Jump to content

Breaking News


Recommended Posts

இந்த ஆள் ஒரு அடிமட்ட ஒன்றுக்கும் உதவாத அரசியல்வாதி என்பதை இப்போதாவது விளங்குதா?? ஏன் நேரத்திற்கு நேரம் மாறி மாறி கதைக்கிறார் என்டது அந்த அல்லாவுக்கே வெளிச்சம். அதற்காக நான் மற்றவர்களை நல்லவர்கள் என்றும் சொல்லவில்லை.

தம்பு ராசா எங்கப்பா உம்மைக் காணவேயில்லை. இங்த சுத்துமாத்த எதுக்குள்ள சேர்க்கப் போறியள். :)

அடிபடா தமிழன் நான் ஒருபோதும் ரவூப் ஹக்கீமுக்காக வக்காலத்து வாங்கவில்லை. ரவூப் ஹக்கீம் மட்டும் அல்ல பொதுவா எந்த அரசியல்வாதி மீதும் எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. உதாரணத்துக்கு ஒரு விளக்கம் சொல்லுறேன் கேளுங்கள். இன்றைக்கு புலிகளை எதிர்க்கும் ஆனந்தசங்கரி போன தேர்தலில் புலிகள் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லியே வாக்கு கேட்டு நாடாளுமன்றத்துக்கு போனவர். இதேமாதிரி நாளைக்கு சம்மந்தனோ இல்லை சுரேஷ் பிரேமசந்திரனோ செய்யமாட்டார்கள் என்று நிச்சமாயாக சொல்லமுடியாது. அரசியல்வாதியோட நோக்கம் எல்லாம் பணம், பதவி, அதிகாரம்தான் இதற்காக எதுவேண்டுமானாலும் செய்வார்கள். ஹக்கீம், சம்மந்தன், ஆறுமுகம் தொண்டைமான், சந்திரசேகரன், ஹிஸ்புல்லா எல்லோருமே ஓரே குட்டையில் ஊறிய மட்டைதான்.

நல்ல அரசியல் தலைவர்கள் வராதது நம்ம தலைவிதி. இதற்காக ஜனநாயக முறையில் வாக்களிக்காமலும் விட முடியாது. அதை கள்ள ஓட்டா மாற்றி விடுவார்கள். அதனால உள்ள் கெட்டவர்களுக்குள் யார் குறைய கெட்டவர் என்று பார்த்து வாக்களிக்க வேண்டியது தான். எப்படி அதை கண்டுபிடிப்பது? இதை பத்தி ரொம்ப அலட்டிக்காதீங்க. உங்க கருத்துன்படி யார் பரவாயில்லை என்றூ தோணுதோ அவருக்கே வாக்கை போடுங்க. அதுக்கப்புறம் கடவுளே இவர் கொஞ்சம் நன்மையும் செய்யிறமாதிரி பாத்துக்கப்பா அப்பிடின்னு வேண்டிக்கலாம். இவ்வளவு தான் நாம செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply

B.B.C  ரவூப் அரசியல் லாபத்திற்காகச் சொன்னாரோ என்னவோ தெரியவில்லை ஆனால்  முஸ்லிம் மக்கள் பாதுகாப்பு பற்றிய உண்மையை ஒப்புக்கொண்டதற்காக அவரைப் பாராட்டத் தான் வேண்டும்

ஆனால் ஜனாதிபதி முறமை பற்றிய கூற்றுத் தான் உதைக்கிறது

எல்லாம் அரசியல் லாபம் தான் ஈழவன். நமக்கு ரவூப் ஹக்கீம் என்ன நினைக்கிறார் என்பதை விட முஸ்லீம் மக்கள் என்ன நினைக்கிறார் என்பது தான் முக்கியம்.

இதற்கு முன்னால் முஸ்லீம் காங்கிரஸ் வலுவாக இருந்து பெரும்பான்மையான முஸ்லீம் மக்களோட ஆதரவையும் பெற்றிருந்தாங்க. அந்த சமயத்தில அங்க தனி அலகு கேட்டாங்க. அப்போ அது முஸ்லீம் மக்களோட குரல். அவங்க சேர்ந்து வாழ் விருப்பம் இல்லை தனி அலகு வேணுமுன்னு கேட்டா குடுக்கத்தான் வேணும் வேறு வழியில்லை. அதுதான் நியாயமும் கூட.

