Jump to content

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில விசயங்கள் பிரியல..

ஒன்று

கனடா உங்களுக்கு சொந்த நாடு கிடையாது... நீங்க எதிலிகளாக போய் செட்டிலாகி போய்விட்டீர்கள்.. ஓக்கே.. அங்கிட்டு தமிழ்நாட்டு தமிழன் யாரும் கிடையாதா..? அவருதான் சொல்லுகிறாரு யாராவது ஒருத்தன் வந்தா போதும் என்று..?

புரட்சியின் இந்தக் கேள்விக்கு என்ன பதில்? தமிழ்நாட்டுத் தமிழன் பார்க்க வேண்டும் என்றால் கனடாவில் முடியாதா? அதற்கு யாரிடம் அனுமதி வாங்கவேண்டும்? :rolleyes:

Link to post
Share on other sites
 • Replies 248
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் மூன்று மாதமாக திட்டமிட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்த ஒரு பிறந்த நாள் விழாவை திடீரென்று ஒரு மாதம் தள்ளிப் போட வேண்டி ஏற்படுகிறது.

இதனால் உங்களுக்கும் உங்களின் குடும்பம், உறவினர்களுக்கும் ஏற்படக் கூடிய பொருளாதார இழப்பை ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பாருங்கள். இந்த இழப்பு உங்களுக்கு நீண்ட கால நோக்கில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்களை இட்டு ஒரு சிறிய அலசல் செய்து பாருங்கள்.

அதன் பின்பு இதே கணக்கை இளையராஜாவின் நிகழ்ச்சிக்கும் செய்யுங்கள்.

பின்பு எதிரி எங்கள் மீது தொடுத்திருக்கின்ற பொருளாதார யுத்தம் பற்றி ஓரளவு விளங்கக் கூடும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதில ரிக்கெட் வித்துப் புடுங்கினது புடுங்கினது தான். அது எங்கப் போகப் போகுதென்றே யாருக்கும் தெரியாது..???!

இந்த நிகழ்ச்சியை பின்போடச் சொல்லிச் சொல்லி இப்ப 4.. 5 வாரங்கள் ஆச்சுது. அப்பவே அதைச் செய்திருந்தால்.. மாற்று ஏற்பாடுகள் நடந்திருக்கும். மேலும் இன்னும் அதிக ரசிகர்களை உள்வாங்கி இருக்கலாம். அதிக நிதி கிடைச்சிருக்கும்.

இந்த இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பகுதி நிகழ்ச்சி செய்திருந்தால்.. அது கூட வரவேற்கப்பட்டிருக்கும். அதிக மக்கள் பங்களிப்பு இருந்திருக்கும். அதைக் கனடிய அரசினூடு பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிச்சிருக்கலாம்.

இப்படி எதுவுமே.. மக்கள் நலன்சாராதுள்ள ஒரு நிகழ்ச்சி.. குழம்பங்களை விதைக்கக் கூடிய வகையில்.. அதுவும் மாவீரர் தின ஏற்பாடுகள்.. மற்றும் சிறீலங்கா அரசின் புலம்பெயர் மக்கள் நோக்கிய நகர்வுகள் அதிகரித்துள்ள நிலையில்.. இந்த நிகழ்ச்சியை விடாக்கண்டன் தொடாக்கண்டன் என்று இளையராஜா நடத்துவது.. இளையராஜா றோவுக்கும் சிங்களப் புலனாய்வாளர்களுக்கும் வேலை செய்யுறாரோ என்று தான் சந்தேகிக்க வைக்கிறது..! :icon_idea::)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அதிமேதாவிகளிடம் ஒரு கேள்வி?

இதில் இளையராஜாவை ஆதரித்தும்,எதிர்த்தும் எழுத வேண்டியதன் நோக்கம் என்ன?

தொழிலால் ஒரு இசைக்கலைஞன் அதுவும் வேறு நாட்டைச்சேர்ந்த ஒருவர் தன் தொழிலை செய்வதை தடுக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? நிகழ்ச்சி ஒழுங்குசெய்தவர்கள் மீது நடவடிக்கை,விமர்சனம் வைப்பதை விடுத்து இளையராஜாவை கேள்வி கேட்க எமக்கு என்ன உரித்து இருக்கு?

இளையராஜா என்ன தமீழத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டவரா? இல்லை ஏதும் பங்காளரா?

இளையராஜா மாவீரர்மாதம்,வாரம் இல்லை நாள் அனுஸ்டிக்க என்ன அவசியம் இல்லை அதை சொல்ல யாருக்கு என்ன அருகதை இருக்கிறது? இளையராஜா தான் விரும்பினால் பங்களிப்பது செய்வது வேறு மற்றும்படி இளையராஜாவோ அல்லது,தமிழகத்தமிழனோ இது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன?

இல்லை தமிழகத்தில் நடக்கும் ஏதும் போராட்டங்களுக்கு ஈழத்தமிழர்கள் யாரும் குரல்கொடுத்திருக்கிறீர்களா? அவர்களுக்காக எப்பவும் வீதியில் இறங்கி போராடினீர்களா? அப்படி இருக்க உங்களுக்கு என்ன அருகதை????

நீங்கள் மாவீரர் பெயரைச்சொல்லி வியாபாரம் செய்வதற்கு இளையராஜாவை எதுக்கு இதற்குள் இழுப்பான். அவர் தன் தொழிலை செய்கிறார். எய்தவனை விட்டு அம்பை எதுக்கு நோவான்?

