Jump to content

அந்த இறுதி நொடிக்குரிய அழகிய சொற்றொடர்


Recommended Posts

யாழ் உறவுகள், வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.

எமது நாளாந்த வாழ்வில் நாம் பல விடயங்களை கேட்கின்றோம், பார்க்கின்றோம், உணர்கின்றோம். அதில் பல விடயங்கள் பல வேளைகளில் எமக்கு நகைப்பானதாய் உள்ளன. ஆயினும், அவற்றில் ஒருசில எம்முடன், எமது வாழ்வில் ஒரேயடியாக ஒட்டிப்பிடித்தும் விடுகின்றன. ஏன் அவ்வாறு ஏற்படுகின்றது என்பதற்கு, எல்லாவற்றுக்குமே விஞ்ஞான விளக்கம் கொடுக்கமுடியவில்லை. ஆனால், அப்படி அமைவது, அவை ஏதோ சரி என்பது போல் உணர்கின்றோம். இந்த உணர்வு பயத்தின்பாற்பட்டதாகவும் அமையலாம், பக்தியின்பாற்பட்டதாகவும் அமையலாம். இங்கு நான் எதைப்பற்றி கூறுகின்றேன்?

'அந்த இறுதி நொடிக்குரிய அழகிய சொற்றொடர்' எனுங்கருப்பொருளில் நான் இங்கு அலசிப்பார்க்க விளைவது ஒருவகையில் மந்திரம்; அதை வேண்டுமானால் சொற்றொடர் எனவும் கூறலாம்.

மந்திரம் என்றதும் எனக்கு உடனடியாக நினைவில் வருவது கோயில், ஐயர், பூசை, சுவாமி போன்றன. (ஒரு சின்னக்கேள்வி >>> மந்திரம் ஓதுபவரை மந்திரி என்றும் கோயிலின் தலைமைப்பூசகரை பிரதமமந்திரி என்றும் அழைக்கலாமோ? ...??... ஒரு எதேச்சையான சிந்தனைச்சிதறல்தான்...! அப்படியென்றால், கோயிலை பாராளுமன்றம் என்று அழைக்கலாமோ எனக்கேட்கக்கூடாது.) இனி தொடர்ந்து விடயத்துக்கு வருவோம்: மந்திரம் என்றதும் எமக்கு வடமொழியே மனக்கண் முன் தெரிகின்றது. நாம்(ன்) முன்பு சமயபாடத்தில் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்று நான்கு வேதங்கள் உள்ளதாக கற்றோம்(கற்றேன்). அவற்றிலேயே மந்திரங்கள் அடங்குகின்றன என்று நினைக்கின்றேன். மந்திரங்கள் மிகுந்த வீரியம் கொண்டவை எனவும் அவை செவிவழியாக சந்ததிக்கு சந்ததியாக கடத்தப்பட்டு வந்துள்ளன(வருகின்றன) எனவும், ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சரியான முறையில் உச்சரித்தாலே அதன் குறிப்பிட்ட பலனைப்பெறமுடியும் எனவும், அவ்வாறு சரியான முறையில் உச்சரிப்பதற்கு செவிவழியாக கற்றுக்கொள்வதே ஒரேயொரு வழி எனவும் நூல்கள் வாயிலாக முன்பு நான் அறிந்துகொண்டேன்.

மந்திரங்களின் செயற்பாட்டு விளைவுகளுக்கு விஞ்ஞானரீதியாக ஏதும் ஆதாரம் உள்ளதோ என்று நாம் ஆராய்வதுபோக, நான் சற்றுமுன் கூறியதுபோல் எம்முடன் வாழ்வில் ஒரேயடியாக ஒட்டிபிடித்தவற்றில் ஒன்றாக மந்திரமும் விளங்குகின்றது. தமிழிலும் சிவாயநம, நமசிவாய, சிவாயநம ஓம்... இப்படியெல்லாம் மந்திரங்கள் உள்ளன (இவை தமிழ்மொழியிலா அடங்குகின்றன என்று குதர்க்கமாகக் கேட்கக்கூடாது).

நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது ஒருதடவை துவிச்சக்கரவண்டியில் பிரவுண் வீதியால் சென்று நாலவர்வீதியில் திரும்பி அப்படியே பெருமாள் கோயில் கழிந்து கன்னாந்திட்டி வீதியடியாக சென்றபோது ஒரு சாமியார் போன்ற ஒருவரைக்கண்டேன். அவர் காவியுடை தரித்திருக்கவில்லை, ஆனால், சற்று அழுக்கான வெள்ளைவேட்டி, கொஞ்சம் தாடி, சற்று நீண்ட தலைமுடி ஆகியவற்றுடன் காணப்பட்டார். நான் அவரை அந்த ஒரேயொருதடவை மட்டுமே இதுவரை வாழ்க்கையில் சந்தித்துள்ளேன் என்று நினைக்கின்றேன். அப்போது என்ன நடைபெற்றது என்றால்... அவர் திடீரென உரத்த குரலில் மந்திரமொன்றை ரீங்காரித்தார். சொன்னால் நம்மமாட்டீர்கள் நான் அப்படியோர் ஈர்ப்புமிக்க மெலடியை (melody) இதுவரை கேட்டதில்லை. இப்போதும் எனது செவிகளில் அவரது ரீங்காரம் மானசீகமாக எதிரொலிக்கின்றது. நாங்கள் பட்டம்விடும்போது பட்டத்தில் (kite) கட்டுகின்ற விண் காற்றில் உரசி கதறுமே? அவ்வாறான கதறலுடன் ரீங்காரமிட்டார். ரீங்கரிக்கும்போது அவர் கூறிய சொற்கள் எவை என்று அச்சொட்டாக எழுத்தில் என்னால் சரியாக இப்போது கிரகித்து எழுதமுடியவில்லை, ஆனால் அந்தக்கதறலுடனான மெலடியை இப்போதும் உணரமுடிகின்றது. இவ்வளவிற்கும் அவர் ரீங்காரம் செய்தது சில நொடிகள் மட்டுமே. ரீங்காரம் செய்துவிட்டு ஒரு சத்தம், சந்தடியின்றி தன்வழியிற்சென்றுவிட்டார் (காற்றிலே புஸ்வானமாகி மறைந்துபோனார் என்று எல்லாம் எழுதி நான் உங்களுக்கு புருடா விட விரும்பவில்லை).

