Jump to content

ஹுயூமன் றைற்ஸ் ......ஹுயூமன் றைறஸ்.....யார் சொல்வது றைற்....


Recommended Posts

ஹுயூமன் றைற்ஸ் வோச் என்று ஒரு அமைப்பு இருக்கின்றது. சில நாட்களின் முன்பு விடுதலைப் புலிகளைப் பற்றி சில பல புரளிகளைக் கிளப்பியிருந்தது. யார் இதன் மூல கர்த்தாக்கள் என்பது மூடு மந்திரமாக இருந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவில் சோவியத் யூனியனுக்கெதிரான பனிப்போரில் அவதூறுகளைக் கிளப்புவதற்காக முதன்முதலில் ஆரம்பித்து பின்னர் முந்நாள் கம்யூனிசநாடுகளின் அரசுகளை ஆட்டங்காண வைத்து ஸ்வாகா செய்வதற்கு பேருதவி செய்த ஒரு தனியார் அமைப்பு இன்று பரிமாண மாற்றங்களைக் கண்டு ஹியூமன் றைற்ஸ் வோச் என்ற அமைப்பாக புரளிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றது. ஐ.நா போன்ற பொது ஸ்தாபனங்களின் எந்த தொட்ர்பும் இல்லாது தனியார் ஸ்தாபனமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இது கிளப்பும் புரளிக்கெல்லாம் ஆதாரம் இருக்கின்றதோ இல்லையோ அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். ஆனாலும் இதன் தொடர் அறிக்கைகளில் பல சுவாரஸ்யமான சங்கதிகளும் வெளி வந்திருக்கின்றது. அப்படியொரு சுவையான சங்கதி அமெரிக்கா பற்றியது.

அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் என்ன கோபமோ என்னவோ அவரையும் அவர் சகா சென்னியையும் வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கின்றது. அதே நேரம் ஏப்பிரல் 20 இல் சீனத் தலைவர் ஹூ ஜின்ராஓ அமெரிக்காவிற்கு விஜயம் செய்த வேளையில் சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறலைக் கண்டிக்கும் படியும் புஷ்ஷுக்கு கடிதம் அனுப்பியது. இது எப்படியிருக்கின்றது என்றால் ஒரு துட்டனிடம் இன்னுமொரு துட்டனைப் பற்றி முறைப்பாடு செய்வதைப் போல.

இங்கு கவனிப்புக்குரியதும் நகைப்புக்குரியதும் என்னவென்றால் நீதி நியாயம் ஜனநாயகம் பற்றிக் கதைக்கும் ஒவ்வொரு நாடும் தங்களளவில் முதுகு கொள்ளா அழுக்குகளைச் சுமக்கின்றன என்பது தான். ஊருக்குத் தான் உபதேசம் உனக்கல்ல..... என்று தான் எல்லா நாடுகளும் நடந்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உத்தம வேடம் போடுகின்றன. சர்வதேச சமூகம் என்று அலங்காரக் கொண்டையுடன் திரியும் இவர்கள் கொண்டைக்குள் ஆயிரம் அழுக்கு.

எங்களைக் குற்றம் சொல்லப் புறப்பட்ட சீமான்களை மறித்து ஆயிரம் கேள்வி கேட்கலாம். அத்தனை பட்டியல் இங்கிருக்கின்றது. இந்த ஹுயூமன் றைற்ஸ் வோச்சின் அறிக்கையை வைத்துத் தான் விடுதலைப் புலிகளை கனடா தடை செய்தது என்று ஆலாய்ப் பறந்த மனிதர்கள் சிலர் நியாயம் கற்பித்துத் திரிந்தார்கள். அப்படியென்றால் இதோ இந்தியா பற்றி அமெரிக்கா பற்றி ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் பற்றியெல்லாம் கிழி கிழியென்று கிழித்து அறிக்கை விட்டிருக்கின்றார்களே. இப்போ கனடா என்ன செய்யப் போகின்றது.

விடுதலைப் புலிகளைத் தடை செய்யச் சொல்லப்பட்ட காரணங்களை விட ஆயிரம் மடங்கு நீதிக்குப் புறம்பானதும் மனித உரிமைகளை துச்சம்மெனவும் மதித்து இந்நாடுகள்

நடக்கின்றனவே.