மே19க்கு பின்னர் ஆளாளுக்கு தேசியத்தலைவர் என்று அறிக்கை விட்டு உள்ளதையும் கெடுப்பது தான் எம் அரசியல்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. உங்களின் அவ்வளவு எழுத்திற்கும்.. ஒற்றைப் பதில்.. இளையராஜா என்ற சினிமா வியாபாரி.. தன்னை தமிழன் என்று இனங்காட்டிக்கொண்டு இசைப் பிச்சை எடுப்பதால்..!

அவர் தன்னை சினிமாக்காரன் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தால்.. எவரும் இதனை இங்கு பேசமாட்டினம்..! அவரை தமிழ் தேசிய அடையாளமாக வேற சித்தரிச்சிருக்க மாட்டினம். அவைதான் இப்படி எல்லாம் எழுத.. கேட்க தூண்டி இருக்குது..!

ஈழத்தமிழன் தமிழகத்தை வைச்சு அரசியல் செய்தது கிடையாது. ஆனால் ஈழத்தமிழனை வைச்சு ஒட்டுமொத்த இந்தியாவே அரசியல் செய்ததை.. செய்வதை இளையராஜா உட்பட எல்லோரும் அறிவார்கள். இருந்தும்.. அறிவற்ற.. கண்கெட்ட குருடர்களாக..???! :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழன் தமிழகத்தை வைச்சு அரசியல் செய்தது கிடையாது. ஆனால் ஈழத்தமிழனை வைச்சு ஒட்டுமொத்த இந்தியாவே அரசியல் செய்ததை.. செய்வதை இளையராஜா உட்பட எல்லோரும் அறிவார்கள். இருந்தும்.. அறிவற்ற.. கண்கெட்ட குருடர்களாக..???! :icon_idea:

நெடுக்கின் கருத்துடன் உடன்படவேண்டி இருக்கிறது..! :unsure:

இளையராஜா கச்சேரி எதிர்ப்புக்கு அடுத்த கட்ட்டமாக தமிழகத்தில் விமானநிலையங்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

 1. கூடங்குளம் அணு உலைப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, தி.நகரில் பொருட்கள் வாங்க வந்திறங்கும் ஈழத்துப் பயணிகளை எதிர்த்தல்.
 2. முல்லை-பெரியார் அணைப் போராட்டம் நடக்கும்போது, அதைக் கவனியாது சாமத்திய வீட்டுக்கான பொருட்களை வாங்க வரும் ஈழமக்களை எதிர்த்தல்.
 3. மணல் கொள்ளை நடைபெறும்போது அதைக் கவனியாது தமிழகத்திற்கு கோயில் சுற்றுலா வரும் ஈழமக்களை எதிர்த்தல்..!

அனைவரும் கலந்துகொள்ளவும்..! :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோ இசை நிகழ்வுபற்றி நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளா்கள் சீமானுடன் முதற்சுற்று சந்திப்பு: - நிகழ்வு பிற்போடப்படலாம்..!

[Tuesday, 2012-10-30 07:50:59]

தமிழ்த்தேசிய இனத்தின் இசை அடையாளமாகவும், அரைநூற்றாண்டாக தமிழர்களை தன் இசையால் மகிழ்வித்து வரும் அய்யா இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடா டொராண்டோவில் நவம்பர் மாதம் நடப்பதை அறிந்தது மனம் வருந்தி நவம்பர் மாதத்தை தவிர்த்து அக்டோபர் மாதத்திலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ வைத்துக்கொள்ள நாம் தமிழர் இயக்கம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழீழ விடுதலை போராட்டத்தில் நவம்பர் மாதம் புனிதமான மாதம். உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் எழுச்சி கொள்ளும் மாதம். நவம்பர் 27 தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக கொண்டாடப்படும் எழுச்சி நாள். இளமை நாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் விதைத்தவர்களை வணங்கும் நாள். மாவீர்ர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி என சூளுரைக்கும் நாள்.

அத்தோடு நவம்பர் 02, பிரிக்கேடியர் சுப. தமிழ்ச்செல்வன் எதிரியின் குண்டுவீச்சுக்கு இலக்காகி மரணித்த நாள். நவம்பர் 03 அடக்கம் செய்த நாள்.

இந்த நாள்களை உள்ளடக்கிய மாதத்தில் கேளிக்கை, கொண்டாட்டம் போன்றவற்றில் திளைத்திருக்க செய்து தமிழ் மக்களை அவர்களது விடுதலை வேட்கையில் இருந்து திசை திருப்பி விட இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முனைகிறது என்பதால் இந்நிகழ்ச்சிக்கும் நாம் தமிழர் கட்சி தன் எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்நிலையில் நேற்றையதினம் மாலை சென்னையில் செந்தமிழன் சீமானை சந்தித்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுவதாகவும் அதற்குரிய உடன்பாட்டை இளையராஜாவிடம் இருந்து பெறப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.

அய்யா இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி புலம் பெயர் மக்களிடத்தில் நடத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை, தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய மாதமான நவம்பர் மாதத்தில் நடத்துவதில் தான் முரண்பாடு ஆகவே நிகழ்வு வேறு மாதத்திற்கு தள்ளி வைக்கபட்டால் கட்டாயம் மகிழ்ந்து கைகோர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.

தகவல் - நாம் தமிழர் இயக்கம்

http://seithy.com/breifNews.php?newsID=69252&category=TamilNews&language=tamil

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை சொல்லுற விசுகு அண்ணை தானே கார்த்திகைமாதம் நட்டக்கவுள்ள புங்குடுதீவு ஒன்று கூடலுக்கும்,பிரான்சில் நடக்கவிருக்கும் ஊர்விழாக்களுக்கும் நவம்பர் ஒரு கிழமை தானே மாவீரர்வாரம் என்ற கேள்வி எழுப்பினீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம்,மற்றவர்களுக்கு ஒரு நியாயமோ?

