Jump to content

ஒரே பார்வையில் வரவு -செலவுத் திட்டம்

Recommended Posts

[size=1]

[size=4]யாழில் இல்லை. ஆனால் 50,000 காணும்.[/size][/size]

[size=1]

[size=4]சாதாரண ஒரு தொழிலாளிக்கு நாளுக்கு சம்பளம் யாழில் நாளுக்கு [/size][size=5]1000 Rs[/size][size=4]. [/size][size=4]மொத்தம் `[/size][size=5] 20,000 RS.[/size][/size][size=1]

[size=4]பெரும்பான்மை குடும்பங்கள் அடிப்படை வசதிக்கே துன்பப்படுகின்றன என எண்ணுகிறேன். [/size][/size]

Link to comment
Share on other sites

  • Replies 168
  • Created
  • Last Reply

நிச்சியமாக தும்ஸ் மனித உரிமை மீறல்களையும் அதிக அக்கறை எடுத்து இலங்கை செயல்பட்டால் கண்டிப்பா ஆசியாவின் அதிசியமா இலங்கை மாறும்

உண்மை சுண்டு. மனித உரிமைகள் பொருளாதாரம் இரண்டையும் கவனித்தால் நிச்சயம் ஆசியாவின் அதிசயம் தான்.

[size=4]எனது பல நண்பர்கள் வைத்தியர்ககளாக உள்ளனர். [/size]

[size=4]ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில். கடைசியாக போன பொழுது சந்தித்தேன். மதிப்பாக இருக்கின்றேன், ஆனால் உங்கள் பிள்ளைகளை போல பல வசதிகள் இல்லை என்றார், உதாரணத்திற்கு பலவேறு வகை கல்வி இல்லை விளையாட்டு வகைகள். அத்துடன் அங்கு பலரும் திறமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய ஊதியம் இல்லை என்றார் ( சராசரி வைத்தியர் சம்பளம் 35,000 ரூபாய்கள் ). தனது பிள்ளைகளை கூட புலம்பெயர் தேசம் அனுப்ப விரும்பினார். [/size]

[size=4]கனடா உட்பட பல நாடுகள் தற்பொழுது அகதிகளை குறைந்து இவ்வாறான படித்த கையில் பணமுள்ள குடிவரவாளர்களை வாங்குகிறது. அவர்களில் பலரும் இங்கே வந்து 'பிசா' விநியோகிப்பதும் இல்லை 'டாக்சி' ஓட்டுவதும் வேற கதை. [/size]

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. சராசரி வைத்தியர் சம்பளத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. தனியார் வைத்தியத்துறைகளிலும் வேலை செய்கிறார்கள். இங்கு பல வசதிகள் இருக்கு, திறமான வீடு, ஸ்போட்ஸ் கார் எல்லாம் இருக்கு. ஆனால் மனசில நிம்மதி இல்லை. வாரியத்துக்கு ஒருமுறை, ஒருமாசம் இலங்கை போகும் போது மட்டும் அந்த நிம்மதி ஏனோ வந்துவிடுகின்றது. இங்கே M3 ஓட்டுவதை விட, கொழும்பிலே ஒரு கொரோலா ஓட்டுவதை விரும்புபவன் நான். யாழ் மாவட்டத்தினுள் திறமையானவர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதற்கு இன்னும் பல வருடங்கள் செல்லலாம். தெற்குப் பகுதியிலே இந்த நிலைமை ஓரளவுக்கு இல்லை. என்னது நண்பர்கள் பலர் தெற்கிலே செற்றிலாகிவிட்டதட்கு இதுவும் முக்கிய காரணம். நானும் இலங்கையிலே சீவிக்கப் போனால் கொழும்பிலே சீவிக்க விரும்புகிறேனே ஒழிய ஊரிலே அல்ல.

Link to comment
Share on other sites

[size=5]இலங்கையின் கல்வி / வருமானம் / மருத்துவம் - ஒரு சுட்டி / ஆய்வு அறிக்கை [/size]

[size=5]http://hdrstats.undp.org/en/countries/profiles/LKA.html[/size]

[size=5]உலகிலே முதல் தரமான நகரமாக விளிர்வது : மெல்போர்ன், அவுஸ் ![/size]

[size=5]http://www.eiu.com/site_info.asp?info_name=The_Global_Liveability_Report[/size]

Link to comment
Share on other sites

இது வெளிநாட்டில நாளைக்கு எங்கட குழந்தைங்க எல்லாம் மொழி இல்லாமல் கலாச்சாரம் இல்லமால் நாடு இல்லாமல் இங்க வளரத நினைச்சாலே பயமா இருக்கு சொந்தங்கள் அங்க இல்லாட்டியும் புதிதா சொந்தங்களா உருவாக்குறது தானே வெளிநாட்டுக்கு வந்து புதிதா சொந்தனகல நண்பர்களா நாங்க உருவாக்கலியா

Link to comment
Share on other sites

[size=4]என்னுடன் படித்த சிங்களவர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர், அவுசிற்கு. இவர்கள் நல்ல வேலையில் , சொந்த வீடு, ஸ்போர்ட்ஸ் கார் என வாழ்ந்தவர்கள். [/size]

[size=1]

