SUNDHAL 1,081 பதியப்பட்டது October 22, 2012 Share பதியப்பட்டது October 22, 2012 டொரன்டோ: இசைஞானி இளையராஜா கனடாவில் நடத்தவிருக்கும் கச்சேரியைப் புறக்கணிக்குமாறு கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை: எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே! தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம். எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்றுவதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம். இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை. ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான். ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான். எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள். கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது. எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். Thatstamil Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் நந்தன் 1,612 Posted October 22, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2012 அப்பிடியே பூவரசம் பூவுக்கும் ஒரு அறிக்கை விடுறது Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் சபேசன் 218 Posted October 22, 2012 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted October 22, 2012 மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாய் இல்லை. Link to post Share on other sites
SUNDHAL 1,081 Posted October 22, 2012 Author Share Posted October 22, 2012 அப்பிடியே பூவரசம் பூவுக்கும் ஒரு அறிக்கை விடுறது உங்க ஊர் காரங்க தானே நீங்க தான் கெடுத்து சாரி எடுத்து சொல்லனும்னே Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் akootha 1,057 Posted October 22, 2012 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted October 22, 2012 [size=4]கனடாவில் யாரும் அறிக்கைகள் விடலாம் - காரணம் பேச்சு சுதந்திரம்.[/size] [size=4]மக்களுக்கும் முடிவை எடுக்கும் சுதந்திரம் உள்ளது, தடைகள் இல்லை.[/size] Link to post Share on other sites
nunavilan 3,541 Posted October 22, 2012 Share Posted October 22, 2012 |||ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.||| இது அநேகமாக பொய்யான தகவல். Link to post Share on other sites
சண்டமாருதன் 1,498 Posted October 22, 2012 Share Posted October 22, 2012 சுண்டல் அறிக்கை எல்லாம் விடுகின்றார். Link to post Share on other sites
SUNDHAL 1,081 Posted October 22, 2012 Author Share Posted October 22, 2012 என்னுடைய ஆதங்கம் எல்லாம் இது தான் மக்கள் எபிடியும் இந்த நிகழ்ச்சிக்கு போக தான் போகின்றார்கள்.....அப்போ புலிகளுக்கு ஆதரவு இல்லை என்ற ஒரு தோற்றப்பாடு வரபோகின்றது அல்லாவா? இந்தியர்கள் என்ன நினைக்க போகின்றார்கள் எம்மைப்பற்றி? சீ என்ன பழக்கம் இது கறுமம் கறுமம் தலையில அடிச்சிக்க வேண்டியது தான் Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் இசைக்கலைஞன் 3,121 Posted October 22, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2012 இலவசமாக எப்படி விற்பது? Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் தமிழ்சூரியன் 1,533 Posted October 22, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2012 :D Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் BLUE BIRD 255 Posted October 22, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2012 |||ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.||| இது அநேகமாக பொய்யான தகவல். 40 டொலர் சீட்டு 20 ரூபாவுக்கு விற்பனையாகின்றது.இது உண்மையான தகவல் Link to post Share on other sites
sitpi 3 Posted October 22, 2012 Share Posted October 22, 2012 என்னப்பா நடக்குது இங்க.? Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விசுகு 4,140 Posted October 22, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2012 உங்க ஊர் காரங்க தானே நீங்க தான் கெடுத்து சாரி எடுத்து சொல்லனும்னே கார்த்திகை நாலாம் திகதி FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் வருடாவருடம் நிகழ்த்தப்படும் தென்னங்கீற்று நிகழ்வு நடைபெறஉள்ளது. பிரதம அததியாக பொன் சுந்தரலிங்கம் அவர்கள் கனடாவிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார். குறிப்பு: கார்த்திகை மாதம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடாத்தக்கூடாது என்பது காலதாமதமாகி தெரிய வந்திருப்பதால் அடுத்த முறை இது கவனத்தில் கொள்ளப்படும். நன்றி. Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் சபேசன் 218 Posted October 22, 2012 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted October 22, 2012 ஆம், சுண்டல் மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு போகத்தான் போகிறார்கள். ஆயினும் கவலையை விடுங்கள். தேசியத்தின் பெயரில் இளையராஜா நிகழ்வை சிலர் எதிர்க்கின்றார்கள். பதிலுக்கு என் போன்றவர்களும் தேசியத்தின் பெயரிலேயே இளையராஜாவை ஆதரித்துப் பேசுகிறோம். போனாலும் தேசியம்தான். போகாது விட்டாலும் தேசியம்தான். Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் சபேசன் 218 Posted October 22, 2012 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted October 22, 2012 விசுகு, கார்த்திகை மாதம் முழுவதும் இப்படியான விழாக்களை நடத்தக்கூடாது என்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? Link to post Share on other sites
SUNDHAL 1,081 Posted October 22, 2012 Author Share Posted October 22, 2012 கார்த்திகை நாலாம் திகதி FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் வருடாவருடம் நிகழ்த்தப்படும் தென்னங்கீற்று நிகழ்வு நடைபெறஉள்ளது. பிரதம அததியாக பொன் சுந்தரலிங்கம் அவர்கள் கனடாவிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார். குறிப்பு: கார்த்திகை மாதம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடாத்தக்கூடாது என்பது காலதாமதமாகி தெரிய வந்திருப்பதால் அடுத்த முறை இது கவனத்தில் கொள்ளப்படும். நன்றி. அதெல்லாம் கவனத்தில் எடுக்கவே தேவைல்ல அந்த ஏழு நாளும் நிகழ்வுகளை தவிர்த்தால் நன்று மற்றும்படி அந்த மாதத்தில் நிகழ்ச்சி நடத்த தடை இல்லை Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் சபேசன் 218 Posted October 22, 2012 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted October 22, 2012 அப்படி இல்லை சுண்டல், நாங்கள் தேசியத்தின் பெயரில் வருகின்ற அறிக்கைகளுக்கு எல்லாம் தலையாட்டியே பழகி விட்டோம். கேள்விகள் கேட்டு எங்களுக்கு பழக்கம் இல்லை. முதலில் ஒரு நாள் என்று அறிவித்து, பின்பு ஏழு நாள் என்று அறிவித்து, அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் முதல் நான்கு நாட்கள் சாதரணமாகவும் பின்பு மூன்று நாட்கள் பெரிய அளவிலும் நினைவுகூரச் சொன்ன தலைவரை விட இங்கே நிறைய அறிவாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மாதம் விரதம் இருக்கச் சொல்வார்களாம். அவர்கள் சொன்னவுடன் இவர்கள் செய்வார்களாம். இப்படியானவர்கள்தான் தமிழீழம் எடுத்துத் தரப் போகிறார்களாம். Link to post Share on other sites
SUNDHAL 1,081 Posted October 22, 2012 Author Share Posted October 22, 2012 மற்றது இப்பிடியான ஊர் நிகழ்வுகள் மூலம் நீங்கள் உங்கள் ஊரில் சில அபிவிருத்திகளை செய்ய போகின்றீர்கள் நாளைய தமிழ் ஈழத்தின் ஒரு ஊர் அபிவிருத்தி ஆகின்றது என்பதனை நினைத்து உறங்கிக்கொண்டு இருக்கும் மாவீரர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள் Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் சபேசன் 218 Posted October 22, 2012 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted October 22, 2012 நல்ல நிகழ்வுகள் எந்த நாளில் என்றாலும் நடக்கட்டும். 2009 மே வரை தேசியத்தின் பெயரால் இங்கே உள்ள வியாபாரிகளை சகித்துக் கொண்டோம். மீண்டும் இவர்களை தேசியத்தின் பெயரில் வியாபாரம் செய்ய அனுமதிக்க முடியாது. சுயமான சிந்தனை உள்ளவர்கள் வர வேண்டும். அவர்கள் ஒன்று கூடிப் பேச வேண்டும். தமிழர்களின் விடிவுக்கு தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து யாரோ ஒருவன் தூண்டி விடுவான். நாலு சங்கங்களின் பெயரில் அறிக்கை வரும். அதைக் கேட்டு நாம் தலையாட்டுவோமாம். வெட்கம். Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விசுகு 4,140 Posted October 22, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2012 விசுகு, கார்த்திகை மாதம் முழுவதும் இப்படியான விழாக்களை நடத்தக்கூடாது என்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? தேசியம் சார்ந்தும் மாவீரர் சார்ந்தும் மாவீரர் நாள் அல்லது அதையும் தாண்டி மாவீரர் வாரம் என்பதையே நான் அறிந்துள்ளேன். ஆனால் முள்ளிவாய்க்கால் இழப்பின் பின் கார்த்திகை மாதம் முழுவதையும் ஒரு ஆட்மபரமற்ற மாதமாக்கவேண்டும் என்ற கருத்து சில மக்களிடையே இருந்துவருவது உண்மை. ஆனால் அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதுடன் அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்பதும் தெரியும். அத்துடன் நாங்கள் பிரான்சிலிருந்து இயங்குவதனால் இங்கு எல்லோருக்கும் பல மாதங்கள் முன்பே எமது திகதிகளை கொடுத்துவிடுவோம். எமக்கு அப்படி ஒரு பதிலும் இதுவரை வரவில்லை. எனவே இது தொடரும் ஆனால் தமிழ் மக்களால் கார்த்திகை மாதம் முழுவதையும் ஆடம்பரமற்ற மாதமாக அறிவிக்கப்பட்டால் அதை எமது ஒன்றியம் நிச்சயம் கவனத்தில் எடுக்கும். தமிழரின் தாகம் தமிழீழ தாகம். நன்றி. Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் சபேசன் 218 Posted October 22, 2012 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted October 22, 2012 விசுகு, உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் சொன்னது போன்று சுதந்திரமான மக்களிடம் இருந்து இந்த சிந்தனைகள் வர வேண்டும். அப்படி வருகின்ற பொழுது, அதற்கு என்னுடைய ஆதரவு கட்டாயம் இருக்கும். Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விசுகு 4,140 Posted October 22, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2012 மற்றது இப்பிடியான ஊர் நிகழ்வுகள் மூலம் நீங்கள் உங்கள் ஊரில் சில அபிவிருத்திகளை செய்ய போகின்றீர்கள் நாளைய தமிழ் ஈழத்தின் ஒரு ஊர் அபிவிருத்தி ஆகின்றது என்பதனை நினைத்து உறங்கிக்கொண்டு இருக்கும் மாவீரர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள் தொடர்ந்து இவ்வருடமும் (2012) [size=5]12 முன்பள்ளிகளுக்குமான நிர்வாகச்செலவு, [/size] [size=5]15ஆசிரியர்களுக்கான வேதனமும், மற்றும் [/size] [size=5]222 சிறார்களுக்கான மதியஉணவுக்குமாக[/size] இலங்கை நாணயத்தில் ரூபா 804000 சர்வோதயத்தினூடக வழங்கப்பட்டது. http://pungudutivufr...com/திட்டங்கள்/ நன்றி சுண்டல் Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விசுகு 4,140 Posted October 22, 2012 கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2012 விசுகு, உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் சொன்னது போன்று சுதந்திரமான மக்களிடம் இருந்து இந்த சிந்தனைகள் வர வேண்டும். அப்படி வருகின்ற பொழுது, அதற்கு என்னுடைய ஆதரவு கட்டாயம் இருக்கும். நன்றி சபேசன் ஒரு மாதிரி சிந்திக்கின்றோம் அடிக்கடி கடி படுகின்றோம் :D Link to post Share on other sites
சண்டமாருதன் 1,498 Posted October 22, 2012 Share Posted October 22, 2012 இது போட்டி வியாபாரம். ஒரு நாள் ஒரு மாதமாக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் யார் எப்படி உருவாக்குகின்றார்கள் என்பது மர்மம். இன்று கார்த்திகை நாளை மேமாதம் பின்னர் இது தியாகி திலீபன் இறந்த நாள் மாதம் என்று தொடராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வருடம் முழுவதும் மாவீரர்கள் நினைவு தினங்கள் இருக்கின்றது. இவற்றை எல்லாம் நெறிப்படுத்த ஒரு ஒழுங்கான மக்களாதரவுபெற்ற அமைப்பும் இல்லை. புலம்பெயர் தேசங்களில் பெருகிக்கிடக்கும் ஊர்ச்சங்கங்கள் ஒன்றியங்கள் இதன் பின்விழைவில் அடித்துக்கொள்வது அடுத்து நடக்கும். கும்பல்ல கோவிந்த போடுவதுபோல் இந்தக் குடுமிச் சண்டைகளுக்குள் தமிழ்த்தேசியக் கோசம் இருக்கும். ஒரு ஒன்று கூடலை நிகழ்வை எப்படி தேசியத்தின் சார்பாக மாற்றுவது அல்லது அதனூடாக தேசியக் கருத்தியலை முன்னெடுப்பது என்று சிந்திப்பதே சாதகமானது. இது நிகழ்வை தடுத்து அடவடி எதிர்மறைத்தனமாக தேசியத்தை நிலைநாட்ட முற்படுவது தேசியத்துக்கு எதிரான செயற்பாடு. இங்கே தேசியம் என்ற பொதுத்தன்மையில் ஈடுபாடுகொண்டவர்கள் இரண்டாக பிழக்கப்படுகின்றார்கள். நிகழ்வுக்குப் போனவர் தேசியவாதியல்ல போகாதவர் தேசியவாதி. இது ஆரம்பம்தான் இனி இது தொடரும். இந்தக் குழப்பவாதிகளை விட டக்ளஸ் கருணா போன்றவர்கள் எவ்வளவோ மேல். தெளிவாக சிங்களவனின் பக்கம் நிற்கின்றார்கள். இரண்டும் கெட்டான் நிலையில் அவர்கள் இல்லை. Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் சபேசன் 218 Posted October 22, 2012 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted October 22, 2012 கடிபடுவது இருவருடைய சிந்தனைகளையும் வளர்க்கட்டும். Link to post Share on other sites
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.