மற்றவர்கள் எல்லாம் என்ன பே******ளோ??????? :wub:

எந்த நேரத்திலும் இந்த அறிக்கையை நான் வரவேற்கவில்லை.

ஆனால் அதை வைத்தே தமது சுய லாபநட்டங்களை மறைமுகமாக செய்வதையும் வரவேற்கவில்லை.

உங்களுக்கான பதில் ஏற்கனவே மேலே எழுதப்பட்டுள்ளது.

என்னுடன் கருத்தாடியவருக்கு எழுதப்பட்ட வசனமே அது.

இடையில் வந்து தொப்பி எனக்கும் தான் என்பவரை நான் தடுக்கமுடியாது. அவர் நீங்கள்கீழே குறிப்பிடுபவராகவே இருந்திட்டுப்போகட்டும்.

:o :o :o

நான் சபேசனுக்கு எழுதிக்கொண்டிருந்தேன்

இடையில் புகுந்து அதை திசை திருப்பும்முன் நீங்கள் தான் அதை அறிந்திருக்கணும் :( :( :(

இதே கேள்வியைக்கேட்டவருக்கு

அதற்கான பதிலும் மேலே எழதப்பட்டுள்ளது. அதையும் நீங்கள் வாசிக்கவில்லை.

எல்லா மக்களும் நவம்பர் மாதத்தை ஒரு ஆடம்பரமற்ற மாதமாக இருக்க முடிவெடுத்தால்

நிச்சயம் நானும் அதை ஆமோதிப்பேன். சங்கமும் அதை பரீசிலிக்கும் என்றும் முன்பும் எழுதியிருந்தேன். அதையும் நீங்கள் வாசிக்கவில்லை. அல்லது............???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதுவரைக்கும் நடந்ததில் எதனை இளையராஜா தடுத்து நிறுத்தி உங்களைக் காப்பாற்றி இருக்கிறார்..??????!

ஈழத்தமிழராய் பிறந்துவிட்டு போராடாமல் நீங்களும் நானும் இங்கை ஓடிவந்து இருந்து கொண்டு கதை பேசும்போது இந்தியத்தமிழன் அவர் செய்தால் என்ன விட்டால் என்ன.அவர் எதையும் செய்யாட்டியும் பரவாயில்லை நமக்கு எதிராக எதுவும் பேசாது இருந்தார்.ஆனால் உங்கள் போன்றவர்களின் பேச்சும் அதன் வழி செயற்பாடுகளும் அவரை எமக்கு எதிராகத்தான் திருப்பிவிடும்.எமக்கு எதிரானவர்களின் எண்ணிக்கையில் ஒன்றுகூடுமே தவிர வேறு எந்த ஒரு சதத்துக்கும் பெறுமதியவற்றவை உங்கள் வறட்டு வாதங்கள்.

அவர் காசுக்கு போடுற இசையை காசு கொடுத்துக் கேட்டு உங்க குடும்பங்களை சீரழிச்சதைத் தவிர.. இளையராஜா.. தமிழக பாமர மக்களுக்கே எதுவும் செய்யேல்ல..! இதில ஈழத்தமிழங்களுக்கு வெட்டி விழுத்தப் போறாராக்கும்..!

இசையைக்கேட்டு சீரழிஞ்ச முதல் ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.ஈழத்தமிழருக்கு அவர் வெட்டி விழுத்தினால் என்ன வெட்டாமல் விழுத்தினால் என்ன.அவரது இசையைக்கேட்க அவர் இசையை விரும்புவர்கள் pay பண்ணுகிறார்கள் போய்க் கேட்கிறார்கள்.இது ஒரு சேவயைப் பெறுவதற்காக செலுத்தும் பணம். அவர் இசை எனும் சேவையை வழங்குகிறார் அவரது ரசிகர்கள் பணம் செலுத்தி அதைப் பெற்கிறார்கள்.மாவீரர் நள்முழுக்க கனடா முழுக்க கடை திறந்துதான் இருக்கப் போகிறது.தமிழர்கள் தமக்கு தேவையனவற்ரை பெறத்தான் போகிறர்கள்.அதில் ஒன்று கூடுகிறது.இளையறாஜா இசை நிகழ்ச்சி.அவ்வளவே.இங்கு நீங்கள் குத்தி முறிய இதில் எதுவுமில்லை.

அவர் தன்ர பிள்ளைகளுக்கு பிழைப்புக் காட்ட வாறார். அதுக்கு நீங்க.. ஆதரவு அளிச்சு உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகுதோ..???????!

தமக்கு எது தேவையோ அதை தேவைபட்டவர்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்கிறார்கள்.எல்லாம் பண்டமாற்று மாதிரி வர்த்தகம்தான்.இதில் கவலைப்பட எதுவுமில்லை.தேவைப்பட்டவர்கள் மட்டும்தான் போகப்போகிறார்கள்.

சரியான சினிமா போதையில இருக்கீங்க... தெளிய காலம் எடுக்கும். :lol::icon_idea:

நீங்கள் என்ன கிளி ஜோசியம் பார்ப்பவரா? நான் என்ன போதையில் இருக்கிறன் என்று சொல்ல.?உங்களுக்கு வேறை கனக்க போதை இருக்கு.முதலாவது பொம்பிளைப் போதை.அதை தெளிச்சுக்கொன்டு வந்து மற்றவன்ர போதையைப் பத்தி கதைக்கவும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.. உங்களின் அவ்வளவு எழுத்திற்கும்.. ஒற்றைப் பதில்.. இளையராஜா என்ற சினிமா வியாபாரி.. தன்னை தமிழன் என்று இனங்காட்டிக்கொண்டு இசைப் பிச்சை எடுப்பதால்..!

