Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!


Recommended Posts

இசைஞானி இளையராஜாவைத் தமிழினத் துரோகியாகக் காட்டும் முயற்சியில் இன்று சிலர் ஈடுபட்டுள்ளனர். வரும் நவம்பர் 3ஆம் நாள், கனடாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நவம்பர் 27, மாவீரர் நாள் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. மாவீரர் நாள் நினைவுகூரப்படும் கார்த்திகை மாதத்திலும், தமிழீழ மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட வைகாசி (மே) மாதத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர் எவரும் எவ்விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்று புதிதாய் ஒரு விதியை தமிழ்நாட்டில் இன்று சிலர் அறிவித்துள்ளனர். அதனையொட்டிக் கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் ஒரு சாரார், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

illaiyaraja_300.jpg

1982 நவம்பர் 27 அன்று, வீரச்சாவடைந்த போராளி சங்கரின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அந்நாளை மாவீரர் நாளாக நினைவுகூரும்படி, விடுதலைப்புலிகள் அமைப்பு 1989ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டது. அப்போதிருந்து ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் அந்நாளில் மாவீரர் நாள் நினைவு எழுச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அந்நிகழ்ச்சி நடைபெறும் மாதம் முழுவதும் எவ்விதமான கொண்டாட்டங்களிலும் யாரும் ஈடுபடக் கூடாது என்று, விடுதலைப் புலிகள் அமைப்போ, அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோ ஒரு நாளும் எந்த அறிவிப்பையும் வெளியிட்டதில்லை. சென்ற ஆண்டு வரையில் அப்படி எந்த ஒரு ‘கொண்டாட்டத் தடையும்’ நடைமுறையில் இல்லை. அப்படியானால், இப்போது இப்படி ஒரு புதிய சட்டத்தை உருவாக்கும் சட்டாம்பிள்ளைகள் யார், எப்போதிருந்து இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பன போன்ற வினாக்கள் நம்முள் எழுகின்றன. தலைவர் பிரபாகரனே கூறாத விதிகளைப் புதிதாய்க் கூறி, அவரையும் மிஞ்சிய தலைவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயல்கின்றவர்கள் யார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

மாவீரர் நாள் என்பது அழுவதற்காக அன்று, மீண்டும் மீண்டும் எழுவதற்காக என்பதைப் புலிகளும், ஈழ மக்களும் நன்கறிவார்கள். ‘மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ என்று மொழியின் பெயரிலும், அடுத்ததாக, வழிகாட்டும் தலைவரின் பெயரிலும், அதற்கடுத்து, விழிமூடித் துயில்கின்ற மாவீரர்கள் பெயரிலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, மீண்டும் தங்களின் இன விடுதலைக்காகத் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் நாள்தான் மாவீரர் நாள். ஆண்டு முழுவதும் போராளிகளையும், பொதுமக்களையும் அந்த ஈழ மண் இழந்திருந்தாலும், இயக்கத்தின் முதல் பலி நடைபெற்ற நாளை ஓர் அடையாளமாக மட்டுமே புலிகள் இயக்கம் அறிவித்தது. மாவீரர்கள் இறந்த நாளில் எல்லாம் கொண்டாட்டங்கள் கூடாது என்றால், ஆண்டின் எந்த ஒரு நாளிலும் நாம் எந்த மகிழ்வையும் வெளிக்காட்ட இயலாது. அங்கே மாவீரர்கள் சாகாத நாளுமில்லை, மாவீரர்கள் இல்லாத வீடுமில்லை. ஆதலால், அடையாளமாகத்தான் சிலவற்றை நாம் செய்ய முடியும். அதுதான் நடைமுறை இயல்பு. அதனைப் புலிகள் அமைப்பும், தலைமையும் தெளிவாக அறிந்திருந்தனர்.

ஆனால், இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமலோ, புறந்தள்ளியோ இரண்டு மாதங்களுக்கு எந்தக் கொண்டாட்டமும் கூடாது என்று சிலர் இன்று கூறுகின்றனர். மாவீரர் நாளுக்கு முந்தைய நாள், தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள். ஒவ்வோர் ஆண்டும், அந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி விட்டுத்தான், மறுநாளை மாவீரர் நாளாக நாம் கொள்கிறோம். ‘ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின்னர், வாராது போல் வந்த’ அந்த மாமணியின் பிறந்தநாளையும் இனிமேல் கொண்டாடக்கூடாது என்று கூறிவிடுவார்களோ என்னவோ தெரியவில்லை. இரண்டு மாதங்கள் எந்தத் தமிழர் வீட்டிலும், திருமண நிகழ்வுகளோ, மகிழ்வான விழாக்களோ நடைபெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வருவார்களா என்றும் தெரியவில்லை.

இவ்வளவு வேண்டாம்… இளையராஜாவின் இசை நிகழ்ச்சி முடிந்து, பத்து நாள்களுக்குப் பிறகு வரவிருக்கும் தீபாவளியைத் தமிழ்நாட்டுத் தமிழர்களோ, தமிழ் ஈழத் தமிழர்களோ கொண்டாடக்கூடாது என்று இவர்களால் அறிவிக்க முடியுமா? பகுத்தறிவின் அடிப்படையில் இல்லாவிட்டாலும், இன உணர்வின் அடிப்படையிலாவது தீபாவளியை இந்தப் புதிய நண்பர்கள் தடுத்து நிறுத்தி விடுவார்களா? இவையெல்லாம் நடைமுறையில் நடைபெறக் கூடியதுதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இதில் இன்னொரு வேடிக்கையான சிக்கலும் உள்ளது. நவம்பர் மாதத்தைக் கார்த்திகை மாதம் என்றும், டிசம்பர் மாதத்தை மார்கழி மாதம் என்றும் கணக்கிடுவது புலிகள் இயக்கத்தின் மரபு. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தளவு, நவம்பர் 15ஆம் தேதி அளவில்தான் கார்த்திகை தொடங்கும். டிசம்பர் 15வரை கார்த்திகைதான். எனவே தமிழ்நாட்டுக்காரரான இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவது, மாவீரர் நாள் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் அன்று, ஐப்பசி மாதத்தில்.