'என்னை தடுத்தாட்கொள்ளவந்தவர் அவர்தானோ?' என்று இலங்கை சைவ பரிபாலன சபையின் சமய பாடப்புத்தகத்தின் பாணியில் நீங்கள் அதிகமாய் யோசித்து குழம்பக்கூடாது. நான் எதைக்கூறவந்தேன் என்றால் மந்திரங்கள் என்பவை செவிவழியாக கடத்தப்படும்போது அவை பெறுகின்ற வடிவங்கள், உச்சரிப்புக்கள், வெளிப்படுத்தல்கள் வினோதமானவையாக காணப்படுகின்றன. உண்மையில் அவரது ரீங்காரம் எனக்கொரு புதிய அனுபவமாக அமைந்தது. அதைக்கேட்ட நொடிகளில் நாடி, நரம்புகள் எல்லாம் ஒருவிதமான வசீகரமான கவர்ச்சிக்குக்கட்டுப்பட்டு சொக்கிப்போய் நின்றன. அவர் என்னை நேரடியாக காணவில்லை. பக்கவாட்டாக நடந்து சென்றார். அந்த இடத்தில் நான் மட்டும் காணப்படவில்லை, வீதியில் வேறு சிலரும் காணப்பட்டனர். ஏன் திடீரென்று எதேச்சையாக ரீங்காரம் செய்தார் என்று தெரியவில்லை.

இந்து சமயம் தவிர மற்றைய மதங்களிலும் மந்திரங்களின் பாவனை உள்ளது. இதை சாதாரண தனிநபர்கள் வெவ்வேறு வகைகளில் கையாளலாம். மற்றவர்களை பயமுறுத்துவதற்கும் பயன்படுத்தலாம். சிலர் 'ராம, ராம' ராம ஜெயம்.. இப்படி பல்வேறு சொற்களையும், சொற் தொடர்களையும் பக்கம் பக்கமாக தினமும் எழுதுவார்கள். சிலர் வாயினுள் மந்திரங்களை எந்தநேரமும் முணுமுணுத்துக்கொள்வார்கள். நானும் என் வாழ்வில் மந்திரங்களை பல்வேறு ரூபங்களில் பரீட்சித்து பார்த்ததோடு பிரயோகமும் செய்துள்ளேன்.

எங்களுக்கு எதிர்பாராமல் ஏதாவது ஆபத்து ஏற்படும்போது, நாடி நரம்பு எல்லாம் இறுகி உடம்பு பக்கிள் (buckle) அடிக்கும்போது 'முருகா', 'பிள்ளையாரப்பா', 'கர்த்தரே', 'யேசுவே' என்றெல்லாம் எம்மை அறியாமலே சொற்களை துணைக்கு அழைக்கின்றோம். அடிப்படையில் முருகா, பிள்ளையாரப்பா, கர்த்தரே, யேசுவே என்பவையெல்லாவற்றையும் நேரடியாக இல்லாவிட்டாலும் மந்திரிப்பதன் ஒரு பகுதியாகவும் பார்க்கலாம்.

நீங்கள் எத்தனை பேர் உங்கள் வாழ்வில் இறுதிக்கணம் எட்டப்படும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதை சிந்தித்துவைத்துள்ளீர்களோ தெரியாது. பலர் சாவை அது வரும்போது பார்க்கலாம் என்று நினைக்கலாம். சிலர் இவ்வாறு சாவைப்பற்றி சிந்திப்பது தவறு என்று நினைக்கலாம்.

உங்கள் வாழ்வின் இறுதிக்கணத்தில் நீங்கள் எதையாவது வாயில் முணுமுணுப்பதற்கு விரும்பினால் அது என்னவாக இருக்கும்? பெரும்பாலும் கடவுளின் நாமமாக அது காணப்படும் என்று ஊகிக்கலாமா? அல்லது 'அம்மா', 'அப்பா' என்று பெற்றோரை அழைப்பீர்களா?

அப்படியானதோர் தருணம் வரும்போது, அந்த இறுதிக்கணத்தில் பிரயோகிப்பதற்கு அதற்கென ஏற்கனவே ஓர் அழகான சொற்றொடரை நான் கண்டறிந்து தயாராக வைத்துள்ளேன்.

ஒவ்வொரு தடவையும் சத்திரசிகிச்சை ஆரம்பிக்கமுன் எனக்கு மயக்கமருந்து (anesthetics) ஏற்றப்படும்போது, 'உங்களை நான் இப்போது தூங்கவைக்கப்போகின்றேன், மூச்சை நன்கு இழுத்துவிடுங்கள்' என கையில் மயக்க ஊசியை செலுத்தும் மருத்துவர் கூறும்போது - நான் தன்னுணர்வுடன், சுயநினைவுடன் கடைசி மூச்சை இழுக்கும்போதும் குறிப்பிட்ட இந்த சொற்றொடரையே பயன்படுத்தி வருகின்றேன். ஒவ்வொரு தடவையும் சத்திரசிகிச்சையை ஆரம்பிக்கமுன் - மயக்க ஊசி மூலம் நினைவு போகும்வரை அந்தக்கடைசித்தருணத்தில் நான் இந்த சொற்றொடரை தொடர்ச்சியாக சில தடவைகள் எனக்குள் கூறும்போது முழுமையான ஓர் நிறைவு, பூரணத்துவம், ஆழ்ந்த நிம்மதி எனக்குள் ஏற்படும். இந்த உலகைப்பார்த்து நன்றிணர்வுடன் சல்யூட் அடிப்பது போலிருக்கும்.

அந்த இறுதி நொடியின் போது... வாழ்வின் இறுதிக்கணத்தில் பயன்படுத்துவதற்கு உகந்த, நான் கூறும் அழகிய சொற்றொடரை உங்களால் ஊகிக்கமுடிகின்றதா?

அந்த இறுதி நொடியின் போது... வாழ்வின் இறுதிக்கணத்தில் பயன்படுத்துவதற்கு உகந்த, நான் கூறும் அழகிய சொற்றொடர் பெரும்பாலான உங்கள் அனைவருக்கும் நன்கு பரீட்சயமானதே!

அந்த இறுதி நொடியின் போது... வாழ்வின் இறுதிக்கணத்தில் நாம் பயன்படுத்துவதற்கு உகந்த, அந்த அழகிய சொற்றொடர் யாதெனில்...

அது வேறொன்றும் இல்லை...

அன்பே சிவம்! 'அன்பே சிவம்' என்பதே அந்த அழகிய சொற்றொடர்.

சரி, 'அன்பே சிவம்' என்பதன் பொருள் என்ன? 'அன்பே சிவம்' என்றால் என்ன?

விடை?