அவர் தன்னை சினிமாக்காரன் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தால்.. எவரும் இதனை இங்கு பேசமாட்டினம்..! அவரை தமிழ் தேசிய அடையாளமாக வேற சித்தரிச்சிருக்க மாட்டினம். அவைதான் இப்படி எல்லாம் எழுத.. கேட்க தூண்டி இருக்குது..!

ஈழத்தமிழன் தமிழகத்தை வைச்சு அரசியல் செய்தது கிடையாது. ஆனால் ஈழத்தமிழனை வைச்சு ஒட்டுமொத்த இந்தியாவே அரசியல் செய்ததை.. செய்வதை இளையராஜா உட்பட எல்லோரும் அறிவார்கள். இருந்தும்.. அறிவற்ற.. கண்கெட்ட குருடர்களாக..???! :icon_idea:

அதைத்தானே நெடுக்ஸ் அண்ணா நானும் சொல்கிறேன். இளையராஜா என்ற வியாபாரி தன் தொழிலை செய்கிறார் இதில் நமக்கு அவரை கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கு?

இளையராஜா மட்டுமல்ல எந்த இந்திய,தமிழகத்தமிழனும் முதலில் தன்னை இந்தியனாகவே அடையாளப்படுத்துகிறான் அதன் பின்னர் தான் தமிழன் என்ற அடையாளம் நாம் தான் தொப்பிள்கொடி உறவு, இரத்த உறவு என்று வேஷம் போடுகிறோம்.

நாங்கள் தான் பொழுதுபோக்கைத்தேடி இளையராஜா பின்னால்,இந்தியச்சினிமா பின்னால் போகிறோமே தவிர நீங்கள் சொல்வது போல இளையராஜா இசைப்பிச்சை எடுக்கிறார் என்பது வடிகட்டின முட்டாள் தனம். ஈழத்தமிழரை நம்பியா இளையராஜா இல்லை,இந்திய,தமிழக சினிமா இருக்கிறது???? எவ்வளவு கீழ்த்தரமான கருத்து இது.!!!

இவ்வளவு பேசும் உங்களால் இல்லை ஈழத்தமிழனால் இளையராஜா இசையை அல்லது இந்திய சினிமாவை புறக்கணிக்க முடியுமா??????

ஒரு இசை போட்டியில் கலந்து கொள்வதுக்கு கூட இந்திய இசையை இசைக்க,போட்டிகளில் பங்குபற்ற இந்தியா தானே போகிறீர்கள்? அந்தளவுக்கு கூட சொந்த கலை,பண்பாட்டை வளர்க்காத ஒரு கூட்டம் இது பற்றி கதைக்க தகுதி இருக்கா?????

அடுத்து,

தமிழகத்தமிழன்,இந்தியர் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறீர்கள் மறுக்க முடியாத உண்மை இதைத்தானே பலர் அன்றிலிருந்து இன்றுவரை சொல்கிறார்கள் வைகோ,நெடுமாறன்,கருணாநிதி,ஜெயலலிதா,சோனியாகாந்தி,பா.ஜ.க,விஜயகாந்,தொல்திருமாவளவன் முதல் குப்பன்,சுப்பன் வரை ஈழத்தமிழர் அவலத்தில் அரசியல் செய்கிறார்கள், ஈழத்தமிழர்மீதான அக்கறையில் அல்ல, யாரும் எமக்கு தமிழீழம் எடுத்து தரவல்ல எமது அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள் என்று சொன்னால் நீங்கள் தானே அப்படியானவர்களை துரோகிகளாக,விலைபோனவர்களாக முத்திரை குத்தி அவர்களுக்கு கூஜா தூக்குகிறீர்கள்.! :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடுத்து,

தமிழகத்தமிழன்,இந்தியர் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறீர்கள் மறுக்க முடியாத உண்மை இதைத்தானே பலர் அன்றிலிருந்து இன்றுவரை சொல்கிறார்கள் வைகோ,நெடுமாறன்,கருணாநிதி,ஜெயலலிதா,சோனியாகாந்தி,பா.ஜ.க,விஜயகாந்,தொல்திருமாவளவன் முதல் குப்பன்,சுப்பன் வரை ஈழத்தமிழர் அவலத்தில் அரசியல் செய்கிறார்கள், ஈழத்தமிழர்மீதான அக்கறையில் அல்ல, யாரும் எமக்கு தமிழீழம் எடுத்து தரவல்ல எமது அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள் என்று சொன்னால் நீங்கள் தானே அப்படியானவர்களை துரோகிகளாக,விலைபோனவர்களாக முத்திரை குத்தி அவர்களுக்கு கூஜா தூக்குகிறீர்கள்.! :icon_idea:

அவர்தனது வறட்டு வாதங்கள் வெல்ல யாற்ரை கூஜாவையும் தூக்குவார் ஜீவ.இதை நீங்கள் அவரின் முன்னைய பல கருத்தாடல்களில் அவதானிக்கவில்லையா? அவருக்கு பிரச்சினை அவற்ற வாதம் வெல்லணுமே தவிர வேற எந்த அக்கறையும் கிடையாது.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது காத்திகை மாதத்தில் கேளிக்கை நிகள்வுகள் நடத்தக்கூடாது என்ற கோசமோ அல்லது இளையராயாவுக்கு எதிரான கோசமோ.

