Jump to content

அனைவருக்கும் எனது முதல் வணக்கம்.


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் என் வணக்கங்கள்,

நான் மதன் பல நாட்களுக்கு முன் இங்கே இணைந்திருந்தும்,

இன்று தான் அறிமுகம் செய்ய முடிகிறது.

இனிவரும் காலங்களில் உங்களில் ஒருவனாய் இணைந்திருக்கும் ஆர்வம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மதன்

வாருங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மதன் வாங்க

வரவேற்க்கின்றோம்....!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே மதன் என்ற பெயரில் ஒருவர் உள்ளதினால் குளப்பம் ஏற்படவாய்ப்புள்ளது. பெயரினை மாற்றுங்கள்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பகுதி 2 கேள்வி : அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சில ஆயுதங்களைக் கையளித்தது. எதிர்காலத்தில் உங்கள் கட்சி ஆயுதங்களைத் தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தினை வழங்குவீர்கள்? பிள்ளையான் : உங்களுக்கு எமது சரித்திரம் நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன். புலிப் பயங்கரவாதத்தினால் எமது மாகாணம் ஆயுத மயப்படுத்தப்பட்டுவிட்டது. பல இளைஞர்கள் தமது படிப்பறிவைக் கைவிட்டு விட்டார்கள்.  தமிழர்கள் ஆயுதக் கலாசாரத்தை வெறுக்கிறார்கள். கடந்த இரு தசாப்த்தங்களாக எமது மக்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து விட்டார்கள். முன்னர் முழுக் கிழக்கு மாகாணமுமே ஆயுதக் கலாசாரத்தில் மிதந்தது. ஆனால், இன்று அப்படியில்லை, மக்கள் ஆயுதக் கலாசாரத்தை வெறுத்துவிட்டார்கள். அதனால், எவருமே தற்போது இங்கே ஆயுதங்களைக் கொண்டுசெல்வதில்லை, ஆகவேதான் நாமும் ஆயுதங்களை ஒப்படைத்துவருகிறோம். எமது கட்சி தற்போது ஆயுதங்களை முற்றாகக் கைவிட்டு விட்டது. கேள்வி : நீங்களும் உங்கள் கட்சியும் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டதாகக் கூறினாலும், உங்கள் கட்சியைச் சேர்ந்த ஆயுததாரிகள் திருகோணமலையில் 6 வயதுச் சிறுமியொருவரைக் கப்பப் பணத்திற்காக கடத்திச் சென்று படுகொலை செய்திருக்கிறீர்களே? அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?  பிள்ளையான் : நான் கடுமையாக இந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறேன். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இந்தப் படுகொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று நான் உறுதியாகக் கூறுகிறேன். படுகொலையில் ஈடுபட்டவர் எனது கட்சியைச் சேர்ந்தவர் அல்ல, தேர்தல் காலத்தில் மட்டும் எம்முடன் சேர்ந்து செயற்படுவார். நான் பொலீஸாரிடமும், பொதுமக்களிடமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் என்று சொல்லிக்கொண்டு வருவோர் குறித்து அவதானமாக இருக்கும்படி கேட்டிருக்கிறேன். எமது கட்சியின் நற்பெயரைக் களங்கப்படுத்த சில சதி வேலைகளில் ஈடுபட்டுவருவது குறித்து நாம் அறிந்தே வைத்திருக்கிறோம். நாம் இந்த படுகொலையினை கண்டிக்கிறோம். இது ஒரு துரதிஷ்ட்டமான சம்பவம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்களிடையே பிரபலமாகி வருவதால் எமது பெயரைக் களங்கப்படுத்தவே இவ்வாறான படுகொலைகளுடன் எம்மைத் தொடர்புபடுத்தி பேசுவதற்கான காரணம். நாம் மக்களை அறிவுமயப்படுத்திவருகிறோம். எமது உறுப்பினர்களுக்கான விசேட அடையாள அட்டைகளை விநிதியோகித்து வருகிறோம். கேள்வி : புலிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதாக முன்னர் கூறீர்கள். புலிகளின் உறங்குநிலைப் போராளிகளின் பிரசன்னம் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் வேளையில், உங்கள் பாதுகாப்புக் குறித்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறீர்கள்? பிள்ளையான் : புலிப் பயங்கரவாதிகளின் உறங்குநிலை உறுப்பினர்களோ அல்லது அவர்கள் மூலமான பாதுகாப்புப் பிரச்சினையோ எமக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால், தலைமைத்துவமும், கட்டளையும் இன்றி அவர்களால் தாக்குதல்களை முன்னெடுக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. அவர்கள் வெற்றிகரமாகச் செயற்படுவதென்றால் அவர்களுக்கென்று சரியான தலைமை வேண்டும், ஆனால் அது தற்போது இல்லை. புலிப் பயங்கரவாதிகளின் தலைமையினை எமது ராணுவம் முற்றாக அழித்ததன் பின்னர், உறங்குநிலைப் போராளிகளின்  செயற்பாடும் அழிந்துவிடும்.  