அதை நீங்கள்தான் உங்கள் வாழ்வில் கண்டறிந்து உணரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி

ஆனால் வாழ்த்த முடியவில்லை

கரும்பு

இன்னும் கனக்க வாழணும்

ரசிக்கணும்

சந்தோசங்களை அனுபவிக்கணும் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் அண்ணா என்ன எழுதி இருக்கிறார் என்று ஓடி வந்து பார்த்தால் இப்படி ஒரு பதிவிட்டு இருக்கிறார்..please take a deep breath.இது நானும் அடிக்கடிகேட்கும் வார்த்தை.எங்களுக்கு இவற்றை எழுதுவதற்கு அனுபவம் இருக்கு என்று சொல்லி விட முடியாது.அவ்வப்போது எங்களை ஆட்டிப்படைக்கும் சில தவிர்க்க முடியாத சோதனைகள் வரும் போது எழுத வைத்துவிடுகிறது என்று நினைக்கிறன்..நீங்கள் வெளிப்படையாக எழுதுறீங்கள்..சிலர் அவற்றை எவ்வளவுக்கு தவிர்க்கமுடியுமோ அவ்வளவுக்கு தவிர்த்து கொண்டு வேறு விடையங்களில் புலனை செலுத்துவார்கள்..எல்லாராலும் எல்லாம் முடியும் என்று இல்லைத் தானே....கலைஞன் அண்ணாவும் சந்தோசமாக பலதும் பெற்று நீடுழி வாழவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் முன்பை விட பன்மடங்கு உயர்வான சிந்தனைகளையும் எழுத்துக்களையும் தற்சமயம் நீங்கள் எழுதும் எல்லா இடத்திலும் அறியக்கூடியதாக இருக்கிறது. நான் நினைக்கிறேன் உங்களுக்குள் நீங்களே நிறையத்தேடல்களை மேற் கொள்கிறீர்கள் அதனால்தான் இத்தகைய சிந்தனைகள் வலுவாக வெளிப்படுகின்றன. ஏதோ ஒரு வகை ஞானம் உங்களை ஆட்கொள்கிறது. உங்கள் எழுத்துக்களை ஆழ நோக்கும்போது ஒருவகைப் பிரமிப்பே வியாபிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

அந்த இறுதி நொடிக்குரிய அழகி .........எண்டு படிச்சிட்டு உள்ளை புகுந்திட்டன் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவு... என்பது, எல்லோருக்கும் வருவது தானே...

எனக்கு, சாவு வரும் போது... எனது, பிள்ளையின்... பெயரை கூப்பிட்டுக் கொண்டே... சாக வேண்டும் என்பது, எனது ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு மாப்பு! நானும் பலதடவை நீங்கள் குறிப்பிட்ட அன்பேசிவம் நிலைக்கு வரும்போது என் மனைவிபிள்ளைகளை முன்னிறுத்துவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா, கடைசி நேரத்தில்... உள்ள வினாடியில்...

ஒரு பெயரை, உச்சரிக்க வேண்டுமென்றால்....

என்ன பெயரை... உச்சரிப்பீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை சிவனே!....நோ பரிமளம்..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு சிந்தனைக்குரிய பதிவு, கலைஞன்!

இது பற்றி நானும் பலதடவைகள் சிந்தித்தேன்!

மந்திரம் என்பது, மொழி என்ற எல்லை தாண்டியது என எண்ணுகின்றேன்!

Big Bang என்பதுடன் தான் இந்தப் பிரபஞ்சம் தோன்றியது என்பது ஓரளவுக்கேனும் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு கருதுகோள்!

இந்தப் பிரணவத்தின் தோற்றத்தின் போது ஏற்பட்ட அதிர்வு இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது!

இந்த அதிர்வின் ஓசையை, யார் சரியாக உச்சரித்தாலும், அது எம்மை ஈர்ப்பதோடு, எம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.இதை எல்லா மதங்களும் ஒரு விதத்தில் உபயோகின்றன.

சுக்கிலாம், பிரதனம் எனத் தொடரும் எமது மந்திரங்களும் ஒரு 'ஓம்' என்ற சத்தத்துடன் முடியும். அந்தப் பிரணவ அதிர்வு தான் எம்மை ஈர்க்கின்றது!

அதே போல 'புத்தம் சரணம் ' என வரும்போதும், அந்தச் சரணம் என்ற வார்த்தையின் உச்ச்சரிப்பைக் கவனியுங்கள், அதுவும் 'ஓம்' என்ற ஓசையை, அழுத்துவதை அவதானிப்பீர்கள்.

ஆபிரிக்கச் சடங்குகளிலும், இந்த 'ஓம்' ஒரு விதத்தில் கலந்திருப்பதை அவதானிக்க முடியும்.

ஓம் என்ற இந்த வார்த்தையை, அமைதியாகத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, இந்த அதிர்வு உங்கள் கபாலத்தினுள் சிதறி, அந்த அதிர்வை நீங்கள் அனுபவிக்கும் நிலை வருமேயானால், நீங்களும் பிரபஞ்சமும் ஒரே அலைவரிசையில் பயணிக்க முடியும். அந்த நிலை தான், நிர்வாணம் என அழைக்கப் படுகின்றது!

அந்த நிலையில், நீங்களும் எல்லா ஜீவராசிகளும், ஒரே அலைவரிசையில் சஞ்சரிக்க முடியும். அந்த நிலையில், மனிதனால் ஆக்கப் பட்ட மொழிகள், எல்லைகள், ஆசா பாசங்கள் அனைத்தும், தங்கள் சுயத்தை இழந்து விட, நீங்கள் பிரபஞ்சத்துடன் ஒன்றும் நிலை வரும். இதைச் சிலர், விரைவாக அடைவதற்காகக் கண்டு பிடித்த குறுக்கு வழி தான் Tantric Yoga எனப்படுகின்றது! இதில் மந்திர உச்சாடனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் சித்தி பெற்றவர், உங்களை ஒரே நிமிடத்தில், இந்த நிர்வாண நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

மரணத்தின் இறுதிக் கட்டத்தில், இந்த நிர்வாண நிலை ஏற்படுவதாகக் கூறப் படுகின்றது.

அதனால் தான், இந்த Near Death Experience நிலைக்குச் சென்று திரும்பியவர்கள், தங்கள் சொத்துக்களை, ஏழைகளுக்குக் கொடுத்து விடுகின்றார்கள்!பற்றற்ற நிலையில் தான், அநேகமானவர்கள், மிகுதி வாழ்வைக் கழிக்கின்றார்கள்!

இந்த நிலையை, உயிரோடு இருக்கும் போது,அடைபவர்கள் 'ஜீவன் முத்தர்' என அழைக்கப் படுகின்றார்கள்!

