைவேளைகளின் பின்னர் இன்னோர் யாழ் உறவின் இழப்பு.

நான் இவருடன் கருத்தாடல் செய்யவில்லை. இதனால் எனக்கு இவரை பரீட்சயம் இல்லை. கடைசியாக 2006ம் ஆண்டு கருத்துக்களத்தில் எழுதியுள்ளார். வேறு பெயர்களில் பின்னர் வந்தாரோ தெரியாது. நூலகம் இணையம் பற்றிய விபரங்கள் கருத்துக்களத்தில் 2006 ஆண்டின் பின்னரும் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வந்துள்ளன.

பழைய களத்தில் தேடல் செய்தபோது ஈழவனின் விபரங்கள் கிடைத்தன:

ஈழவனின் சுய விபர கோவை: http://www.yarl.com/forum/index.php?showuser=278

ஈழவனின் தலைப்புக்கள்: http://www.yarl.com/forum/index.php?act=Search&nav=au&CODE=show&searchid=8c30e491a50f8b81c301fdabacf0e83a&search_in=topics&result_type=topics

ஈழவனின் கருத்துக்கள்: http://www.yarl.com/forum/index.php?act=Search&nav=au&CODE=show&searchid=4d31063c515610c15b450f71b8d0273a&search_in=posts&result_type=posts

மேலே கவிஞர் கேட்டதுபோல் இவருடன் கருத்தாடல் செய்த எவராவது யாழில் ஈழவனுடனான தமது நினைவு பகிர்வுகளை எழுதி போடுங்கள்.

(தூயவன், இப்படியான விபரங்களை எதிர்காலத்தில் அறிவிக்கும் போது சற்று விரிவாக எழுதினால் நல்லது.)

Share this post


Link to post
Share on other sites

விரிவாக எழுதும் மனநிலையில் நான் அப்போது இருக்கவில்லை... தவிர என்னை விட நிறைய யாழ் நண்பர்களோடு அவர் நெருக்கமான தொடர்பினை வைத்திருந்தார். நான் யாழ்களம் சார்ந்த தொடர்புகளைத் தான் பேணிக் கொண்டிருந்தேன்...

கனா பிரபா அண்ணா, அவர் சந்திப்புப் பற்றிய பதிவு ஒன்றை எழுதியிருக்கின்றார்...

http://kanapraba.blogspot.com.au/2012/10/blog-post.html

Share this post


Link to post
Share on other sites

[size=4]ஆழ்ந்த அஞ்சலிகள்![/size]

[size=4]அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆறுதல்கள். [/size]

Share this post


Link to post
Share on other sites

ஈழவனிற்கு அஞ்சலிகளும் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் .

..ஊர் உளவாரம் என்ற வலை பதிவு வைத்திருந்த பொழுது ..அநேகமான பதிவுகளினூடு என்னோடு இணைந்திருக்கிறார்..தமிழ் வலைபதிவுகள் ஆரம்பித்த கால கட்டத்தில் விரல் விட்டு எண்ண கூடியவர்களே இருந்தார்கள் .அப்பொழுதும் அவரும் முக்கிய பதிவராக இருந்தார்.

அவரின் மைத்துனரின் முகநூல் தகவலின் படி தொழில் போட்டி காரணமாக உணவில் விசம் வைத்து கொல்லப்பட்டிருக்கிறாராம் ...அதிர்ச்சியான தகவல் ....

Share this post


Link to post
Share on other sites

இனிய தம்பி ஈழநாதனின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது....

இனியவனே

உன் அன்பு நெருடலில்

சிங்கப்பூர் நண்பர்களோடு சந்தித்த கணங்களை நினைக்கிறேன்.....

வரவேற்க மட்டுமல்ல

வழியனுப்பிவிட்டு எழுதிய உன் எழுத்துகள்

என் இதயத்தை வருடுகின்றன......

நீ மிக மிக வித்தியாசமான அன்பன்.

அதை உன்னோடு வாழ்ந்தோர் மறுக்கார்?

உன் ஆத்மா சாந்தியடையவும்

உன் இழப்பில் துயருறும்

உன் உற்றார் - உறவினர் - நண்பர்களுடன்

என் துயரை பகிர்ந்து ஆறுதலடைய முயல்கிறேன்...