இப்போ பாராளுமன்றம் கலைச்சாச்சு முஸ்லீம் காங்கிரசும் பிளவு பட்டு போயிருக்கு. இடைக்கிடை புலிகளின் தலைமையை ஏத்துக்கிறோமுன்னு சில குரலும் முஸ்லீம்கள் கிட்ட இருந்து கேக்குது. இதுல எது தான் பெரும்பான்மை முஸ்லீம்களோட குரல்? அவங்களுக்கு என்னதான் தேவை? ஒரே குழப்பமா இல்லையா? என்னதான் செய்வது? எல்லாத்துக்கும் தேர்தல் முடியும் வரைக்கும் பொறுத்திருக்கவேண்டியது தான்.

இப்போ எல்லாருமே தேர்தல் களத்தில இருக்காங்க புலிகளையும் சேர்த்து தான் சொல்லுறேன். நியாயமா தேர்தல் நடந்தா தமிழ் மக்கள் என்ன நினைக்கிறாங்க முஸ்லீம் மக்கள் என்ன நினைக்கிறாங்க எல்லாமே தெரியவந்துரும். புலிகள் அவங்களோட வேட்பாளரை களத்தில நிறுத்தி பிரச்சாரமும் செய்யிறாங்க. அவங்களோட தேர்தல் அறிக்கையில முஸ்லீம்கள், ஏக பிரதிநிதித்துவம், இடைக்கால நிர்வாகம் பத்தியும் சொல்லியிருக்காங்க. இதே மாதிரி முஸ்லீம் காங்கிரசும் அவங்களோட தனிஅலகு கோரிக்கைய தேர்தல் அறிக்கையில வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். (ஏற்கனவே வைச்சுட்டாங்களா?)

இந்த தேர்தல்ல இருந்து முஸ்லீம்கள் சம்மந்தமா சில முக்கியமான கேள்விக்கு விடை கிடைச்சுரும்

1) வட கிழக்கு முஸ்லீம்கள் புலிகளோட தலைமையை ஏத்துக்கிறாங்களா?

அப்பிடி ஏத்துக்கிறதா இருந்தா முஸ்லீம்கள் புலிகளோட வேட்பாளருக்கே வாக்களிப்பாங்க. இல்லைன்னா ஹக்கீம்க்கோ இல்லை அஷ்ரப் மனைவிக்கோ வாக்களிப்பாங்க.

2) ஏத்துக்கலைனா யார் அவங்களோட பிரதிநிதி?

ஹக்கீம்அணி, ஹிஸ்புல்லா ? அஷ்ரப் மனைவி அணி?

அப்பிடி யாரையாவது அவங்க தீர்மானிச்சாங்கன்னா அவங்களோட முஸ்லீம் மக்களோட உரிமைபத்தி பேசவேண்டியதுதான். அது தனி அலகா இருந்தாலும் சரி. வேறு வழியில்லை.

என்ன சொல்றீங்க ஈழவன்?

Link to comment
Share on other sites

தேர்தலிலை வெண்டால் வருஷாவருஷம் 10 இடத்திலையாவது பொங்குதமிழ் வைப்பினம்போலை..?

முந்தியெண்டால் தேர்தல் பிரச்சாரத்திலை ஏதாவது செய்வன் அது கிடைக்கும் இது கிடைக்கும் எண்டாவது சொல்லுவாங்கள.. இப்ப பார்த்தால் நான் புலியளுக்கு ஆதரவு பொங்குதமிழ் நிகழ்சியிலை பங்குபற்றினனான்.. முந்தினவை கதிரைக்குப் பாரமா இருந்தவை எண்டுதானே சொல்லுறினம்.. கடைசி உந்த நம் மக்களுக்குள் திணிக்கப்பட்ட ****

.. .. கொண்டாடுவினமாம்.. பொங்குதமிழ்..

:) :P :D

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்குதிரையள்தானே.. மட்டையை கட்டுங்கோ..

உங்களுக்கென்ன..? வசூல்தானே முக்கியம்..? வரி கட்டுறவையளை முட்டாளாக்கி வசூலிப்பதுதானே முக்கியம்..