Link to post
Share on other sites

கனடாவில் உள்ள இலங்கைத்தமிழன் போய் இளையராஜாவை இசை நிகழ்ச்சி நடத்தும்படி கேட்டால் அது இளையாராஜாவின் பிரச்சனையாகாகது. இவர்களின் கருத்தைப்பார்த்தால் கடைசிநேரத்தில் நவம்பர்மாதம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தேசீயவாதிகளுக்கு மூக்கு வேர்த்தது போல இளையராஜாவுக்கும் வேர்க்கவேண்டும் என்பதாக இருக்கின்றது.

ஏற்பாடு செய்தது இலங்கைத்தமிழன். இது பழைய கெத்துடன் இருந்தவர்களுக்கு பிடிக்கவில்லை. புதிதாக எவரும் இவ்வாறான நிகழ்ச்சி நடத்தி காசுபார்ப்பதை விரும்பவில்லை. இது முழுக்க முழுக்க கனடாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை. ஆனால் எதிர்ப்பு மட்டும் இளையராஜா மீது. இளையராஜாவை எதிர்ப்பவர்களின் அடிப்படையே மிக அருவருக்கத்தக்கது.

தமிழ்த்தேசியன் கேட்டது நியாயமான கேள்வி. ரொறன்ரோவில் தமிழர் என்றால் அது ஈழத்தமிழர்மட்டுமில்லை. இளையராஜா நிகழ்ச்சி நடத்த ரொறன்ரோ அதை அண்டியவிடங்களில் இருக்கும் இந்தியத் தமிழர்கள் ஏனைய மாநிலைத்தைச் சேர்ந்த இளையராஜா ரசிகர்களே போதுமானது. இனிவரும் காலங்களில் இந்தியக் கலைஞர்கள் நிச்சயம் இலங்கைத்தமிழர்கள் அல்லாத இந்தியர்களின் அனுசரணையுடனே வர விரும்புவார்கள். அப்படி வரும்போது மாவீரர் மாதமல்ல வாரம் நாள் என்று கூட எதையும் புடுங்க முடியாது. கனடா சாட்டப்படியும் இவ்வாறான காரணங்களை சொல்லி எந்த இடையூறும் விழைவிக்கமுடியாது. புலிகள் அமைப்பு அது சார்ந்த செயற்பாடு பயங்கரவாதப் பட்டியலின் கீழ்தான் கனடாவில் இந்த நிமிடம் வரை இருக்கின்றது. இது நீக்கப்படுவதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இல்லை.

இந்தியர்கள் இலங்கைத் தமிழரை வைத்து அரசியல் செய்தார்கள். இலங்கைத்தமிழர் செய்த அரசியல் மறந்தாச்சா? போராட்டத்தையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மேற்குநாடுகளில் அசைலம் அடித்ததை விடவா ஒரு அரசியல்? நாப்பது லட்சம் மக்ளுக்கான விடுதலையை வெறும் ரெண்டு மூன்று லட்சம் வன்னியின் வறிய மக்களின் தலைகளில் சுமத்தி விடுதலை பெற முற்பட்டதை விடவா ஒரு அரசியல்? நாங்கள் எப்படியாவது சர்வதேசத்தை கொண்டு காப்பாற்றுவோம் என்று தாயகப்போராட்டத்தை முள்ளிவாய்கால்வரை ஈழுத்துச்சென்று குழந்தை குட்டிகளை காவுகொடுத்ததை விடவா ஒரு அரசியல்? அரச கட்டுப்பாட்டிலும் மேற்குநாடுகளிலும் புலம்பெயர்ந்து ஏவல்த்தேசியம் செய்து மக்களை காவுகொடுத்ததை விடவா ஒரு அரசியல்? யுத்தத்துக்கென்று காசு சேர்த்து ஆட்டையை போட்டதை விடவா ஒரு அரசியல்? இன்னும் நூறு கேள்வி கேட்டுக்கொண்டே போகலாம். ஒரு விரல் என்னுமொருவனை சுட்டிக்காட்டமுன்பு நான்கு விரல் எங்கள் நெஞ்சையே சுட்டிக்காட்டகின்றது. நாங்கள் எங்களை நாங்களே தின்று புளிச்சல் ஏவறைவிடும் பரதேசிக்கூட்டம். தமிழ்நாட்டு அரசியல் வாதியானலும் சரி இலங்கைத்தமிழன் ஆனாலும் சரி எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகளே ! இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளுக்கும் தெரியும் தன்னினத்தையே தனக்குள் குழிதோண்டிப்புதைக்கும் இந்தப் பரதேசிக் கூட்டத்தை வைத்த ஒரு மயிரும் புடுங்க முடியாது என்று. அதனால் தான் எத்தனை போர்க்குற்றம் செய்தாலும் சிங்களவனையே அனுசரித்து உலகநாடுகள் போய்கொண்டிருக்கின்றது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றது. இது எமது தாயக விடுதலை ஆதரவை சிதைக்கும் ஒரு திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடாது என்பதே பெரும்பான்மை தமிழர்களின் நிலை.[/size]

[size=4]மற்றும்படி யாரும் இசைக்கு எதிரானவர்கள் அல்ல.[/size]

[size=4]இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் யார்? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருந்தார்கள்? [/size]

[size=4]இதற்கு அரவர்கள் இதுவரை செலவழித்த பணம் எவ்வளவு அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவித்தால் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.[/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை தொடக்கியதே சாப்பாட்டு கடை வைத்திருக்கும் ஒருவர்தான் ,இவர் வீட்டில் தான் சீமான் வந்தால் தங்குவது .இயக்கத்தில் அடித்த காசை வைத்து தன்னை பிரபலபடுத்த இவர் ஆடும் ஆட்டம் தான் இது .இதே போல இன்னொரு தமிழ் கடை சொந்தக்காரரும் இவருடன் கூட்டு ,இவர் காணி வாங்கி பெரிய கடையே கட்டி வைத்திருக்கின்றார் இவர் அண்ணன் சிங்கப்பூரில் இருந்து புலிகளுக்கு வேலை செய்தவர் .