[size=4]நாடு எப்படி உள்ளது, எங்கே போகின்றது என்பதில் அவர்களுக்கே ஒரு திடமான நம்பிக்கை கிடையாது :([/size][/size]

Link to comment
Share on other sites

மற்றது இலங்கை என்றது எங்களுக்கும் சொந்தமான ஒரு நாடு அந்த உரிமையை விட்டுக்கொடுக்க முடியா

Link to comment
Share on other sites

மற்றது இலங்கை என்றது எங்களுக்கும் சொந்தமான ஒரு நாடு அந்த உரிமையை விட்டுக்கொடுக்க முடியா

[size=5]முடியாது ![/size]

இவர்கள் எல்லாம் இன்னும் இன்னும் பொருளாதரத்தை தேடி வந்த அகதிகள் பேராசை

Link to comment
Share on other sites

[size=4]அவுசிற்கு சட்டப்படி குடிபெயருபவர்களில் கணிசமானவர்கள் படித்த பணக்கார சிங்களவர்கள். [/size]

Link to comment
Share on other sites

உலக மாற்றத்தில் இலங்கைக்கு தன்னை மாற்றிக்கொள்வதை தவிர வேறு வழி இருக்காது பாருங்கள் அகூதா அண்ணா இந்த இனவாதாம் அரசியல் காரணங்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் எடுபட முடியாமல் போகலாம் ஆட்சியாளர்களுக்கு உலகம் வேகமா மாறிட்டு வருது

இன்னும் தேடனும் பரம்பரைக்கும் சொத்து சேர்க்க நினைகின்றார்கள் இவர்கள் சேர்த்து இவர்கள் அனுபவிக்க போறதும் இல்லை 50 60 வயசில ஹார்ட் அட்டாக் வந்திடுது எல்லாத்தையும் விட்டிட்டு போய்றாங்க ஆக தாங்கள் அனுபவிக்க முடியாமல் நிம்மதியையும் இழந்து தவிக்கிறாங்கா இங்க இருக்கிற சோமாலி நாடுக்காரன்களே நல்லா உழைத்து விட்டு தாயகம் திரும்புறாங்க

Link to comment
Share on other sites

[size=4]என்னுடன் படித்த சிங்களவர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர், அவுசிற்கு. இவர்கள் நல்ல வேலையில் , சொந்த வீடு, ஸ்போர்ட்ஸ் கார் என வாழ்ந்தவர்கள். [/size]

[size=1][size=4]நாடு எப்படி உள்ளது, எங்கே போகின்றது என்பதில் அவர்களுக்கே ஒரு திடமான நம்பிக்கை கிடையாது :([/size][/size]

உண்மை. இன்னும் காசு தேவை என்று வந்தவர்கள். நாளைக்கே இலங்கை சென்ற வாழவும் தயங்க மாட்டார்கள். நிரந்தரமாக இலங்கை திரும்பிய இருவரை நன்கு தெரியும். காசிருந்தால், இலங்கை வாழ்க்கைத் தரத்தை எந்த நாட்டிலும் அடிக்க முடியாது. அகோதா அண்ணா, நீங்கள் இணைத்த UNDP புள்ளி விபரங்களில் இலங்கையின் சுட்டி, உலகச் சுட்டியை விட அதிகமாக இருக்கிறது. :icon_idea:

இவர்கள் எல்லாம் இன்னும் இன்னும் பொருளாதரத்தை தேடி வந்த அகதிகள் பேராசை

உண்மை

Link to comment
Share on other sites

[size=6]One picture is worth more than 1000 words![/size]

cafe-03.jpg

cafe-011.jpg

cartoon-(4).jpg

Link to comment
Share on other sites

அவுசில் மருத்துவம் சரியில்லை என்று யாரும் சொல்லவில்லை. இலங்கையில் இலவசமாக கிடைக்கும் சேவையை விடக் கேவலமானது என்பது தான் எனது கருத்து. இது உங்கள் கருத்து

நல்ல மருத்துவர்கள் நல்ல உபகரணங்கள் எல்லாம் இருக்கு ஆனால் வீட்ட வித்துதான் ஆஸ்பத்திரி பில் கட்டவேண்டி வரும். நான் அவிசில் தான் இருக்கிறேன் எனவே இங்கத்தைய நடைமுறைகள் பற்றி எனக்கு வகுப்பெடுக்க வேண்டாம். ஆனால் பொது உலக அறிவை இதுவரை எழுதியவற்றில் காடவில்லை.

இலங்கை படிப்புடன் AMC சோதினை பாஸ் பண்ணினால் சரி. எனது நெருங்கிய இரண்டு இரத்த உறவினர்கள் கொழும்பு பல்கலையில் மெடிசின் முடித்தவர்கள் இங்கு AMC பாஸ்பண்ணி வைத்தியர்களாக வேலை செய்கிறார்கள். எனது நெருங்கிய நண்பன் ஒருவனின் மனைவியும் இலங்கை டாக்குத்தர், AMC பாஸ் பண்ணிவிட்டு வேலை செய்கிரா.

இலங்கையின் பயிற்சி படிப்பு(residency) எந்த மேலை நாட்டிலும் ஏற்கப்படவில்லை. அப்படி இருந்தால் விபரத்தை தரவும்..

