• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ரதி

இயேசு அழைக்கிறாரும்,நானும்

Recommended Posts

ரதி, இப்படியான பிரச்சனை எல்லா இடங்களிலும் உள்ளதுதானே. நீங்கள் எப்படியான சபையைக்கூறுகின்றீர்கள் என்று தெரியவில்லை. எனக்குத்தெரிந்தவர்கள் செல்லும் சபையில் நகைககள், ஆடம்பரமாக உடை எல்லாம் அணியலாம். அவர்கள் வாழ்க்கையை விதம்,விதமாக நன்றாய் அனுபவிப்பதாகத்தெரிகின்றதேயொழிய துறவறம் பூண்டுள்ளதாகத்தெரியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

இப்படியான இம்சைகள்,தொல்லைகள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பலரையும் கடந்து போயிருக்கலாம்.

அண்ணா இறந்த சமயம் பலர்வருவார்கள் கடைக்கு. என்னிடம் தமது போதனைகள் சொல்ல.

கேட்கும் போது மற்றவர்களுடைய மனதை புரியாமல் அப்பவும் வகுப்பெடுக்க தான் நினைப்பார்கள் எல்லாம் இரட்சிப்பார் என்பதுவாய் இருக்கும்,

இப்படி என்னிடமும் பலர்வருவார்கள், இப்படி மதம் மாறியவர்களையும் பலரை பார்த்திருக்கிறேன்.

எப்படி சுகம், எந்த மதம் என்று கேட்டு ஆரம்பிக்கும் உரையாடல் சூ கழட்டி அடிக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட கோவத்தில் முடியும். நான் யார் வந்தாலும் வேலை குறைவா இருந்தால் பொழுது போக கொஞ்ச நேரம் பேசுவேன்.

அவர்களிடம் இருந்து எமது கேள்விக்கு எந்த நேரடிப்பதிலும் கிடையாது .. இருங்கோ என்று பைபிளில் ஏதாவது ஒரு வாக்கியத்தை படிப்பதும்,இதை தான் எமது மதமும் சொல்கிறது என்றால் பதில் இருக்காது நான் வாசிப்பேன் நீ கேட்க வேண்டும் என்பது போல் வந்த வேலையை தொடர்வார்கள்.

mönchengladbach என்ற இடத்தில் இருந்து ஒருவர் வருவார். நான் மேற்சொன்னது போல தான் ஆரம்பிப்பார்.

நானும் இந்து சமயம் தான் என்னுடைய பெயரும் ****** என்று சொல்லுவார்.

நான் கேட்டேன். இந்து சமயத்தில் சொல்லாத எதை பைபிள்,அல்லது குர் ஆன் சொல்லிவிட்டது?

இந்து சமயத்தின் அடிப்படையில் நீங்கள் என்ன விளங்கி கொண்டீர்கள்?

மற்ற மதங்கள் போதிப்பதில் எது இந்து சமயம் போதிக்கவில்லை?

இப்படி பல கேள்விகள்? எதற்கும் பதில் இல்லை, மறுபடி வரும் போது வேறு யாரையும் கூட்டி வருவார்.

யாரும் என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.

நான் முதல் இருந்த வீடு துருக்கிகாரனுடையது, கடைக்கு வரும் போது,தமது மதம் குறித்து பேசும்.

கேட்டு விட்டு சொல்லுவேன். இதை தான் எமது மதமும் சொல்கிறது என்று.

மதம் என்பது அவரவருடைய தெரிவு, அதில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை ஆனால் தன்னுடைய சமயம்,மதம் என்ன சொல்கிறது என்பதை முழுமையாக அறியாத ஒருவர் இன்னொரு மதம் திறம், அது அப்படி சொல்கிறது என்று வகுப்பெடுப்பது தான் கோவமூட்டுகிறது.

Share this post


Link to post
Share on other sites

ரதி,

உங்கள் பகிர்விற்கு நன்றி. பாதிரி உங்கள் தலையில் கையை வைச்சு பிராhத்திக்கும் போது நீங்கள் முருகா முருகா காப்பாத்து என்று நினைச்ச விடயத்தை நீங்கள் எழுதியிருக்கும் விதம் குழந்தைத் தனத்தோடு வெளிப்பட்டிருப்பது அழகாக இருக்கிறது.

மற்றபடி மதம்மாறிற விடயம் தொடர்பில் எனக்குப் பொதுவாகச் சொல்லத்தோன்றுவது என்னவெனில், கடவுள் நம்பிக்கையில் இரண்டுவகை உண்டு. ஒன்று கடவுள் என்ற பாத்திரம் எமக்குப் புறம்பாக எங்கோ இருந்து எல்லாத்தையும் பார்ப்பவர் என்பது. மற்றையது கடவுள் எமக்குள்ளானவர் என்பது.

இதில் கடவுள் வெளியே இருக்கிறார் என்பவர்கள் சார்ந்து மதம் மாற்றம் பற்றிப் பார்த்தால்:

கடவுள் என்பவர் வரைவிலக்ங்களிற்கப்பாற்பட்ட சக்திகளுடன் இருப்பவர் என்ற நம்பிக்கையில் தான் மனிதன் கடவுளை நம்புகிறான். அத்தகைய தடையற்ற பலங்களுடன் ஒரு பாத்திரம் இருக்கவேண்டுமாயின், ஒரே ஒரு கடவுள் தான் இருக்கமுடியும். அல்லாது போயின், பலத்தில் ஒரு கடவுளிற்குச் சமனான அல்லது கூடிய பலத்துடன் பிறிதொரு கடவுள் இருப்பின், அத்தகைய பிறிதொரு கடவுளின் இருப்பு அந்தக் கணத்திலேயே முன்னைய கடவுளை மட்டுப்படுத்தப்பட்ட பாத்திரம் ஆக்கி வரைவிலக்கணத்தையே ஆட்டிவிடும். எனவே கடவுள் என்ற பாத்திரம் ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும்.. இது ஏறத்தாள எல்லா மதங்களிலும் ஏதோ ஒரு வடிவில் சொல்லப்படாலும், ஆரும் அதைக் கருத்தில் எடுப்பதாய் இல்லை. மோதகத்தையும் கொழுக்கட்டையினையும் உண்ணும் போது மனிதன் உணரும் வித்தியாசம் என்பது முற்றுமுழுதாய் அவனது கற்பனை சார்ந்தது மட்டுமேயன்றி அவ்வித்தியாசங்கள் மோதகத்திற்கும் கொழுக்கட்டைக்கும் உரியனவல்ல.

இனி கடவுள் உள்ளிற்குள் இருக்கிறார் என்பவர்கள் சார்ந்து மதமாற்றம் பற்றிப் பேசின்

கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்தது. ஒரு மனிதனின் பெறுமதிகள் அவனது அனுபவம் மற்றும் அறிவுசார்;ந்து அவனது வாழ்நாள் முழுவதும் மாறிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் கடவுள் விடயத்தில் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, இரு கடவுளரை ஆய்வுகூடத்தில் போட்டு அளவீடுகள் செய்து அந்தத் தரவின் அடிப்படையில் நம்பிக்கைகளை மாற்றிக்கொள்வது என்பது சாத்தியமில்லை. உணர்வால் மனவெளியில் மட்டும் இருக்கின்ற ஒரு விடயத்தை ஒருவன் தேவை என்று உணர்ந்து, அதே நேரம் தனது மனவெளியில் இருக்கின்ற பாத்திரம் வலிமை காணாது எனவே வேறொரு மனவெளிப் பாத்திரத்தைத் தனது மனதுள் நுழைக்கவேண்டும் என்று நினைத்து, அவ்வாறு புதியதை நுழைப்பதற்காக முன்னையதை எறிவோம் என்பது உண்மையில் ஒரு நகைப்பிற்குரிய விடயம். ஏனெனில்:

மனவெளியில் பாத்திரங்களை மாத்துவது என்பது, ஒரு குழந்தை ஒரு imaginary friend உடன் கோபிச்சுக்கொண்டு இன்னுமொரு imaginary friendனை உருவாக்குவதற்கு ஒப்பானது. ஒரு குழந்தை மனநிலையில் இருப்பவரிற்கு மட்டுமே அத்தகை மாற்றம் சாத்தியம். ஆனால் இது ஒரு பரடொக்ஸ். ஏனெனில், குழந்தை மனநிலையில் இருப்பவரின் வாழ்வு இலகுவானது. ஆனால், ஒரு கடவுளால் தீர்க்கமுடியாத பிரச்சினைகளை உணர்ந்து அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இன்னுமொரு புதிய கடவுள் வேண்டும் என்று விரும்பும் ஒருவரே மதம் மாறுகிறார் என்ற நிலையில், மதம் மாறுபவர் நிச்சயம் குழந்தை மனநிலையில் இல்லை. அப்படி இருக்கையில், அவரது மதமாற்றம் என்பது அவரிற்கே அவரது நம்பிக்கை சார்ந்த ஓட்டையினை சதா நினைவு படுத்தும். அதாவது மனவெளிப்பாத்திரம் என்று சொல்லும்போது அதன் அடிப்படை மனம். மனம் என்பது ஒவ்வொருவரிற்கும் பிரத்தியேகமானது. தமது மனத்தை, அதன் பார்வைகளைக் கையாள முடியாத ஒருவர் அந்த அந்த மனத்தில் என்ன விளைந்தாலும் அதை அனுபவிக்க முடியாதவர். இன்னுமொரு வழியில் சொல்லின், பிரச்சினை மனதில் என்ன விளைகிறது என்பதல்ல, விளைவதை அறுவடை செய்வதற்கு அதைக்காணும் பக்குவம் குறித்த நபரிற்கு இல்லாது இருப்பதே.