ராம கிருஷ்ணர், அன்னை சாரதா, விவேகானந்தர், யோகர் சுவாமிகள், கவுதம புத்தர், ஆகியோர் இத்தகையவர்களே!

அதிகம் அலம்பி விட்டேன் போல! :D

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்சி

ஆனால் வாழ்த்த முடியவில்லை

கரும்பு இன்னும் கனக்க வாழணும் ரசிக்கணும்

சந்தோசங்களை அனுபவிக்கணும் :wub:

நன்றி விசுகு. முன்பு சாவு என்றால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கவில்லை. இப்போது என்றாவது ஒருநாள் எனது ஆட்டம் குளோஸ் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது.

கலைஞன் அண்ணா என்ன எழுதி இருக்கிறார் என்று ஓடி வந்து பார்த்தால் இப்படி ஒரு பதிவிட்டு இருக்கிறார்..please take a deep breath.இது நானும் அடிக்கடிகேட்கும் வார்த்தை.எங்களுக்கு இவற்றை எழுதுவதற்கு அனுபவம் இருக்கு என்று சொல்லி விட முடியாது.அவ்வப்போது எங்களை ஆட்டிப்படைக்கும் சில தவிர்க்க முடியாத சோதனைகள் வரும் போது எழுத வைத்துவிடுகிறது என்று நினைக்கிறன்..நீங்கள் வெளிப்படையாக எழுதுறீங்கள்..சிலர் அவற்றை எவ்வளவுக்கு தவிர்க்கமுடியுமோ அவ்வளவுக்கு தவிர்த்து கொண்டு வேறு விடையங்களில் புலனை செலுத்துவார்கள்..எல்லாராலும் எல்லாம் முடியும் என்று இல்லைத் தானே....கலைஞன் அண்ணாவும் சந்தோசமாக பலதும் பெற்று நீடுழி வாழவேண்டும்.

நன்றி யாயினி. உலகத்தில் ஒருவரும் Perfectஆக இல்லை. எல்லோருக்கும், பிரச்சனைகள், துன்பங்கள் உள்ளன. ஆனால், பலர் வெளியில் அவற்றைக்காட்டிக்கொள்வது இல்லை. சிலது அவ்வாறு அவர்கள் மறைப்பு செய்வதற்கு தகுந்த காரணங்களும் காணப்படலாம்.

கலைஞன் முன்பை விட பன்மடங்கு உயர்வான சிந்தனைகளையும் எழுத்துக்களையும் தற்சமயம் நீங்கள் எழுதும் எல்லா இடத்திலும் அறியக்கூடியதாக இருக்கிறது. நான் நினைக்கிறேன் உங்களுக்குள் நீங்களே நிறையத்தேடல்களை மேற் கொள்கிறீர்கள் அதனால்தான் இத்தகைய சிந்தனைகள் வலுவாக வெளிப்படுகின்றன. ஏதோ ஒரு வகை ஞானம் உங்களை ஆட்கொள்கிறது. உங்கள் எழுத்துக்களை ஆழ நோக்கும்போது ஒருவகைப் பிரமிப்பே வியாபிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

நன்றி சகாறா அக்கா. கூடியவரை யதார்த்தத்துடன் ஒன்றிப்போவதற்கு முயற்சிக்கின்றேன். பல சமயங்களில் யதார்த்தம் கசப்பானதாக இருந்தாலும், கசப்பான பல அம்சங்கள் யதார்த்தத்தில் இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தற்போது ஓரளவு வந்துவிட்டது.

காத்திருக்கிறேன் அந்த வார்த்தைக்காக

அதற்காக யதார்த்தத்தை - நிகழ்காலத்தை கைவிட்டுவிடாதீர்கள்.

அந்த இறுதி நொடிக்குரிய அழகி .........எண்டு படிச்சிட்டு உள்ளை புகுந்திட்டன் :(

அழகியலும் ஒருவகையில் பூரணத்துவத்துக்கான தேடல்தானே சாத்திரி. பக்தி மார்க்கத்தில் அழகியை கடவுளாக நினைத்து வழிபடும் முறைகூட உள்ளது.

சாவு... என்பது, எல்லோருக்கும் வருவது தானே...

எனக்கு, சாவு வரும் போது... எனது, பிள்ளையின்... பெயரை கூப்பிட்டுக் கொண்டே... சாக வேண்டும் என்பது, எனது ஆசை.

உங்களுக்கு உங்கள் பிள்ளைமேல் அவ்வளவு பிரியமா?

அருமையான பதிவு மாப்பு! நானும் பலதடவை நீங்கள் குறிப்பிட்ட அன்பேசிவம் நிலைக்கு வரும்போது என் மனைவிபிள்ளைகளை முன்னிறுத்துவேன்.

நன்றி குமாரசாமி அண்ணா. குடும்பத்தினுடான வலுவான பிணைப்பு வாழ்வதில் மிகுந்த பிடிப்பை ஏற்படுத்தும். குடும்பம் உங்களுக்கு ஓர் காவலரணகாக அமையும்.

நல்ல ஒரு சிந்தனைக்குரிய பதிவு, கலைஞன்!

இது பற்றி நானும் பலதடவைகள் சிந்தித்தேன்!

மந்திரம் என்பது, மொழி என்ற எல்லை தாண்டியது என எண்ணுகின்றேன்!

Big Bang என்பதுடன் தான் இந்தப் பிரபஞ்சம் தோன்றியது என்பது ஓரளவுக்கேனும் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு கருதுகோள்!

இந்தப் பிரணவத்தின் தோற்றத்தின் போது ஏற்பட்ட அதிர்வு இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது!

இந்த அதிர்வின் ஓசையை, யார் சரியாக உச்சரித்தாலும், அது எம்மை ஈர்ப்பதோடு, எம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.இதை எல்லா மதங்களும் ஒரு விதத்தில் உபயோகின்றன.

சுக்கிலாம், பிரதனம் எனத் தொடரும் எமது மந்திரங்களும் ஒரு 'ஓம்' என்ற சத்தத்துடன் முடியும். அந்தப் பிரணவ அதிர்வு தான் எம்மை ஈர்க்கின்றது!

அதே போல 'புத்தம் சரணம் ' என வரும்போதும், அந்தச் சரணம் என்ற வார்த்தையின் உச்சரிப்பைக் கவனியுங்கள், அதுவும் 'ஓம்' என்ற ஓசையை, அழுத்துவதை அவதானிப்பீர்கள்.

ஆபிரிக்கச் சடங்குகளிலும், இந்த 'ஓம்' ஒரு விதத்தில் கலந்திருப்பதை அவதானிக்க முடியும்.

