Jump to content

நான் ஒரு வணிகனா ? இல்லை கணித(க்கார)னா?

Recommended Posts

உங்கள் பெருந்தன்மை கண்டு மெச்சினோம் வள்ளல் மதன்... :lol::lol:

உங்களையே இந்த முட்டாள் திலகங்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்திய திலகமாக நியமிக்கின்றேன்.

இந்த முட்டாள் திலகங்களுடன் மாரடிக்க ஒரு கிராமத்தையும் பட்டாவாக உங்களுக்கு எழுதித் தருகின்றேன்..... :shock: :shock:

-----------------------------------------------------

சில காலத்தின் பின் எல்லாள மஹாராஜா வைத்தியசிகாமணி மதனின் இடத்தில் இருக்கும் முட்டாள் பைத்தியத் திலகங்களெல்லாம் எப்படி இருக்கின்றார்கள் என்று பார்த்து வரப் புரப்பட்டார்.

இரும்புக் கவசமெல்லாம் அணிந்து யுத்தத்துக்குச் செல்வதைப் போலவே மஹாராஜா புறப்பட்டதைக் கண்ட மந்திரி பிரதானி கேட்டார்.

" ஏன் மன்னா? இப்படியொரு ஆடை" என்று கேட்டார்.

" மந்திரி ... நாட்டிலுள்ள முட்டாள் பைத்தியங்களைத் தானே நாடுகடத்துவதற்காக வைத்தியசிகாமணி மதனைப் பலிக்கடாவாக்கி ஒரு கிராமத்தயும் இழந்து மூடிய சிறையாக வைத்திருக்கின்றோம். அதற்குள்ளேயே துணிந்து கால் வைப்பதென்றால் .... என்ன தான் நான் பெரிய மஹாராஜாவாக இருந்தாலும் என் நெஞ்சு படக் படக் என்று அடிப்பதை கேட்டும் அறியாவிட்டால்... பின்னர் நீர் படப் போகின்ற பாட்டை இப்போதே என் மனக் கண்ணில் பார்த்து ... "இடுக்கண் வருங்கால் நகுக" என்ற வள்ளுவனின் வாக்கை சொல்வதற்காக ஆயத்தப் படுத்தி வைத்திருக்கின்றேன்.. "என்றேன்.

என் மதி வீங்கின மந்திரியும் படக் கென்று பாய்ந்து பெரியதொரு இரும்புக் கவசத்துள் பதுங்கிக் கொண்டார்...

கூடவே சில பல வேட்டைநாய்களையும் கூடவே அழைத்துக் கொண்டு வைத்திய சிகாமணி மதனைப் பார்க்கப் புறப்பட்டோம்.

" ஏன் வேட்டை நாய்கள் " என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கின்றது... அதனால் சொல்லிவிடுகின்றேன்.." .அங்கே இருப்பவர்கள் முட்டாள் பைத்தியங்கள்.... அவர்கள் பாய்ந்து எங்களைப் புடுங்க முற்பட்டால் ..... வெறிநாய்களுக்கு வெறிநாய்கள் சமனாகி விடுமல்லவா? இந்த இடத்தில் நியூட்டனின் மூன்றாவது விதி ....ஒவ்வொரு தாக்கத்துக்கும் அதற்குச் சமனானதும் எதிரானதுமான மறுதாக்கத்தைக் கொண்டிருக்கின்றது.... என்று கூறுவதை உங்களுக்கு நினைவு கூருகின்றேன்..."

வைத்திய சிகாமணி மதனைப் பார்த்ததுமே நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டோம்... மூக்கில் இரண்டு சிறு ஓட்டைகளை விட்டு விட்டு மற்ற எல்லா வழிகளையும் இரும்புக் கவசத்தில் பூட்டிக் கொண்டோம்.... வாயுக்கும் காதிற்கும் இரண்டு இரும்பிக் குழலைப் பூட்டிக் கொண்டோம் ஒன்று கதைப்பதற்கு ...மற்றையது கேட்பதற்கு..... இரும்புக் குழலைப் பைத்தியங்கள் கடித்தாலும் காது கடிபட முன்னர் தப்பித்து ஓடி விடலாம் என்று ஒரு அசட்டுத் துணிபுடன் அவர்களை நெருங்கினோம்.