இந்நிலையில், மனவெளியில் எத்தனை கடவுள் பாத்திரத்தை மாற்றினாலும் நிச்சயம் அந்த மதமாற்றம் அவரின் பிரச்சினைகளைத் தீhக்;கமாட்டாது. காரணம், அடிப்படைப் பிரச்சினை இங்கு மனவெளிப்பாத்திரம் இல்லை, மனம். மதம் மாறிய ஏகப்பட்டவர்கள், சதா சர்வகாலமும் மற்றவர்களிடம் தங்கள் மதம் சார்ந்த கருத்துக்கள் பற்றி அலட்டிக்கொள்ளுவது, அனைவரையும் தம் மதத்திற்கு மாற்றி விட விரும்புவது, தங்கள் கடவுள் மட்டுமே உண்மை என்று திருப்பத்திருப்பக்கூறுவது போன்ற செயற்பாடுகள் எல்லாம் உண்மையில் அவர்களிற்கு அவர்களது நம்பிக்கை மீதிருக்கும் நம்பிக்கையீனங்களின் வெளிப்பாடுகள் தான்.

என்னுடைய அபிப்பிராயம் என்னவெனில், ஒன்றில் குழந்தையாக இருக்கவேண்டும், இல்லையேல் பிறப்பால் என்ன கடவுள் நம்பிக்கைப் பாரம்பரியத்தில் பிறந்தோமோ அதிலே தொடரவேண்டும். இந்த இரண்டாவது விடயம் கேட்டவுடன் ஒரு கட்டுப்பட்டித்தனமாக ஒலிக்கும், ஆனால் பிரச்சினை என்னவெனில், கடவுள் என்பவர் சர்வவல்லமை பொருந்திய ஒரு பாத்திரமாக இருக்கவேண்டும் என்றால், அந்தப் பாத்திரம் ஒரு மனிதனின் வாழ்வில் எப்போது அறிமுகப்படுகிறது என்ற கேள்வி அணுகப்பட்டே ஆகவேண்டும்? இல்லாதுபோயின், ஒருவன் எங்கே பிறக்கிறான் என்பதைத் தீர்மானிக்க முடியாத கடவுள் அவன் பிறந்தபின் மட்டும் வெட்டிவிழுத்துவாராக்கும் என்றல்லவா சொல்லத்தோன்றும். மேலும் பிறப்பை நிச்சயிக்க முடியாத கடவுள் என்னத்தை நிச்சயிக்கக்கூடியவர் என்ற அட்டவணையினை எங்கு ஒருவர் பெறமுடியும்? இது நம்பிக்கை வழரமுடியாத நம்பிக்கையீனத்திற்கான ஏதநிலை அல்லவா? எனவே கடவுள் என்பவரை நம்பின் நம் பிறப்புத்தொட்டு அவரின் ஆழமை எம்மில் இருப்பதாக நாம் நம்பியே ஆகவேண்டும். அப்படி நம்பின், மதமாற்றம் எவ்வாறு சாத்தியம்? அதாவது என்னைச் சரியான குடும்பத்தில் பிறப்பிக்கவே தெரியாத கடவுளிற்கு வேறென்ன தெரியும் என்று எப்பிடி நான் நம்புவது? மறுபுறமாய்ப் பார்த்தால், கடவுள் தெரிந்து தான் என்னை ஒரு பாரம்பரியத்தில் பிற்பித்தார் என்று நான் ஏற்றுக்கொண்டு அதன் பின்னும் மதம்மாறின், பிறகு எந்த லட்சணத்தில் கடவுளை நம்பவோ உதவிகேட்கவோ முடியும்? நான் தாNனு கடவுளின் முடிவை மாற்றி மதமாறியவன் ஆச்சே?

சுpலர்சொல்வார்கள், கடவுள் தன்ர அருமையினை மனிதன் உணரவேண்டும் என்று பிழையான குடும்பத்தில் முதலில் பிறப்பித்து பிறகு ரட்சிப்பார் என்று. மனிதனே நேரடியா மென்பொருளைச் சரியா டவுன்லோட்பண்ணுற உலகில இந்தக் காரணத்தை எப்பிடிப்பார்த்தாலும் சிரிப்பாய்த்தானே வருகுது.

இப்பிடி இந்த விவாதத்தை விரிச்சுக்கொண்டே போகலாம், ஆனால் நான் என்ன சொல்லவருகிறேன் என்பதன் சாராம்சம் ஓரளவிற்குச் சொல்லப்பட்டுவிட்டதாய் உணர்கிறேன்.

Edited by Innumoruvan
  • Like 4

Share this post


Link to post
Share on other sites

"கடவுள் தெரிந்து தான் என்னை ஒரு பாரம்பரியத்தில் பிற்பித்தார் என்று நான் ஏற்றுக்கொண்டு அதன் பின்னும் மதம்மாறின், பிறகு எந்த லட்சணத்தில் கடவுளை நம்பவோ உதவிகேட்கவோ முடியும்? நான் தாNனு கடவுளின் முடிவை மாற்றி மதமாறியவன் ஆச்சே?"

இன்னுமொருவன்! இது ஒரு அருமையான வாதம்

அடுத்த முறை அவர்கள் வந்தால் இதைக் கேட்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

நான் கேட்டேன். இந்து சமயத்தில் சொல்லாத எதை பைபிள்,அல்லது குர் ஆன் சொல்லிவிட்டது?

இந்து சமயத்தின் அடிப்படையில் நீங்கள் என்ன விளங்கி கொண்டீர்கள்?

மற்ற மதங்கள் போதிப்பதில் எது இந்து சமயம் போதிக்கவில்லை?

உண்மைதான்.

வேறு ஒரு இடத்தில் யாரோ எழுதியிருந்தார்கள்

போய்ப்பார்க்கலாமே என.

மிகவும் ஆபத்தான விடயம் இது.

உங்களைச்சுற்றி வலையமைப்பை வரைந்து சூழ்ந்து கொள்வார்கள்.

உங்கள் மனைவி பிள்ளைகள் ஏன் பொருளாதாரம் உழைப்பு பல தனிப்பட்ட ரகசியங்கள் கூட அவர்களது கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுவார்கள்.

எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவர்

மிகவும்தெளிவானவர்.

இப்படித்தான் அவரது சித்தப்பனாரால் கொண்டு போகப்பட்டார்.

அதன் பின் அவரது பெண் பிள்ளை மலம் கழித்து வெளியில் வந்◌ாலும் இன்று வடிவாகப்போச்சுதாம்மா. எல்லாம் கடவுளின் கிருபை என்பாராம். அந்தப்பிள்ளை தொலைபேசியில் எங்களுடன் அழும். அப்பாவைப்பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கு என்று.

அந்தப்பிள்ளை தொலைக்காட்சியில் சிறுவயதில் தனி புரோகிறாமே செய்யும் ஆற்றலுடன் இருந்தவர். வைத்தியத்துறையில் யூனியில் படித்துக்கொண்டிருந்தவர். மெதுவாக தகப்பனால் உள்ளிழுக்கப்பட்டு போன மாதம் அந்தபபெண்ணுக்கு திருமணம் நடந்தது. (21 வயது.)

எனக்கு அழைப்பு வந்தது நான் போகவில்லை. போக மனம் வரவில்லை. காரணம்

மாப்பிள்ளை பெண்ணைவிட 12 வயது அதிகமானவர். அத்துடன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அந்தப்பிள்ளை சொல்லுதாம். நான் கடவுளை நேரில் கண்டேன். இதுவும் கடவுள் தந்தது தான் என்று.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் முறைப்பாடுகள் எல்லாம் சரி, இதன் தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு உங்கள் தீர்வுதான் எவை?

வாழ்க்கையில் மோசமான பிரச்சனைகளில் உழன்று, துன்பங்கள் தாங்கமுடியாமலே பலரும் ஒரு நம்பிக்கைக்கீற்றுடன் இவ்வாறு சபைகளினுள் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றார்கள்.

சபைகள் வேண்டாம், கூடாது என்றால்.. இதற்கு ஈடிணையாக உங்களிடம் எவ்வாறான சமூக பாதுகாப்பு கட்டமைப்பு தற்போது உள்ளது? நாம் வாழ்கின்ற சமூகம் மற்றவர்களின் துன்பங்கள் பற்றி ஏதாவது அதிகம் அலட்டிக்கொள்கின்றதா? சபை ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவர்கள் தமது சமயத்தை வளர்க்கவேண்டும் என்கின்ற ரீதியில் செயற்பட்டால்கூட அவர்கள் செய்கின்ற உதவிகளை, கொடுக்கின்ற தென்பை, மனத்தைரியத்தை துவேசிக்கலாமா?

நாளை நீங்கள் புற்றுநோயினால் மடியப்போகின்றீர்கள் என்றாலும்.. வீட்டிலே வைத்தியர்களினால் கைவிடப்பட்டநிலையில் உங்கள் இறுதி நேரத்திற்காக காத்துள்ளீர்கள் என்றாலும்.. இவ்வாறான சபையில் உள்ளவர்களிடம் உதவி கேட்கும்போது அவர்கள் உங்கள் வீடுதேடிவந்து பிரார்த்தனையில் ஈடுபடுகின்றாறார்கள். நம்பிக்கைதரும்வகையில் உரையாடுகின்றார்கள். உங்களுக்கு ஒருபிடியும் இல்லை, நம்பிக்கைதரும் வகையில் ஒன்றும் இல்லை, ஆனாலும் இவர்கள் அந்த இறுதிநேரத்திலும் ஏதோ நம்பிக்கையுடன் குழுவாகவோ, தனிநபராகவோ சேர்ந்து உங்களுக்காக மன்றாடுகின்றார்கள். விஞ்ஞானரீதியாக இதற்கெல்லாம் பலன் உண்டா இல்லையா என்பதற்கு அப்பால், ஒரு மனிதனாக எத்தனைபேர் கொடியதுன்பம் வரும்போது உங்கள் அருகில் இருக்கவிரும்புவார்கள்?

சபைகளைக்குறைகூறாது பல்வேறு வகைகளில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும் ஆதரவுகொடுத்து அவர்களை அரவணைப்பீர்களாயின் அடிப்படைப்பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான சரியான பாதையாக அது அமையும்.