இப்படி எல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, நடைமுறைக்கு ஏற்ற, லட்சியங்களை உயர்த்திப் பிடிக்கின்ற வழிமுறைகளை மேற்கொள்வதே சரியானது என்பதை நாம் உணரவேண்டும்.

1988ஆம் ஆண்டு, ‘ஈழ மக்களைக் கொல்லாதே, இந்திய ராணுவமே திரும்பி வா’ என்ற கோரிக்கையை முன்வைத்து, ‘ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு’ கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தியது. பல்வேறு துறைகளைச் சார்ந்த புகழ்பெற்ற 300 பேர் அவ்வறிக்கையில் கையொப்பமிட்டனர். நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், முரசொலி மாறன், சுரதா, வைரமுத்து, மு.மேத்தா, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஞாநி, பாலுமகேந்திரா, கலைப்புலி தாணு உள்ளிட்ட பலர் அன்று கையொப்பமிட்டனர். அந்த வரிசையில் ஒருவராய், இளையராஜாவும் கையெழுத்திட்டிருந்தார் என்பதைப் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் ஈழ ஆதரவாளர்கள் அறிவார்களா என்று தெரியவில்லை.

எப்போதும் ஈழவிடுதலை போன்ற நியாயமான கோரிக்கைகளை நோக்கி, வெவ்வேறு துறைகளிலும் உள்ள பலரையும் நாம் ஈர்க்க வேண்டும். அதுதான் அக்கோரிக்கைக்கு நாம் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். எல்லோரையும் அடித்துத் துரத்துவதும், துரோகிகளாகக் காட்ட முயல்வதும், நாம் முன்னெடுக்கும் கோரிக்கையின் வலிமையைக் குறைக்கும்.

தாங்கள் மட்டுமே ஈழ ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள முயலும் சிலரின் மலிவான உத்திதான் இது. ஈழ ஆதரவு என்பது எவர் ஒருவருக்கும் ‘மொத்தக் குத்தகைக்கு’ விடப்படவில்லை என்பதைப் புதிய சட்டாம்பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

- சுப.வீரபாண்டியன்

பெயர் சுபவீ நேரம் Thursday, October 25th 2012. பிரிவு featured, ஈழம், திராவிட இயக்கத் தமிழர்

பேரவை

http://www.periyarthalam.com/2012/10/25/இளையராஜாவும்-புதிய-சட்டா/

Link to comment
Share on other sites

 • Replies 248
 • Created
 • Last Reply

இது சீமான் vs சுபவீ குத்துச்சண்டை.. :rolleyes:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது சீமான் vs சுபவீ குத்துச்சண்டை.. :rolleyes:

2009க்குப்பின்

இதற்காகவாவது வாய்திறந்தாரே

அந்தளவில் சீமானுக்கு வெற்றிதான். :(

அரசியல் வராதவர்களுக்கும் அரசியல் வரம் மாதமிது............. :(

Link to comment
Share on other sites

சுபவீ தொடர்ந்து ஈழத் தமிழருக்கு ஆதரவான குரலை தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் கலைஞருடன் இருப்பதனால் நாம்தான் அவற்றை கவனிக்கத் தவறி விட்டோம்.

சுபவீ - சீமான குத்துச்சண்டை என்பதை விட இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் பேசப்படுகிறது. இளையராஜா மீது கோபத்தில் இருக்கும் கஸ்பார்தான் இந்தக் குழப்பங்களுக்கு பின்னால் இருக்கிறாராம். இது ஒரு கிசு கிசுதான்.

இளையராஜா நிகழ்ச்சியின் பின்னால் சிறிலங்கா அரசு, றோ போன்றவை இருப்பதாக சொல்கின்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை போன்ற வதந்திதான் இதுவும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுபவீ தொடர்ந்து ஈழத் தமிழருக்கு ஆதரவான குரலை தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் கலைஞருடன் இருப்பதனால் நாம்தான் அவற்றை கவனிக்கத் தவறி விட்டோம்.

சுபவீ - சீமான குத்துச்சண்டை என்பதை விட இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் பேசப்படுகிறது. இளையராஜா மீது கோபத்தில் இருக்கும் கஸ்பார்தான் இந்தக் குழப்பங்களுக்கு பின்னால் இருக்கிறாராம். இது ஒரு கிசு கிசுதான்.

இளையராஜா நிகழ்ச்சியின் பின்னால் சிறிலங்கா அரசு, றோ போன்றவை இருப்பதாக சொல்கின்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை போன்ற வதந்திதான் இதுவும்.

எல்லாவற்றிற்கும் ஆதாரம் தேடிக்கொண்டிருக்க முடியாது.. இலங்கை இந்திய அரசுகளுக்கு அத்தகைய ஆர்வம் இருக்கும் என்பதை யாராலும் மறுதலிக்க முடியாது. இப்படி பல விடயங்களை "லூசில்" விட்டுத்தான் இத்தனை அடியும் வாங்கியிருக்கோம்.