கேள்வி : இறுதியாக, தமது இறுதிநாட்களை எதிர்நோக்கியிருக்கும் பிரபாகரனுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? பிள்ளையான் : மிக விரைவில் எமது ராணுவ வீரர்கள் அவரை கைதுசெய்வார்கள் அல்லது அவர் தானாகவே தற்கொலை செய்துகொள்வார். புலிப்பயங்கரவாதிகளில்  20,000 போராளிகள் எமது வீரர்களால் கொல்லப்பட்டு விட்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்களும் பிரபாகரனின் மடமையினால் கொல்லப்பட்டு விட்டார்கள், அது அவருக்கும் நன்கு தெரியும். தமிழ் இனத்திற்குச் செய்த மிகப்பெரிய அழிவிற்காக அவர் கொல்லப்படவே வேண்டும். பிரபாகரனின் மரணம் இந்த நாட்டுத் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடிய மிகப்பெரிய ஆறுதலாக, நிம்மதியாக இருக்கும்.  மாற்றுக் கருத்தில்லை, அவர் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்பட வேண்டும் !!!   முற்றும்
  • தொல்லியல் திணைக்களம், வீதி அதிகார சபை தவிசாளர் நிரோஷிற்கு எதிராக வழக்கு    1 Views நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள வழக்குகளுமாக மத்திய அரசின் தாபனங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ் வழக்குகளுக்கான அழைப்பாணைகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நிலாவரை கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களமும் இராணுவமும் இணைந்து இரண்டு தடவைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இவ் அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டன. மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தவிசாளரே காலரணம். பலரை அழைத்து தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் முறையிட்டனர். அதனடிப்படையில், தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நளின் வீரரத்தினவுக்கும் இடையில் மல்லாகம் சிரோஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளடங்கியோர் சமரசத்திற்கு முயற்சித்தனர். தவிசாளரை நிலாவரை விடயத்தில் தலையிடக்கூடாது எனக் கூறி சுமார் மூன்று மணிநேரம் விசாரணைகளும் இடம்பெற்றன. இதற்கு தவிசாளர் உடன்படவில்லை. தவிசாளர், தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்குமுகமாக தமக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்துவதுடன் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்படவேண்டும் என விட்டுக்கொடுப்பின்றி வலியுறுத்திய நிலையில் தொடர்ந்து தவிசாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் அமைச்சர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேச சபை , பிரதேச செயலகம் போன்றவற்றிற்கு அறிவித்து மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் அனுமதி பெற்றே நிலாவரை மற்றும் உருத்திரபுரம் பகுதியில் செயற்படும் என அறிவித்திருந்தார். எனினும் தற்போதைய நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மற்றும் தமக்கு உத்தியோக பூர்வ அறிவிப்புக்களை செய்து தொல்லியல் திணைக்களம் செயற்பட கோரிய தவிசாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் அறிவிப்பிற்கும் நடைமுறைக்குமிடையில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினத்திலேயே வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் தவிசாளருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் மீள மன்றில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அனுமதியின்றி அச்செழு அம்மன் வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து பிரதேச