எனக்கு ஓர் பிரச்சனை, துன்பம் ஏற்படுமானால் எனது முதலாவது தேடல், ஆரம்பப்படி அந்தப்பிரச்சனையை தீர்ப்பது, அந்தத்துன்பத்திலிருந்து விடுபடுவதாக அமையுமேயொழிய கடவுளினைக்கண்டுபிடிப்பதற்கான தேடலாக அது அமையாது. இங்கு கடவுள், மதம் என்பதல்லாமல் சாதாரண மனிதர்களின் பிரச்சனைகளும், துன்பங்களுமே இங்கு கருப்பொருளாக பார்க்கப்படவேண்டும்.

Edited by கரும்பு

Share this post


Link to post
Share on other sites

ஒரு சமையம் எனக்கு அவை பைபிள் தர நான் அவைக்கு திருநீறு கொடுத்து அணுப்பி விட்டேன்......

என்னைக்கேட்ட நான் சொல்லுவான் என்குள் தாய் மொழி எப்பிடி முக்கியமோ.... தாய் நாடு எப்பிடி முக்கியமோ....அப்பிடித்தான் தாய் மதமும்....... That's all

Share this post


Link to post
Share on other sites

என்னிடம் நேரடியாக பேச்சு வாங்கி இருக்கிறார்கள்.

ஆனால் என் மாமா கூடும்பத்தில் பாரிய சூராவளியை கொண்டு வந்து விட்டார்கள் சுவிஸில்.

9 வருடத்துக்கு முன் தான் மாமா தனது பொண்டாட்டி பிள்ளைகளை சுவிஸுக்குஎ டுத்தவர் அதில ஒரு பெண்பிள்ளை அல்லூயா பெடியனை விரும்பி வீட்டவிட்டு ஓடி திருமணம் செய்து விட்டாள். மகளை 4 வருசமாக சேர்க்கவும் இல்லை பேசுவதுமில்லை சரி பேரன் பிறந்த சந்தோசத்தில் மாமியை மட்டும் பாக்க அனுப்பினால் இப்ப மாமி மதம் மாறி இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டார்கள்,.

Share this post


Link to post
Share on other sites

என்னிடம் நேரடியாக பேச்சு வாங்கி இருக்கிறார்கள்.

ஆனால் என் மாமா கூடும்பத்தில் பாரிய சூராவளியை கொண்டு வந்து விட்டார்கள் சுவிஸில்.

9 வருடத்துக்கு முன் தான் மாமா தனது பொண்டாட்டி பிள்ளைகளை சுவிஸுக்குஎ டுத்தவர் அதில ஒரு பெண்பிள்ளை அல்லூயா பெடியனை விரும்பி வீட்டவிட்டு ஓடி திருமணம் செய்து விட்டாள். மகளை 4 வருசமாக சேர்க்கவும் இல்லை பேசுவதுமில்லை சரி பேரன் பிறந்த சந்தோசத்தில் மாமியை மட்டும் பாக்க அனுப்பினால் இப்ப மாமி மதம் மாறி இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டார்கள்,.

அல்லல் ஓயா

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Hahahha :D

superb டைமிங் ஜோக் நந்தன் அண்ணா :D

Share this post


Link to post
Share on other sites

நான் இங்கு வந்து இறங்கிய ஒரு,இரு வாரங்களுக்குள் மொன்றியலுக்கு ஒரு சேர்ச்சுக்கு எனது சகோதரன் கூட்டிப் போனார் அங்கே நடந்த ஒரு நிகழ்வு மற்றவர்களைச் சந்தோசப்படுத்தியது என்னை சங்கடப்படுத்தியது....காரணம் நான் வந்த புதிது...எல்லாரும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கும் போது எனக்கு கிட்டவாக ஒரு வெள்ளை இனத்து மதகுருவானவர் ஒரு சின்ன சொருபத்தைக் கொண்டு வந்து கையில் தந்துட்டு ஏதோ சொன்னார் எனக்கு ஒன்றும் புரிய இல்லை..அண்ணா சொன்னார் உம்மை அதை தொட்டுக் கொண்டு வேண்டிதல் செய்யட்டுமாம் என்றார்..அதே நேரம் அந்த வெள்ளை இன மதகுருவின் கையை என் தலை உச்சிக்கு மேல் வைச்சுக் கொண்டு ஏதோ வாய்க்குள் முணு,முணுத்தார்..அந்த தருணத்தில் எனக்கு வாயில் வந்தது அய்யோ பிள்ளையாரப்பா என்னை இந்த இடத்தில் இருந்து காப்பாத்து என்பது தான்...இலகுவில் இப்படி யாருக்கும் நடப்பதில்லை நீர் அதிர்ஸ்ட்டக்காறி என்று கூட வந்த உறவுகள் பேசிக் கொண்டார்கள்..அந்த சம்பவத்தின் பின் இன்றுவரைக்கும் வெளியில் போகும் போது ஒரு,இரு இடங்களைத் தவிர வீபூதி பூசிக் கொண்டு தான் போறனான்...சரி அதை விடுவம்.

நான் மற்றவர்களின் மதத்தைக் குறை சொல்ல இல்லை..எனக்கு அந்த வேலை தேவையும் இல்லை...அவர்,அவருக்கு அவர்கள் வணங்கும் தெய்வங்கள் தான் பெரிது..ஆனால் இன்னுமொரு மதத்தில் இருப்பவரை தங்கள் மதத்தைப் பற்றி வகுப்பு எடுத்து இழுக்க கூடாது..ஒரு மதத்தை விட்டு இன்னுமொரு மதத்தில் போய் என்ன செய்கிறீர்கள் அதைப் பற்றி முன்பு இருந்து வந்த இடத்திற்கு தானே போதனை செய்கிறீர்கள்.சுனாமி எத்தனை ஆயிரம் மக்களை அள்ளிக் கொண்டு போனது இந்த கடவுள்கள் என்ன செய்துட்டு இருந்தவர்கள்...இல்லை ஒரு புற்றுநோயால் பாதிக்கபட்ட ஒரு நோயாளியை சுகமாக்கி தேக ஆரோக்கியத்தோடு வாழ வைக்க முடிந்ததா....கடவுளுக்கு அடுத்ததாக நம்பபடுவர்கள் மருத்துவர்கள்..அந்த மருத்;துவத்தாலயே கை விடபட்ட பின்னார் தான் உங்கள் கவனம் பாதிக்கப்பட்டவர்களை நோக்கியதாக இருக்கிறது...வாழ்வில் இறுதிக் கட்டத்தில் உயிரோடு போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் தேவார,திருவாசக,வேத பாராயணங்களை பாடி இறுதிப்பயணம் அனுப்பி வைக்கும் பணியில் இருப்பவர்களும் ஊதியத்தோடு தான் செய்கிறார்கள்...

Edited by யாயினி

Share this post


Link to post
Share on other sites

உங்கள் முறைப்பாடுகள் எல்லாம் சரி, இதன் தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு உங்கள் தீர்வுதான் எவை?

வாழ்க்கையில் மோசமான பிரச்சனைகளில் உழன்று, துன்பங்கள் தாங்கமுடியாமலே பலரும் ஒரு நம்பிக்கைக்கீற்றுடன் இவ்வாறு சபைகளினுள் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றார்கள்.

சபைகள் வேண்டாம், கூடாது என்றால்.. இதற்கு ஈடிணையாக உங்களிடம் எவ்வாறான சமூக பாதுகாப்பு கட்டமைப்பு தற்போது உள்ளது? நாம் வாழ்கின்ற சமூகம் மற்றவர்களின் துன்பங்கள் பற்றி ஏதாவது அதிகம் அலட்டிக்கொள்கின்றதா? சபை ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவர்கள் தமது சமயத்தை வளர்க்கவேண்டும் என்கின்ற ரீதியில் செயற்பட்டால்கூட அவர்கள் செய்கின்ற உதவிகளை, கொடுக்கின்ற தென்பை, மனத்தைரியத்தை துவேசிக்கலாமா?

நாளை நீங்கள் புற்றுநோயினால் மடியப்போகின்றீர்கள் என்றாலும்.. வீட்டிலே வைத்தியர்களினால் கைவிடப்பட்டநிலையில் உங்கள் இறுதி நேரத்திற்காக காத்துள்ளீர்கள் என்றாலும்.. இவ்வாறான சபையில் உள்ளவர்களிடம் உதவி கேட்கும்போது அவர்கள் உங்கள் வீடுதேடிவந்து பிரார்த்தனையில் ஈடுபடுகின்றாறார்கள். நம்பிக்கைதரும்வகையில் உரையாடுகின்றார்கள். உங்களுக்கு ஒருபிடியும் இல்லை, நம்பிக்கைதரும் வகையில் ஒன்றும் இல்லை, ஆனாலும் இவர்கள் அந்த இறுதிநேரத்திலும் ஏதோ நம்பிக்கையுடன் குழுவாகவோ, தனிநபராகவோ சேர்ந்து உங்களுக்காக மன்றாடுகின்றார்கள். விஞ்ஞானரீதியாக இதற்கெல்லாம் பலன் உண்டா இல்லையா என்பதற்கு அப்பால், ஒரு மனிதனாக எத்தனைபேர் கொடியதுன்பம் வரும்போது உங்கள் அருகில் இருக்கவிரும்புவார்கள்?

சபைகளைக்குறைகூறாது பல்வேறு வகைகளில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும் ஆதரவுகொடுத்து அவர்களை அரவணைப்பீர்களாயின் அடிப்படைப்பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான சரியான பாதையாக அது அமையும்.

எனக்கு ஓர் பிரச்சனை, துன்பம் ஏற்படுமானால் எனது முதலாவது தேடல், ஆரம்பப்படி அந்தப்பிரச்சனையை தீர்ப்பது, அந்தத்துன்பத்திலிருந்து விடுபடுவதாக அமையுமேயொழிய கடவுளினைக்கண்டுபிடிப்பதற்கான தேடலாக அது அமையாது. இங்கு கடவுள், மதம் என்பதல்லாமல் சாதாரண மனிதர்களின் பிரச்சனைகளும், துன்பங்களுமே இங்கு கருப்பொருளாக பார்க்கப்படவேண்டும்.

கரும்பு, ஒரு அருமையான விடயத்தைத் தொட்டிருக்கின்றீர்கள்.

இந்து மதம், தனது பரிணாமத்தில் எதையும் இழந்து விடவில்லை!

