• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • கோத்தாவாவை சஜித் இனவாதம் குறைந்தவர் என்ற ஒரே அடிப்படையில் தான் சஜித்திற்கு வாக்களிக்க தமிழ் மக்களை கேட்க்கிறோம். அதே வாதத்தை வைத்து பார்க்கும்பொழுது, ஜே வி பி சஜித் கடைசியை விட இனவாதம் குறைந்தது என பார்க்காலம், வாக்களிக்கலாம்.    
    • முதல் முறையாக தமிழில் உரையாற்றிய கோத்தபாய ..!     சம்பந்தரும் சுமந்திரனும் சிங்களத்தில் பேச வேண்டும்  🙂 
    • நாமல் சின்னப்பெடியனாக இருந்தாலும் வடக்கு கிழக்கில் ஆதரவை திரட்டி வருகிறார். யாழ்ப்பாணத்திலேயே இப்படி நிலை.
    • (எம்.நியூட்டன்) தமிழ் வேட்ப்­பா­ள­ருக்கு தமிழ் மக்கள் தமது முதல் விருப்பு வாக்­கையும் இரண்­டா­வது விருப்பு வாக்கை  தந்­தி­ரோ­பா­ய­மாக சிந்­தித்தும் வழங்­கலாம் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான தமிழ் சுயா­தீனக் குழு தமிழ் அர­சி­யலில் சிவில் சமூ­கங்கள் தலை­யி­டு­வது என்­பது தமிழ் ஜன­நா­ய­கத்தை மேலும் செழிப்­பாக்கும் எனத் தெரி­வித்­துள்­ளது. பேர­வையால் தொடக்­கப்­பட்ட ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான சுயா­தீனக் குழு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறிக்கை ஒன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பேர­வையால் தொடக்­கப்­பட்ட ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான சுயா­தீனக் குழு எனப்­ப­டு­வது தமிழ் அர­சி­யலின் மீதும் தமிழ்க் கட்சித் தலை­மை­களின் மீதும் சிவில் சமூ­கங்­களின் தார்­மீகத் தலை­யீட்டை குறிக்­கி­றது. ஜனா­தி­பதித் தேர்தல் எனப்­ப­டு­வது முழு நாட்­டுக்­கு­மா­னது. இதில் தமிழ் முஸ்லிம் வாக்­குகள் தீர்­மா­னிக்கும் வாக்­கு­க­ளாக காணப்­ப­டு­வதை சுயா­தீனக் குழு அவ­தா­னித்­தது. தென்­னி­லங்­கையில் யார் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்டும் என்­ப­தனைத் தீர்­மா­னிக்க முற்­படும் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு தரப்­புக்கள் தமிழ்த் தரப்­போடு தொடர்ந்து வரு­வதை சுயா­தீனக் குழு கவ­னத்தில் எடுத்­தது. எனவே தமிழ் மக்கள் தமது பேரத்தை உயர்­வாகப் பேணி உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு தரப்­புக்­க­ளோடு பேரம் பேசும் ஒரு கள­மாக ஜனா­தி­பதித் தேர்­தலை கையாள வேண்டும் என்று சுயா­தீ­னக்­குழு விரும்­பி­யது. ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் பேரத்தை பிர­யோ­கிப்­ப­தற்கு ஒரு பொதுத் தமிழ் வேட்­பா­ளரே இருப்­ப­வற்றுள் பொருத்­த­மான உச்­ச­மான தெரிவு என்று சுயா­தீனக் குழு முடி­வெ­டுத்­தது. அவ்­வாறு ஒரு பொது வேட்­பா­ளரை நிறுத்­து­வது என்றால் அதற்கு தமிழ்க் கட்­சி­க­ளுக்­கி­டையே ஒரு பொதுக் ­க­ருத்து எட்­டப்­பட வேண்டும் என்றும் குழு தீர்­மா­னித்­தது. ஒரு பொது தமிழ் வேட்­பாளர் எனப்­ப­டு­பவர் ஒரு குறி­யீடு. அவர் தமிழ் மக்­களின் இலட்­சி­யங்­களின் குறி­யீடு. தமிழ் மக்கள் ஒரு தேச­மாகச் சிந்­திக்­கி­றார்கள் என்­பதன் குறி­யீடு. தமிழ் மக்கள் பேரம் பேசத் தயா­ரா­கி­விட்­டார்கள் என்­பதன் குறி­யீடு. தமிழ் ஐக்­கி­யத்தின் குறி­யீடு. ஒரு பொதுத் தமிழ் வேட்­பா­ளரை ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறுத்­தினால் அவர் தமிழ் மக்­களின் முத­லா­வது விருப்பு வாக்கைப் பெறுவார். அவ்­வாறு ஒரு பொதுத் தமிழ் வேட்­பா­ளரும் ஜே.