ஓம் என்ற இந்த வார்த்தையை, அமைதியாகத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, இந்த அதிர்வு உங்கள் கபாலத்தினுள் சிதறி, அந்த அதிர்வை நீங்கள் அனுபவிக்கும் நிலை வருமேயானால், நீங்களும் பிரபஞ்சமும் ஒரே அலைவரிசையில் பயணிக்க முடியும். அந்த நிலை தான், நிர்வாணம் என அழைக்கப் படுகின்றது!

அந்த நிலையில், நீங்களும் எல்லா ஜீவராசிகளும், ஒரே அலைவரிசையில் சஞ்சரிக்க முடியும். அந்த நிலையில், மனிதனால் ஆக்கப் பட்ட மொழிகள், எல்லைகள், ஆசா பாசங்கள் அனைத்தும், தங்கள் சுயத்தை இழந்து விட, நீங்கள் பிரபஞ்சத்துடன் ஒன்றும் நிலை வரும். இதைச் சிலர், விரைவாக அடைவதற்காகக் கண்டு பிடித்த குறுக்கு வழி தான் Tantric Yoga எனப்படுகின்றது! இதில் மந்திர உச்சாடனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் சித்தி பெற்றவர், உங்களை ஒரே நிமிடத்தில், இந்த நிர்வாண நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

மரணத்தின் இறுதிக் கட்டத்தில், இந்த நிர்வாண நிலை ஏற்படுவதாகக் கூறப் படுகின்றது.

அதனால் தான், இந்த Near Death Experience நிலைக்குச் சென்று திரும்பியவர்கள், தங்கள் சொத்துக்களை, ஏழைகளுக்குக் கொடுத்து விடுகின்றார்கள்!பற்றற்ற நிலையில் தான், அநேகமானவர்கள், மிகுதி வாழ்வைக் கழிக்கின்றார்கள்!

இந்த நிலையை, உயிரோடு இருக்கும் போது,அடைபவர்கள் 'ஜீவன் முத்தர்' என அழைக்கப் படுகின்றார்கள்!

ராம கிருஷ்ணர், அன்னை சாரதா, விவேகானந்தர், யோகர் சுவாமிகள், கவுதம புத்தர், ஆகியோர் இத்தகையவர்களே!

அதிகம் அலம்பி விட்டேன் போல! :D

இந்து தத்துவங்கள் பற்றி அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கின்றீர்கள் புங்கையூரன். நான் நீண்டகாலத்தின் முன்பு இவைபற்றிய பல தத்துவ நூல்களைக்கற்று, அவைபற்றி சிந்தித்தும் பார்ப்பதுண்டு. அதில் குறிப்பிடத்தக்கது ஆதி சங்கரரின் விவேகசூடாமணி. இதை யாழ் நூலகத்தில் இரவல் பெற்று வாசித்தேன். முழுமையாக வாசித்து முடிந்ததும் குறித்த நூலின் ஓர் முன் பக்கத்தில் இவ்வாறு பென்சிலால் எழுதிவிட்டேன்.

விவேகம் உள்ளவனுக்கு சூடாமணி தேவையில்லை.

விவேகம் இல்லாதவனுக்கு சூடாமணியால் பயனில்லை.

நான் மேற்படி குறிப்பு எழுதிய புத்தகம் யாழ் நூல் நிலையத்தில் தற்போதும் பாவனையில் உள்ளதோ தெரியாது. அப்போது போர், பிரச்சனைகள் காரணமாக யாழ் நூலகம் நல்லூர் பின்பக்கத்தில் (சங்கிலியன் வீதியில் என்று நினைக்கின்றேன்) இயங்கியது.

Link to comment
Share on other sites

இன்று காலையில் முழுமையாக வாசித்த பின்பும் அதிக வேலை அலுவலகத்தில் இருந்ததால் கருத்து எழுத முடியாமல் ஒரு பச்சையை கிளிக்கி விட்டு போய்விட்டேன்.

எனக்கு இதை வாசிக்கும் போது ஒரு சந்தோசம்..."அடடா நான் மட்டும் தான் மரணம் பற்றிய பிரக்ஞை கொண்டு யாழில் எழுதுபவன் அல்ல, முரளியும் இருக்கின்றார்" என்றுதான் முதலில் ஆனந்தப்பட்டேன்.

மரணம் வரும் போது எப்படி எப்படி எல்லாம் என்னை தயார்படுத்தி வைக்க வேண்டும் என்ற நினைவு என் அப்பம்மா செத்த கணத்தில் தான் முதலில் எழுந்தது. அவாவுக்கு தான் சாகப்போவது முன்னமே தெரிந்து இருந்ததோ என்னமோ, செத்த பின் செத்த வீட்டிற்கு வாற ஆட்களுக்கு பண்ண வேண்டிய அனைத்து வேலைகளையும் முற்கூட்டியே செய்து விட்டு சிவனே என்று செத்துப்போனார்.

ஆனாலும் முரளி சொல்வது போன்று ஒரு இறுதிச் சொற்தொடர் பற்றி இன்னும் நினைக்கவில்லை

ஆயினும் பின்வரும் 2 சொற்தொடர்களை (ஒன்று ஒரு சொல், மற்றது ஒரு தொடர்) அடிக்கடி எந்த காரணமும் இன்றி; ஆனால் மனம் இறுகும் போதோ அல்லது என்னை அறியாமலோ சொல்வதுண்டு:

1. "அம்பாள்": இது என் அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தை. பல நூறு பதிகம் மனனம் செய்து பாடுபவர் அவர். எனக்கு 'சொற்றுணை வேதியனே' தகராறு பண்ணும்...ஆனாலும் அவர் சொல்லும் 'அம்பாளே' சொல் நான் களைப்படைந்து இருக்கும் போது அடிக்கடி வரும்.

2. "யா அல்லாஹ்": என் ஆரம்பக் கல்வி ஒரு முஸ்லிம் கல்லூரியில் என்பற்கு அப்பால் நான் குருணாகல் எனும் ஊரில் 4 இல் இருந்து 8 வயது வரை இருந்த போது எம் வீட்டுக்கு அருகில் வசித்தவர்கள் அநேகர் முஸ்லிம்கள். ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்த ஒரு முஸ்லிம் பெரியவர் கதிரையில் சாயும் போது சொன்ன இந்தச் சொல் எப்பவும் என் மனதில் துயரம் வரும் போது வரும்.

Link to comment
Share on other sites

வித்தியாசமான ஒரு ஆக்கம். படித்தவுடன் முடியாமல் சற்று சிந்திக்கவைத்தும் பழைய சில சம்பவங்களை மீளக் கிளற வைத்ததுமாக எனக்கிருந்தது.