முல்லைக் கொடிக்குத், தேரைத் தானமாக அழித்தான், பாரி!

திருநாவுக்கரசர் காலத்திலும், ஊரெங்கும் தர்மசாலைகள் நிறைந்திருந்தன!

கர்ணன் என்ற பாத்திரம், தர்மத்துக்காவே உருவாக்கப் பட்டது!

இன்றும் திருப்பதியில், பணத்தை எண்ணுவதில்லை! நிறுக்கிறார்கள்!

இதே கதை தான், நல்லூர்க் கந்தசாமி கோவிலிலும், சிதம்பரத்திலும், சிட்னி முருகன் ஆலயத்திலும்!

ஆனால், அந்தத் தருமப் பணங்களின், நிர்வாகம், தவறானவர்கள், கைகளுக்குப் போய் விட்டது என்பது தான் 'யதார்த்தம்'

இந்திய அரசும், தமிழக, கேரளா அரசுகளும், கோவில் உண்டியல்களுக்குள் கையை விடுகின்றன!

[size=3]

"வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்[/size][size=3]

குறியெதிர்ப்பை நீரது உடைத்து"[/size]

Share this post


Link to post
Share on other sites

சந்திக்கு வரும் விடயங்களை சபையில் வைத்து பேசுவதில் தவறில்லை ரதி .எனது கசின் ஒருத்தியும் எப்படியோ உந்த அலையில் அடித்துக் கொண்டு போகப்பட்டு இப்போ உந்தக் கூட்டத்துடன் தான் இருக்கின்றா இலண்டனில்.

பூ பொட்டு நகை எதுவும் போடாது மூளிக்கோலம் தான். ஆகப் பெரிய துக்கம் என்னெண்டால் தனது 18 வயது மகனுக்கு வருத்தம் வந்த போது இயேசு காப்பாத்துவார் என்று கூடியிருந்து பிரசங்கம் செய்து செய்தே ஹாஸ்பிட்டல் கூட்டிப்போகாது மகனை இயேசுவிடம் ? அனுப்பிவிட்டு விட்டாள்.

21 ஆம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட ஆட்கள்..

டிஸ்கி: அவவிற்கு 18 வயதில் மகன் இருந்தான் என்பதற்காக என்னையும் வயது வந்தவர்கள் லிஸ்டில் சேர்த்து தலையில் நரை வைத்துப் பார்க்க வேண்டாம் :D

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி மகாராஜா...அவர்களது மதத்தின் முக்கிய கோட்பாடுகளில் முக்கியமானவை உருவ வழிபாடு இல்லை,ஆடம்பரம் கூடாது,நகைகள் அணியக் கூடாது,பொழுது போக்கு,சினிமா ஒன்றும் பார்க்க கூடாது என்பது போன்ற பல இருக்குது...ஒருத்தரும் அதைக் கடைப் பிடிக்காத போது உங்கள் மச்சாள்அதைக் கடைப் பிடிப்பது ஆச்சரியமாய் உள்ளது...இந்தியாவில் உள்ள பாமர மக்கள் வைத்தியத்தை நம்பாது சாமியாரை நம்புவது போல் இவர்களிலும் உள்ளார்கள் என பல கதைகள் நான் கேள்விப் பட்டு உள்ளேன்.

பகிர்வுக்கு நன்றி ரதி அக்கா ........இனிமேல் இப்படியான சபைகளுக்கு போவிடாதிர்கள் .......மூளைச்சலவை செய்யும் கூட்டம்

பலர் இப்போ பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் .......மதம் என்ற போர்வையில் தமக்கென்றொரு வட்டம் போட்டு

வாழும் கூட்டம்..........உண்மையில் நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் அந்த மதத்தை பற்றி அறிந்தவன் என்ற வகையில் கூறுகிறேன் ..இவர்கள் காட்டும் இயேசு அதுவல்ல,இவர்கள் காட்டும் மறை அதுவல்ல இவர்கள் காட்ட நினைப்பது சாத்தானையே..........என்னால் அடித்துச்சொல்ல முடியும் ,இவக்ர்களுடன் மதம் ,பைபிள் பற்றி விவாதிக்கவும் முடியும் .....அதில் பாண்டித்தியம் ஓரளவு என்னிடம் உள்ளது ...எனக்கு தெரியாத நான் அறியாத மதத்தை பிழை அல்லது பாவிகள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை .ஆனால் இவர்கள் சொல்வார்கள் ....அதுவே ஓர் சிறிய உதாரணம் ...........ஆனாலும் எனக்கு கவலை எம் பாரம்பரிய மதமான ,எம் கலாச்சாரமதமான இந்து மதத்தில் இருந்து இதை நோக்கி போகும்போதுதான் தாங்கமுடியவில்லை .......சில காலங்களிற்கு முன் இங்கே ஓர் ஐயர் குல பெண்மணி ஜெர்மன் நாட்டிலிருந்து அந்த மதம் சார்பாக எனக்கு போதிக்க முயன்றார் ..அது என்னால் தாங்கமுடியாத வேதனையாக இருந்தது ...

அப்புறம் அவரும் ,அவரது கூட்டமும் துண்டைக்காணோம்,துணியை காணோம் என்று என்னையும் சபித்து விட்டு ஓட்டம் எடுத்தனர்...............இறைவனின் தூதர்கள் மனிதர்களை சபிப்பார்களா ,மன்னிப்பார்களா.......ஆனால் சாத்தானின் தூத்ர்கலாலேயே மனிதனை சபிக்கமுடியும்.........இதுவே எனக்கு தெரிந்த மதம் கற்று தந்த உண்மை.........நன்றி ...........இந்தக்க்ருத்தால் யாராவது மனம் புண்பட்டால் நிச்சயம் இதை நிர்வாகம் அகற்றலாம் ................உனக்கு ஒரு கை இடைஞ்சலாய் இருந்தால் அதை வெட்டி எடுத்துவிடு.........ஏசுபிரான் .நன்றி

தமிழ்சூரியன் நன்றி உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்

திரியை இனியபொழுது பகுதியில் இருந்து பேசாப்பொருள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

இந்து மதத்தை விமர்சித்து எழுத யாழில் இடம் இருப்பது போல ஏனைய மதங்களையும் விமர்சிக்கலாம். விமர்சனம்/விவாதம் ஆரோக்கியமான விதத்திலும், நாகரீகமாகவும் இருந்தால் எதையும் பற்றிக் கதைக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து,

மிக்க நன்றி நிழலி

எனக்குத்தெரிந்த ஒரு ஈழத்து அன்ரிக்கு இரண்டு பிள்ளைகள்.. இந்தியாவில் இருந்தார். கணவன் வெளிநாட்டில். பிறகு ரதியைக் கூட்டிக்கொண்டு போனமாதிரி அவவும் போனவ. அதனால் ஈர்க்கப்பட்டு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இப்போது விவாகரத்தாகி தனியே வாழ்கிறார் எனக் கேள்வி. :blink:

:( :( :(

இது அந்தக்காலத்திலிருந்தே நடக்கும் ஒன்று.

81 அல்லது 82 இருக்கும்.

எனது மைத்துணரின் கரைச்சல் தாங்கமுடியாது ஒரு நாள் போனேன். மைத்துணருக்கு பெரும் சந்தோசம். எல்லோருக்கும் கை கொடுத்து எல்லோரையும் கொஞ்சி சந்தோசமாக இருந்தேன்.

வெளியில் வந்ததும் மைத்துணர் கேட்டார் எப்படி என்று. இவ்வளவு நாளும் வராமல் விட்டது எவ்வளவு தப்பு. இனி ஒவ்வொரு கிழமையும் வருவேன் என்று சொன்னேன். அப்படியா என்றார் ஆச்சரியத்தில்.

இப்படி வடிவான காய்களை கொஞ்ச முடியுமென்று முன்பே தெரியாதே என்றேன். அடிக்க வந்தார். ஓடி விட்டேன்.

அதன் பின் என்னை அவர் கேட்பதே இல்லை. :lol::D :D

நீங்கள் பயங்கர‌ ஆள் தான் விசுகண்ணா :lol: ...நன்றி உங்கள் கருத்திற்கு

இந்தக்கூட்டம் ஒரு கெட்ட கூட்டம்.கிட்டவும் வரவிடாதீர்கள்.

நன்றி சிற்பி உங்கள் கருத்திற்கு

Share this post


Link to post
Share on other sites

இங்கு வந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்த நிலாமதி அக்கா,றமணன்,சுமேரியர்,சபேசன்,கு.சா அண்ணா,அர்ஜீன் அண்ணா,நிழலி,கிருபன்,சாஸ்திரி ஆகியோருக்கு எனது நன்றிகள்.

இந்து மதம் ஏன் யாரையும் சேர்ப்பது இல்லை என்று சொன்னால் இந்தத் திரி திசை திரும்பிவிடும்

சபேசன் கு.சா அண்ணா சொன்ன மாதிரி எழுதுங்கோ எல்லோரும்,எல்லாத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் தானே

நான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்கள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.

நான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது? அவ்வாறான ஆலோசனைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.

மதமாக, சபையாக இவற்றை அணுகாது அங்குள்ளவர்களை, அங்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.

கரும்பு உங்கள் வருகைக்கு எனது நன்றி...நாங்கள் எப்படி மற்றவனை அந்த சபைக்குப் போகாதே,இந்த சபைக்குப் போகாதே என சொல்ல முடியாதோ அதே மாதிரி அவர்களும் தங்கட சபைக்கு வரச் சொல்லி கட்டாயப் படுத்தி மதம் மாற்ற முடியாது.

பிரச்சனை இவர்கள் மற்ற மதங்கள் சரியில்லை, எம் மதம் தான் மிகச் சரியானது என்று சொல்லித்தான் மத மாற்றத்துக்கு தூண்டுகின்றவர்கள். இங்கு கனடாவில் 3 முறை எம் வீட்டுக்கு வந்து மிகவும் கடுமையாக பேசி அனுப்ப வேண்டி வந்தது. மூன்றாம் தரம், security guard இனையும் கூப்பிட்டு பேச வேண்டி வந்தது (Condo என்பதால் அனுமதி இன்றி யாரும் கட்டிடத்துக்குள் நுழைவது சட்டப்படி தவறு). இவர்களின் போதனைகளில் முக்கால்வாசி மூளைச் சலவை செய்வது தான். அதுவும் ஒருவர் அல்லது ஒரு குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அதை அறிந்து விட்டார்கள் என்றால் அவ்வளவு தான். விட மாட்டார்கள்.