எதிரிகளுக்காக வக்காலத்து வாங்கும் உங்களைப்போன்றவர்களின் குணம் தான் எங்கள் உரிமைப்போரின் முதல் தடுக்கல்.

Link to comment
Share on other sites

கஸ்பாருக்கு கோபம் இருக்கிறது. சிறிலங்கா மற்றும் றோவிற்கு ஆர்வம் இருக்கிறது. ஆயினும் இவைகளை ஆதாரங்களாக கொள்ள முடியாது.

இவற்றை வைத்து ஆய்வுக் கட்டுரை எழுதலாம். படிப்பவனை குழப்பலாம். தமிழர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தலாம். உண்மையில் இவைகள்தான் இப்பொழுது நடைபெறுகின்றன.

தமிழர்களின் அச்சங்களை, சந்தேகங்களை சிலர் தமது சுயநலனுக்கு பயன்படுத்துகின்றனர். றோ குழப்புகிறது என்று கூக்குரல் இட்டுக் கொண்டு இவர்கள் குழப்புகிறார்கள். சிறிலங்கா அரசு பிளவுபடுத்துகிறது என்று அலறிக் கொண்டு இவர்கள் தமிழர்களை பிளவுபடுத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]Trinity Events will be setting a new precedence amongst events of this calibre by donating a portion of the proceeds from the ticket sales to local charities and critical health care related projects in Northern Sri Lanka. [/size]

[size=5]The donation will be directed towards projects that are being implemented by Canadian Medical and Dental Development Association (CMDDA), a registered charitable organization in Canada. (Charity No: 823467279RR0001). [/size]

[size=5]"As we celebrate Tamil music, it is also important to ensure that we do our share in supporting organizations that do great work in improving the lives of others who are in need" said Trinity Group CEO and Founder Dunstan Peter. "We have requested CMDDA to utilize the donation towards addressing the urgent needs of the internally displaced families originally from Keppapilavu village in Mullaitivu district". [/size]

[size=5]"We would also like to clarify that the date was chosen based on the availability of Rogers Centre and does not interfere with the official Heroes Week" said Mr. Nithy. [/size]

[size=5]"We have consulted with community organizations in Canada and confirmed that November 3rd is not in conflict with Heroes Week". [/size]

[size=5]Trinity Events is part of Trinity Group, founded by two emerging young professionals from the Tamil Canadian community and has no political affiliation of any kind. Trinity Events is a for-profit company with an aim to promote Tamil Entertainment industry both locally as well from South India. [/size]

[size=5]http://www.trinityeventsonline.com/uploads/English_Trinity%20Media%20Release%20Oct%2024.pdf[/size]

[size=5]The donation will be directed towards projects that are being implemented by Canadian Medical and Dental Development Association (CMDDA), a registered charitable organization in Canada. (Charity No: 823467279RR0001). [/size]

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி அகூதா.. :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது இசை நிகழ்சிக்கு எழுந்த எதிர்ப்பால் ஏற்பட்ட மன மாற்றம் என்று கூற முடியுமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது இசை நிகழ்சிக்கு எழுந்த எதிர்ப்பால் ஏற்பட்ட மன மாற்றம் என்று கூற முடியுமா?

அப்படியும் இருக்கலாம்

அப்படி என்றால் அதைச்செய்வித்தவர்களுக்கு நன்றி.

[size=1]நியானி: ஊகம் தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

எதிர்பார்க்கிற சனம் வராவிட்டாலும் என்ற காரணத்தால் இப்படி ஒரு நிதி உங்களுக்கும் போகுது எல்லாரும் வாருங்கோ கல்லாப்பெட்டியை நிறையுங்கோ என்டதான் எங்க நோக்கம். வாங்கோ ஈழத்தில அகதி வாழ்க்கை இருக்கும் வரை இப்படி சொல்லி, சொல்லி பிழைப்பு நடாத்திடுவோம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த இசைக் கச்சேரி அறிவித்தல் வரும் போதே அதன் ஒரு பகுதி பணம் ஈழத்திற்கு அனுப்படும் என சொல்லித் தான் தொடங்கினார்கள் யாழில் கூட பழைய பதிவுகளில் அது இருக்குது <_<

Link to comment
Share on other sites

சுபவீ தொடர்ந்து ஈழத் தமிழருக்கு ஆதரவான குரலை தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் கலைஞருடன் இருப்பதனால் நாம்தான் அவற்றை கவனிக்கத் தவறி விட்டோம்.

சுபவீ - சீமான குத்துச்சண்டை என்பதை விட இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் பேசப்படுகிறது. இளையராஜா மீது கோபத்தில் இருக்கும் கஸ்பார்தான் இந்தக் குழப்பங்களுக்கு பின்னால் இருக்கிறாராம். இது ஒரு கிசு கிசுதான்.

இளையராஜா நிகழ்ச்சியின் பின்னால் சிறிலங்கா அரசு, றோ போன்றவை இருப்பதாக சொல்கின்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை போன்ற வதந்திதான் இதுவும்.

எல்லாரும் தொடர்ந்து தான் குரல் கொடுக்கினம், இவர் தான் முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுத கருநாநிதி யோடு சேர்ந்து உரக்க குரல் கொடுத்தவர்.

இப்ப இலண்டனுக்கு ஆரோ ஒரு கூட்டம் சு.ப கூப்பிட்டவையாம் ஒருத்தரும் ஏன் நாயே என்டும் கண்டு கொள்ளவில்லை யாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கஸ்பாருக்கு கோபம் இருக்கிறது. சிறிலங்கா மற்றும் றோவிற்கு ஆர்வம் இருக்கிறது. ஆயினும் இவைகளை ஆதாரங்களாக கொள்ள முடியாது.

