Jump to content

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!


Recommended Posts

டொரன்டோ: இசைஞானி இளையராஜா கனடாவில் நடத்தவிருக்கும் கச்சேரியைப் புறக்கணிக்குமாறு கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே!

தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம்.

எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்றுவதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம்.

இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை. ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான்.

ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான்.

எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள். கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

Thatstamil

Link to post
Share on other sites
 • Replies 248
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே பூவரசம் பூவுக்கும் ஒரு அறிக்கை விடுறது

Link to post
Share on other sites

அப்பிடியே பூவரசம் பூவுக்கும் ஒரு அறிக்கை விடுறது

உங்க ஊர் காரங்க தானே நீங்க தான் கெடுத்து சாரி எடுத்து சொல்லனும்னே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]கனடாவில் யாரும் அறிக்கைகள் விடலாம் - காரணம் பேச்சு சுதந்திரம்.[/size]

[size=4]மக்களுக்கும் முடிவை எடுக்கும் சுதந்திரம் உள்ளது, தடைகள் இல்லை.[/size]

Link to post
Share on other sites

|||ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.|||

இது அநேகமாக பொய்யான தகவல்.

Link to post
Share on other sites

என்னுடைய ஆதங்கம் எல்லாம் இது தான் மக்கள் எபிடியும் இந்த நிகழ்ச்சிக்கு போக தான் போகின்றார்கள்.....அப்போ புலிகளுக்கு ஆதரவு இல்லை என்ற ஒரு தோற்றப்பாடு வரபோகின்றது அல்லாவா? இந்தியர்கள் என்ன நினைக்க போகின்றார்கள் எம்மைப்பற்றி?

சீ என்ன பழக்கம் இது கறுமம் கறுமம் தலையில அடிச்சிக்க வேண்டியது தான்

Link to post
Share on other sites

இலவசமாக எப்படி விற்பது? :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
:lol::D :D
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

|||ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.|||

இது அநேகமாக பொய்யான தகவல்.

40 டொலர் சீட்டு 20 ரூபாவுக்கு விற்பனையாகின்றது.இது உண்மையான தகவல்

Link to post
Share on other sites

என்னப்பா நடக்குது இங்க.?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்க ஊர் காரங்க தானே நீங்க தான் கெடுத்து சாரி எடுத்து சொல்லனும்னே

கார்த்திகை நாலாம் திகதி

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் வருடாவருடம் நிகழ்த்தப்படும் தென்னங்கீற்று நிகழ்வு நடைபெறஉள்ளது.

பிரதம அததியாக பொன் சுந்தரலிங்கம் அவர்கள் கனடாவிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார்.

குறிப்பு: கார்த்திகை மாதம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடாத்தக்கூடாது என்பது காலதாமதமாகி தெரிய வந்திருப்பதால் அடுத்த முறை இது கவனத்தில் கொள்ளப்படும்.

நன்றி.

Link to post
Share on other sites

ஆம், சுண்டல் மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு போகத்தான் போகிறார்கள். ஆயினும் கவலையை விடுங்கள்.

தேசியத்தின் பெயரில் இளையராஜா நிகழ்வை சிலர் எதிர்க்கின்றார்கள். பதிலுக்கு என் போன்றவர்களும் தேசியத்தின் பெயரிலேயே இளையராஜாவை ஆதரித்துப் பேசுகிறோம்.

போனாலும் தேசியம்தான். போகாது விட்டாலும் தேசியம்தான்.

Link to post
Share on other sites

விசுகு, கார்த்திகை மாதம் முழுவதும் இப்படியான விழாக்களை நடத்தக்கூடாது என்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது?

Link to post
Share on other sites

கார்த்திகை நாலாம் திகதி

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் வருடாவருடம் நிகழ்த்தப்படும் தென்னங்கீற்று நிகழ்வு நடைபெறஉள்ளது.

பிரதம அததியாக பொன் சுந்தரலிங்கம் அவர்கள் கனடாவிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார்.