வி.பி யும் தமிழ் சிங்­கள வாக்­கு­களை கொத்­தாக வெட்டி எடுக்கும் போது இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் 50 வீதத்­திற்கு மேலான வாக்­கு­களைப் பெறு­வது சில சமயம் சவால்­க­ளுக்கு உள்­ளா­கலாம். அப்­பொ­ழுது இரண்­டா­வது விருப்பு வாக்கு எண்­ணப்­படும். இதில் தமிழ் மக்கள் தமது இரண்­டா­வது விருப்பு வாக்கை தந்­தி­ரோ­பா­ய­மாக சிந்­தித்து யாருக்கு வழங்­கு­கி­றார்­களோ அந்தப் பிர­தான வேட்­பா­ள­ருக்கே வெற்றி வாய்­புக்கள் அதி­க­மி­ருக்கும். அதா­வது முத­லா­வது விருப்பு வாக்கு தமிழ்க் கொள்­கைக்கு. இரண்­டா­வது விருப்பு வாக்கு பேரம் பேச­லுக்கு. இதுதான் பொதுத் தமிழ் வேட்­பாளர். இக் கோரிக்­கையை முன்­வைத்து கட்­சி­களை ஒருங்­கி­ணைக்கும் அனு­ச­ரணை பணியை சுயா­தீ­னக்­குழு முன்­னெ­டுத்­தது. முதலில் இக்­குழு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சந்­தித்­தது. அதன் தலைவர் சம்­பந்தன் குழுவின் யோச­னையை உதா­சீனம் செய்­ய­வில்லை என்று கூறினார். கட்சித் தலை­வர்­க­ளோடும் தொண்­டர்­க­ளோடும் பேசி முடி­வெ­டுத்த பின் தமது முடிவை கூறு­வ­தாக சொன்னார். பொதுத்­தமிழ் வேட்­பா­ள­ராக தான் கள­மி­றங்கத் தயா­ரில்லை என்றும் அவர் கூறினார். அதன்பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியை குழு சந்­தித்­தது. அவர்கள் பொது தமிழ் வேட்­பா­ளரை எடுத்த எடுப்பில் ஏற்றுக் ­கொள்­ள­வில்லை. மாறாக தேர்தல் புறக்­க­ணிப்பை தமது முதல் தெரி­வாக முன்­வைத்­தார்கள். அதன்பின் தமிழ் மக்கள் கூட்­ட­ணியை குழு சந்­தித்­தது. நீண்ட உரை­யா­டலின் பின் பொது தமிழ் வேட்­பா­ளரை அக்­கட்சி ஏற்­றுக்­கொண்­டது. எனினும் விக்­னேஸ்­வரன் அப்­படி ஒரு வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு மறுத்­து­விட்டார். அதே­ச­மயம் சம்­பந்தன் கள­மி­றக்­கப்­பட்டால் அதைத்தான் ஆத­ரிப்­ப­தா­கவும் கூறினார். அதன்பின் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்­சியை குழு சந்­தித்­தது. அதன் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் பொது ­தமிழ் வேட்­பா­ளரை ஏற்­ப­தற்குத் தயங்­கினார். பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளோடு முதல் நிலைக் கோரிக்­கை­களை முன்­வைத்துப் பேசு­வது கடினம் என்றும் எனவே உட­னடிப் பிரச்­சி­னை­களை முன்­வைத்து பேச­வேண்டும் என்றும் அபிப்­பி­ரா­யப்­பட்டார். அதன்பின் தமிழ்த் தேசிய பசுமை இயக்­கத்தை குழு சந்­தித்­தது. அதன் தலைவர் ஐங்­க­ர­நேசன் ஒரு பொதுத் தமிழ் வேட்­பா­ளரை உட­ன­டி­யாக ஏற்றுக் கொண்டார். அந்த வேட்­பா­ள­ருக்கு தமது கட்சி முழு­ம­ன­தோடு உழைக்கும் என்றும் உறு­தி­ய­ளித்தார். அதன்பின் திரு­மதி. அனந்தி சசி­தரனும் பொது வேட்­பா­ளரை ஏற்­றுக்­கொண்டார். சிவா­ஜி­லிங்கம் சில