இவற்றை வைத்து ஆய்வுக் கட்டுரை எழுதலாம். படிப்பவனை குழப்பலாம். தமிழர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தலாம். உண்மையில் இவைகள்தான் இப்பொழுது நடைபெறுகின்றன.

தமிழர்களின் அச்சங்களை, சந்தேகங்களை சிலர் தமது சுயநலனுக்கு பயன்படுத்துகின்றனர். றோ குழப்புகிறது என்று கூக்குரல் இட்டுக் கொண்டு இவர்கள் குழப்புகிறார்கள். சிறிலங்கா அரசு பிளவுபடுத்துகிறது என்று அலறிக் கொண்டு இவர்கள் தமிழர்களை பிளவுபடுத்துகிறார்கள்.

அப்போ உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் இவர்கள் எல்லாம் செய்கின்றார்களா?

உங்களது எத்தனைக்கெத்னை ஊகமோ அத்தனைக்கத்தனை எங்களதும் ஊகமே. ஆனாலும் நடக்கக்கூடிய மிகவும் சாத்தியமான ஊகம். எம்மை தற்காத்துக்கொள்வதற்கான ஊகம்.

அதைக்கணக்கெடுக்காது அரசியல் ஆய்வு செதவர்களும் எம்போராட்டத்தில் பாரிய பின்னடைவைச் செய்தார்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்

இதே குழம்பிய குட்டைகள் தான் இன்றும் வேதம் ஓதுகின்றன

Link to comment
Share on other sites

[size=5]இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை அரசியலாக்காமல் - ஈழத்தமிழரின் நிரந்தர விமோசனத்துக்கு தேவையானதைச் செய்தால் நல்லது.

இதில் சிங்கள அரச பயங்கரவாதிகளின் பங்களிப்பு இருபதற்கு உறுதியான ஆதாரம் இருந்தால் அதை உரியவர்களிடம் (இளையராஜா உட்பட) முன் வையுங்கள்.[/size]

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் தகாத நேரத்தில் செம்மொழி மாநாட்டைக் கூட்ட அதற்கு வக்காளத்து வாங்கியவர் தானே இவர்..!

தமிழும் செம்மொழியும் கலைஞருக்கு சொந்தம் என்றவர்கள்.. இன்று இளையஜாரா..வையும் தமக்கே சொந்தம் என்கின்றனர்.

இன்றைய காலக்கட்டத்தில்.. மாவீரர் நாளா.. வாரமா.. மாதமா என்பதை தீர்மானிக்க வேண்டியது.. அந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த உறவுகளும் சொந்தங்களும் மாவீரர் மீது அக்கறை கொண்டுள்ள உறவுகளுமே அன்றி.. சந்தர்ப்பவாதிகள் அல்ல.

சு.ப வீ சரியான சந்தர்ப்பவாதி மட்டுமன்றி.. குருட்டுத்தனமான கருணாநிதி விசுவாசக்காரர்..முதலில் அவர் தான் இதனைச் சொல்ல எவ்வளவு நியாயம் உள்ளது என்பதை தனது மனச்சாட்சி கொண்டு கேட்க வேண்டும்..!

=========

விமர்சனங்கள்

புறக்கணிப்பு

திமுக தலைமை வகிக்கும் தமிழக அரசால் ஒருங்கிணைக்கப்படும் செம்மொழி மாநாட்டை அதிமுக, மதிமுக கட்சிகள் புறக்கணித்துள்ளன. "கருணாநிதியால் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத்தமிழ் மாநாடு வரிசையில் இடம் பெறாததால், இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே திமுக அரசால் நடத்தப்படும் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. அதே போல உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மதிமுகவும் பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்." [3] மாநாடு கூட்டுவதில் அரசியல் நோக்கு யாதும் இல்லையென்றும், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் பங்கேற்பு உண்டு என்றும் முதலமைச்சர் அறிக்கை விடுத்துள்ளார்[4].

வதை முகாங்களில் ஈழத் தமிழர்கள்

ஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்துள்ளது. "பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார்[5].

தமிழறிஞர்களின் சுயநலம்

தமிழர்களாக இருந்ததால், பல்லாயிரக்கணக்காணவர்கள் கொல்லப்பட்ட, சிறைபட்ட சூழலில் மொழியைக் கொண்டாடுவது தமிழறிஞர்களின் சுயநலம் ஆகும். முதலில் எதிர்ப்புப் தெரிவித்த பல அறிஞர்கள் பின்னர் சேர்ந்து கொண்டதும் தமது சுயநலத்தை முதற்கொண்டே. "தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது."[6]

மாநாட்டுக் குறைகள்

 • கோவைக்கு வந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு போதிய வசதிகளை அரசு செய்து தரவில்லை. தி.மு.க தொண்டர்களும் அறிஞர்களும் மட்டுமே எல்லா அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்டார்கள். பொது மக்களுக்கு அலைக்கழிப்புதான் மிஞ்சியது.[ஆதாரம் தேவை]

 • மாநாட்டுக்கு வந்த மக்களுக்கு போதிய உணவு வசதியையும் செய்து தரவில்லை. 7px-Indian_Rupee_symbol.svg.png 30க்குச் சாப்பாடு என்று சொல்லியிருந்தாலும் சரியாக பொதுமக்களுக்குக் கிடைக்கவில்லை. எனினும் இப்பிரச்னை முதல் நாள் மட்டுமே காணப்பட்டது.