அவை முடியுமோ????

Share this post


Link to post
Share on other sites

காலம் எப்போதும் எங்களுக்கு அகாலமாகவே போய் விடுகின்றது. நல்ல விடயங்களில் முனைப்புக் கொண்டவர்களை மட்டும் இடையில் முறித்துக் கொண்டு சென்று விடுகின்றது காலம்.

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்...

Share this post


Link to post
Share on other sites

கலைஞன் அண்ணா,மற்றும் தூயவன் அண்ணா இணைத்த இணைப்புகளில் ஈழநாதனின் கருத்துக்களை,பதிவுகளை இவ்வளவு நேரமும் இருந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..படிக்க படிக்க அவரைப் பற்றிய பிம்பம் என்னுள் விரிந்து எண்ணங்களால் ஒன்றான ஒருவரை இவ்வளவு நாளும் அறியாமல் இருந்து விட்டோமே என்று வருந்தவைக்கிறது..மிக நல்ல கருத்தாளன் சிந்தனையாளனாக அவர் அந்தக்காலங்களில் இருந்திருக்கிறார்..எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் எனது கோட்டில் பயணித்த ஒருவர்..அவர் இன்னும் பலகாலம் எங்களுடன் இருந்து தன் எண்ண்ங்களை பகிர்ந்திருக்கலாம்...காலம் அந்த சந்தர்ப்பத்தை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்துவிட்டது...மிக இளவயதுகளிலேயே இப்படியான உயர்வான சிந்தனைகளால் தன்னை உருவாக்கிகொண்ட ஒரு நல்ல அண்ணணை இழந்துவிட்டோம்...கண்ணீர் அஞ்சலிகள் ஈழவன் அண்ணாக்கு...

Share this post


Link to post
Share on other sites

ஈழவன் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அறியாத உறவென்றாலும் யாழை வளர்த்திருக்கிறார்.

Share this post


Link to post
Share on other sites

[size=1]நம்பவே முடியவில்லை![/size]

[size=1]

கண்ணீர் அஞ்சலிகள்![/size]

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் .

..ஊர் உளவாரம் என்ற வலை பதிவு வைத்திருந்த பொழுது ..அநேகமான பதிவுகளினூடு என்னோடு இணைந்திருக்கிறார்..தமிழ் வலைபதிவுகள் ஆரம்பித்த கால கட்டத்தில் விரல் விட்டு எண்ண கூடியவர்களே இருந்தார்கள் .அப்பொழுதும் அவரும் முக்கிய பதிவராக இருந்தார்.

அவரின் மைத்துனரின் முகநூல் தகவலின் படி தொழில் போட்டி காரணமாக உணவில் விசம் வைத்து கொல்லப்பட்டிருக்கிறாராம் ...அதிர்ச்சியான தகவல் ....

ஆண்டவனே உடம்பெல்லாம்

நடுங்குது...இந்த உலகில் இப்படி பட்ட மனிதரா...... :(

Share this post


Link to post
Share on other sites

ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு

ஈழவனிற்கு அஞ்சலிகள்

அவரின் பிரிவால் வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Share this post


Link to post
Share on other sites

ஈழவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள்.

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

Share this post


Link to post
Share on other sites

ஈழவன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

"ஆழ்ந்த அனுதாபங்கள்" என்ற வார்த்தை இலகுவில் கூறலாம், இந்த சூழ்நிலையைப் பொறுத்தவரையில் யாருக்கு கூறுவது? இரண்டுமாதக் குழந்தையுடன் தனிமையாக்கப்பட்ட மனைவியிற்கு கூறுவதா அல்லது பெற்றதாய் தகப்பனுக்கு கூறுவதா, இழப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது இருப்பினும் இந்த வயதிலா?

