Archived

This topic is now archived and is closed to further replies.

akootha

ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை!

Recommended Posts

[size=4][size=5]ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை![/size]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல[/size]

[size=4]்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.[/size]

[size=4]உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்...[/size]

[size=4]என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.[/size]

[size=4]அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? [/size]

[size=4]யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி.

இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’[/size]

[size=4]சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’[/size]

[size=4]அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

[size=5]இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன்.[/size] அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.

என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’[/size]

[size=4]சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.[/size]

[size=4]நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’[/size]

[size=4]சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?

ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.[/size]

[size=4]மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.

எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. [/size]

[size=4]பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.[/size]

[size=4]ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!

நன்றி – சூரியகதிர்[/size]

[size=4][/size]

Share this post


Link to post
Share on other sites

[size=4]மாவீரர் நாளுக்கு முன்பாக வரும் நவம்பர் 23-ம் தேதி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கத்தில் இந்த புத்தக வெளியீட்டுவிழா நடத்த உறதி செய்யப்பட்டிருக்கிறது. பழ. நெடுமாறன் வைகோ சீமான் திருமாவளவன் ஜவாகிருல்லாஹ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். முக்கிய தலைவர்களின் விரிவான அனிந்துரையில் இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டிய விளம்பரம்தான் இந்த புத்தகம். விரிவான அனிந்துரைகள் புத்தகத்தில் இருக்கும்.[/size]

[size=4]

Book-advt-724x1024.jpg[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110864

=======================================================================================================

[size=5]பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் எழுதியிருக்கமாட்டேன்!’[/size]

978-81-8493-311-6_b.jpg

[size=4][size=2][size=4]பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவர்கே. ரகோத்தமன். பிரபாகரன் மரணம் வரை ஒரு சந்தர்ப்பத்தில்கூட வாய் திறக்காதிருந்த இவர், ராஜிவ் படுகொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் (வெளியீடு: கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தின்மூலம் பல அதிர்ச்சிகரமான செய்திகளை முதல் முறையாக வெளியிட்டிருக்கிறார்.[/size][/size][/size]

[size=4][size=2][size=4]விடுதலைப் புலிகள் தங்களுக்குள் எழுதிக்கொண்ட பல கடிதங்களை ஆதாரங்களாக முன்வைக்கும் இந்நூல், பல தமிழக அரசியல்வாதிகள், இந்திய உளவுத்துறை அதிகாரிகள், சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் என்று பலர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது குறித்து ஆர். முத்துக்குமார் ரகோத்தமனிடம் மேற்கொண்ட உரையாடலின் ஒரு பகுதி குமுதம் ரிப்போர்ட்டரில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அவசியம் கருதி முழுவடிவம் இப்போது உங்களுக்காக.[/size][/size][/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110653

Share this post


Link to post
Share on other sites

[size=4]யார் அந்த பெண் ? எங்கே அவர் ??[/size]

[size=4]

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.
[/size]

Share this post


Link to post
Share on other sites

பிறகு ஏனாம் ஈழ தமிழரை கருவறுத்தவையாம் இவங்களின் விளையாட்டுக்கு நாம் ஏன் பலியாகவேண்டும் ?

Share this post


Link to post
Share on other sites

 • ராஜீவ் கொலையானபோது, அப்போது தமிழகத்தில் இருந்த இயக்கத்தினருக்கே தெரியாமல் இருந்தது. இரகசிய காப்பு என்று பேசிக் கொண்டார்கள்..! இத‌னால் ப‌ல‌ இய‌க்க‌ உறுப்பின‌ர்க‌ள் தேவையில்லாது உயிர் துற‌க்க‌ நேரிட்ட‌து. இது உண்மையிலேயே அதீத‌ இர‌க‌சிய‌ காப்பா அல்ல‌து த‌லைமைக்கே தெரியாத‌ விளையாட்டா?

 • ஹரிபாபு இறந்துபோக, அவரது கமராவும், படச்சுருளும் மட்டும் தப்பியது எப்படி?

 • காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவுடன் செல்லாமல் ஒதுங்கி நின்றது ஏன்?