எல்லா மதங்களும் ஒன்றுதான், கடவுள் எல்லாம் ஒன்றுதான், எல்லா நம்பிக்கைகளும் மனிதனை வளப்படுத்துவன தான் என்று இவர்களிடம் சொல்லிப் பாருங்கள்...இல்லை தாங்கள் தான் உண்மையானவர்கள் என்றும் தன் நம்பிக்கை மாத்திரமே மானுட விடுதலையைத் தரும் என்றும் தொடங்கி விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் செவி மடுத்துக் கேட்டால் உண்மையாகவே நாங்கள் சாத்தான்களா என்று எமக்கே சந்தேகம் வந்துவிடும் அளவுக்கு கதைப்பார்கள்.

நான் எழுத வந்ததை அப்படியே எழுதி விட்டீர்கள் நன்றி

எனக்கும் இதில் நிறைய அனுபவம் உண்டு அதைத்தான் எனது தொடரான க .கா.கா. வில் அடுத்ததாக எழுத முடிவெடுத்து பைபிளை மார்போடு அணைத்த போலின் என்று முடித்திருந்தேன் நேரம் கிடைக்கும் போது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்குள் நான் முந்திரிக் கொட்டை மாதிரி முந்திட்டனோ...உங்கள் அனுபவப் பதிர்வை எழுதுங்கள் வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

எல்லாத்தையும் விட.........இவ்வளவுகாலமும் சைவ சமயத்திலையிருந்து தங்கடை காலத்தை வீணாக்கி போட்டினமாமெல்லே......என்ரை அண்ணா சொல்லுறார்.

ஓ உங்கட‌ அண்ணாவும் மதம் மாறிட்டாரே :unsure:

மற்றவர்களை மதிக்காத தீவீர மதவாதிகளுடன் தொடர்பு வைப்பதில்லை.

பொதுவாக மதங்கள் நல்லவற்ரைத்தான் சொல்ல வருகின்றன. இடையில் இருப்பவர்கள் விளையாடி விடுகிறார்கள். இப்படியானவர்களை நிறையச் சந்தித்திருக்கிறேன். கடவுளில் நம்பிக்கையுண்டு. நல்ல மதக் கோட்பாடுகளை கைப்பிடிக்க கூடிய குணநலம் இல்லையென்பதால் ஒதுங்கி இருக்கிறேன். இருந்து போட்டு மெதடிஸ்த சேர்ச்சுக்குப் போவேன். அங்கு சொல்லும் உபதேசங்கள் மனத்தைக் குத்துவதால், அங்கு செல்வதைத் தவிர்த்து வருகிறேன். நானும் கிறிஸ்தவன் எண்டு போட்டு இந்தத் திரிக்கு பதில் சொல்ல முடியாது.

பொதுவில், பகிரங்கமாக இயங்கும் எந்த அமைப்பின் தவறுகளும் பகிரங்கமாக விமர்சிக்கப்பட வேண்டும். தொடருங்கள்.

எந்த மதமாக இருந்தாலும் மற்ற மதங்களையும் சமமாக நினைக்க வேண்டும்...ஏதோ தங்கட‌ மதம் மட்டும் தான் பெரிசு,மற்றவன் மதம் எல்லாம் சிறிது என எண்ணக் கூடாது...நன்றி தப்பிலி உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்

Share this post


Link to post
Share on other sites

எங்களுக்கில்ல, வீணா அடிபடிறதை, விட்டிப்போட்டு, இந்த ஏசுநாதரும், கிருஷ்ணரும் பிறந்த கதையளை, ஒருக்காத் திருப்பிப் படிச்சுப் பாருங்கோவன்! கன, ஒற்றுமைகள் இருக்கு!

வசுதேவர்- ஜோசெப்

தேவகி- மேரி

கம்சன்- ஏரோது மன்னன்

பிருந்தாவன்- பெத்தலேகம்

நட்சத்திரங்கள் வழி காட்டுதல் - நட்சத்திரங்கள் வழி காட்டுதல்

குழந்தைகளை மறைத்தல் -குழந்தைகளை மறைத்தல்

மூன்று முனிவர்கள்- மூன்று தேவதூதர்கள்

ஆண்குழந்தையால் அரசனுக்கு அழிவு-ஆண்குழந்தையால் அரசனுக்கு அழிவு

ஆண் குழந்தைகளைத் தேடியழித்தல்-ஆண் குழந்தைகளைத் தேடியழித்தல்

அற்புதங்கள் - அற்புதங்கள்

மீண்டும் வருவேன்- மீண்டும் வருவேன்

ஒரே நாடகம் தான்! நடிகர்களும், மேடையும் தான் வித்தியாசம்.

எல்லாமே, ஒரே உண்மையைத்தான் பேசுகின்றன! ஆனால், அதைச் சொல்லும் விதங்கள், மாறுபடுகின்றன!

இந்த உண்மையைப் புரிந்தவனுக்கு, மதம் தேவையில்லை!

புங்கை உண்மையில் நீங்கள் ஒரு மேதை தான் :)

[size=4]நான் எல்லோருடனும் உரையாடுவேன்.........[/size]

[size=1][size=4]எனக்கு தேவையான கருத்துக்களை அவர்கள் சொன்னால் அதை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?[/size][/size]

[size=1][size=4]நாட்டில் இருந்த நாள் முதலாய் (ஜெகோவாவின்) விழித்தெழு புத்தகம் வாசித்து வருகிறேன்.[/size][/size]

[size=1][size=4]ஒரு ஐரோப்பா நாட்டில் வாழ்ந்த காலத்தில் அதை ஆங்கிலத்திலும் தமிழிலும் பெற முடிந்தது ...[/size][/size]

[size=1][size=4]ஆங்கிலத்தில் இருப்பத்தை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்.[/size][/size]

[size=1][size=4]அப்படி ஒரு மொழிபெயர்ப்பை வேறு எங்கும் பார்க்கவில்லை.... தமிழ்நெட் இணையத்தளம் கிட்டத்தட்ட அப்படி இருந்திருக்கும் என சொல்லலாம்.[/size][/size]

[size=1][size=4]நான் ஆங்கிலம் பயில மிகவும் அது உதவியாக இருந்தது.[/size][/size]

[size=1][size=4]அவர்கள் காவற்கோபுரம் என்றும் ஒரு புத்தகம் தருவார்கள் அது முழுதாய் அவர்களுடைய மதம் பற்றி இருக்கும் அந்தவயதில் எமக்கு எதுவும் விளங்காது. ( கழுத்துக்குள் நோ என்றால் வயிரவருக்கு வடை மாலை இரண்டாம் நாள் எல்லாம் சுகம் அதற்குள் எமது உலகம் இருந்தது) அதனால் அதை அப்போதிருந்தே வாசிப்பதில்லை இப்போதும் அதே தாக்கமோ என்னமோ அதை வாசிப்பதில்லை.[/size][/size]

[size=1][size=4]எனக்கு தெரிந்த உறவினர்கள் சிலரும் மேலே இருக்கும் சில கருத்துக்களைபோல்தான் அவர்களை திட்டுவார்கள். உங்களுடைய மதத்தில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தால்? [/size][/size]

[size=1][size=4]எப்படி அவர்களால் உங்களை மதம் மாற்ற முடியும்?[/size][/size]

[size=1][size=4]ஏன் அவர்களுடைய மதம் என்ன சொல்கிறது என்பதை கேட்க அஞ்சுகிறீர்கள்?[/size][/size]

[size=1][size=4]உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன? என்று அவர்களை பார்த்து கேட்க தோன்றும் உறவினர்களை காண்பதே அரிது அதற்குள் ஏன் முன்றாம் தர பிரச்சனை என்று விட்டு எதுவும் பேசுவதில்லை.[/size][/size]

எனக்கு என்ட மதத்தில் நம்பிக்கை இருக்கிறது...அவர்களுடைய மதம் என்னத்தை வித்தியாசமாக சொல்லப் போகிறது? எல்லா மதமும் அன்பைத் தானே போதிக்கிறது...கிறிஸ்தவர்களுடைய வேத நூல் பைபிள் தானே அந்த பைபிள் சொல்வதைத் தானே அனைத்து கிறிஸ்தவர்களும் கடைப் பிடிக்க வேண்டும் பிறகு எதற்கு அதில் பல சபைகள்?...அதை விட‌ எல்லாளன் சொன்ன மாதிரி நேர‌மும் வேஸ்ட்

................................................................................................................................

நன்றி தமிழ்சிறி,ஈசன்,சகாறா அக்கா,குட்டி உங்கள் வருகைக்கும்,அனுபவப் பதிர்வுக்கும்...எனக்கு என்னவோ ஆட்கள் குறைவாக இருக்கும் நேரம் அல்லது ஆட்கள் இல்லாத நேரம் கோயிலுக்குப் போய் இருந்தால் மனம் ஏதோ அமைதியடைந்தால் போல் இருக்கிறது.

.........................................................................................................................................................

[size=5]கடவுளை தேடி செல்லவேண்டிய அளவிற்கு மனவருத்தம் இருந்தும்.....[/size]

[size=5]உரிய நேரத்தில் ஒரு ஆறுதல் வார்த்தையை கூட கூறாமல் விட்டு விட்டோமே [/size]

[size=5]என்ற குற்ற உணர்வுடன்......[/size]

[size=5]............................................................... மருதங்கேணி [/size]

குற்ற உணர்வு எதுவும் தேவையில்லை ...மிக்க நன்றி மருதங்கேணி

பணக்கார இயக்கம்.

ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரை வாடி இருக்குமாம் கொக்கு என்பது போல் இருந்து

யார்யாருக்கு எங்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்பதை துல்லியமாக தெரிந்து அடிப்பார்கள்.