சமயம் போட்­டி­யிடக் கூடும் என்றும் ஊகம் தெரி­வித்தார். அதன்பின் தமி­ழ­ரசுக் கட்சி. அக்­கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா தனது கட்சித் தலை­வர்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்த பின் முடிவை அறி­விப்­ப­தாக தெரி­வித்தார். அதன்பின் புௌாட் அமைப்பின் தலைவர் சித்­தார்த்தன். அவரும் பொது வேட்­பா­ளரை ஏற்­றுக்­கொண்டார். ஆனால் காலம் பிந்தி­விட்­டது என்று சொன்னார். அதன்பின் ரெலோ அமைப்பின் செய­லாளர் சிறீ­காந்தாவும் பொது வேட்­பா­ளரை ஏற்­றுக்­கொண்டார். ஆனால் காலம் பிந்தி விட்­டது என்ற ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க ஒரு சாட்டை எல்லா கட்­சி­களும் முன்­வைக்கும் என்று சொன்னார். இவ்­வாறு கட்சித் தலை­மை­க­ளோடு பேசி ஒரு பொது உடன்­பாட்­டுக்கு வரும் முதல் முயற்­சியில் சுயா­தீனக் குழு ஓர­ள­வுக்கு முன்­னே­றி­யி­ருந்த பின்­ன­ணியில், ஒரு பொது தமிழ் வேட்­பா­ளரை கட்­சி­க­ளுக்குள் இருந்தும் கட்­சி­க­ளுக்கு வெளியே இருந்தும் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. கட்­சி­க­ளுக்கு வெளியே ஒரு­வரை கண்டு பிடிப்ப­தென்றால் அவர் ஒரு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்க வேண்டும். இவ்­வா­றான ஒரு பின்­ன­ணி­யில்தான் யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தனது முயற்­சியை ஆரம்­பித்­தார்கள். அதே காலப்­ப­கு­தியில் சிவா­ஜி­லிங்கம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ஒரு பொது தமிழ் வேட்­பா­ளரைக் கண்டு பிடிக்க முடி­யாத ஒரு சூழலில் அடுத்த கட்­ட­மாக எல்லாக் காட்­சி­க­ளையும் ஒருங்­கி­ணைத்து ஒரு பொது உடன்­பா­டுக்கு கொண்டு வந்து ஒரு பொதுப் பேரம் பேசும் ஆவ­ணத்தைத் தயா­ரிப்­பதே சுயா­தீனக் குழுவின் அடுத்த கட்டத் திட்­ட­மா­யி­ருந்­தது. ஆனால் பல்­கலைக்கழக மாண­வர்கள் இடையில் நுழைந்­தார்கள். சுயா­தீனக் குழு திட்ட­மிட்­டி­ருந்த அடுத்த கட்ட நகர்வை அவர்கள் முன்­னெ­டுத்­தார்கள். அதன் விளை­வாக ஐந்து கட்­சி­களின் கூட்டும் ஒரு பொது ஆவ­ணமும் உரு­வாக்­கப்­பட்­டன. ஆனால் இப்­பொ­ழுது அக்­கூட்டு சிதைந்து விட்­டது. அதன் சிதைவை தடுக்க மாண­வர்­களால் முடி­ய­வில்லை.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மேற்­கொண்ட முயற்­சி­களில் சுயா­தீனக் குழு உத்­தி­யோ­கப்­பற்­றற்ற விதத்தில் பங்­கு­பற்­றி­யது. ஆனால் ஐந்து கட்­சி­களின் கூட்டை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஒரு பொதுக் கருத்தை எட்­டு­வ­தற்கு எல்லாக் கட்­சி­க­ளையும் ஒருங்­கி­ணைக்க வேண்டும் என்­பதே அக்­கு­ழுவின் நிலைப்­பா­டாக இருந்­தது. இப்­போ­துள்ள நிலை­மை­க­ளின்­படி தமிழ்த் தேசியக் கட்­சிகள் மத்­தியில் நான்கு வேறு நிலைப்­பா­டுகள் உள்ள­ன. முத­லா­வது பொது தமிழ் வேட்­பாளர் அதா­வது இரண்­டா­வது விருப்பு வாக்கை ஒரு பிர­தான வேட்­பா­ள­ருக்கு நிபந்­த­னை­யுடன் வழங்­கு­வது, இரண்­டா­வது - தேர்­தலைப் புறக்­க­ணிப்­பது, மூன்­றா­வது - சஜித்தை நிபந்­த­னை­யின்றி ஆத­ரிப்­பது, நான்கா­வது - தமிழ் மக்­களைத் தாமாக முடி­வெ­டுக்க விடு­வது. ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் ஒரு பொது தமிழ் கருத்தை உரு­வாக்க முடி­ய­வில்லை. எனவே தமிழ் பேரத்­தையும் முழு­மை­யாக பிர­யோ­கிப்­பது கடினம். ஒரு பொது தமிழ் வேட்­பா­ளரே சுயா­தீனக் குழுவின் கொள்கைத் தெரிவு. அதற்கு ஒப்­பீட்­ட­ளவில் ஆகக்­கூ­டி­ய­பட்சம் பொருத்­த­மான ஓர் ஒற்­றுமை அவ­சியம். அவ்­வாறு ஒப்­பீட்­ட­ளவில் ஆகக்­கூ­டு­த­லான தமிழ்த் தேசியக் கட்­சி­களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தமிழ் வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது முதல் விருப்பு வாக்கையும் இரண்டாவது விருப்பு வாக்கை தந்திரோபாயமாக சிந்தித்தும் வழங்கலாம். கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது செயற்கையானது என்று சுயாதீனக் குழு நம்புகிறது. தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்ட கால நோக்கில் பண்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியத்தையும் சமூகப் பொறுப்பையும் சுயாதீனக் குழு ஏற்றுக்கொள்கிறது. தமிழ் அரசியலில் சிவில் சமூகங்கள் தலையிடுவது என்பது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும். இனிவரும் காலங்களில் தமிழ் அரசியலின் மீதும் கட்சிகளின் மீதும் அதிகரித்த தார்மீகத் தலையீட்டைச் செய்வதற்கு தேவையான வளர்ச்சியைத் தமிழ் சிவில் சமூகங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/68862    
    • சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யா­னதும், மிகுதி அர­சியல் கைதி­களும் பொது மன்­னிப்பு அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­ப­டுவர். அதற்­கான அழுத்­தங்கள் அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். வவு­னியா மாவட்ட ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அமைப்­பாளர் கரு­ணா­தா­சவின் ஏற்­பாட்டில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். குறித்த கூட்­டத்தில் சஜித் பிரே­ம­தா­சவின் சகோ­தரி துலாஞ்­சலி பிரே­ம­தாச, முன்னாள் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் ரோகித போகொல்­லா­கம உள்­ளிட்ட பலரும் கலந்து கொண்­டனர். இதில் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், கடந்த காலங்­களில் எங்­க­ளுக்கு நடை­பெற்ற அநீ­திகள், துன்­பங்கள் எல்லாம் உங்­க­ளுக்கு தெரியும். அதி­லி­ருந்து விடு­தலை பெற வேண்டும். கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் ஊடாக நாங்கள் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தோம். அதற்கும் அப்பால் இன்று சஜித் பிரே­ம­தாச தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார். அவ­ரு­டைய வெற்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சஜித் பிரே­ம­தா­சவின் ஆட்­சியில் வடக்கு–- கிழக்கு பிர­தே­சத்தில் வாழும் பெண்­களின் வாழ்­வா­தா­ரத்­துக்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். சுயா­தீன ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தாக கூறி­யி­ருக்­கின்றார். போரால் பாதிக்­கப்­பட்ட, கண­வனால் கைவி­டப்­பட்ட பெண்கள் இருக்­கின்­றார்கள். பட்­ட­தா­ரிகள் தொடக்கம் இன்று