Jump to content

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

trinity-events-logo.png

followus.gif

facebook.pngtwitter.png

<p>

246Limited Number of Tickets Available...

[size=3]Tickets Available At:[/size]

[size=3]BRAMPTON :[/size][size=3] [/size][size=3]GOLUMBIA VIDEO[/size][size=3] 905-456-8433 [/size][size=3]PHOENIX GROUP[/size][size=3] (905) 796-5995[/size]

[size=3]MISSISSAUGA : [/size][size=3]UDUPI MADRAS CAFE[/size][size=3] [/size](905) 277-0010 [size=3] [/size][size=3]ANJAPPAR RESTAURANT[/size][size=3] [/size](905) 272-2232

[size=3]MARKHAM :[/size][size=3] [/size][size=3]MARKHAM VIDEO[/size][size=3] 905-294-4253 [/size][size=3]SOUTH ASIAN SUPERMARKET[/size][size=3] 905-201-9833[/size]

[size=3]MONTREAL :[/size][size=3] [/size][size=3]514-944-9315[/size]

[size=3]SCARBOROUGH :[/size][size=3] ANJAPPAR RESTAURANT [/size][size=3](416) 265-2695 [/size][size=3]AMMAN JEWELLERS[/size][size=3] (416) 293-7287[/size]

[size=3]SCARBOROUGH :[/size][size=3] [/size][size=3]FASHION WORLD[/size][size=3] (905) 471-2223[/size][size=3] KUMAR VIDEO[/size][size=3] 416-292-9043[/size]

[size=3]MISSISSAUGA :[/size][size=3] [/size][size=3]NEW KAVERI SUPERMARKET[/size][size=3] 905-290-6925 [/size][size=3]BIRUNTHAVANAM[/size]

[size=3]BRAMPTON : [/size][size=3]ABINAS TEXTTILES & GIFTWARE [/size][size=3](905) 459-4900 [/size][size=3]ANJAPPAR RESTAURANT [/size][size=3](905) 450-7575[/size]

[size=3]VAUGHAN :[/size][size=3] [/size][size=3]MAPLE SANTHAI[/size][size=3] 905-417-6069[/size]

[size=3]SCARBOROUGH :[/size][size=3] [/size][size=3]ANNAMS JEWELLERS[/size][size=3] 416-265-9166 [/size][size=3]ATRIUM [/size][size=5] Hurry Up..!![/size]

The debut show of Trinity Events "Engeyum Eppothum Raja" is expected to draw thousands to the Rogers Centre on November 3rd. The first show of its kind within the Tamil Canadian community, "Engeyum Eppothum Raja" highlights the South Indian musical legend Maestro Illayaraja - the show will feature over 100 artists including many popular lead singers and actors.

"Travel visas have been confirmed for all artists on the roster and we are excited to announce that rehearsals have commenced in Chennai, in preparation for a massive show-down" said Kishan Nithy, Spokesperson and Vice President of Trinity Events. "The anticipation and the excitement of the large North American fan base is evident from the steady rise in ticket sales and interest shown from Halifax to the east and San Francisco to the west" added Mr. Nithy.

Can the tickets be refunded?

- All Tickets including tickets purchased through our local store distributors are managed by Ticketmaster and fully refundable upon event cancellation.

What are the songs will be planned in the event?

- We are receiving list of songs from fans and most popular songs will be handpicked by Raja sir and will be played.

How to submit the songs list?

- Please send an email to info@trinityeventsonline.com with your top 10 picks and include your name and contact details to win free tickets. Free tickets winners will be announced on Oct 25, 2012 in our face book and webpage.

Is there is any local artist participation in the show?

- Currently the production team is working on finalizing the show programming sequence. More details to follow.

PRE-SHOW

- First artist to join our pre-show event on Nov3rd show @ Rogers centre is dancer Nanda from India. Nanda was a runner up of the popular dance show Ungalil Yaar Adutha Prabhu Deva, and is an upcoming Actor, choreographer and what not. Watch the attached video to find his plans for the Nov3rd show. More exciting news yet to come. Stay tuned for updates.

TICKET SALE

- All stores in Toronto will get $100,$80,$60,$39 tickets tomorrow . VIP tickets are available later this week. We appologize for the VIP tickets sales delay. we will keep you informed.

VIJAY TV

- * We are very excited and proud to announce STAR VIJAY TV being our Main Exclusive TV partner for the Nov3rd 2012 Show in Toronto.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QEsosbgiDTQ

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8UgJB5a-4h8

yuwan-image.jpg

[size=1][size=3]Copyright © Trinity Events Inc. - All Rights Reserved.[/size][/size]

Link to post
Share on other sites
 • Replies 248
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவிற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதுதான் தேவை. தானும் தன்பாடும் என்றிருந்த ராஜா.. சர்வ சாதாரணமாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டிய ராஜா.. இப்படியான ஒரு அறிவிப்பை விடுத்து.. ஒரு நிகழ்ச்சியை மனப் புழுகாத்தோடு நடத்த வேண்டிய சூழல் என்பது நிச்சயம்.. இளையராஜாவை சிந்திக்க வைக்கும். எதிர்காலத்தில் தவறுகள் நிகழ்வதில் இருந்தும் அவர் விலகி இருக்க முயல்வார்..! :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே எதிராக கருத்தெழுதுபவர்கள் புரிந்து எழுதுகிறார்களா

புரியாமல் எழுதுகிறார்களா என்பது தெரியவில்லை

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுக்கிறார்கள்

எதிர்த்து எழுதுபவர்கள் தங்களை அறியாமலே

ராஜாவின் கச்சேரிக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கிறார்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=4] ராஜா ஒரு சினிமா இசை வியாபாரி.. அவரை தமிழினத்தின் அடையாளமாக்குவர்களின் தவறுதான்.. இன்றைய ராஜா எதிர்ப்பு..![/size]

சான் பிரான்ஸிஸ்கோவிலும் கச்சேரி நடத்துகிறார் இசைஞானி!

10-illayaraja-78-300.jpg

அமெரிக்காவின் முக்கிய நகரமான சான் பிரான்ஸிஸ்கோவில் நவம்பர் 11-ம் தேதி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது.

100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் தமிழ்சினிமாவின் முன்னணிப் பாடகர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

வரும் நவம்பர் 3-ம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடா தலை நகர் டொரண்டோவில் நடக்கிறது. இதற்கு தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இளையராஜாவின் இன்னொரு நிகழ்ச்சி அமெரிக்காவின் சான்ஃபிராஸ்சிஸ்கோ நகரில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

வரும் நவம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ள இந்தக்கச்சேரியை ஸ்வாகத் கேர் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா,கார்த்திக் ராஜா, பவதாரிணி, கே.ஜே.ஜேசுதாஸ்,ஹரிஹரண், கே.எஸ்.சித்ரா, சாதனா சர்கம், மனோ, கார்த்திக், விஜய் யேஸுதாஸ், ஸ்வேதா மேனன் உட்பட நிகழ்ச்சியில் பாடவிருக்கும் முன்னணி பாடகர்கள் பங்கேற்க உள்ளனர். இசை ரசிகர்கள் நிகழ்ச்சியைக் காண ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் வெறும் அறிக்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்களோ!

http://tamil.oneindi...usa-162923.html

Link to post
Share on other sites

ஆணவம் அழிவிற்கு முதற்படி ....