மந்திரம் என்றதும் எனக்கு உடனடியாக நினைவில் வருவது கோயில், ஐயர், பூசை, சுவாமி போன்றன. (ஒரு சின்னக்கேள்வி >>> மந்திரம் ஓதுபவரை மந்திரி என்றும் கோயிலின் தலைமைப்பூசகரை பிரதமமந்திரி என்றும் அழைக்கலாமோ? ...??... ஒரு எதேச்சையான சிந்தனைச்சிதறல்தான்...! அப்படியென்றால், கோயிலை பாராளுமன்றம் என்று அழைக்கலாமோ எனக்கேட்கக்கூடாது.)

கேட்டாலும் தப்பில்லை சோழனுக்கு தஞ்சைப் பெரிய கோயில் பாராளுமன்றம் போன்றதுதான். அங்கேதான் போர்த்திட்டங்கள் உட்பட அனைத்து அரசியல் முடிவுகளும் எடுக்கப்பட்டது என படித்த ஞாபகம். அதேபோல் அரசியல் ஆட்சிமுறை என்பது கோயில் தேவாலயங்களில் ஊடகாக உருப்பெற்றுத்தான் வியாபாரிகள் கைக்கு மாறியது.

அன்பே சிவம் ஒரு ஜீவகாருணிய வலியுறுத்தலாக நான் உணர்கின்றேன்.

தீக்குண்டம் ஒன்று வளர்த்து அதன் முன்னால் விலங்குகளை கொன்று தீயில் வாட்டி உண்ட ஒரு நிகழ்வு கால மாற்றத்தில் தீக்குண்டம் சிவலிங்க வடிவமாகவும் முன்னால் பலி பீடம் இப்போது தேங்காய் உடைக்கும் கல். கூடுதலாகக் கொல்லப்பட்ட மாடுகளையே சிவனின் வாகனமாக்கி உழவுமாடுகள் கறவை மாடுகள் கொல்லப்படுவதை தடுக்கும் முயற்ச்சி ஒரு கோயிலாக காலப்போக்கில் மாறுகின்றது. இந்த முயற்ச்சி எத்தனை ஆயிரம் வருடங்கள் என்று தெரியாது. உயிர்கள் மீது கருணைகாட்டுவது தான் அடிப்படை.

எப்படிப் பார்த்தாலும் ஜீவகாருணியம் உள்ளவராக இறுதியில் தன்னை உணர்ந்துகொள்வது ஒரு அமைதிதான். ஆனால் அது ஒரு வாயச்சொலாக உச்சரிப்பாக அல்லாமல் ஒரு உணர்தலாக அமையும். அந்த உணர்வோடு கண்ணை மூட வேண்டியதுதான். உணர்வைப் பெறுவதற்கு ஜவகாருணியமிக்கவராக வாழவேண்டும். அன்பே சிவம் பாட்டில் வருவதுபோல் "வாழ்வே தவம் ... அன்பே சிவம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இறுதி நொடிக்குரிய அழகி .........எண்டு படிச்சிட்டு உள்ளை புகுந்திட்டன் :(

நானும் தான் :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் மரணம் வரும் போது சொல்லிக் கொண்டா வரும்?

அன்பே சிவம் என்ட மந்திரத்தை நீங்கள் உங்கள் தாராக மந்திரமாக கொள்வதால் இனி மேல் ஒருத்தரோடும் சண்டை பிடிக்காமல் எல்லோருடனும் அன்பாக இருப்பீங்களா?

Link to comment
Share on other sites

நிழலி,

மரணம் பற்றிய உங்கள் கவிதையை நானும் முன்பு வாசித்தேன்.

எனது மாமா ஒருவர் அடிக்கடி அம்மாளாச்சி, அம்மாளாச்சி என்று முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். அவர் மகிழ்ச்சி ஏற்படும்போதும் அம்மாளாச்சி, அம்மாளாச்சி என்று முணுமுணுப்பார்.

சண்டமாருதன்,

பாராளுமன்றமாக கோயிலை நானும் கற்பனை செய்தேன். கோயில்களின் தற்கால நிலமைகளை நினைத்தபோது அந்தக்கற்பனையை விரிவுபடுத்தவிரும்பவில்லை. இதனால், அவ்வாறு வினவுவது தவறோ எனும் பாணியில் எழுதவேண்டி வந்தது.

ரதி,

'அன்பே சிவம்' என்பதற்கு நான் விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. எனவேதான் இவ்வாறு நிறைவு செய்தேன்:

[size=4]சரி, 'அன்பே சிவம்' என்பதன் பொருள் என்ன? 'அன்பே சிவம்' என்றால் என்ன?

விடை?

அதை நீங்கள்தான் உங்கள் வாழ்வில் கண்டறிந்து உணரவேண்டும்.[/size]

+++

ஒரு சின்னக்கதை சொல்கின்றேன், கேளுங்கள். இது நான் நீண்டகாலத்துக்கு முன் படித்தது. அதன் சாரம்சத்தை தருகின்றேன்.

மதம்பிடித்த யானை ஒன்று வந்தது. எல்லோரும் ஓடினார்கள். ஒருவன் மட்டும் ஓடவில்லை. அவனுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. எச்சரிக்கை கொடுத்தும் அவன் பாதுக்காப்புத்தேடி ஓடவில்லை. கடைசியில் அவன் யானையின் தாக்குதலுக்கு ஆளாகினான்.

யானையின் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகிய அவன் நினைவுபெற்று சிகிச்சை பெற்றுவந்தபோது அவனிடம் அவன் குரு கேட்டார்:

"மதம் பிடித்த யானையைக்கண்டு நீ ஏன் ஓடவில்லை?"

அதற்கு அவன் கூறினான் "குருவே, நீங்கள்தானே எல்லா உயிர்களிலும் கடவுள் உள்ளார் என்று கூறினீர்கள். என்னைநோக்கி யானைக்கடவுள் வந்ததால் அவருக்கு மதிப்பு கொடுப்பதற்காக நான் ஓடவில்லை" என்று கூறினான்.