 • கொலை நடந்தவுடன், புலிகளை மையப்படுத்தி ஒற்றை நோக்குடன் எவ்வாறு விசாரணையைத் தொடங்கினார்கள்?

 • கொலைக்குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பின்னாட்களில் புலிகள் தலைமைக்கு ஏன் அழுத்தங்களைக் கொடுத்தார்கள்?

 • புலிகள் செய்த இரகசிய நடவடிக்கைகளுக்கு அவர்கள் உரிமை கோர மாட்டார்கள். அதே சமயத்தில் அவற்றை மறுக்கவும் மாட்டார்கள். ராஜீவ் கொலை விடயத்தில் லண்டனில் இருந்து கிட்டண்ணா மறுப்பறிக்கை வெளியிட்டார். ஏன்?

 • கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் புலிகளின் தலைமையுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றால் சென்னையின் கரையோரப் பகுதிகளில் இருந்து படகு மூலம் வெளியேறி ஈழத்திற்குச் இருப்பார்களா அல்லது பெங்களூருக்குப் போவார்களா?

 • மாத்தையாவின் பங்கு இதில் என்னவாக இருந்திருக்கும்?

 • கொலையை தமிழகத்தில் செய்ய வேண்டிய தேவை என்ன? புலிகளின் தலைமையால் திட்டமிடப்பட்டதாக‌ இருந்தால் வேறு மாநிலத்தில் செய்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இவை ஒரு சில கேள்விகள்தான்.. :D

Share this post


Link to post
Share on other sites

மேலும் சில..

 • லண்டனில் இருந்து திரும்பிய கிட்டண்ணாவை ஏன் கடலில் காவியமாக்கினார்கள்?

 • ராஜீவ் கொலைக்குப் பின்னர் இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போனதெப்படி?

 • ஐ எம் எஃப் இல் இருந்த மன்மோகன் சிங் ஏன் நிதியமைச்சராகக் கொண்டு வரப்பட்டார்?

 • ஐ எம் எஃப் இன் கோரிக்கைகளை ஏற்று ஏன் இந்தியாவின் மூடிய பொருளாதாரம் திறந்த பொருளாதாரம் ஆக்கப்பட்டது? இதனால் நன்மையடைந்தவர்கள் யார்? (இன்றைய காலகட்டத்தை வைத்து சிந்திக்கவும்.)

 • என்ன நடந்தாலும் சிங் பிரதமராக இருக்கும் சூட்சுமம் என்ன?

:rolleyes:

Share this post


Link to post
Share on other sites

"ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாமள் சொன்னால் பாவம்"

நிச்சயமாக தலைவருக்கும் கொலைக்கும் தொடர்பில்லை. சொல்லப்பட்டது அண்ணர் சொல்லுறார் என, சொல்லியவர் இன்னொருவர் விசுவாசி.

சொல்லியது குண்டுசாந்தன் அவருக்குக் கிடைத்த பரிசு மரணம்.

Share this post


Link to post
Share on other sites

முக்கிய ஒரு கேள்வி!!!!

செய்யாத குற்றத்துக்காக ஒரு இனத்தையே அழிக்க போகிறார்கள் என்று தெரிந்தும் ஏன் பொதி சுமந்தார்கள்?

Share this post


Link to post
Share on other sites

நெடுமாறன் ,சீமான் உரைகளுடன் ?.இப்போ புத்தக வியாபாரமும் களை கட்டுவதாக கேள்வி .நெடுமாறன் எழுதிய புத்தகம் எழுநூறு ரூபாய் .

விடிஞ்ச மாதிரித்தான் .

Share this post


Link to post
Share on other sites

முக்கிய ஒரு கேள்வி!!!!

செய்யாத குற்றத்துக்காக ஒரு இனத்தையே அழிக்க போகிறார்கள் என்று தெரிந்தும் ஏன் பொதி சுமந்தார்கள்?

