• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இப்படியானவற்றில் எழுதி எப்பயனும் இல்லை என்பது தெரிந்துதான் நான் எழுதாமல் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது.
    • தெய்வநாயகம் ஐயா ஒரு இடத்தில்தானும் அங்கர்வாட்டை பற்றியோ, கெமர், கம்போடியா பற்றியோ பேசவில்லை. அவரின் இந்த காணொளியை, வன்னியன் பதிந்த அன்றே நான் பார்த்து விட்டேன். அதே போல நெடுக்கு பதிந்த இரெண்டாவது ஆங்கில விபரணமும் நான் கூறியவற்றையே கூறுகிறது. ஒரு இடத்திலேனும் இந்த கோயில் தமிழருடையது என சொல்லவில்லை. ஜி ஜி பொன்னம்பலம், தமிழ் விவாதத்தில் தோக்கிறமாரி நிலை வந்தா, டக்கென்று ஆங்கிலம் பேசி, சேக்ஸ்பியர் அப்படிச் சொன்னார், சாக்ரடீஸ் இப்படிச் சொன்னார் என பேச்சை மாத்துவாராம்😂. நெடுக்கும் அதுபோல சம்பந்தமே இல்ல்லாத, அல்லது எமது கருத்தை ஆதரிக்கும் 35, 55 நிமிட வீடியோக்களை போட்டால், பாக்கிற பஞ்சியில சனம் அவர் சொல்லுறதுதான் உண்மை என ஏற்கும் என நினகிறார் போல😂. அவர்ட கெட்டகாலம் உந்த வீடியோ எல்லாம் நான் கம்போடியா போக முதலே பாத்தாச்சு 😂. பிகு:1 எனது கருத்துக்கு ஆய்வு கட்டுரையில் இருந்து ஆதாரம் கேட்டுவிட்டு, தான் ரெண்டு யுடியூப் வீடியோவை இணைத்தார் பாருங்கள் - அங்கே நிற்கிறது நெடுக்கின் அறிவுசார் நேர்மை 😂 பிகு:2 தெய்வநாயகம் ஐயா ராஜேந்திரனின் மெய்கீர்தியை விட தன் மெய்கீர்தியையே அதிகம் பேசினாலும் - அவர் சொல்வது உண்மையே. ஆள் நிச்சயமாக விசயகாரன். அவரே சொல்வதுபோல intellectual arrogance - ஞானம் உள்ளவர்களிடம் இதை சகித்துகொள்ள நான் எப்போதும் தயார். ஆனா சில யுடியூப் மேதைகள் தாமும் intellectual arrogance காட்ட முனையும் போதுதான் செம கடுப்பாகும் 😂
    • தெய்வநாயகம் ஐயா சோழர்கள் வரலாறை மிக அழகாகச் சொல்கிறார். அதைவிட அதிகமாக தன் பெருமையும் பேசுகிறார். ஆனாலும் அவர் அங்கோவாட்டை சோழர்கள் கட்டியதாகச் சொல்கிறாரா ??? எந்த இடத்தில் சொல்கிறார் என்று குறிப்பிட்டால் பார்க்க வசதியாக இருக்கும்.
    • எனக்கு இந்த படம் பிடிச்சிருந்தது...வில்லன் நல்ல நடிப்பு  
    • இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாசி ஜேர்மனியால் நடத்தப்பட்ட பாரிய வதை முகாமான அவிஸ்விற்ஸ் பிர்கனவ் முகாம் (Auschwitz-Birkenau  concentration camp)  சோவியத்தின் செம்படைகளால் மீட்கப்பட்டு இன்று 27.ஜனவரி 2020 ல்  75 ஆண்டுகள் பூர்ததியாகி உள்ளது. அதன் நினைவை உலகமக்கள்  இன்று நினைவு கூர்ந்தனர் பல ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இன்றுஅங்கு விஜயம் செய்து அங்கு கொல்லப்பட்ட மக்களை. நினைவு கூர்ந்தனர். வதைமுகாமிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இன்று உயிருடன்  வாழும் 200 கு மேற்ப்பட்ட மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.  நாசிகளால் நடத்தப்பட்ட பல வதை முகாம்களில் மிகப் பெரியது இந்த முகாம் ஆகும்.  போலந்தின்  தென்பகுதியில் உள்ளது.  செம்படைகளால் விடுவிக்கப்படும் போது 7000 கு மேற்ப்பட்ட கைதிகள் அங்கு இருந்தனர். கிட்டத்தட்ட 1.1 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் 1940 - 1945 காலப்பகுதியில் இந்த முகாமில் மாத்திரம் படுகொலை செய்யப்பட்டனர்.  வார்சோவை கைப்பற்றி இம்முகாமை நோக்கி செம்படைகள  முன்னேறிய வேளை அவசரம் அவசரமாக  தம்மிடம் இருந்த கைதிகளை நாசிகள் கொலை செய்ய ஆரம் பித்தனர். இருப்பினும் சோவியத் படைகளின் வேகமான முன்னேற்றத்திற்கு  ஈடு கொடுக்க முடியாமல் நாசிப் படைகள்  பேர்லினை நோக்கி பின்வாங்க பல ஆயிரக்கணக்கான கைதிகள் காப்பாற்றப்பட்டனர். இருப்பினும் இம்மகாம் தொர்பான பெருமளவு தடயங்களை நாசிகள  அழித்து விட்டனர்.  தற்போது நினைவு சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த பாரிய முகாமை வருடாந்தம் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து பாரவையிடுகின்றனர.  சென்ற வருடம் நான்  இந்த முகாமிற்கு  சென்ற பின்னர் அங்கு கண்ட காட்சிகள் மனத்தை உறைய வைப்பவை. அதில் நான்  இருந்து மீண்டுவர பல வாரங்கள் எடுத்தது.அப்போது எடுக்கப்பட்ட படங்களை பின்னர் இணைக்கிறேன்.     https://www.ndr.de/geschichte/schauplaetze/Auschwitz-KZ-Befreiung-durch-die-Rote-Armee-vor-75-Jahren,auschwitz592.html