நான் கிட்டத்தட்ட 5வருடங்களாக யாழ் கருத்துக்கள உறுப்பினராக இருக்கின்றேன், "எனது ஊர் இலக்கணாவத்தை" என்ற தலைப்பில் நான் பிறந்த ஊரான "இலக்கணாவத்தை" பற்றி நீண்ட ஒரு "பதிவு" படங்களுடன் இணைத்திருந்தேன் அந்தவேளை கூட இவரும் எனது ஊரைச்சேர்ந்தவர் அல்லது எனது குடும்ப உறவு என்றோ நான் அறிந்திருக்கவில்லை.

தற்சமயம் கிடைக்கப்பெற்ற தகவலின்படி நாளை அதாவது செவ்வாய்க்கிழமை அன்னாரது பூதவுடல் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுவோமாக...

ஓம்சாந்தி!

https://www.facebook.com/groups/mainthan/

Share this post


Link to post
Share on other sites

ஆத்மா சாந்தியடையட்டும்...அன்னாரின் குடும்பத்திற்கு எனது அஞ்ச‌லிகள்

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • `அன்னாசிப் பழமல்ல... தேங்காய்; தேடப்படும் எஸ்டேட் உரிமையாளர், மகன்!’ -யானை மரணத்தில் என்ன நடந்தது? இந்தக் குற்றத்தில் குறிப்பிட்ட மூவருக்கும் பங்கு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. வில்சனை மட்டும் கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் விரைவில் கைது செய்வோம்’ - போலீஸார் கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் யானை மலப்புரம் மாவட்டத்தில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் அது பாலக்காடு மாவட்டம் என்று மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து நிரப்பி யானைக்கு கொடுக்கப்பட்டதாகத் தவல்கள் வெளியான நிலையில், `யாரும் யானைக்கு கொடுத்திருக்க வாய்ப்பு இல்லை. காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை யானை எடுத்து சாப்பிட்டு இருக்கலாம்’ என கேரள வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், யானையின் உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள், யானை வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசி பழம் சாப்பிட்டதற்கான சான்று இல்லை என்றும், அது உயிரிழப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் இந்த வெடிப்பு நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்தத் தகவல்களின் அடிப்படையில் வனத்துறையும், காவல்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், நேற்று வில்சன் என்னும் ரப்பர் எஸ்டேட் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட விஷயத்தை காவல்துறையும் மாநில வனத்துறை அமைச்சரும் உறுதி செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரப்பர் எஸ்டேட் உரிமையாளர் அப்துல் கரீம் என்பவரையும் அவரின் மகன் ரியாசுதீன் என்பவரையும் போலீஸார் தேடி வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த எஸ்டேட் அம்பலப்பரா என்னும் பகுதியில் இருக்கிறது. இது சைலன்ட் வேலி தேசியப் பூங்கா எல்லைப் பகுதியின் அருகிலேயே இருக்கிறது. இதுதொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், `தேங்காயில் வெடிமருந்துகளை நிரப்பி, காட்டுப்பன்றிகளுக்காக வைத்திருக்கிறார்கள். இந்தக் குற்றத்தில் குறிப்பிட்ட மூவருக்கும் பங்கு இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. வில்சனை மட்டும் கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் விரைவில் கைது செய்வோம்’ என்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக, வில்சனை