ஆணவம் அவருக்கில்லை உங்களுக்குத்தான். குழப்பவாதிகளுக்குத்தான்.

அழிவுக்கு முதற்படியாய் இருக்கட்டும் ஆணவத்தால் அழிந்தபின்னும் ஆணவத்தால் ஆட்டம் போடுகின்றீர்களே இன்நிலையில் அடுத்தவன் ஆணவம் பற்றி கதைக்க என்ன யோக்கியதை வைத்திருக்கின்றீரகள்?. பெயரில தமிழரசு என்றிருப்பதாலா?

கறுப்புக்கொடி பிடிக்க வேணுமெண்டா கீழே உள்ள செய்திய படிச்சிட்டு ஐநா தூதரகத்துக்கு முன்னால சிங்கள துதரகத்துக்கு முன்னால போய் பிடிக்கவும்.

தமிழன தமிழன் சொறிஞ்சு தேசியம் வளர்க்கிறம் என்ற பயித்தியக்காரத்தனத்தை கைவிடுங்கள்.

தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு வெலிக்கடையில் நிர்வாணமாக்கி பாலியல் கொடுமைகள்.

http://www.yarl.com/...pic=110250&st=0

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதே ராஜா.. 2011 மலையாள இசை நிகழ்ச்சியை தள்ளிப் போடச் சொன்ன காரணங்கள்.. ராஜாவிற்கு நல்லாவே பிழைக்கவும் வரும் போல...

[size=4]

ilayaraja-white-1.jpg[/size]

[size=4]28.12.2011 அன்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் 'என்றென்றும் ராஜா' இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மலபார் நகைக்கடை நிறுவனமும் ஸ்பான்ஸர் செய்துள்ளது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் கேரள அரசு மற்றும் கேரள வியாபார நிறுவனங்களுக்கு இளையராஜா இசையமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்த, பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் தலைமையில், தென்சென்னை மாவட்ட தலைவர் தபசி குமரன் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி உள்பட 50க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினர், சென்னை தியாகராயர் நகர் முருகேசன் தெருவில் இருக்கும் இளைஞயராஜாவின் வீட்டு முன்பாக நேற்று காலை சென்றுள்ளனர். அப்போது இளையராஜா ஊரில் இல்லை என்றும், அவர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த தியாகராயநகர் காவல்துறை உதவி ஆணையாளர் தமிழ்ச்செல்வன் அங்கு வந்து, அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ கூடாது. உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்று கேட்டுள்ளார்.

நாங்கள் ஆர்ப்பட்டோமா, போராட்டமோ நடத்த வரவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழரான இளையராஜா மலையாள நிறுவனத்திற்கு இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்பதை கோரிக்கை மனுவாக கொடுக்க வந்துள்ளோம் என்று சொல்லியுள்ளார்கள்.

இதில் உள்ள நியாகத்தை புரிந்துகொண்ட காவல்துறை உதவி ஆணையாளர், இளையராஜா உதவியாளரை அழைத்து அவரிடம் மனு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்கு பிறகு வெளிநாட்டில் உள்ள இளையராஜா, காவல்துறை உதவி ஆணையாளரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அப்போது, இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே கையொப்பம் ஆகிவிட்டது. என் துணைவியாரின் மரணத்திற்கு பிறகு, எந்த நிகழ்ச்சியையும் நடத்தவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்த ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பதும் எனக்கு தெரியும். எப்படியாவது நான் நிகழ்ச்சியை தள்ளிப்போடுவதற்கோ, கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்கோ ஏற்பாடு செய்கிறேன் என்று போராட்டக்காரர்களிடம் கூறும்படி காவல்துறை உதவி ஆணையாளரிடம் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலும் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவாரேனால், பெரியார் திராவிடர் கழகம், தமிழின ஆதரவு அமைப்புக்களை திரட்டி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வோம் என்று பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் தெரிவித்தார். [/size]

http://www.nakkheera....aspx?PVN=67795

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆணவம் அவருக்கில்லை உங்களுக்குத்தான். குழப்பவாதிகளுக்குத்தான்.

அழிவுக்கு முதற்படியாய் இருக்கட்டும் ஆணவத்தால் அழிந்தபின்னும் ஆணவத்தால் ஆட்டம் போடுகின்றீர்களே இன்நிலையில் அடுத்தவன் ஆணவம் பற்றி கதைக்க என்ன யோக்கியதை வைத்திருக்கின்றீரகள்?. பெயரில தமிழரசு என்றிருப்பதாலா?

கறுப்புக்கொடி பிடிக்க வேணுமெண்டா கீழே உள்ள செய்திய படிச்சிட்டு ஐநா தூதரகத்துக்கு முன்னால சிங்கள துதரகத்துக்கு முன்னால போய் பிடிக்கவும்.

தமிழன தமிழன் சொறிஞ்சு தேசியம் வளர்க்கிறம் என்ற பயித்தியக்காரத்தனத்தை கைவிடுங்கள்.

தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு வெலிக்கடையில் நிர்வாணமாக்கி பாலியல் கொடுமைகள்.

http://www.yarl.com/...pic=110250&st=0

சண்டமாருதன்.. சுய சிந்தனையோடு தானே இதனை எழுதுகிறீர்கள்..??!

இளையராஜா இசை நிகழ்ச்சியை ரொரண்டோவில நடத்தினாப் போல.. வெலிக்கடைச் சிறையில் கொடுமைக்கு உள்ளாகும் தமிழ் பெண்களை சிங்களவன் ராஜாவிற்காக விட்டிடுவானோ. அப்படின்னா நல்லாவே நடத்துங்கோ. அதற்கான உறுதி மொழியை ராஜாவிடம் பெற்று அந்தக் கைதிகளிடம் சேர்த்துவிடுங்கோ.

உங்கட கருத்து.. இந்த நிகழ்ச்சி வேண்டாம் என்றவையை தான் பலப்படுத்தும். இத்தனை துன்பங்களோடும் சொந்த உறவுகள் தாயகத்தில் வருந்த களியாட்ட ஒரு இசை நிகழ்ச்சி தேவையா என்ற கேள்வியைத்தான் பாமரன் கூட கேட்க முயல்வான்..!