குறிப்பு: கார்த்திகை மாதம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடாத்தக்கூடாது என்பது காலதாமதமாகி தெரிய வந்திருப்பதால் அடுத்த முறை இது கவனத்தில் கொள்ளப்படும்.

நன்றி.

அதெல்லாம் கவனத்தில் எடுக்கவே தேவைல்ல அந்த ஏழு நாளும் நிகழ்வுகளை தவிர்த்தால் நன்று

மற்றும்படி அந்த மாதத்தில் நிகழ்ச்சி நடத்த தடை இல்லை

Link to post
Share on other sites

அப்படி இல்லை சுண்டல், நாங்கள் தேசியத்தின் பெயரில் வருகின்ற அறிக்கைகளுக்கு எல்லாம் தலையாட்டியே பழகி விட்டோம். கேள்விகள் கேட்டு எங்களுக்கு பழக்கம் இல்லை.

முதலில் ஒரு நாள் என்று அறிவித்து, பின்பு ஏழு நாள் என்று அறிவித்து, அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் முதல் நான்கு நாட்கள் சாதரணமாகவும் பின்பு மூன்று நாட்கள் பெரிய அளவிலும் நினைவுகூரச் சொன்ன தலைவரை விட இங்கே நிறைய அறிவாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மாதம் விரதம் இருக்கச் சொல்வார்களாம். அவர்கள் சொன்னவுடன் இவர்கள் செய்வார்களாம்.

இப்படியானவர்கள்தான் தமிழீழம் எடுத்துத் தரப் போகிறார்களாம்.

Link to post
Share on other sites

மற்றது இப்பிடியான ஊர் நிகழ்வுகள் மூலம் நீங்கள் உங்கள் ஊரில் சில அபிவிருத்திகளை செய்ய போகின்றீர்கள் நாளைய தமிழ் ஈழத்தின் ஒரு ஊர் அபிவிருத்தி ஆகின்றது என்பதனை நினைத்து உறங்கிக்கொண்டு இருக்கும் மாவீரர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்

Link to post
Share on other sites

நல்ல நிகழ்வுகள் எந்த நாளில் என்றாலும் நடக்கட்டும்.

2009 மே வரை தேசியத்தின் பெயரால் இங்கே உள்ள வியாபாரிகளை சகித்துக் கொண்டோம். மீண்டும் இவர்களை தேசியத்தின் பெயரில் வியாபாரம் செய்ய அனுமதிக்க முடியாது.

சுயமான சிந்தனை உள்ளவர்கள் வர வேண்டும். அவர்கள் ஒன்று கூடிப் பேச வேண்டும். தமிழர்களின் விடிவுக்கு தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அதை விடுத்து யாரோ ஒருவன் தூண்டி விடுவான். நாலு சங்கங்களின் பெயரில் அறிக்கை வரும். அதைக் கேட்டு நாம் தலையாட்டுவோமாம். வெட்கம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விசுகு, கார்த்திகை மாதம் முழுவதும் இப்படியான விழாக்களை நடத்தக்கூடாது என்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது?

தேசியம் சார்ந்தும்

மாவீரர் சார்ந்தும்

மாவீரர் நாள் அல்லது அதையும் தாண்டி மாவீரர் வாரம் என்பதையே நான் அறிந்துள்ளேன்.

ஆனால் முள்ளிவாய்க்கால் இழப்பின் பின் கார்த்திகை மாதம் முழுவதையும் ஒரு ஆட்மபரமற்ற மாதமாக்கவேண்டும் என்ற கருத்து சில மக்களிடையே இருந்துவருவது உண்மை. ஆனால் அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதுடன் அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்பதும் தெரியும்.

அத்துடன் நாங்கள் பிரான்சிலிருந்து இயங்குவதனால் இங்கு எல்லோருக்கும் பல மாதங்கள் முன்பே எமது திகதிகளை கொடுத்துவிடுவோம். எமக்கு அப்படி ஒரு பதிலும் இதுவரை வரவில்லை.