அதற்கு குரு கூறிய பதில்:

"யானைக்கடவுள் உன்னைநோக்கி வந்தார். அவருக்கு மதிப்புகொடுப்பதற்காக நீ ஓடவில்லை. சரி. ஆனால், இன்னோர் மனிதக்கடவுள் உன்னை ஓடுமாறு எச்சரித்தாரே, அந்தக்கடவுளின் சொல்லை நீ ஏன் கேட்கவில்லை, அந்த மனிதக்கடவுளுக்கு நீ ஏன் மதிப்புகொடுக்கவில்லை?"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக் கணத்தையும் இறுதி நொடியையும் ஒருபோதும் சிந்தித்ததில்லை. இதை எழுதும்போதுகூட வலிந்து யோசித்தாலும் அந்தக் கணத்திற்குச் சொல்லக்கூடிய ஒரு வார்த்தையும் வரவில்லை. மரணங்கள் பலவற்றைக் கண்டும், நெருங்கியவர்களின் இழப்பில் இருந்து மீளமுடியாமல் இருக்கும் பலரைத் தெரிந்தும் மரணம் என்னைப் பயமுறுத்துவதில்லை. காலப் போக்கில் என்னவாகும் என்று தெரியாது!

எனினும் ஒவ்வொரு நாளும் தூக்கத்தால் எழும்போது வாயில் வரும் முதலாவது வார்த்தை (எழுத முடியாத ஆங்கில வார்த்தைகள்) பொன்னான வார்த்தையாக வருவதில்லை!

சிலவேளை இறுதிக்கணத்தில் The Departed படத்தில் வருவதுபோன்று நான் ஒரு வார்த்தையைச் சொல்லக்கூடும் :)

----------

[after driving his car into a large crate, and getting caught in the car]

Mr. French: Ah, f*** it.

[shoots himself, the car explodes]

------------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோசித்தேன்.

ஒரு நாளில் இருந்து அடுத்த பல வருடங்களுக்குச் செய்யவெண்டு சில நூறு விடயங்கள் பட்டியலில் இருக்கு. அதற்குள் வாழ்வு முடிந்தால் சோகம் தான். ஆனால் இதுவெல்லாம் சாவு வராமல் இருக்க ஒரு காரணமா? ஆனால், நம்பிக்கையுள்ள கிறிஸ்தவனாக இருப்பதால் சாவு இன்னொரு உலகத்திற்கான நுழைவு என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். அதனால், நான் திடப் பொருளாக இல்லாமல் போனாலும் அரூபமாக அன்புக்குரியவர்களுக்கு அண்மையில் இருப்பேன் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன். சாவு வருகின்ற கணத்தில் சில சமயம் யேசு தெரிவார் என நம்புகிறேன். ஒரே ஒரு கடைசி வேண்டுதல் தான் என் கடைசி வசனம்: Take care of my baby!

Link to comment
Share on other sites

நான் எல்லாமே அந்த அந்த நேரம் முகம் கொடுப்பதுதான் .அடுத்து வருவது பற்றி பெரிதாக சிந்திப்பதில்லை .

"கொன்றால் பாவம் தின்றால் போச்சு" இதுதான் என் கட்சி .பெரிதாக சென்டிமென்டுக்கும் இடமில்லை .

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அடிக்கடி பாவிக்கும் சொல் "கடவுளே" .

Link to comment
Share on other sites

மரணம் என்றோ நிகழ்வது திண்ணம். அது ஒன்றுதான் வாழ்வில் நிச்சையாமானது என்பதால் மரணத்தைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

முடிந்தால் அந்த இறுதிக் கணமும் நிம்மதியாக, இன்பமாகக் கழிய வேண்டும்.

Link to comment
Share on other sites

இறுதிக் கணத்தையும் இறுதி நொடியையும் ஒருபோதும் சிந்தித்ததில்லை.

மரணம் ஒரே ஒரு தடவையே வரும். ஆனால், நாம் சுயநினைவை இழந்து போகும் கணங்கள் பல தடவைகள் வருகின்றன. அதில் ஒரு தடவையின்போதே மரணம் சம்பவிக்கின்றது. சுயநினைவு இழக்காமல் மரணம் ஏற்படமுடியாது. ஞானிகள், யோகிகள் தமது ஆற்றல்கள் காரணமாக சுயநினைவுடனேயே உடலை நீப்பார்கள் என்று கூறப்படலாம், ஆனால் இதற்கான ஆதாரம் மரணிப்பவருக்கு மட்டுமே தெரியமுடியும். ஒருவர் மரணிக்காதவரை விஞ்ஞானரீதியாகவும் இப்படியான ஆற்றலை நிரூபிக்கமுடியாது.

எனவே, சுயநினைவு ஒவ்வொரு தடவையும் நீங்கமுன்னர் எதையாவது சிந்திப்பது சாத்தியமா என்று பார்க்கலாம். ஓர் விபத்து ஏற்பட்டால் உதவியை பெறுவதே முதலாவது வேலையாக அமையும். ஆனால், சுயநினைவு நீங்கும் நிலையில் எதையாவது இறுதியாக சிந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

நாம் தூக்கத்திற்கு செல்லும்போதும் நினைவு போய் தூக்கத்தில் ஆழ்கின்றோம். மீண்டும் எழுவோம் எனும் எதிர்பார்ப்புடனேயே தூக்கத்திற்கு செல்கின்றோம். சிலவேளைகளில் தூக்கத்திலேயே உயிர் பிரியலாம். எனவே, தினமும் தூங்கமுன்னரும் இறுதியாக எந்தச்சிந்தனையுடன் விடைபெறுகின்றோம் என்பது அவசியமானது ஆகலாம் (என்னைப்பொறுத்தவரை).

சாவு இன்னொரு உலகத்திற்கான நுழைவு என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

இங்கு விடயம் என்ன என்றால் அதே சாவு ஏனைய உயிரினங்களுக்கும் ஏற்படும்போது, விஞ்ஞான ரீதியாக பார்த்தால் ஓர் உயிரி எனும்வகையில் எவ்வாறு வெவேறு உயிரிகள் வெவ்வேறு விதமாக உபசரிக்கப்படமுடியும் என்பதே. ஒரு நுண்ணங்கிக்கோ, ஒரு பூச்சிக்கோ, ஒரு தவளைக்கோ ஏற்படுகின்ற இறுதிமுடிவுக்கும், மனிதனுக்கு சாவின்பின் ஏற்படும் முடிவுக்கும் வேறுபாடுகள் காணப்படுமானால் அதை விஞ்ஞானரீதியாய் எப்படி அணுகமுடியும் என்று சிந்தித்துபார்க்கலாம். உங்களுக்கு யேசு தோன்றுவார் என்றால் ஏனைய உயிரிகளுக்கும் (அவை எவையாக அமைந்தாலும், எத்தனை கலங்களின் கூட்டமாக அமைந்தாலும்) அவரது தரிசனம் அவைக்கும் கிடைக்குமா? இன்னோர் கேள்வி உயிரி என்றால் எதுவரை எமக்கு நிகரானதாக அவற்றை ஏற்றுக்கொள்ளலாம்? (எவ்வாறு அவை அழிவின்பின் கையாளப்படும் எனும்வகையில்)

நான் எல்லாமே அந்த அந்த நேரம் முகம் கொடுப்பதுதான் .அடுத்து வருவது பற்றி பெரிதாக சிந்திப்பதில்லை. "கொன்றால் பாவம் தின்றால் போச்சு" இதுதான் என் கட்சி .பெரிதாக சென்டிமென்டுக்கும் இடமில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அடிக்கடி பாவிக்கும் சொல் "கடவுளே".

