-
Tell a friend
-
Topics
-
1
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
தர்மம் தலைகாக்கும் என்பதுபோல்! தவறுகளும் தலை காக்கும்.!! தமிழர்களை இலங்கையில் இல்லாது அழித்து, அவர்கள் மண்ணை சுடு காடு ஆக்குவேன் என்று சபதம்போட்ட, யே.ஆர். யெயவர்த்தன.... தனது சபதத்தின்படி, தமிழர்களாகிய எங்களை அங்கேயே அழிப்பதை விட்டு விட்டு.... புலம்பெயர விட்டதே மிகப்பெரும் தவறு.
-
By கிருபன் · பதியப்பட்டது
அரசியல் கூட்டுக்களின் தலைவர்களின் கையொப்பம் போதுமானதென முன்மொழிந்தவர் கஜேந்திரகுமாரே: சுமந்திரன் (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கூட்டில் தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் மாத்திரம் கையொப்பம் இட்டால் போதுமானது என்று வவுனியாவில் வைத்து முன்மொழிந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே அந்த ஆவணத்தில் முதலில் கையொப்பமிட வேண்டும் என்று விக்னேஸ்வரனே பிரேரித்தார் என்றும், அதன்படியே கையொப்பங்களை இணைவழியில் பெற்றதாகவும், விக்னேஸ்வரனுக்கு அவரது அணியில் உள்ள பங்காளிக்கட்சிகள் வழங்கிய அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக ஏனைய கூட்டுக்களில் இடம்பெற்றுள்ள பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்தினை பெறுவதற்கு தான் தடையாக இருந்ததாக தன்மீது பழியைப் போட்டுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொது ஆவணத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகளுக்கு கையொப்பம் வழங்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படாமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதோடு விக்னேஸ்வரன் தமது பங்காளிக்கட்சித் தலைவர்களின் கையொப்பங்களையும் உள்ளீர்க்குமாறு கோரியபோதும் நீங்கள் அதனை செய்யவில்லை என்றும் தெரியவருகின்றதே என்று எழுப்பிய கேள்விகுப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விடயம் சம்பந்தமாக நடந்த அனைத்து விடயங்களையும் அவர் பின்பவருமாறு விபரிக்கின்றார், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள், அதுபற்றி உறுப்பு நாடுகளிடத்தில் விடுக்கப்படவேண்டிய கோரிக்கைகள், இலங்கையின் பொறுப்புக்கூறலை செய்விப்பதற்கான உபாயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகள் சிவில் அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்களின் நேரடிப்பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் உள்ளடவர்களை ஒன்றிணைத்து பொதுவான விடயங்களை உள்ளடக்கிய ஆவணமொன்றை தயாரிக்கும் முனைப்பில் சிவகரன் தலைமையிலான தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. ஆவணம் இறுதியான தருணத்தில் மின்னஞ்சல் பரிமாற்றத்தில் யார் கையொப்பம் இடுவது என்ற கேள்வி மீண்டும் எழவும், கஜேந்திரகுமார், வவுனியா கூட்டத்தில் தீர்மானித்ததன் பிரகாரம் கையொப்பங்களை இடுமாறு மின்னஞ்சலில் குறிப்பிட்டார். அதனை நானும் ஆமோதித்தேன். அதன்போது சம்பந்தன் முதலாவதாக கையொப்பம் இடுவதை தான் விரும்புவதாக மட்டுமே விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். அன்றையதினமே சம்பந்தனின் கையொப்பத்தினைப் பெற்று விக்னேஸ்வரனின் கோரிக்கையை நிறைவு செய்துவிட்டதாக நான் பதில் மின்னஞ்சல் அனுப்பினேன். கஜேந்திரகுமாரும் அன்றைதினமே பின்னரவில் கையொப்பம் இட்டிருந்தார். மறுநாள் விக்னேஸ்வரன் மட்டுமே கையொப்பமிட வேண்டியிருந்தது. அச்சமயத்தல், விக்னேஸ்வரன் அணியில் உள்ள பங்காளிகள் தாமும் கையொப்பம் இடவேண்டும் என்று அழுத்தங்களை பிரயோகிப்பதாக