Jump to content

கும்புடுறனுங்கோ!


Recommended Posts

கும்புடுறனுங்கோ!

பறவைகள் குடியிருப்புக்கு ஒரு கும்புடு!

கலகக்காரர்களுக்கு ஒரு கும்புடு!

தூய தமிழர்களுக்கு ஒரு கும்புடு!

கிளுகிளுப்புக் குஞ்சுகளுக்கும் ஒரு கும்பிடு!

களத்துக்காரங்களுக்கும் ஒரு கும்பிடு!

ஆரையும் விட்டிட்டனோ?

எத்தனை நாளாக் காத்திருந்து கவனிச்சு உள்ள வந்திருக்கன்

வரச்சொல்ல மாட்டீங்களோ?

வாசலிலேயே நிற்கிறன் கொஞ்சம் இங்கயும் கவனியுங்கோ!

காத்திருக்கிறது ஆதிவாசி

Link to comment
Share on other sites

 • Replies 280
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிவாசியே வருக வருக

வலது காலை எடுத்து வைத்து,

யாழ் இணையம் தளம் தரும்

கணனியில் உலாவர.

Link to comment
Share on other sites

ஆதிவாசிவணக்கம் வாப்பு வந்து உன் கருத்துக்களை உதிருங்கள் :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள் ஆதிவாசி,

Link to comment
Share on other sites

நான்தான் காட்டில இருந்து வாறனென்று தெரியுமெல்லே

அநாகரிகமா கேட்டுக்கொண்டிருக்கன் நாகரிகமா எல்லாரும் உள்ள வரச் சொல்லமாட்டீங்க போல இருக்கு

வர்ற வழிலயே சிலபேர் சொன்னவை தமிழங்கள் எப்பவுமே ஒத்துமையா ஒண்டையும் செய்யமாட்டினமாம்.

உன்னை மட்டும் எல்லாருமா சேர்ந்தா வரவேப்பினம் என்டவைக்கு

நான் சொல்லிப்போட்டுத்தான் வந்தனான்

யாழ்களத்தில அப்பிடியானவை இல்லை

காட்டில இருந்தாலும் நான் கொம்பியுட்டரில பாக்கிறனான்.

என்னை சும்மா பேக்காட்டாதேங்கோ எண்டனான்

என்ர படத்தைப் பாத்தாலே தெரியேல்லையோ?

அப்பழுக்கு இல்லாத இதயத்தோட வந்திருக்கிறன்

எங்க எல்லாரும் சேந்து சொல்லுங்கோ

வாங்கோ

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

வணக்கம் ஆதிவாசி,

வாருங்கள் உங்கள் தூய்மையான இதயத்தை மதித்து வரவேற்கிறோம்.

அதுசரி மரக்கிளையை விட்டு இணையத்தில் கைகோர்க்க

உத்தேசம் இல்லையா?

வல்வை சகாறா.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடது கையால் தாவி வரும் நீங்கள், ஏன் இன்னும் கோமணத்தை கையில் வைத்திரிக்கிறீர்கள். போட்டுகொண்டு வாங்கோ. நானும் இங்கே நேற்று வந்தனான்தான். :wink:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஆதிவாசி

Link to comment
Share on other sites

:P கந்தப்பு, :P தெய்வமேந்தி, :P புறா, :P ரசிகை,

:P வசிசுதா, :P சுருதி

எல்லாருக்கும் என்ர முதல் இதயம் நிறைந்த நன்றி

முதல் வரவேற்பு உங்களுடையது

மகிழ்ச்சியாக இருக்கிறது :lol::D:lol:

Link to comment
Share on other sites

சின்னப்பு நீங்க மட்டும் ஏன் கோவத்தோட நிக்கறீங்க?

:lol::D:lol: என்னை கலைக்கோனும் என்ற மாதிரி இருக்கு

உங்க வரவேற்பு

:cry: :cry: நான் ஒரு பிழையும் விடேல்லை

நான் எனது இதயத்தை மட்டுந்தான் வைச்சிருக்கிறன்

சத்தியமாச் சொல்றன் உங்களின் பிளாவை எடுக்கமாட்டன்

Link to comment
Share on other sites

அலிகா நான்தான் ஆதிவாசி

தமிழ் அப்பிடி இப்பிடித்தான் கதைப்பன்.