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

சூட்டு சம்பவம் நடந்த பகுதியானது சிறீலங்கா இராணுவ முகாம்களும் காவல் நிலையமும் அமைந்த உயர்பாதுகாப்பு வலயப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.  

நன்றி புதினம்.

இப்பதானே சந்தரப்பம் கூட்டி கழித்து பெருக்க வேண்டியதை இப்பவே செ;தால்தான் அது அரசியலுக்கு நல்லது. ஒரு பிரபல பத்திரிகையாளர் கூட உந்த இயக்கம் தான் அவரை கொழும்பிலைவைச்சு சுட்டது ஆர் என்டு எல்லாருக்கும் தெரியும். இப்ப இவை முதலைக்கண்ணீர் வடிக்கிறதை பார்த்தால்.. 60 வாக்குகள் மட்டும் பெற்றவரை சுட்டுக்கொல்வதால் ஏதும் அரசியல் லாபம்? ஒரு வேட்பாளரே அல்லாத ஒருவரை சுட்டுக்கொல்வதால் ஏதாவது அரசியல் லாபம்? உலகஆம கூர்ந்து கவனிக்கையில் உந்த வேலையை செய்யிறதிலை ஏதாவது அரசியல் லாபம்? எங்கையே இடிக்குது!! சிலர் பகல் கனவு காணுகினம், இந்த கொலைகள் அனுதாப அலையை தீரப்பும் தமி; கூட்டுக்கு படுதோல்வி வரும் என்டு நல்லாதான் கனவு காணுகினம், பொறுத்திருந்து பாப்பம்.

சரியாகச் சொன்னீர்கள் மொகமட்.....

நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்தெ நிலைகெட்ட மனிதரை என்னி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது B.B.C

மீண்டும் ஒரு முறை நான் சொன்ன செய்தியை வாசியுங்கள்

ரவூப் தனது கட்சிக் கூட்டத்தில் தனது மக்கள் மத்தியில் மு.கா.வின் கோட்டை எனக் கருதப்படும் அம்பாரை மாவட்டத்தில் போய் புலிகள் தாம் எமது பலம் அவர்கள் தாம் எமக்குப் பாதுகாப்பு என்று சொல்வது தனி ஒருவராக ரவூப் இன் நிலைப்பாட்டையன்றி ஒட்டுமொத்த மு.கா. கட்சியின் நிலைப்பாடாகத் தான் கொள்ளவேண்டும் ஏனெனில் அதையே இவர் மட்டக்களப்பிலோ,அல்லது யாழ்ப்பாணத்திலோ சொல்லியிருந்தால் அதனை புலிகளுக்கு ஆதரவான முஸ்லிம் மக்களையோ அல்லது தமிழ் மக்களையோ திருப்திப் படுத்தக் கூறியதாகக் கொள்ளலாம்

ஆனால் இவர் கூறிய இடம் இவர்களது கோட்டை அங்கு பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் இடத்தில் ரவூப் முஸ்லிம்களின் குரலைத் தான் பிரதிபலித்திருப்பார் வெறுமனே அவர்களுக்குப் பிடிக்காத ஒரு கருத்தைச் சொல்லி தனது அரசியல் எதிர்காலத்தில் தானே மண்ணைப் போடமாட்டார் எனவே பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் விருப்பை நாடி பிடித்துப் பார்த்து தமிழர்களுடன் இணைந்து வாழும் விருப்பையே அவர் சொல்லியிருக்கலாம் இதனையே அவர் தனது தேர்தல் அறிகையிலும் வைத்திருக்கிறார்

சரி இப்போது பிரிந்து செல்லும் கோரிக்கைக்கு வருவோம்

பாரளுமன்றத்தில் மு.கா வுக்கோ,பேரியல் அஷ்ரப்பிற்கோ,அதாவுல்ல, கிடைக்கும் சொற்ப பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அம்பாறை மாவட்ட மக்கள் பிரிந்து போக விரும்புகிறார்கள் என்று சொல்லலாமே தவிர ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பிரிய விரும்புகிறார்கள் என எப்படிச் சொல்ல முடியும்