சபையின் அனுமதியின்றி வீதி அதிகாரசபை நாட்டிய பெயர்ப்பலகையினை தவிசாளர் அகற்றிய வழக்கே மீள எடுத்துக்கொள்ளப்படுகின்றது. குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து தவிசாளரைக் கைதுசெய்வதற்கு பொலிசார் தீவீரமுயற்சி எடுத்தனர். தவிசாளர் மல்லாம் நீதிமன்றில் தோன்றி சட்டத்தரணி வி. திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் ஊடாக உள்ளூராட்சிக்குப் பகிரப்பட்ட அதிகாரத்தை தான் நடைமுறைப்படுத்தும்போது எழுந்த பிரச்சினை எனத் தெரிவித்து அரசியல் பழிவாங்கல் கைதில் இருந்து முன் பிணையில் தற்போது உள்ளார். இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்திணைக்களம் உள்ளுராட்சித் திணைக்களத்தின் சட்டவிதிகள் மீது கவனத்தினைச் செலுத்தாது தாம் பிரதேச சபையின் அனுமதிபெறவேண்டிய அவசியமில்லை என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தது. இந் நிலையில் நாளை மறுதினம் புதன் கிழமை மத்திய அரசாங்கத்தின் தாபனங்களான தொல்லியல் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற மத்திய அரசின் தாபனங்கள் உள்ளுராட்சி மன்ற அதிகாரத்தை தவிசாளர் பிரயோகித்தமைக்காக அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   https://www.ilakku.org/?p=47744  
  • அன்னை பூபதியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் எச்சரிக்கை    12 Views அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி  காவல்துறை தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்  மேலும் தெரிவிக்கையில், “எங்களது அன்னையின் நினைவு தினத்தினை நாங்கள் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக அனுஸ்டித்து வருகின்றோம். ஆனால் இன்று எங்களது குடும்பத்தினை  அவரது நினைவிடத்திற்குச்  சென்று அஞ்சலி செலுத்த வேண்டாம் எனவும் மீறினால்  கைது செய்யப்படுவீர்கள் என்றும் காத்தான்குடி  காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். எங்களது தாயின் இறப்பினை அவரை புதைத்துள்ள இடத்தில் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதானது மிகவும் கவலைக்குரியது. இது அரசியல் சார்ந்த செயற்பாடு அல்ல. அன்னை பூபதி எனது தாயார் எனது தாயாரின் இறப்பினை நாங்கள் நினைவு கூருகின்றோம். அதில் எந்தவித பயங்கரவாத செயற்பாடும் இல்லை. எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர்துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்த போராட்டத்தினையும் நடாத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்திய படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறானவரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்களும் குடும்பமுமே அவரை நினைவு கூருகின்றோம். இவ்வாறான நிலையில் எங்களை குறித்த நினைவினை செய்ய வேண்டாம் என தெரிவிப்பது கவலைக்குரியது. இன்று உலகம் எங்கும் எங்கள் தாயாருக்கு நினைவு தினம் நடாத்தப்பட்டுவரும் நிலையில், அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடாத்தமுடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது” என்றார்.   https://www.ilakku.org/?p=47681  
  • மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – அதற்கு எதிராக மாநகரசபைக்குள் ஆர்ப்பாட்டம்  13 Views ஜி.கே. அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தை மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்திலேயே தரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு சமூகப் பற்றாளர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஏழை மக்களின் இறுதிக் கட்டத்தில் இலவச சேவையனை வழங்கி வருகின்ற இவ்அமரர் ஊர்தி சேவையில் தங்களது அதிகார மோதலை வெளிப் படுத்துவதை ஆணையாளர் உடன் நிறுத்த வேண்டும் எனவும், அரசியல் பின்புலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட்டு மக்களின் சேவைக்காக இயங்கும் இவ் அமரர் ஊர்தி சேவை வாகனத்தினை மாநகர வளாகத்திலேயே தரிப்பதற்கு எவ்வித இடையூறும் வழங்காது அனுமதியளித்து மக்களுக்கான சேவைகளைத் தொடருவதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அமரர் ஊர்தியில் அரசியல் வேண்டாம், அதிகார மோதலில் மக்கள் சேவையைத் தடுக்காதே போன்ற கேசங்களை எழுப்பியவாறும், ஆணையாளரே ஊழியரை மிரட்டாதே, ஜி.