விளங்காதனான் :roll: :roll: :roll:

பிழையை விட்டுத்தானே திருந்தோனும்.

:oops: :oops: :oops: நீங்க ஏன் அம்மணமாக் கதைக்கிறீங்கள்?

Link to comment
Share on other sites

இடது கையால் தாவி வரும் நீங்கள், ஏன் இன்னும் கோமணத்தை கையில் வைத்திரிக்கிறீர்கள்.  போட்டுகொண்டு வாங்கோ.  நானும் இங்கே நேற்று வந்தனான்தான். :wink:

:lol::D :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

:P ரமா, :P வல்வைசகரா, :P புயல், :P அனிதா, :P எம்17

எல்லாருக்கும் நன்றியும் வணக்கமும்

சின்னப்புவை ஆரென்டாலும் சமாதானப்படுத்திவிடுங்கோ

பயமாயிருக்கு. :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

b]வரவேற்றதுக்கு நன்றி புறா.

என்னைத்தான் எல்லாரும் கவி(....) என்று சொல்லுவினம்

இப்பத்தான் தெரியுது புறாக்களிலயும் கவிகள் இருக்கினம். :lol::D:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

:P ரமா, :P வல்வைசகரா, :P புயல், :P அனிதா, :P எம்17

எல்லாருக்கும் நன்றியும் வணக்கமும்

சின்னப்புவை ஆரென்டாலும் சமாதானப்படுத்திவிடுங்கோ

பயமாயிருக்கு. :shock: :shock: :shock:

சின்னப்புவச் சமாதானாப் படுத்திறது சிம்பிள்,ஒரு போத்தல் உடைத்தால் சரி, வாறனீர் ரோயல் பமிலியப் பற்றி ஒண்டும் சொல்லாத படியாக் கோவம் ஆக்கும்.

வாறனீங்க வரவேற்போட நிக்காம மற்ற எல்லா இடமும் எழுதுங்க, புதுசா வாறவைய வரவேற்கிறம், பிறகு காணாமப் போயிடுவினம்.சில பழசுகளும் புதுப் பேரோட வருவினம் பிறகு அவைக்கே தாங்கள் வந்த பெயர் மறந்து போயிடும் போல.

ஆதிவாசி அப்படி இல்லைத் தானே? :wink:

Link to comment
Share on other sites

நாரதர் எழுதியது

'சின்னப்புவச் சமாதானாப் படுத்திறது சிம்பிள்இஒரு போத்தல் உடைத்தால் சரிஇ வாறனீர் ரோயல் பமிலியப் பற்றி ஒண்டும் சொல்லாத படியாக் கோவம் ஆக்கும் "

தெரிஞ்சிருந்தா ஒரு வாழ்த்துப்பாட்டை வர்ற வழில சுட்டுக்கொண்டு வந்திருப்பேனே... :wink: :wink: :wink:

காட்டிலேருந்து வாறன் இங்கிலீஸ் நெப்போலியனுக்கு

எங்க போறதாம்?

அதுசரி ரோயல் பமிலி என்று களத்தில அடிக்கடி கதைக்கினம்

எனக்கு ஒருதரம் விசயத்தைச் சொல்லுங்கோ நாரதரே

சின்னப்பு ராசபரம்பரை எண்டா என்னை எப்பிடிப் பிடிக்கப்போகுது?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசிக்கு புத்தனின் சரணங்கள்......

Link to comment
Share on other sites

நாரதர் எழுதியது  

'சின்னப்புவச் சமாதானாப் படுத்திறது சிம்பிள்இஒரு போத்தல் உடைத்தால் சரிஇ வாறனீர் ரோயல் பமிலியப் பற்றி ஒண்டும் சொல்லாத படியாக் கோவம் ஆக்கும் "  

தெரிஞ்சிருந்தா ஒரு வாழ்த்துப்பாட்டை வர்ற வழில சுட்டுக்கொண்டு வந்திருப்பேனே...  :wink:  :wink:  :wink:  

காட்டிலேருந்து வாறன் இங்கிலீஸ் நெப்போலியனுக்கு  

எங்க போறதாம்?  