நீங்கள் எதை மறைக்க முற்படுகிறீர்களோ.. அதுவே துரித்திக் கொண்டு நிற்குது..! :rolleyes::icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆணவம் அவருக்கில்லை[/size][size=4] உங்களுக்குத்தான். குழப்பவாதிகளுக்குத்தான்.[/size]

[size=4]அழிவுக்கு முதற்படியாய் இருக்கட்டும் ஆணவத்தால் அழிந்தபின்னும் ஆணவத்தால் ஆட்டம் போடுகின்றீர்களே இன்நிலையில் அடுத்தவன் ஆணவம் பற்றி கதைக்க என்ன யோக்கியதை வைத்திருக்கின்றீரகள்?. பெயரில தமிழரசு என்றிருப்பதாலா?[/size]

உங்களுக்கு என்னைப்பற்றி என்ன தெரியும் ?உங்களுக்கு என்னை பற்றி முழுமையாக தெரியாமல் எழுதுவது மிகவும் வருந்த தக்க விடயமாகும். :(

Link to post
Share on other sites

இந்த நிலையில் இளையராஜாவின் இன்னொரு நிகழ்ச்சி அமெரிக்காவின் சான்ஃபிராஸ்சிஸ்கோ நகரில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

வரும் நவம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ள இந்தக்கச்சேரியை ஸ்வாகத் கேர் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா,கார்த்திக் ராஜா, பவதாரிணி, கே.ஜே.ஜேசுதாஸ்,ஹரிஹரண், கே.எஸ்.சித்ரா, சாதனா சர்கம், மனோ, கார்த்திக், விஜய் யேஸுதாஸ், ஸ்வேதா மேனன் உட்பட நிகழ்ச்சியில் பாடவிருக்கும் முன்னணி பாடகர்கள் பங்கேற்க உள்ளனர். இசை ரசிகர்கள் நிகழ்ச்சியைக் காண ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் வெறும் அறிக்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்களோ!

http://tamil.oneindi...usa-162923.html

Nov

11

Sun

HP Pavilion At San Jose San Jose, CA

03:00 PM

Link to post
Share on other sites

தமிழருக்குள் தமிழர் சொறிபட்டு குத்துப்பட்டு இப்படியே பழக்கப்பட்டுவிட்டது. நவம்பர் மாதத்தில் வேற எங்காவது தமிழர்கள் எதாவது செய்கின்றார்களா என்று மோப்பம் பிடித்துக்கொண்டு திரிந்து அங்கே போய் தேசியத்தை வளர்க்கவேண்டியதுதான். போர் முடிவுக்க வந்தபின் 99வீதமான எமது தேசீயச் சார்பான நடவடிக்கையும் எமக்குள் செறிபட்டதேயன்றி போர்க்குற்றம் குறித்து ஆர்பாட்டம் செய்ததோ இல்லை முன்னாள் போராளிகள் மக்கள் அவலங்கள் குறித்து செய்ததோ கிடையாது எந்த விதத்திலும் சிங்களப்பேரினவாதத்துக்கு எதிராக இயங்கும் நிலையில் எமது இயங்குசக்தி இல்லை. எமது சக்திகள் எமக்குள்காகவே விரையமாகி வீணடிக்கப்படுகின்றது. இது இயக்கங்களுக்குள் நடந்த குத்துப்பாடானலும் சரி இப்ப நடக்கின்றதானாலும் சரி. இந்த நோய் எந்தக்காலத்திலும் குணமாகப்போவதில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆணவத்தால் அழிந்தபின்னும் ஆணவத்தால் ஆட்டம் போடுகின்றீர்களே

முப்பது வருடத்திற்கு மேலாய் தன் சொந்த மக்களின் ஆதரவோடு .............தமிழீழ மக்களின் விடிவிற்காய் ,நிம்மதிக்காய் நியாமாய்,நீதியாய் ,போராடி எதிரியினதும்,வல்லரசுகளினதும் ,சூழ்ச்சியாலும்,வஞ்சகத்தாலும்,பலமிழக்கப்பட்டு ,மௌனித்து நிற்கும் விடுதலைப்போராட்டத்திற்காய் போராடிய வீரர்கள் ஆணவத்துடன் போராடி ,அதே ஆணவத்தால் தான் எங்களுக்காக தம் இன்னுயிர்க்களை தியாகம் செய்தார்கள் என்றால் ......அந்த ஆணவத்தை கொஞ்சம் விளக்க கூறமுடியுமா .............. அல்லது ஆணவம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாமல் தான் இங்கு எழுதுகிறீர்களா .............அல்லது தமிழீழ போராட்டமே ஆணவத்தின் வடிவம் என்கிறீர்களா ...எதை கூற வருகிறீர்கள் ......

ஒன்று மட்டும் புரிகிறது .............இளையராஜாவின் நிகழ்ச்சி உங்களைப்போன்றவர்களின் முகத்தை தமிழினம் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை மட்டும் தந்திருக்கிறது.

அது மட்டுமன்றி அந்த மாபெரும் இசை மேதை விடுதலைக்கு எதிரானவர் என்ற கருத்தை நீங்களே திணிப்பது போலும் உள்ளது ........

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாட்டாமைகளை கேட்காமல் தொடங்கிவிட்டார்கள் என்பதால் வந்த சில்லேடுப்புகள் தான் இத்தனையும்.

அவனவனுக்கு சொந்த கருத்துக்கள் ,சிந்தனைகள் இருக்க கூடாது என்பது போலிருக்கு பலர் பதிவுகள் .

உங்களுக்கு நீதி நியாயமாய் இருந்தது உலகிற்கு பயங்கரவாதமாக இருக்கின்றது.

இங்கு எம்மவர்கள் பிள்ளைகளை பொலிஸ் பிடிக்கும் போது இப்படித்தான் அழுகின்றார்கள் ,என்ரை பிள்ளை பாவம் ஒரு குற்றமும் செய்திராது,ஒரு சோலி சுரட்டும் இல்லை என்று .பொலிஸ் சொல்வான் ஏற்கனவே இவர் பெயர் எமது பதிவில் இருக்கு என்று .

உங்கட நீதி நியாமமேல்லாம் உங்களுட மட்டும் தான் செல்லும்.

இப்போது கூட ராஜபக்சாவை போர்க்குற்றங்களில் மாட்டி உள்ளே போடமுடியாமல் தடையாக இருப்பது புலிகள் செய்த போர்க்குற்றங்ஙகள் தான்.

Link to post
Share on other sites

முப்பது வருடத்திற்கு மேலாய் தன் சொந்த மக்களின் ஆதரவோடு .............தமிழீழ மக்களின் விடிவிற்காய் ,நிம்மதிக்காய் நியாமாய்,நீதியாய் ,போராடி எதிரியினதும்,வல்லரசுகளினதும் ,சூழ்ச்சியாலும்,வஞ்சகத்தாலும்,பலமிழக்கப்பட்டு ,மௌனித்து நிற்கும் விடுதலைப்போராட்டத்திற்காய் போராடிய வீரர்கள் ஆணவத்துடன் போராடி ,அதே ஆணவத்தால் தான் எங்களுக்காக தம் இன்னுயிர்க்களை தியாகம் செய்தார்கள் என்றால் ......அந்த ஆணவத்தை கொஞ்சம் விளக்க கூறமுடியுமா .............. அல்லது ஆணவம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாமல் தான் இங்கு எழுதுகிறீர்களா .............அல்லது தமிழீழ போராட்டமே ஆணவத்தின் வடிவம் என்கிறீர்களா ...எதை கூற வருகிறீர்கள் ......