அப்படி என்று பார்த்தால் தமிழ்க் கூட்டமைப்பில் இருந்து வரப்போகும் 3 அல்லது 4 முஸ்லிம் பிரதினிதிகள் சேர்ந்திருப்போம் என்று சொல்வர் யார் சொல்வதை முஸ்லிம் சமூகத்தின் குரலாக எடுப்பது

அதனை விட பிரிந்து செல்லும் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவம் யார்

பேரியல் அஷ்ரப்? இவர் தன்னை அடகு வைத்த மக்கள் சுதந்திரக் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பாரும் சிறுபான்மை இன மக்களுக்கு சுய நிர்ணய உரிமை இருப்பதை மறுக்கிறது ஒற்றையாட்சி முறை தொடரவேன்டும் ஒன்றுபட்ட இலங்கை என்பது அவர்கள் வாதம் எனவே பேரியல் அஷ்ரப் இற்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை அமைச்சுப் பதவியைத் தவிர

இந்தப் பட்டியலில் மக்கள் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கும் மற்ற எல்லோரும் அடங்குவர்

எனவே முஸ்லிம்களின் தலைமை யார்?

இப்பவே இந்தப் பூசல் தோன்றி ஒருவர் கூட்டத்தில் மற்றவர் வேட்டுத் தீர்ப்பதில் வந்து நிற்கிறது

பேரியல் அஷ்ரப்,ரவூப்,அதாவுல்லா,மயோன் முஸ்தபா இன்னும் பலர் தமக்குத் தனித் தனி கிடைக்கக் கூடிய ஆதாயங்களை கணக்குப் பார்க்காமல் முஸ்லிம் பெரியவர்களின் சொல் கேட்டு ஒன்றாகப் போட்டியிட்டிருந்தால் வரும் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு அடுத்தபடியாக பெரும்பான்மை பெற்றிருப்பர் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இவ்விரு கூட்டமைப்புகளின் ஆதரவின்றி எந்தக் கட்சியாலும் அரசமைக்க முடியாது அன்று கேட்டிருக்கலாம் பிரிவதா சேர்வதா என்று

இன்று நன்மை கிடைக்கப் போவதென்னவோ தாங்கள் குழம்பியதும் மற்றவர்களைக் குழப்புவதும் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எது சொன்னாலும் விளங்கும் வகை சொல்வது இல்லைத் தாத்தா நீங்கள் சொல்வழி கேட்காத குதிரை மோகன் அண்ணா உங்களுக்கு மட்டை கட்டுகிறார் அதனைத் தானே சொல்லவந்தீர்கள்

பார்த்தீங்களா பேரன் புரிந்து கொண்டேன்

அதுசரி மோகன் அண்ணா உங்களிடம் ஏன் வரி வசூலிக்கிறார் ஒ அவருக்கும் களத்தில் நிறைய செலவு இருக்கும் தானே சும்மா உங்களுக்காகப் போராட முடியுமே

Link to comment
Share on other sites

நல்லது B.B.C

மீண்டும் ஒரு முறை நான் சொன்ன செய்தியை வாசியுங்கள்

ரவூப் தனது கட்சிக் கூட்டத்தில் தனது மக்கள் மத்தியில் மு.கா.வின் கோட்டை எனக் கருதப்படும் அம்பாரை மாவட்டத்தில் போய் புலிகள் தாம் எமது பலம் அவர்கள் தாம் எமக்குப் பாதுகாப்பு என்று சொல்வது தனி ஒருவராக ரவூப் இன் நிலைப்பாட்டையன்றி ஒட்டுமொத்த மு.கா. கட்சியின் நிலைப்பாடாகத் தான் கொள்ளவேண்டும் ஏனெனில் அதையே இவர் மட்டக்களப்பிலோ,அல்லது யாழ்ப்பாணத்திலோ சொல்லியிருந்தால் அதனை புலிகளுக்கு ஆதரவான முஸ்லிம் மக்களையோ அல்லது தமிழ் மக்களையோ திருப்திப் படுத்தக் கூறியதாகக் கொள்ளலாம்

ஆனால் இவர் கூறிய இடம் இவர்களது கோட்டை அங்கு பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் இடத்தில் ரவூப் முஸ்லிம்களின் குரலைத் தான் பிரதிபலித்திருப்பார்

ஈழவன், முஸ்லீம் காங்கிரசோட தேர்தல் அறிக்கை எனக்கு படிக்க கிடைக்கலை. உங்ககிட்ட இருந்தால் களத்தில் போடுங்கள்.