அதுசரி ரோயல் பமிலி என்று களத்தில அடிக்கடி கதைக்கினம்  

எனக்கு ஒருதரம் விசயத்தைச் சொல்லுங்கோ நாரதரே  

சின்னப்பு ராசபரம்பரை எண்டா என்னை எப்பிடிப் பிடிக்கப்போகுது?

உவர் எங்க நெப்போலியனைப் பாத்திருப்பார் ஆக மின்சினா கசிப்புத் தான் அடிச்சிருப்பார்,காட்டில இருந்து வாற கன சாமான் இருக்கல்லோ? அதோட காட்டிலயும் ஆதிவாசிகளுக்கும் ரோயல் பமிலி இருக்கல்லோ.சின்னப்புவிண்ட ரோயல் பமிலிக்கும் காட்டுக்கும் கனக்க வித்தியாசம் இல்ல .எல்லாரும் அங்க இருந்து தானே வந்தவை, மச்சானும்,மச்சானும் கவுண்டு கிடக்கிறதைப் பாத்தா தெரியேல்லயோ? :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கப்பலோட்டியே அவர்தானே! யாரை ஏற்றவேண்டும், யாரை தவிர்க்க வேண்டும், யாரை நடுக்கடலில் தள்ளிவிழுத்த வேண்டும், எங்கே போகவேண்டும்  அவரே கணிப்பார். அது திசை தப்பாது. கன்னத்தில இரண்டு போட்டுக்கொள்கிறேன்! கிள்ளி விட்டு கூத்துப்பாக்க ஆசையாயிருக்கு சிலருக்கு!
  • கடைசியில் கூத்தமைப்பையும் கிழித்து தொங்கவிடுகிறார். ஒரு தமிழ் மகனாக சர்வகட்சி ஆட்சி அமையக் கூடாது என விரும்புகிறேன் என்கிறார். இவருடைய செவ்விகளை மிகவும் விரும்பி கேட்பேன்.
  • முந்தாநாள்தானே ரணிலை மூச்சுக்கு முன்னூறு தடவை கரிச்சுகொட்டியும், ராஜ பக்ஷக்களை வானளாவ புகழ்ந்தும் அறிக்கை விட்டவர் அதற்கிடையில் இப்படி மாறிவிட்டாரே! தான் பதவி பெறுவதற்காக, இவர்களை பலி கொடுத்து,  தான் கடந்தகாலங்களில் ஐ. தே. கட்சியை விமர்சித்ததை  மறைத்து கொள்ள வெளிக்கிட்டு தன்னைத்தானே பகிரங்கப்படுத்திக்கொள்கிறார். "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி." சாணக்கியனோடை  பழைய கறள் இருக்கு இவருக்கு. காரணம்; இவரின் தில்லு முல்லுகளை இவரின் இனத்துக்கு வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. "இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை." அடேங்கப்பா ...... என்னே பெருந்தன்மை இவருக்கு! கைக்கு வந்த பதவி கையோடேயே பறிபோய் விடுமோ என்று தவிக்கிறார் இவர். 
  • காதல் திருவிழா   சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க , “ தம்பி  ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“  எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா. கலியாணம் எண்டு பேசத் தொடங்கின உடனயே பேசிறதை குறைச்ச தம்பி , நான் எப்ப அம்மாவைக் கேட்டனான் எண்டு யோசிக்க , “ அதுக்கென்ன வெள்ளிக்கிழமை நல்லூரில காலமை பூசையில பாப்பம் ‘ எண்டு முடிவாகிச்சுது. ரெண்டு பெண்டாண்டிக் காரரா இருந்தாலும் நல்லூரான் நல்லது செய்வான் எண்டு பெண்பார்க்கும் படலம் பொதுவா இங்க தான் நடக்கும் . அப்ப கொழும்பில Majestic City மாதிரி யாழ்ப்பாணத்தில  எல்லாப் பெடியளுக்கும் லேசியா பெட்டைகளை பாக்கிறதெண்டால் நல்லூர் தான். கொடியேத்தத்தில பாத்து மஞ்சத்தோட கேட்டு திருக்கலியாணத்தில ஒப்பேத்தின கதைகள் சில  இருக்கு. பாக்காமல் காதல் , பாத்தவுடன் காதல் , படித்ததோட காதல், பழகிப் பாத்து காதல் ,  எண்ட மாதிரி நல்லூரில பாத்து ஆனால் பேசாமலே  ஒப்பேறிற காதல் தான் கனக்க.  