கிழிந்து தொங்கிய ஆடைகளுடன் மதன் தலையைச் சொரிந்து கொண்டு... இடையிடையே வில்லங்கமான ஹி... ஹி... சிரிப்புடன் கொப்புக்கு கொப்புத் தாவிக்குதிக்கும் நம் மூதைதையர் போல ஒரு கெட்டப்புடன் நம்மை பலமாக வரவேற்றார்.....

மந்திரியின் கைகால்கள் உதறலெடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் இரும்புக்கவசங்கள் கடகட வெடவெட வென்று அடித்துக் கொண்டது எனக்குக் கேட்டது. எனக்கும் சிறு நீர் வருவதைப் போல ஒரு பீலிங்.... எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு...

நமது சிங்கக் குரலில் (குரலும் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும் செருமல்க் குரல் தான் வெளியில்க் கேட்டது)

" என்ன பைத்திய சிகாமணி " என்று வாய் தடுமாறி வந்த வார்த்தைகளை அடித்துத் திருத்தி வைத்திய சிகாமணியாக்கி விட்டு பின்னதைத் தொடர்ந்து ..." .மதன் மாதம் மும்மாரி பொழிகின்றதா " என்று கேட்டேன் பழக்க தோசத்தில்.....

மந்திரி தன் உருட்டுக் கண்ணை உருட்டி விட அது குளாயின் வழி வந்து பூதாகரமாகி என்னை முழித்தது.... தவறை உணர்ந்து எறேஸ் பண்ணி மீண்டும் ஆரம்பித்தேன்...

"என்ன வைத்திய சிகாமணி மதன் உமது பைத்தியங்கள்...." மீண்டும் நாக்கு தடுமாறி என்னைக் காட்டிக் கொடுக்க தடங்கலுக்கு வருந்துகின்றோம் சிலைடை போட்டுக் காட்டி விட்டுத் தொடர்ந்தேன்...

" என்ன வைத்திய சிகாமணி உங்கள் வைத்தியங்கள் எப்படியிருக்கின்றது " என்றேன்....

" மன்னர் மன்னா முந்தியிருந்ததை விட இப்போ நான் எங்கே..ய்ய்...யோ போய்ட்டேன் "..என்றவர் பல்லை நற நறத்து விட்டு..."..இவர்கள் இப்போ நன்கு மாறி விட்டார்கள் .. என்னையும் தங்களில் ஒருவனாகச் சேர்த்துக் கொண்டு விட்டார்கள்.... " என்று விட்டு கிழிந்து தொங்கிய ஆடைகளைப் பார்த்துப் பெரு மூச்சு விட்டார்.....

அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிக்கிலி மூட்டி சிரிப்பை வரவழைக்க பொங்கி வந்த சிரிப்பை மறு பக்கம் திரும்பி அடக்கிக் கொள்ள முயற்சிக்க மந்திரியோ நிலத்தில் விழுந்து புரண்டு புரண்டு சிரித்தார்.(பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு கரிப்பானைக்குள் தலையைக் கொடுத்தபின் விஜய் சிரித்த சிரிப்பை பின்னணியில் நினைத்துக் கொண்டு கதையைப் படிக்கவும்)

நிலமையின் தீவிரத்தை அடக்க " மந்திரி... " என்று சிங்கக் குரலில் செருமினேன். மந்திரியும் எழுந்து நின்று "தடக்கி விட்டது... " என்று இழுத்தபடி தலையைச் சொரிந்தார்..

வைத்திய சிகாமணி மதனும் " தடக்கும்... தடக்கும் " என்று மீண்டும் பல்லை நெறுமி முறுக்கி விட்டு தன் சகாக்களின் முன்னேற்றத்தக் காட்ட அனை வரையும் ஆளுக்கொரு சைக்கிளில் ஏற்றி விட்டார்.

