Archived

This topic is now archived and is closed to further replies.

உடையார்

அதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்

Recommended Posts

தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.

நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,

மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்

http://panippulam.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=55&Itemid=412&limitstart=24

விடிய எழும்பியவுடன் தண்ணி குடித்தால் காலைக்கடனை இலகுவாக கழிக்கலாம்,

ஒழுங்காக காலைகடன் கழிந்தால் எந்த நோயும் வராது, அத்துடன் உடற்பயிற்ச்சி செய்யவும் ஈசி

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள்,உடையார்!

நான் நினைவு தெரிந்த நாள் முதலாய், இதைச் செய்து வருகின்றேன்!

எனக்கு விடியக்காலையில், குளிர் நீரின் சுவை பிடிக்கும். வேறு காரணங்கள் இல்லை!

நீங்கள் எழுதியதை வாசிக்கும் போது, இதில் உண்மை இருக்கக் கூடும் என்றே எண்ணுகின்றேன்!

Share this post


Link to post
Share on other sites

எனக்கும்... விடியக்காலையில், தண்ணீர் குடிக்க விருப்பம்தான்...

ஆனால், ஒரு கிளாஸ் தண்ணி குடித்தால்... ஒன்பது தரம் ஒண்டுக்கு போக வேண்டி இருக்கும். இதனைத் தடுக்க ஏதாவது வழி இருக்கா...

வேலைக்குப் போகும் நாட்களில்.... குடிக்கும் நீரை பத்து, பதினொரு மணிக்குப் பிறகுதான் குடிப்பது வழமை.

Share this post


Link to post
Share on other sites

எனக்கும்... விடியக்காலையில், தண்ணீர் குடிக்க விருப்பம்தான்...

ஆனால், ஒரு கிளாஸ் தண்ணி குடித்தால்... ஒன்பது தரம் ஒண்டுக்கு போக வேண்டி இருக்கும். இதனைத் தடுக்க ஏதாவது வழி இருக்கா...

வேலைக்குப் போகும் நாட்களில்.... குடிக்கும் நீரை பத்து, பதினொரு மணிக்குப் பிறகுதான் குடிப்பது வழமை.

ஒவ்வொரு நாளும் பத்து அல்லது பதினோரு மணிக்கு தூக்கத்தால் எழும்புங்கள் அண்ணா ...............

12 மணிக்கு ஆரம்பிப்பது போல் ஓர் நல்ல வேலையே தேடுங்கள் .............. :D

Share this post


Link to post
Share on other sites

நான் கடந்த பதினாறு வருடங்களாக பல் துலக்கி வாய் அலம்பிய பின் வெறு வயிற்றில் இரண்டு கிளாஸ் நீர் அருந்தி வருகின்றேன். :)

பகிர்விற்கு நன்றி உடையார்.

Share this post


Link to post
Share on other sites

0நல்ல விடயம் உடையார். எனக்குத் தண்ணியே பிடிக்காது. கொடுமைதான் ஆனாலும் முயன்று பார்ப்போம்.

Share this post


Link to post
Share on other sites

0நல்ல விடயம் உடையார். எனக்குத் தண்ணியே பிடிக்காது. கொடுமைதான் ஆனாலும் முயன்று பார்ப்போம்.

அக்கா உங்களுக்கும் தண்ணியில கண்டமா :D :D

Share this post


Link to post
Share on other sites

எனக்கும்... விடியக்காலையில், தண்ணீர் குடிக்க விருப்பம்தான்...

ஆனால், ஒரு கிளாஸ் தண்ணி குடித்தால்... ஒன்பது தரம் ஒண்டுக்கு போக வேண்டி இருக்கும். இதனைத் தடுக்க ஏதாவது வழி இருக்கா...

வேலைக்குப் போகும் நாட்களில்.... குடிக்கும் நீரை பத்து, பதினொரு மணிக்குப் பிறகுதான் குடிப்பது வழமை.

இது தவறான பழக்கம்.. அடிக்கடி போகுது என்கிறதுக்காக தண்ணீர் குடிக்காமல் இருக்கக் கூடாது. காலையில் தண்ணீர் குடித்தவுடன் அடிக்கடி போகிறது என்றால் உடலில் தேவையான அளவு நீர் இருந்திருக்கவில்லை எனத் தெரிகிறது.