சாப்பாட்டு கடைக்காரரின் தங்கை அண்மையில் தான் $ 80,000.00 இற்கு HUMMER வாகனம் வாங்கினார் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]ஆதாரங்களுடன் இவை முன்வைக்கப்பட்டால் நன்று.[/size]

[size=4]இல்லாவிட்டால் நாம் அனைவருமே முட்டாள்கள் ஆக்கப்படுகின்றோம்.[/size]

Link to post
Share on other sites

[size=4]ந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றது. இது எமது தாயக விடுதலை ஆதரவை சிதைக்கும் ஒரு திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடாது என்பதே பெரும்பான்மை தமிழர்களின் நிலை.[/size]

[size=4]மற்றும்படி யாரும் இசைக்கு எதிரானவர்கள் அல்ல.[/size]

[size=4]இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் யார்? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருந்தார்கள்? [/size]

[size=5]இதற்கு அரவர்கள் இதுவரை செலவழித்த பணம் எவ்வளவு அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவித்தால் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.[/size]

இளையராஜா பாடினால் தாயக விடுதலை ஆதரவு சிதைந்து போகுமா?????????????

அவர்கள் யாராயிருந்தாலும் என்ன? எல்லாம் சொல்லவா வேணும்?? அவர்கள் நன்மை செய்யாவிடிலும் பறுவாயில்லை தீமை செய்யாவிட்டால் சரி.

[size=5]ஆட்களிட்டை சேர்த்த காசிற்கே விபரம் இல்லை, அதுக்கை இதுக்கு ஒரு விபரம் ????[/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை தொடக்கியதே சாப்பாட்டு கடை வைத்திருக்கும் ஒருவர்தான் ,இவர் வீட்டில் தான் சீமான் வந்தால் தங்குவது .இயக்கத்தில் அடித்த காசை வைத்து தன்னை பிரபலபடுத்த இவர் ஆடும் ஆட்டம் தான் இது .இதே போல இன்னொரு தமிழ் கடை சொந்தக்காரரும் இவருடன் கூட்டு ,இவர் காணி வாங்கி பெரிய கடையே கட்டி வைத்திருக்கின்றார் இவர் அண்ணன் சிங்கப்பூரில் இருந்து புலிகளுக்கு வேலை செய்தவர் .

சாப்பாட்டு கடைக்காரரின் தங்கை அண்மையில் தான் $ 80,000.00 இற்கு HUMMER வாகனம் வாங்கினார் .

அர்ஜுன் அண்ணா.உங்களுக்கு ஒரு தகவலை எப்பிடி பப்ளிக்காய் வைக்கிறதெண்டு தெரியேல்ல.இப்பிடி ஊகமாய் எழுதுரதாலை உங்கட கருத்து அடிபட்டுப் போகுது உண்மையாய் இருந்தாலும்.உதாரணத்துக்கு இதில் எழுதியதில் நீங்கள் வடிவாக தெளிவாக எழுதுவதானால்

சீமான் எப்ப வந்து தங்கினார்?

குறிப்பீட்ட வர்த்தகர் வீடு எங்கை இருக்கு?

சாப்பாட்டுக் கடையின் பெயர்

எப்படி இயக்க காசை அடித்தார்

எப்படி இயக்கத்தின் காசு இவரிடம் போனது

அவருடன் மற்ற தமிழ்க் கடைக்காறர் எப்படி கூட்டு வைத்திருக்கார்,வியாபாரத்திலா நட்பிலா?

காணி எங்கை வேண்டி இருக்கார்(முகவரி)

கடையின் பெயர்

சிங்கப்பூரில் எப்படி வேலை செய்தார்

பெயர்

இப்படி எல்லாதகவல்களையும் புட்டு புட்டு வைத்து ஆதார பூர்வமாக எழுதணும் அண்ணா.அப்பதான் உங்க தகவல்களுக்கு ஒரு நம்பகத்தன்மை வரும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]பல தென்னிந்த பாடகர்கள் அண்மைக்காலமாக தாயகத்திற்கும் வரவழைக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.[/size]

[size=4]சிலர் ஏற்க மறுத்தனர். சிலர் ஏற்று பின்னர் அதை நிறுத்தினர். சிலர் சென்று பின்னர் மன்னிப்பு கேட்டனர்.[/size]

[size=4]இன்று தாயகத்தில் பலவேறு வழிகளில் தன்மான உணர்வுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.[/size]

[size=4]விடுதலையை துடிப்புடன் வைத்திருக்கும் புலம்பெயர் தேசங்களில் கூட சிங்களம் பலவேறு வழிகளில் பிளவுகளை உருவாக்கி வருவது தெரிந்ததே. எனவே எமக்கு அவதானம் தேவை.[/size]

Link to post
Share on other sites

[size=4]இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றது. இது எமது தாயக விடுதலை ஆதரவை சிதைக்கும் ஒரு திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடாது என்பதே பெரும்பான்மை தமிழர்களின் நிலை.[/size]

[size=4]மற்றும்படி யாரும் இசைக்கு எதிரானவர்கள் அல்ல.[/size]

[size=4]இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் யார்? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருந்தார்கள்? [/size]

[size=4]இதற்கு அரவர்கள் இதுவரை செலவழித்த பணம் எவ்வளவு அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவித்தால் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.[/size]

விளங்கவில்லை !