இதென்டால் மிகப் பெரிய உண்மை...நன்றி உங்கள் கருத்திற்கு ஈழப்பிரியன்

Share this post


Link to post
Share on other sites

[size=5]மிகவும் ஆழமான பார்வை முக்கியமானதும் கூட...........[/size]

[size=1][size=5]இவர்கள் மிகவும் கொளுத்த பண காரர்கள். இவர்களுக்கு இவளவு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் தேடி சென்றால். சில நாடுகளின் உளவு நிறுவனங்களின் தலைமையகங்களில் போய் நிற்பீர்கள்.[/size][/size]

[size=1][size=5]பாரிய அளவில் காசை கொட்டி இதை இயக்குகிறார்கள். காரணம் எந்த சந்தேகமும் இன்றி இலகுவாக மற்றைய நாடுகளுக்குள் ஊடுருவ சிறந்த வழி இதை விட வேறொன்றும் இருக்க முடியாது. [/size][/size][size=1][size=5]தொண்டு நிறுவனங்கள் கூட இதற்கு இரண்டாம் நிலைதான்.[/size][/size]

[size=1][size=5]புலிகளை பற்றிய உண்மை நிலவரங்கள் தகவல்கள் தமிழருடைய உண்மை தகமை என்பதையெல்லாம். அமெரிக்க சி ஐ ஏ இந்த வழியாகவே பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. [/size][/size]

[size=1][size=5]இதில் எந்த பொய்யுமுமில்லை காரணம் கதைகளை சொல்லுபவர் ஜேசுவை நாளையோ மறுநாளோ காண ஏங்கி கொண்டிருக்கும் இதயம். கேட்பவர் பாஸ்டர் அவர்மேல் சந்தேகம் கொள்ள எந்த தடயமும் இல்லை. தேவையான தகவலை திரட்டிக்கொண்டு ஆசீர்வாதம் கொடுத்து விட்டு பாஸ்டர் போய்விடுவார். அவளவு பெரிய பாஸ்டரை நேரில் பார்த்த பூரிப்பில் இவர்கள் ஜேசுவுக்கு ஆனந்த பூசை செய்துவிட்டு படுத்திடுவார்கள்.[/size][/size]

[size=1][size=5]ஜேசு தான் வாழவே வழியில்லாமல் காட்டி கொடுப்பில் மாட்டுபட்டு உயிர் துறந்தார். உயிர் துறக்கும் வரை கொண்ட கொள்கையில் சிறிது தளர்ச்சியும் இன்றி நின்றார். சிலுவையை சுமந்து தனது கொள்ளகைக்காகவே உயிர் துறந்தார். அவர் இறுதிவரை அடுத்தவர்களுக்கு சொன்னது அனைவர் இடத்திலும் அன்பாய் இருங்கள் என்பது. நேற்று ஜேசுவையையும் பைபிளையும் கண்டதுகளுக்கு ஜேசு என்ன சொன்னார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்களை சாத்தான் என்கிறார்கள். [/size][/size]

[size=1][size=5]சாத்தானே செய்ய தயங்கும் மக்கள் கொலைகளுக்கு மறைமுகமாக சாத்தானின் பிள்ளைகளாக இருப்பதை இவர்கள் எப்போது உணர்வார்களோ .................. கடவுள் இருந்தால் அவருக்கே வெளிச்சம்.[/size][/size]

போர் நடைபெற்றபோது 300 தொண்டு அமைப்பு உளவாளிகள் தகவல் சேகரித்துள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites

இங்கு ஆஸ்திரேலியாவில்  உள்ளவர்கள்  வற்புறுத்துவது இல்லை. ஒருதடவை  மூன்று பேர்  வந்தார்கள். மனைவி அவர்கள் வருவதைக் கண்டு ஓடி ஒழித்துக்  கொண்டாள் . நான்  தான்  மாட்டிக்கொண்டேன் . கடவுள் நம்பிக்கை இருகிறதா என்றார்கள் ? இல்லை என்றேன். ஏன்  என்றார்கள்? குழந்தைகள் பெண்கள் அப்பாவிகள் கொல்லபடுகிறார்கள் எனது நாட்டில் என்று   அவர்களை மெதுவாக எனது பக்கத்துக்கு இழுத்து வந்து ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை சொல்ல ஆரம்பித்தேன். தானாகவே விடைபெற்று சென்றுவிட்டார்கள். மறைந்தி ருந்து கேட்டுகொண்டிருந்தமனைவி  என்னை பாராட்ட தவறவில்லை.