குறிப்பிட்ட ரப்பர் எஸ்டேட்டுக்கு போலீஸார் மற்றும் வனத்துறை அழைத்துச் சென்றனர். அங்கு வெடிமருந்துகள் சட்டவிரோதமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   தொடர்ந்து போலீஸார், `மரணமடைந்த யானை மே மாதம் 12-ம் தேதி வெடிமருந்து நிரப்பப்பட்ட தேங்காயை சாப்பிட்டுள்ளது. அதன் காரணமாக அதன் வாயில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. நாங்கள் சந்தேகிக்கும் நபர்களுக்கு, யானை காயமடைந்தது அன்றைய தினமே தெரியும். அடுத்த இரு வாரங்களுக்கு யானை அங்கும் இங்கும் சுற்றித் திரிந்திருக்கிறது. கடுமையான வலியால் உணவு உண்ண முடியாமலும், தண்ணீர் அருந்த முடியாமலும் சிரமப்பட்டுள்ளது. பின்னர் 25-ம் தேதி யானை வெள்ளியார் ஆற்றின் அருகே காயங்களுடன் காணப்பட்டது. பொதுமக்கள் தகவல் அளித்ததும் வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். இரண்டு கும்கி யானைகள் மூலம் யானையை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கடைசியாக மே மாதம் 27-ம் தேதி யானை உயிரிழந்தது’ என்றனர். அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ``இங்கு காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் அடிக்கடி வரும். பயிர்களை நாசம் செய்வதால் இது தொடர்பாக பலமுறை வனத்துறையிடம் முறையிட்டுள்ளோம். ஆனால் அதற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய செயல்களைச் செய்ய மாட்டோம்” என்கின்றனர்.   https://www.vikatan.com/news/india/one-arrested-two-on-search-police-in-kerala-pregnant-elephant-death    
    • ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள் - கோவிட்-19: முதல் குற்றவாளி யார்?   ஆதி வள்ளியப்பன் உலகமே தன் காலடியில் விழுந்து கிடக்கிறது என்று எப்போதும் இறு மாப்புடனே வலம்வரும் மனித குலம், ஒரு குட்டியூண்டு வைரஸிடம் இன்றைக்கு மண்டியிட்டுக் கிடக்கிறது. ஒரேயொரு முற்றுப் புள்ளிக்குள் லட்சக்கணக்கான வைரஸ்களை அடைத்துவிட முடியும். அதன்காரணமாகத்தான் அது வெறும் கண்களுக்குத் தெரிவதில்லை, மாயவித்தைக்காரன் போல் எளிதாகத் தொற்றி விடுகிறது. பிறகு நம் உடலை ஆட்டிப்படைத்து தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. மனித குலம் பூவுலகின் முதலாளிகளாகப் பிரகடனம் செய்ய முடியாது என்பது, மீண்டும் ஒரு முறை தெளிவாகியிருக்கிறது. சரி, இந்த நாவல் கரோனா வைரஸை யார் கண்டுபிடிச்சது, சற்று விளக்கமாகக் கேட்க வேண்டுமென்றால், நாவல் கரோனா வைரஸ் இப்படி உலகை ஆட்டிப் படைப்பதற்கு முதல் காரணம் யார்? ‘வூகான் இறைச்சிச் சந்தைக்கு வந்த அலங்கு (எறும்புத்தின்னி) அல்லது மரநாய்தான் காரணம்' என்று சிலர் சொல்லலாம். ‘இல்லையில்லை, அவற்றுக்கு தொற்றுவதற்கு முன்பு வைரஸ் தேக்கியாக இருந்த வௌவால்தான் காரணம்' என்று வேறு யாரேனும் சொல்லலாம். ‘எல்லாத்துக்குமே இந்த சீனாக்காரன்தான் சார் காரணம்' என்று பொத்தம்பொதுவாகவும் கூறலாம். ஆனால், இவை சரியான பதில்கள் தானா? பழைய கதை இந்தக் கேள்விக்கு விடை தேட சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். நவீன அறிவியல், அதன் விளைவாகத் தொழிற்புரட்சி தொடங்கும்வரை, மனித குலம் இயற்கையை தன் முழு அடிமையாக பாவிக்கவில்லை. இயற்கை மீதான மதிப்பும், நுண்ணுணர்வும் எஞ்சியிருந்தன. ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி தொடங்கிய பின் முதலாளித்துவமும் நாடுகளை நிர்வகித்துவந்த அன்றைய அரசாட்சிகளும் லாபம் மீது பெருவெறி கொள்ளத் தொடங்கின. பெரிய பெரிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு மூலப்பொருள் எனும் தீனியைப் போட்டாக வேண்டும். அதற்காக இயற்கை வளமும் மனித வளமும் நிறைந்திருந்த ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை காலனி ஆட்சியாளர்கள் அடிமைப்படுத்தத் தொடங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு உலக மக்களில் பெரும்பாலோர் மேற்கத்தியம் புகுத்திய நவீன அறிவியலின் காலடியில் வீழ்ந்துகிடக்கிறோம். இந்த இடத்தில் நவீன அறிவியலுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். அறிவியல் மனப்பான்மை என்பது அனைத்தையும் பகுத்தாராய்ந்து முடிவெடுக்கச் சொல்வது. இந்த பகுத்தாராயும் பண்பு விலங்குகளுக்கு இல்லாததால்தான், அவை இயற்கையைக் கட்டுப்படுத்தாமல் இயைந்து, இணக்கமாக வாழ்கின்றன. அதேநேரம் பகுத்தாராயும் பண்பு இருந்ததால்தான் மனித குலம் உலகில் வேறு எந்த உயிரினமும் அடையாத வளர்ச்சியைப் பெற்றது. ஆனால், அதே பகுத்தாராயும் பண்பு சுயநலமாக, பக்கச்சார்புடையதாக மாறும்போது அதனுடன் சேர்ந்து பிரச்சினைகளும் பூதாகரமாகத் தொடங்கிவிடுகின்றன. அறிவியல் யாருக்கானது? நெருப்பையோ, சக்கரத்தையோ கண்டறிந்த நம் மூதாதையர் அதை தனி உடைமையாகவோ, லாபம் தரும் ஒரு பொருளாகவோ பார்க்க வில்லை. அனைவருக்கும் அந்த அறிவைப் பகிர்ந்துகொண்டதன் விளைவாகவே மனித குலம் அடுத்தடுத்த வளர்ச்சி கட்டங்களை நோக்கி நகர்ந்தது. ஆனால், இன்றைக்கு அறிவைப் பகிர்ந்துகொள்வது லாபத்தைப் பறித்துவிடும் என்று தடுக்கப்படுகிறது அல்லது புதிய கண்டுபிடிப்புகள் விற்பனைப் பண்டமாக மாற்றப்படுகின்றன. மேற்கத்திய அறிவியல் அனைத்துத் துறைகளிலும் தன் ஆராயும் பார்வையைச் செலுத்தியது என்றாலும், காலனி ஆதிக்கக் காலம் முதல் இன்றுவரை நவீன அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெரும்பாலும் லாபத்துக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அவை பொது நன்மைக்காக முழுமையாகப் மாற்றப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல் தொழில்நுட்பமும், அது சார்ந்த பெரும் தொழிற்சாலைகளும் மட்டுமே உலகை ரட்சிக்க வந்த ஒரே அறிவியல் பிரிவு என்பது போன்றதொரு மாயை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களின் பின்னணியில் தொழிற் புரட்சியின் தொடக்கக் காலத்தில் அழிக்கப்படத் தொடங்கிய காடுகள் இன்றுவரை இடைவெளி இல்லாமல் கபளீகரம் செய்யப்பட்டுவருகின்றன. 93 லட்சம், கிட்டத்தட்ட 1 கோடி ஏக்கர் காடு, அதாவது ஸ்விட்சர்லாந்து நாட்டின் பரப்பளவுள்ள காடு 2019-ல் அழிக்கப்பட்டிருக்கிறது. காட்டைச் சுற்றிச் செல்லும் சாலைகள் நம்மை அயர்ச்சி அடைய வைக்கின்றன. ஒரு தாளில் சிறு கோட்டை வரைவதைப் போல் காட்டுக்குள் ஒரு சாலை, பாலம், ரயில்பாதை போன்றவற்றை அமைப்பது நமக்கு அத்தியாவசியத் தேவை என்பதுபோல் மாற்றப்பட்டுவிட்டது. இவ்வளவு காலம் சுற்றி சென்றுவந்திருந்தாலும் இப்போது வேகமே நம்முடைய ஒரே தாரக மந்திரம். தாமதமாகப் போனால் லாபம் குறைந்துவிடும், வளர்ச்சியில் பின்தங்கிவிடுவோம் என்று பொருளாதார மேதாவிகள் அச்சுறுத்துவார்கள். மற்றொருபுறம் காடுகளுக்குள் உறங்கிக் கிடக்கும் மரங்கள், கனிமங்கள் பெருமுதலாளி