Jump to content

‘நேசம்2012′ கல்வித்திட்டம் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம்


Recommended Posts

‘நேசம்2012′ கல்வித்திட்டம் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம்

“நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசிலுக்கு தோற்றிய மாணவர்கள் 2500பேருக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்தோம். இம்மாணவர்கள் யாவரும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து பங்குபற்றியிருந்தனர். குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி பயிற்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களில் 92 மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கான உதவியை வழங்கிய புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு குறித்த மாணவர்கள் சார்பாக நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான பரிசளிப்பு வழங்குவதற்காக எமது கல்விக்குழுவினர் முடிவு செய்து அதற்கான திட்ட வரைபினையும் வழங்கியுள்ளனர். 92மாணவர்களுக்கு பரிசில் புத்தங்களும் மற்றும் ஒரு மாணவருக்கு தலா 500ரூபா வங்கியில் வைப்பிலிட்டு சேமிப்புக் கணக்கும் திறந்து கொடுப்பதற்கு உத்தேசித்துள்ளோம். மற்றும் இம்மாணவர்களுக்கான கற்பித்தலில் பங்கேற்ற ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்களுக்கும் சிறு ஞாபகப் பரிசினையும் வழங்கி கௌரவிக்க விரும்புகிறோம். இத்திட்டத்திற்கு 155000,00 ரூபா (அண்ணளாவக – 1000,00€ ஆயிரம் யூரோ) (ஒரு இலட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ரூபா) தேவைப்படுகிறது.

பரிசில்களை வழங்குவதற்கான பொருளாதார உதவிகளை எமது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு ஆதரவு வழங்குகிற அனைவரையும் வேண்டி நிற்கிறோம். சின்ன சின்ன ஊக்குவிப்புகள் எங்கள் எதிர்கால சந்ததியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும். உங்கள் சிறு சிறு உதவிகளே மாபெரும் அறிஞர்களையும் ஆற்றல் மிக்கவர்களையும் உருவாக்கும்.

சித்திபெற்ற மாணவர்களின் பெயர் , பாடசாலை , புள்ளி விபரங்கள் :-

DSCF3243-734x1024.png

பரிசளிப்பு வழங்குவதற்கான செலவுத் திட்ட வரைபு :-

DSCF3242-734x1024.png

சிறந்த சித்தி பெற்ற எங்கள் சிறார்களின் மகிழ்வுக்காக உங்கள் உதவிகளை வழங்கி ஊக்குவியுங்கள்.

உதவ விரும்புவோர் கீழ் வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்:-

பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany :–

தொலைபேசி – 0049 6781 70723

கைபேசி – 0049 162 8037418

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

தொடர்புபட்ட செய்திகள் இணைப்புக்கள் :-

நேசக்கரம் ஆதரவில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல்

கிழக்குமாகாணத்தில் நேசக்கரம் கல்வித்திட்டத்தில் 2500மாணவர்கள் பயன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தோசம், இந்த இலங்கங்கள் இன்னும் கொஞ்சம் கூட வேண்டும்..

சின்ன கதை, எனது சகோதரியின் மகளும் எடுத்தவா, அவவினுடைய வகுப்பில் இருந்த எல்லாரும் பாஸ், ஆனால் ஒருவரை தவிர, அந்த பிள்ளையின் தகப்பன் வன்னில காணமல் போன ஒருவராம்- அவ சொல்லி - எனது சகோதரி- சொல்லி கவலைப்பட்ட..தனது மகளுக்கு பாஸ் பண்ணுவதால் ஏதும் வராதாம், ஆனால் அந்த பிள்ளை பாஸ் பண்ணியிருந்தால் காசு குடுப்பார்கள் என்று ( எனது சகோதரி ஒரு அரச உந்தியோகத்தர்)

அது போல இந்த சித்திகள் தேவையான பலருக்கு உதவ வேண்டும்..