இந்த அழகில் ஐ.நா டுகளின் மனித உரிமைக் கவுன்சிலின் ஆசியாவிற்கான 13 அங்கத்துவ நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இலங்கையும் தெரிவு செய்யப் பட்டிருக்கின்றனவே. இந்த இலட்சணத்தில் மனித உரிமைகள் எப்படி காப்பாற்றப் படப் போகின்றன. ஏன் யாரும் இது பற்றிக் கேள்வி யெழுப்பவில்லை.

அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வண்வே ரபிக்கில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை அள்ளிக் கொண்டு வந்து வழ்க்கு விசாரணை எதுவுமின்றி ஆண்டுக் கணக்கில் வைத்திருக்கின்றதே.

கனடா என்ன செய்யப் போகின்றது? அமெரிக்கா அண்ணனென்றால் பிரித்தானியா தம்பி.

அமெரிக்காவையும் இந்தியாவையும் ஜப்பானையும் தடை செய்து இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்கப் போகின்றதா?

இதோ அபூ ஹாரிப் ( Abu Gharaib ) சிறையில் நிர்வாணமாக கைதிகளை வைத்து சித்திரவதை செய்தார்களே. உலகமே அதிர்ந்து போனதே. இன்றுவரை அதிலீடுபட்டவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இது அறிக்கையில் சொல்லியிருக்கின்றதே. ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் கியூபாவின் குவான்ரனாமோ பே சிறையில் எந்த விசாரணையுமின்றி சித்திரவதையில் உயிரை விட்டுக் கொண்டிருக்கின்றார்களே. அவர்களை நீதியின் முன்பாக நிறுத்துமாறு அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றதே. இந்த ஹுயூமன் றைற்ஸ் வோச். இது மனித உரிமை மீறலாக ஸ் ரீபன் கார்ப்பரின் கொன்ஸ்ரவேற்றிவ் அரசாங்கத்திற்குத் தெரியவில்லையா?

ஈராக்கில் சர்வாதிகாரி சதாம் குஸேனின் சிறையில் இருந்தவர்களை விட அதிகம் பேர் சிறையில் இருக்கின்றார்கள் ஜனநாயகம் போதிக்கும் அமெரிக்கர் ஆட்சியில். எங்கே தப்பு நடந்தது.

அமெரிக்காவான அமெரிக்கா. ஆனானப்பட்ட அமெரிக்கா. ஐ.நாடுகள் சபையை உள்ளங்கைக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா இவற்றுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகின்றது?

இந்தியா காஸ்மீரில் இராணுவத்தைப் போட்டு அப்பாவி காஸ்மீரிகளைக் கொன்று குவித்துப்போடுவதை குஜராத்தில் அரசே வலிந்து மதக் கலவரங்களைத் தூண்டி முஸ்லீம் மக்களைத் துடிக்கத் துடிக்க நெருப்பில் போட்டுக் கொல்வதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளதே. இது வெல்லாம் மனித உரிமை மீறல்கள் இல்லையா?

இரண்டாம் மகாயுத்த காலத்தில் சீனா, கொரியா, வியற்நாம், பிலிப்பைன்ஸ் என்று எல்லா தூரகிழக்கு நாட்டு மக்களையும் கொன்று குவித்துப் பெண்களை தன் இராணுவத்தின் பசிக்குக் கூட்டிக் கொடுத்தும் இன்னும் பாவச் சுமையை முதுகில் சுமந்து கொண்டிருக்கும் ஜப்பானும் புத்தரின் போதனைகள் போல ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றார்கள

Link to comment
Share on other sites

ஹுயூமன் றைற் வோச் எவ்வளவுக்கு எவ்வளவு எமக்குப் பாதகமாகச் செயல் பட்டது/படுகின்றது என்பதை அனைவரும் அறிவர்.

அதே நேரம் எம் போராட்டத்தையும் வி.புலிகளையும் கொச்சைப் படுத்த முயலும் நாடுகளைப் பற்றிய குற்றச் சாட்டுகளைப் பகிரங்கப் படுத்துவதன் மூலம் அவர்களின் வேகத்தைத் தணிக்க முயல்வதுடன் அவர்களுக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தலாம்.

அவர்களின் ஜனநாயக காப்பாளர்கள் என்ற போலி வேஷத்தையும் கிழித்துப் போட இது உதவும்.