Share this post


Link to post
Share on other sites

இலண்டனில் தமிழர் ஒருவர் காதல் திருமணத்தினால் மதம் மாறினார். அவர் மாறிய மதத்தில் தலையிடி , காய்சல் வந்தால் மருந்துகள் எடுப்பதில்லை. அந்த மதத்தின்கடவுளைத்தான் கும்பிடுவார்கள்.   சில வருடங்களுக்கு முன்பு  அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. நெஞ்சுவலி தாங்கமுடியாமல் வைத்தியரைப் பார்க்க மருத்துவநிலையத்துக்கு செல்ல விரும்பினார். ஆனால் அவருடைய துணைவியும், துணைவியின் குடும்பத்தாரும் ஆண்டவரைக்கும்பிடுங்கள்.  மருத்துவநிலையத்துக்கு செல்ல வேண்டாம் என்றார்கள்.  அவர்கள் இவரை மருத்துவநிலையத்துக்கு செல்வதினைத் தடுத்தார்கள்.  இவர் வலி தாங்காமல் காவல்நிலையத்துக்கு  தொலைபேசியில் முறைப்பாடு செய்தார்.  காவல்துறையின் உதவியுடன் மருத்துவநிலையத்துக்கு சென்று , இப்பொழுது சுகவாழ்வு வாழ்கிறார். தற்பொழுது விவாகரத்தும் செய்து , முன்பு இருந்த மதத்துக்கு திரும்பி வந்துவிட்டார்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • Russia: Iran was spooked by reports of U.S. F-35s when it downed airliner Russia's acting Foreign Minister Sergei Lavrov speaks during his annual news conference in Moscow, Russia, January 17, 2020. REUTERS/Shamil Zhumatov MOSCOW (Reuters) - Russian Foreign Minister Sergei Lavrov said on Friday that Iran’s accidental shooting down of a Ukrainian airliner last week occurred at a time when Tehran was spooked by reports of advanced U.S. stealth fighters in the area. “There were at least six (U.S.) F-35 fighters in the air in the Iranian border area (at the time). This information has yet to be verified, but I’d like to underline the edginess that always accompanies such situations,” Lavrov said. Iran’s downing of Ukraine International Airlines flight 752, which killed all 176 people aboard, has created a crisis for the Islamic Republic’s clerical rulers who have faced days of protests after the Iranian military admitted it had shot down the plane accidentally. Lavrov, speaking at his annual news conference in Moscow, called the incident a human error and said he was not trying to excuse anyone for what happened.   But he said it was important to understand the context and that the incident had occurred hours after an Iranian missile attack on U.S. bases in Iraq, when Iranian forces were braced for some kind of U.S. military retaliation. “There is information that the Iranians were expecting another attack from the United States after the strike but did not know what form it might take,” said Lavrov. Reporting by Andrew Osborn; Editing by Kevin Liffey https://uk.reuters.com/article/uk-iran-crash-russia-idUKKBN1ZG1LI?utm_campaign=trueAnthem%3A+Trending+Content&utm_medium=trueAnthem&utm_source=facebook&fbclid=IwAR2dEW5f_T4FDav2DIB4jhVexEXATgKdoKybNIbrZsc8C0ken40Jig24Dzg
    • வந்து விட்டது மிக்க நன்றி ஐயா மோகன்...
    • இலங்கை இனப்பகைமையின் அத்தியாயங்கள்!   அகரமுதல்வன்அரஸ் இலங்கை இனப்பகைமை - ஈழ எழுத்தாளர் அகரமுதல்வன் இலங்கைத்தீவின் வாழ்வும் வரலாறும் மிகக் கொடிய இனப்பகைமையில் நூற்றாண்டுக் காலமாய் எரிந்துகொண்டிருக்கிறது. இந்தத் தீயின் கோரத்தில் சாம்பலாக்கப்பட்ட உயிர்கள் லட்சக்கணக் கானவை. ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்று அழைக்கப்பட்ட இலங்கைத்தீவு, இந்த இனப்பகைமையின் காரணமாக ஒரு ரத்த சமுத்திரத்தையே தனக்குள் உருவாக்கிக் கொண்டது. சிங்களப் பெரும்பான்மைவாதமும் தேரவாத பெளத்தவாதச் சிந்தனையும் இந்தத் தீவில் அந்த ரத்த சமுத்திரத்தை உருவாக்கின. எந்தவொரு நிமிடத்தின் ஏதோவொரு விநாடியிலும் தமிழர் ஒருவரின் ரத்தத்தை வாளேந்திய சிங்கம் பருகியபடியிருக்கும் பேரினவாதக் குரூரமே இலங்கை அரசியல் வரலாறு. பிரித்தானியம் பற்றவைத்த நெருப்பு! இலங்கை எப்போதும் இந்தியாவுடன் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்த பிரித்தானியர்கள், இந்தியாவுக்கான காலனிய அரசியல் கட்டமைப்புகளிலிருந்து அனைத்திலும் வேறுபட்டதையே இலங்கையில் நடைமுறைப்படுத்தினர். இவ்வாறான தொரு பின்னணியில் தமிழ்த்தலைவரான சேர்.பொன் அருணாசலம் ‘இலங்கை இந்தியாவின் ஒரு மாகாணமாக எதிர்காலத்தில் அமைவது நல்லது’ என்று கூறினார். உடனே பிரித்தானிய அரசாங்கம் விழிப்படைந்து அப்படி நேர்ந்துவிடக் கூடாது என்று தமது நகர்வுகளை கைக்கொண்டது. பிரித் தானியத் தந்திரமே வெற்றிகொண்டது.   இந்தியச் சார்பு நிலைகொண்ட ஈழத் தமிழர்களின் போக்கு, ஆங்கிலேயர் களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. தமது புவிசார் அரசியல் நலன்களுக்கு ஏற்பட்ட ஆபத்தாக அதைக்கருதி, சிங்களப் பெரும்பான்மை இனத்தை தனது நேசசக்தியாக வளர்த்தெடுத்தது பிரித்தானியம். இயல்பிலேயே இந்திய – தமிழர் வெறுப்புவாதத்தில் வேரோடி நின்றிருந்த சிங்களப் பெரும்பான்மை வாதம் அதைப் பயன்படுத்திக் கொண்டது. இதனால் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட டொனமூர் அரசியல் சீர்திருத்தம் (பிரிட்டிஷ் இலங்கையில் டொனமூர் ஆணைக்குழு மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டம்) நேரடியாக இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரானதாகவே அமைந்திருந்தது. இதைப் புரிந்துகொள்ளவல்ல தலைமைகளை அப்போது மட்டுமல்ல... இப்போதும் ஈழத்தமிழ் அரசியல் பெறவில்லை. பிரித்தானியா கொண்டுவந்த அரசியல் சீர்திருத்தத்தை தமிழ்த்தலைவர்கள் பகிஸ்கரிக்கக் கூடாது என்று சிங்களத் தலைவர்கள் வற்புறுத்தியதற்கு, அது பெரும்பான்மை இனத்துக்குச் சார்பாகவும் இந்தியர் களுக்கும் தமிழர்களுக்கும் எதிரானதாகவும் இருந்ததே காரணம். பெரும்பான்மையின் எதேச்சதிகாரம் அங்கு தோன்றியது. சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேன நாயக்க பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் கொண்டிருந்த நெருக்கமும் சார்பும் இலங்கையின் பெரும்பான்மைவாத அரசியல் வளர்ச்சிக்குப் பெரிதும் வித்திட்டது. டி.எஸ்.சேனநாயக்கவின் அரசுக்கும் பிரித்தானியாவிற்கும் இடையே நிகழ்ந்த இரண்டு ஒப்பந்தங் களும் மிக முக்கியமானவை. திருகோணமலைப் பகுதியில் கடற்படைத்தளமும் கட்டு நாயக்காவில் விமானப்படைத்தளமும் அமைப்பதன் வாயிலாக இலங்கையின்பாதுகாப்புக் கான உத்தரவாதத்தைப் பிரித்தானியா வழங்கியது. இலங்கைத்தீவில் இன்றும் அணையாத இனப்பகைமைத் தீயைப் பற்றவைத்தது பிரித்தானியாவே. அதை நெய்யூற்றி வளர்த்தனர் சிங்கள ஆட்சியாளர்கள். துரோகம் தொடங்கிய காலகட்டம்! சுதந்திரமடைந்த இலங்கையை ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்து, எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கத் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி வெற்றி கண்டது. இந்தக் காலத்தில் இலங்கையின் இனவாதப் போக்கு இன்னும் அதிகமாக வளர்ந்துநின்றது. எஸ்.ஜே.வி.செல்வ நாயகத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் முக்கியத் தலைமைக் கட்சியாகத் தன்னைப் பெருமளவில் திடப்படுத்திக்கொண்டது. 1970-க்குப் பிறகு இலங்கையின் இனரீதியான ஒடுக்குமுறையும் வன்முறைகளும் மெல்ல மெல்ல வளர்ந்து, தனது கொடுமையான கிளைகளை விரிக்கத் தொடங்கிய காலகட்டமானது.   இலங்கை இனப்பகைமை சிறிமாவோ பண்டார நாயக்கத் தலைமையிலான ஐக்கிய முன்னணிப் பதவியிலிருந்த நாள்கள் அவை. வாளேந்திய சிங்கம் ரத்தம் பருக தனது பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு இலங்கைத் தீவின் தமிழ்திசை நோக்கி ஓடிவந்தது. தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் முதலாவது குடியரசு சாசனத்தில் நிராகரிக்கப்பட்டன. அதுவே மாபெரும் ஊழிப்பிரளயத்தின் ஆதியாய் கனலத் தொடங்கியது. தமிழருக்குக் கல்வியில் பாகுபாடு, வேலையின்மை என மெதுவாக அந்தத்தீவு நிறம் மாறியது. தமிழர் என்றால் ஒதுக்கு என்ற பாரபட்சம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்க் கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், சமஸ்டிக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இணைந்து தமிழர் கூட்டணி தோன்றியது. இது புதிய உத்வேகத்தையும் தமிழருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கவல்ல துணிச்சலையும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியது. விடுமா இனவாதம்? அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள். இரண்டு தமிழர்கள் பேசினாலே காவலர்களால் தாக்கப்படுமளவிற்கு அரசின் வன்முறைக்கருவி தீவிரம் பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதியில் போலீசாரால் திட்டமிடப் பட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறையால் அப்பாவிப் பொது மக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டதே இதன் உச்சம். இலங்கை இனப்பகைமைச் சிக்கலில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை நிகழ்வாக இது அமைந்தது. அதுவரை காந்திய வழியில் போராடிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்கள் தமது அரசியல்தீர்வையும் போராட்ட வழிமுறையையும் மாற்றிக்கொள்ளும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இனப்பிரச்னைக்கான தீர்வு சமஸ்டி என்று சொல்லிக்கொண்டிருந்த தமிழ் அரசியலாளர்கள், அதன் பிறகே தீர்வு சமஸ்டி அல்ல... தனியரசு என்பதைச் சூளுரையாகப் பிரகடனப்படுத்தினர். சாத்விகப் போராட்ட முறையிலிருந்த தமிழ் அரசியல் ஆயுதத்தைத் தழுவிக் கொண்டது. தமிழீழ விடுதலைப் போராளிகள் ஆயுதம் ஏந்தி உரிமைக் காகப் போராடும் நிர்பந்தத்தைச் சிங்கள இனவாதம் ஏற்படுத்தியது.   இலங்கை இனப்பகைமை 1976-ம் ஆண்டில் தமிழீழக் கோரிக்கை எழுந்தவுடன் இலங்கையின் அரசியல் களம் தீவிர மாற்றம் கண்டது. சிறிமாவோ பண்டார நாயக்கக் காலத்திலும் அதற்கு முன்பும் நிகழ்ந்த பல்வேறு அடக்குமுறை களின் ஒட்டுமொத்தக் கொதிப்பின் காரணமாக, ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்படுபவர்களின் வன்முறை அரசியல் எரிமலையாய் வெடித்தது. அப்போது இந்தியாவை ஆண்டுவந்த இந்திரா காந்திக்கும், சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இருந்த ராஜ்ய நேசமானது தமிழர்கள்மீது நிகழ்த்தப் படும் ஒடுக்குமுறையைத் தட்டிக் கேட்பதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை. சிறிமாவோவின் வெளியுறவுக் கொள்கை தமக்குப் பாதகமில்லை என்று நினைத்த இந்திரா, இலங்கை இனப்பிரச்னையில் தலை நீட்ட விரும்பவில்லை. தொடங்கியது ஆயுத மோதல்! 