நேsaகரத்துக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 92மாணவர்களுக்கு உதவ முன்வந்தவர்களுக்கு நன்றி

5ம் வகுப்பு புலமைப்பரிசிலுக்கு தோற்றிய மாணவர்களில் 92 மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.சித்தியடைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக ஒவ்வோர மாணவருக்கும் 500ரூபா சேமிப்பிலிட்டு சேமிப்புக் கணக்கும் மற்றும் சிறு பரிசுப்பொருட்களும் வழங்க எமது கல்விக்குழுவினர் முடிவுசெய்தனர். இம்முயற்சிக்கான ஆதரவினை வேண்டிய தரவறிக்கையை நேசக்கரம் பங்களிப்பாளர்களுக்கு அனுப்பியிருந்தோம்.

100_1395-1024x768.jpg

நேசக்கரத்தின் பயனாளிகள் பலருக்கான உதவிகளை கடந்த ஒரு வருடங்களாக தொடர்ந்து வழங்கி வருகிற பிரித்தானியாவில் வசிக்கும் திரு.தெய்வேந்திரன் (குட்டிஅண்ணா)அவர்கள் மேற்படி 92 மாணவர்களுக்கும் சேமிப்பு வைப்பிலிட 46ஆயிரம் ரூபாவினை வழங்க முன்வந்துள்ளார். நேசக்கரத்தோடு கைகோர்த்து நின்று தன்னாலான பங்களிப்பை வழங்கிவரும் திரு.இளையதம்பி தெய்வேந்திரனும் (குட்டிஅண்ணா)அவரின் மனைவி திருமதி.வதனி அவர்களும் இணைந்து 2010ம்ஆண்டு யூலைமாதத்தில் பூரணம் முதியோர் உதவிதிட்டம் எனுமொரு உதவித் திட்டத்தினை ஆரம்பித்தனர். இவ்வுதவித் திட்டத்தினை தனது ஊரான வல்வெட்டித்துறையில் வாழ்கிற வருமானமற்ற முதியோர்கள் 19பேருக்கான உதவியாக அரம்பித்த மேற்படி திட்டமானது தற்போது 30வயோதிபர்களுக்கான உதவியாக விரிவாக்கம் பெற்றுள்ளது.

100_1402-1024x768.jpg

எம்மோடு தொடர்ந்து உதவித்திட்டங்களில் பங்கேற்று தனது உதவிகளை வழங்கி வருபவர் பிரித்தானியா கந்தையா ஜெபநேசன் அவர்கள். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திரு.கந்தையா ஜெபநேசன் அவர்கள் சிறைகளில் வாடுகிற கைதிகளில் சிலரது விடுதலைக்கான உதவியினையும் வழக்குகளுக்கான உதவிகளையும் வழங்கி வருகிறார். அத்தோடு புலமைப்பரிசிலில் சித்தியடைந்த 92 மாணவர்களின் உதவியிலும் தனது பங்களிப்பாக(49,05€) வழங்கியிருக்கிறார்.

Scholorship-1024x256.jpg

தங்கள் பெயர்களை வெளிப்படுத்தாமல் தங்கள் உதவிகளை வழங்கி வருகிற பலருள் இவ்விருவரும் தங்கள் ஆதரவுகளைத் தந்து கொண்டிருக்கின்றனர். வலது கை செய்வதனை இடது கை அறியாமல் செய்தலே உதவியென்று தங்கள் தன்னடக்கத்தை எப்போதும் காக்கிற இவர்களது உதவியை காலத்தின் தேவையை அறிந்து இவர்கள் செய்கிற பணிகளை நேசக்கரம் உறவுகளுக்கு தெரிவிக்கிறோம்.

நன்மைய செய்வோரை மற்றோரை நேசிக்கிற மனிதாபிமானிகளை கருணையாளர்களை என்றும் கௌரவிப்போம்.

Link to comment
Share on other sites

முளைக்கும் பயிர்களுக்கு சரியான கவனிப்பு இருந்தாலே அவை நல்ல விளைச்சலைத் தரும் . புலத்து தேசியங்களின் ஆரவாரங்கள் நிறந்த இன்றைய நிலையில் , பலதூரம் கல்வி இடைவெளியைக் கொண்ட பரம்பரையை நிமிர்த்தி எடுக்கும் பணியை தனியொருவராக பல கல்லெறிகள் , சொல்லெறிகள் மத்தியில் நடாத்திவரும் நேசக்கரம் அமைப்பும் , அதன் அடி வேர்களும் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர்களே . அத்துடன் அவர்களது கைகளை பலப்படுத்துவதும் எமது கடமைகளில் ஒன்றாகும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.