காலமை கோயிலுக்கு  வாற பிள்ளைகள் அநேமா அம்மாமாரோட தான் வருவினம். குறூப்பா வாறதுகள் பின்னேரம் தான் . குறூப்பா வாறதில ஒண்டைப் பாக்க வெளிக்கிட்டால் அதோட கூட வாறது எங்களைப் பத்தி ஏதாவது அள்ளி வைச்சு கவித்துப் போடும்.  இவளவை எல்லாம் சாணக்கியச் சகுனிகள்,  “ ஏற்கனவே இருக்காம் , இவன் எல்லாரையும் பாக்கிறவன் , போன நல்லூரில இன்னொண்டுக்குப் பின்னால திரிஞ்சவன்” எண்டு சொல்லி முளைக்காமலே கிள்ளிப் போடுங்கள்.  ஆனால் பெடியள் எல்லாம் ஆம்பிளை அன்னங்கள்.  “ மச்சான் உன்டை ஆளைக் கண்டனான் இண்டைக்கு சிவப்பு சாறியோட , சாமிக்குப் பின்னால தான் வாறா , அம்மாவைக் காணேல்லை ஆரோ ஒரு அக்கவோட தான் கண்டனான் “ எண்டு GPS location   accurateஆ தருவாங்கள். இதை எல்லாம் சொல்லீட்டு வெளிக்கிட முதல் “ என்டை ஆளைக் கண்டனியே” எண்டு ஏக்கத்தோட கேக்கிறவனுக்கு இல்லை எண்டாம, “ மச்சான் எப்பிடியும் சங்கீதக் கச்சேரிக்கு வருவா கண்டு பிடிக்கலாம்” எண்டு நம்பிக்கையை குடுத்திட்டுப் போவான் மற்றவன்.  என்னைப் பொறுத்தவரை நல்லூர்க்கந்தன் காதல் கந்தன் . நீளமும் அகலமுமான வீதி, இடது பக்கம் ஆம்பிளைகள் வலது பக்கம் பொம்பிளைகள் எண்டு பாக்கிறதுக்கு சுகமான segregation, திரும்பிப் பாத்து யாரிட்டையும் மாட்டுப்படாம  நேராவே பாக்க வசதியா  சாமியைப் பாத்து நடக்கிற வழமை  , அடிக்கடி சாமியை நிப்பாட்டி வைக்கிற மண்டபப்படி , சாமியே நிண்டு கேக்கிற பத்மநாதனின்டை  நாதஸ்வரம் எண்டு கண்ணோடு கண்ணை நோக்க எல்லா வசதியும் முருகன் செய்து தருவான் .  ஒரு பிள்ளையப் பாத்து ஒப்பேத்திறது எண்டால் அது கொஞ்சம் பெரிய வேலை . ஆளைப் பாத்து  select பண்ணிறதே கஸ்டம். இண்டைக்குப் பாத்து இதுதான் எண்டு முடிவெடுத்துட்டுப் போக அடுத்த நாள் என்னுமொண்டு நல்லதாத் தெரியும் இல்லாட்டி முதல் நாள் பாத்தது ஏற்கனவே book பண்ணீட்டாங்களாம்  எண்டு ஏக்கங்கள் ஏமாற்றங்களாகும்.  இதை எல்லாம் தாண்டி சரியானதைக் கண்டுபிடிச்சு பிறகு எந்த barrierஆல உள்ள வாறது, எங்க சைக்கிள் விடிறது , எங்க செருப்பு விடிறது, எத்தினை மணிப்பூசைக்கு வாறது, ஆரோட வாறது , உள்வீதி மட்டும் சுத்துமா வெளிவீதியும் சுத்துமா திரும்பிப் போகேக்க எங்க கச்சான் வாங்கிறது , இசைக்கச்சேரி கேட்டிட்டுப் போகுமா கேக்காமப் போகுமா எண்டு நிறைய intelligence report எல்லாம் எடுத்திட்டுத் தான் வேலை தொடங்கிறது.  