1977-ம் ஆண்டில் இலங்கையின் அதிபரான ஐக்கியத் தேசியக்கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, தமிழர்களை தமது முழுவல்லமை கொண்டு அடக்க முயன்றார். தமிழீழ விடுதலைப் போராளி களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை களை முன்னிறுத்தினார். தமிழ்ப் போராளிகளுக்கும், ஜே.ஆர்.ஜெய வர்த்தனாவின் அரசப் படைகளுக்கும் ஆயுத மோதல்கள் உருவாகின. மோதல்களும் சாவுகளும் ரத்தங்களும் தமிழர் நிலத்தில் நித்தியமாயின. தமிழீழ விடுதலைக்காக தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல உருவாகியிருந்தன. ஆயுதம் தாங்கிப் போராடும் இளைஞர்கள் ராணுவத்தின் மீதும் அரச சொத்துகளின்மீதும் தாக்குதல்களை நிகழ்த்தினர். 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவ ரோந்து வாகனத்தின்மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதல், சிங்கள ஆட்சியாளர்களையும் இனவாதிகளையும் கதிகலங்கச் செய்தது. இதையடுத்து தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்புக் கலவரமான ‘ஜூலை கலவரம்’ நிகழ்ந்தது. அதுவரை இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்த கலவரங்களைப் பார்க்கிலும் பலமடங்கு பெரியளவில் அவ்வின அழித்தொழிப்பு நடவடிக்கையை சிங்கள அரசு தமிழ் மக்கள்மீது ஏவியது. தெற்கிலும் வடக்கிலும் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உடைமைகள் அழித் தொழிக்கப்பட்டன. கண்ணை மூடிக்கொண்ட உலக மானுடம்! தமிழர்களை நிர்வாணப்படுத்தி மேனியில் தீயைப் பற்றவைத்த கொடுமை யும், தமிழர்களை எரியும் டயரில் உயிருடன் தூக்கி வீசிய அக்கிரமமும் உலகின் மானுடகுலத்தை எந்த வகையிலும் ஆத்திரமூட்டவில்லை. அந்தப் படுகொலைக்கு எதிராக உலகத்தின் எந்தவொரு நீதியமைப்பு களும் கவலை தெரிவிக்கவில்லை என்பதே துயர் தோய்ந்த வரலாறு. இத்தகைய பின்னணியில் 1980-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, இனப்பிரச்னையை இந்திய அனுகூலங்களுக்காக அணுக முனைந்தார். இந்திய வெகுஜன ஊடகத் திலும் அதைப் பிரசாரப்படுத்தினார். ஒருபுறம் போராளிகளுக்குப் பயிற்சியும் ஆயுத உதவியும் செய்தார். இன்னொரு புறம் இந்தியாவிற்கு எதிர்நிலையில் இருக்கும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சார்ந்து அந்த நாட்டு அரசுடன் சமரசப் பேச்சுகளில் ஈடுபட்டார். ஆயுத இயக்கம் ஒன்று தமிழீழ அரசைப் பெறுகிற பலத்தை அடைந்துவிடாமலும், அது இந்தியாவின் சொல் கேட்கும் பிள்ளையாகவும் இருக்க வேண்டும் என்று இந்திரா விரும்பினார். இந்தத் தந்திரோபாயம் ஒரு குறிப்பிட்ட காலம்வரைக்கும் இலங்கையைக் கையாள்வதற்கு உதவியது. இந்திரா காந்தியின் காலகட்டத்தில் இந்தியாவின் நோக்கு நிலையிலிருந்து இந்தப் பிரச்னை அணுகப்பட்டிருந் தாலும், ஒருவிதமான உண்மைத்தன்மை அப்போது இருந்தது. சமஸ்டி அமைப்பு ரீதியாக தமிழர்களுக்குத் தீர்வு தரப்பட வேண்டுமென அவர் வலியுறுத்திய விடயங்கள் இதற்குச் சான்று. இலங்கையின் இனப் பிரச்னையில் இந்தியாவின் தலையீட்டை ஈழத்தமிழ் மக்கள் நேரடியாக எதிர்பார்க்கத் தொடங்கியது அப்போதிருந்துதான். இந்திரா காந்தியின் மறைவும் அதன் பிறகான இந்திய அரசியல் மாற்றமும் தலைகீழ் மாற்றத்தை இலங்கையின் இனப்பிரச்னையில் ஏற்படுத்தின. ராஜீவ் காந்தி அதிகாரத்திற்கு வந்த பிறகு அவரது கொள்கை வகுப்புகளில் நிகழ்ந்த பல்வேறு தவறுகளில் ஜி.பார்த்தசாரதி போன்றதொரு மிக முக்கியக் கொள்கை வகுப்பாளரை இலங்கைப் பிரச்னையில் இருந்து விலக்கியது முதன்மையானது. இந்தியாவின் ஸ்திரத்தன்மையை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா போன்ற சிங்கள ராஜதந்திரியிடம் விட்டுக்கொடுத்து விடுதலைப் போராளிகளை மிரட்டி அவமதிக்கும் போக்கும் அதன் பிறகே அதிகரித்தது. இறுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தந்திரோபாயத்தின் சகதியில் ராஜீவ் அரசாங்கம் சிக்கித் திணறியது. இந்தியா முன்வைக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சர்வசாதாரணமாகத் தட்டிக்கழித்தார். திம்பு பேச்சு வார்த்தையின் தோல்வி எதிரொலியால் தமிழர்கள்மீது நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் ஏராளம். பிறகு இந்திய அமைதிப்படைக் காலம் தொட்டு அது ஈழத்தில் நிகழ்த்திய படுகொலைவரைக்கும் எத்தனையோ தடவை எழுதப்பட்டவை. பகை மூட்டிய ஜெயவர்த்தனா! ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனது காலத்தில் ராஜீவ் காந்தியையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மோத விடுவதன் வாயிலாக இந்தியாவுக்கும் தமிழர்களுக்குமுள்ள நேசத்தை இல்லா தொழிக்க எண்ணினார். அதையே செய்தும் முடித்தார். அமைதிப்படை ஈழத்தில் நுழைந்த நாள்களில் பூக்கள் சொரிந்து வரவேற்ற அதே பெண்களையும் குழந்தைகளையும் பிறகான நாள்களில் கொன்றனர். மரியாதைக்குரிய இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இந்திய அமைதிப்படையின் படுகொலையைக் கண்டித்துப் பேசியவர்களுள் ஒருவர். பிறகு அதன் பின்னணியில் நடந்தவை எல்லாம் துன்பியல் சம்பவங்களே. சமாதானத்துக் கான தேவதையாக மேற்குலகத்திடம் தன்னைக் காண்பித்த சந்திரிகா குமாரதுங்க, தேர்தலில் வெற்றிபெற்று தமிழர்களை ஒடுக்கினார். தமிழர் களின் பள்ளிக்கூடங்கள், வணக்கஸ்தலங்களில் குண்டுகள் போட்டுக் கொன்றார். ‘பேச்சு வார்த்தையைப் புலிகள் விரும்பவில்லை’ என்று சொல்லிக்கொண்டே மீண்டும் மீண்டும் படை நடவடிக்கையை முழுத்தீவிரத்துடன் நடத்தினார் அவர். ஆனால், அவரால் வெற்றிபெற இயலவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் போர்த்திறனும் ராணுவ நடவடிக்கைகளும் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன. நார்வேயின் மத்தியஸ்தத்தில் கொண்டுவரப்பட்ட அமைதி ஒப்பந்தமும் அதன் பிறகு நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் வருகையும் இலங்கை இனப்பிரச்னையின் புதிய காலகட்ட வரலாறு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக தங்களை அறிவித்துக் கொண்டதற்கு அவர்களுக்கு மக்களின் ஆதரவு இருந்தமையும் ஒரு காரணம். தமிழர்கள் விரும்பும் தீர்வுத் திட்டம் குறித்து உரையாடுவதற்கும் எப்போதும் அவர்கள் தயாராகவே இருந்தனர். சர்வதேச சமூகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த தருணங்களில் எல்லாம் அவர்கள் பேச்சு மேடைக்கு விரைந்தனர். சிங்கள ராஜதந்திரிகள் தமிழர்களுக்குப் பேச்சுவார்த்தை மேடையில் தீர்வைத் தந்துவிடுவார்கள் எனத் தமிழர்கள் யாரும் நம்பியது கிடையாது. ஆனால் இந்தியா நம்பியது; ஜப்பான் நம்பியது; நார்வே நம்பியது. ஆனால், புலிகளும் நம்பவில்லை; அரசும் நம்பவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரைகளில், இலங்கை அரசாங்கம் போரைத்தான் விரும்புகிறது. அதை மறைப்பதற்கு அமைதிப் பேச்சு வார்த்தைகளைக் குழப்பியிருப்ப தாகக் கூறியதனை இங்கு எடுத்துக் காட்டாகக் கூறவேண்டும். தொடங்கியது ராஜபக்சேக்கள் காலம் மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஒரு வருடத்திற்குள்ளேயே மூர்க்கமான போரின் பொறிகள் தெரியத் தொடங்கின. அமைதியை ஓதிக்கொண்டு போர்விமானங்கள் எம் தலைகளில் குண்டுகள் சொரியும் நாள்கள் இருக்கின்றன என்பதை வன்னி நிச்சயம் செய்தது. ‘பேரழிவும் படுகொலையும் நடக்கையில் உலகம் வேடிக்கை பார்க்காது’ என நம்பிய லட்சோப லட்ச மக்களைக் குண்டுகள் கொன்றன. பயங்கரவாதிகளுக்கான யுத்தத்தில் கொல்லப்படும் பச்சிளம் குழந்தையும் பயங்கரவாதிதான் என அரசு விளக்கமளித்தது. நூறாண்டுக் காலமாக அந்தத் தீவில் உரிமைக்காகப் போராடிய ஒரு செழுமை வாய்ந்த இனம் உப்பு நீரில் தனது ரத்தக் காயங் களோடு வீழ்ந்துகொண்டேயிருந்தது. ஆர்ப்பரிக்கும் இந்து சமுத்திரக் கடலின் கரையில் அலைகளின் நுரைகளில் குஞ்சு மீன்களைப்போலக் குழந்தைகளின் பிணங்கள் மிதந்தன. பல்லாயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னே தோன்றிய தமிழ்க்குடியின் வீரயுகம் நெஞ்சுபிளந்து மூச்சு எரிந்தது. சிங்கள அரசு சர்வதேச சமூகத்தை தனது உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு இந்த இனப்படுகொலையைத் திட்டமிட்டு நிகழ்த்தியது. தமிழர்கள் இடம்பெயர்ந்து போகவும் வழியற்ற கடலின் முன்னே கதியற்று நிற்கையில் படகோட்டியும் போராடி வீழ்ந்தான். சர்வதேசமும் உலகின் நீதியும் இலங்கையின் இனப்பிரச்னையின் வரலாற்றை அறிந்திருக்குமானால் அல்லது அவர்களுக்கு அரை மனசாட்சி இருக்குமானால்கூட ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழருக்கு நீதி என்பதை முன்னிறுத்த முடியாது என்பதே எனது துணிபு. ஆயின் இலங்கையின் இனப்பிரச்னைக்கான தீர்வானது சமஸ்டி அல்ல; தமிழீழ விடுதலை மட்டுமே.   அகரமுதல்வன் சுந்தரலிங்கம் என்னும் அகரமுதல்வன் ஈழ இலக்கியவாதி, எழுத்தாளர். ‘அத்தருணத்தில் பகை வீழ்த்தி’, `டாங்கிகளில் சரியும் முல்லை நிலா’ ஆகிய கவிதை நூல்களை எழுதியவர். இனப்படுகொலைக்குப் பிறகான இலங்கையில் தனது கவிதைகளின் மூலமும் உரைகளின் மூலமும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர். https://www.vikatan.com/government-and-politics/international/eelam-writer-agara-muthalvan-about-sri-lanka-atrocities?fbclid=IwAR2il1Nlvn-zK9IjwTXIdSy8l1qChUr-jjjp40-TnmsrD7jLEgOVMPtxO7E
    • இந்த பாடல் தற்பொழுது என் காதுகளில் வரிசையாக வந்த பாடல்களில் நிலை கொண்டுள்ள பாடல்... கவிப்பேரரசு வைரமுத்து வின் மெய் வண்ணத்தில்... நொறுங்கும் உடல்கள் பிதுங்கும் உயிர்கள் அழுகும் நாடு அழுகின்ற அரசன் பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ தூதோ முன்வினை தீதோ களங்களும் அதிர களிறுகள் பிளிற சோழம் அழைத்து போவாயோ தங்கமே எம்மை தாய்மண்ணில் சேர்த்தால் புரவிகள் போலே புரண்டிருப்போம் ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை அருவிகள் போலே அழுதிருப்போம் அதுவரை அதுவரை ஓ...... தமிழர் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோலே அழாதே என்றோ ஒருநாள் விடியும் என்றே இரவைச் சுமக்கும் நாளே அழாதே நூற்றாண்டுகளின் துருவை தாங்கி உறையில் தூங்கும் வாளே அழாதே எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே அழாதே...