என்ன மாதிரியான விபரம் தேவை?

நான் அறிந்தவரை அவுசியில் residency requirement இருப்பதாகத்தான் அறிகிறேன். AMC சோதனையே இலங்கையின் சான்றிதல் வழங்கும் தன்மையில் நம்பிக்கை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

நான் அறிய விரும்புவது நீங்கள் கூறுவது போல "AMC முடித்தவுடன் practicing license வழங்கப்படும்" என்ற விபரத்தைத்தான் பார்க்க விரும்புகிறேன்.

இலங்கை Bachelors/Masters படிப்புக்கள் இரண்டுமே அவுஸ் அரசாங்க நிறுவனங்களால் ஏற்கப் படுகின்றன. 100% உறுதிப் படுத்த முடியும் <_< .

நான் accedermic education பற்றி பேசியிருக்கவில்லை என்பதை கூட கவனிக்க முடியாமல் பதில் அளிக்கபட்டிருப்பது இதை யாரோ எழுதியதாகத்தான் சந்தேகிக்க வைக்கிறது. அது அரச சட்டங்களில் department க்கு department மாறுபடும். வருசத்திற்கு வருசம் கூட மாறுபடும். நான் B.A, B.Sc செய்யாமல் MBA செய்தனான். சாதரணமாக ஒரு அது தேவையான முன் நிபந்தனையாக கருதப்படும். அதை பலதடவைகளில் இலகுவாக மாற்றிக்க முடியும்.

ஆனால் தொழில்துறை படிப்புகள் அப்படி இல்லை. நான் கனடாவிலிருந்து USA க்கு தொழில் தேடி போக எனது தொழிலுக்கு, NT Permit க்கு கனடாவின் சான்றிதள் என்று போட்டிருந்தார்கள். ஆனால் programmers போன்ற தொழில்களுக்கு Foreign Equivalent என்று போட்டிருந்தார்கள். நான் அதை பார்த்துவிட்டு ticket எடுத்து Air Port க்கு போனபின்னர், எனது சான்றிதள் UK என்பதால் அது Foreign Equivalent மட்டும்என்று ( கனடா அல்ல) எனக்கு விசா மறுத்து விட்டார்கள். நான் USA போக விரும்பியதால் எனக்கு கனடா படிப்பை முடித்துவிட்டு இரண்டு வருடங்களின் பின்னர் போக விருப்பவில்லை. உடனே Tourist Visa கேட்டுப்போய் அமெரிக்காவில் அவர்களின் சோதனைக்கு admission எடுத்து அதில் சித்தி பெற்று, திரும்ப கனடா வந்து, போடரில் NT permit பெற்று சென்று தொழில் தொடங்கினேன். தொழில் துறைகளில் கட்டுப்பாடு கூட என்பதை விளங்க வேண்டும். (கனடவிலிருந்து யாராவது USA க்கு NT Permit எடுக்க விரும்புவர்களுக்கு: அதை நீங்கள் போடரில் மட்டும்தான் பெறலாம். Canadian Citizenship காட்டி Drive பண்ணி உள்ளே வந்து விட்டால் ஒருதடவை திரும்ப போய்த்தான் வரவேண்டும்.)

ஒத்துக்கொண்டாச் சரி. நீங்கள் கடைசியா எப்ப இலங்கை போனனீங்கள்? ஊடகங்களில் வருவதும், யாரோ சொல்லும் கதைகளும் தான் உங்களுக்கு தெரியும். வருசத்துக்கு ஒருக்கா போகும் நான் சொல்லுகிறேன், இன்னொரு பத்து வருசத்தில இலங்கை மிக நன்றாக முன்னேறி இருக்கும். பலருக்கு இனி இலங்கைப்பக்கமே போக முடியாது, அந்தக் கடுப்புக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் :huh: .

நீங்கள்தான் இதை கூறுங்கள் ஆனால் ரம்புக்க சபுகஸ்கந்த ஆலையையே திறக்க பெற்றொலியம் இல்லை என்கிறார். வாய் சவ்வாடலால் சிறிமா காலத்திலிருந்து இலங்கையை சிங்கப்பூராக மாறும் கதைகளை சொல்கிறார்கள். அதை அங்கேயே கேட்டு அலுத்துவிட்டு தான் நீங்கள் எல்லோரும் வெளியே வந்திருக்கிறீர்கள். இது முயலுக்கு பின் நிற்கும் ஆமை முயலை ஓடி முந்தின கதை. இதே பொருளாதார விளக்கம் இல்லாத கதைதான் சற்று முன்னர் சீனா-யப்பான் தொடர்பாகவும் போய் இருந்தது. இந்தியாவே சில வருடங்களில் 11.5% வீத வளர்ச்சி காட்டிவிட்டது. இது முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில் வைத்துகாணும் அனுபவம் இல்லாதத்தனம். சொல்வார்களை கதைகளை கேட்டுவிட்டு துள்ளுவார்கள் துள்ளுவதுண்டு.

உண்மை என்ன வென்றால் இலங்கையை சிங்கபூராக மாற்றும் கதைகளை சிங்கபூர் பிறந்த நாட்களில் இருந்து சிறிமாவுக்கு சார்பான சிங்கள, ஆங்கில பேப்பர்கள் எழுத்தி வந்தன. மூன்று நிகழ்வுகள் நடந்தன.