 • எப்போதும் தனித்தனியாக நடக்கும் மாநாட்டை ஒன்றாக இணைத்ததனால் பல வலைப்பதிவர்களின் கட்டுரைகளை சமர்ப்பிக்க இயலாது போனது. இதனால் வலைப்பதிவர்கள் கூச்சலிட்டனர்

 • முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை அழைக்கவில்லை என்கிற செய்தி பல ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

==========

http://ta.wikipedia....செம்மொழி_மாநாடு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

[size=4]இவரின் சந்தர்ப்பவாதத்திற்கு இது மட்டும்மல்ல.. பல உதாரணங்கள் உண்டு...

அன்புள்ள சுபவீ வணக்கம். கடந்த காலத்தில் புலிகளுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் பேசி பல முறை சிறைசென்றவர் என்கிற வகையிலும் சமூக நீதிக்கான தமிழகப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர் என்ற வகையிலும் உங்கள் மீது மரியாதை உண்டு. இப்போதும் அந்த மரியாதை இருக்கும் உரிமையிலேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுத நேர்கிறது. வரவிருக்கும் மே மாதத்தில் 17,18,19 ஆகிய நாட்களை உங்களால் மறக்க முடியாது என நினைக்கிறேன். பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட சிறிய பிரேதசத்திற்குள் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்த நாட்கள். அந்நாட்களை இப்போது உங்களுக்கு நினைவுறுத்துவதால் நீங்கள் அசூயை அடையலாம். ஆனால் இன்னமும் அந்த மனிதப் பேரழிவில் இருந்து எங்களால் மீண்டு எழ முடியவில்லை என்ற வேதனையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.[/size]

[size=4]subavee.jpg[/size]

[size=4]இப்போது பார்வதியம்மாள் தொடர்பாக கருணாநிதியின் முரசொலி இதழில் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் ஒரு பகுதி உண்மை. ஆனால் நீங்கள் பல நேரங்களில் பேசப்பட வேண்டிய உண்மைகளை பேசாமல் விட்டு விட்டு உங்களுக்குப் பாதகமில்லாத விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஈழ மக்கள் என்ற வகையில் நீங்கள் எங்களிடம் பேசியாக வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தே இக்கடிதம்.[/size]

[size=4]அதிமுக தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து ஈழ மக்கள் மீது வன்மம் காட்டியவர் என்பதை யாரும் இங்கே மறுக்கவில்லை. ஈழ மக்களுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதி உரிமைகளுக்கும் ஜெயலலிதா எதிரானவர் என்பதை நாங்கள் கருணாநிதியிடமிருந்தோ அல்லது ஏனைய ஜெயலலிதா எதிர்ப்பாளர்களிடமிருந்தோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. பார்வதியம்மாள் சென்னை விமான நிலையம் வந்தபோது ரகசியமாக வரவேற்கப் போன நெடுமாறனையும், வைகோவையும் தள்ளி விட்டு விட்டு பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய சென்னை விமானநிலைய மத்திய அரசு ஊழியர்கள் (பாருங்கள் ஒரு செய்தியை எப்படி எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. மாநில அதிகாரிகளுக்கு தொடர்பில்லையாம்) விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் கட்சி இதழான முரசொலிக்கு நீங்கள் ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து அவர்கள் இன்று அதை வெளியிட்டிருகிறார்கள். கருணாநிதிக்காக நீங்கள் அடியாள் வேலை பார்ப்பது சரிதான். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் எழுதியதில் உறுத்தலாக சில விஷயங்கள் இருக்கிறது. [/size]

[size=4]"இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 'உதவிட இயலுமா?' என்று கேட்டார். அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன்." எவ்வளவு ஆழமான வரிகள் சுபவீ... அதாவது சித்த நேரம் முன்னாடி பேசியிருந்தேன்னா அவா கிட்டே சொல்லியிருப்பேனே என்பது போல இருக்கிறது. ஏன் இரண்டு மணி நேரம் முன்னாடி சொல்லியிருந்தால் மட்டும் உங்கள் தலைவர் கருணாநிதி பார்வதியம்மாளை அனுமதித்திருப்பாரா என்ன?

சரி கருணாநிதிக்கும் எண்பது வயதாகி விட்டது அயர்ந்து தூங்கியிருப்பார். ஏன் மறு நாளே 'இப்படியாகி விட்டது நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை திருப்பி அனுப்பி விட்டார்கள். நாம் உடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி 2003-ல் ஜெயலலிதா போட்ட உத்தரவை நீக்கச் சொல்லுவோம். அம்மாவை நாமே அழைப்பதன் மூலம் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கலாம். முடிந்தால் தேர்தல் வரை நீடிக்கலாம்' என்று கலைஞரிடம் சொல்லியிருக்கலாமே? நீங்கள் சொன்னால் செய்யாமலா போய் விடுவார்? நீங்கள் சொல்லி அவர் எவ்வளவு செய்திருக்கிறார், இல்லையா சுப.வீ.?