Share this post


Link to post
Share on other sites

நான் கடந்த பல வருடங்களாக பல் துலக்கி வாய் அலம்பிய பின் வெறு வயிற்றில் 1/2 லீற்றர் நீர் அருந்தி வருகின்றேன். :)

பகிர்விற்கு நன்றி உடையார்

Share this post


Link to post
Share on other sites

சிலருக்கு விழித்த உடனேயே கோப்பி வேணும் அவர்கள் எப்படி வெறுவயிற்றில் நீர் பருகுவது ? :D

பகிர்வுக்கு நன்றி உடையார் அண்ணா

Share this post


Link to post
Share on other sites

சிலருக்கு விழித்த உடனேயே கோப்பி வேணும் அவர்கள் எப்படி வெறுவயிற்றில் நீர் பருகுவது ? :D

பகிர்வுக்கு நன்றி உடையார் அண்ணா

வெறும் வயிற்றில் சூடாக பருகுவது நல்லதல்ல........ :(

Share this post


Link to post
Share on other sites

சிறிய வயதிலிருந்தே பழக்கம். காலையில் எழுந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக 2 லீற்றருக்கு மேல் பருகுவேன். அல்லது வயிறும் உடலும் சூடாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

காலையில் தண்ணி அடிச்சால் எல்லாம் தானாகப் போகும் :D

Share this post


Link to post
Share on other sites

சுடு தண்ணியா பச்சைத் தண்ணியாப்பா??

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் பல்லு தீட்டாமல் தான் காலையில் தண்ணீர் குடிக்கவேண்டும் ஆனால் எமக்கு சற்று சங்கடமாக இருப்பதால் பல்லை திட்டிவிட்டு குடிக்கின்றோம் .

காலையில் பச்சை தண்ணி குடிக்க கஷ்டமாக இருந்தால் இளம் சூடான தண்ணியை குடிக்கவும் அதுவும் கஷ்டமாக இருந்தால் சற்று தேசிக்காய் ,தேன் விட்டு குடிக்கலாம் .

உடம்பிற்கு மிக மிக நல்லது .நான் சில வருடங்களாக குடித்துவருகின்றேன் ,மனைவி பல வருடங்களாக குடித்துவருகின்றார் .

Share this post


Link to post
Share on other sites

காலையில் நீர் குடித்தால் வியாதிகள் குணமாகும் என்பது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படவில்லை என்பதை அறிய முடிகின்றது. இது ஒரு வகை Myth.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்

மேலே சொல்லப்பட்டு இருக்கும் வியாதிகளுக்கும் நீருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. உயர் இரத்த அழுத்தம் போன்றவை வருவதற்கான காரணங்கள் முற்றிலும் வேறு. அதே போன்று காச நோய், புற்று நோயெல்லாம் வெறும் நீரால் குணமாகும் என்றால் உலகம் இந்தளவுக்கு இவ் வியாதிகளால் அவதிப்படாது.

நெடுக்கு அல்லது குளக்காட்டன் இது பற்றி மேலும் சொன்னால்தான் நல்லா இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் பல்லு தீட்டாமல் தான் காலையில் தண்ணீர் குடிக்கவேண்டும் ஆனால் எமக்கு சற்று சங்கடமாக இருப்பதால் பல்லை திட்டிவிட்டு குடிக்கின்றோம் .

காலையில் பச்சை தண்ணி குடிக்க கஷ்டமாக இருந்தால் இளம் சூடான தண்ணியை குடிக்கவும் அதுவும் கஷ்டமாக இருந்தால் சற்று தேசிக்காய் ,தேன் விட்டு குடிக்கலாம் .

உடம்பிற்கு மிக மிக நல்லது .நான் சில வருடங்களாக குடித்துவருகின்றேன் ,மனைவி பல வருடங்களாக குடித்துவருகின்றார் .

[size=4]பல்லை துலக்காது குடித்தால்...........[/size][size=1]

[size=4]எமக்கும் அடிக்கடி வாந்தி வராதா?[/size][/size]

காலையில் நீர் குடித்தால் வியாதிகள் குணமாகும் என்பது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படவில்லை என்பதை அறிய முடிகின்றது. இது ஒரு வகை Myth.

மேலே சொல்லப்பட்டு இருக்கும் வியாதிகளுக்கும் நீருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. உயர் இரத்த அழுத்தம் போன்றவை வருவதற்கான காரணங்கள் முற்றிலும் வேறு. அதே போன்று காச நோய், புற்று நோயெல்லாம் வெறும் நீரால் குணமாகும் என்றால் உலகம் இந்தளவுக்கு இவ் வியாதிகளால் அவதிப்படாது.

நெடுக்கு அல்லது குளக்காட்டன் இது பற்றி மேலும் சொன்னால்தான் நல்லா இருக்கும்.