1.சிங்கபூராக மாற்றுவது என்றுமே நடந்து முடியாதபடியால் இனிமேல் சிங்களவர்கள் அதை கேட்க விரும்பவில்லை.

2. சிங்கப்பூரை சிங்கப்பூராக மாற்றிய லீ குவான் லீ நேராக தனது புத்கத்தில் இலங்கையின் இனத்துவேசத்தால் இலங்கை பொருளாதாரம் நிர்மூலம் ஆக்கபடுகின்றதென்று எழுதிவிட்டார். அதாவது இலனகையின் சிங்கப்புராக மாற்றும் கதையை அவரே நடக்க முடியாது என்று கூறுகிறார்.

3.சீனா வந்து உள்ளட்ட பின், பங்களா தேஷ், பாகிஸ்தான், இலங்கை போலத்தன் தன் கைக்குள் அடங்காத சிங்கப்பூரை இலங்கை தனக்கு உதாரணம் காட்டுவதை விரும்பவில்லை.

அதனால் சீன உப அதிபர் தொடக்கி வைத்த "ஆசியாவின் அதிசயம்" என்ற புதிய கோசம் ஆரபிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வசிட்டர் வாயால் விசுவாமித்திரர். "மந்திரம் மந்திரம் மந்திரம்.... அட இலங்கை சிங்கபூராக மாறவில்லை." யாரும் கூட இந்த ஏமாற்றுக்களை வைத்து ஏமாறவும் இல்லை.

நீங்கள் ஒத்துக்கொண்டால் சரி. அது சானேறி முழம் சறுக்கிய கதை. இதை பற்றிய விளக்கத்தை ரொபேட் பிளெக் 2008 ல் இலங்கை வர்த்தகர்களுக்கு வைத்த கூட்டமொன்றில், இலங்கையின் தான்தோன்றித்தனமான பொருளாதார கொள்ளைகளை விளங்கப்படுத்தும் போது கூறியிருந்தார்.

அதைதான் 2013 பட்ஜட்டில் மற்றைய M.Pக்கள் சொல்லியிருந்தார்கள். கொழும்பு பங்கு சந்தை போட்ட ததிங்கின தொம்மை நீங்கள் இலங்கை போனபோது பார்க்கவில்லை என்பதை ஒழிக்காதீர்கள். அல்லது அதை மெனிக்பாம் போயோ, சூரியபுரம் போயோ பார்க்கப் போவதில்லை. (ஒவ்வொரு வருச டிக்கெட்டின் PDF கொப்பிகளை யாழில் போட்டால் அதையும் நம்பிவிட்டு போகிறேன். அதில் எத்தனை முறை வன்னிக்கு போனீர்கள்.)

நீங்கள் எத்தனை வழிகளில் முயன்றாலும் 2013 பட்ஜெட் மகிந்த குடும்பத்தை காப்பாற்ற போட்ட பட்ஜெட்டாகாத்தான் மற்றையவர்கள் கூறியிருக்கிறாகள். அதாவது இனி அடிக்கடி பல்கலை கழகங்கள்அடித்து மூடப்பட போகின்றன. அடிக்கடி சிறை உடைக்கப்பட போகுது. மேர்வின் சில்வா அதிகாரிகளை பகிரங்கமாக கட்டி வைத்து அடிக்க போகிறார். பொன்சேக்கா மட்டும் அல்ல பல ராணுவ அதிகாரிகள் பதவி இழக்க போகிறார்கள். சரத் என் சில்வா, சிராணிகள் தொடர்ந்து பதவிகள் இழக்க போகிறார்கள். நீதி மன்றங்கள் உடைபட போகின்றன. நாமல்கள் AC அறைகளில் இருந்து சித்திகள் பெறப்போகிறார்கள்.......... நான் அடுத்த தடவை இலங்கை போகும் போது நிறையத்தான் முன்னேற்றங்கள் காணபோகிறேன் என்பது மட்டும்தான் நீங்கள் சொலபவற்றில் சரியாக சொன்ன ஒன்று.

"நீங்கள் கடைசியா எப்ப இலங்கை போனனீங்கள்?" நல்ல ஒரு கேள்வி. அகதியாக 1984ல் வந்தது மட்டும்தான். "வருசத்துக்கு ஒருக்கா போகும் நான்" விதண்ட வாதம் செய்து, கேவல கெட்ட அரசை பொய்கள் புணைதுரைகளால் புகழ்து பேசி, அதனிடம் சரணாகதி அடைந்து அதற்காக பொய்ப்பிரசாரம் செய்து அங்கு ஒருதடவை கூட போவது எனக்கு மிக மிக கஸ்டமான அலுவல்.

மற்றது இலங்கை என்றது எங்களுக்கும் சொந்தமான ஒரு நாடு அந்த உரிமையை விட்டுக்கொடுக்க முடியா

இந்த வீரம் வரம் முதல் ராபக்சாவுக்குத்தான் நாடு இனி என்று எழுதியதற்கு என்னவாயிற்று.