இப்படியான உதவிகள் இதற்கு முன்னரும் மே மாதத்திலும் உங்களிடம் கேட்கப்பட்டிருக்கலாம். என்ன செய்வது கையாலாகாத ஓர் இனமாக ஈழத் தமிழினம் இன்று போய் விட்டது. அப்படி சில கோரிக்கைகள் உங்களிடம் கேட்கப்பட்டு நீங்கள் கருணாநிதியைச் சென்று பார்த்திருக்கலாம். அது பற்றி கருணாநிதி உங்களிடம் சொன்ன பதில் பற்றியும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். கடந்த மே மாதத்தில் போரின் முடிவின் போது போர் நிறுத்தம் கோரி நீங்களும், இருட்தந்தை ஜெகத்கஸ்பர் ராஜும் சேர்ந்து கனிமொழி மூலமாக இறுதிக் கட்ட வேலையில் ஈடுபட்டீர்கள். அந்த முயற்சியில்தான் புலிகளின் தலைவர்கள் நடேசனும், புலித்தேவன் உள்ளிட்ட பல நூறு போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்று ஜெகத்கஸ்பரே எழுதினார். உண்மையில் இது வேறு யாரும் சொன்ன குற்றச்சாட்டு இல்லை, ஜெகத்தே எழுதியதுதான். அதை வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை ஜெகத் பதில் சொல்லவில்லை. நீங்களாவது டில்லியில் இருந்து உங்களின் மூலம் உத்தரவிட்ட அந்த காங்கிரஸ் பெரியவர் யார் என்று சொல்வீர்களா?[/size]

[size=4]நீங்கள் முரசொலியில் எழுதியிருக்கும் கட்டுரையில் ஜெயலலிதா ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் மீது பல கேள்விகளை வீசியிருக்கிறீர்கள். அது உண்மைதான் ஆனால் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழத்தில் போரை நிறுத்தி விட்டார்கள் என்று எழுந்து போன கருணாநிதியின் நிழலில் நின்று கொண்டு போயஸ் கார்டன் வாசலில் நிற்பவர்கள் மீது இக்குற்றச்சாட்டை வீச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? போயஸ்கார்டனை விட அறிவாலயம் மேல் என்கிற வீரவசனங்கள் இனி வேண்டாம். நாற்பதாண்டுகாலமாக நாங்கள் ஏமாந்து விட்டோம். இனியும் வீர வசன நடை வேண்டாம்.

பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்ட விவகாரத்தில் தொடர்பே இல்லாத கருணாநிதி மீது வைகோ குற்றம் சுமத்துவதாக பொங்குகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்துகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து வைகோ வருகிற தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம், கருணாநிதி முன்னிலையில் சட்டமன்றத்தில் சொன்னது போல செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பார்வதியம்மளை சிறப்புப் பேச்சாளராகக் கொண்டு வைகோ தமிழின எழுச்சி மாநாட்டு நடத்த திட்டமிட்டிருக்கலாம். அது உங்களுக்கும் கருணாநிதிக்கும் உங்களின் நண்பர்களான காங்கிரஸ்காரர்களுக்குமே தெரிந்த உளவுத் தகவல்; அது எமக்குத் தெரியாது.

ஆனால் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவாகரத்தில் கருணாநிதிக்கு தொடர்பே கிடையாதா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சுபவீ. தொடர்பே இல்லை என்றால் ஏன் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது? இரவோடு இரவாக நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை அதிகாரிகள் விடவில்லை. இவர்கள் போகவில்லை என்றால் விட்டிருப்பார்கள் என்று போலீசே செய்தி பரப்பியதே இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில்?[/size]

[size=4]நன்னடத்தை விதிகளின் படி தன்னை விடுவிக்கக் கோரினார் நளினி..... ஆமாம் நீண்டகால சிறை வதைகளில் இருந்து மீண்டும் தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார் நளினி. இதோ நளினியின் அறையில் இருந்து செல்போனைக் கண்டுபிடித்து விட்டார்கள் காவல்துறையினர். மேலதிகமாக மூன்று வழக்குகள் நளினி மீது போடப்பட்டுள்ளன.

நளினி போனை கழிப்பறையில் வீசியதாக சட்டமன்றத்தில் சொல்கிறார் திமுக‌ தலைவர்களில் ஒருவரும் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியவருமான துரைமுருகன். உடனே காங்கிரஸ்காரன் எழுந்து நளினி யாரிடமெல்லாம் பேசினார் என்று பட்டியல் சொல்கிறான். ஆமாம் நளின்யின் சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதும் கருணாநிதிக்குத் தெரியாது. இதையும் நம்புகிறோம். நள்ளிரவு 12 மணிக்குத் தகவல் தெரிந்து விமான நிலையத்தில் விசாரித்தபோது அவரை திருப்பி அனுப்பி விட்டதாக சொன்னார்கள் என்று முதலில் சொல்லி விட்டு, பின்னர் காலையில் பேப்பரைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கருணாநிதி சொன்னதையும் நம்புகிறோம். அந்த உத்தமருக்கு எதுவுமே தெரியாது; உங்களுக்கு நெடுமாறனும், வைகோவும் பார்வதியம்மாளை வைத்து என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியும் என்பதையும் நம்புகிறோம்.

ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல உள்ளூர்த் தமிழர்களில் பலரும் கூட பல நேரங்களில் மான ரோஷம் பார்க்காமல் உங்களிடம் உதவி கேட்டு இப்படி வகையாக சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில்தான் நீங்கள் வகையாக அந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். “இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவு வந்ததா?” என்று. சபாஷ் சரியான கேள்வி. உங்கள் அரசியல் ஆசானிடம் இருந்து ஆரம்பப்பாடத்தை நீங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கிறீர்கள். இந்த சொரணை கெட்ட ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இன்னும் உங்களிடம் ஏதாவது உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் வகையாக‌ இப்படி நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேளுங்கள். அப்போதாவது இவன்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.[/size]

[size=4]சந்திப்போம் நீங்களும் செம்மொழி மாநாடு, கலைஞர் டிவி, திமுக குடும்ப விழாக்கள், பட்டிமன்றம், கருணாநிதியை ஈழ விவகாரத்தில் பாதுகாப்பது என்று பிஸியாக இருப்பீர்கள். உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.[/size]