நீங்கள் சொன்னமாதிரி இணைந்து வாழவேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தால் அது வரவேற்கத்தக்க நல்ல விடயம் தான். ஒரு பிரைச்சனை தீர்ந்துவிடும்.

இங்கு ஒரு விசயம் தான் இடிக்குது. முன்பு முஸ்லீம் காங்கிரஸ் தனிஅலகு கேட்டபோது அது முஸ்லீம்களின் குரலாக இருந்தால் அதை குடுப்பதை தவிர வேறுவழியில்லை அதுதான் நியாமும் கூட என்று சொன்னேன். அப்போது அது முஸ்லீம்களின் குரல் இல்லை என்று சொன்னீர்கள். இப்போது அதே முஸ்லீம் காங்கிரஸ் சேர்ந்து வாழவேண்டும் என்று சொல்வதாகவும் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் குரலைத் தான் பிரதிபலித்திருப்பார் என்றும் சொல்கிறீர்கள். நமக்கு சார்பான ஒரு கருத்தை சொல்லும்போது அது முஸ்லீம்களின் குரல் இல்லையானால் அது தனிப்பட்ட குரல்? :)

தற்போது முஸ்லீகளின் அரசியல் தலைமைகள் பிரிந்து நிற்பது வருத்தமான விசயம் தான். அது முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல தமிழர்களுக்கும் நல்லதல்ல. நமக்கு யார் முஸ்லீம்களின் பிரதிநிதி எது முஸ்லீம்களின் கோரிக்கை என்று தெரியாமல் போய்விடும். அதனால் ஒரு தெளிவான தீர்ப்பை முஸ்லீம்கள் தந்தால் நல்லது. அது ரவூப் ஹக்கீமோ பேரியல் அஷ்ரபோ யாரா இருந்தாலும் சரி. எதற்கும் தேர்தல் முடிவுகள் வரட்டும்.

இன்னொரு விடயம் அவர்கள் தனி அலகு கேட்டது கிழக்கிலே தான். மற்றய இடங்களில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து அந்தந்த இடங்களிலேயே இருப்பார்கள். இது புலிகளின் சுயாட்சி கோரிக்கை போலத்தான். சுயாட்சி கொடுத்தவுடன் மற்ற இடங்களில் உள்ள தமிழர்கள் உடனே வட கிழக்கு போக போகிறார்களா இல்லையே. அதே போலதான் இதுவும்.

Link to comment
Share on other sites

உள்ளுராட்சித் தேர்தலை நடத்த முடியாத பகுதிகளில் பொதுத்தேர்தல்: தமிழர்கள் கோரிக்கை குறித்து ஜே.வி.பி.க்கு சந்தேகமாம்!

வடக்கு கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடத்த முடியாத பகுதிகளில் பொதுத் தேர்தலை நடாத்துமாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும், ஏனைய அமைப்புக்களும் விடுத்த அறிக்கை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் நடத்தப்பட வேண்டிய உள்ளுராட்சி தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் மூலம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அந்த பிரதேசங்களில் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான ஐனநாயகமும், சுதந்திரமும் இல்லையென்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நிலைமை குறித்து அவசரமாக மாற்றம் ஏற்பட்டுள்ளமை தாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லையென்று மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான நிபந்தனைகளையும் வழங்காது ஆயுதம் தாங்கிய குழுவினரின் அதிகாரத்தின் கீழான பகுதிகளில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாமென்று மக்கள் விடுதலை முன்னணி தேர்தல்கள் ஆணையாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

நன்றி - புதினம்

குறிப்பு - அனைத்து மக்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் இது தான் எனது கருத்து.