Link to comment
Share on other sites

[size=5]We have been hearing it.[/size]

[size=5]Chinese are everywhere, in Lanka. There are so many of them, even highway directions are in Chinese. The Rajapakse Family is in Chinese pocket, making a $1½ billion each year for the family consortium for mortgaging the country to them.[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111100&hl=

Link to comment
Share on other sites

நீங்கள் எத்தனை வழிகளில் முயன்றாலும் 2013 பட்ஜெட் மகிந்த குடும்பத்தை காப்பாற்ற போட்ட பட்ஜெட்டாகாத்தான் மற்றையவர்கள் கூறியிருக்கிறாகள். அதாவது இனி அடிக்கடி பல்கலை கழகங்கள்அடித்து மூடப்பட போகின்றன. அடிக்கடி சிறை உடைக்கப்பட போகுது. மேர்வின் சில்வா அதிகாரிகளை பகிரங்கமாக கட்டி வைத்து அடிக்க போகிறார். பொன்சேக்கா மட்டும் அல்ல பல ராணுவ அதிகாரிகள் பதவி இழக்க போகிறார்கள். சரத் என் சில்வா, சிராணிகள் தொடர்ந்து பதவிகள் இழக்க போகிறார்கள். நீதி மன்றங்கள் உடைபட போகின்றன. நாமல்கள் AC அறைகளில் இருந்து சித்திகள் பெறப்போகிறார்கள்.......... நான் அடுத்த தடவை இலங்கை போகும் போது நிறையத்தான் முன்னேற்றங்கள் காணபோகிறேன் என்பது மட்டும்தான் நீங்கள் சொலபவற்றில் சரியாக சொன்ன ஒன்று.

"நீங்கள் கடைசியா எப்ப இலங்கை போனனீங்கள்?" நல்ல ஒரு கேள்வி. அகதியாக 1984ல் வந்தது மட்டும்தான். "வருசத்துக்கு ஒருக்கா போகும் நான்" விதண்ட வாதம் செய்து, கேவல கெட்ட அரசை பொய்கள் புணைதுரைகளால் புகழ்து பேசி, அதனிடம் சரணாகதி அடைந்து அதற்காக பொய்ப்பிரசாரம் செய்து அங்கு ஒருதடவை கூட போவது எனக்கு மிக மிக கஸ்டமான அலுவல்.

இந்த வீரம் வரம் முதல் ராபக்சாவுக்குத்தான் நாடு இனி என்று எழுதியதற்கு என்னவாயிற்று.

Clinical examination application and scheduling process

flow-clinical.png

Source - http://www.amc.org.au/index.php/ass/clinex/process-summary

முடிந்தால் வாசிச்சு விளங்கிக்கொள்ளலாம்

பந்தி பந்தியா கனக்க எழுதி இருக்கிறியள் ஆனா உள்ளடக்கம் ஒண்டுமே இல்லை. எனது போது அறிவு உங்கள் அளவுக்கு இல்லைத்தான். இலங்கையின் Trade Qualifications / vocational education இங்கு ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒன்று. எனக்கு நன்கு பழக்கமான ஒரு சிங்கள A/C technician, diesel mechanic அங்கத்தைய தொழில் நுட்பக் கல்வியுடன் தான் இங்கு வேலை செய்கிறார்கள். 1984 இக்குப் பிறகு ஊர்பக்கம் போகவே இல்லையா? நான் கூட 1986 தான் பிறந்த நான். விஷயங்கள் நல்லா மாறீட்டுது மலை அண்ணா. அரசை ஒருவரும் புகழவில்லை. எனக்கு அரசை, விசேடமாக மகிந்தவை கண்ணில காட்டவும் கூடாது. ஆனால் இலங்கை எதுக்கும் உதவாது எண்டு அலம்புவது பிடிப்பதில்லை. பாகிஸ்தான், இந்தியா போன்ற வளரும் வல்லரசுகளை விட நாங்கள் எவளவோ திறம். உங்களுக்கு இலங்கைப் பிடிக்கவில்லையா? கனடா தான் திறம் எண்டு போட்டு விலகி இருக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

மிக அழகாக இந்த விவாதத்தை முடித்து வைத்த அகூதா அண்ணாவிற்கு நன்றிகள்

நிச்சியமாக தும்ஸ் மனித உரிமை மீறல்களையும் அதிக அக்கறை எடுத்து இலங்கை செயல்பட்டால் கண்டிப்பா ஆசியாவின் அதிசியமா இலங்கை மாறும்

ஆஸ்திரேலியா கல்வி அமைச்சில் வேலை செய்யும் ஒரு தமிழரிடம் இருந்து கூட என்னால் கடிதம் எடுத்து தரமுடியும் தும்பலயான் சொல்வதை உறுதிப்படுத்த இவையளுக்கு இலங்கை medicine க்கு இருக்கிற demand மற்றும் படிப்புகளுக்கு இருக்கிற demand வடிவா தெரியல மச்சி அது தான்

அண்டைக்கும் ஒரு வெள்ளை என்கிட்டே சொல்லி அளுதிச்சு தனியார் காப்புறுதி இருந்தும் வீட்ட வித்து காசு கட்டினதேண்டு

Table 5.5: International medical graduates: Applications assessed through Standard Pathway, 2009(a)