[size=4]நல்ல கேள்வி.எல்லாம் பலம் பொருந்தியவர்களால் பலமில்லாதவர்கள் மீது திணிக்கப்பட்டது ஆக இருக்கலாம். [/size]

Share this post


Link to post
Share on other sites

[size=4]நல்ல கேள்வி.எல்லாம் பலம் பொருந்தியவர்களால் பலமில்லாதவர்கள் மீது திணிக்கப்பட்டது ஆக இருக்கலாம். [/size]

உந்த உலகத்தையே சுற்றி கடலில் சொந்த முயற்சியில் ஆயுதம் கொண்டுவந்தவர்கள் செய்யாத குற்றத்தை செய்யவில்லை என்று சரிவர முக்கியமானவர்களுக்கு எடுத்துச் செல்லமுடியவில்லையா?

அப்போ ஏன் பாலசிங்கம் அண்ணை அப்படி ஒரு பேட்டி கொடுத்தவர்?

Share this post


Link to post
Share on other sites

உந்த உலகத்தையே சுற்றி கடலில் சொந்த முயற்சியில் ஆயுதம் கொண்டுவந்தவர்கள் செய்யாத குற்றத்தை செய்யவில்லை என்று சரிவர முக்கியமானவர்களுக்கு எடுத்துச் செல்லமுடியவில்லையா?

அப்போ ஏன் பாலசிங்கம் அண்ணை அப்படி ஒரு பேட்டி கொடுத்தவர்?

[size=4]எனக்கு புரிந்தளவில் கொலைகாரர்கள் தமிழர்களை அழிப்பதை குறியாக கொண்டிருந்தனர். அவர்கள் எம்மவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அணுகவோ இல்லை விளங்கவைக்கவோ விடவில்லை.[/size]

[size=1]

[size=4]பாலசிங்கம் அண்ணை அந்த இக்கட்டான நிலையை தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்பினார். ஆனால் கை தட்ட ஒரு கைகள் தேவை. ஒன்று மட்டுமே இருந்தது. [/size][/size]

Share this post


Link to post
Share on other sites

உந்த உலகத்தையே சுற்றி கடலில் சொந்த முயற்சியில் ஆயுதம் கொண்டுவந்தவர்கள் செய்யாத குற்றத்தை செய்யவில்லை என்று சரிவர முக்கியமானவர்களுக்கு எடுத்துச் செல்லமுடியவில்லையா?

யாருக்கு எடுத்துச் சொல்லுவது? :rolleyes:

அப்போ ஏன் பாலசிங்கம் அண்ணை அப்படி ஒரு பேட்டி கொடுத்தவர்?

இயக்கத்தில் இருந்த சிலரை உபயோகித்து இதைச் செய்வித்திருந்தால்..? :rolleyes: யார் பொறுப்புக் கூறுவது?

எங்கள் வீட்டுப் பிள்ளை பக்கத்து வீட்டுக்கு கல்லெறிந்து விட்டால், அது நானில்லை என்று சொல்லி தப்பிக்க முடியுமா? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

[size=4]எனக்கு புரிந்தளவில் கொலைகாரர்கள் தமிழர்களை அழிப்பதை குறியாக கொண்டிருந்தனர். அவர்கள் எம்மவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அணுகவோ இல்லை விளங்கவைக்கவோ விடவில்லை.[/size]

[size=1][size=4]பாலசிங்கம் அண்ணை அந்த இக்கட்டான நிலையை தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்பினார். ஆனால் கை தட்ட ஒரு கைகள் தேவை. ஒன்று மட்டுமே இருந்தது. [/size][/size]

புலிகளை அழிப்பதுக்காக தான் ராஜீவை கொன்றார்கள் என்றதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

புலிகள் செய்யவில்லை என்றால் ராஜீவை வேறு காரணத்துக்காக யாரோ கொன்று இருக்கிறார்கள்.

ஆனால் மிக திறமையான இயக்காமாக இருந்ததாக சொல்லப்பட்ட இயக்கம் ஒன்றினால் தான் செய்யாத மாபெரும் ஒரு படுகொலையை சொந்த மக்களில் இருந்து கொலையாளினின் மனைவி பிள்ளைகளையும் நம்ப்ப வைக்க முடியவில்லையே.,.................