ஜே.வி.பியின் கேள்வியை பற்றி உங்கள் கருத்துகளை அறிவதற்காக இங்கே போட்டுள்ளேன்,

Link to comment
Share on other sites

Powerful rebel general in Sri Lanka splits from the main Tamil Tiger army, a senior guerrilla says

Associated Press, Wed March 3, 2004 11:04 EST . SHIMALI SENANAYAKE - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) A general commanding thousands of rebels in Sri Lanka - has split from the main Tamil Tiger army because of disputes over the deployment of fighters, a senior rebel said Wednesday. It also comes a month before Sri Lanka - holds nationwide parliamentary elections.

There was no immediate reaction from Prabhakaran's group, which is based in the country's north.

The split is likely to hamper the efforts of Norwegian negotiators who having been working for two years to secure a peace deal between the rebels and the government.

There was no immediate comment from the government, but top aides to Prime Minister Ranil Wickremesinghe were expected to meet later Wednesday to discuss the issue.

Sri Lankan army officials, speaking on condition of anonymity, said more than a dozen rebels had traveled from the east to north Wednesday in possible desertions from Karuna's group.

The official said another reason for the split was that Karuna was angered over a spate of unspecified assassinations and attacks in his area in the lead-up to the April 2 elections. He said the violence had been ordered by rebel commanders in the north without Karuna's knowledge.

Two Tamil politicians were killed this week in the area. The politicians had been members of parties controlled by Sri Lanka - 's majority Sinhalese.

The split is likely to complicate the elections. The rebels' northern leadership has appointed supporters to vie under a mainstream Tamil political party the Tamil National Alliance. It was not clear whether Karuna would support the party.

Link to comment
Share on other sites

Rift in LTTE?

By V.S. Sambandan

COLOMBO, March 3. A serious rift is reportedly brewing in the Liberation Tigers of Tamil Eelam (LTTE) over the recent killing of non-LTTE political activists in the eastern Batticaloa district.

According to sources in eastern Sri Lanka, the difference of opinion erupted today between the LTTE's political wing leader, S. P. Tamilchelvan, and the rebels eastern special military commander, V. Muralitharan (a.k.a. `Col. Karuna) over the killings, in which the LTTE's hand is suspected.

நன்றி - The Hindu

Link to comment
Share on other sites

புலிகள் இயக்கத்தில் பிரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கேணல் கருணாவுக்கு தலைமைத்துவத்துடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்தாகவும் சில செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. புலிகளின் கருத்து இதுவரை வெளியிடப்படவில்லை.

Link to comment
Share on other sites

இப்படியான திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களைத் தாங்கள் கடந்த காலத்தில் அறியவில்லையோ....கரிகாலனை மாற்றிய போதும் இப்படித்தான் பிளவு வந்தது...அன்ரன் பாலசிங்கம் நோய் வாய்ப்பட்டிருந்த போதும் இப்படித்தான் பிளவு வந்தது...இவை தேர்தல் சமயத்தில் மக்களைக் குழப்ப செய்யப்படும் சர்வதேச மற்றும் உள்ளூர் சக்திகளின் சதிச் செயல்.....!

மக்களே விழிப்பாய் இருந்து தெளிவான தீர்ப்பை வழங்கி அனைத்துச் சதிகளையும் முறியடியுங்கள்...80களின் பிற்பகுதியிலும் 90 களின் முற்பகுதியிலும் இந்திய இராணுவம் செய்த பொய்ப்பிரச்சாரத்தின் தொடர்சிகள் தான் இவை....! ஆனால் இப்போ பிரச்சார மையங்கள் தான் மாறியுள்ளன...!

சமாதான காலங்களில் எதிரிகளுக்கு நெருக்கடியான கட்டங்களில் இப்படியான பொய்ப்பிரச்சாரங்களை புலிகள் மீது கட்டவிழ்த்து விடுவது தமிழர்கள் நாம் கண்ட வரலாறாச்சே....!

:twisted: :P :idea: :!:

Link to comment
Share on other sites

அந்த செய்தி பொய்யாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான் குருவி. இதை பற்றி புலிகள் தங்களுடைய தரப்பு செய்தியை உடனடியாக வெளியிடால் நல்லது. அதனால் மக்களை குழப்பமடையாமல் தவிர்க்கலாம்.

Link to comment
Share on other sites

No regional split - LTTE

A spokesman for Col. Karuna, senior commander of the Liberation Tigers told TamilNet Wednesday night there was no split in the LTTE. ''We will be functioning directly under the command of our leader'', he said referring to reports that there was a major split in the LTTE.