தகவல்கள் எனக்கு கிடைத்தது. நான் நேரடியாக விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு நான் கேள்விப்படும் விடயங்களைக் குறிப்பிட்டு விக்னேஸ்வரனை கையொப்பம் இடுமாறும் அவ்வாறு பங்காளிக்கட்சிகள் கையொப்பம் இடுவதாக இருந்தால் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் கையொப்பம் இடவேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டேன். அத்துடன் மாலை ஆறு மணி வரையிலேயே அனைவரின் கையொப்பத்தினை பெறுவதற்கான காலம் இருக்கின்றது என்பதையும் அவருக்கு நினைவு படுத்தியிருந்தேன். அவர் எந்தவிதமான பதில்களையும் தெரிவிக்காத நிலையில் தன்னுடைய கையொப்பத்தினை மட்டும் மின்னஞ்சல் ஆவணத்தில் இட்டு நண்பகலளவில் அனுப்பி வைத்திருந்தார். அந்த மின்னஞ்சல் கிடைத்ததும் மின்னஞ்சல் சங்கிலியில் இருந்த கலாநிதி குருபரன், ஆவணத்தில் கையொப்பம் இட்டமைக்கும் கையொப்பம் இடும் விவகாரத்தினை சுமூகமாக தீர்த்து வைத்தமைக்கும் நன்றிகளைத் தெரிவித்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். பின்னர் கையொப்ப ஆவணத்தினை நான் பரிசோதித்தபோது விக்னேஸ்வரனின் கையொப்பம் சற்று இடம் மாறியிருந்தது. ஆகவே அவரிடத்தில் மீண்டும் கையொப்பம் இடவேண்டியிருந்தது. நான் விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு விடயத்தினை விளக்கி மீண்டும் கையொப்பத்தினை இடுமாறு கோரியிருந்தேன். இக்காலத்தில் ஏனைய சிவில் அமைப்பினர், திருமலை மாவட்ட ஆயர் உள்ளிட்டவர்களின் கையொப்பங்களும் ஒன்றன் பின்னர் ஒன்றாக வந்தன. ஆயரின் கையொப்பம் வந்தபோது அதனை எவ்விடத்தில் வைத்து ஒழுங்குபடுத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதன்போது அனைவரின் கையொப்பங்களுக்கும் ஆசீர்வாதம் அளிக்கும் வகையில் இறுதியாக ஆயரினதும், வேலன் சுவாமிகளினதும் கையொப்பத்தினை வைப்போம் என்று முன்மொழிந்தேன். அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். அப்போது நேரம் 5மணியை எட்டியிருந்தது. விக்னேஸ்வரனின் புதிய கையொப்பம் கிடைக்காமையினால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் அப்போது தான் கையொப்பம் இட்டுள்ளதாக கூறினார். அவருடைய கையொப்பம் 5 மணி 8 நிமிடமளவில் கிடைத்தது. அவருடைய கையொப்பம் மட்டும் அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சலில் மேலதிகமாக ஒருவிடயத்தினை குறிப்பிட்டிருந்தார். அதாவது, இறுதி செய்யப்பட்ட ஆவணத்தினை அனுப்பிய பின்னர் தன்னுடைய கோப்பில் வைப்பதற்காக ஒரு பிரதியினை அனுப்பி வைக்குமாறே கோரியிருந்தார். இறுதியாக ஆறுமணிக்கு சற்றே தாமதமாக வேலன் சுவாமிகளின் கையொப்பம் வந்திருந்தது. அவர் வெளியிடத்திற்குச் சென்று திரும்புவதற்கு தாதமாகியதாக காரணம் கூறப்பட்டதோடு அதனை இணைத்துக்கொள்ளுமாறு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரியிருந்தனர். அதன்பிரகாரம் அக்கையொப்பத்தினையும் இணைத்து இணைத்து உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் செயற்பாட்டை ஆரம்பித்துவிட்டேன். நள்ளிரவை அண்மித்திருந்த நிலையில் 47 நாடுகளுக்குமான மின்னஞ்சலை அனுப்பி விட்டு இறுதியாக எனது உட்பெட்டியினை பார்த்தபோது 7.20மணியளவில் விக்னேஸ்வரன் தன்னுடைய பங்காளிக்கட்சித்தலைவர்களினது கையொப்பங்களுடனான ஆவணத்தினை அனுப்பி வைத்திருந்தார். அதில் எந்தவிதமான குறிப்புக்களும் இட்டிருக்கவில்லை. ஆகக்குறைந்தது தமது தரப்பு கையொப்ப ஆவணம் இதுதான் என்று கூட எழுதப்பட்டிருக்கவில்லை. ஆகவே ஏற்கனவே அனுப்பிய ஆவணத்தற்கு அவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளார்கள் போல் உள்ளது