Country of training

MCQ exam attempts

MCQ exam passes

Clinical exam attempts

Clinical exam passes

Bangladesh 226 85 98 45

China 183 79 73 51

Columbia 36 18 8 5

Egypt 142 76 38 17

Fiji 39 17 9 3

India 974 511 284 137

Indonesia 36 16 3 0

Iran 269 154 103 52

Iraq 87 46 23 15

Jordan 45 32 4 1

Malaysia 64 31 3 1

Myanmar 177 117 45 29

Nepal 68 37 11 6

Nigeria 132 54 17 9

Pakistan 497 294 97 39

Papua New Guinea 19 5 1 1

Philippines 390 118 67 23

Romania 37 7 9 6

Russia 168 57 27 14

Saudi Arabia 32 10 0 0

South Africa 161 130 38 32

Sri Lanka 368 269 125 74

Ukraine 82 22 15 6

Vietnam 19 7 6 3

Zimbabwe 28 19 9 5

Other 572 253 148 76

Total

4,851

2,464

1,261

650

(a) Data covers the period 1 January 2009 to 10 November 2009.

Source: Australian Medical Council administrative data, December 2009

http://www.health.go...s-mtrp-13-5-req

இதுவரையும் நான் நினைத்திருந்தது தனிய written test என்று மட்டும்தான். ஆனால் இந்த இணைப்பில் அவுசியில் additional Clinical Test இருக்கிறதென்பது தெரியாது. இப்படி additional test கனடா, UK இல் இருந்தால் அந்த நாட்டார் தயவு செய்து அறியத்தரவும். இந்த இணைப்பில் இலங்கைக்கு 1 வருட மேலதிகாரி மேற்பார்வை தேவையில்லை என்று எங்கும் சொல்ல வில்லை. மேலும் அமெரிக்காவில் இது 3 வருடம். ஆனால் அவுசியில் இருப்பதாக கூறப்படும் கட்டாயம் என்ற காட்டு பிரததேச சேவை நிபந்தனை அமெரிக்காவில் இல்லை. மூன்று வருடம் முடிய Modern metropolitan area வைத்திய சாலைகளிலும் புகுந்து விளையாட முடியும்.

அண்டைக்கும் ஒரு வெள்ளை என்கிட்டே சொல்லி அளுதிச்சு தனியார் காப்புறுதி இருந்தும் வீட்ட வித்து காசு கட்டினதேண்டு
உங்கள் மூவரின் கருத்து இது. 23 மில்லியன் மக்களால் தெரியப்படும் அவுஸ்திரேலிய அரசு தான் தீர்மானிக்கிறது தனது மருத்துவ கவனிப்பை. உங்கள் கருத்தை மட்டும் திணிக்காமல் ஏன் ஜனநாயக மக்கள் அப்படி ஒரு அமைப்பை விரும்பி இன்னமும் வைத்திருக்கிறார்கள் என்பதை விளங்க தெண்டியுங்கள். இலங்கையில் கொண்டு வந்த இலவச மருத்துவ, இலவச கல்வி சேவைகள் கருத்து கணிப்பால் கொண்டுவரப்பட்டவை அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.
Link to comment
Share on other sites

[size=5]We have been hearing it.[/size]

[size=5]Chinese are everywhere, in Lanka. There are so many of them, [/size][size=5]even highway directions are in Chinese.[/size][size=5] The Rajapakse Family is in Chinese pocket, making a $1½ billion each year for the family consortium for mortgaging the country to them.[/size]

http://www.yarl.com/...opic=111100&hl=

நான் கானவோ, கேள்விப்படவோ இல்லை. ரவி சுந்தரலிங்கத்தின்ட உந்த கட்டுரை எனக்கும் இமெயிலில வந்தது தான். மனிசன் ஒரு படத்தை எடுத்துப் போட்டிருந்தால் புண்ணியமாப் போயிருக்கும்.

Link to comment
Share on other sites

Clinical examination application and scheduling process

flow-clinical.png

Source - http://www.amc.org.a...process-summary

முடிந்தால் வாசிச்சு விளங்கிக்கொள்ளலாம்

பந்தி பந்தியா கனக்க எழுதி இருக்கிறியள் ஆனா உள்ளடக்கம் ஒண்டுமே இல்லை. எனது போது அறிவு உங்கள் அளவுக்கு இல்லைத்தான். இலங்கையின் Trade Qualifications / vocational education இங்கு ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒன்று. எனக்கு நன்கு பழக்கமான ஒரு சிங்கள A/C technician, diesel mechanic அங்கத்தைய தொழில் நுட்பக் கல்வியுடன் தான் இங்கு வேலை செய்கிறார்கள். 1984 இக்குப் பிறகு ஊர்பக்கம் போகவே இல்லையா? நான் கூட 1986 தான் பிறந்த நான். விஷயங்கள் நல்லா மாறீட்டுது மலை அண்ணா. அரசை ஒருவரும் புகழவில்லை. எனக்கு அரசை, விசேடமாக மகிந்தவை கண்ணில காட்டவும் கூடாது. ஆனால் இலங்கை எதுக்கும் உதவாது எண்டு அலம்புவது பிடிப்பதில்லை. பாகிஸ்தான், இந்தியா போன்ற வளரும் வல்லரசுகளை விட நாங்கள் எவளவோ திறம். உங்களுக்கு இலங்கைப் பிடிக்கவில்லையா? கனடா தான் திறம் எண்டு போட்டு விலகி இருக்க வேண்டியது தான்.