He said that command for Batticaloa-Amparai would take orders directly from the LTTE leader in future. ''We will work in the best interests of our people in this region'', he said.

நன்றி - தமிழ் நெட்

Link to comment
Share on other sites

No regional split - LTTE

A spokesman for Col. Karuna, senior commander of the Liberation Tigers told TamilNet Wednesday night there was no split in the LTTE. ''We will be functioning directly under the command of our leader'', he said referring to reports that there was a major split in the LTTE.

He said that command for Batticaloa-Amparai would take orders directly from the LTTE leader in future. ''We will work in the best interests of our people in this region'', he said.

நன்றி - தமிழ் நெட்

இயக்கம் பிளவுபடவில்லை - புலிகள்

புலிகள் இயக்கம் பிளவுபட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இது பற்றி கருத்து தெரிவித்த கேணல் கருணாவின் பேச்சாளர் வடக்கு, கிழக்கு என்று பிரதேசவாரியான பிளவு ஏதும் ஏற்படவில்லை என்றும் எதிர்காலத்தில் மட்டக்கிளப்பு-அம்பாறை மாவட்ட புலிகள் அணிகள் நேரடியாக தலைவரினால் வழிநடத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

புலிகளின் மட்டக்கிளப்பு-அம்பாறை மாவட்ட தளபதி கேணல் கருணா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நெட்டில் வந்த செய்தியை சுருக்கமாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். - BBC

Link to comment
Share on other sites

தவறான தகவல்கள் யாழ் களத்தை தொட்டுச்செல்கின்றமை கவலை தருகின்றது. :oops:

Link to comment
Share on other sites

தவறான தகவல்கள் யாழ் களத்தை தொட்டுச்செல்கின்றமை கவலை தருகின்றது. :oops:

அசோசியேட் பிரஸ் வெளியிட்ட தகவலையே போட்டிருந்தேன். அதற்கு புலிகள் வெளியிட்ட மறுப்பையும் போட்டுள்ளேன். இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

'Tamil Tiger splits spark crisis'

By Frances Harrison

BBC correspondent in Colombo

Norwegian diplomats say the Sri Lankan prime minister has had an emergency meeting to discuss reports of a rift between Tamil Tiger rebels. Peace envoy Erik Solheim said there was a crisis but refused to elaborate.

Speaking from Oslo, Mr Solheim acknowledged there was what he called a new situation in eastern Sri Lanka but he would not say anything more. The Norwegian ambassador and the head of the ceasefire monitoring group held a late night meeting with the PM.

Why now?

The talks were to discuss reports of disagreements between a senior rebel military leader in the east of the island and the Tamil Tiger leader, Velupillai Prabhakaran. Unofficially the Tigers in the east are saying their regional commander, Karuna, refused to send 1,000 rebels to the north of the island as requested by the Tiger chief.

There are grievances about the fact that the majority of the Tiger fighting cadres come from eastern Sri Lanka and yet the leadership is dominated by Tamils from the north. But these are long-standing issues and it is not clear why they should erupt just now as the Tigers are indirectly involved in campaigning for elections next month.

Also it is hard to image that Karuna, who is involved in peace talks with the Sri Lankan government, would defy Mr Prabhakaran, especially as he is known to be close to him. Such defiance would plunge the rebel movement into its worst crisis for a decade and put Karuna's life in grave danger.

Link to comment
Share on other sites

அசோசியேட் பிரஸ் வெளியிட்ட தகவலையே போட்டிருந்தேன். அதற்கு புலிகள் வெளியிட்ட மறுப்பையும் போட்டுள்ளேன். இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

யாழ் களமாடிகள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்....முக்கியமாக சிவாஜினி..........

செய்திகள் செய்திகள்தான்.......... அதனை எப்படி மதிப்பிடுவது என்பதில்தான் நீங்களும் பிபிசி யும் நானும் மூன்று கோணங்களுக்கு போய்விடுகிறோம். இது தற்செயல் அல்ல...

தவிர்கமுடியாததும் கூட.......................