வேலை­யில்­லாமல் இருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்­கானக கைத்­தொழில் பேட்­டை­களை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. நாட­ளா­விய ரீதியில் உள்ள முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிரந்­தர நிய­மனம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு பின்னர் இவை­களை அவர் நிறை­வேற்றித் தருவார். இந்­த­முறை  ஜனா­தி­பதி ஆனதன் பின்னர் தொடர்ந்து 20 வரு­டங்கள் பய­ணிக்க இருக்­கின்றோம். கடந்த காலத்தில் ஏற்­பட்ட அநீ­தி­களை முள்­ளி­வாய்க்கால் கூறு­கின்­றது. முள்­ளி­வாய்க்கால் போன்ற கொடூ­ர­மான வாழ்க்­கையை நாம் கடந்த காலத்தில் வாழ்ந்­தி­ருக்­கின்றோம். அப்­ப­டி­யா­ன­வற்­றுக்கு நாம் இட­ம­ளிக்க கூடாது. வடக்கு – கிழக்கு மாகா­ணத்தில் ஒவ்­வொரு குடும்­பமும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இறுதி யுத்­தத்தால் மாற்றுத் திற­னா­ளிகள், பெண்­களை தலை­மைத்­து­வ­மாக கொண்ட குடும்­பங்கள் எனப் பலர் இருக்­கின்­றனர். குழந்­தைகள் பெற்­றோர்­களை இழந்திருக்­கி­றார்கள். பிள்­ளை­களை இழந்து முதி­யோர்கள் முதியோர் இல்­லங்­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இவைகள் எல்லாம் உங்­க­ளுக்கு ஞாப­கத்துக்கு வர­வேண்டும். குறு­கிய காலத்தில் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்தில் ஒரு இலட்சம் வரை­யி­லான சமுர்த்தி பய­னா­ளர்­களை தெரிவு செய்­துள்­ளது. உட்­கட்­ட­மைப்பு மற்றும் வீதிகள் புன­ர­மைத்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. கம்­ப­ர­லிய திட்­டத்தின் ஊடாக ஒரு தொகு­திக்கு 300 மில்­லியன் ரூபாய் நிதி ஒதுக்­கப்­பட்டு ஆல­யங்கள், பாட­சா­லைகள், பள்­ளி­வா­சல்கள், சிறு­வீ­திகள் புன­ர­மைக்­கப்­பட்­டுள்­ளன. வறுமைக் கோட்­டிற்கு உட்­பட்ட குடும்­பங்­களின் மின்­னி­ணைப்­புக்­காக ஒரு குடும்­பத்துக்கு 30 ஆயிரம் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாண சர்­வ­தேச விமான நிலையம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. சஜித் பிரே­ம­தாச கிரா­மங்கள் தோறும் சென்று தனது அமைச்சின் ஊடாக குடி­யேற்­றத்­திட்­டங்­களை அமைத்து வீடு­களை வழங்­கி­யுள்ளார். எனவே குறு­கிய காலத்தில் அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்தி ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தி இந்த நாட்டை ஒரு ஜன­நா­யக நாடாக கொண்டு வந்­தி­ருக்­கின்றோம். இந்த வாக்­கு­களின் ஊடாக ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்த முடியும். ஜன­நா­யக நாடு தான் எங்­க­ளுக்கு வேண்டும். வெள்­ளை வான் கலா­சாரம் வேண்டாம். எங்களுடைய காணிகள் வேண்டும். சிறையில் இருந்து அரசியல் கைதிகளை விடுவித்துள்ளோம். மிகுதி கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் மிகுதி அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்­படுவர். அதற்கான அழுத்தங்கள் அரசாங்கத் துக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வோம் என்றார். https://www.virakesari.lk/article/68883