நான் AMC Certificate பற்றிக்கேடவில்லை. Practicing License என்பதைதான் கேட்டிருந்தேன் தயவு செய்த்து வாசித்துவிட்டு எழுதவும். நான் Professional Jobயை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை விளங்காவிட்டல் பீத்தல் வாயை காட்டமல் நாகரீகமாக கேட்டு தெரிந்திருக்கலாம்.

நான் நாலு Degrees வைத்திருப்பவன். ACMA(UK), CMA(USA) CGMA(uK& US ), MBA. உங்களை மாதிரி காட்டுமிரண்டிகள் அல்லாத அந்த நாலிலும் இருந்த professors எனது தரத்தை ஒத்துகொண்டிருக்கிறார்கள் எனபதை கவனிக்கவும். நாலு நல்ல வசனம் தமிழில் எழுத தெரியாத நாகரிமற்ற விதண்ட வாதிகள்.

எனக்கு பட்டும் பட்டும் இலங்கை திறம் என்று எழுதுபவர்களை கிட்டவும் பிடிக்காது. 1986 இல் பிறந்தவர்களுக்கு நாங்கள் வாழ்ந்த சுதந்திர வாழ்கையை அறிந்திருக்க நியாமில்லைத்தான். இலங்கை உதவாது மட்டுமல்ல கிறிமினல் நாடு. எங்கள் கடமை அதை வெளிக்கொண்டுவருவது. எந்த கோமாளிக்கு நாங்கள் செய்வது பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன? அவர்கள் தங்களு மட்டும்தான்.

Link to comment
Share on other sites

தும்பளையான்.. அவுஸில் கொஞ்சம் இணக்கப்பாடு இருக்கலாம் போலை.. ஆனால் பேராதனை, மொறட்டுவ பல்கலையில் படித்துவிட்டு அனுபவத்துடன் கனடா வந்தவர்கள் வங்கிகளிலும், நில அளவையாளர்களாகவும் வேலை செய்கிறார்கள்..! இங்கு இறுக்கமான பூட்டுக்கள் உள்ளன. இவையெல்லாம் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றன.

ஆனால் இப்பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு அமெரிக்கா, கனடாவில் முதுகலை கற்றவர்கள் பலர் நன்றாக வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு சிங்கப்பூரில் பொறியியலாளர் உரிமத்துக்கு விண்ணப்பித்தால் உடனே வரும் பதில், "Your degree is not recognized!"

Link to comment
Share on other sites

இதுவரையும் நான் நினைத்திருந்தது தனிய written test என்று மட்டும்தான். ஆனால் இந்த இணைப்பில் அவுசியில் additional Clinical Test இருக்கிறதென்பது தெரியாது. இப்படி additional test கனடா, UK இல் இருந்தால் அந்த நாட்டார் தயவு செய்து அறியத்தரவும். இந்த இணைப்பில் இலங்கைக்கு 1 வருட மேலதிகாரி மேற்பார்வை தேவையில்லை என்று எங்கும் சொல்ல வில்லை. மேலும் அமெரிக்காவில் இது 3 வருடம். ஆனால் அவுசியில் இருப்பதாக கூறப்படும் கட்டாயம் என்ற காட்டு பிரததேச சேவை நிபந்தனை அமெரிக்காவில் இல்லை. மூன்று வருடம் முடிய Modern metropolitan area வைத்திய சாலைகளிலும் புகுந்து விளையாட முடியும்.

உங்கள் மூவரின் கருத்து இது. 23 மில்லியன் மக்களால் தெரியப்படும் அவுஸ்திரேலிய அரசு தான் தீர்மானிக்கிறது தனது மருத்துவ கவனிப்பை. உங்கள் கருத்தை மட்டும் திணிக்காமல் ஏன் ஜனநாயக மக்கள் அப்படி ஒரு அமைப்பை விரும்பி இன்னமும் வைத்திருக்கிறார்கள் என்பதை விளங்க தெண்டியுங்கள். இலங்கையில் கொண்டு வந்த இலவச மருத்துவ, இலவச கல்வி சேவைகள் கருத்து கணிப்பால் கொண்டுவரப்பட்டவை அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

அவுசிலிருக்கும் மற்றவர்களையும் அவுஸ் மருத்துவத் துறையின் சேவை பற்றி புகழ மேடைக்கு அழைக்கிறோம். அது தான் ஒவ்வொரு முறை election இலும் health reform எண்டு வாய் கிழிய கத்திறவங்கள்.

நான் AMC Certificate பற்றிக்கேடவில்லை. Practicing License என்பதைதான் கேட்டிருந்தேன் தயவு செய்த்து வாசித்துவிட்டு எழுதவும். நான் Professional Jobயை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை விளங்காவிட்டல் பீத்தல் வாயை காட்டமல் நாகரீகமாக கேட்டு தெரிந்திருக்கலாம்.