ஒன்று மட்டும் புரிகிறது .............இளையராஜாவின் நிகழ்ச்சி உங்களைப்போன்றவர்களின் முகத்தை தமிழினம் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை மட்டும் தந்திருக்கிறது.

அது மட்டுமன்றி அந்த மாபெரும் இசை மேதை விடுதலைக்கு எதிரானவர் என்ற கருத்தை நீங்களே திணிப்பது போலும் உள்ளது ........

ஆணவம்தான் அழிவின் பெரும் சூட்சுமம். முப்பதுக்கு மேற்பட்ட இயக்கத்தலமையும் நான் பெரிது என்றுதான் இறுதிவரை இருந்தார்கள் தமிழீழம் என்ற கொள்கை பெரிதென்று இருக்கவில்லை. ஆணவத்தை அடிப்படையாகக் கொண்டதே எமது தேசீய மேடை. இதிலிருந்தே தலமைகள் வழிநடத்துனர்கள் உருவாகின்றாரகள். மாவீரர்களை இதற்குள் போட்டு குழப்புவது அர்த்தமற்றது. எத்தனையே அற்பணிப்புகள் தியாகத்தை செய்தவர்களையும் அர்த்தமற்றதாக்கும் சிந்தனைமுறையே ஆணவம் என்கின்றேன். இந்த ஆணவத்துக்கு வக்காலத்த வாங்கவும் தக்கவைக்கவும் மாவீரரரை இழுப்பது அயோக்கியத்தனம். நேற்று இரண்டு இயக்கத்தலமை நான் பெரிது நீ பெரிது என்றதன் விழைவு சிங்களவனின் வெற்றி. இன்று கனடாவில் இரண்டு வியாபாரிகள் நான் பெரிது நீ பெரிது என்று சண்டைபோடுவதுக்கு தேசீயம் மாவீரர் என்பதை பயன்படுத்துகின்றார்களே இது ஆணவம் மட்டுமில்லை ஆணவத்துடன் கூடிய அயோக்கியத்தனம். இந்த ஆணவத்தின் பின்னால் எந்தச் சிந்தனையும் இன்றி மந்தைகள்போல் நாம் சென்றால் இதற்கு அர்த்தம் என்ன? மக்களை கூறுபோடுகின்றவர்கள் இவர்களே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நீதி நியாயமாய் இருந்தது உலகிற்கு பயங்கரவாதமாக இருக்கின்றது.

உங்கட நீதி நியாமமேல்லாம் உங்களுட மட்டும் தான் செல்லும்.

நாம் போராடியது எம் விடிவிற்காகவும் ,எமது உரிமைக்காகவும் ,எமக்குத்தான் முழுமையாக புரியும் எம் போராட்டத்தின் நியாயத்தன்மை.

உலகத்திற்காய் நாம் போராடவில்லை ..........ஏனனில் தனது சுயநலத்தின் பக்கமாகவே உலகம் எமது போராட்டத்தை பார்த்தது .........இன்றுவரை....ஆனால் கொடுமை என்னவென்றால் நாமே எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது உலகம் எங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கமுடியும் ................

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆணவம்தான் அழிவின் பெரும் சூட்சுமம். முப்பதுக்கு மேற்பட்ட இயக்கத்தலமையும் நான் பெரிது என்றுதான் இறுதிவரை இருந்தார்கள் தமிழீழம் என்ற கொள்கை பெரிதென்று இருக்கவில்லை. ஆணவத்தை அடிப்படையாகக் கொண்டதே எமது தேசீய மேடை. இதிலிருந்தே தலமைகள் வழிநடத்துனர்கள் உருவாகின்றாரகள். மாவீரர்களை இதற்குள் போட்டு குழப்புவது அர்த்தமற்றது. எத்தனையே அற்பணிப்புகள் தியாகத்தை செய்தவர்களையும் அர்த்தமற்றதாக்கும் சிந்தனைமுறையே ஆணவம் என்கின்றேன். இந்த ஆணவத்துக்கு வக்காலத்த வாங்கவும் தக்கவைக்கவும் மாவீரரரை இழுப்பது அயோக்கியத்தனம். நேற்று இரண்டு இயக்கத்தலமை நான் பெரிது நீ பெரிது என்றதன் விழைவு சிங்களவனின் வெற்றி. இன்று கனடாவில் இரண்டு வியாபாரிகள் நான் பெரிது நீ பெரிது என்று சண்டைபோடுவதுக்கு தேசீயம் மாவீரர் என்பதை பயன்படுத்துகின்றார்களே இது ஆணவம் மட்டுமில்லை ஆணவத்துடன் கூடிய அயோக்கியத்தனம். இந்த ஆணவத்தின் பின்னால் எந்தச் சிந்தனையும் இன்றி மந்தைகள்போல் நாம் சென்றால் இதற்கு அர்த்தம் என்ன? மக்களை கூறுபோடுகின்றவர்கள் இவர்களே.

போராட்டம் .அதை மேற்கொள்ளும் விடுதலை அமைப்பென்பது தலைமை,வழிநடத்துனர்,போராளிகள்,மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஓர் ஒட்டுமொத்த குழுமம் ஆகும்.............இங்கே இவை அனைத்தையும் மேற்பார்வை செய்து நிர்வகித்து சரியான பாதையில் அழைத்து செல்வது தலைமை ..................இந்த தலைமைக்கு ஆணவம் இருந்து தான் ,அல்லது விடுதலைப்போராட்டத்தை முக்கியப்படுத்தாமல் தம் சுயநலத்தை தான் முக்கியப்படுத்தி அயோக்கியத்தனமாய் இருந்திருந்தால் இந்தப்போராட்டம் இன்றுவரை நீடித்திருக்காது ........எப்பவோ அழிந்திருக்கும் ........ஆணவம் என்ற சொல் நிலையற்றது இந்த ஆணவம் என்னும் போர்வையை எமக்காக போராடிய தலைமைக்கு போர்த்துவது என்பது எந்த வகையில் நியாயம் ....சரி நான் அறிந்தவரை உங்கள் கருத்துடன் உடன்படமுடியாமலே மீண்டும் பதில் எழுதுகிறேன் ............எனது கேள்வி ஆணவத்துடன் தலைமை செயற்பட்டதாயின் ....அது என்ன ,எப்படிப்பட்ட ஆணவம் என்பதை விளக்கப்படுத்தமுடியுமா ............நன்றி

Link to post
Share on other sites

நாட்டாமைகளை கேட்காமல் தொடங்கிவிட்டார்கள் என்பதால் வந்த சில்லேடுப்புகள் தான் இத்தனையும்.

அவனவனுக்கு சொந்த கருத்துக்கள் ,சிந்தனைகள் இருக்க கூடாது என்பது போலிருக்கு பலர் பதிவுகள் .

உங்களுக்கு நீதி நியாயமாய் இருந்தது உலகிற்கு பயங்கரவாதமாக இருக்கின்றது.

இங்கு எம்மவர்கள் பிள்ளைகளை பொலிஸ் பிடிக்கும் போது இப்படித்தான் அழுகின்றார்கள் ,என்ரை பிள்ளை பாவம் ஒரு குற்றமும் செய்திராது,ஒரு சோலி சுரட்டும் இல்லை என்று .பொலிஸ் சொல்வான் ஏற்கனவே இவர் பெயர் எமது பதிவில் இருக்கு என்று .