சர்வதேசத்துக்கான பரப்புரையில் நாம் எவ்வளவிற்கு எவ்வளவு எமது நியாயத்தை தெளிபு படுத்துகின்றோமோ அவ்வளவிற்கு அவ்வளவு எதிரிகள் எம்மைப்பற்றி வைக்கக் கூடிய குற்றச்சாட்டுகளின் நம்பகத் தன்மையையும் இவ்வாறு செய்வதன் மூலம் நாம் கேள்விக்குள்ளாக்கலாம்.

நல்ல முயற்சி. புலம் பெயர் அறிவு ஜீவிகள் கவனத்துக்கு எடுக்க வேண்டிய விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களில் சில பேர் இருக்கினம். மனித உரிமை, ஜனநாயகம், சமவுடமை என்று கதைச்சால் தங்களை பெரிய ஆட்களாக மக்கள் நினைப்பார்கள் என்ற கற்பனையில் அலைகின்றார்கள்! ஆனால் எங்களின் மக்களுக்கு தெளிவு அதிகம். அதனாலே இவர்களை நம்புவதே இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களில் சில பேர் இருக்கினம். மனித உரிமை, ஜனநாயகம், சமவுடமை

தூயவன் எழுதியது........

யாழ் களத்திலேயே ரொம்ப சனம் அப்படிதான் கதைக்குது

Link to comment
Share on other sites

தூயவன் !

மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டுமென்பதுதானே இதில் முக்கியம். மனித உரிமை, ஜனநாயகம், சமவுடமை என்று கதைப்பவர்கள் எல்லாம் என்ன வேற்றுக் கிரகத்திலிருந்தா வந்து கதைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள். இவர்களும் எம்மக்களிடையே இருந்து தானே வருகின்றார்கள்.

தமிழ்த் தேசியப் போராட்டத்தின் முகாந்திரத்தினால் பலருக்கும் உலக, வர்க்க அரசியல் பற்றி விளக்கமும் தெளிவும் ஏற்பட்டிருக்கின்றது.

இது வரவேற்கத்தக்க மாற்றம் தானே. நீங்கள் மக்கள் இப்படி இருப்பதை வரவேற்கின்றீர்களா? இல்லையா?

முன்னரை விட மக்கள் விடயத் தெளிவுடன் இருக்கின்றார்கள். இப்போது பலரும் விடய ஞானத்துடன் கதைக்கின்றார்கள். இதில் பிழையென்ன?

தமிழரைப்பற்றி ஒரு கதை சொல்லுவார்கள். பெட்டியில் போட்ட நண்டுகள் என்றும் பெட்டியை மூடத் தேவையில்லை என்றும். ஏனென்றால் யாராவது ஏறித் தப்ப முயற்சித்தால் மற்ரவர்கள் இழுத்து விழுத்தி விடுவார்கள் என்று.

இதில் நாம் யாராக இருக்கின்றோம்.

விவாதத்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

புத்தா! யால்ரா போடுவதற்குத்தானே உனது பக்த கேடிகள் இருக்கின்றார்கள்.

இதில் ஒற்றுமையாக இருக்கும் யாழ் களத்தில் உன் சிண்டு முடியும் வேலைக்கு என்ன தேவை வந்தது.

அனுபவத் தேடலுக்கும் அறிவுத் தெளிவிற்குமாக வேண்டியே பலரும் யாழ் களத்திற்கு ஓடி வருகின்றார்கள்.

பாவத்திலேயே பெரிய பாவம் என்ன தெரியுமா? தன் பக்கத்தில் இருப்பவனையே தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க மனமில்லாப் பாவியாய் இருப்பது தான்.

ஞானம் பெற்ற போது எதையோ "மிஸ்'' பண்ணி விட்டாய்.

ஆழ்ந்த தேடலுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் எல்லாளன்! நான் எம் மக்களில் குறை ஒன்றும் காணவில்லையே!! நான் சொல்லவது எல்லாம் கொழும்பில் அல்லது புலத்தில் இருந்து சிங்களபினாமிகளாக தமிழர் கொலைகளை மூடிமறைத்து ஜனநாயகம் பேசுபவர்களை எம் மக்கள் நம்புவதில்லை என்பதைத் தான்!

பொதுவாக அவர்களின் அறிக்கைகளைப் பார்த்தால் தங்களை ஜனநாயகவாதிகளாக காட்டுவதிலேயே முன் நிற்பார்கள்! டக்ளஸ் பார்த்தீர்ள் என்றால் இன்று யாழ்பாணத்தில் இத்தனை படுகொலைகளுக்கும் பொறுப்பு அவர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இலங்கை வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் ஓரத்தில் நின்று படம் எடுத்தால் தம்மை மக்கள் நம்புவார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதைத் தான் சுட்டிக் காட்டினேன்!