நான் நாலு Degrees வைத்திருப்பவன். ACMA(UK), CMA(USA) CGMA(uK& US ), MBA. உங்களை மாதிரி காட்டுமிரண்டிகள் அல்லாத அந்த நாலிலும் இருந்த professors எனது தரத்தை ஒத்துகொண்டிருக்கிறார்கள் எனபதை கவனிக்கவும். நாலு நல்ல வசனம் தமிழில் எழுத தெரியாத நாகரிமற்ற விதண்ட வாதிகள்.

எனக்கு பட்டும் பட்டும் இலங்கை திறம் என்று எழுதுபவர்களை கிட்டவும் பிடிக்காது. 1986 இல் பிறந்தவர்களுக்கு நாங்கள் வாழ்ந்த சுதந்திர வாழ்கையை அறிந்திருக்க நியாமில்லைத்தான். இலங்கை உதவாது மட்டுமல்ல கிறிமினல் நாடு. எங்கள் கடமை அதை வெளிக்கொண்டுவருவது. எந்த கோமாளிக்கு நாங்கள் செய்வது பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன? அவர்கள் தங்களு மட்டும்தான்.

வாவ் smart guy eh??? ஆனா நாகரீகமாக உரையாடத் தெரியாது. "நாலு நல்ல வசனம் தமிழில் எழுத தெரியாத நாகரிமற்ற விதண்ட வாதிகள்." கொஞ்சம் விளங்கப் படுத்தவும். நீங்கள் இப்பிடியே கத்திக்கொண்டிருக்க வேண்டியது தான். இளைய தலை முறை பல விசயங்களில் வலு தெளிவாகத்தான் இருக்கிறார்கள். :icon_idea:

தும்பளையான்.. அவுஸில் கொஞ்சம் இணக்கப்பாடு இருக்கலாம் போலை.. ஆனால் பேராதனை, மொறட்டுவ பல்கலையில் படித்துவிட்டு அனுபவத்துடன் கனடா வந்தவர்கள் வங்கிகளிலும், நில அளவையாளர்களாகவும் வேலை செய்கிறார்கள்..! இங்கு இறுக்கமான பூட்டுக்கள் உள்ளன. இவையெல்லாம் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றன.

ஆனால் இப்பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு அமெரிக்கா, கனடாவில் முதுகலை கற்றவர்கள் பலர் நன்றாக வருகிறார்கள்.

இலங்கை கற்கை நெறியை இங்கு மதிப்பீடு செய்தது சான்றிதழ் தருவார்கள். அதன் பின்னர் அது அவுஸ் சான்றிதழ் போலக் கருதப்படும்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு சிங்கப்பூரில் பொறியியலாளர் உரிமத்துக்கு விண்ணப்பித்தால் உடனே வரும் பதில், "Your degree is not recognized!"

எனக்கு நன்கு தெரிந்த ஒரு ஐந்து பேராவது பேரா, மொரட்டுவ Efac (Civil முடித்தவர்கள்) சிங்கையில் வேலை செய்கிறார்கள். நிலைமை என்ன எண்டு கேட்டுச் சொல்லுகிறேன்.

Link to comment
Share on other sites

எனக்கு நன்கு தெரிந்த ஒரு ஐந்து பேராவது பேரா, மொரட்டுவ Efac (Civil முடித்தவர்கள்) சிங்கையில் வேலை செய்கிறார்கள். நிலைமை என்ன எண்டு கேட்டுச் சொல்லுகிறேன்.

பொறியியலாளராக வேலை செய்யலாம் பிரச்சினையில்லை.. ஆனால் Licensed Professional Engineer ஆவதுதான் குதிரைக் கொம்பு.

வட அமெரிக்காவில் இந்த உரிமத்தைப் பெறாமல் பொறியியலாளர், வைத்தியர் போன்ற பட்டங்களை உபயோகிப்பதே சட்டப்படி குற்றமாகும். சிங்கையில் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்வதில் பிரச்சினையில்லை. ஆனால் முத்திரை கிடையாது.

Link to comment
Share on other sites

அவுசிலிருக்கும் மற்றவர்களையும் அவுஸ் மருத்துவத் துறையின் சேவை பற்றி புகழ மேடைக்கு அழைக்கிறோம். அது தான் ஒவ்வொரு முறை election இலும் health reform எண்டு வாய் கிழிய கத்திறவங்கள்.

வாவ் smart guy eh??? ஆனா நாகரீகமாக உரையாடத் தெரியாது. "நாலு நல்ல வசனம் தமிழில் எழுத தெரியாத நாகரிமற்ற விதண்ட வாதிகள்." கொஞ்சம் விளங்கப் படுத்தவும். நீங்கள் இப்பிடியே கத்திக்கொண்டிருக்க வேண்டியது தான். இளைய தலை முறை பல விசயங்களில் வலு தெளிவாகத்தான் இருக்கிறார்கள். :icon_idea:

இந்த "இளிய" தலைமுறைக்கு இன்னும் மகிந்தா புகழ் பாடி வரவு செலவு திட்ட பெருமை பற்றி கதைக்க ஏதாவது மீதம் இருக்கா அல்லது தேவை இல்லாமல் மாட்டிக்கொண்டதில் இருந்து தப்பி ஓட நியானியை வரவழைக்கும் முயற்சியில் இறங்கி விட்டார்களா? :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.