[size=4]உடலில் ஏற்படும் சில சிறிய உபாதைகள் [/size][size=1]

[size=4]பின்பு சில பெரிய உபாதைகளுக்கு வழி வகுக்கலாம்.[/size][/size][size=1]

[size=4]தண்ணியடிச்சு முளையிலேயே புடுங்கிவிட்டால் நல்லம் என்று சொல்கிறார்கள் போல் தெரியுது.[/size][/size]

Share this post


Link to post
Share on other sites

காலையில் நீர் குடித்தால் வியாதிகள் குணமாகும் என்பது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படவில்லை என்பதை அறிய முடிகின்றது. இது ஒரு வகை Myth.

மேலே சொல்லப்பட்டு இருக்கும் வியாதிகளுக்கும் நீருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. உயர் இரத்த அழுத்தம் போன்றவை வருவதற்கான காரணங்கள் முற்றிலும் வேறு. அதே போன்று காச நோய், புற்று நோயெல்லாம் வெறும் நீரால் குணமாகும் என்றால் உலகம் இந்தளவுக்கு இவ் வியாதிகளால் அவதிப்படாது.

நெடுக்கு அல்லது குளக்காட்டன் இது பற்றி மேலும் சொன்னால்தான் நல்லா இருக்கும்.

நிழலி என்னிடம் தமிழில் நல்ல ஆக்கம் இருந்தது, இருந்தால் பிறகு இணைத்துவிடுகிறேன்

JAPANESE WATER CURE

Posted on December 10, 2007 | 19 Comments

JAPANESE WATER CURE

You have heard it before: Drink lots of water to stay healthy.

Now, this from Japan:

My Japanese room-mate has told me that it is fashionable in Japan to drink water immediately upon arising, because Japanese research has shown that this “Water Treatment” can effect a 100% cure for a number of diseases, including:

[size="2"]arthritis[/size]

[size="2"]epilepsy[/size]

[size="2"]hemorrhoids (piles)[/size]

[size="2"]asthma[/size]

[size="2"]ear, nose, throat disease[/size]

[size="2"]kidney and urinary tract diseases[/size]

[size="2"]body aches[/size]

[size="2"]eye disease[/size]

[size="2"]meningitis[/size]

[size="2"]bronchitis[/size]

[size="2"]gastritis[/size]

[size="2"]menstrual and other female reproductive disorders[/size]

[size="2"]cancer[/size]

[size="2"]headaches[/size]

[size="2"]obesity[/size]

[size="2"]constipation[/size]

[size="2"]heart disease[/size]

[size="2"]tuberculosis[/size]

[size="2"]diabetes[/size]

[size="2"]heart palpitations[/size]

[size="2"]vomiting[/size]

[size="2"]diarrhea[/size]

[size="2"]high blood pressure[/size]

METHOD OF TREATMENT

• Upon arising in the morning, before you brush your teeth, drink 640 ml (approximately 2-1/2 C) water.

• After drinking the water, brush your teeth and gargle, as desired, but wait 45 minutes before eating or drinking anything else.

• After 45 minutes, eat your normal breakfast.

• Avoid eating or drinking for 2 hours during the treatment period.

NOTE: The elderly or infirm, who cannot tolerate 4 glasses of water at once should build up their water intake gradually, from 1/2 C to the recommended 2-1/2 C before breakfast.

Although there are no side effects to this totally natural treatment, in the beginning, you may notice an increased frequency of urination until the body accustoms itself to the new pattern of water intake.

RECOMMENDED SCHEDULE OF TREATMENT

for alleviation or cure

• Arthritis patients should follow the 3 days during the week 1, then begin the full daily treatment in week 2.

• Cancer – 180 days

• Constipation – 10 days

• Diabetes – 30 days

• Gastritis – 10 days

• High Blood Pressure – 30 days

• Tuberculosis – 90 days

Japanese researchers suggest that the Water Treatment be added permanently to one’s daily routine for ongoing benefit.

http://prettysmartnaturalideas.wordpress.com/2007/12/10/36/

---EXCERPT---

It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases:

Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual disorders, ear nose and throat diseases.

Method of Treatment

 1. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water.
 2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minutes.
 3. After 45 minutes you may eat and drink as normal.
 4. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours.
 5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.

The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.

The following list gives the number of days of treatment required to cure main diseases:

 1. High Blood Pressure – 30 days
 2. Gastric – 10 days
 3. Diabetes – 30 days
 4. Constipation – 10 days
 5. Cancer – 180 days
 6. TB – 90 days

Arthritis patients should follow the above treatment for only 3 days. In the 1st week to be followed by daily treatment. This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times.