Link to comment
Share on other sites

B B C யால் யாழ் களத்தில் செய்தி திரிவு படுத்தப்பட்டுள்ளது வேதனை தருகிறது.

Sri Lankan rebels 'deny split'

By Frances Harrison

BBC correspondent in Colombo

Any split could complicate forthcoming elections

A pro-rebel website in Sri Lanka has run a story denying there is any major split in the Tamil Tiger rebel group.

A spokesman quoted the senior rebel commander in the east, Colonel Karuna, as saying he would take orders in the future directly from the Tiger leader.

There had been reports of a rift between Colonel Karuna and the Tiger chief in northern Sri Lanka.

The news comes as Norwegian mediators and the Sri Lankan prime minister held emergency talks about the reports.

Legitimacy hope

It is not clear why Colonel Karuna has not spoken himself to deny reports of an internal rebellion, though his life would be in danger if he had really mounted a challenge to the Tiger leader, Vellupillai Prabakharan.

Rebels loyal to Colonel Karuna spoke privately about a request from the Tiger leader for 1,000 rebels to be sent from the east of the island to the north.

They said this order had not been obeyed by Colonel Karuna and suggested this was because of unhappiness about the fighting force predominately coming from the east of the island while the rebel movement was run by northerners.

But it is not known why this long-standing grievance should erupt now, just as campaigning is underway for general elections.

The Tigers are not directly contesting, but they are backing a group of Tamil parties - who are their proxies - in the hope the vote will give them political legitimacy.

Norwegian peace envoy Erik Solheim said there was a new situation in the east that had triggered a crisis meeting involving the Sri Lankan prime minister and international ceasefire monitors.

But Mr Solheim would not give details and it is still not really clear whether there is a major crisis within the rebel movement or not.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/3530887.stm

Link to comment
Share on other sites

B B C யால் யாழ் களத்தில் செய்தி திரிவு படுத்தப்பட்டுள்ளது வேதனை தருகிறது.

சிவாஜினி, எதை வைத்து செய்தி திரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று சொல்றீங்க? விளக்கம் சொன்னால் நல்லாயிருக்கும். ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் பிடித்ததோ பிடிக்காததோ செய்தி செய்திதான்.

Link to comment
Share on other sites

AP News under fire as the rebels deny the split

The Associated Press (AP) in its latest update from Sri Lanka said, "A general commanding thousands of rebels in Sri Lanka - has split from the main Tamil Tiger army because of disputes over the deployment of fighters, a senior rebel said Wednesday".

The Sinhala author of the story cited a senior rebel from the east as the source for the story. When TNS contacted the sources close to the Tamil Tiger eastern leadership about the story, they vehemently denied any split in the Tiger ranks and also disputed the claim that the AP writer talked to a senior rebel.

The India daily "Hindu" too reported early in the day that a split in the LTTE Ranks but quickly retracted its story and said there is no differences within the LTTE, quoting a Tamil Tiger eastern official.

Media circles in the capital Colombo wonder where this story originated from, why now and what the motive behind it is? Reports of a Tiger split has been around for the last 20 years of civil conflict, and is not something new in the Island nation, says political observers. Each time it has turned out to be another story than a real split, they further say.

நன்றி - TNS http://www.tamileelamnews.com/news/publish.../tns_2017.shtml

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் அமைப்பில் எந்த அதிகாரப் போட்டியும் இல்லை

கேணல் கருணாவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் இடையில் கருத்து வேற்றுமை எழுந்துள்ளதாக வெளியான வதந்தியில் எந்த உண்மையுமில்லை என்பதை, கேணல் கருணாவின் பகுதிப் பேச்சாளரான உயர்பதவியிலுள்ள விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு-அம்பாறை விடுதலைப் புலிகள் அமைப்பு, நேரடியாக விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கட்டுப்பாட்டின் கீழேயே தொடர்ந்தும் இயங்குகிறதென்றும், மக்களின் இன்னல்கள் நீங்க உழைப்பதே தங்களது பிரதான நோக்கமாகத் தொடர்ந்தும் விளங்கும் என்றும் மேலும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.

இத்தகவலை தமிழ்நெற் இணையத்தளமும் ஊர்ஐpதம் செய்துள்ளது.

நன்றி - புதினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.