[size=4]இப்படிக்கு,

கையாலாகாத ஒரு தமிழன்

வெல்க‌ தமிழ்! வீழ்க தமிழன்![/size]

[size=4]திமுகவின் முரசொலி நாளிதழில் சுப.வீ. எழுதியுள்ள கட்டுரை: [/size]

[size=4]சென்னை: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட காரணமாக இருந்தவர் போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் வைகோவும் நெடுமாறனும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரான‌ சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.[/size]

[size=4]கடந்த சில நாட்களாகவே மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டுவரும் ஒரு செய்தியில், அடிப்படையான சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுட்டுள்ளன என்பதை இப்போது அறிய முடிகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார், தமிழக மண்ணில் கால் வைக்கவும் அனுமதிக்காமல், மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட மனிதநேயமற்ற செயலை அனைவரும் கண்டிக்கிறோம்.

மக்களவையிலேயே திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இதுகுறித்து கவன ஈர்ப்புச் செய்துள்ளார். இந்நிலையில் உண்மைகளை மூடிமறைத்து முதல்வர் கருணாநிதி மீது பழிபோட்டு, உண்ணாவிரதம், கண்டனம் என்று ஒரு மலிவான அரசியல் இங்கே அரங்கேற்றப்படுகிறது.

விமான நிலையம் பரபரப்பாக இருந்த அந்த நள்ளிரவில் தோழர் தியாகு, என்னைத் தொலைபேசியில் அழைத்து அந்தச் செய்தியைக் கூறினார். பத்திரிகையாளர்கள் மூலமாகக் கவிஞர் தாமரைக்கு செய்தி கிடைத்ததாக‌க் கூறிய அவர், உங்களால் ஏதும் உதவ முடியுமா? என்று கேட்டார். முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள வழி உள்ளதா என்றும் வினவினார்.

இந்த நேரத்தில் முதல்வரை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும் என்றேன். அதில் உள்ள நியாயத்தை அவரும் புரிந்து கொண்டார். பிறகு தமிழின உணர்வாளர்கள், பத்திரிகையாளர்கள் சிலர் அடுத்தடுத்துத் தொலைபேசியில் பேசினர்.[/size]

[size=4]இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 'உதவிட இயலுமா?' என்று கேட்டார்.

அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், 'முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே' என்றேன்.'இல்லையில்லை விசா கிடைத்துவிட்டதால், பரபரப்பாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் யாருக்குமே சொல்லவில்லை' என்று அவர் கூறினார்.[/size]

[size=4]அப்படியானால் வைகோவிற்கும், நெடுமாறன் அய்யாவிற்கும் மட்டும் எப்படி தெரிந்தது என்ற என் கேள்விக்கு அவருக்கும் விடை தெரியவில்லை.[/size]

[size=4]வயதான தாயை அழைத்து வந்து, அவருக்குச் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட, அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமே இங்கு அரசியல் தலைவர்கள் சிலரிடம் விஞ்சியிருப்பதை இப்போது நம்மால் அறிய முடிகிறது.[/size]

[size=4]விமான நிலையத்தில், தொடர்பே இல்லாமல் முதல்வர் கருணாநிதியைக் குற்றஞ்சாட்டி வைகோ (வழக்கம் போல்) ஆவேசமாய்ப் பேசுவதை ஜெயா தொலைக்காட்சி மறுநாள் தொடர்ந்து காண்பித்தது. "அடடா, பார்வதி அம்மாள் மீது ஜெயலலிதாவிற்குத்தான் எத்தனை அன்பு" என்று என்று விவரம் அறியாதவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.[/size]

[size=4]கருணாநிதியைத் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது என்று அறிக்கை விட்டார் நெடுமாறன்.[/size]

[size=4]எத்தனை பெரிய மோசடிகள் இவை. 2003ம் ஆண்டு, பிரபாகரனின் பெற்றோரை இந்தியாவிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது, அவர்களைக் கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காதவர்கள், அவரால்தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்ற உண்மையைத் திசைதிருப்ப ஆடும் நாடகத்தைத்தான் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது. [/size]

[size=4]பார்வதி அம்மாள் விரும்பினால், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அவர்களை அழைப்பதற்கு ஆவன செய்வேன் என்று கூறும் முதல்வர் கருணாநிதியை தமிழ்ச் சமூகம் போற்றும்.

வயது முதிர்ந்து, நோயினாலும், பல்வேறு சூழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள அந்தத் தாய் மன அமைதியுடன் வாழ நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை மனிதநேயம் கொண்ட அனைவரின் விருப்பமாகவும் இருக்க முடியும். நாம் அதற்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.

அதே நேரத்தில் திருப்பி அனுப்பிய 'பாவிகளை' எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.[/size]

[size=4]நீங்கள் தேடும் 'அந்தப் பாவி' போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள்.

இவ்வாறு சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.[/size]

http://www.keetru.co...4-24&Itemid=139

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் நமது எதிரி கருணாநிதிதான் மட்டும். நமது எதிரியாக தி.மு.க கூட இல்லை. இவையெல்லாம் கடந்தனவாக மறக்கப்பட வேண்டியவை.