Share this post


Link to post
Share on other sites

யாருக்கு எடுத்துச் சொல்லுவது? :rolleyes:

இயக்கத்தில் இருந்த சிலரை உபயோகித்து இதைச் செய்வித்திருந்தால்..? :rolleyes: யார் பொறுப்புக் கூறுவது?

எங்கள் வீட்டுப் பிள்ளை பக்கத்து வீட்டுக்கு கல்லெறிந்து விட்டால், அது நானில்லை என்று சொல்லி தப்பிக்க முடியுமா? :rolleyes:

யாழில் இருந்து முஸ்லிமை வெளியேற்றியதில் இருந்து ராஜீவ் படுகொலைவரை முக்கிய தவறுகள் அனைத்தும் இயக்கத்தில் இருந்தவர்களால செய்யப்பட்டது தலைமைக்கு தெரியாது......

என்ன புலிகள் என்ன புளோட்டா இல்லை வேறு இயக்கமா ஆளுக்கு ஆள் முடிவு எடுத்து செயற்பட..............

உங்கள் கருத்தின் படி மாடுகள் வயலில் மேய்ந்தால் மாடுமேய்ப்பவனின் தவறு என்பதை ஏற்றுக் கொண்டு வேர மாடு மேய்ப்பவை நியமித்து இருக்க வேண்டும்............

உந்த ராஜீவ் கொலை பற்ரி தொடர்ந்து பேச விரும்ப்பவில்லை./

தலைவர் தான் தான் செய்தனான் என்று ஏற்றுக் கொண்டாலும் இந்தியாவில் இப்படியான புத்தகம் எழுதிக் கொண்டு தான் இருப்பார்கள். அதிலையும் புலிகளை மீறிய சக்தி ஒன்று இருக்கு அது தான் ராஜீவை கொன்றார்கள் என்று சொல்லுவார்கள்.

Share this post


Link to post
Share on other sites

புலிகளை அழிப்பதுக்காக தான் ராஜீவை கொன்றார்கள் என்றதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

புலிகள் செய்யவில்லை என்றால் ராஜீவை வேறு காரணத்துக்காக யாரோ கொன்று இருக்கிறார்கள்.

ஆனால் மிக திறமையான இயக்காமாக இருந்ததாக சொல்லப்பட்ட இயக்கம் ஒன்றினால் தான் செய்யாத மாபெரும் ஒரு படுகொலையை சொந்த மக்களில் இருந்து கொலையாளினின் மனைவி பிள்ளைகளையும் நம்ப்ப வைக்க முடியவில்லையே.,.................

[size=4]இராஜீவை கொன்றவர்கள் கொன்றதற்கு வேறு காரணம் உள்ளது. அது இந்திய பொருளாதார வளர்ச்சி இல்லை தனிப்பட்ட ஊழல் (போர்ப்ஸ்) விவகாரமாக இருக்கலாம். [/size]

[size=1]

[size=4]ஆனால் கொன்றவர்களுக்கு அதை யாரின் தலையிலாவது கட்டவேண்டிய தேவையும் இருந்தது. அதை இலாவகமாக புலிகள் தலை மீது வெற்றிகரமாக கட்டிவிட்டனர். [/size][/size]

Share this post


Link to post
Share on other sites

இந்த விடயத்தில் நாம் நடிக்கின்றோம் அல்லது புலிகளை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றோம் .

முழு உலகிற்கும் உண்மை தெரியும் எனவே நடிப்பு எடுபடாது .

அமிர்தலிங்கத்தின் கொலையையும் முதலில் உரிமை கோரவில்லை ,பின்னர் உண்மை வெளிவர ஒப்புக்கொண்டார்கள் .

Share this post


Link to post
Share on other sites

இந்த விடயத்தில் நாம் நடிக்கின்றோம் அல்லது புலிகளை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றோம் .

முழு உலகிற்கும் உண்மை தெரியும் எனவே நடிப்பு எடுபடாது.

[size=4]ஒன்றில் நீங்கள் இல்லை [/size] [size=4]திருச்சி வேலுசாமி கூறுவது பொய் :D[/size]

Share this post


Link to post
Share on other sites

நெடுமாறன் ,சீமான் உரைகளுடன் ?.இப்போ புத்தக வியாபாரமும் களை கட்டுவதாக கேள்வி .நெடுமாறன் எழுதிய புத்தகம் எழுநூறு ரூபாய் .