எனவே

இது தொடரும்

ஆனால் தமிழ் மக்களால் கார்த்திகை மாதம் முழுவதையும் ஆடம்பரமற்ற மாதமாக அறிவிக்கப்பட்டால் அதை எமது ஒன்றியம் நிச்சயம் கவனத்தில் எடுக்கும்.

தமிழரின் தாகம்

தமிழீழ தாகம்.

நன்றி.

Link to post
Share on other sites

விசுகு, உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

நீங்கள் சொன்னது போன்று சுதந்திரமான மக்களிடம் இருந்து இந்த சிந்தனைகள் வர வேண்டும். அப்படி வருகின்ற பொழுது, அதற்கு என்னுடைய ஆதரவு கட்டாயம் இருக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மற்றது இப்பிடியான ஊர் நிகழ்வுகள் மூலம் நீங்கள் உங்கள் ஊரில் சில அபிவிருத்திகளை செய்ய போகின்றீர்கள் நாளைய தமிழ் ஈழத்தின் ஒரு ஊர் அபிவிருத்தி ஆகின்றது என்பதனை நினைத்து உறங்கிக்கொண்டு இருக்கும் மாவீரர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்

தொடர்ந்து இவ்வருடமும் (2012)

[size=5]12 முன்பள்ளிகளுக்குமான நிர்வாகச்செலவு, [/size]

[size=5]15ஆசிரியர்களுக்கான வேதனமும், மற்றும் [/size]

[size=5]222 சிறார்களுக்கான மதியஉணவுக்குமாக[/size]

இலங்கை நாணயத்தில் ரூபா 804000 சர்வோதயத்தினூடக வழ‌ங்கப்பட்டது.

http://pungudutivufr...com/திட்டங்கள்/

நன்றி சுண்டல்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விசுகு, உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

நீங்கள் சொன்னது போன்று சுதந்திரமான மக்களிடம் இருந்து இந்த சிந்தனைகள் வர வேண்டும். அப்படி வருகின்ற பொழுது, அதற்கு என்னுடைய ஆதரவு கட்டாயம் இருக்கும்.

நன்றி சபேசன்

ஒரு மாதிரி சிந்திக்கின்றோம்

அடிக்கடி கடி படுகின்றோம் :lol::D :D

Link to post
Share on other sites

இது போட்டி வியாபாரம். ஒரு நாள் ஒரு மாதமாக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் யார் எப்படி உருவாக்குகின்றார்கள் என்பது மர்மம். இன்று கார்த்திகை நாளை மேமாதம் பின்னர் இது தியாகி திலீபன் இறந்த நாள் மாதம் என்று தொடராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வருடம் முழுவதும் மாவீரர்கள் நினைவு தினங்கள் இருக்கின்றது. இவற்றை எல்லாம் நெறிப்படுத்த ஒரு ஒழுங்கான மக்களாதரவுபெற்ற அமைப்பும் இல்லை. புலம்பெயர் தேசங்களில் பெருகிக்கிடக்கும் ஊர்ச்சங்கங்கள் ஒன்றியங்கள் இதன் பின்விழைவில் அடித்துக்கொள்வது அடுத்து நடக்கும். கும்பல்ல கோவிந்த போடுவதுபோல் இந்தக் குடுமிச் சண்டைகளுக்குள் தமிழ்த்தேசியக் கோசம் இருக்கும்.