இவ்வாறான ஒரு கேள்வி கேட்பதற்கான அடிப்பபடை என்ன? நீங்ககள் யார்? இக்கேள்வியின் பின்னால் கனேடிய சட்டம் இருக்கின்றதா? யார் நிகழ்ச்சியை நடத்தவேணும் என்று எதிர்பார்கின்றீர்கள். கனேடியச் சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். இதற்கிடையில் எந்தபப் பஞ்சாயத்தக:கு நாட்டாமைக்கு ரவுடிக்கு பதில் சொல்ல வேண்டும்? கணக்கு வழக்கை எந்த அடிப்படையில் கேட்கின்றீர்கள்? இக்கேள்விக்கு முதல் இது வேறு ஒருவருடை பணமாக இருந்தால் அல்லது கேள்வி கேட்பவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணமாக இருந்தால் முறையே வழக்குப் பதிவுசெய்து சட்டப்படி கோட் மூலம் கேள்வி கேளுங்கள். யார் நடத்துகககின்றார்கள் என்றும் தெரியாது யார் கேள்வி கேட்கின்றார்கள் என்றும் தெரியாது. யார் பஞ்சாயத்து தலைவர் என்றும் தெரியாது ஆனால் பஞ்சாயத்து நடக்கின்றது. மக்கள் என்று எவரும் இல்லை எல்லாம் நாட்டாமைகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]http://www.trinitytechinc.ca/ [/size]

[size=4]இந்த பொறியியல் நிறுவனமே இந்த இசை நிகழச்சியை நடாத்துகின்றது.[/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=4]பல தென்னிந்த பாடகர்கள் அண்மைக்காலமாக தாயகத்திற்கும் வரவழைக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.[/size]

[size=4]சிலர் ஏற்க மறுத்தனர். சிலர் ஏற்று பின்னர் அதை நிறுத்தினர். சிலர் சென்று பின்னர் மன்னிப்பு கேட்டனர்.[/size]

[size=4]இன்று தாயகத்தில் பலவேறு வழிகளில் தன்மான உணர்வுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.[/size]

[size=4]விடுதலையை துடிப்புடன் வைத்திருக்கும் புலம்பெயர் தேசங்களில் கூட சிங்களம் பலவேறு வழிகளில் பிளவுகளை உருவாக்கி வருவது தெரிந்ததே. எனவே எமக்கு அவதானம் தேவை.[/size]

அகூதா அவதானமா எமக்கா... தேவையானதை பற்றி கதைத்தால் நல்லது ...............இல்லாவிடில் நேரம்தான் வீண் ............திண்டமா ,குடித்தோமா ,படுத்தோமா,

புரண்டோமா ,எழும்பினோமா ..........என்று போய்க்கிட்டே இருக்கணும்.............இவை எல்லாத்துக்கும் தடையாய் இருந்த எல்லாத்தையும் அழிதுப்போட்டமாம் .....எவ்வளவு சுதந்திரமாய் இருக்கிறம் ........அதுக்குப்பிறகு பேந்தும் எம்மை தட்டி எழுப்பி .............தேவையா இதெல்லாம் ...சும்மா வந்திட்டீங்க புசத்த ....... :icon_mrgreen:

Link to post
Share on other sites

விளங்கவில்லை !

இவ்வாறான ஒரு கேள்வி கேட்பதற்கான அடிப்பபடை என்ன? நீங்ககள் யார்? இக்கேள்வியின் பின்னால் கனேடிய சட்டம் இருக்கின்றதா? யார் நிகழ்ச்சியை நடத்தவேணும் என்று எதிர்பார்கின்றீர்கள். கனேடியச் சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். இதற்கிடையில் எந்தபப் பஞ்சாயத்தக:கு நாட்டாமைக்கு ரவுடிக்கு பதில் சொல்ல வேண்டும்? கணக்கு வழக்கை எந்த அடிப்படையில் கேட்கின்றீர்கள்? இக்கேள்விக்கு முதல் இது வேறு ஒருவருடை பணமாக இருந்தால் அல்லது கேள்வி கேட்பவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணமாக இருந்தால் முறையே வழக்குப் பதிவுசெய்து சட்டப்படி கோட் மூலம் கேள்வி கேளுங்கள். யார் நடத்துகககின்றார்கள் என்றும் தெரியாது யார் கேள்வி கேட்கின்றார்கள் என்றும் தெரியாது. யார் பஞ்சாயத்து தலைவர் என்றும் தெரியாது ஆனால் பஞ்சாயத்து நடக்கின்றது. மக்கள் என்று எவரும் இல்லை எல்லாம் நாட்டாமைகள்.

[size=5]இதற்குப் பதிலளியுங்கள் akootha![/size]

[size=5]என்ன தான் இசை நடத்துபவர்கள் செய்தாலும் அவர்களைக் கனேடியச் சட்டம் தான் தட்டிக் கேட்க முடியும் ஏன் நீங்கள் அவதிப்படுகின்றீர்கள். [/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=5]இதற்குப் பதிலளியுங்கள் akootha![/size]

[size=5]என்ன தான் இசை நடத்துபவர்கள் செய்தாலும் அவர்களைக் கனேடியச் சட்டம் தான் தட்டிக் கேட்க முடியும் ஏன் நீங்கள் அவதிப்படுகின்றீர்கள். [/size]

அதுதானே........ கனடிய இனம் ,கனடிய மொழி ,நாங்கள் கனடாக்காரர் ........[நிறத்தை தவிர]

Link to post
Share on other sites

அகூதா அவதானமா எமக்கா... தேவையானதை பற்றி கதைத்தால் நல்லது ...............இல்லாவிடில் நேரம்தான் வீண் ............திண்டமா ,குடித்தோமா ,படுத்தோமா,