ஏற்றி விட்டவர் என்னை ஒரு (இகழ்ச்சியுடன்?= இன்று வரை விடை தெரியாது நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கின்றது ) பார்வை பார்த்து விட்டு " எல்லாள மஹாராஜாவின் சைக்கிள் படையில் நீங்கள் தான் முன்னணி (கிழிஞ்சிது போ) வீரர்கள் ..... எங்கே சைக்கிள் விட்டுக் காட்டுங்கள் " ( கதை விடுகிறாயா வைத்தி ..இரு இரு உன்னைக் கவனிக்கின்றேன் என்று... நெறுமுவது இப்போது நான் தான்) என்று கூறவும்...

எல்லாப் பைத்தியங்களும் சா... முன்னணி வீரர்களும் சைக்கிளை உழக்கோ உழக்கென்று உழக்க (ஸ்ராண்ட்டில சைக்கிள் நிக்குது .... ஹா..ஹா...) ஒன்று மட்டும் உழக்காது சும்மா இருந்தது.... சரிதான் வந்ததுக்கு ஒன்றாவது தேறியதே என்று அழகப்புளகாங்கிதமாகி மந்திரிக்குக் கண்ணைக் காட்டினேன்.....

மந்திரியும் உடனே வைத்தியச் சிகாமணியின் கவனத்துக்குக் கொண்டு வர சிகாமணியும் இறக்கத்தில போகுது எண்டு சொல்லப் போறானாக்கும் என்று பழைய பகிடியை நினைவுக்குக் கொண்டு வந்தவராக அவனைக் காரணம் கேட்டார்.

அவனும் " பெற்றோலில ஓடுற சைக்கிள் தெரியாதோ உனக்கு முட்டாள் " எண்டு பல்லை நற நற வெண்டு கடிக்க வைத்திய சிகாமணி மதனும் இன்னும் இரண்டு துண்டைக் கிழித்து கிழிஞ்ச கோவணத்து ஆண்டியாகி முருகா முருகா என்று ஹெல் மெட்டுக் கொன்ஸ்ரக்ஷன் வேலையாளை கூப்பிட்டுக் கதற மந்திரி பிரதானியோ "எந்திரி " என்று வேட்டை நாய்களைப் பிடித்து இழு இழு என்று இழுத்து தன் கோபத்தைக் காட்டி "பிச்சுப்பிடுவேன் பிச்சு ..." ஆதிவாசியானார்.

நல்ல வேளை பிடித்திழுப்பதற்கு அதாவது அவருக்குக்குக் கிடைத்ததே..... இல்லையென்றால் தலை மயிரையெல்லாம் பிடித்திழுத்திருந்தால் நான் ஒரு மந்திரியை இழந்து விட வைத்திய சிகாமணி ஒரு மந்தியைப் பெற்றிருப்பார்...

சொல்லாமல்க் கொள்ளாமல் பொடி நடையாக நடந்து வந்து சேர்ந்தது ஒரு தனிக் கதை....

வரும் முன் எனது முந்திய ஜோக்கிற்கு பதில் சொல்லி வந்த பரிசினையும் வள்ளல்லிய( வள்ளலாக வாரி வழங்கிய) வைத்திய சிகாமணி மதனுக்கு (வை யன்னாவிற்குப் பதிலாக பை யன்னாவை யாராவது மாத்திப் போட்டு வாசித்தால் நான் பொறுப்பல்ல) பரிசாக வழங்கி விட்டே வந்தேன்.

இவ்வளவு கொடை மதனுக்குக் கொடுத்த நான் கொடை வள்ளல் மஹாராஜா தானே......( நமுட்டுச் சிரிப்பு சிரிக்கின்றேன் ..யாரும் கண்டு கொள்ள வேண்டாம்..)

அந்தக் கதையைத் திரைப்படமாக்கும் நோக்கில் வைத்தியசிகாமணி மதன் தொழில்( ? ) நுட்பக் கலைஞர்களைத் தேடுவதாக அறிகின்றேன்.

யாழ் களத்தின் மற்றொரு பகுதியில் திரைப் படம் எடுக்கும் நோக்கில் சிலர் தங்களுக்குத் தாங்களே அரிதாரம் பூசிக் கொண்டு அடிதடிப் படுவதாக உத்தியோகப் பற்றற்ற வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன...