ஒரு ஒன்று கூடலை நிகழ்வை எப்படி தேசியத்தின் சார்பாக மாற்றுவது அல்லது அதனூடாக தேசியக் கருத்தியலை முன்னெடுப்பது என்று சிந்திப்பதே சாதகமானது. இது நிகழ்வை தடுத்து அடவடி எதிர்மறைத்தனமாக தேசியத்தை நிலைநாட்ட முற்படுவது தேசியத்துக்கு எதிரான செயற்பாடு. இங்கே தேசியம் என்ற பொதுத்தன்மையில் ஈடுபாடுகொண்டவர்கள் இரண்டாக பிழக்கப்படுகின்றார்கள். நிகழ்வுக்குப் போனவர் தேசியவாதியல்ல போகாதவர் தேசியவாதி. இது ஆரம்பம்தான் இனி இது தொடரும். இந்தக் குழப்பவாதிகளை விட டக்ளஸ் கருணா போன்றவர்கள் எவ்வளவோ மேல். தெளிவாக சிங்களவனின் பக்கம் நிற்கின்றார்கள். இரண்டும் கெட்டான் நிலையில் அவர்கள் இல்லை.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நாங்கள் சிங்கம் போல கர்சித்துக் கொண்டு அம்மா தம்பி தங்கைகளை வெருட்டிக்கொண்டு திரிந்தோம்.கலியாணக் கட்டியபின் எப்படித்தான் அப்படியொரு பக்குவம் வருகுதோ தெரியவில்லை. காலில அடிவாங்கிய டாக் மாதிரி (நாய் என்று சொல்ல ஒரு மாதிரி இருக்கு) அனுங்கிக் கொண்டு திரிகிறம்.உங்கட நிலைமையையும் பார்க்க கொஞ்சம் ஆறுதலாய் இருக்கு......!  😂
  • எமக்கான நீதியை சர்வதேசமே பெற்றுக்கொடுக்க வேண்டும் – பா.அரியநேத்திரன் கோரிக்கை    24 Views சிறீலங்கா அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தியும் எந்தவித பயனும் இல்லாத காரணத்தினால் இறுதியாக சர்வதேசத்தின் ஊடாக ஒரு நீதியை தாருங்கள் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும்  முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில்   சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நேற்று ஆரம்பமான இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பா.அரியநேத்திரன், சிறீலங்கா அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையும் வைத்து பிரயோசனம் இல்லையென்ற காரணத்தினால் சர்வதேசத்திடமே எமக்கான நீதியைப்பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற காரணத்தினால் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனைவிட சுதந்திரமாக நடமாடக்கூடிய நீதி,போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல்போன்ற   பல விடயங்களை இந்த அரசாங்கம் மறுத்துவருகின்றது. கடந்த 73வருடங்களாக இந்த நாட்டில் மாறிமாறி வந்த அரசுகள் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்காமல் இழுத்தடித்தே வருகின்றது.2009 மே 19க்கு பின்னர் 11வருடங்கள் தற்போது கடந்துள்ளது. இந்த 11வருடங்களும் தொடர்ச்சியான அவலங்களையே தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 1500 நாட்களை தாண்டியும் போராடிவருகின்றனர். ஐநா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை ஒன்றின் ஊடாக சர்வதேச பொறிமுறையொன்றினை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுக்கும் போராட்டம் இல்லை. சர்வதேசத்தினை எங்களை நோக்கி திருப்புகின்ற போராட்டமாகவே இதனைமாற்றியிருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தியும் எந்தவித பயனும் இல்லாத காரணத்தினால் இறுதியாக சர்வதேசத்தின் ஊடாக ஒரு நீதியை தாருங்கள் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார்.   https://www.ilakku.org/?p=43694  
  • ஜனாஸாக்கள் நல்லடக்கம் – பாதுப்பு ஏதும் வந்தால் பொறுப்பேற்கத் தயார் -கல்முனை மாநகர முதல்வர்    17 Views கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்வதற்கும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொறுப்பேற்பதற்கும்  தயாராக  உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் ஜனாசா விடயம் தொடர்பாக புதன்கிழமை  இரவு  விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, “20ஆவது அரசியல் சீர்திருத்த வாக்கெடுப்பில்  ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் முன்வைக்கப்பட்டுவரும் விடயங்களானது குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் கொண்ட கசப்புணர்வும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் சொந்த