முதல்ல கொஞ்சம் கொஞ்சமா பின்னால போய் , அதுகும் அவைக்குத் தெரியாமப் போய், அதுக்குப் பிறகு கொஞ்சம் தெரியிற மாதிரிப் போக வெளிக்கிட , பிள்ளைக்கு தெரியவர முதல் அம்மா கண்டுபிடிச்சு முறைச்சுப் பாக்க பல காதல் மொட்டுக்கள் கண்ணகி அம்மாக்களின் கண் பார்வையிலேயே கருகிப்போகும். அதோட நாங்கள் பாக்கிறதை கண்டுபிடிச்சு எங்களைத் திரும்பிப் பாக்காமல் அம்மாக்களிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் போன காதல்களும் உண்டு . இதையும் தாண்டி புனிதமாகிறது சில loveவுகள் தான். பின்னால வாறதைக் கண்டு பாத்தும் பாக்கமல் நிக்கிறது தான் முதலாவது சமிக்கை , இதுவே  நம்பிக்கையை ஒளியைத் தரும் . அவளவை ஒரு நாளும் நிமிந்தோ திரும்பியோ பாக்கமாட்டினம் ஆனாலும் நாங்கள் பின்னால வாறது தெரிஞ்சு கச்சான் கடை, செருப்புக் கடையில கொஞ்சம் கூட நேரம் மினக்கிடிறது எங்களுக்காகவே இருக்கும், இது நம்பிக்கையை தும்பிக்கை ஆக்கும்.  முதல்ல அம்மவோட வந்தவை அம்மாவை விட்டிட்டு பக்கத்து வீட்டு அக்காவோட வாறது நல்ல சமிக்கை. ஏற்கனவே எங்களைப்பத்தி சொல்லப்பட்டிருக்கும் அக்காவுக்கு. வாற அக்கா வடிவா ஏற இறங்க எங்களைப் பாத்து குடுக்கிற report ல தான் முடிவு தங்கி இருக்கும். கடைசீல அக்காவும் வெட்டப்பட்டு ஒரு friend ஓட வருவினம் , இப்ப முக்கியம் அந்த friend க்கு நீங்கள் நல்லவராகத் தெரியிறது. அந்தப்பக்கம் அம்மா அக்காவாகி , அக்கா friend ஆகேக்க நாங்களும் அந்த பரிணாம வளரச்சிக்கு ஏத்த மாதிரி பலவாகத் தொடங்கி , அக்காவோட வரேக்க ரெண்டாகி , friend ஓட வரேக்க தனியா இருக்க வேண்டும்  இல்லாட்டி சில “ நல்ல “ நண்பர்களினால் அவளவையின்டை friends reject பண்ணிப் போடுவினம் .  ஆயிரம் பேர் இருந்தாலும் பாத்தோண்ணயே இது தான் எனக்கு எண்டு பெடியள் முடிவெடுத்திடுவாங்கள் ஆனால் , பெட்டைகள் அப்பிடி இல்லை . முக்கி முக்கி  six pack வைச்சவனையும் , பொக்கற்றுக்க ஆயிரம் ரூபா வைச்சிருந்தவனையும் , வடக்கு வீதீல சாமி வரேக்க மடிச்ச சட்டைக்கையோட நான் medical student இல்லாட்டி கம்பஸ் காரன் எண்டு நிக்கிறவனையும் எல்லாம் பாக்காம, நல்லூர் பக்தனா வெறும் மேலோட வாற single pack காரனுக்கு எப்பிடி  ஓம் எண்டு சொல்லுறாளவை எண்டிறது முருகனுக்குத் தான் வெளிச்சம்.  என்ன தான் தலைகீழா நிண்டாலும் பல காதல் பயணங்கள் சண்டேஸ்வரர் தேங்காயோட சிதறிப் போக , ஆனாலும் கந்தன் கைவிட மாட்டான் எண்டு அடுத்த முறையும் முருகன்டை வாறவை  தான் கன பேர்.  இன்று ஆறாம் நாள் திருவிழா. Dr.T. கோபிசங்கர் யாழப்பாணம்
  • பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம் எனும் திரியில் இணைக்கப்பட்ட அநாகரிகமான மீம்ஸ் சும் அதையொட்டிய கருத்தொன்றும் நீக்கப்பட்டன. அநாகரீகமான மீம்ஸ்கள் இணைக்கப்படுவது களவிதிகளை மீறும் செயல் என்பதை கருத்தில் கொள்க.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.