விடிஞ்ச மாதிரித்தான் .

[size=3]ஏன் ராசீவ்காந்தி உயிர் மட்டும்தான் உயிர், ஈழத்தமிழ்மக்களது உயிர் என்ன வெறும் மயிரோ??? ராசீவ் இரு எண்டால் இருக்கவும், படு எண்டால் படுக்கவும், அடி எண்டால் அடிக்கவும்நாங்கள் என்ன இந்தியாவிலா இருந்தோம். இல்லை இந்தியாவிற்க்காவா போராடினோம். புளட்டுக்கு ஈழத்தை பிடிப்பதை விட்டு யார் மாலதீவை பிடிக்கச் சொன்னது. அதுக்காகவா தங்கள் பிள்ளைகளை பெற்றோர் போராட்டத்துக்கு அனுப்பினர். தனது மண்ணுக்கும் , மானத்துக்கும் , இருப்பிற்கும் அச்சுறுத்தல் வரும் போது எந்த மானமுள்ள உயிரும் போராடத்தான் சசெய்யும். அதைதான் புலிகளும் இந்திய ராணுவத்திற்காகவும், ராசிவ்விற்காகவும் செய்தனர். ராசிவை கொன்றது புலிகளை அழிக்கவும், ஈழப்போராட்டத்தை தன் வசப் படுத்தவும் இந்தியாவிற்கு ஒருநொண்டி சாட்டு. ராசிவ் மட்டும் பெரிய உத்தமரோ. போராட்டம் தோற்றால் தலைமையும், தலைவனையும் தூற்றுவது என்றால் , வெள்ளையனை எதிர்த்து வெல்லமுடியாது என்று தெரிந்த்தும், அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கான இளையர் உயிர்களை போராட்டத்துக் அழைத்து அழிக்க காரணமான சங்கிலியன், பண்டாரவன்னியன் , கட்டபொம்மன் எல்லரையும் ஏன் தூற்றாமல் விட்டீர்கள்: போராடும்போது ஒன்று சேர்ந்து , ஒருமித்து, தோள்கொடுத்து போராடாமல், குழிபறித்து, கொன்றழித்து விட்டு, இப்போது ஏன் குய்யோ, மாய்யொ என்று கத்தி, முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள்[/size]

Share this post


Link to post
Share on other sites

கொலைகாரன் சாகடிக்கபட்டால் தண்டனை, அது கொடுமை அல்ல.

இராஜீவின் குடும்பம் அழிக்கபட்டதிற்கு பின்னால் இத்தாலிய மருமகளும் இருக்கிறார்.

இத்தாலிய மருமகளுக்கு பெரிய குழுக்களுடன் தொடர்பு. 

Share this post


Link to post
Share on other sites

இந்த விடயத்தில் நாம் நடிக்கின்றோம் அல்லது புலிகளை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றோம் .

முழு உலகிற்கும் உண்மை தெரியும் எனவே நடிப்பு எடுபடாது .

அமிர்தலிங்கத்தின் கொலையையும் முதலில் உரிமை கோரவில்லை ,பின்னர் உண்மை வெளிவர ஒப்புக்கொண்டார்கள் .

[size=3]புலிகள் யாரையும் குற்றமின்றி தண்டிக்கவில்லை. இந்திய- சிறிலங்கா சொம்பு தூக்கிகளிற்கு தண்டனை வழங்கியது நீதியே தவிர அராஜகம் இல்லை.[/size]

[size=3]ஆமாம். தமிழர் மட்டும் தான் எல்லா இழவையும் இப் பூமியில் விட்டுத் தொலைக்கணும் , ஆனால் தமிழர் மீது எல்லாரும் எல்லாக் “குப்பைகளையும்” கொட்டித் தொலைக்கணும்[/size]