கே அறக்கட்டளை மட்டக்களப்பிற்குத் தேவையான ஒரு சேவை, ஆணையாளரே ஏழை மக்களின் இலவச சேவையை முடக்காதே, ஆணையாளரே ஏழை மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல், ஆணையாளரே உமது ஆணவத்தை ஏழைமக்கள் மீது காட்டாதே, கிழக்கின் ஆளுநரே நீதியினை நிலைநாட்டு போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விடயம் தெடர்பில் மாநகர முதல்வர் உட்பட உரியவர்கள் வருகை தந்து தங்களுக்குரிய உகந்த பதிலை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கையினை முன்வைத்தனர். இது எவ்வித அரசியல் பிரச்சினையும் இல்லை. இது மக்களின் பிரச்சினை, மக்களுக்கான இலவச சேவையை முடக்குவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது, அரசிலைத் தாண்டி மக்கள் பற்றி சிந்தித்து அனைவரும் செயற்பட வேண்டும். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நன்மை பெற்ற இவ்அமரர் ஊர்தி சேவைக்கு தடையினை எற்படுத்தவதென்பது பாவப்பட்ட ஏழை மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்பாடாகும் என்று தெரிவித்தனர். இதன் போது அவ்விடம் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட உறுப்பினர்கள் சிலர் வருகை தந்து ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடினர். 2019ம் ஆண்டு ஜி.கே அறக்கட்டளையின் வேண்டுகோளுகிணங்க மாநகரசபை அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 38 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இவ்அமரர் ஊர்தி மாநகர வளாகத்தில் தரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இரண்டரை வருடங்களுக்கு மேல் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இயங்கி வந்த சேவை தற்போது புதிய ஆணையாளர் வருகை தந்ததன் பின்னர் இவ்வாகனம் வெளியில் போடப்பட்டது. பின்னர் இன்னுமொரு சபைத் தீர்மாதனத்தைக் கொண்டு வந்து வாகனம் மீண்டும் தரிப்பிடத்தில் கொண்டு செல்லப்பட்ட வேளை அவ்வானத்தைச் சேதப்படுத்தி, வாகனத்தைச் சூழ கற்களைக் குவித்து, ஜி.கே. அறக்கட்டளை இலவச அமரர் ஊர்தி என வாகனத்தில் பதிக்கப்பட்டிருந்த பெயரையும் வெள்ளைப் பூச்சினால் அழித்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் உரியவர்களிடம் வாகன சாவி இருக்கையில் எவருக்கும் தெரியாமல் திருப்பெருந்துறைக்கு வாகனம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம். இது முற்றுமுழுதாக ஆணையாளரின் செயற்பாடுகள். சபையின் தீர்மானங்களை மீறிச் செயற்படுகிறார் என்று கூறி ஆணையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றிருந்தும் நீதிமன்றத்தினையும் அவமதிக்கும் முகமாக மேலும் மேலும் ஆணையாளர் செயற்பட்டு வருகின்றார் என பிரதி முதல்வர் இதன் போது சுட்டிக் காட்டினார். இதேவேளை மாநகர ஆணையளரின் தலைமையில் ஊழியர்களை ஒன்று திரட்டி மாநகர வாயிலில் இவ்வார்ப்பாட்டத்திற்கு எதிராகவும், ஜி.கேஅறக்கட்டளையின் அமரர் ஊர்தி சேiவையினை மாநகர வளாகத்திற்குள் இடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது அவ்விடம் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம் ஊடகவியலாளர்கள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றார்கள் என ஆணையாளர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனால் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆணையாளருக்கிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன. இவ்வாறு ஊடகவியலாளர்களுக்குத் தெரிவிக்காமல் ஒரு விடயத்தை ஏற்பாடு செய்து விட்டு ஊடகவியலாளர்கள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றார்கள் என்று