Link to comment
Share on other sites

[size="5"]நன்கொடை கொடுத்தவுடன் இந்த திரிக்கு கருத்து எழுத [/size][size=1]

[size="5"]எவருக்கும் மனம் வரவில்லையோ ?[/size][/size][size=1]

[size=1]கன நேரமாக ஒருவரும் பதிவிடவில்லை .[/size][/size]

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஒரே ஒரு ரசிகன் வந்தாலும் அவனுக்காக 5 மணி நேரம் கூட இசை நிகழ்ச்சி நடத்துவேன், என்று அறிவித்துள்ளார் இசைஞானி - ராஜா.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஒரே ஒரு ரசிகன் வந்தாலும் அவனுக்காக 5 மணி நேரம் கூட இசை நிகழ்ச்சி நடத்துவேன், என்று அறிவித்துள்ளார் இசைஞானி - ராஜா.

இப்படி ஒரு செய்தியை இன்று காலையில் தட்ஸ்ரமிழில் போட்டிருந்தார்கள். :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

கனடாவில் ஒரே ஒரு ரசிகன் வந்தாலும் அவனுக்காக 5 மணி நேரம் கூட இசை நிகழ்ச்சி நடத்துவேன், என்று அறிவித்துள்ளார் இசைஞானி - ராஜா.

ஆணவம் அழிவிற்கு முதற்படி ....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அவர்களே முன்னர் இப்படியும் எழுதி இருந்தார்கள்..

கனடா இளையராஜா இசை நிகழ்ச்சி பின்னணியில் இலங்கை அரசு-கவலையில் தமிழர்கள்!

05-ilayaraja6-300.jpg

டோரன்டோ இசைஞானி இளையராஜா கனடாவில் நவம்பர் 3ம் தேதி நடத்தவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் உலகத் தமிழர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி கனடாவில் இசைஞானி இளையாராஜாவின் மாபெரும் இசைக் கச்சேரி ஒன்று அரங்கேற உள்ளது . இதற்கான ஏற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதில் பிரச்சனை என்னவென்றால், நவம்பர் மாதம் முழுவதும் கனடா வாழ் தமிழர்கள் ஈழத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து பல்வேறு வகையான நிகழ்வுகளில் பெரும் திரளாக கலந்து கொள்வர்.

அதுமட்டுமல்லாது, விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வனின் நினைவு நாள் நவம்பர் 2 தேதி வருகிறது. இதற்கும் கனடா தமிழர்கள் பெருந்திரளாக கூடி நினைவு கூர்வர். இவ்வாறு தமிழர்களின் பேரெழுச்சி மாதமாக ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களின் நினைவாக நவம்பர் மாதம் அனுசரிக்கப் படுகிறது.

இந்த எழுச்சியை இலங்கை அரசும் இந்திய அரசும் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதை எப்படியாவது திசைத் திருப்ப வேண்டும், மழுங்கடிக்க வேண்டும் என தமிழகத்தில் இருந்து இசைஞானி இளையராஜாவை கனடாவில் இசைக் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டின் பின்னணியில் தமிழக வர்த்தக சங்கம், தென்னிந்திய வர்த்தக சங்கம் மற்றும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இருப்பதாக கனடா வாழ் தமிழர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

இதை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் பெயர் ட்ரினிடி ஈவன்ட்ஸ். இந்த நிகழ்ச்சிக்காக கனடாவில் இளையராஜாவும் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களும் பத்திரிக்கை சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தனர் .

இந்த சந்திப்பில் ஒரு புதுமை என்னெவென்றால், இளையராஜாவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட அதிக பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இந்த சந்திப்பின்போது பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமத்கப்பட்டனர்.

இந்த நிகழ்வு நவம்பர் மாதத்தில் நடக்கக் கூடாது என்று இளையராஜாவிற்கு எடுத்துச் சொல்ல தமிழர் பிரதிநிதிகள் பலர் முயன்றும் இளையராஜாவை நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருந்த இயக்குனர் பாரதிராஜாவை அவர்கள் சந்தித்து பேசி உள்ளனர். அவர்களது விளக்கத்தைக் கேட்ட பாரதிராஜா தான் இதில் கலந்து கொள்ளவில்லை என்று கூறி விட்டாராம்.

இப்போது ஈழத் தமிழர்கள் கவலை எல்லாம், இந்த இசைக் கச்சேரி தமிழர்களின் ஈழ விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யும் என்பது தான் . இளைராஜாவை பெரிதும் நேசிக்கும் ஈழ மக்கள் இன்று இந்த இசை நிகழ்ச்சியால் அவரை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இளையராஜாவிற்கு கறுப்புக் கொடி காட்டவும் அவர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இளையராஜா இந்நிகழ்வை நவம்பர் மாதத்தில் நடத்தாமல் டிசம்பர் மாதமோ அல்லது அக்டோபர் மாதமோ நடத்த வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் கோருகின்றனர்.

தமிழகத்தில் இருந்தும் இளையராஜாவிற்கு இதற்கான கோரிக்கையை இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வைத்துள்ளார். அமீர் முதலான இயக்குனர்கள் கூட இது தொடர்பாக இளையராஜாவை சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தமிழக தமிழர்களும் கட்சிகளும், இயக்கங்களும் இளையராஜாவிற்கு இது தொடர்பாக விளக்கம் கொடுத்து இந்த இசை கச்சேரியை நவம்பர் மாதத்தில் நடத்தாதபடி செய்ய வேண்டும் என உலகத் தமிழர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

http://tamil.oneindi...one-162689.html

இப்போ.. இப்படிச் சொல்கிறார்கள்...

http://tamil.oneindi...uct-163823.html

என்னமா எழுதிறாங்கப்பா......... :unsure::rolleyes::lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் வரும் சிரிப்பின் அர்த்தம் என்ன? அறியாமையா அல்லது ஆணவமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.