Jump to content

பிரான்சில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் (படங்கள்)


Recommended Posts

சிங்கள பேரினவாத அரசானது கடல்கடந்து தமிழ் மக்கள் மீது, தமிழீழ விடுதலைக்காக உழைத்தவர்கள் மீது தனது கொலைவெறியினை ஏற்படுத்தி மக்களின் மனதில் பயத்தினை உண்டு பண்ணும் வகையில் சிறீலங்கா அரசின் கைக்கூலிகளின் படுகொலைக்கு உள்ளான லெப். கேணல் நாதன், கப்ரன் கஐன் ஆகியோரது 16 வது ஆண்டு நினைவு வணக்கம் பிரான்சில் ஒபவில்லியே என்னும் இடத்தில் அவர்கள் துயில் கொள்ளும் துயிலும் இல்லத்தில் 26.10.2012 வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் 15.30 மணிக்கு பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இவ் வணக்க நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திரு. த. சத்தியதாசன் அவர்கள் ஏற்றிவைத்தார். மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர் 2ம் லெப். குழலினியின் சகோதரரும், கப்டன் கஐனின் சகோதரரும் ஏற்றி வைத்தனர். துயிலும் இல்ல பாடல் ஒலிக்கப்பட்டு மலர் வணக்கம் மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கும், கல்லறைக்கும் மாவீரர் கப்ரன் சூரியத்தேவனின் சகோதரரும், கப்டன் கஐனின் சகோதரரும் அணிவித்ததைத் தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மக்களின் சுடர் வணக்கமும், மலர்வணக்கமும் நடைபெற்றன. தொடர்ந்து தாயக செயற்பாட்டாளர் திரு. அகிலன் அவர்கள் நினைவுரையாற்றினார் அவர் தனது உரையில் புலம் பெயர் மண்ணில் இவர்களின் உன்னதமான செயற்பாடும், விடுதலைப்போராட்டத்திற்கு பல்வேறு வழிகளில் வலிமையை பெற்றுத்தந்திருந்தன என்றும் இதனை பொறுக்க முடியாத சிங்கள அரசு தனது கையாலாகாத்தனத்தால் இவர்களை படுகொலை செய்தது என்றும், இவர்கள் போன்று ஆயிரமாயிரம் மாவீரர்களது தியாகம் ஓருநாளும் வீண்போகாது என்றும் தொடர்ந்தும் தேசியத்தலைவனின் வழியில் நின்று எமது தாயகம் கிடைக்கும் விரை உழைப்போம் என்று இந்த மாவீரர்களின் சமாதி மீது சத்தியம் செய்து கொள்வோம் என்றும் கூறினார்.

தாயகத்தில் எமது மாவீரர் செல்வங்களின் சமாதிகள் உடைக்கப்பட்டு, போர் வடுகள் யாவும் மறைக்கப்பட்டு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் இவ் இரு மாவீரர்களின் கல்லறைகளே எமது வரலாற்று சான்றாக உள்ளன எனவும் குறிப்பிட்டிருந்தனர். எத்தனை தடைகள், துயர்கள், நெருக்கடிகள், துரோகங்கள் வந்தாலும், அவற்றிற்கு முகம் கொடுத்து விடுதலையடையும் வரை உழைப்போம் என உறுதி எடுத்துக் கொன்டனர்.

Kayan-Na-6.jpgKayan-Na-4.jpgKayan-Na-3.jpgKayan-Na-2.jpgKayan-Na-1.jpg

http://thaaitamil.com/?p=36813

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

தாயகத்தில் மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் சிங்கள அரசினால் அழித்து இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் அமைக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் தான் சிங்களத்தினால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றது.

புலம் பெயர்ந்த நாடுகளில் மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் அமைத்தால் நல்லது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மாவீரர்களுக்கு வீரவணக்கம்.[/size]

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த இணைப்பு ஏதாவது உள்ளதா?

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.