என்று கருத்தியதோடு நேரம் நள்ளிரவாகியிருந்தமையால் அவரை நான் தொடர்பு கொண்டிருக்கவில்லை. இதுதான் நடந்தது. நான் அன்றையதினம் மாலையில் இரண்டாவது தடவையாக கையொப்பம் கோரி அழைப்பெடுத்தபோது அவருடைய பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளும் விக்னேஸ்வரனின் வீட்டில் இருந்ததாக எனக்குப் பின்னர் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆகவே அவருடைய பங்காளிக்கட்சிகளையும் வைத்துக்கொண்டு தான் அவர் தனித்து கையொப்பமிட்டு அனுப்பி விட்டு தற்போது நெருக்கடிகள் அவருடைய கூட்டுக்குள் ஏற்பட்டவுடன் என்மீது பழியைப் போடுகின்றார். அதற்காக அவருடைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களையும் இணைத்ததாக தமது பங்காளிக்கட்சித்தலைவர்களின் கையொப்பங்களை ஏன் இணைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பி நிலைமைகளை சுமூகமாக்க முனைந்திருந்தார். அதன்போது உங்களுக்கு கூறிய மேற்படி விளக்கத்தினை அவருக்கு அளித்துள்ளேன். அதுமட்டுமன்றி அவரது அணிக்குள் இருக்கும் பிரச்சினை தீர்க்கமுடியாது என்னுடைய தலையில் அனைத்துப்பழிகளையும் சுமத்த விளைந்தால் மின்னஞ்சலை முழுமையாக பகிரங்கப்படுத்துவேன் என்பதையும் அவருக்கு நேரடியாகவே கூறியுள்ளேன் என்றார். https://www.virakesari.lk/article/99106 -
By கிருபன் · பதியப்பட்டது
நினைவேந்தல் அங்கிகாரங்கள் -என்.கே. அஷோக்பரன் நினைவேந்தல் (Memorialisation) என்பது, பலவிதமான செயல்முறைகள் ஊடான கூட்டு நினைவூட்டலின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கிறது. இது நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுகளை முன்னிறுத்தும் முக்கிய இடங்கள், கடந்த காலத்தை எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான தளங்களைக் குறிக்கிறது. உலகெங்கிலும் வன்கொடுமை, சித்திரவதை, இனப்படுகொலை ஆகிய சம்பவங்களும் அவை நடந்தேறிய இடங்களும் மனிதப் புதைகுழித் தளங்களும் பிற ஒத்த இடங்களும், பொது நினைவுச் சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலங்களுள் ஒன்றான ‘ஹோலகோஸ்ட்’ நடந்தேறிய நாஸிக்களின் அன்றைய சித்திரவதை முகாம்கள், இன்று நினைவேந்தல் ஸ்தலங்களாக மாறியுள்ளன. உலகெங்கும் ‘ஹோலகோஸ்ட்’ அருங்காட்சியகங்களும் நினைவுச்சின்னங்களும் எழுப்பப்பட்டு, 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலம், உலகின் பல நாடுகளிலும் நினைவுகூரப்படுகிறது. இத்தகைய நினைவேந்தல் என்பது, நினைவஞ்சலி செலுத்துதல் (remembrance) என்பதிலிருந்து வேறுபட்டது. நினைவஞ்சலி செலுத்துதல் என்பது, தனிப்பட்டதொரு விடயம். தனிநபர் ஒருவரோ, ஒரு குடும்பமோ உயிரிழந்த உறவை நினைந்து, அஞ்சலி செலுத்தும் தனிப்பட்டதொரு நிகழ்வு ஆகும். நினைவேந்தல் என்பது, மேற்கூறியது போன்று பகிரங்கமானதொரு பொதுச் செயற்பாடு. இது, மிகப்பழங்காலத்தில் இருந்து, மனிதக் கூட்டத்தினிடையே காணப்பட்டதொன்றாகும். இவை வெறுமனே, நீத்தார் நினைவு மட்டுமல்ல; அவை நடந்தேறிய நிகழ்வுகளின் வரலாற்றுச் சாட்சிகளாகின்றன. அது அந்த மனிதக் கூட்டத்துக்கும் முழு மனித இனத்துக்கும் அதன் கடந்தகால நிகழ்வுகளூடான வரலாற்றை ஞாபகப்படுத்துவதாக அமைவதோடு மட்டுமல்லாமல், அதன்பாலான படிப்பினைகளைப் பற்றியும் சிந்திக்கச் செய்வதாக அமைகிறது. இதுவே நினைவேந்தலின் முக்கியத்துவம். ஆனால், மனித வரலாற்றில் நினைவேந்தல் அனைவருக்குமானதொன்றாக இருக்கவில்லை. வரலாற்றில் மிக நீண்டகாலமாக, அவை உயர்குழாவுக்கு உரியதொன்றாகவே பெரும்பாலும் இருந்தது. நினைவுச்சின்னங்கள், நினைவு