உங்கட நீதி நியாமமேல்லாம் உங்களுட மட்டும் தான் செல்லும்.

இப்போது கூட ராஜபக்சாவை போர்க்குற்றங்களில் மாட்டி உள்ளே போடமுடியாமல் தடையாக இருப்பது புலிகள் செய்த போர்க்குற்றங்ஙகள் தான்.

இப்போ எந்த புலியை பிடித்து தண்டனை கொடுக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்??.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

'ஒரே ஒரு ரசிகன் எனக்காக வந்தாலும்...!' - அதான் ராஜா

29-illayaraja-12-300.jpg

கனடாவில் என்னைக் காண ஒரே ஒரு ரசிகன் வந்தாலும் அவனுக்காக 5 மணி நேரம் கூட இசை நிகழ்ச்சி நடத்துவேன், என்று அறிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா.

வரும் நவம்பர் 3-ம் தேதி கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா.

ஆனால் ஈழத் தமிழர்களின் துக்க மாதம் நவம்பர். அந்த மாதத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என புதிதாகப் புறப்பட்டிருக்கும் சில திடீர் உணர்வாளர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இதனால் இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு ஆதரவாக பெரும்பான்மை மக்களும், எதிராக ஒரு சிறு குழுவும் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலை. ஆனாலும் டிக்கெட் வாங்கியவர்களைப் போகவிடாமல் தடுக்க சிலர் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சி கட்டாயம் நடக்கும் என்றும், தன் நிலையில் மாற்றமில்லை என்பதையும் உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.

அதில், "கடல் கடந்து கனடா நாட்டுக்கு உங்களைக் காண வரும் எனக்காக ஒரே ஒரு ரசிகன் அரங்கத்தில் இருந்தாலும், அந்த ரசிகன் எழுந்து போகும் வரை, அவன் ஐந்து மணி நேரம் காத்திருந்தால், அவனுக்காக நான் அந்த ஐந்து மணிநேரமும் இசை நிகழ்ச்சி நடத்துவேன்," என்று கூறியுள்ளார்.

http://tamil.oneindia.in/movies/news/2012/10/ilayaraja-firm-on-his-stand-conduct-163823.html

டிஸ்கி:

ரெண்டு பக்கமும் விட்டு கொடுக்க மாட்டங்க போல கிடக்கு .. யாராவது விட்டு கொடுத்துவிட்டு போங்கப்பா...

Link to post
Share on other sites

ரெண்டு பக்கமும் விட்டு கொடுக்க மாட்டங்க போல கிடக்கு .. யாராவது விட்டு கொடுத்துவிட்டு போங்கப்பா...

இதில் விட்டுக்கொடுக்க என்ன இருக்கின்றது. இசை நிகழ்ச்சியை குழப்புகின்றவர்களுக்கு தலைசாய்த்தால் அது தமிழ்த்தேசியத்துக்கு அடிப்படையில் விரோதமாகிவிடும். தமிழ்நாட்டுத்தமிழர் ஈழத்தமிழர் என்ற கருத்து கசப்புணர்வின் விதை வளர ஆரம்பிக்கும். ஈழத்தமிழர்களுக்குள்ளாகவே புதினான இரண்டுபிரிவுகளுக்கு வழிவகுக்கும். இந்தப் பிரிவுகள் எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளில் இருந்து மக்கள் தம்மை அந்நியப்படுத்தும் நிலமையை உருவாக்கும். இவ்வாறான சம்பவங்கள் கத்திமேல் நடப்பதுபோன்றது. இதில் குறுக்கீடு குழப்பம் செய்வதால் பாதகமே அன்றி சாதகம் எதுவும் இல்லை.

முன்யோசனையற்ற உணர்ச்சிவசத் தேசீயத்துக்கு கனடாவில் இடமில்லை. சீமான கனடாவில் நுழையவிடாமல் திருப்பி அனுப்பட்டப்டவர். தற்போதைய நிலமையில் மாவீரர் நிகழ்வு தமிழ்த்தேசீய நிகழ்வுகள் மக்களின் பெரும் ஆதரவுடனே நடைமுறைப்படுத்தமுடியும். சிறு அளவிலான முன்யோசனையற்ற நிகழ்வுகள் உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகளை தூண்டிவிடுபவர்கள் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு நாடுகடத்தப்படும் சூழலே இங்கு நிலவுகின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த அரசயல் நிலமை இப்போது இல்லை. நாலுபேரின் உணர்ச்சிவசப்பட்ட பயித்தியக்காரத்தன தூண்டுதலில் பலர் வாழ்வே பாதிக்கப்படலாம். இந்த நாட்டின் அரசியல் நிலை சட்டதிட்டங்கள் மற்றும் எமக்குள் இருக்கும் முரண்பாடுகள் அதை விரிசலுக்குள்ளாக்கும் காரணிகள் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு இந்த நிகழ்வுடன் ஒன்றிப்போவதே தமிழ்த்தேசியத்தக்கு சாதகமானது. இல்லை என்று எதிர்மறை அடாவடி அரசியல் செய்வது எமக்கு நாமே வைத்தக்கொள்ளும் ஆப்பு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்.. இளையராஜா ரொரண்டோ வராட்டில் பலர் வாழ்வு பாதிக்கப்படும். அவர் வரனும்.. இசை நிகழ்ச்சி சிறப்புற நடக்கனும். அப்படியே நவம்பர் என்ன.. வருசம் பூராவும் இசை நிகழ்ச்சிகளையே நடத்திக் கொண்டிருப்போம்.

அப்போதுதான்.. ஆணவத்தால் அழிந்தவர்கள் போக.. மற்றவர்கள்.. நோகாமல் தமிழீழம் எடுப்பினம்.

எல்லாம் ஒரே தலைமை என்ற ஆணவத்தால் வந்தது. நாங்கள் பாருங்கோ இளையராஜாவைக் கொண்டே தமிழீழத்துக்கான அடுத்த நகர்வை நகர்த்தப் போறம்.

உங்கட சொறி தமிழ் தேசியம் எங்களுக்கு அவசியமில்ல. எங்கட இளையராஜா தேசியம் பாருங்க.. எந்த ஒரு ஆணவமும் அற்று செயற்பட்டு.. டக்கிளஸ்.. சித்தார்த்தன் என்று எல்லோரையும்.. ஒன்றாச் சேர்த்து... குத்தாட வைச்சு இன்னும் இரண்டு வருசத்தில தொடர் இசை நிகழ்ச்சிகள் செய்து தமிழீழம் எடுத்துக் காட்டிறம்.

அதென்ன மாவீரர்.. மாதம். எல்லாம் ஆணவத்தால் அழிஞ்சு தொலைஞ்சிட்டுதுகள். அதுகளை எதுக்கு நாங்க நினைக்கனும். அவர்களை மறந்தால் தான் எனி தமிழீழம் சாத்தியம்.