விடயமறிந்தவர்கள் தொடர்பு படுத்தி விடவும்.... :o:o:o

www.yarl.com/forum3/viewtopic.php?t=112068postdays=08postorder=asc&&start=105

தப்பிப் பிழைத்து வந்திருக்கும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அவனும் " பெற்றோலில ஓடுற சைக்கிள் தெரியாதோ உனக்கு முட்டாள் " எண்டு பல்லை நற நற வெண்டு கடிக்க வைத்திய சிகாமணி மதனும் இன்னும் இரண்டு துண்டைக் கிழித்து கிழிஞ்ச கோவணத்து ஆண்டியாகி முருகா முருகா என்று ஹெல் மெட்டுக் கொன்ஸ்ரக்ஷன் வேலையாளை கூப்பிட்டுக் கதற மந்திரி பிரதானியோ "எந்திரி " என்று வேட்டை நாய்களைப் பிடித்து இழு இழு என்று இழுத்து தன் கோபத்தைக் காட்டி " பிச்சுப்புடுவேன் பிச்சு .." ஆதிவாசியானார்.

நல்ல வேளை பிடித்திழுப்பதற்கு அதாவது அவருக்குக்குக் கிடைத்ததே..... இல்லையென்றால் தலை மயிரையெல்லாம் பிடித்திழுத்திருந்தால் நான் ஒரு மந்திரியை இழந்து விட வைத்திய சிகாமணி ஒரு மந்தியைப் பெற்றிருப்பார்...

சொல்லாமல்க் கொள்ளாமல் பொடி நடையாக நடந்து வந்து சேர்ந்தது ஒரு தனிக் கதை....

வரும் முன் எனது முந்திய ஜோக்கிற்கு பதில் சொல்லி வந்த பரிசினையும் வள்ளல்லிய( வள்ளலாக வாரி வழங்கிய) வைத்திய சிகாமணி மதனுக்கு (வை யன்னாவிற்குப் பதிலாக பை யன்னாவை யாராவது மாத்திப் போட்டு வாசித்தால் நான் பொறுப்பல்ல) பரிசாக வழங்கி விட்டே வந்தேன்.

இவ்வளவு கொடை மதனுக்குக் கொடுத்த நான் கொடை வள்ளல் மஹாராஜா தானே......( நமுட்டுச் சிரிப்பு சிரிக்கின்றேன் ..யாரும் கண்டு கொள்ள வேண்டாம்..)

அந்தக் கதையைத் திரைப்படமாக்கும் நோக்கில் வைத்தியசிகாமணி மதன் தொழில்( ? ) நுட்பக் கலைஞர்களைத் தேடுவதாக அறிகின்றேன்.

யாழ் களத்தின் மற்றொரு பகுதியில் திரைப் படம் எடுக்கும் நோக்கில் சிலர் தங்களுக்குத் தாங்களே அரிதாரம் பூசிக் கொண்டு அடிதடிப் படுவதாக உத்தியோகப் பற்றற்ற வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன...

விடயமறிந்தவர்கள் தொடர்பு படுத்தி விடவும்.... :o:o:o

www.yarl.com/forum3/viewtopic.php?t=112068postdays=08postorder=asc&&start=105

தப்பிப் பிழைத்து வந்திருக்கும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

what do you call a cow with no legs? ஆங்கிலத்தில் கேள்வி இருக்கின்றது. பதிலும் ஆங்கிலத்திலேயே வரும் .

கடியாக :roll: :roll: நல்ல நகைச் சுவையாக இருக்கும் .

சரியான பதில் சொல்பவருக்கு "அந்த காலில்லாத பசு" பரிசளிக்கப் படும் :?: :?:

பரிசுடன் காத்திருக்கும் :!: :!:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

உனது நண்பன் கார் விபத்தில் இடது கையையும் காலையும் இழந்தானே இப்போ எப்படி இருக்கின்றான்?

என்ன பதில் சொன்னால் நகைச்சுவையாக :!: :!: இருக்கும்?