சொல்வது பொருத்தமற்ற விடயம் என ஊடகவியலாளர்களினால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. பின்னர் அமரர் ஊர்தியினை மாநகர எல்லைக்குள் இடுவதற்கு மாநகர ஊழியர்களுக்கு விருப்பமில்லாத நிலை காணப்படுவதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு ஒரு தனிநபரின் அரசியல் செயற்பாடுகளுக்காக இவ்ஊர்தி சேவை செயற்படுவதாகவும், அவருக்கு மாவட்டத்தில் பல இடங்களில் காணிகள் உள்ளதாகவும், அவற்றில் இவ்வாகனத்தைத் தரித்து தங்கள் சேவையைச் செய்ய முடியும் என்றும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார். மாநகரசபை அனுமதியளிப்பதற்கு அதற்கு ஒரு வரைமுறை உள்ளது. எந்த அதிகார வரம்பிற்குள் மாநகரசபை இவ் ஊர்திக்கு அனுமதியளித்தது என்று தெரியாது. ஊழியர்களின் அச்சமும் நியாயமானது. எனவே தான் இதனை திருப்பெருந்துமுறைக்கு மாற்றினோம். அங்கிருந்தும் இச்சேவையைத் தொடர முடியும் எனறும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது ஊர்தி சேவைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். ஊழியர்கள் கடமை நேரத்தில் இவ்வாறு கவனயிர்ப்பில் எவ்வித நடைமுறைகளின் ஊடாக ஈடுபடுகின்றார்கள், ஆணையாளர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கின்றாரா? என்ற கேள்விகளையும் முன்வைத்திருந்தனர். அதன் அடிபப்படையில் மாநகர முதல்வர் ஊழியர்களிடம் கடமை நேரத்தில் இவ்வாறு செயற்படுவது உகந்ததல்ல என்று தெரிவிக்கையில் மாநகர உத்தியோகத்தர்கள் பலர் கலைந்து சென்றனர். இதன் பிற்பாடு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் மாநகர ஊழியர்கள் சிலர் முற்பட்டனர். இதன் போது பிரதான வாயிற் கதவு ஊழியர்களால் மூடப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. பொலிஸாரின் தலையீட்டிற்கமைவாக நுழைவாயில் மீளத்திறக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளுமாறும். மாநகரசபைக்குள் நுழையாமல் ஆர்ப்பாட்த்தில் ஈடுபடுமாறும் தெரிவித்தமைக்கமைவாக வீதியில் இருந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்ம் மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் மாநகரசபைக்குள் அமரர் ஊர்தி நிறுத்துவதற்கு மூன்று தினங்களுக்குள் நடவடிக்கையெடுக்காவிட்டால் காந்திபூங்கா முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.     https://www.ilakku.org/?p=47702  
  • தியாக தீபம் அன்னை பூபதி – மாரீசன்    80 Views இன்று தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 33ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகின்றது.   சிங்களப் படைகள் கொடுமைகள் கண்டனள் அங்கம் நெகிழ்ந்திட வெகுண்டு எழுந்தனள் எங்கும் எழும்பிய அவலக் குரல்களால் பொங்கியெழுந்திடும் எரிமலையாகினள் அகிம்சை வழியைக் காட்டிய பாரதம் அனுப்பிய படைகள் இம்சைகள் கண்டனள்   புலிகளைத் தேடி அழித்திட அலைந்ததை வாலிபர், இளைஞரைக் கொன்று குவித்ததை கண்டனள், அன்னையின் விழிகள் சொரிந்தன இதயம் குமுறிட எரிமலை வெடித்தது சிலையெனப் பிள்ளையார் முன்றலில் அமர்ந்தனள் முந்தையர் காந்தியார் காட்டிய நெறியினில் முப்பது நாட்கள் நோன்பினைத் தொடர்ந்தனள்.   படையினர் போரினை நிறுத்திட வேண்டும் புலிகளைப் பேச்சுக் கழைத்திட வேண்டும் என்றுரை விடுத்தனள் உறுதியா யிருந்தனள் ஆயினும் அன்னவர் இரங்கினார் அல்லர் இரக்க மென்பது இதயத் திலில்லா அரக்கர் கண்முன் அணைத்தவன் கலங்கிக் கண்ணீர் வடித்துக் கையறைந்தலற தமிழரின் விழிநீர் தாரையாயோட அமைதியின் மூச்சோ டாவியுமடங்கச்   சரித்திரம் படைத்தனள் பூபதி அம்மா எழுவான் திசையில் மட்டுமா நகரில் நாவலங்கேணி ஊற்றின் றீய்ந்த தாயாம் பூபதி முத்தாய் இலங்கும் அன்னையே நின்னடி வணங்குகின்றோம் நாம் தரணியே துதித்திடத் தெய்வமா யுயர்ந்தாய் பரணியில் நிலைத்தாய் பாவையே யும்மை நெஞ்சில் சுமந்தோம் என்றும் தொழுவோம்.     https://www.ilakku.org/?p=47656
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.