Link to comment
Share on other sites

தூயவன் ! டக்ளஸ் வகையறாக்களை யாரும் ஜனநாயக வாதிகளாக மட்டுமன்றி ஒரு பொருட்டாகக் கூடப் பார்ப்பதில்லை.

அவர்களுக்கும் அவர்கள் வால் பிடிகளுக்கும் தங்கள் "அரசியல் பற்றியும் அதிலுள்ள ஆபத்து பற்றியும் " நன்கு தெரிந்தே உள்ளது.

"புலியெதிர்ப்பு " என்று முழங்கிக் கொண்டு தமிழ்த் தேசியத்தின் வெற்றிக்கெதிரான நடவடிக்கைகளிலும் துரோகங்களிலும் ஈடுபடுகின்றார்கள்.

எங்களுக்குள் ஏற்படக் கூடிய கருத்து வேற்றுமைகளை எம்மினத்திற்கு பலவீனமாகவும் எதிரிக்குச் சாதகமாகவும் மாற்றும் இவர்களை மக்கள் சகித்துக் கொள்ளப் போவதில்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவர்களை மக்கள் ஒதுக்கி வைக்கவில்லை. இவர்களின் "அரசியலையே" ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து தமிழ்த் தேசியத்துடன் இணைந்து கொள்ள வேண்டும்.

நிச்சயம் இவர்களுக்கு மன்னிப்பு உண்டு. இதை விடுத்து குளறுபடி அரசியலில் தொடர்ந்தால் தண்டனையும் உண்டு என்பதை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் என்ற மாபெரும் சக்தி தான் நிலையானதும் தீர்க்கமானதும்.

ஒரு விடையைத் தேடி -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

தூயவன் ! டக்ளஸ் வகையறாக்களை யாரும் ஜனநாயக வாதிகளாக மட்டுமன்றி ஒரு பொருட்டாகக் கூடப் பார்ப்பதில்லை.

அவர்களுக்கும் அவர்கள் வால் பிடிகளுக்கும் தங்கள் "அரசியல் பற்றியும் அதிலுள்ள ஆபத்து பற்றியும் " நன்கு தெரிந்தே உள்ளது.

"புலியெதிர்ப்பு " என்று முழங்கிக் கொண்டு தமிழ்த் தேசியத்தின் வெற்றிக்கெதிரான நடவடிக்கைகளிலும் துரோகங்களிலும் ஈடுபடுகின்றார்கள்.

எங்களுக்குள் ஏற்படக் கூடிய கருத்து வேற்றுமைகளை எம்மினத்திற்கு பலவீனமாகவும் எதிரிக்குச் சாதகமாகவும் மாற்றும் இவர்களை மக்கள் சகித்துக் கொள்ளப் போவதில்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவர்களை மக்கள் ஒதுக்கி வைக்கவில்லை. இவர்களின் "அரசியலையே" ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து தமிழ்த் தேசியத்துடன் இணைந்து கொள்ள வேண்டும்.

நிச்சயம் இவர்களுக்கு மன்னிப்பு உண்டு. இதை விடுத்து குளறுபடி அரசியலில் தொடர்ந்தால் தண்டனையும் உண்டு என்பதை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் என்ற மாபெரும் சக்தி தான் நிலையானதும் தீர்க்கமானதும்.

ஒரு விடையைத் தேடி -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாள மகராஜா நான் மிஸ் பண்ணிணது உங்களை குருவாக அடையாதது தான்.....

ஆழ்ந்த வேதனையுடன் - புத்தன்(எனக்கு எப்பவுமே காப்பி அடித்து தான் பழக்கம்)

Link to comment
Share on other sites

கஞ்சா .. ஜிஞ்சா ... அடிப்பதை விட காப்பி அடிப்பது ஒன்றும் கேவலமானது அல்ல.... :):lol:

அரசமரத்தின் கீழ் மட்டுமல்ல..... அரசியல் களத்திலும் "ஞானம்" :shock: :shock: கிடைக்கும்

புத்தம்...தம்மம்(தர்மம்) ... கச்சாமி ......

ஞானத்தைத் தேடி -எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.