புரண்டோமா ,எழும்பினோமா ..........என்று போய்க்கிட்டே இருக்கணும்.............இவை எல்லாத்துக்கும் தடையாய் இருந்த எல்லாத்தையும் அழிதுப்போட்டமாம் .....எவ்வளவு சுதந்திரமாய் இருக்கிறம் ........அதுக்குப்பிறகு பேந்தும் எம்மை தட்டி எழுப்பி .............தேவையா இதெல்லாம் ...சும்மா வந்திட்டீங்க புசத்த ....... :icon_mrgreen:

தமிழ்சூரியன்,

தீவிரமாக போர் நடைபெற்ற காலங்களிலும் கனடாவில் பல நூற்றுக்கணக்கான இசை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள், கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. அவற்றினை ஒழுங்கு படுத்தியவர்களில் அநேகர் புலிகளின் தீவிர ஆதரவாளர்களும் அவர்களைச் சார்ந்த அமைப்புகளும் தான். அவற்றின் பின்னும் மக்கள் தெருக்களில் பனியிலும் குளிரிலும் விறைக்க விறைக்க போராட்டத்துக்காக அணி திரண்டனர்.

இசை நிகழ்ச்சி பார்ப்பதால் மக்களின் விடுதலை உணர்வு மழுங்கடிக்கப்படும் என்பது மீது வைக்கப்படும் மிக கேவலமான ஒரு விமர்சனம் ஆகும். மக்கள் பற்றிய இத்தகைய தவறான எண்ணத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கான போராட்டத்தினை நடத்தவும் முடியாது அல்லது மக்களுக்கான இசையை வெளிப்படுத்தவும் முடியாது.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சமீபத்தில் நடத்தப்பட்ட ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க வரும் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெறும் என்பதுதான் கருத்துக் கணிப்பின் இறுதி முடிவாக வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணி! தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில் 158 முதல் 166 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கடந்த தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு வங்கி 1.7 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.   *(ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பின்படி)   அ.தி.மு.க கூட்டணி! அ.தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில், 60 முதல் 68 இடங்கள் வரை கைப்பற்றும் என்று ஏபிபி கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. இரண்டு கட்சிகளும் சேர்த்துப் பெற்ற வாக்கு சதவிகிதம் - 43.7.   *(ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பின்படி) அ.ம.மு.க! டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2 முதல் 6 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. அ.தி.மு.க வாக்குகளை அ.ம.மு.க உடைக்கும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.8 சதவிகித வாக்குகள் அ.ம.மு.க பெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ம.நீ.ம! நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 0 முதல் 4 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. 6.7 சதவிகித வாக்குகளை ம.நீ.ம கவரும் என்ற தகவலும் கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ளது.   மிகவும் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளர்! தமிழகத்தில் மிகவும் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது ஏபிபி. அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு 36.4 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளதாகவும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு 25.5 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.   `தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 166 இடங்கள் வரை வெல்லும் வாய்ப்புள்ளது' என்கிற ஏபிபி-யின் கருத்துக் கணிப்பு குறித்து அரசியல் நோக்கர்களின் பார்வை என்னவாக இருக்கிறது? ``166 இடங்களை தி.மு.க கைப்பற்றும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. தி.மு.க கூட்டணியில் முக்கிய இடம் பிடித்துள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை முன்னிறுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் தி.மு.க கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. ஒருவேளை தி.மு.க தலைமை, கூட்டணிக் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்டால் 166 இடங்கள் என்பது சந்தேகமே.   தி.மு.க - அ.தி.மு.க மேலும், அ.ம.மு.க-வை அ.தி.மு.க கூட்டணியில் இணைக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படி இணைக்கப்பட்டால், அ.தி.மு.க கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் தி.மு.க கூட்டணியின் எண்ணிக்கை குறையும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ள ம.நீ.ம, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் நிலவரம் குறித்து, ``மக்கள் நீதி மய்யம் நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும். புதிய வாக்காளர்கள் பலரும் ம.நீ.ம-வுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஆனால், 4 சீட்கள் வரை அக்கட்சி வெல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒரு இடத்தை அக்கட்சி கைப்பற்றுவதே சிரமம்தான். அ.ம.மு.க-வுக்கு சசிகலா வருகை பலமாக அமையும். சசிகலா வருகைக்குப் பிறகு அ.தி.மு.க-விலிருந்து சிலர் அ.ம.மு.க பக்கம் தாவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் அ.ம.மு.க, நிச்சயம் ஒரு சில இடங்களில் வெற்றிபெறும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகளை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து தி.மு.க-வினர் கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில், ``இது தி.மு.க-வின் ஐபேக் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு. இதில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகள் அனைத்தும் போலியானது என இன்னும் 3 மாதங்களில் தமிழக மக்கள் நிரூபிப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள்'' என்று தைரியமாகச் சவால் விடுகிறார்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க 68... ம.நீ.ம 4... தி.மு.க-வுக்கு எத்தனை..? ஏபிபி கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?! | ABP Opinion poll and political analyst views on 2021 Tn election (vikatan.com)
  • ****     மேன்மை பொருந்திய ஜனாதிபதி கோத்தபாய அவர்களை எவராலும் எதுவும் செய்யமுடியாது. நேரத்தையும் காலத்தையும் வீணடிக்காமல், மக்கள் வாழ உதவப்பாருங்கள்.🇨🇳
  • தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லபடுபவர்கள் தான். அட்டூழியம் செய்த காரணத்தால் இந்திய மீனவர்கள் என்று அழைக்கபடுகிறார்கள்.
  • கரண்டியை வாய்க்குள் வைத்த உடனேயே ஓங்காளம் வருவதுபோல் தெரிகிறது. மாசமாக இருக்கலாம்.🤔
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.