Jump to content

பன்னிரு வேங்கைகளின் 25ம் ஆண்டு நினைவு நாள்‏


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kumarappa.jpg

[size=4]இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 25ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா - இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு

யாழ். மாவட்ட தளபதி

லெப்.கேணல் குமரப்பா

(பாலசுந்தரம் இரத்தினபாலன் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

திருமலை மாவட்ட தளபதி

லெப்.கேணல் புலேந்திரன்

(குணநாயகம் தருமராசா - பாலையூற்று, திருகோணமலை.)

மேஜர் அப்துல்லா

(கணபதிப்பிள்ளை நகுலகுமார் - சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)

கப்டன் பழனி

(பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

கப்டன் கரன்

(வைத்திலிங்கம் மனோகரன் - சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.)

கப்டன் மிரேஸ்

(தவராஜா மோகனராஜா - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

கப்டன் நளன்

(கணபதிப்பிளளை குணேந்திரராஜா - பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.)

லெப்டினன்ட் அன்பழகன்

(தேசோமயானந்தம் உத்தமசிகாமணி - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

லெப்டினன்ட் தவக்குமார்

(சோமசுந்தரம் பாக்கியராஜா - முள்ளியான், யாழ்ப்பாணம்.)

2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட்

(கபிரியேல் பேனாட் மரியநாயகம் - முள்ளியான், யாழ்ப்பாணம்.)

2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார்

(ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ் - மணற்காடு, யாழ்ப்பாணம்.)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று

கப்டன் ரகுவப்பா

(இராஜமாணிக்கம் ரகுமான் - வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.)

வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.[/size]

[size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size]

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பன்னிரு வேங்கைகளின் மறைவு[/size]

ஆயுதந்தனைக்கொடுத்தே -அந்த

அமைதியைக் கெடுத்திடும் படைகளிடம்

சேய்கள் தம் பணி முடித்தார் – சிலர்

திருமணம் புரிந்து தம் வாழ்வமைத்தார்

ஆயினும் இழி மனத்தோர் – அந்த

அருந்தவப் புதல்வரைப் பழிமுடிக்க

ஆயிரம் சதி புரிந்தார் – அதில்

ஆறிரு வேங்கைகள் உயிர் கொடுத்தார்.

வங்கத்துக் கடற் பரப்பில் - அந்த

வரிப்புலிக் குருளைகள் வருகையிலே

சிங்களக் கடற்படையை – தம்

சினேகிதரென நினைந்தருகில் வர

இங்கிதம் சிறதுமிலார் – அந்த

இழிகுணத்தோர் தங்கள் பழிமுடிக்க

தங்கங்கள் தனைப் பிடித்தார் – தாய்

தமிழவள் கலங்கிட விலங்குமிட்டார்.

காடையர் தலைவனவன் - எங்கள்

கண்மணிகள் தனைக் கடத்தித் தன்றன்

நாடதன் தலைநகரில் - வதை

நடத்திடு நான்காம் மாடியெனும்

கூடத்தில் கொடுமை செய்ய – மனம்

குறித்து விட்டான் அதைக் குறிப்பறிந்தே

தேடினுங் கிடைக்காத - எங்கள்

தேயத்துப் பன்னிரு வன்னியரும்

மாய்வதில் உறுதி கொண்டார் – நச்சு

மருந்தினை அருந்தித்தம் உயிர் துறந்தார்

சேய்களை இழந்து நின்றாள் - அன்னை

திரும்பவும் தலைமுடி அவிழ்த்து நின்றாள்

நாய்தனை நிச்சயித்துத் - தன்றன்

நலன் நிறை வாழ்வுக்குத் தீங்கு செய்த

பேயெனப் பாரதத்தை அந்தப்

பேதை தன் மனதினில் நினைந்தழுதாள்

-யுகசாரதியின் ஈழத்தாய் சபதத்திலிருந்து-

http://www.thamilarivu.com

Edited by karu
Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

இவர்களின் வீரச்செயல் பற்றி கேட்டது நேற்றுப் போல் இருக்கிறது.

நினைவு நாள் வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.