இதுவே... இந்த இசை நிகழ்ச்சியின் உன்னத தார்ப்பரியம். அதுமட்டுமல்ல.. ரொரண்டோ இசை நிகழ்ச்சிக்குப் பின்னர் சிறைகளில்.. வதைமுகாம்களில் உள்ள பெண்களுக்கு உடனடி விடுதலையை ராஜா உறுதி செய்து கொடுப்பார். அடுத்த நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்தி.. அவர்களுக்கும் நாம் குசி ஊட்டுவோம். இருந்து பாருங்கள். இளையராஜாவின் இசையின் மூலம்.. தமிழீழத்தையும்.. போர்க்குற்ற விசாரிப்புக்களையும் நாங்க கொண்டு வந்து எங்கட திறமைகளைக் காட்டிறமோ இல்லையோ என்று.

30 இயக்கங்களின் பலம் தெரியாமல்.. ஒற்றை இயக்கம் வைச்சிருந்து என்னத்தைக் கிழிச்சிச்சினம். ஆணவத்தால அழிஞ்சினம். நாங்கள் 29 பேர் இன்னும் அங்கங்க பரவி இருக்கிறம். இருக்கிற தலைமைகளை கொண்டு.. இளையராஜா தலைமையில் புரட்சி செய்து.. தமிழீழம் அடையுறமோ இல்லையோ என்று பாருங்கள்.

தமிழ் சொறித்தேசியம்.. எங்களுக்கு எனி வேண்டாம். வேண்டியது எல்லாம்.. தென்னை மரம் சுற்றும் இளையராஜாவின் இசைத்தேசியமே..! :):icon_idea::D

Link to post
Share on other sites

ஆமாம்.. இளையராஜா ரொரண்டோ வராட்டில் பலர் வாழ்வு பாதிக்கப்படும். அவர் வரனும்.. இசை நிகழ்ச்சி சிறப்புற நடக்கனும். அப்படியே நவம்பர் என்ன.. வருசம் பூராவும் இசை நிகழ்ச்சிகளையே நடத்திக் கொண்டிருப்போம்.

அப்போதுதான்.. ஆணவத்தால் அழிந்தவர்கள் போக.. மற்றவர்கள்.. நோகாமல் தமிழீழம் எடுப்பினம்.

எல்லாம் ஒரே தலைமை என்ற ஆணவத்தால் வந்தது. நாங்கள் பாருங்கோ இளையராஜாவைக் கொண்டே தமிழீழத்துக்கான அடுத்த நகர்வை நகர்த்தப் போறம்.

உங்கட சொறி தமிழ் தேசியம் எங்களுக்கு அவசியமில்ல. எங்கட இளையராஜா தேசியம் பாருங்க.. எந்த ஒரு ஆணவமும் அற்று செயற்பட்டு.. டக்கிளஸ்.. சித்தார்த்தன் என்று எல்லோரையும்.. ஒன்றாச் சேர்த்து... குத்தாட வைச்சு இன்னும் இரண்டு வருசத்தில தொடர் இசை நிகழ்ச்சிகள் செய்து தமிழீழம் எடுத்துக் காட்டிறம்.

அதென்ன மாவீரர்.. மாதம். எல்லாம் ஆணவத்தால் அழிஞ்சு தொலைஞ்சிட்டுதுகள். அதுகளை எதுக்கு நாங்க நினைக்கனும். அவர்களை மறந்தால் தான் எனி தமிழீழம் சாத்தியம்.

இதுவே... இந்த இசை நிகழ்ச்சியின் உன்னத தார்ப்பரியம். அதுமட்டுமல்ல.. ரொரண்டோ இசை நிகழ்ச்சிக்குப் பின்னர் சிறைகளில்.. வதைமுகாம்களில் உள்ள பெண்களுக்கு உடனடி விடுதலையை ராஜா உறுதி செய்து கொடுப்பார். அடுத்த நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்தி.. அவர்களுக்கும் நாம் குசி ஊட்டுவோம். இருந்து பாருங்கள். இளையராஜாவின் இசையின் மூலம்.. தமிழீழத்தையும்.. போர்க்குற்ற விசாரிப்புக்களையும் நாங்க கொண்டு வந்து எங்கட திறமைகளைக் காட்டிறமோ இல்லையோ என்று.

30 இயக்கங்களின் பலம் தெரியாமல்.. ஒற்றை இயக்கம் வைச்சிருந்து என்னத்தைக் கிழிச்சிச்சினம். ஆணவத்தால அழிஞ்சினம். நாங்கள் 29 பேர் இன்னும் அங்கங்க பரவி இருக்கிறம். இருக்கிற தலைமைகளை கொண்டு.. இளையராஜா தலைமையில் புரட்சி செய்து.. தமிழீழம் அடையுறமோ இல்லையோ என்று பாருங்கள்.

தமிழ் சொறித்தேசியம்.. எங்களுக்கு எனி வேண்டாம். வேண்டியது எல்லாம்.. தென்னை மரம் சுற்றும் இளையராஜாவின் இசைத்தேசியமே..! :):icon_idea::D

இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான விளம்பரங்களையும் நுழைவுச் சீட்டு விற்கப்படுவதையும் மூன்று மாதங்களாக பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இறுதியில் நவம்பர் 27ஐ நவம்பர் மூன்றுக்கு இழுத்தவந்து மாவீரரை பகடக்காயாக பயன்படுத்தி நடப்பது தமிழ்த்தேசீயமானால் இளையாரஜா மேம்படுத்திய தமிழிசை அதைவிட பன்மடங்கு மேலானதுதான்.

மக்கள் ஒன்று கூடக் கூடிய ஒரு நிகழ்வை மையமாக வைத்து அதை குழப்பி தேசியத்தக்கு ஆதராவன மக்கள் எதிரான மக்கள் என்ற கருத்தியலை உருவாக்குவதனூடாக தமிழீழத்தை அடயமுடியுமென நீங்கள் நம்பினால் அதற்கு எதிரான திசையில் பயணிக்கும் அறிவு ஏனையோருக்கு உள்ளது.

ராஜாவை அவமானப்படுத்திய ஈழத்தமிழர். இடம்பெயர்ந்தும் ஈழத்தமிழரின் திமிர் குறையவில்லை. இவ்வாறான தலைப்புகளை எதிர்காலத்தில் ஊருவாக்குவதின் ஊடாக அல்லது எதிரி உருவாக்க சந்தர்ப்பம் கொடுப்பதினுர்டாக தமிழர் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என்றால் அதற்குப்பெயர் தமிழ்த்தேசீயம் என்றால் அதைவிட டக்ளஸ் சித்தர்த்தன் ஒருபடி மேலாக சிந்திக்கக் கூடியவர்களே!

அதீதமான தேசீயப்பற்றால் துடித்துக்கொண்டிருந்தால் பிச்சை எடுத்து விபச்சாரம் வரை செய்யும் மாவீரர் போராளி குடும்பங்களுக்கு ஆதரவுக்கரம் கொடுங்கள். அங்கே சிங்களச் சிறைகளில் வாடும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுங்கள். உங்கள் துடிப்பை இசை நிகழ்ச்சிக்குள் எதற்காக கொண்டுவருகின்றீர்கள்? சிங்களவன் சொல்லியா அல்லது சுயசிந்தனையிலா? ஏனெனில் இதனால் சிங்களவனுக்கு மட்டுமே ஆதாயம் உள்ளது.