கள், அரசியல்வாதிகளின் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கின்றன. கனிமங்கள் காட்டுக்குள் உறங்குவதால் யாருக்கு லாபம்? எடுத்து விற்றால் தானே அனைவருக்கும் உணவிட முடியும் என்று அரசியல்வாதிகள் இனிப்பு தடவிப் பேசுவார்கள். காடு அழிப்பு அமைச்சகம் கோவிட்-19 நெருக்கடி காலத்திலும் மத்திய சுற்றுச்சூழல்-காடு அமைச்சகம் ஒரேயொரு பொத்தானை அழுத்தி 30 கன்னிக் காடுகளை அழிப்பதற்கான அனுமதியை சில மணி நேரத்தில் கொடுத்தி ருக்கிறது. இந்தக் காடுகளை அழிப்பதற்கான விலையை ஒரு வேளை நாம் நேரடியாகவோ முழுமையாகவோ கொடுக்காவிட்டாலும்கூட, நம் சந்ததிகள் நிச்சயம் கொடுக்கத்தான் போகிறார்கள். நம் சொத்து நம் சந்ததிகளுக்குப் போவதுபோல், நாம் மேற்கொள்ளும் அழிவின் பலனும் அவர்களைத்தானே சென்று சேரும். காலனி ஆதிக்க வனத்துறையைப் போல் காடுகளை அழிப்பதற்கும், காடழிப்புக்குக் கதவைத் திறந்துவிடுவதாகவும் சுற்றுச்சூழல்-காடு அமைச்சகம் செயல்பட்டுவருகிறது. மத்திய அரசுத் தரவுகளின்படி கடந்த 30 ஆண்டுகளில் 23,716 தொழிற்சாலை திட்டங்களுக்காக 14,000 சதுர கிலோமீட்டர் காடு அழிக்கப்பட்டிருக்கிறது. இது நாகாலாந்து மாநிலத்தின் பரப்புக்கு இணையானது. ஒரு நாடு ஆரோக்கியமாக இருப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு காடாக இருந்தாக வேண்டும். இந்தியா 22 சதவீதத்தைத் தொடவே தடுமாறுகிறது. இத்தனைக்கும் உலக அளவில் அதிக காடுகளைக் கொண்ட 10-வது நாடு இந்தியா என்பது நினைவில் கொள்ளத்தக்கது. நஷ்டமும் வருமல்லவா! இப்படியாக இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் காடுகள் கட்டுமீறி அழிக்கப்படு கின்றன. அங்கு யுகம்யுகமாய் இயற்கையோடு ஊடாடி தன் உணவையும் வாழ்க்கையையும் தகவமைத்துக்கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்து வரும் தாவர, உயிரினங்களை மனிதர்களின் மின் ரம்பங்களும் புல்டோசர்களும் ஒரு சில மணி நேரங்களில் அறுத்தும் நசுக்கியும் போட்டுவிடுகின்றன. இப்படிக் காடுகள் அழிக்கப்படுவதால், ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதனால் கிடைக்கும் மூலதனமற்ற லாபத்தில் மட்டுமே கண்ணாக இருக்கிறோம். ஓர் அம்சம் அல்லது ஒரு பொருள் வியாபாரமாக-லாபமாக மட்டுமே பார்க்கப்படும்போது, அதில் நஷ்டத்துக்கான கூறுகளும் இருக்கத்தானே செய்யும். அந்த நஷ்டம்தான் நாவல் கரோனா வைரஸ் போன்ற வடிவத்தில் நம்மைத் துரத்திக்கொண்டிருக்கிறது. காடழிப்பு, உயிரினங்களைத் தொந்தரவுக்கு உள்ளாக்குவதற்கும் இதுபோன்ற பெருந்தொற்று மனிதர்களிடையே பரவுவதற்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்கிறது. எந்த வௌவாலும் மரநாயும் தானாக வைரஸை பரப்புவதில்லை. அவற்றின் உடலில் உள்ள வைரஸ் மரபணு திடீர்மாற்றம் (Mutation) அடையாமல் நம் மீது தொற்றவும் முடியாது. காடுகளை அழிப்பதன் மூலம், இந்த உயிரினங்களை நாம் நெருங்கிச் செல்கிறோம் அல்லது அவை வேறு வழியில்லாமல் ஊர்களை நோக்கி நகர வழிவகுக்கிறோம். பிறகு மனிதர்களுக்கு எல்லாமே பிரச்சினையில் சென்று முடிகிறது. உலகில் இதுவரை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய பெரும்பாலான கொள்ளைநோய், பெருந்தொற்றுகளின் மூலகாரணம் காடுகளின் மீது மனிதர்கள் இடை விடாது கைவைத்துக்கொண்டே இருப்பதுதான். யார் காரணம்? இப்போது நாம் மீண்டும் தொடக்கக் கேள்விக்கு வருவோம். நாவல் கரோனா