ஸ்தூபிகள், மணிமண்டபங்கள், நினைவாலயங்கள் என்று உயர்குழாமுக்கு உரியவர்களின் நினைவுகளே வரலாற்றில் அதிகம் பதிவுசெய்யப்பட்டன. யுத்தம் என்பது, மனித வரலாற்றோடு ஒன்றியதொன்று. மனிதன் கூட்டமாக வாழத்தொடங்கிய காலம் முதல், யுத்தம் என்பது ஏதோ ஒரு வகையில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருந்தது. நினைவேந்தல் என்பதில், யுத்தத்தின் பங்கு முக்கியமாக அமைகிறது. யுத்தம் என்பது, ஒரு பெரும் படையின் முயற்சி. ஆனால், வரலாற்றில் யுத்த நினைவுகளாக அரசன், தளபதி போன்றவர்களின் நினைவுச்சின்னங்களே, அந்த யுத்தத்தின் நினைவேந்தலாக மாறியிருந்தன. நவீன ஜனநாயகத்தின் வருகையோடு, இந்த நிலை பரிணாமமடைந்தது. இன்று உலக நாடுகளில், யுத்த நினைவேந்தல் சின்னங்களில், உயிர்நீத்த ஒவ்வொரு சிப்பாயின் பெயரும் பதியப்பட்டு வருகிறது. தமிழர் வரலாற்றில், சங்ககாலத்தில் யுத்த நினைவேந்தல் என்பது நடுகல் என்ற வடிவிலமைந்து இருந்தமையைத் தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு நூல்களில் காணலாம். இவை பொதுவாக, அனைத்து வீரர்களுக்கும் உரியதாக இருந்தது. மாய்ந்த வீரனின் பெயரும் சிறப்பும் நடுகல்லில் பொறிக்கப்பட்டதோடு, அவனது படைக்கலங்களை, நடுகல்லுக்கு அருகிலேயே ஊன்றியிருந்தனர். இன்று, உலகின் பல நாடுகளில் பல யுத்த நினைவேந்தல் ஸ்தலங்கள் உருவாக்கப்பட்டு, பேணப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு யுத்த வெற்றியைக் கொண்டாடுதல், வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர்களை நினைவில் கொள்ளுதல், நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களைப் பெருமைப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்கள் ஒரு புறமிருந்தாலும், சில நினைவேந்தல் ஸ்தலங்கள், யுத்தத்தின் பேரழிவை எடுத்துரைப்பனவாகவும், இனிமேல் இதுபோன்றதொன்று நடக்கக்கூடாது என்ற செய்தியைச் சொல்வனவாகவும் அமைகின்றன. இவை, ஒவ்வொரு நாட்டின் அரசியல் தெரிவுகள் சார்ந்து கட்டமைக்கப்படுகின்றன. எது எவ்வாறாயினும், நினைவேந்தல் என்பது மனித வாழ்வினதும் மனித நாகரிகத்தினதும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. நிலைமாறுகால நீதி என்பதன் கீழ், நினைவேந்தலுக்கு ஒரு முக்கிய பங்கு உருவாகியிருக்கிறது. கடந்த காலத்தின் கொடுமையான மனித உரிமை, மனிதாபிமான மீறல்களைக் கையாள்வதில், இத்தகைய கொடுமையான கடந்த காலத்திலிருந்து, அமைதியை நோக்கிய எதிர்காலத்துக்கு மாற்றமடையும் அரசுகளுக்குப் பெரும்பாலும் நிலைமாறுகால நீதி தேவைப்படுகிறது. ஆனால், நிலைமாறுகால நீதியை சுவீகரிக்கும் அரசுகள் கூட, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுடைய கண்ணியத்தை மீட்டெடுப்பதைப் புறக்கணித்து விடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமும் கௌரவமும் மீட்டெடுக்கப்படாதவரை, அவர்களது உணர்வுகள் மதிக்கப்படாதவரை நிலைமாறுகால நீதி என்பது அர்த்தமற்றதாகிவிடும். கொடூரங்கள், தீவிர மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரங்களினதும் இழப்பீட்டு உரிமையினதும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் ஒரு பகுதியாக நினைவேந்தல் அங்கிகரிக்கப்படுகிறது. 21 மார்ச் 2006இல் நிறைவேறிய ஐ.