Jump to content

அரை மில்லியன் $$$ பெறுமதியான காரின் சொந்தக்காரரிடம் $500 பணம் இல்லை?


Recommended Posts

தெருக்களில் மிகவும் பெறுமதியான வாகனங்களை ஓடுபவர்களிடம் உண்மையில் காசு தாராளமாக புழங்குகின்றதா என்பதில் எல்லாருக்கும் பொதுவாக சந்தேகம் ஏற்படுவது வழமை.

அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் அரைமில்லியன் டாலர்கள் பெறுமதியான, மிகவும் பிரபலமான, இளம் சமூகத்தின் "கனவு வாகனமாக" திகழும் [size=5]2012 Lamborghini [/size]கார் ஒன்றை வீதியில் வழிமறித்த காவல்துறை உத்தியோகத்தர் குறிப்பிட்ட வாகனம் காப்புறுதி இல்லாமல் பயணிப்பதை கண்டறிந்துள்ளார்.

கனடாவில் காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். குறிப்பிட்ட இந்தவகை [size=5]Lamborghini [/size]காரிற்கு தனிப்பட்ட ஒரு வாகன சாரதியின் நிலமைகளைப்பொறுத்து (வாழுமிடம், வயது, சம்பந்தப்பட்ட முன்னைய விபத்துக்கள், முன்னைய போக்குவரத்து குற்றங்கள் போன்றன) வருடாந்தம் சுமார் ஐயாயிரம் தொடக்கம் பதினையாயிரம் டாலர்கள் காப்புறுதி செலவு ஏற்படுகிறது.

கடந்த கிழமை நடைபெற்ற மேற்படி சம்பவத்தில் காவல்துறை உத்தியோகத்தர் $568 குற்றப்பணத்தை செலுத்துவதற்கு வாகனத்தின் சொந்தக்காரரிடம் சீட்டு வழங்கியுள்ளார். இதற்கு வாகனத்தின் சொந்தக்காரர் தன்னால் $ 568 குற்றப்பணம் செலுத்துவதற்கு வசதி இல்லை என்றும், இது அளவுக்கு மிஞ்சிய குற்றப்பணம் என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது வாகனம் உடனடியாகவே வீதியில் இருந்து அப்புறப்பட்டு இவ்வாறான வீதி போக்குவரத்து மோசடி சம்பவங்களுடன் தொடர்புபட்ட வாகனங்களை தரிக்கும் விசேட இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

காவல்துறை அதிகாரி இந்தச்சம்பவம் பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்தார்:

[size=5]“When the police officer stopped the driver, he soon realized that the car was not insured,” McDonald said. “When the officer gave the driver a $568 fine for not having insurance, the driver actually complained the fine was too much money.”[/size]

[size=5]“The irony being if they can afford such an expensive vehicle, you’ve got to be prepared for a $500 fine with no insurance,” McDonald said. “He said he couldn’t afford insurance.”[/size]

[size=5]“I find it very funny, when you have a flashy car like this and can’t afford the insurance,” [/size]

சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட வாகனம்:

image.jpeg

தகவல் : கூகிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மகன் இருவரும் (வயது 9&7) இந்த காரைப் பற்றிதான் அடிகடி கதைப்பார்கள்

வாங்கனும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மகன் இருவரும் (வயது 9&7) இந்த காரைப் பற்றிதான் அடிகடி கதைப்பார்கள்

வாங்கனும் :rolleyes:

உடையார்.... நீங்க VolksWagen,Audiயே வாங்கலாம் . ஏனென்றால்.... Lamborginiகுப் போடும் உதிரிப்பாகங்கள் சில அங்கிருந்துதான் வருகின்றது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்.... நீங்க VolksWagen,Audiயே வாங்கலாம் . ஏனென்றால்.... Lamborginiகுப் போடும் உதிரிப்பாகங்கள் சில அங்கிருந்துதான் வருகின்றது. :D

இது முதலே தெரியாம போச்சே :lol:

Link to comment
Share on other sites

என் மகன் இருவரும் (வயது 9&7) இந்த காரைப் பற்றிதான் அடிகடி கதைப்பார்கள்

வாங்கனும் :rolleyes:

Teenagers மத்தியில் இது பிரபலம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.