வைரஸ் என்ற தூங்கிக்கொண்டிருந்த பூதத்தை தட்டியெழுப்பியது யார்? வௌவாலா, அலங்கா, மரநாயா? நிச்சயமாக ஒரு உயிரினமோ, நிகழ்வோ இதற்குக் காரணமில்லை. தன்னிச்சையாக எதுவும் நடைபெறவும் இல்லை. கடந்த ஆண்டின் இறுதியில் கோவிட்-19 நோய்த்தொற்று தொற்றத் தொடங்கியதற்கும், இன்றைக்கு அது கணக்கு வழக்கில்லாமல் பரவிவருவதற்கும், நாளை அது ஏற்படுத்தப் போகும் பாதிப்புகளுக்கும் ஒரேயொரு காரணம் மட்டுமே நம்முன் இருக்கிறது. அந்த முதல், கடைசி குற்றவாளிகள், மனிதர்களான நாம்தான். நம் போக்கை நாம் மாற்றிக்கொள்ளாதவரை, நமக்கு இருக்கும் ஆபத்தும் நிச்சயமாகத் தன் போக்கை மாற்றிக் கொள்ளாது என்பது மட்டுமே நிரந்தர உண்மை.   https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/558104-covid19-6.html  
    • மீரா, முழு விபரம் இல்லாமல் மேலோட்டமாக சொல்ல முடியாது. முக்கியமாக, சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பது, பெண்பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பது, அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போது கருவுறின் கட்டாய கருக்கலைப்பு செய்வது போன்றவை சர்வதேசத்துக்கு சொல்லிய வகையில், தமிழர் கதிர்காமர் சிங்களத்துக்கு செய்த பெரும் கைங்கரியம். இதனால் தான், புலிகள் பயங்கரவாதிகள் லிஸ்ட்ல சேர்க்கப்பட்ட்னர். அதனை மறுக்க முடியுமா, போல் நியூமானால்? இந்த விடயங்கள் சர்வதேசத்தில் எடுபடும் என்று கதிர்காமருக்கு தெரியும். ஏனெனில் இங்கு ராணுவத்தில் ஆண், பெண் உறவு சாதாரணம். கருத்தடை மாத்திரையுடன் விசயம் முடியும்.  ஆனால், அங்கே, கலாசாரம் வேறு என்பதால், புலிகள் அப்படி செய்தார்கள் என்று சொன்னார்.அதாவது, இங்கு ராணுவத்தில் போலவே, அங்கும் உறவுகள் இருந்தன. ஆனால், பிள்ளைகளை பெற்றுக் கொள்ள போனால் போராட முடியாது என்றுதான் அவ்வாறு செய்தார்கள் என்ற கதிர்காமர் செய்த இந்த ஜிகாலடி வேலையினால், புலிகள் பெரிதும், சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மை. அவருக்கு பிரதமர் பதவிக்கு சந்திரிகா நியமிக்க இருந்தார். ஆனாலும் மகிந்தா வெடி வைத்து, புலிகள் தலையில் போட்டார்.
    • மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் -முதல்வர் பழனிசாமி   மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். பதிவு: ஜூன் 06,  2020 14:10 PM சென்னை மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர். மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.  இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.  மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.   தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  மாணவி நேத்ராவின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.அமைச்சர்கள் செலூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பாராட்டினர் இந்த் நிலையில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்து உள்ளார். த.ன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் நேத்ராவின் செயலை அங்கீகரிக்கும் வகையில் நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என கூறி உள்ளார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/06141007/Madurai-student-pays-for-higher-education-he-Government.vpf