சரியான பதில் சொல்பவருக்கு ஒரு "ஷொட்டு" :roll: :roll: :roll: காத்திருக்கின்றது.

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:P :P :P யோவ்! எல்ஸ்....

உமக்கு தெரியவில்லையென்றால்....

வாயைமூடிக் கொண்டு இருக்கவேண்டியதுதானே!

8) 8) 8) 8) 8) 8)

வால் நீண்ட வனமனிதன்.

Link to comment
Share on other sites

:P :P :P யோவ்! எல்ஸ்....

உமக்கு தெரியவில்லையென்றால்....

வாயைமூடிக் கொண்டு இருக்கவேண்டியதுதானே!

8) 8) 8) 8) 8) 8)

வால் நீண்ட வனமனிதன்.

ஆதி ! எனக்குத் தெரிந்தபடியால்தானே கேட்டிருந்தேன்.

இப்போ "வால் சூப் " :(:lol: பும் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவதாக கேள்வி.... :D:D:D:D

வாலை அடக்க ஒடுக்கமாக வைத்திருந்தால் நல்லது :lol::lol::lol: உமக்குத்தான்.

நீர் காட்டில "காலில்லாத பசு " சாப்பிட இல்லையா?

" Ground beef " எங்கே மற்றதற்கென்றாலும் உமது சின்ன மூளையைப் :D :shock: :):( 8) :lol::o பாவித்து பதில் சொல்லும் பார்ப்போம்.

என்ன அலிகாப் பொண்ணு கடுப்படிச்சுக்கொண்டு திரிகின்றா? :lol::lol::lol:

மற்ற இடங்களில் உம்மைக் காணவில்லை.....(நாகரீகம் காணாதோ ? :lol::lol::lol: உள்ளே வர...

உம்மட பிரெண்ட் முருகன் இன்னும் ரெபூஜியாகவா :lol::lol: :shock: :shock: திரிகின்றார். ஒரு வெயார்ஹவுஸை வாடகைக்குப் பிடித்து உட்கார்த்தி வைப்பது தானே.....சேவைக்குச் சேவையுமாச்சு :?: :?: :?: பணத்துக்குப் பணமுமாச்சு :lol::lol::lol:

கடுப்பைப் பார்த்து சிரிக்கும்

-எல்லாள மஹாராஜ-l

Link to comment
Share on other sites

உனது நண்பன் கார் விபத்தில் இடது கையையும் காலையும் இழந்தானே இப்போ எப்படி இருக்கின்றான்?

வலதுபக்கமா இருக்கிறாம்பா!!!!!!!!!

8) 8) 8) 8) 8) 8) 8) 8)

ஆதிவாசி சொன்னா அத்தனையும் சரி

நோ ஆதிவாசி .... அத்தனையும் பிழை :(:lol::lol:

He is all right என்று சொன்னால் தான் சரி :lol::lol::lol::lol:

ஆல் றைற் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

படம் பார்க்கப் போவதென்றால் சர்தாஜிகள் பதினெட்டுப் பேர் ஒன்றாகச் சேர்ந்து தான் போகின்றார்கள். :oops: :oops:

என்ன காரணமாக இருக்கும்? :lol::lol::lol:

தெரிந்தால் வந்து சொல்லுங்களேன்.

விடை தேடும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நைன் பிளஸ் நைன் 18 தானே அது தான் அப்படி போகினமோ.....

ஆழ்ந்த சிந்தனைக்கு பின் விடை செப்பும்-புத்தன்

Link to comment
Share on other sites

நைன் பிளஸ் நைன் 18 தானே அது தான் அப்படி போகினமோ.....

ஆழ்ந்த சிந்தனைக்கு பின் விடை செப்பும்-புத்தன்

புத்தன் இன்னும் வயசுக்கு வரல்லியோ..... :lol::lol::lol::lol::D:D:D

சந்தேஹத்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • 1 month later...

18க்கு(வயதுக்கு) கீழ் அனுமதிக்கப்படமாட்டாது என்பதை பிழையாக விளங்கியிருப்பார்கள். அதனால் 18 பேர் ஒன்றாக போகிறர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.