---END OF EXCERPT---

The above excerpt came from 60-year-old information that is known in Japan. Probably, all Japanese citizen know this. Just after the Second World War, this information was made known to the Japanese public through the newspapers. As you know, we have bathhouses (sento in Japanese) in every corner of streets. It is just like hot spring in the cities. These bathhouses are being used both for medicinal purposes and social gathering.

Below is a well-known story in Japan that relates on the above excerpt:

One early morning, a skinny old man, Mr. Yamada went to a public bathhouse. Usually, Yamada was the first customer to visit every morning because he was ashamed of his skinny body. Thinking that he was the first one to enter the bathhouse, he saw a man with a well-built body, smiling and greeting to him.

"Good morning, sir", the stranger said.

Yamada also greeted, "Good morning, sir".

He continued to say, "By the way, sir, do you live near here?"

The smiling stranger answered, "Oh, I am travelling around. Why do you visit the bath so early in the morning? Do you enjoy taking a bath?"

Yamada replied, "You see, I am very skinny and I'm so ashamed to show my body."

The fat and good looking man said, "Oh, it's easy to get healthy, just drink a glass of water every time you wake up. After a week, increase your drinking to two glasses of water daily. Is it so simple? I was also skinny like you before."

After the stranger talked to Yamada, he left the bathhouse promptly. Mr. Yamada immediately rushed to the counter to ask the stranger's name but there was nobody around there.

At the counter of the bathhouse, "Chief, do you know the man who just left here now?"

The chief replied, "What are you talking? You are the only one customer here."

Surprised, Mr. Yamada went home and sat for breakfast with his wife, and then he caught sight of a figurine on the altar. He remembered that the smiling man was one of the Seven Gods of Fortune (Shichifukujin) he was praying daily.

shichifukujin.gif

No. 6, lower front is the man (god) Mr. Yamada talked to in the bathhouse. The god's name is “Daikokuten”—god of wealth, commerce, and trade.

I myself followed this water therapy procedure back then, when I was so skinny. Nearly 50 percent of skinny people who want to get healthy, practice it here in Japan.

In addition, if you're suffering from a serious illness, we recommend you to use the PYRO-ENERGEN. PYRO-ENERGEN is proven effective in eradicating viral diseases, cancer, and diseases of unknown cause.

About the Author:

Junji Takano is a Japanese health researcher involved in investigating the cause of many dreadful diseases. In 1968, he invented PYRO-ENERGEN, the first electrostatic therapy device for electromedicine that effectively eradicates viral diseases, cancer, and diseases of unknown cause.

Click here to find out more: http://www.pyroenergen.com/

Free health newsletter: http://www.pyroenergen.com/newsletter.htm

------------------------------------------------------------

Reprint Rights: You may reprint this article within your website, blog, or newsletter as long as the entire article remains the same as well as the “About the Author” box

http://www.pyroenergen.com/articles/drinkwater.htm

http://en.wikipedia.org/wiki/Water_cure_(therapy)

Share this post


Link to post
Share on other sites

ஒவ்வொரு நாளும் பத்து அல்லது பதினோரு மணிக்கு தூக்கத்தால் எழும்புங்கள் அண்ணா ...............

12 மணிக்கு ஆரம்பிப்பது போல் ஓர் நல்ல வேலையே தேடுங்கள் .............. :D

12மணிக்கு, என்ன... வேலை எடுக்கலாம்.... ஐடியா தேவை தமிழ்சூரியன் :rolleyes::icon_idea:

Share this post


Link to post
Share on other sites

12மணிக்கு, என்ன... வேலை எடுக்கலாம்.... ஐடியா தேவை தமிழ்சூரியன் :rolleyes::icon_idea:

அண்ணா வேலை எடுக்கலாம் பற்றி நிறைய ஐடியாக்கள் அனுபவரீதியாக இருக்கு ..........புதுக்கணணி வாங்கியபின்னும் அது இவ்வளவு விரைவாய் வேலை செய்த பின்னும் [ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்] எழுத முடியல.............ஏனனில் நண்பர் நியாணி என் முன் நிற்பதனால் :lol::D:icon_idea:

Share this post


Link to post
Share on other sites

0நல்ல விடயம் உடையார். எனக்குத் தண்ணியே பிடிக்காது. கொடுமைதான் ஆனாலும் முயன்று பார்ப்போம்.

ஆனால் எனக்கு தண்ணீ நல்ல விருப்பம் எந்தத் தண்ணீ என்று கேட்டு விடாதீர்கள்.. :D

Share this post


Link to post
Share on other sites

தண்ணீரை விரும்பாத மனிதர்களுக்கு இது ...

Share this post


Link to post
Share on other sites