[size=3]தென்னாசியாவின் ” தாதா , பேட்டை ரவுடி” ஆகிய இந்தியா, தமிழ்நாட்டிலும் , ஈழத்திலும் தமிழரை எழும்பவிடாமால் , சட்டங்களாலும், சினிமாவாலும் அடக்கியும் , மயக்கியும் வைத்திருக்கிறது. இன்னும் காலம் காலமாய் அப்படியே வைத்திருக்கிற முயல்கிறது. எங்கே தமிழர்கள் ஓன்றுபெற்ரு பலம் பெற்றுவிடுவார்களோ என்ற அச்சம்கலந்த பயத்தின் வெளிப்பாடே இந்த , இல்லாத புலிகளிற்க்கான தடை. தமிழரை அடக்கி ஒடுக்கி வைத்திடுப்பதற்கு இந்த ராஜிவ் கொலை இன்னும் பல காலத்திற்கு இந்தியாவிற்கு கை கொடுக்கும் எனநினைக்கலாம். இந்திரா காந்தியை கொன்றதிற்கு சீக்கியர்களுக்கு தடை விதித்தார்களா , அல்லது காந்தியைக் கொன்றதற்குகோட்சே சார்ந்த இந்துத்துவா கட்சிகளுக்கு தடை விதித்தார்களா? வங்க தேசத்தை பிரிக்கலாம், ஏன் ஈழத்தை பிரிக்கக் கூடாது.நீ பாலஸ்த்தீன சுயாட்சியை ஆதரிக்கிறாய், ஏன் ஈழ சுயாட்சியை ஆதரிக்க மாட்டேன் எந் கிறாய். அகிம்சை போராட்டத்தை ஆரபித்து வைத்தது இந்திய ( காந்தி) தேசம் எஙிறாய். ஆனால் அதெ அகிம்சை வழியில் திலீபன் செத்தானே உங்களால். காப்பாற்ற மனம் இல்லாமால் பார்த்துக்கொண்டுதானே னின்றாய். ஏன். இந்தக் கேள்வியை இந்தியாவை நோக்கி உலகமும் கேட் கவில்லை, கடவுளும் கேட் கிறார் இல்லை. இளிச்ச வாயார் தமிழர்நாம தான் திரும்பத்திரும்ப கேள்வி கேட்டுக்கிடே இருக்கோம்[/size]

Share this post


Link to post
Share on other sites

ராஜீவை புலிகள் கொன்று இருக்கா விட்டால் அது தமிழர்களுக்கே அவமானம்...ராஜீவை புலிகள் கொல்லவில்லை என இங்கே சொல்பவர்கள் இனி மேல் என்னத்தை சாதிக்கப் போயினமோ தெரியவில்லை[அவர்கள் புலிகளை அவமானப்படுத்துகிறார்கள்]...ராஜீவ் கொலையை காரணமாய் வைத்து தான் இந்தியா எம்மை அழித்தது என்பது எம்மை நாமே ஏமாற்றும் நாடகம்...உலக நாடுகள் தங்கட சுய நலத்திற்காய் தான் எங்களை அழித்தது...உலக நாடுகளது சூழ்ச்சிக்கும்,இராஜ தந்திரந்திற்கும் புலிகள் பலியாகி விட்டார்கள் என்பதே உண்மை

Share this post


Link to post
Share on other sites

ராஜீவை புலிகள் கொன்று இருக்கா விட்டால் அது தமிழர்களுக்கே அவமானம்...ராஜீவை புலிகள் கொல்லவில்லை என இங்கே சொல்பவர்கள் இனி மேல் என்னத்தை சாதிக்கப் போயினமோ தெரியவில்லை[அவர்கள் புலிகளை அவமானப்படுத்துகிறார்கள்]...ராஜீவ் கொலையை காரணமாய் வைத்து தான் இந்தியா எம்மை அழித்தது என்பது எம்மை நாமே ஏமாற்றும் நாடகம்...உலக நாடுகள் தங்கட சுய நலத்திற்காய் தான் எங்களை அழித்தது...உலக நாடுகளது சூழ்ச்சிக்கும்,இராஜ தந்திரந்திற்கும் புலிகள் பலியாகி விட்டார்கள் என்பதே உண்மை

இராஜதந்திர Space இல் இப்படியெல்லாம் சொல்லவேண்டி இருக்கிறது மை லார்ட்..! :D

Share this post


Link to post
Share on other sites