நிகழ்காலத்துடன் வாழ்வதை தன்னுணர்வுடன் வாழ்வதற்கு நிகரானதாக, தன்னிலையறிந்து வாழ்வதற்கு ஒப்பானதாகக்கூறலாம். நீங்கள் ஒவ்வொரு கணமும் தன்னிலையறிந்து வாழ்வீர்களாயின் இறுதிக்கணம் பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லையோ என்று நினைக்கின்றேன்.

மரணம் என்றோ நிகழ்வது திண்ணம். அது ஒன்றுதான் வாழ்வில் நிச்சையாமானது என்பதால் மரணத்தைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. முடிந்தால் அந்த இறுதிக் கணமும் நிம்மதியாக, இன்பமாகக் கழிய வேண்டும்.

உடலின் முதுமையும் நிச்சயமான ஒன்று. மரணத்திற்காக நீண்டகால ஒழுங்கில் நடைபெறும் நாளாந்த ஒத்திகையாக முதுமையைக்கூறலாமா?

Link to comment
Share on other sites

இங்கு விடயம் என்ன என்றால் அதே சாவு ஏனைய உயிரினங்களுக்கும் ஏற்படும்போது, விஞ்ஞான ரீதியாக பார்த்தால் ஓர் உயிரி எனும்வகையில் எவ்வாறு வெவேறு உயிரிகள் வெவ்வேறு விதமாக உபசரிக்கப்படமுடியும் என்பதே. ஒரு நுண்ணங்கிக்கோ, ஒரு பூச்சிக்கோ, ஒரு தவளைக்கோ ஏற்படுகின்ற இறுதிமுடிவுக்கும், மனிதனுக்கு சாவின்பின் ஏற்படும் முடிவுக்கும் வேறுபாடுகள் காணப்படுமானால் அதை விஞ்ஞானரீதியாய் எப்படி அணுகமுடியும் என்று சிந்தித்துபார்க்கலாம். உங்களுக்கு யேசு தோன்றுவார் என்றால் ஏனைய உயிரிகளுக்கும் (அவை எவையாக அமைந்தாலும், எத்தனை கலங்களின் கூட்டமாக அமைந்தாலும்) அவரது தரிசனம் அவைக்கும் கிடைக்குமா? இன்னோர் கேள்வி உயிரி என்றால் எதுவரை எமக்கு நிகரானதாக அவற்றை ஏற்றுக்கொள்ளலாம்? (எவ்வாறு அவை அழிவின்பின் கையாளப்படும் எனும்வகையில்)

மிகவும் அருமை..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை ஒவ்வொரு நாளும் படுக்கும் போதும் இன்டைக்கு படுத்தால் நாளைக்கு எழும்புவோமோ என்று பயப்படுபவர்கள் தான் எதாவது சொல்லிக் கொண்டு இருப்பார்கள் மற்றவர்கள் கடவுளை கும்பிட்டுட்டு படுக்கப் போவார்கள்...எல்லோருக்கும் சாவு வரும் தான் அது நித்திரையிலும் வரலாம்,றோட்டால் போகும் போதும் வரலாம் அதற்காக எந்த நேரமும் சாவை பற்றி நினைத்துக் கொண்டு இருக்க வேண்டுமா அது வாற நேர‌த்திற்கு வர‌ட்டுமே!...எந்த நேர‌மும் மர‌ணத்தைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால் வாழ்க்கை கச‌க்காதா என்ன?...ஒரு தட‌வை சாவின் விளிம்பிற்கு போய் வந்தவர்களுக்கு மர‌ணம் பயம் இருக்காதாம் என சொல்லக் கேள்வி ஆனால் அப்படிப் பட்டவர்கள் கூட‌ மர‌ணத்தை விளைவிக்க கூடிய ஆபத்து வந்தால் தப்பிக்க தான் பார்ப்பார்களே தவிர‌ மர‌ணமே வா என்று வர‌வேற்க மாட்டார்கள் இவர்களைத்[தற்கொலைப் போராளிகளும்,தற்கொலை செய்பவர்களும்] தவிர‌ <_<

Link to comment
Share on other sites

எந்த நேர‌மும் மர‌ணத்தைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால் வாழ்க்கை கச‌க்காதா என்ன?...

எந்த நேரமும் சாவைப் பற்றி யோசிப்பதற்கும், சாவு பற்றிய பிரக்ஞைக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கு ரதி. தான் செத்த பிறகும் தன் குடும்பம் வாழ வேண்டும் என நினைத்து ஆயுட்காப்புறுதி எடுப்பவருக்கும், பக்கத்து வீட்டில் தீப்பற்றும் போது தீயில் கருகி இறந்து விடுவமோ என நினைத்து ஓடிப் போய் காப்பாற்றாமல் இருப்பவர்களுக்கும் இடையிலான வேறுபாடு தான் இது. முன்னவருக்கு சாவு பற்றிய பிரக்ஞை அதன் பின்னான நிகழ்வுகள் பற்றிய அக்கறை இருக்கு, இரண்டாமவருக்கு சாவு பற்றிய பயம் இருக்கு.

எனக்கு சாவு பற்றிய பிரக்ஞை இருப்பதால் தான் வாழ்வை மிகவும் ரம்மியமானதாக வைத்திருக்க விரும்புகின்றேன். முடிந்த போதெல்லாம் ஊர் ஊராகச் சுற்றி அங்குள்ள அழகிய இடங்களை பிள்ளைகளுக்கும் காட்டி மகிழ்கின்றேன். ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டு ருசிக்க விரும்புகின்றேன். பாலியல் விடயங்களும் ஒன்றையும் மிச்சம் வைக்க கூடாது என்று எண்ணுகின்றேன். நான் செத்துப் போய் கிடக்கும் போது என் முகத்தில் நிச்சயம் புன்னகை இருக்கும்.

சாவு பயம் தரும் ஒன்றல்ல; மாறாக வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தப்படுத்தும் நிகழ்வு. அதற்கான முற்கூட்டிய தயார்படுத்தல்கள் அவசியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.