நா சபையின் பொதுச் சபை தீர்மானமானது, சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் கொடூர மற்றும் தீவிர மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம் மற்றும் இழப்பீட்டு உரிமை தொடர்பிலான அடிப்படைக் கொள்கைகள், வழிகாட்டுதல்களை எடுத்துரைக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களைத் திருப்தி செய்வதன் ஓர் அங்கமாக பாதிக்கப்பட்டவர்களை நினைவுகொள்ளுதல், அஞ்சலிசெய்தல் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. நிலைமாறுகால நீதியினூடாக கடந்தகால அநீதிகளுக்கான நியாயத்தையும் ஏற்பட்ட காயங்களுக்கான மருந்தையும் எதிர்கால மீளிணக்கப்பாட்டையும், நீடித்து நிலைக்கத்தக்க சமாதானத்தையும் ஏற்படுத்த விளைகின்றவர்கள், பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்குமான பரிகாரம் இழப்பீட்டு உரிமைகளை வழங்குவார்கள். அப்படிச் செய்வதைத் தவிர்க்கிறவர்களின் அரசியல் நோக்கம் என்பது நீதி, நியாயம், மீளிணக்கம், சமாதானம் சார்ந்ததாக இருக்க முடியாது என்பது திண்ணம். பாதிக்கப்பட்டவர்களின் கடந்தகால நினைவுகளைப் பாதுகாப்பதானது காயங்களை ஆற்றும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக கருதப்படுகிறது. அந்தவகையில் நினைவேந்தல் என்பது கடந்தகால நினைவுகளைப் பாதுகாப்பதில் அடையாள முக்கியத்துவம் மிக்கதொன்றாகவும், அதனூடாக எதிர்காலத்தில் இதுபோன்ற பெருங்கொடுமைகள் இடம்பெறாது தடுக்கும் ஊக்கத்தை வழங்குவதாகவும் அமைவதோடு மட்டுமல்லாது, பெரும்கொடுமைக்கு அவலத்துக்கும் ஆளாக்கப்பட்டவர்கள், படுகொலைசெய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் ஆகியோரை கௌரவப்படுத்தும் சின்னமாகவும் அமைகிறது. மேலும், அண்மைக்காலங்களில் நினைவேந்தலை ஒரு மனித உரிமையாகக் காணும் தன்மை உருவாகியுள்ளதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, நினைவேந்தலை மனிதனின் கலாசார உரிமையின் ஓர் அங்கமாக சர்வதேச மனித உரிமைகள் பரப்பில் அங்கிகாரம் பெறத்தொடங்கியுள்ளது. சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR) இன் 15ஆவது சரத்தின் கீழான கலாசார உரிமையின் ஓர் அங்கமாக, நினைவேந்தல் பொருள்கோடல் செய்யப்படுகிறது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அதன், கலாசார உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் பரீடா ஷஹீட் சமர்ப்பித்திருந்த அறிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த அறிக்கையை, மனித உரிமைகள் பேரவை தனது தீர்மானத்தில் குறிப்பெடுத்துக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. விசேட அறிக்கையாளர் பரீடா ஷஹீட், தன்னுடைய அறிக்கையில், ‘கடந்த காலத்தை நினைவுகூர முற்படும் வெகுஜன அல்லது கடுமையான மனித உரிமை மீறல்கள், மிகக்கொடுமையான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும், அரசுகளும் பிற பங்குதாரர்களும் ஆதரவளிக்குமாறு விசேட அறிக்கையாளர் பரிந்துரைக்கிறார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பல்வகைப்பட்ட அனுபவங்களை கலாசார ரீதியாக அர்த்தமுள்ள வழிகளில் வெளிப்படுத்த தேவையான இடத்தை வழங்கும் செயல்முறைகளாக நினைவூட்டல் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இத்தகைய செயல்முறைகள் பலவிதமான ஈடுபாடுகளை உள்ளடக்கியது. அவை பௌதீக நினைவுச்சின்னங்களை நிறுவுவதன் மூலம் மட்டும் ஒத்திசைக்கப்பட வேண்டிய அவசியமில்லை, அதனைத்தாண்டி ஏராளமான செய ற்பாடுகள், கலாசார வெளிப்பாடுகளின் வடிவத்தையும் கூட அவை கொண்டமையலாம்’ என்று குறிப்பிடுகிறார். நினைவேந்தல் தொடர்பிலான இத்தகை மனித உரிமை சார்ந்த முற்போக்குப் பார்வைகள் ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் நினைவேந்தலை ஐயக்கண்கொண்டும், அச்சப்பார்வையோடும் பார்க்கும் தன்மைகளும் காணப்படுகின்றன. குறிப்பாக, அடக்குமுறைமிக்க அரசுகள், தம்முடைய அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு குறித்த மக்கள் கூட்டத்தின் நினைவேந்தல் முரணாக அமையும் போது, அதனைத் தடுப்பதிலும், நினைவேந்தலுக்கான வாய்ப்பை இல்லாது செய்வதிலும் மும்முரமாகச் செயற்படுகின்றன. அதேவேளை, ஒரு சம்பவம் தொடர்பில் இரண்டு வேறுபட்ட அல்லது ஒன்றுக்கொன்று முரணான அனுபவங்களைக் கொண்ட மக்கள் கூட்டங்கள் உள்ளபோது, சில அரசுகள் அதில் ஓர் அனுபவத்தின் உரையை பகிரங்கப்படுத்தவும், மற்றையதை அடக்குவதன் மூலம் மறக்கடிக்கச்செய்யும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஒரு சம்பவம் தொடர்பில் பல்வேறுபட்ட வித்தியாசமான அனுபவங்கள், பார்வைகள், அனுபவ உரைப்புகள் வேறுபட்ட மக்களுக்கு இருக்கலாம். இவை அனைத்தையும் பதிவுசெய்யும் சுதந்திர வௌி ஒரு நாட்டில் காணப்பட வேண்டும். அதை ஓர் அரசு ஏற்படுத்தித்தர வேண்டும். குறைந்தபட்சம், அரசு அதனைத் தடுக்கும், இல்லாதொழிக்கும் செயற்பாடுகளிலேனும் ஈடுபடாதிருக்க வேண்டும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நினைவேந்தல்-அங்கிகாரங்கள்/91-264380 -
By கிருபன் · பதியப்பட்டது
சட்ட விரோத மண் அகழ்வுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நவகிரி ஆற்றுப்பகுதியில் மண் அகழப்படுவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், குறித்த பகுதியில் மண் அகழ்வினை நிறுத்தக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் கோரியும் குறித்த பகுதி விவசாயிகள் நேற்று கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். தமது பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகளைத் தடுத்து நிறுத்தி வயல் பகுதிகளைப் பாதிக்கும் வகையிலான நவகிரி ஆற்றுப்பகுதியைப் புனரமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயிகள் தெரிவிக்கையில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் பகுதியில் உள்ள அலியார்வட்டை, காலார் வெட்டை, கன்டம் நாயாற்றுவட்டை ஆகிய பகுதிகள் நவகிரி ஆற்றின் ஒரு பகுதி உடைப்பெடுத்ததினால் அழிவடைந்துள்ளது. நவகிரி ஆற்றின் நாயாற்றுவட்டை பகுதியில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வுகள் காரணமாக ஆற்றின் கட்டுகள் உடைப்பெடுப்பதனால் இந்த அழிவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறித்த பகுதியில் சிலரால் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வுகளே இந்த நிலைமைக்குக் காரணம். கண்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வால் 1267 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த விவசாய நிலங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது. கடன்பெற்றும் நகைகளை அடகு வைத்தும் செய்கை பண்ணப்பட்ட விவசாய நிலங்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மிகவும் கஷ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் தமக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். நவகிரி ஆற்றுப்பகுதியில் நடைபெறும் அனைத்து விதமான மண் அகழ்வுகளும் நிறுத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் கொங்கிறீட் கட்டுகளை அமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.meenagam.com/சட்ட-விரோத-மண்-அகழ்வுக்க/ -
By கிருபன் · பதியப்பட்டது
சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் கர்த்தாலுக்கு அழைப்பு சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். பெப்ரவரி 4 தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்க பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாளாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 1948ஆம் ஆண்டு ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றொளித்தும், எஞ்யவர்களின் உரிமைகளையும், உடமைகளையும் அழித்தொழித்து தமிழர்கள் தமது சொந்த நிலத்திலும்,புலம்பெயர் நாடுகளிலும் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ்மக்களுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் என்பது ஒரு அரசாங்கம் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ நடைபெற்ற விடயமல்ல. மாறாக ஸ்ரீலங்கா அரசு தமிழ்த்தேசத்தை அழித்து ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா தீவையும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரித்தானதாக மாற்றியமைக்க முயற்சித்தபோது அதனை எதிர்த்து தமிழர் தமது அடையாளத்தை பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆட்சிக்கு வந்த அனைத்து தரப்புக்களும் ஸ்ரீலங்காத்தீவு சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டார்கள். இப்போதும் செயற்பட்டுக்கொண்டு உள்ளார்கள் . 2009 இல் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு முடிவடைந்த போர் தமிழினப் படுகொலையோடு நிறைவுக்கு வந்திருந்தது. அத்தகைய தமிழினப்படுகொலை நடைபெற்றபோது அதனோடு நிகழ்ந்த பல குற்றங்களை மூடி மறைப்பதற்கு -2009 இல் ஆட்சியிலிருந்த இனவழிப்பு அரசாங்கம் மட்டுமல்லாது – சிங்கள தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்க தரப்புகளுமே முயன்றனர். அதே சூழலே இன்றும் உள்ளது. தமிழர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறித்துவிட்டு சிங்கள தேசம் தனது 73 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு உள்நாட்டிலும், புலம்பெயர்தேசங்களிலும் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலைப்பாட்டில் தமிழர்களாகிய நாம் சிங்கள தேசத்தின் சுதந்திரதினத்தை புறக்கணித்து தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதியை பெறுவோம். பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் – முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையூடாகவே சாத்தியமாகும். அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ, அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ ஸ்ரீலங்காவை உடன் விசாரிக்க வேண்டும். அந்தவகையில் இந்த இரண்டு பொறிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலமேனும் பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இனியாவது ஸ்ரீலங்காவை விசாரிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஐ.நா உறுப்புநாடுகள் பாதுகாப்பு சபைக்கு பருந்துரை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சி பேரணி நடாத்த எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலைய முன்றலில் காலை 8-30 மணிக்கு ஆரம்பமாகும். அதே நேரம் கிழக்கு மாகாணம் நேரத்தில் மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவை சென்றடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தங்களது ஆதரவை வழங்கி சிங்கள தேசத்தின் சுதந்திர நினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி சர்வதேச விசாரணைக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிக்கின்றோம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். https://www.meenagam.com/சிங்கள-தேசத்தின்-சுதந்தி/
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.