ஏனைய விடயங்களுடன்  போலியான வதந்திகளை  பரப்புகின்றனர். நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்தோம். ஆனால் இந்த அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு ஆதரவு இருப்பதனால் அரசாங்கத்தில் ஜனநாயகமாக எதுவும் நடைபெறாமல் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இப்போது முஸ்லிம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை சிலர் பாகிஸ்தான் பிரதமரின் வருகைக்கு இந்த அரசாங்கம் கொடுத்த பரிசு போல பேசுகிறார்கள். இந்த விடயம் அவரின் வருகைக்கு முன்னரே நடந்துமுடிந்து வர்த்தமானி அறிவிப்புக்கான இறுதித் தருவாயில் இருந்தது.ஆளும் தரப்பு  எதிர்தரப்பு எம்.பிக்களின் அழுத்தம், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களின் வேண்டுகோள்கள், சர்வதேச அழுத்தங்கள், 20க்கு ஆதரவளித்த எம்.பிக்களின் உடன்பாடுகள்,ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு 18 முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறவேண்டிய தேவை, என்பன பலதும் சேர்ந்து அவ்விடயங்களில் ஒன்றாகவே பாகிஸ்தான் பிரதமரின் வருகையும் அமைந்திருந்தது. இப்படி பலவிடயங்களும் ஒன்றிணைந்தே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக சாதகமாக அமைந்தது. 20க்கு ஆதரளவிக்கும் விடயம் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரத்தை பாராளுமன்ற குழுவுக்கே கட்சி உயர்பீடம் வழங்கியது.  அதனடிப்படையிலையே அவர்கள் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இருந்தாலும் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிராகவே வாக்களித்தார். நாங்கள் அரசாங்கங்களை எதிர்த்து எதையும் பெறவும் இல்லை, பெறவும் முடியாது. எங்களின் சமூகத்திற்கு உரிமைகள், தொழில்வாய்ப்பு, அபிவிருத்திகள் என பல தேவைகள் இருக்கிறது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கோஷம் எழுப்பினர். இந்த பிரச்சினை பல வருடங்களாக இருக்கிறது. இது தொடர்பில் தீர்க்கமான முடிவை பெற அமைச்சர் சமல் ராஜபக்ச ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். அந்த குழு சரியான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்.ஜனாஸாவை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை எமக்கில்லை. இலங்கையில் அதிக முஸ்லிங்களின் அபிமானத்தை பெற்ற நாங்கள் முஸ்லிங்களின் பிரச்சினைகள் தொடர்பில் எப்போதும் கரிசனை செலுத்துவோம். அப்போது இணங்கிச்சென்றும், அல்லது எதிர்த்தும் போராடி எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முயற்சிப்போம். அதற்காக எங்களின் எம்.பிக்கள் பணம் பெற்றார்கள் என்பது நம்பமுடியாத கட்டுக்கதைகள். ஆதாரமில்லாமல் பேசுகிறார்கள். அரசிடம் நாங்கள் முன்வைக்கும் ஒரே கோரிக்கை எங்களின் கொரோனா தொற்று ஜனாஸாக்களை இரணைமடு தீவில் அடக்காமல் எங்களின் பிரதேசங்களில் நல்லடக்கம் செய்ய முன்வாருங்கள் என்பதே. அதன் மூலம் ஏதாவது பக்கவிளைவுகள் வந்தால் அதை நாங்களே பொறுப்பெடுப்போம் என்றார். இந்த ஊடகசந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இம்ரான்கானின் வருகைக்கு முன்னரே பல அழுத்தங்களினால் வர்த்தமானி தயாராகி விட்டது இருந்த போதிலும் கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்வதற்கும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொறுப்பேற்பதற்கும் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.     https://www.ilakku.org/?p=43697
  • உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் காணியை வனவளத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்க கோரிக்கை    18 Views வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள உயர்தொழில்நுட்பவியல் நிறுவகம் அமைந்துள்ள காணியை வனவளத்திணைக்களத்தால் விடுவிக்கப்படாமல் உள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி குற்றம் சாட்டினார்.   வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.   இதன்போது கருத்து தெரிவித்த உயர்தொழில் நுட்ப கல்விநிறுவகத்தின் கல்வி இணைப்பாளர் பெ. இளங்குமரன், தமது நிறுவனம் நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றது. இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.   எமது கல்லூரி அமைந்துள்ள காணி 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. எனினும் வனவளத்திணைக்களத்தின் கீழ் இருந்து இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் உரிமைபத்திரம் பெற்றுகொள்ள முடியவில்லை.   இது தொடர்பாக உரிய திணைக்களத்திற்கு பிரதேச செயலாளரூடாக 2016ஆம் ஆண்டில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாக சென்று தெரிவித்தும்  எந்த விதபலனும் கிடைக்கவில்லை.   காணிக்கான உரிமைபத்திரம் இன்மையால் மேலதிகமான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நிதியினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்றார்.   இது தொடர்பாக பிரதேச செயலாளரால் அனுப்பபட்ட கடிதத்தின் பிரதியினை வனவளத்திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவர் தெரிவித்ததுடன், எதிர்வரும் பத்து நாட்களிற்குள் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனக்கு அறிக்கையிடுமாறு வனவளதிணைக்களத்திற்கு பணித்தார்.     https://www.ilakku.org/?p=43690
  • விதை நெல் சுத்திகரிப்பு விவகாரம் – தொடர்ந்து தாம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை  17 Views வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை நெல் சுத்திகரிக்க முடியாத நிலையில் விவசாயிகள் இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன் விதை தானியங்கள் சுத்திகரிக்கப்பட்டும் வழங்கப்படுவது வழக்கம்.   தற்போது சிறுபோக செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களிடமுள்ள விதை நெல்லை சுத்திகரிப்பு செய்ய பண்ணைக்கு சென்றால் அங்கு பணிபுரிபவர்கள் பொறுப்பற்ற பதிலை சொல்லி திருப்பி அனுப்புகின்றனர்.   ஒரே இன நெல்லையே தம்மால் தொடர்சியாக சுத்திகரிப்பு செய்ய முடியும். வெவ்வேறு இனங்கள் ஆயின் அந்தந்த இனங்கள் பல ஆயிரம் கிலோ வரை சேர்ந்தால் மட்டுமே சுத்திகரிப்பு செய்ய முடியும். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என விவசாயிகள் திருப்பி அனுப்ப படுகின்றனர்.   வவுனியாவில் உளுந்து செய்கையாளர் ஒருவர் இந்த பிரச்சனை குறித்து தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்தார்,   ‘நான் பல வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றேன். இம்முறை உளுந்து பயிரிட்டேன். மழை காரணமாக அவை சரியான விளைச்சலை தரவில்லை. 150 கிலோ வரை அறுவடை செய்ய முடிந்தது. அதுவும் தரமான உளுந்தாக வரவில்லை. அந்த உழுந்தை சுத்தம் செய்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இப்படி பல தடவைகள் பண்ணையில் சுத்தம் செய்து விற்பனை செய்திருக்கிறேன். இம்முறை உழுந்தை சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்றபோது வாயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.   முகாமையாளரிடம் அனுமதி பெற்று அவரால் குறிப்பிடப்படும் தினத்தில் கொண்டு வந்துதான் சுத்தம் செய்யலாம் என்றனர்.   உழுந்தை உள்ளே கொண்டு செல்ல அவர் அனுமதிக்கவில்லை. குறித்த உழுந்தை வாடகை வாகனத்தில் ஏற்றிவந்து மீள வீட்டுக்கு கொண்டு செல்ல 3000 ரூபா செலவானது” என்றார்.   விதை நெல் சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்ற பலரும் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.   தம்மிடம் பல ஆயிரம் கிலோ தானியங்கள் இல்லை. விதை தேவைக்காக சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்றால் பல ஆயிரம் கிலோ சேர்ந்தால் தான் சுத்தம் செய்ய முடியும் என்றால் சிறுபோக விதைப்பை பெரும்போகத்தில்தான் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்   https://www.ilakku.org/?p=43686
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.