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வைத்து ஒரு பிளவை தமிழ்நாட்டுத்தமிழர் ஈழத்தமிழர் என்று உருவாக்க முற்படுகின்றனர். தேசீயத்துக்கு ஆதரவானவர்கள் எதிரானவர்கள் என்ற கருத்தை நுளைக்கப்பார்க்கின்றனர். இது ஒற்றுமைக்கும் தேசீயத்துக்கும் விரோதமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதன் பின்னணியில் சிலர் விலையோயுள்ளனர். அவர்களுக்கு சிலர் வக்காலத்து வாங்குகின்றனர் அவ்வளவுதான்.

இசை நிகழ்ச்சி நடத்துபவர்கள் தரப்பு தெளிவாகவே உள்ளது. அவர்கள் மாவீரர் நாளிலோ அல்லது வாரத்திலோ நடத்தவில்லை. திடீர் என்றும் நடத்தவில்லை பல மாதங்களாக விளம்பரம் செய்தே நடத்துகின்றனர். மக்களுக்கு இவை நன்கு புரியும். இறுதிநேரத்தில் மாவீரரையும் தேசீயத்தையும் யார் சுயநலன்களுக்கு பயன்படுத்தி குழப்புகின்றனர் என்பதும் புரியும்.

தமிழ் சொறித்தேசியம்.. எங்களுக்கு எனி வேண்டாம். வேண்டியது எல்லாம்.. தென்னை மரம் சுற்றும் இளையராஜாவின் இசைத்தேசியமே..!

விகடமாக வினோதமாக மறுவளமாக சுயத்தன்மையை வெளிப்படுத்தினாலும் சொல்ல முற்படுவது சொறிசிரங்குத் தேசியம்தான் தவிர எந்தவித தூரநோக்கும் இல்லை. ரெறன்டோவில் இசை நிகழ்ச்சியை எதிர்ப்பதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது உங்கள் எழுத்துநடை எள்ளிநகையாடல் எங்கிருந்து வருகின்றதோ அங்கிருந்துதான் அக்காரணமும் வருகின்றது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு கேள்வி.. மலையாளத்தாரோட பிரச்சனை என்றதும்.. 6 மாதம் முதல் போட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலத்தி இருக்க முடியுமுன்னா.. ஏன் சிங்களவனோட சம்பந்தப்பட்டு வரும் ஒரு குற்றச்சாட்டுக்கு.. கொஞ்சம் தாமதித்து நடத்த முடிவு கட்டக் கூடாது. அது ஒன்றும் இசைக்கு பாதகமில்லையே..!

இதுக்கு முதலில பதில் இருந்தாச் சொல்லுங்க. சும்மா அலட்டிக் கிட்டு இருக்கிறதில பிரயோசனம் இல்ல.

ஆளாளுக்கு ஆணவம் கீணவம் என்றீங்க நீங்க எல்லாம் ஊரைவிட்டு வெளில தானே பாதுகாப்பா இருந்தனீங்க. ஏன் பிரபாகரனுக்கு சமாந்திரமா ஒரு போராட்டத்தை ஈழம் கேட்டு நடத்தி பிரபாகரனின் பாதை தவறுன்னு அவருக்கு உணர்த்த முடியல்ல. ஏன்னா.. உங்களுக்கே வழி தெரியாமல் தான் நாட்டை விட்டு போராட்டத்தை சாட்டி வசதியான வாழ்க்கை தேடி.. ஓடி வந்தனீங்க..! இப்ப என்னடான்னா.. ஆணவம்.. அதுஇதென்று பெரிசா முழங்கிறீங்க.

இத்தனை கதைக்கிற நீங்க.. இளையராஜாட்டச் சொல்லி வன்னில நில புலம் இழந்து காட்டுக்க அடைமழைக்க நிற்கிற சனத்துக்கு ஒரு ஆறுதல் சொல்ல வையுங்க பார்க்கலாம். எங்களைச் செய்யச் சொல்லி புத்திமதி சொல்லுற நீங்க.. நாங்க செய்ய நீங்க என்ன குத்தாட்டமா போடப்போறீங்க. உதுகளுக்கு செலவழிக்கிறதை அந்த மக்களுக்கு கொடுக்கலாமே. வசதியா வாழுற இளையராஜா குடும்பத்தை இன்னும் பணக்காரராக்கிட்டு இருக்கிறதிலும்.. வன்னில உள்ள மக்களட்ட அந்த வசதியை பகிரலாமே..??! தாயகம் மீது அக்கறை உள்ளதாச் சொல்லிக்கிட்டு அவங்க துன்பத்தில இன்பம் காணுற நீங்க முதலில அந்த மக்களுக்கு ஏதாச்சு உருப்படியா செய்யுங்க. அதுவரைக்கும்.. அடுத்தவனுக்கு புத்திமதி சொல்லுற அருகதை கூட உங்களட்ட இல்லை. உங்க நீலிக்கண்ணீர் எல்லாம் உண்மையான உணர்வுகள்ள மக்களுக்கு பழசு..!

அந்த மக்களின் துன்பத்தில் குடிபெயர்ந்து கொஞ்சம் வசதியைக் கண்டதும்... துள்ளிப்பாயுற நீங்களா கஸ்டப்பட்டு உயிர் கொடுத்து தமிழீழம் கண்டிருப்பீங்க. சும்மா.. கதையளக்கலாம்.. ஆனால் களத்தை நடத்த முடியாது..! இசை எவனும் மீட்டலாம்.. ஆனால் உரிமை எல்லாரேலும் மீட்கப்பட முடியாது..! :icon_idea::)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் குறிப்பிடப்படும் ஒப்பந்தத்தில் இருந்து இளையராஜா விலகவில்லை. மலபார் கோல்டின் ஆதரவில் நடந்த அந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதில் குறிப்பிடப்படும் ஒப்பந்தத்தில் இருந்து இளையராஜா விலகவில்லை. மலபார் கோல்டின் ஆதரவில் நடந்த அந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தான் விலத்தி இருக்கிறதா இளையராஜா ஊடகங்களுக்குச் சொன்னதை தான் சொல்லி இருக்குது. அவர் அதனை அதன் பிறகு எப்படி எப்ப நடத்தினாரா விட்டாரா என்பதல்ல பேச்சு..

கருத்தை திசை திருப்ப வேண்டாம்.

வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதாக அப்ப அறிவிக்க முடிஞ்சதுன்னா.. ஏன் இப்ப முடியாது..??! இதில ஒன்றும் விலகுவதாகக் கூட சொல்ல யாரும் கேட்கல்ல. முன்போடுங்க இல்ல.. பின்போடுங்க என்று தான் சொல்லுறாங்க..! அது ஏன் முடியாது..????????! :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=Q2ZBE9WzxI4

இதுதான் அந்த நிகழ்ச்சி. மலபார் கோல்டின் ஆதரவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மலையாளிகளின் சொத்துக்கள் மீது அப்பொழுது தமிழகத்தில் சிலர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் மலையாள நிறுவனம் ஒன்றின் ஆதரவில் நடக்கின்ற நிகழ்ச்சியில் பங்குபற்ற வேண்டாம் என்று சில தமிழின உணர்வாளர்களால் இளையராஜாவிடம் கோரிக்கை விடப்பட்டது.

அதற்கே இளையராஜா நிகழ்ச்சியை தவிர்க்க முடியாது என்பதை நசூக்காக உணர்த்தி, ஆயினும் பரிசீலிக்கிறேன் என்று சொன்னார்.

ஆனால் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழின உணர்வாளர்களும் அதைக் குழப்பவில்லை.

இதற்கும் கனடாவின் நிகழ்ச்சிக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது.

சென்னை நிகழ்ச்சி மலையாள நிறுவனம் ஒன்றின் ஆதரவில் இடம் பெற்றது உண்மையான ஒரு விடயம். அதற்கு ஒரு பதிலை தர வேண்டிய கடப்பாடு இளையராஜாவிற்கு உண்டு.

ஆனால் கனடா நிகழ்விற்கு பின்னணியில் சிறிலங்கா அரசு உண்டு என்பது எதுவித ஆதாரமும் அற்ற ஒரு குற்றச்சாட்டு. நான்கு பேர் நாலு ஊகங்களை சொல்வார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்லி இளையராஜா தன்னை தாழ்த்திக் கொள்ள மாட்டார்.

அதை விட இந்த நிகழ்ச்சியை குழப்ப முனைபவர்களின் பின்னாலேயே தீய சக்திகள் இருக்கின்ற என்பதற்கு பலமான வாதங்கள் எம்மிடம் உண்டு. இளையராஜா அவர்களும் இதை உணர்ந்தே இருக்கிறார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

// [size=4]அப்போது, இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே கையொப்பம் ஆகிவிட்டது. என் துணைவியாரின் மரணத்திற்கு பிறகு, எந்த நிகழ்ச்சியையும் நடத்தவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்த ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பதும் எனக்கு தெரியும். எப்படியாவது நான் நிகழ்ச்சியை தள்ளிப்போடுவதற்கோ, கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்கோ ஏற்பாடு செய்கிறேன் என்று போராட்டக்காரர்களிடம் கூறும்படி காவல்துறை உதவி ஆணையாளரிடம் இளையராஜா தெரிவித்துள்ளார்.//[/size]

[size=4]இதுதான் இளையராஜா சொன்னது. இதில நாசூக்கு என்ன இருக்குது.[/size]

இளையராஜாவைப் பொறுத்தவரை.. அவர் தான் நினைச்சதை செய்யனும். எவன் எப்படிப் போனாலும் என்ன என்கின்ற பேர்வழியா இருந்திட்டுப் போகலாம்.

2011 இசை நிகழ்ச்சியை பகிரங்கமாக தவர்க்கக் கேட்டது பெரியார் திராவிடர் கழகமே தவிர தமிழ் உணர்வாளர்கள் அல்ல. இறுதியில் பெரியார் திராவிடக் கழகம்.. காசை வாங்கிட்டு மெளனமாகி இருக்கலாம். அது வேற பிரச்சனை.

இருந்தும் இளையராஜா தான் மேற்படி ஊடக அறிக்கையை வெளியிட்டவர்... என்பது நிஜம்.

இன்றைய பிரச்சனை இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமானது. அந்த வகையில் இளையராஜா சிந்திப்பதை விட்டு.. தான் செய்யுறது தான் நியாயம் என்று சாதிக்க நிற்பது அவரிடம் மனிதாபிமானமற்ற திறமை உள்ளதோ என்று சந்தேகிக்கவே வைக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சி தொடர்பான கருத்தாடல்களின் பின் இளையராஜாவின் அடம்பிடிப்பு என்பது.. என்னால் இளையராஜா மீது ஒரு மதிப்புக் கூட வைக்க முடியவில்லை. தரம் தாழ்ந்தே தெரிகிறார். :icon_idea::)

//அதை விட இந்த நிகழ்ச்சியை குழப்ப முனைபவர்களின் பின்னாலேயே தீய சக்திகள் இருக்கின்ற என்பதற்கு பலமான வாதங்கள் எம்மிடம் உண்டு. இளையராஜா அவர்களும் இதை உணர்ந்தே இருக்கிறார்.//

இந்த இசை நிகழ்ச்சியை டிசம்பருக்கு தள்ளிப் போடச் சொல்வதால் அந்தத் தீய சக்திகள் அடையப்போகும் நன்மை என்ன.. அதனால் யார் யார் எப்படியான நன்மை அடையப் போகினம்.. என்று ஒருக்கா சொல்லுங்கள்.. பார்க்கலாம். உங்கள் பலமான வாதங்களுக்கு நிஜமான ஆதாரங்களை முன் வைத்து..?????!

சும்மா சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்..!! :icon_idea::)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • https://fb.watch/36ROBoiRLc/   ரசித்து மகிழ்ந்து பாடுகிறார்.  கண்டிப்பாக பாருங்கள் 👏🏼
  • இந்த முன் பின் யோசிக்காமல் செய்யும் பூனைக்கு சவரம் செய்வது போன்ற செயல்களை நீங்கள் இன்னும் பல தலைமுறைகள் தொடர ஆர்வமாக இருக்கிறீர்கள் போல! 🤔  
  • தமிழ் ஆர்வம், தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஒரிசா பாலு போன்றோர் செய்யும் quackery , தமிழின் உண்மையான தொன்மையையும் சிறப்பையும் கூட கேலிக்குள்ளாக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடும்!🤦‍♂️
  • குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன ? (இராஜதுரை ஹஷான்)       தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன ? | Virakesari.lk
  • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, தை   2008 "பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே எனக்குப் போலியான கடவுச்சீட்டினை வழங்கினார் - தனது எஜமானையும் காட்டிக் கொடுத்த கருணா" போலியான கடவுச்சீட்டினைப் பாவித்து இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் கூலியான கருணாவுக்கு 9 மாதகாலம் சிறைத்தன்டனையினை பிரித்தானிய அரசு வழங்கியது. இவ்வழக்கில் தான் குற்றவாளியல்ல என்று கூறிய கருணா, தனக்கு இந்தப் போலியான கடவுச்சீட்டினை வழங்கியது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே என்று நீதிமன்றில் தனது எஜமானைக் கூடக் காட்டிக்கொடுத்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. பி பி சி சிங்களச் சேவையான சந்தேஷய வெளியிட்டிருக்கும் இச்செய்திக்குறிப்பில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கருணாவின் இந்தக் குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ளதுடன், கருணாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு கடவுச்சீடினையோ அல்லது ஏனைய பயண பத்திரங்களையோ  வழங்கவேண்டிய தேவை தமது அரசுக்கு இல்லையென்றும் கூறியிருக்கிறார்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.